ஏரல், ஜூன் 6:
ஏரல்&மங்கலகுறிச்சி மெயின் ரோட்டில் உள்ள பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் கோட்டைக்காடு விலக்கு அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தடுப்பு சுவர் கட்டப்படாதினால் அந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு வருகிறது. இவ்வழியாக போக்குவரத்து அதிக அளவு உள்ளது. இதனால் விபத்து ஏற்படுகிறது. பள்ளிக்கு சைக் கிளில் செல் லும் மாணவ, மாணவிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட ரோட்டை விட்டு இறங் கும் போது விபத்துக்குள் ளாகி வருகின்றனர்.
எனவே பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி பாலத்தின் உடைந்த தடுப்பு சுவரை கட் டிட சம்பந்தப்பட்ட அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
ஏரல் & மங்கலகுறிச்சி சாலையில்
பாலத்தில் தடுப்பு சுவர்
இல்லாததால் விபத்து அபாயம்
ஏரல்&மங்கலகுறிச்சி ரோட்டில் தடுப்புசுவர் இல்லாத தரைமட்ட பாலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக