செவ்வாய், 24 மார்ச், 2015

சிவகளை பரும்பு பகுதியில் முஸ்லீம்களின் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும்

சிவகளை பரும்பு பகுதியில் முஸ்லீம் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மையவாடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
சிவகளை பரும்பு பகுதியில்
முஸ்லீம்களின் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க வேண்டும்
தூத்துக்குடி, மார்ச் 24:
சிவகளை பரும்பு பகுதியில் முஸ்லீம் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மையவாடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தடுப்பு சுவர் கட்டி தரவேண்டுமென கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சிவகளை முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் பாசித், செயலாளர் ஜெயிலானி மற்றும் ஜமாத்தார்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
சிவகளை பரும்பு முஸ்லீம் ஜமாத்தினருக்கு சொந்தமான மையவாடி இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து ஆடு, மாடு மேய்ச்சலுக்கு பயன்படுத்துகின்றனர். கழிப்பிடமாகவும் மாற்றி வருகின்றனர். இதில் பஞ்சாயத்து தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்.
எனவே முஸ்லீம் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மையாவடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க தடுப்புசுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகளை மெயின்ரோட்டிலிருந்து பரும்புக்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் பழுதடைந்து தடுப்புசுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இன்னும் சில தினங்களில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான இந்த சாலையில் செல்லும்போது விபத்து ஏற்பாடாமல் இருக்க தற்காலிக தடுப்பு சுவர் அமைத்தும் அதன் பின்பு நிரந்தரமாக தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
கலெக்டரிடம் மனு

ஞாயிறு, 22 மார்ச், 2015

மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் கனிமொழி எம்.பி

நெல்லையில் தற்கொலை செய்த வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும், வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை ஆய்வு செய்யவும் தூத்துக்குடிக்கு வந்த கனிமொழி எம்.பிக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து
திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்
தூத்துக்குடி, மார்ச் 22:
�மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்� என கனிமொழி எம்பி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வெங்கடேஷ்வரபுரம் கிரா மத்தை கனிமொழி எம்.பி. தத்தெடுத்துள்ளார். அந்த கிராமத்தை ஆய்வு செய்வதற்காகவும், நெல்லையில் தற்கொலை செய்த வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் கனி மொழி எம்பி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாவட்டம் வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை தத்தெடுத்து அங்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதற்கான பணிகள் தற்போது நடக்கின்றன. அதனை ஆய்வு செய்ய வந்துள்ளேன்.
நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பதவியில் இருந்தும், அதிமுக கட்சி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். முத்துகுமாரசாமி தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அதன் பின்னணி குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண் டும். மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். ஆனால், முழுமையாக கைவிடப்படவில்லை.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு எதை சொன்னாலும் அதிமுக அரசு தற்போது கையெ ழுத்து போட்டு விடுகிறது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டம் & ஒழுங்கு சீர்குலைந்து விட் டது. குறிப்பாக தென் தமிழகத்தில் கொலை, கொள் ளைகள் அதிகரித்துள்ளன. அதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட் டது. முன் னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், பூங் கோதை, மாநகர செயலா ளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி

வியாழன், 12 மார்ச், 2015

ஏரல் அருகே பிளஸ் 2 மாணவர் தற்கொலை

ஏரல் அருகே
பிளஸ் 2 மாணவர் தற்கொலை
ஏரல், மார்ச் 12:
ஏரல் அருகே தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ் 2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரல் அருகே அரியபுரம் வேளாளர் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஏரல் அரசு மருத்துவமனையில் சுகாதார மேற்பார்வையாளராக உள்ளார். இவரது மனைவி ஜெயா. இவருக்கு ஒரு மகளும், ராம் என்ற ராம்ஜீ (17), லெட்சுமணன்(17) ஆகிய 2 மகன்களும் உள்ள னர். ராம், லெட்சுமணன் ஆகியோர் வாழவல்லான் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். நேற்று முன்தினம் ஆங்கில தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த ராம், தேர்வு சரியாக எழுதாததால் வீட்டில் யாரிடமும் சரியாக பேசாத நிலையில் இருந்தார். இரவு வீட்டில் அனைவரும் சாமி தரிசனம் சென்றனர். ஆனால் ராம் போகவில்லை. இந்நிலை யில் வீட்டு மாடியில் உள்ள அறையில் ராம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏரல் போலீசில் புகார் செய்யப்பட்டதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

புதன், 11 மார்ச், 2015

மூன்றாவது பெரிய வணிகநகரமான ஏரல்

மாவட்டத்தின் மூன்றாவது பெரிய வணிகநகரமான ஏரல் பஸ்நிலையத்தில் விரிவுபடுத்தி பயணிகள் நிழற்குடை, இருக்கை, இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தவேண்டும்.
அரசு பொது நூலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்திசிலை பஸ் ஸ்டாப் அருகில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
பஸ்நிலையம், காந்திசிலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
சிறுத்தொண்டநல்லூர் சாலையில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ள இரு குறுகிய தாம்போதி பாலங்களை உயர்த்திக் கட்டி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
?
அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர் இருக்கவேண்டும்.
?
சேதுக்குவாய்த்தானுக்கு செல்லும் ஆற்றங் கரையோர சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.

ஏரலில் மிகப் பழமையான பள்ளி வாசல்களும் ஆர்.சி. மற்றும் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளனசகல நோய் தீர்க்கும் சேர்மன் .

சகல நோய் தீர்க்கும்
சேர்மன் திருமருந்து
திருச்செந்தூர்
தாலுகா அம்மன்புரத் தில் உள்ள மேலப்புதுக்குடியில் அருணாசல சுவாமி அவதரித்தார். பின் ஏரலில் வந்து வசித்த போது தனது குடும்ப பாரம்பரியப்படி தேடி வந்தோர் பிணி தீர்த்துவந்தார். 1906 செப்டம்பர் 5ம் தேதி முதல் 1908 ஜுலை 27ம் தேதி வரை ஏரல் பஞ்சாயத்து போர்டு சேர்மனாக பணியாற்றியதால் இவர் பெயருக்கு முன்பு சேர்மன் என்ற சொல் சேர்ந்தது. வயது 28 ஆனதால் பெற்றோர் திருமணம் செய்ய நினைத்தனர். ஆனால், அவரது சிந்தனை அதில் செல்லவில்லை.
சேர்மனாக பணிபுரிந்தபோது ஒரு நாள் தனது சகோதரர் கருத்தப்பாண்டி நாடாரை அழைத்து � ஒரு வாரத்தில், அதாவது 1908ம் வருடம் ஜுலை 28ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசையன்று பகல் 12 மணிக்கு நான் இறைவன் திருவடி சேர்வேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆலமரத்தின் அருகில் என்னை சமாதி செய்ய வேண்டும்.
சமாதிக் குழியில் என்னை வைத்து காத்திருங்கள். அப்பொழுது மேலே கருடன் மூன்று முறை வட்டமிடும். அதன் நிழல் என் மேல் விழும்போது மண்ணும் மலர்களும் போட்டு எனது சமாதியை மூடிவிடுங்கள்� என்றார். அவர் கூறியபடியே நடந்தது.
அன்றிலிருந்து தம்மை வேண்டி வரும் பக்தர்களுக்கு மண்ணும் தண்ணீரும் திருமருந்தாக கொடுத்து சகல பிணிகளையும் அகற்றி அருள் புரிந்து வருகிறார் சேர்மன் அருணாசலசுவாமி.
இக்கோயிலில் ஆடி, தை அமாவாசை விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி சுவாமியை தரிசனம் செய்வார்கள்.
இக்கோயிலுக்கு எதிரே பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும். இதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
மேலும், ஏரலில் மிகப் பழமையான பள்ளி வாசல்களும் ஆர்.சி. மற்றும் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.


ஏரல் இணைப்பு சாலை இல்லாமல்... காட்சிப் பொருளான ஆற்றுப்பாலம்

தூத்துக்குடி
மாவட்டத்தில் வியாபாரத்தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. வியாபாரம், தொழில் சம்மந்தமாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஏரலை தென்பகுதி மக்களுடன் இணைப்பதற்காக தரைமட்ட பாலம் 1970ல் திமுக ஆட்சியில் அமைத்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவ்வழியாக இராஜபதி, சேதுக்குவாய்த்தான், குரும்பூர், குரங்கணி, மஞ்சள்விளை, மாவடிப்பண்ணை, தென்திருப்பேரை உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஏரல் மற்றும் சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் இந்த தரைமட்ட பாலம் அடிக்கடி மூழ்கியதாலும், பாலம் பழுதடைந்ததாலும் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப்பட்டது.
இதனால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நபார்டு ஆர்.ஐ.டி.பி.எஃப் திட்டத்தில் ரூ16 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் 2012ல் அமைச்சர் சண்முகநாதன் உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்பொழுது 18 மாதங்களில் வேலை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு மாறாக பாலத்தின் வேலை கள் விரைவில் முடிக்கப்பட்டு, வடபகுதியில் பாலத்தின் இணைப்பு சாலை வசதிக்காக பஸ் ஸ்டாப் மற்றும் வீடுகள் உடைக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. ஆனால் தென்பகுதியில் வனத்துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் இணைப்பு சாலை போடுவதற்கு வனத் துறை அனுமதி கிடைக்காததினால் பாலத்தின் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டி 2 வருடமாகியும் புதிய பாலம் காட்சி பொருளாகத்தான் உள்ளது.
இணைப்பு சாலை இல்லாமல்...
காட்சிப் பொருளான ஆற்றுப்பாலம்
தூத்துக்குடி
மாவட்டத்தில் வியாபாரத்தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. வியாபாரம், தொழில் சம்மந்தமாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஏரலை தென்பகுதி மக்களுடன் இணைப்பதற்காக தரைமட்ட பாலம் 1970ல் திமுக ஆட்சியில் அமைத்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவ்வழியாக இராஜபதி, சேதுக்குவாய்த்தான், குரும்பூர், குரங்கணி, மஞ்சள்விளை, மாவடிப்பண்ணை, தென்திருப்பேரை உட்பட நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஏரல் மற்றும் சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் இந்த தரைமட்ட பாலம் அடிக்கடி மூழ்கியதாலும், பாலம் பழுதடைந்ததாலும் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து அடிக்கடி துண்டிக்கப்பட்டது.
இதனால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளாக வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நபார்டு ஆர்.ஐ.டி.பி.எஃப் திட்டத்தில் ரூ16 கோடி 39 லட்சம் மதிப்பீட்டில் 2012ல் அமைச்சர் சண்முகநாதன் உயர்மட்ட பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்பொழுது 18 மாதங்களில் வேலை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு மாறாக பாலத்தின் வேலை கள் விரைவில் முடிக்கப்பட்டு, வடபகுதியில் பாலத்தின் இணைப்பு சாலை வசதிக்காக பஸ் ஸ்டாப் மற்றும் வீடுகள் உடைக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. ஆனால் தென்பகுதியில் வனத்துறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் இணைப்பு சாலை போடுவதற்கு வனத் துறை அனுமதி கிடைக்காததினால் பாலத்தின் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டி 2 வருடமாகியும் புதிய பாலம் காட்சி பொருளாகத்தான் உள்ளது.
இணைப்பு சாலை இல்லாமல்...
காட்சிப் பொருளான ஆற்றுப்பாலம்

ஏரல் வட்டாரத்தில் குறுமண் கிடைக்காமல்... குறுகும் செங்கல் தொழில்

ஏரல் வட்டாரத்தில் புதுமனை, அம்மாள்தோப்பு, வாழவல்லான், ஆலடியூர், உமரிக்காடு, முக்காணி, லெட்சுமிபுரம், இரண்டாம் பண்ணைவிளை, குரங்கணி, மாவடிப்பண்ணை, தென்திருப்பேரை, பால்குளம், ஆழ்வார்தோப்பு பகுதிகளில் செங்கல் சூளைகள் மற்றும் சேம்பர் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் நடந்து வருகிறது. இப்பகுதியில் 15 சேம்பர்களும் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகளும் உள்ளன.
இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மறைமுகமாக 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இதை நம்பி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6வரை விற்ற சேம்பர் செங்கல் தற்பொழுது ரூ.5 முதல் 5.30 வரை விற்பனையாகிறது.
அதேபோல் ரூ.4க்கு விற்ற சாதா செங்கல் தற்பொழுது அதே விலைக்கு தான் விற்பனையாகி வருகிறது. இந்த 5 ஆண்டுகளில் கூலி உயர்வு, குறுமண் தட்டுப்பாட்டு என உற்பத்தி செலவு அதிகமாகி உள்ளது. செங்கல் விற்பனையும் முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருப்பதால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், செங்கல் தயாரிப்புக்கு தேவையான குறுமண் கிடைப்பது அரிதாக உள்ளது.
இந்த குறுமணலை எடுப்பதற்கும் பசுமை தீர்ப்பாயத்தில் செங்கல் உரிமையாளர்கள் அனுமதி பெற வேண்டும். அனுமதி கேட்டு விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்காததால் பல செங்கல் உற்பத்தியாளர்கள் திணறிவருகின்றனர். எனவே,குறுமணல் கிடைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென செங்கல் உற்பத்தியாளர்கள் கோருகின்றனர்.
குறுமண் கிடைக்காமல்...
குறுகும்
செங்கல்
தொழில்

ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்க வடிகால் வசதி இல்லாமல் அழியும் வெற்றிலை விவசாயம்

ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான திருவழுதிநாடார்விளை, வாழவல்லான், லெட்சுமிபுரம், உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர், மேல ஆத்தூர், சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, மரந்தலை, வெள்ளக்கோயில், சுகந்தலை உள்பட பகுதிகளில் உள்ள வயல்களில் வெற்றிலை பயிர் செய்யப்படுகிறது. ஐப்பசி மாதம் வெற்றிலை கொடிக்கால் தொழிலை விவசாயிகள் தொடங்குகின்றனர்.
இங்குள்ள வயல்களை முதலில் 3 வருடங்களுக்கு கட்டுக்குத்தகைக்கு எடுத்து கான்களை தோண்டி முதலில் அகத்தி மற்றும் முருங்கை மர விதைகளை ஊன்றுகின்றனர். ஒருநாள் விட்டு ஒருநாள் கான்களில் தேங்கியுள்ள தண்ணீரை இறைத்து விதைகளுக்கு பாய்ச்சுகின்றனர். 60 நாட்கள் கழித்து வெற்றிலை கொடியை நட்டு அதனை முருங்கை மற்றும் அகத்தி மரத்தில் படரவிடுகின்றனர். 5 மாதம் கழித்து வெற்றிலை பறிக்கத் தொடங்குகின்றனர். ஒரு வெற்றிலை கொடிக்கால் இரண்டரை ஆண்டுகள் வரை பலன்தரும்.
வெற்றிலை சக்கை, மாத்து, பொடி வெற்றிலை என மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. சக்கையும் மாத்தும் டெல்லி, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன. பொடி வெற்றிலை பக்கத்து மாவட்டங்களுக்கு அனுப்பப் படுகிறது. வெற்றிலை படர விடுவதற்காக நடும் முருங்கையிலிருந்து காயும், அகத்தியில் இருந்து கீரையும் கிடைப்பதால் வெற்றிலை விவசாயம் வெற்றிகரமான விவசாயமாக விளங்குகின்றது.
வெளிமார்க்கெட்டுக்கு அனுப்பும் வெற்றிலையின் விலையை இப்பகுதியின் வெற்றிலை விவசாயத்தின் தலைமையிடமாக செயல்படும் தெற்கு ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம் தான் நிர்ணயிக்கிறது. தற்போது சக்கை வெற்றிலை ஒரு கிலோ ரூ.108க்கும், மாத்து ரூ.129க்கும், பயிர் சாதா வெற்றிலை ரூ.50க்கும், முதுகால் வெற்றிலை ரூ.55க்கும் விற்பனை ஆகிறது. ஆனாலும், மழையினால் ஏரல் பகுதியில் வெற்றிலை சேதமடைந்துள்ளதால் வெற்றிலை பறிப்பு பாதியாக குறைந்துள்ளது.
வடிகால் வசதி இல்லாமல் அழியும் வெற்றிலை விவசாயம்
வெளிமார்க்கெட்டுக்கு அனுப்பும் வெற்றிலையின் விலையை இப்பகுதியின் வெற்றிலை விவசாயத்தின் தலைமையிடமாக செயல்படும் தெற்கு ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம் தான் நிர்ணயிக்கிறது. தற்போது சக்கை வெற்றிலை ஒரு கிலோ ரூ.108க்கும், மாத்து ரூ.129க்கும், பயிர் சாதா வெற்றிலை ரூ.50க்கும், முதுகால் வெற்றிலை ரூ.55க்கும் விற்பனை ஆகிறது. ஆனாலும், மழையினால் ஏரல் பகுதியில் வெற்றிலை சேதமடைந்துள்ளதால் வெற்றிலை பறிப்பு பாதியாக குறைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இப்பகுதியில் விவசாயம் நடந்தது. இதனால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வந்தனர். ஆனால் தற்பொழுது வடிகால் வசதி இல்லாததாலும் வறட்சி மற்றும் நோய் தாக்குதலாலும் பரப்பளவு பாதியாக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிலை விவசாயம் நஷ்டம் அடைந்து வருவதால் விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். எனவே, ஏரலில் அழிந்து வரும் வெற்றிலை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.


வெள்ளி, 6 மார்ச், 2015

மிஸ்டர் கழுகு: மார்ச் 18 தீர்ப்பு! மீண்டும் பெங்களூரு பயம்

மிஸ்டர் கழுகு: மார்ச் 18 தீர்ப்பு!
மீண்டும் பெங்களூரு பயம்
''இரண்டு கட்சிகளிலும் பிறந்தநாள் கொண்​டாட்டங்கள் திக்குமுக்காட வைக்கின்றன!'' என்றபடி வந்து அமர்ந்த கழுகாருக்கு கேக் எடுத்துக்கொடுத்தோம். ''இந்த கேக்குக்கும் நீர் சொல்ல வரும் பிறந்தநாளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. விஷயத்துக்கு வாரும்!' என்று சொன்னதும் கேக்கை விழுங்கிவிட்டுச் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.
''கடந்த வாரம் தொடங்கிய ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தி.மு.கவில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அதற்குக் கொஞ்சமும் சளைக்கவில்லை. மார்ச் 1-ம் தேதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள். காலையில் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தவர், கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார். கருணாநிதியோ ஸ்டாலினை அருகே இழுத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்துச் சொன்னார். அதன் பிறகு ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் கருணாநிதி மட்டும் தனியாகப் பேசியதாகச் சொல்கிறார்கள்!'
''ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்க்கா வந்தாரா?'
''துர்க்கா ஏனோ வரவில்லையாம். கோபாலபுரத்தில் இருந்து கிளம்பிய ஸ்டாலின், நேராக தன்னுடைய வீட்டுக்குச் சென்றார். அங்கே குடும்ப சகிதமாக அனைவரும் காத்திருந்தனர். கேக்கும் தயாராக இருந்தது. பேரக் குழந்தைகளை அழைத்து பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டு கேக்கை வெட்டினார் ஸ்டாலின். அப்போது, 'ஹேப்பி பர்த் டே டு தாத்தா... ஹேப்பி பர்த் டே டு தாத்தா...’ என்று பேரக் குழந்தைகள் பாட... 'இவங்க சொன்னாதான் நான் தாத்தா என்பதே ஞாபகத்துக்கு வருது’ என்று சிரித்தபடியே சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.''
''அப்புறம்?''
''கேக் சாப்பிட்டுவிட்டு, காலை உணவையும் முடித்துக்கொண்டு அங்கிருந்து ஒட்டுமொத்த குடும்பமும் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்குக் கிளம்பியது. காலை 8.30 மணிக்குத் தொடங்கிய வாழ்த்துப் படலம் 1.30 மணி வரை தொடர்ந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் உட்காரவே இல்லை. அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 'ஊர் ஊராகச் செல்வோம். தெருத் தெருவாகச் செல்வோம். நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. அதைப்போல நம்முடைய பணிகள் முடிவதில்லை. முயற்சிகள் என்றைக்கும் பொய்த்தது இல்லை. எனவே நம்முடைய கடமைகளும் என்றைக்கும் நிற்பதில்லை என்ற உணர்வோடு நாம் சபதம் ஏற்போம். மார்ச் 1-ம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்புத் தினமாகவும் நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் ரத்த தானம் வழங்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் ஒரு லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தி எனக்கு வந்தாக வேண்டும்!’ என்று அவர் சொல்ல... இன்னொரு பக்கம் ரத்ததானம் நிகழ்ச்சி ஆரம்பமானது. ரத்தம் கொடுக்கும் இடத்தைச் சுற்றி வந்த ஸ்டாலின் மனைவி துர்க்கா, திடீரென என்ன நினைத்தாரோ, 'நானும் ரத்தம் கொடுக்கிறேன்!’ என்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தார். இந்த விஷயம் உடனடியாக ஸ்டாலினுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், துர்க்கா அருகில் ஸ்டாலின் வரவில்லை. மேடையிலேயே இருந்தார். துர்க்காவுக்கு ரத்தம் எடுக்கும்போது, அவரது தோழி  உமாராணி மட்டும் அருகே இருந்தார். 'பந்தை இப்படி உருட்டுங்க... கையை மடக்காதீங்க!’ என்று துர்க்காவுக்கு அட்வைஸ் கொடுத்தபடி நின்றிருந்தார் அவர்.''
''ம்!''
''ரத்தம் கொடுத்து முடித்ததும், அதற்கான சான்றிதழை துர்க்காவுக்குக் கொடுத்தார்கள். அதை வாங்கிப் பார்த்தவர், 'இதில் துர்க்கா என்று போட்டிருக்கீங்க... என்னோட பேரு துர்க்காவதி ஸ்டாலின். அப்படி மாற்றிக் கொடுங்க!’ என்று கேட்டார். ரத்த வங்கியைச் சேர்ந்தவர்கள் உடனே வேறு சான்றிதழில் 'துர்க்காவதி ஸ்டாலின்’ என்று மாற்றி எழுதிக் கொடுத்தார்கள். துர்க்கா ரத்தம் கொடுத்து முடித்த விஷயத்தையும் உடனே ஸ்டாலினிடம் சொன்னார்கள். 'நானும் ரத்தம் கொடுக்கிறேன்னுதான் சொன்னேன். ரொம்ப நேரம் நிற்க வேண்டியிருக்கும்னு துர்க்காதான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இப்போ என்கிட்ட சொல்லாம அவங்க மட்டும் கொடுத்துட்டாங்க!’ என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். வீட்டுக்குப் போனதும் குழந்தைகளிடம் ரத்தம் கொடுத்த சான்றிதழைக் காட்டி சந்தோஷப்பட்டாராம் துர்க்கா!'
''பிறந்தநாளுக்கு முந்தைய தினம் அதாவது பிப்ரவரி 28-ம் தேதியே ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டம் நடந்திருக்கிறதே?'
''சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன்தான் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் பேசிய கருணாநிதி, 'ஆண்டுதோறும் இங்கே நடைபெறுகின்ற தளபதி ஸ்டாலினுடைய பிறந்தநாள் விழாவில், நான் கலந்துகொள்வது என்பது கட்சியினுடைய தலைவன் என்ற முறையில் அல்ல. பிறந்தநாள் யாருக்குக் கொண்டாடப்படுகிறதோ அந்தக் கதாநாயகனுடைய தந்தை என்ற முறையிலும்தான்’ என்று அன்புள்ள அப்பாவாக உருகியிருக்​கிறார்!''
''எனக்கு முதல்வராக ஆசை இல்லை என்று பேசியிருக்கிறாரே!'
''ஆமாம்! '6-வது முறையாக தலைவர் கலைஞர் முதல்வராக வர வேண்டும்’ என்று பலரும் பேசினார்கள். அதற்கு கருணாநிதி பதில் சொன்னார். 'ஆறாவது முறையாக முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நான் படுகின்ற ஆசையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்க வேண்டும். கடைசித் தொண்டர் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எதிரிக்கு விட்டுக்கொடுக்க முடியாது. இந்த இயக்கத்தை வாழ வைப்பதுதான் நம்முடைய தலையாய கடமை என்ற உணர்வோடு பாடுபட வேண்டும். இல்லையேல் நாம் நன்றி மறந்தவர்களாவோம்’ என்று சொல்லி ஸ்டாலின் ஆட்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்!'
''இது அவரது எதிர் வட்டாரத்தைக் கோபப்பட வைத்திருக்குமே?'
''கருணாநிதி அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பொதுவாக கருணாநிதி பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தால் பதில் சொல்லாமல் விட்டிருப்பார். ஆனால் இந்தக் கூட்டத்தில் அவராகவே, 'எனக்கு ஆசை இல்லை’ என்று சொல்வதன் மூலமாக மறைமுகமாக ஸ்டாலின் பெயரைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். 'கலைஞர்தான் அடுத்த முதல்வர்’ என்று அழகிரி சொல்லி வந்தாலும் அவருக்குப் பதில் சொல்வதுபோல அமைந்துவிட்டது கருணாநிதியின் பேச்சு!'
''கனிமொழி?'
''அவர்தான் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டாரே! ஸ்டாலினை தனது மகளிர் அணி சகாக்களுடன் வந்து வாழ்த்துத் தெரிவித்தார். மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் அவர் ஏற்பாடு செய்யும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக மட்டும் ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து வருகிறாராம். ஸ்டாலின் ஆலோசனை இல்லாமல் எதுவும் அவர் செய்வதில்லையாம். அதனால் ஒரே கோஷ்டி ஆன மாதிரி கணக்குத்தான்!'
''அழகிரி...?'
''சமீப காலமாக அடக்கி வாசித்து வந்தார் அழகிரி. உண்மையில் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விமான நிலையங்களில் அவர் அளித்துவரும் பேட்டிகள்தான் அவருக்கு எதிராக மாறியது. 'தி.மு.கவினர் அனைவரும் திருடர்கள்’ என்ற அர்த்தத்தில் அவர் அளித்த பேட்டி லேசாக மனம் மாறியிருந்த கருணாநிதியைக் கோபப்பட வைத்தது. இனி அழகிரிக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று கருணாநிதியைச் சொல்ல வைத்தது. இந்த நிலையில்தான் கருணாநிதி அப்படி ஒரு பேச்சைப் பேசி இருக்கிறார். கடந்த 2-ம் தேதி மாலை சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மு.க.தமிழரசின் மகன் நடிகர் அருள்நிதிக்கும், கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அழகிரி வந்திருந்தார். அவர் சென்னை வந்தால் தங்கும் ஹோட்டல் அது. நிச்சயதார்த்த விழாவில் அழகிரி ஒருபக்கம் அமர்ந்திருந்தார். கருணாநிதி முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தார். அழகிரி கண்ணில்படாத இடத்தில் ஸ்டாலின் இருந்தார். இப்படியாக மூன்று பேரும் ஒரே நிகழ்ச்சியில் இருந்தும் ஒருவருக்கொருவர் பார்க்கவும் இல்லை. பேசிக்கொள்ளவும் இல்லை!'' என்றபடி கழுகார் வேறு செய்திகள் பக்கம் வந்தார்.
''கடந்த 25-ம் தேதி டெல்லியில் தே.மு.தி.க இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர், அமித்ஷாவை சந்தித்தாராம். அப்போது 2016 சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி கூட்டணி சார்பில் முதல் அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெயரை நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதற்கு அமித்ஷா, இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னதாக தே.மு.தி.கவினர் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், பி.ஜே.பி தரப்பிலோ அமித்ஷாவை சுதீஷ் சந்திக்கவே இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். மார்ச் 5ம் தேதி அமித்ஷா கோவை வருகையில் இந்தக் கேள்விகளுக்கு நிச்சயம் விடை கிடைக்கும் என்று தே.மு.தி.க தலைமை நினைக்கிறது. இல்லையென்றால், தனி ரூட் போட கேப்டன் தயாராக இருக்கிறாராம்.'
''ஓஹோ!'
''சென்னை மாநகரக் கூடுதல் கமிஷனர் ரவிக்குமார் அதிரடியாக போலீஸ் நிலையங்களில் சோதனை நடத்தியுள்ளார். இந்தச் சோதனை மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடந்ததாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி எத்தனை உடன்பிறப்புகள் பேனர்கள், கட்அவுட் வைத்திருக்கிறார்கள். அதற்கு அனுமதி பெற்று இருக்கிறார்களா என்று கேள்விகளைக் கேட்டு போலீஸ் அதிகாரிகளைக் குடைந்திருக்கிறார் ரவிக்குமார். சோதனைக்கு முன்பே ஸ்டாலின் பிறந்தநாளில் தி.மு.கவினரை கடுமையாக கெடுபிடி செய்ய வேண்டும் என்ற ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கும் ரகசிய ஓலை வந்திருந்ததாம். இதனால் இந்த முறை பிறந்தநாள் விழா தொடர்பாக அனுமதி கேட்டு வந்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.''
''ம்!'
''பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அநேகமாக மார்ச் 18ம் தேதி வந்துவிடும் என்றே சொல்கிறார்கள்!
விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் தரப்பு வாதங்கள் முடிந்துவிட்டன. இதில் தொடர்புடைய கம்பெனிகள் தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. அரசு வழக்கறிஞரான பவானி சிங், தன்னுடைய வாதத்தை 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் வைப்பார். அத்துடன் இரண்டு தரப்பினரது வாதங்களும் முடிவடைந்து விடுகின்றன. பிறகு தேதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றத்தை நீதிபதி ஒத்தி வைக்கலாம். கர்நாடக உயர் நீதிமன்ற விதிமுறைகளின்படி ஒரு வழக்கின் விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும் என்பது முக்கிய விதி. இதைச் சொல்லித்தான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பை விரைந்து அளித்தார். அதேபோல் நீதிபதி குமாரசாமியும் தனது தீர்ப்பை விரைந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக தீர்ப்பு தேதி மார்ச் 18 ஆக இருக்கும் என்று சொல்கிறார்கள் பெங்களூரு நீதிமன்ற வட்டாரத்தில் வலம் வருபவர்கள்.
அரசு வழக்கறிஞராக இருக்கும் பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றம் அப்போது என்ன சொல்ல இருக்கிறது என்பதை அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். ஒருவேளை பவானி சிங்கை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால், புதிய அரசு வழக்கறிஞர் வந்து, வாதங்களை வைத்து, அவரிடம் நீதிபதி கேள்விகளைக் கேட்டு... என அதிகப்படியான காலதாமதம் ஆகலாம். அப்படி எந்தத் தடையையும் போடவில்லை என்றால் மார்ச் 18 தீர்ப்பு வருவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அதனால்தான் பெங்களூரு பயம் மீண்டும் பற்றிக்கொண்டுவிட்டது. அதனால்தான் அதிகாரிகள், அமைச்சர்கள் தன்னை வந்து சந்தித்தபோதும் சரியாகப் பேசாமல் இருந்தாராம் ஜெயலலிதா!' என்பதைச் சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...