கோவில்பட்டி, மே 6 :
வணி கர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் ஏரல் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வணிகர் தினத்தை யொட்டி சென்னையில் அகில இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை யில் நடந்த இம்மாநாட்டில் உணவு தர நிர்ணய சட் டத்தை ரத்து செய்ய வேண்டும். அன்னிய நேரடி முதலீடு 51 சதவீதத்தை திரும்ப பெற வேண்டும்.
நுழைவு வரியை அமல்படுத்தக்கூடாது. ஓட்டல் மற்றும் அனைத்து கடைகளுக்கும் 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தூத்துக் குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பன்னீர்செல்வம், செய லாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான வணிகர்கள் நேற்று முன்தினம் (4ஆம் தேதி) வாகனங்களில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
மாநாட்டையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிகளான கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மார்க்கெட், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகள், நகைகடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஏரல்:
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று மே 5ஆம் தேதி முழு கடையடைப்பு நடந்தது. பெரிய கடைகள் முதல் சிறிய டீ கடை வரை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரல் மெயின்பஜார் பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. மேலும் ஒரு சில இடங்களில் தற்காலிக டீ கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவில்பட்டி, ஏரலில் கடையடைப்பு
வணிகர் தினத்தை முன்னிட்டு
வணிகர் தினத்தை முன்னிட்டு ஏரலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.