புதன், 24 அக்டோபர், 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை:
மின்னல் தாக்கி வீடு சேதம்; பெண் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடியில் மின்னல் தாக்கி வீடு சேதம் அடைந்தது. பெண் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்கு மேல் மாவட்டத்தில் சில இடங்களில் கன மழையும், பிற இடங்களில் மிதமான மழையும் பெய்தது. காயல்பட்டினம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 62 மில்லி மீட்டர் மழை பதிவானது.

தூத்துக்குடியில் நேற்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகாலை 5 மணி அளவில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள சேர்மபாண்டி என்பவரின் வீட்டில் மின்னல் தாக்கியது.

இதில் சேர்மபாண்டியின் மனைவி தேவிகா (வயது 32) படுகாயம் அடைந்தார். வீட்டில் இருந்த சேர்மபாண்டி, அவரின் மகள்கள் கீர்த்தனா (11), பிருந்தா (7) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தில் வீட்டில் உள்ள பிரிட்ஜ், மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. வீட்டின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டது. மேலும் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டு இருந்த ஆஸ்பட்டாஸ் ஷீட் சேதம் அடைந்தது.

மின்னல் தாக்கி படுகாயம் அடைந்த தேவிகா, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

திருச்செந்தூர் -57, குலசேகரன்பட்டினம் -12, காயல்பட்டினம்-62, சூரங்குடி-13, கோவில்பட்டி -1, கயத்தாறு-8, கடம்பூர்-2, கழுகுமலை-7, ஓட்டப்பிடாரம் -2, வேடநத்தம் -3, கீழஅரசடி-0.1, சாத்தான்குளம்-45, ஸ்ரீவைகுண்டம் -28, தூத்துக்குடி-0.5.

ஏரல், அக்.23: தாமிரபரணி மகா புஷ்கரம் 11வது நாள் விழாவையொட்டி ஏரல் அருகேயுள்ள வாழவல்லான்




ஏரல், அக்.23: தாமிரபரணி மகா புஷ்கரம் 11வது நாள் விழாவையொட்டி ஏரல் அருகேயுள்ள வாழவல்லான் கங்கா தீர்த்த கட்டத்தில் பெருங்குளம் செங்கோல் மடம் ஆதீனம் நதியில் மலர் தூவி, சிறப்பு வழிபாடு நடத்தினார்.144 ஆண்டுகளுக்கு பின்னர் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஏரல் சேர்மன் கோயில் ஞான தீர்த்தம் படித்துறை, சிறுத்தொண்டநல்லூர் ஊர் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்துள்ள ஏரல் சுந்தவிநாயகர் கோயில் ஞான தீர்த்தம் படித்துறை, மங்கலகுறிச்சி தடுப்பணை, வாழவல்லான் கங்கா தீர்த்தக் கட்டம் மற்றும் உமரிக்காடு தீர்த்தகட்டப்பகுதிகளில் கடந்த 12ம் தேதி கணபதி ஹோமம், மற்றும் கோ பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தீர்த்த கட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 
 இந்நிலையில் வாழவல்லான் கங்கா தீர்த்த கடடத்தில் நேற்று 11வது நாள் விழாவையொட்டி பெருங்குளம் செங்கோல்மடம் ஆதீனம் வருகை தந்து கணபதி ஹோமம் மற்றும் கோ பூஜை நடத்தினார். தொடர்ந்து அவர் நதியில் மலர் தூவி அபிஷேகம் நடத்தினார். 
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் செல்வகணேசன், இளந்துழகன், பச்சைப்பெருமாள், துரை, மணிராஜ், சங்கரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 இதேபோல் ஏரல் சேர்மன் கோயில் ஞான தீர்த்தக் கட்டத்தில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு புனித நீராடினர். மாலையில் கோயில் பரம்பரை அக்தாரும், தாமிரபரணி மகா புஷ்கர விழா கமிட்டி தலைவருமான கருத்தப்பாண்டிய நாடார் தலைமையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நதிநீருக்கு தீபாராதனை காண்பித்து வழிப்பட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
இதேபோல் சிறுத்தொண்டநல்லூர் ஊர்மக்கள் ஏற்பாடு செய்துள்ள ஏரல் சுந்தரவிநாயகர் கோயில் ஞான தீர்த்தக்கட்டத்திலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

வியாழன், 18 அக்டோபர், 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை
மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்திருப்பேரை, 
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

ஏரலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை தேக்குமரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது

ஏரல், அக்.18: ஏரலில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயிலில் முட்டளவுக்கு மேல் மழைநீர் சாக்கடை தண்ணீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் ஏரல் பஸ் நிலையம் அருகில் பஜார் நுழைவு வாயிலிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் தேக்குமரம் ரோட்டில் சரிந்து விழுந்ததால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மற்றும் சாயர்புரம் செல்லும் பஸ்கள் மாற்றிவிடப்பட்டன. ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி நடவடிக்கை எடுத்து ரோட்டில் விழுந்த தேக்குமரத்தை வெட்டி அப்புறபடுத்தியதால் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக போக்குவரத்து தொடங்கியது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...