வெள்ளி, 23 டிசம்பர், 2011

நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேதமாகிய பாலத்தை உடனே சீர் செய்ய வேண்டும்

தூத்துக்குடி :நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேர்மன் கோயில் அருகே உள்ள பாலம் சேதமாகியிருப்பதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இதனை சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் சேர்மன் கோயில் அருகே சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சமீபத்தில் பெய்த மழையினால் சேதமடைந்தது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் வழியாக அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது.
அதிக பஸ் போக்குவரத்தும் இருப்பதால் பிசியான ரோடாக இந்த ரோடு இருந்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையினால் பாலத்தின் சைடு சுவர் சேதமாகியும், பாலத்தின் மேல்தளத்தின் ஒரு பகுதி மோசமாகி இருக்கிறது.
இதனால் பஸ் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் மேற்கொள்வதற்காக பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக சிரமப்பட்டு பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக வாகன போக்குவரத்து இருபப்தால் இதே நிலை தொடர்ந்தால் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் இந்த பணியை செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும் என்று ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனி, 10 டிசம்பர், 2011

பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தொழிலாளி சிக்கினார்


ஏரல், டிச.10&
ஏரல் பகுதியில் கடந்த 2 ஆண்டாக பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தொழிலாளி போலீசில் சிக்கினார்.
ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் பலருக்கு கடந்த 2 ஆண்டாக செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. இது வெளியில் தெரிந்தால் அசிங்கம் என கருதி போலீசில் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் தொல்லை தாங்கமுடியாத சிலர் போலீஸ் உதவியை நாடினர்.
போலீசாரும் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியவரின் நம்பரை நோட்செய்து விசாரித்தனர். இதில் செல்போனில் பேசியவர் ஏரல் டவர் எல்கையில் இருந்துதான் பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஏரல் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்த சண்முகவேலு மகன் மாரியப்பன்(37) என்பவரை கைது செய்தனர். தச்சு தொழிலாளியான அவர், பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதும் இதற்காக பல செல்போன் நம்பர்களை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
ஏரல் பகுதியில் 2 ஆண்டாக

லாரியில் மரத்தடி இறக்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி ஏரல்


லாரியில் மரத்தடி இறக்கிய
தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
ஏரல் அருகே
ஏரல், டிச. 10&
ஏரல் அருகே லாரியில் மரத்தடி இறக்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார். இதையொட்டி உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டனர்.
ஏரல் நாடார் 2வது தெருவைச் சேர்ந்த சிவதாணுலிங்கம் மகன் சேகர்(43). இவர் ஏரல் போலீஸ்நிலையம் அருகே மரக்கடை வைத்துள்ளார். இவருக்கு வாழவல்லான் ரோட்டில் மரம் அறுக்கும் ஷாமில்லும் உள்ளது.
நேற்றிரவு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து லாரியில் வந்த மரத்தடிகளை ஷாமில்லில் இறக்கும் பணி நடந்தது. இதில் தொழிலாளர்கள் நளராஜபுரம் வேதக்கோயில் தெரு ராசாண்டமுத்து மகன் நகுலராஜா(25), நடராஜபுரம் பால்ராஜ் மகன் பாலாஜி, கொத்தலரிவிளை சவுரிமுத்து மகன் மார்ட்டின், திருவழுதிநாடார்விளை அய்யாக்குட்டி மகன் அருள்ராஜ் ஆகியோர் கிரேன் மூலம் இறக்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அந்த வழியாக சென்ற மின் வயரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. தொழிலாளர்கள் ஷாக்அடித்து தூக்கி வீசப்பட்டனர். இதில் நகுலராஜா மட்டும் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி, சப்&இன்ஸ்பெக்டர் பால்ஐசக் ஆகியோர் விசாரணை நடத்தி மரக்கடை அதிபர் சேகர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் ஜெயமுருகேஷ்(32) ஆகியோரை கைது செய்தனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...