வெள்ளி, 25 மே, 2018
தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் முடங்கிய இணைய சேவை.. இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 27-ந் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை பரவாமல் இருக்கவே இணைய சேவை முடக்கம் என அரசு தரப்பு கூறுகிறது. மாணவர்கள் தவிப்பு ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு மையங்களில் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர். பணம் எடுக்க முடியாத நிலை 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இணைய சேவை இல்லாததால் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். செய்தியாளர்கள் அவதி தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை மாவட்ட செய்தியாளர்கள் விருதுநகர் மாவட்டத்துக்கு சென்று செய்திகளை அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. முன்பதிவுகள் முடக்கம் ரயில், பேருந்து பயணங்களுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இயங்கும் கால்சென்டர்களும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சென்னையில் போராட்டத்தில் இறங்கிய ஐடி பணியாளர்கள்!
ஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்.. சென்னை: தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து சென்னை காஞ்சிபுரம் எல்லையில் இருக்கும், மஹிந்திரா சிட்டியில் உள்ள ஐடி பணியாளர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் மூர்க்கமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மோசமான தாக்குதல் காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் முழுக்க இதற்கு எதிராக போராடி வரும் நிலையில் தற்போது ஐடி பணியாளர்களும் களமிறங்கியுள்ளனர். மஹிந்திரா சென்னை காஞ்சிபுரம் எல்லையில் இருக்கும், மஹிந்திரா சிட்டியில் நிறைய ஐடி கம்பெனிகள் உள்ளது. இதில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள்தான் இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இன்று காலையிலேயே அலுவலகம் வந்தவுடன் எல்லா பணியாளர்களும் சேர்ந்து சாலையில் இறங்கி போராடி இருக்கிறார்கள். எல்லா நிறுவனத்திலும் உள்ள நிறைய பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். கருப்பு இந்த போராட்டம் நடத்திய பணியாளர்கள் எல்லோரும் கருப்பு உடை அணிந்து வந்தனர். அதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகம் அடங்கிய போர்டுகளை சுமந்து போராட்டம் நடத்தினர். முக்கியமான ஸ்டெர்லைட் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளையும், அதற்கான விழிப்புணர்வையும் அந்த போர்டுகளில் எழுதி இருந்தனர். பாதிப்பு இல்லாமல் முக்கியமாக காலை நேரத்தில் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்திற்கு பாதிப்பு இருக்க கூடாது என்பதற்காக சாலை ஓரத்தில் போராட்டம் நடத்தினார்கள். மனித சங்கிலி போல வரிசையாக நின்று போராட்டம் நடத்தினார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது கூச்சலிட்டார்கள். அழைப்பு விடுத்துள்ளனர் மிக முக்கியமாக இவர்கள் மற்ற ஐடி பணியாளர்களையும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட அழைப்பு விடுத்துள்ளனர். சென்னையில் மற்ற மாநிலங்களில் உள்ள ஐடி பணியாளர்கள் இதே போல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் எல்லோரும் இந்த போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது: தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மதுக்கடைக்கு தீவைக்கப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கடந்த 22–ந் தேதி தடையை மீறி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் கலவரம் வெடித்ததால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள், அலுவலக கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேரும், திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண்ணும் பலியானார்கள். பலர் காயம் அடைந்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம் அண்ணாநகரில் நடந்த கலவரத்தில் போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டதால் காளியப்பன் (வயது 22) என்பவர் பலியானார். இதற்கிடையே, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
தடியடியில் காயமடைந்தவர் சாவு
மேலும், தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். தடியடியில் காயம் அடைந்த 65 பேரும், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் காயம் அடைந்த 37 போலீசாருக்கும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 22–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போலீசாரின் தடியடியில் காயமடைந்த சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளம் இருவப்பபுரத்தைச் சேர்ந்த பலவேசம் மகன் செல்வசேகர் (42) தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.
போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் நிலையம் அருகே நேற்று அதிகாலையில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென்று போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள். அந்த குண்டு போலீஸ் நிலைய வளாகத்தில் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி முன்பு உள்ள அரசு பஸ் டெப்போ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அங்கு ஒரு பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். ஆனால், அந்த பெட்ரோல் குண்டு யார் மீதும் விழாமல் கீழே விழுந்து வெடித்தது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
மதுக்கடைக்கு தீவைப்பு
பிரையண்ட் நகர் 2–வது தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இதில் அங்கிருந்த மதுபானங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து, அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினார்கள். மேலும் தூத்துக்குடி வட்டக்கோவில், 2–ம் கேட் ஆகிய பகுதிகளில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மர்ம கும்பல் அடித்து சூறையாடினார்கள்.
அண்ணா நகர் 5–வது தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அங்கு நின்ற ஒரு வேன், 2 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்.
தூத்துக்குடி ரங்கநாதபுரம் கீழரதவீதி தெப்பக்குளம் தெரு, டி.ஆர்.நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 17 கார்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
கமாண்டோ படை வருகை
இந்த சம்பவங்களால் தூத்துக்குடி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் 8 ஐ.ஜி.க்கள், 4 டி.ஐ.ஜி.கள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து 1,000 போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள அனைத்து சாலைகளையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்
கடந்த 2 நாட்களாக நடந்த கலவரத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 132 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 65 பேர் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் கோர்ட்டு வளாகத்தில் திரண்டு இருந்தனர். இந்த வழக்கில் தொடர்பு இல்லாதவர்களை எல்லாம் கைது செய்து அழைத்து செல்கிறீர்களே என்று கூறிய அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தூத்துக்குடியில் நேற்று 3–வது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடியில் இருந்து எந்த பஸ்களும் வெளியூர்களுக்கு இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் நீடிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியுடன் முடிகிறது. எனவே, மீண்டும் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க போலீசாரும், அரசு அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏரல் அருகே சாயர்புரத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் கடை சூறை போலீஸ்நிலைய பெயர் பலகைக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

சாயர்புரத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது
சாயர்புரம்,
சாயர்புரத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. போலீஸ் நிலைய பெயர் பலகைக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் போராட்டம்
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடியில் காயம் அடைந்த செல்வசேகர் நேற்று இறந்தார். இந்த தகவல் அறிந்தவுடன் சாயர்புரம், செவத்தையாபுரம் பகுதி மக்கள் அங்குள்ள மெயின்ரோடு பகுதியில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் செவத்தையாபுரத்தில் இருந்து சாயர்புரம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது சாலையோரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு பெஞ்சுகள் மற்றும் கற்களை சாலையில் தூக்கி வீசினர். முட்செடிகள், டயர்களை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். செவத்தையாபுரம்– சாயர்புரம் மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடையை போராட்டக்காரர்கள் அடித்து உடைத்தனர். உள்ளே புகுந்து அங்கிருந்த மதுபாட்டில்களை அள்ளி வெளியே வீசி சூறையாடினர். அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
போலீஸ்நிலைய பெயர் பலகைக்கு தீவைப்பு
நடுவக்குறிச்சி என்ற ஊர் பெயர் பலகை மற்றும் அங்குள்ள தெருக்களின் பெயர் பலகைகளை பிடுங்கி நடுரோட்டில் போட்டு உடைத்தனர். இரும்பால் ஆன மின்கம்பத்தை சாய்த்து ரோட்டின் குறுக்கே போட்டனர். இதுதவிர சில இடங்களை மரங்களை வெட்டியும் ரோட்டின் குறுக்கே போட்டனர். சாயர்புரம் போலீஸ் நிலைய பெயர் பலகையை பிடுங்கி நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
போலீசார் விரட்டி அடித்தனர்
தகவல் அறிந்த போலீசார் ஏராளமானவர்கள் சாயர்புரம் பகுதிக்கு வாகனங்களில் வந்தனர். அவர்களது வாகனம் செல்ல முடியாத வகையில் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் நடந்து சென்றே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை விரட்டி அடித்தனர். நாலாபுறமும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் சாயர்புரம்– செவத்தையாபுரம் சாலை போர்க்களம் போல் உள்ளது. இதை தொடர்ந்து சாயர்புரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வியாழன், 24 மே, 2018
புதன், 23 மே, 2018
செவ்வாய், 22 மே, 2018
வியாழன், 17 மே, 2018
ஞாயிறு, 6 மே, 2018
ஏரலிலும் கடையடைப்பு

வணிகர் தினத்தை முன்னிட்டு ஏரலில் கடையடைப்பு நடந்தது.
கோவில்பட்டி
சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாநில மாநாடு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் கோவில்பட்டியில் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில், 100-க்கு மேற்பட்ட வாகனங்களில் ஏராளமான வணிகர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர்.
இதையொட்டி கோவில்பட்டியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கோவில்பட்டி மெயின் ரோடு, தெற்கு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடிக் கிடந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோன்று ஏரலிலும் கடையடைப்பு நடந்தது. ஏரல் மெயின் பஜார், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. மெஞ்ஞானபுரத்திலும் முழு கடையடைப்பு நடந்தது.
திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.
வெள்ளி, 4 மே, 2018
ஏரல் அருகே சாயர்புரத்தில் தண்ணீர் பந்தல்
ஏரல், மே 4: வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக, சாயர்புரம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் சாயர்புரத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றியச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், சாயர்புரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணன், துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.இதில் மாணவரணி மாநில துணைச் செயலாளர் உமரிக்காடு சங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸி பொன்ராணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் வேலம்மாள், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், பாலமுருகன், பிரபாகரன், சுபமாரியப்பன், செல்ஸன், கார்த்தீசன், தீபன், ராமசுப்பிரமணியன், பழையகாயல் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜெயசங்கர், நகரச் செயலாளர்கள் சாயர்புரம் வரதராஜ் ஸ்டாலின், ஏரல் பார்த்திபன், ஏரல் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ஜான்பாண்டியன், ஊராட்சி செயலாளர்கள் சாமுவேல், சாதிக்குல் அமீன், குணசேகர், இம்மானுவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஏரல் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை
ஏரல், மே. 4: ஏரல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் ர்தலில் 17 பேரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த மனுதாரர்கள் ஆதரவாளர்களுடன் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். ஏரல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு கடந்த மாதம் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் 33 பேர் மனுதாக்கல் செய்தனர். மனுபரிசீலனை கடந்த 2ம் தேதி நடந்தது. இதில் சிறுத்தொண்டநல்லூர் தசரதபாண்டியன், ஏரல் சிவக்குமார், தினகரன், ரமேஷ், அசோக்குமார், பிரபாகரன், மணிவண்ணன் உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதனால் ஆவேசமடைந்த தள்ளுபடியான வேட்புமனுதாரர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சென்றனர். ஆனால், அங்கு முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
இதில் ஏரல் அதிமுக நகரச் செயலாளர் ஆத்திப்பழம், தொழிலதிபர் அழகுராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசினர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்.ஐ சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...



