திங்கள், 15 டிசம்பர், 2014

ஏரல் & குரும்பூர் இடையே போக்குவரத்து துவக்கம்

ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் குறைந்தது
ஏரல் & குரும்பூர் இடையே போக்குவரத்து துவக்கம்
ஏரல், டிச. 14:
ஏரல் ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் குறைந்ததால் 2 நாட்களுக்கு பின்னர் நேற்று ஏரல் & குரும்பூர் இடையே போக்குவரத்து துவங்கியது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததாலும், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஆற்றுப்பாலம் 11ம் தேதி இரவு தண்ணீரில் மூழ்கியதால் ஏரல்&குரும்பூர் இடை யே போக்குவரத்து துண்டிக் கப்பட்டது.
கடந்த 2 நாட் களாக ஏரலிலிருந்து குரும்பூருக்கு போக்குவரத்து அடி யோடு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் பாலத்தின் வழியாக பைக் மற்றும் நடந்து செல்பவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர்.
ஆனால், பாலம் பலவீனமாக இருந்ததால் பஸ் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் காலை 11 மணிக்கு பாலத்தை பார்வையிட்டு பாலத்தில் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் மணல், ஜல்லி களை போட்டு போக்குவரத்தை துவக்கி வைத்தனர்.
இதனால் 2 நாள்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் ஏரல் ஆற்றுப்பாலம் வழி யாக பஸ் போக்குவரத்து துவங்கியது.

ஏரல் மற்றும் சாயர்புரம் பகுதிகளில் முருங்கையில் ஊடு பயிராக விதைத்த புடலங்காய் காய்த்து குலுங்குகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ல், டிச. 15:
ஏரல் மற்றும் சாயர்புரம் பகுதிகளில் முருங்கையில் ஊடு பயிராக விதைத்த புடலங்காய் காய்த்து குலுங்குகிறது. விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் மற்றும் சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களான சிறுதொண்டநல்லூர், சூளைவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரி விளை, வலசக்காரன்விளை, திருப்பணிசெட்டிக்குளம், ராமசாமியாபுரம், நட்டாத்தி, சுப்பிரமணியபுரம் உட்பட கிராமங்களில் 500 ஏக்கரில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை நிலத்தை கட்டுக்குத்தகைக்கு எடுத்து முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். முருங்கைச்செடி வளர்ந்து 4 மாதத்தில் காய் பறிக்கலாம். ஆனால், மழைக்காலத்தில் முருங்கை மரங்கள் அனைத்தும் இலைகளை உதிர்த்து பட்டமரம் போல் ஆகிவிடும். மேலும் நோய் தாக்குதல் அதிகமிருப்பதால் காய்ப்பதும் இல்லை.
இதனால் விவசாயிகளுக்கு மழைக்காலங்களில் 3 மாதங்கள் எந்தவித வருமானமும் கிடைக்காது. இந்த இடைப்பட்ட காலத்தில் வருமானம் கிடைப்பதற்காக முருங்கை விவசாயிகள் ஊடுபயிராக புடலை விதைத்தனர். முளைத்த புடலை கொடியை முருங்கை மரங்களில் படர விட்டிருந்தனர்.
தற்போது புடலங்காய் நன்கு காய்த்த நிலையில் விவசாயிகள் அவற்றை பறிக்க துவங்கியுள்ளனர். இங்கு பறிக்கப்படும் புடலங்காய் தரம் பிரிக்கப்பட்டு சாக்கு பைகளில் அடைத்து நெல்லை நயினார்குளம் மொத்த மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து புடலங்காய் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ20 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரூ.8 ஆக விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, கொற்கை மணலூரைச் சேர்ந்த விவசாயி அழகேசன் கூறுகையில், �தற்போது ரூ.8க்கு புடலங்காய் கொள்முதல் செய்யப்படும் நிலையில் விலை மேலும் குறையலாம் என கூறப்படுகிறது. இதனால் எங்களுக்கு பறிப்பு கூலி, உரம், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட செலவுகளுக்கே கட்டுப்படியாவதில்லை.
எனவே, அரசு எங்களுக்கு மானியத்தில் உரம் மற்றும் பயிர்க்கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும்� என்றார்.
ஏரல், சாயர்புரம் பகுதிகளில்
புடலங்காய் விளைச்சல் அமோகம்
விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
புடலங்காய்கள் பறிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு அனுப்புவதற்காக குவிக்கபட்டுள்ளது.

ஞாயிறு, 30 நவம்பர், 2014

ஏரலில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையினை சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் வழங்கினார்.

ஏரலில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையினை சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் வழங்கினார்.
ஏரலில் கல்வி
உதவி தொகை வழங்கல்
ஏரல், டிச.1:
ஏரல் மகாசேமம் அறக்கட்டளையும், எல்.ஐ.சி நிறுவனமும் இணைந்து ஆம் ஆத்மி பீமா யோசானா திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஏரல் கிளை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மகாசேமம் வட்டார மேலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஏரல் கிளை மேலாளர் மணிகண்டன் வரவேற்றார். சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் 52 குழந்தைகளுக்கு ரூ31 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை களவர்ச்சி பணியாளர்கள் இசைராமன், பாலகுரு, சுடலைமுத்து, பரமசிவன் ஆகியோர் செய்திருந்தனர்.

ஏரல் பகுதிகளில் சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, வலசக்காரன்விளை, திருப்பணிசெட்டிக்குளம், நட்டாத்தி, சுப்பிரமணியபுரம் 500 ஏக்கர் முருங்கை மரங்கள் பாதிப்பு

ஏரல் அருகே சக்கம்மாள்புரத்தில் தொடர்மழை காரணமாக முருங்கை மரங்களில் இலைகள் உதிர்ந்து மொட்டையாக உள்ளன.
முருங்கை மரங்கள் பாதிப்பு
ஏரல், டிச.1:
தொடர்மழையினால் ஏரல் பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள முருங்கை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வருமானத்தை பெருக்க ஊடு பயிராக புடலங்காய் பயிர் செய்துவருகின்றனர்.
ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், மொட்டத்தாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, வலசக்காரன்விளை, திருப்பணிசெட்டிக்குளம், நட்டாத்தி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முருங்கை பயிர் செய்துள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு ரூ14 ஆயிரம் வரை கட்டுக்குத்தகைக்கு எடுத்து விவசாயிகள் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் முருங்கை தரம் பிரித்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை உள் ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் பிறமாநிலங்களுக் கும் முருங்கை காய்கள் வியாபாரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இத்தொழிலை நம்பி இப்பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழை பயிர் செய்துவந்தவர்கள் வாழையில் தற்போது போதிய வருமானம் கிடைக்காததால் முருங்கை பயிருக்கு மாறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வருடம் நல்ல மழை பெய்து வருவதால் ஏரல் பகுதிகளில் முருங்கை மரங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் முருங்கை மரம் இலைகளை உதிர்ப் ப தும், அதிக அளவு நோய் தாக்கபட்டு வருவதாலும் இப்பகுதியில் பயிர் செய் துள்ள முருங்கை மரங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன.
மேலும் முருங்கை மரத் தில் கிடைக்ககூடிய ஒரு சில காய்களும் பிசு, பிசுப்பு உண்டாகி கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அந்த முருங்கை காய் களை மரத்திலேயே பறிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர். மழை காலத்தில் போதிய வரு மானம் முருங்கையில் கிடைக்காததால் ஊடு பயிராக புடலங்காய் விதை களை ஊன்றியுள்ளனர். முருங்கை மரங்களை வெட்டி சாய்த்து அதில் புடலங்காய் கொடிகளை படரவிட்டுள்ளனர்.
ஏரல் பகுதியில் தொடர் மழையால்
விவசாயிகள் கவலை
பயிர் கடன் வசதி செய்யப்படுமா?
இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறுகையில்; இப்பகுதியில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்துவந்தனர். தற்போது நோய் தாக்குதல் மற்றும் கூடுதல் செலவு செய்து வாழை வளர்த்து வந்தாலும் போதிய வருமானம் இல்லாததினால் முருங்கை பயிர்செய்ய மாறிவருகின்றனர். இதுவும் அனைத்து இடங்களிலும் நல்ல சீசன் நேரத்தில் முருங்கை காய்கள் அதிக அளவு காய்த்துவிடுவதால் விலை குறைவாக செல்கிறது. தற்போது முருங்கை காய்கள் நல்ல விலைக்கு செல்லும் போது விவசாயிகளிடம் முருங்கை காய் இல்லாமல் போய்விடுகிறது. கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் அனைத்து முருங்கை மரங்களும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியில் முருங்கை விவசாயிகளை காப்பாற்ற விவசாயிகளுக்கு மானியத்தில் உரம் மற்றும் பயிர் கடன் வசதி செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சனி, 29 நவம்பர், 2014

ஆத்தூர்-முக்காணி மேம்பாலத்தில் மின்விளக்குகள்

ஆத்தூர்-முக்காணி மேம்பாலத்தில் ரூ. 10 லட்சத்தில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.
ஆத்தூரில் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் முருகானந்தம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் வீ.சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
பழைய கிராமத்தில் வடிகால் பழுது சரிசெய்தல், கீழரதவீதி சந்து, சேனையர் தெரு மற்றும் புன்னக்காயல் ரோடு ரைஸ்மில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், வடக்குரதவீதி செக்கடி தெருவில் சாக்கடை பாலம் அமைத்தல் போன்ற பணிகள் பொது நிதியில் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தலைவர் பேசியது, பேரூராட்சிகளின் இயக்குநரின் அறிவுரையின்படி ஒவ்வொரு புதன்கிழமையும் அம்மா மக்கள் சேவை மையம் இயங்கி வருகிறது பொதுமக்கள் பேரூராட்சி பகுதிகளில் உள்ள சேவைகளை மனுக்கள் அளித்து பயன்பெறலாம். ரூ. 15 லட்சம் செலவில் பேரூராட்சி மன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட உள்ளது.
ஆத்தூர்-முக்காணி நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ரூ. 10 லட்சத்தில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்க உள்ளது.
மழைநீர் தேங்காமல் வடிவதற்கு யாதவர் தெரு, மரக்கடை தெரு, வடக்கு ரத வீதி, புன்னக்காயல் ரோடு, பெரிய தெரு, தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோயில் தெரு, முதல் சந்தித் தெரு மற்றும் மேல முடுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் ரூ. 47 லட்சத்தில் வடிகாலினை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் ராஜகோபால், ஆறுமுகம், கிருஷ்ணகுமார், கிருபாகரன், ஆத்திக்கனி, மாரியப்பன், சீனிவாசன், செüகர்ஜான், அமீர் அம்சா, சாகிதா, இளநிலை உதவியாளர் த.ஜோதிபாஸ், வரிவசூலர்கள் சிவசுப்பிரமணியன், மு.சுடலைமுத்து, மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ப.நாராயணன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

ஏரலில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஏரலில் தி.மு.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ஏரலில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைத்து, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும், ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி, ஒன்றிய தி.மு.க. சார்பில், ஏரல் காந்தி சிலை அருகில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

பாதியில் நிற்கும் பாலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் சிறந்த வணிக நகராக விளங்குகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆட்சியில்தான், ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் அமைக்கப்பட்டது. பின்னர் தரைமட்ட பாலத்தின் அருகில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க ஆய்வறிக்கையும் தயார் செய்யப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு டெண்டர் விட்டு, புதிய உயர்மட்ட பால கட்டுமான பணிகளை தொடங்கியது. ஆனால் தற்போது அந்த பணிகள் பாதியில் நிற்கிறது.

சமீபத்தில் பெய்த மழையில் ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், ஏரல்- குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று அவதி அடைந்தனர்.

அணையை தூர்வார...

ஸ்ரீவைகுண்டம் அணை 8 அடி ஆழமாக இருந்தது. தற்போது அணை முழுவதும் மணல் மேடாகி, அங்கு தண்ணீரைக் கூட தேக்க முடியாமல் வீணாக கடலுக்கு செல்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

தற்போது மாவட்டம் முழுவதும் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தேவையான உரங்கள் கிடைக்கப் பெறாததால் திண்டாடி வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசு தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

ஒன்றிய செயலாளர்கள் பி.ஜி.ரவி (கிழக்கு), வைகுண்டராமன் (மேற்கு), ஏரல் நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள் பார்த்தீபன் (ஏரல்), வரதராஜ் ஸ்டாலின் (சாயர்புரம்), ஒன்றிய கவுன்சிலர் ராயப்பன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார் ரூபன், தூத்துக்குடி பகுதி செயலாளர் கருணாகரன், தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகபெருமாள், நகர பஞ்சாயத்து துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் குணா, முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர்கள் சிவகுமார், எட்வர்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரலில் வியாபாரிகள் கடையடைப்பு

கிடப்பில் போடப்பட்ட புதிய ஆற்றுப்பாலப்பணி
ஏரலில் வியாபாரிகள் கடையடைப்பு
ஏரல், நவ. 29:
ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்படும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் முக்கிய வணிக நகரமாக விளங்குகிறது. இங்கு வியாபாரம் மற்றும் தொழில் நிமித்தம் சுற்று வட்டார கிராமங் களை சேர்ந்த ஏராளமான மக்கள் தினம் தோறும் வந்து செல்கின்றனர். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல் லாம் ஏரல் தாம்போதி பாலம் மூழ்கி விடுகிறது. இதனால் ஏரல் & குரும்பூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங் கள் செல்ல முடிவதில்லை.
இதையடுத்து ஏரல் தாம்போதி பாலம் அருகி லேயே ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் கட்ட கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி பணி தொடங்கப்பட்டது. 2013 டிசம்பர் மாத இறுதியில் பாலப் பணி முடிவடைந்தது.
ஆனால் பாலத்தில் தென்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமானதாகும். இணைப்புச் சாலை அமைக்க வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் கடந்த ஒரு வருடமாக பாலம் கட்டி முடிக்கப் பட்டும் போக்குவரத்துக்கு திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தாம்போதி பாலம் தண் ணீரில் மூழ்கியது. மேலும் பாலத்தில் பெரிய அளவில் ஓட்டை விழுந்ததால் ஐந்து நாட்களுக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கிடப்பில் போடப்பட்ட புதிய ஆற்றுப்பால பணி களை உடனே முடிக்க கோரி கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
மேலும் இதனை வலியுறுத்தி ஏரலில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கடையடப்பு போராட்டம் நடந்தது.
பெட்டிகடைகள், டீக்கடைகள் உட்பட நகரம் முழுவதும் 750 கடைகள் அடைக்கப்பட்டன. ஏரல் காந்திசிலை அருகே கண்டன கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வியாபாரிகள் சங்க தலை வர் தசரதபாண்டியன் தலைமை வகித்தார்.
இதில் நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் குலசேகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ் உட்பட பலர் பேசினர்.
வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் தாணுலிங்கம், செயலாளர்கள் தர்மராஜ், மணிவண்ணன், ரவிசங்கர், சிதம்பரம், சீலன், சுனில், ஆலோசகர் அருணாசலம், முஸ்லிம் வணிகர் நல சங்க தலைவர் பாக்கர் அலி, நகை வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ் ணன், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், முன்னாள் தலைவர் சாதிக் குல் அமீன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் ராயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலப் பணிகளை உடனே தொடங்காவிட் டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கடைகள் மூடப்பட்டதால் பஜார் வெறிச்சோடியது.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

ஏரல் அருகே ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் உள்பட இருவரை வெள்ளம் அடித்துச்சென்றது

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. இருவரையும் மீட்பதற்காக தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை தூத்துக்குடி பிரையன்ட்நகர் 7வது தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் பிரபிஸ் (21) என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பிரபிஸ் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன், பிச்சையா ஆகியோரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதை பார்த்த வாழவல்லான் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். இதில் கண்ணன், பிச்சையா இருவரும் மீட்கப்பட்டனர். ஆனால், பிரபிஸ் மட்டும் கிடைக்கவில்லை.
பிரபிஸை மீட்கும் பணி யில் ஈடுபட்ட வாழவல் லான் தெற்கூரை சேர்ந்த மாவலிராஜா (45) என்பவரும் தண்ணீரில் அடித் துச் செல்லப்பட்டார். இருவரது கதி என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் ஸ்ரீவைகுண் டம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை எஸ்.பி. துரை, ஸ்ரீவைகுண் டம� டிஎஸ்பி ராஜமன்னார், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ. மந்திரமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.
வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பிரபிஸ் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படிக்கிறார்.
மாவலிராஜா ஏரல்& சென்னை இடையே இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்சில் கிளீனராக வேலை பார்க்கிறார்.
தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல்
ஏரல் அருகே வாழவல்லானில் தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்த தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரபிஸ் உள்பட இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஏரல் தரைமட்ட பாலத்தில் தொழிலாளியை ஆற்று வெள்ளம் இழுத்துச் சென்றது நீண்ட போராட்டத்துக்கு பின்பு மீட்பு

ஏரல்
ஏரல் அருகே தரைமட்ட ஆற்று பாலத்தின் மீது மோட்டார்சைக்கிளுடன் நடந்து சென்றவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. பொதுமக்களின் முயற்சியால் அவர் கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்டார்.
கூலித்தொழிலாளிதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை பங்களாவைச் சேர்ந்தவர், ஜெயபால் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
சில நாட்களாக பெய்த கனமழையால் ஏரல் தாமிரபரணி ஆற்றில் தரைமட்ட தாம்போதி பாலத்தின் மீது வெள்ளம் சென்று கொண்டு இருக்கிறது. பாலத்தின் அருகே வந்த ஜெயபால், மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்லாமல் தள்ளிக் கொண்டே சென்றதாக தெரிகிறது. திடீரென அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் ஜெயபாலை வெள்ளம் இழுத்துச் சென்றது. ஆனால், அவர் உடைமரத்தை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
பத்திரமாக மீட்புஇதை பார்த்து அக்கம்பக்கத்தினர் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து ஏரல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்தனர்.
இதற்கிடையே அங்கு நின்று கொண்டு இருந்த ராஜபதி ஊரைச் சேர்ந்த பூபதி என்பவர் துணிச்சலாக தண்ணீரில் நீந்திச் சென்று, கயிறு மூலம் ஜெயபாலை மீட்க முயற்சித்தார். நீண்ட போராட்டத்துக்கு பின்பு ஜெயபால் கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை உப்பளங்கள்–வாழைகள் மூழ்கின 300 வீடுகள் சேதம்

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக உப்பளங்கள், வாழைகள் மழைநீரில் மூழ்கின. இதுவரை 300 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
வெள்ளமும்–வறட்சியும்வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தின் தென்பகுதியில் இரவு பகலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், முக்கானி, முத்தையாபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுமுகநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது. வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
ஆனால் மாவட்டத்தின் வடபகுதியான எட்டயபுரம் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை அளவு மட்டுமே பதிவாகி உள்ளது. விளாத்திகுளம், கோவில்பட்டி, வேடநத்தம், காடல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் வடபகுதியில் குறைந்த அளவு மழையே பெய்து உள்ளது. இதனால் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் நிரம்பவில்லை. பெரும்பாலான மானாவாரி குளங்கள் நிரம்பாமல் காய்ந்து கிடக்கின்றன. மாவட்டத்தின் ஒரு பகுதி வெள்ளத்திலும், மற்றொரு பகுதி வறட்சியாகவும் காட்சி அளிக்கிறது.
வீடுகள் சேதம்தொடர் மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருச்செந்தூர் தாலுகாவில் 7 வீடுகள் முழுமையாகவும், 24 வீடுகள் பகுதியாகவும், ஸ்ரீவைகுண்டத்தில் 12 வீடுகளும், தூத்துக்குடியில் 5 வீடுகளும், சாத்தான்குளத்தில் 10 வீடுகளும், எட்டயபுரத்தில் 2 வீடுகளும், விளாத்திகுளத்தில் 3 வீடுகளும், ஓட்டப்பிடாரத்தில் ஒரு வீடும் பகுதி அளவு சேதம் அடைந்து உள்ளன. ஒரே நாளில் 64 வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த பருவமழை காலத்தில் மொத்தம் 55 வீடுகள் முழுமையாகவும், 245 வீடுகள் பகுதி அளவும் சேதம் அடைந்து இருக்கின்றன. பகுதி அளவு சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500–ம், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
நெல் சாகுபடிமழையை தொடர்ந்து விவசாய பணிகள் தொடங்கி விட்டன. தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளனர்.
அதே போன்று தூத்துக்குடி அத்திமரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நெல் நாற்றங்கால்கள் அமைத்து இருக்கின்றனர். சாயர்புரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தன. இந்த வாழைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் சுமார் ரூ.10 லட்சம் வரை வாழைகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பகுதிகளில் சேதம் அடைந்த வாழைகளை ஸ்ரீவைகுண்டம் யூனியன் தலைவர் முத்துலட்சுமி அழகேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி கிடக்கின்றன. உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழை விவரம்தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
கோவில்பட்டி– 9,
ஓட்டப்பிடாரம்– 28,
சாத்தான்குளம்– 67.30,
ஸ்ரீவைகுண்டம்– 28.20,
தூத்துக்குடி– 24.80,
திருச்செந்தூர்– 48.50,
விளாத்திகுளம்– 10,
கயத்தாறு– 10,
காயல்பட்டினம்– 63,
குலசேகரன்பட்டினம்– 55,
கீழஅரசடி– 19.50,
எட்டயபுரம்– 3,
கடம்பூர்– 29,
மணியாச்சி– 9,
வேடநத்தம்– 8,
சூரங்குடி– 11,
காடல்குடி– 6,
வைப்பாறு– 20,
கழுகுமலை– 5.

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. கருமேனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல் நாற்றங்கால்கள் மூழ்கின

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தென்திருப்பேரை, குரும்பூர், செம்பூர், கடையனோடை, குருகாட்டூர், கல்லாம்பாறை, புறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் குளம் போன்று தேங்கியது. இதனால் அங்கு நடப்பட்டு இருந்த நெல் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்கின. நெல் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைப்பதற்காக விவசாயிகள் முயற்சி செய்தனர். நெல் நாற்றங்கால்களில் தேங்கிய தண்ணீர் வடியாவிட்டால், நாற்றங்கால்கள் அழுக தொடங்கி விடும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மரம் விழுந்தது

முக்காணி மெயின் ரோட்டில் சென்டிரல் வங்கியின் முன்பு நின்ற மரம் பலத்த மழையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் திடீரென்று சரிந்து விழுந்தது. இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஏரல் வழியாக மாற்று பாதையில் சென்றன. இரவு 11 மணியளவில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றிய பின்னர் வழக்கம்போல் அந்த வழியாக வாகனங்கள் சென்றன.

கருமேனி ஆற்றில் வெள்ளம்

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் கருமேனியாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மணிநகரில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் உள்ள கருமேனி ஆற்றின் தரைமட்ட பாலத்தின் மீது சுமார் 5 அடி உயரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் உடன்குடி- திசையன்விளை இடையே வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மணிநகரில் இருந்து செல்லும் வாகனங்கள் சுண்டங்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு வழியாக மாற்றுப்பாதையில் உடன்குடிக்கு சென்றன.

இதேபோன்று உடன்குடியில் இருந்து வாகவிளை வழியாக சாத்தான்குளம் செல்லும் சாலையில் ஆத்திக்காடு அருகில் உள்ள கருமேனி ஆற்றின் தரைமட்ட பாலத்தின் மீது சுமார் 6 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் உடன்குடி- சாத்தான்குளம் இடையே வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் சாத்தான்குளத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பன்னம்பாறை, மெஞ்ஞானபுரம், லட்சுமிபுரம் வழியாக உடன்குடிக்கு சென்றன.

உடன்குடி அருகே உள்ள வேப்பங்காட்டில் இருந்து கடாச்சபுரம் செல்லும் பிரிவு ரோட்டில் காட்டாற்று வெள்ளம் சாலையை தாண்டி பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெள்ளத்தில் தார் சாலை அரித்து செல்லப்பட்டது.

வெள்ளம் சூழ்ந்தது

ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையிலும் பரவலான மழை தொடர்ந்து பெய்தது. பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பள்ளிவாசல் வளாகங்களில் மழைநீர் குளம் போன்று தேங்கியது. அனைத்து தெருக்கள், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம்போன்று பெருக்கெடுத்து ஓடியது. சிலர் மின் மோட்டார், டீசல் மோட்டார் உதவியுடன் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

வீடு இடிந்தது

ஆறுமுகநேரி விநாயகர் கோவில் தெருவில் பலத்த மழையில் நேற்று முன்தினம் இரவில் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்ததால் உயிர் தப்பினர். காமராஜபுரம், பாரதி நகர், பேயன்விளை புதூர், குரூஸ் நகர், ராஜமன்யபுரம், கணேசபுரம், அடைக்கலாபுரம் ரோடு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போன்று பெருக்கெடுத்து ஓடியது. காமராஜபுரம், பாரதி நகர் பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து மேடான பகுதிக்கு சென்றனர். நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி தனசிங் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால் அமைத்து மழைநீரை வடிய வைக்க முயற்சி மேற்கொண்டனர்.

காயல்பட்டினம்

காயல்பட்டினம் ரத்தினபுரி, கீழலட்சுமிபுரம், பூந்தோட்டம், தைக்காபுரம், வாணியக்குடி தெரு, பப்பரபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போன்று தேங்கியது. தைக்காபுரம், பூந்தோட்டம் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்குள்ளவர்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். காயல்பட்டினம் புறநகர் முழுவதும் மழைநீரால் சூழ்ந்து தீவு போன்று காட்சி அளித்தது. காயல்பட்டினம்- திருச்செந்தூர் சாலையில் கே.எம்.டி. ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஓடக்கரை ஓடையை பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி மழைநீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது. வாணியக்குடி தெருவின் கீழ் பகுதியில் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏரல் தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தது போக்குவரத்து பாதிப்பு

ஏரல்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாலத்தை மூழ்கடித்ததுநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையை தாண்டி, தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது.
ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் நேற்று காலை 8 மணியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. ஏற்கனவே தரைமட்ட பாலத்தின் நடுவில் ஓட்டை விழுந்தது. அதனை சிமெண்டு கலவையால் அடைத்து இருந்தனர். தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் அந்த இடத்தில் ஓட்டை விழுந்தது.
போக்குவரத்து பாதிப்புஉடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி, மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்றனர். தரைமட்ட பாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக இருபுறமும் கயிறு கட்டி சாலை மறிக்கப்பட்டது. இதனால் ஏரல்– குரும்பூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏரலில் இருந்து ஆத்தூர் வழியாக குரும்பூருக்கு வாகனங்கள் சென்றன. சில வாகனங்கள் ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி, ஆழ்வார்தோப்பு வழியாக குரும்பூருக்கு சென்றன. ஏரலில் இருந்து குரும்பூர், நாசரேத் போன்ற பகுதிகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் சுற்றி சென்றதால் அவதி அடைந்தனர்.
புதிய பாலத்தை திறக்க கோரிக்கைஏரல் தாமிரபரணி ஆற்றின் இடையே பல கோடி ரூபாய் செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
புதிய உயர்மட்ட பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தெற்கு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இணைப்புச் சாலை அமைக்க அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு சுமார் 1½ ஆண்டுக்கு மேலாகியும் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. தற்போது புதிய உயர்மட்ட பாலத்தின் நடுவில் உடை மரங்கள் முளைத்து சிதிலம் அடைந்து வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் புதிய உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதன், 5 நவம்பர், 2014

Jayalalitha never obeys the Justice! Vaiko speech against Jayalalitha!

மிஸ்டர் கழுகு: மீண்டும் சைக்கிள் ராஜா ''பருவமழை சீஸனும் பொலிடிக்கல் சீஸனும் களைகட்டத் தொடங்கிவிட்டது. அடாது மழை பொழிய, அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறார் ஜி.கே.வாசன்''- என்று சிறகுகளைச் சிலிர்த்துக்கொண்டு நம் முன் வந்து அமர்ந்தார் கழுகார். துவட்டிக்கொள்ள டர்க்கி டவலும், சூடாக இஞ்சி டீயும் கொடுத்தோம். டீயை உறிஞ்சியபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார் கழுகார். ''இனியும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்க முடியாது என்று ஜி.கே.வாசன் முடிவெடுத்து ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. சோனியாவும் ராகுலும் அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை. பொதுவாக மாநிலங்களில் செல்வாக்கு உள்ள தலைவர்களை டெல்லி எப்போதும் மதிப்பதே இல்லை. முந்தைய உதாரணம், ஆந்திராவைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி. இப்போது ஜி.கே.வாசன். வருத்தத்தில் இருந்தார் அவர். இன்னொரு பக்கம் ஈழப் பிரச்னையும் மீனவர் விவகாரமும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தி வந்தது. தமிழகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சோனியாவும் ராகுலும் இந்த விஷயத்தில் முடிவுகள் எடுத்தார்கள் என்பது இன்னொரு வருத்தம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சோனியா, ராகுலைப் பார்த்து ஈழப் பிரச்னை பற்றி ஜி.கே.வாசன் பேசினார். அதன் பிறகு பிரதமர் மன்மோகனை சந்தித்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் பார்த்தார். அப்போதும் ஈழப் பிரச்னை பற்றியே பேசினார். இது எதையும் ராகுல் விரும்பவில்லை. அன்றே ஜி.கே.வாசனை கழற்றிவிட ராகுல் தயாராகிவிட்டார். இதுபற்றி அப்போதே சொல்லி இருந்தேன்.'' ''ஆமாம்!'' ''இப்படியே போனால் காங்கிரஸ் தமிழகத்தில் அதலபாதாளத்தில் போய்விடும் என்று ஜி.கே.வாசன் நினைத்தார். தனிக் கட்சி முடிவுக்கு வந்தார். ஆனால், நாடு முழுவதும் பி.ஜே.பி அலை வீசிவரும் நிலையில், தனிக் கட்சி தொடங்கினால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. 'அ.தி.மு.க தனித்துப் போட்டி என்று முடிவெடுத்துவிட்டது. தி.மு.க-வுடன் கூட்டுச் சேர முடியாது. இவர்கள் இருவரையும் விட்டால் பி.ஜே.பி கூட்டணிதான் இருக்கிறது. காங்கிரஸை உடைத்து பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேருவதை பி.ஜே.பி தொண்டர்களே விரும்பமாட்டார்கள். 1999-ம் ஆண்டு தி.மு.க-வுடன் இணைந்திருந்த மூப்பனார், அந்தக் கட்சி பி.ஜே.பி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததும் அதிலிருந்து விலகினார். எனவே, மதச்சார்பற்ற தன்மையை விட்டுவிடக் கூடாது. அதற்காகத் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையும் இல்லை’ என்று யோசித்த ஜி.கே.வாசன் தனிக் கட்சி முடிவை அப்போது ஒத்தி வைத்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதைக் கையில் எடுக்க நினைத்தார். ஆனால், முன்கூட்டியே நெருக்கடி ஆரம்பித்துவிட்டது.'' ''நெருக்கடியைச் சொல்லும்!'' ''கடந்த இதழிலேயே லேசாகக் கோடிட்டுக் காட்டி இருந்தேன். தமிழக காங்கிரஸ் கட்சியில் புது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக இது நடக்கிறது. இந்த உறுப்பினர் அட்டையில் சோனியா, ராகுல் படங்கள் பெரிதாக உள்ளன. ஸ்டாம்ப் சைஸில் காமராஜர், மூப்பனார், ராஜீவ், இந்திரா ஆகிய நால்வர் படங்களும் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சென்னைக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சின்னா ரெட்டி, 'இந்த உறுப்பினர் அட்டையில் உள்ள காமராஜர், மூப்பனார் படங்களை எடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். புதுச்சேரிக்கு வந்த தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் ஞானதேசிகனைச் சந்தித்து இதனைச் சொன்னார். 'தமிழகத் தலைவர்கள் படங்கள் இல்லாமல் இங்கு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது’ என்று ஞானதேசிகன் அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வந்ததால் அதனை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. கடந்த மாதத்தில் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ராகுல், முகுல் வாஸ்னிக், திரிவேதி போன்றவர்கள் இருந்துள்ளனர். ஞானதேசிகனிடம் காமராஜர், மூப்பனார் படத்தை எடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார்கள். ஆத்திரம் அடைந்த ஞானதேசிகன், 10 லட்சம் கார்டுகள் அடித்து 6 லட்சம் கார்டுகள் கொடுத்தாகிவிட்டது. அதனை மாற்ற முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். ''6 லட்சம் கார்டுகளும் செல்லாது என்று அறிவித்துவிடுங்கள்’ என்று முகுல் வாஸ்னிக் சொல்லியிருக்கிறார். முடியாது என்று ராகுல் முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டு வந்துவிட்டார் ஞானதேசிகன். சென்னைக்குத் திரும்பும்போதே ராஜினாமா முடிவுக்கு வந்துவிட்டார் ஞானதேசிகன். இவர் சென்னை திரும்பிய அன்று ஜி.கே.வாசன் வெளியூரில் இருந்தார். ராஜினாமா செய்யப் போவதாக ஞானதேசிகன் சொல்ல... 'உங்கள் உணர்வை வெளிப்படுத்த இதைத் தவிர வேறு வழி இல்லை’ என்று ஜி.கே.வாசனும் தூண்டிவிட்டார். அதனால்தான் ஞானதேசிகன் துணிந்து ராஜினாமா செய்தார். அவரது முடிவை ஜி.கே.வாசனும் வெளிப்படையாக ஆதரித்தார்.'' ''டெல்லியில் இருந்து சமாதானப் படலம் நடந்ததா?'' ''முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வந்து ஜி.கே.வாசனைப் பார்த்தார். சமாதானம் சொன்னாராம் நாராயணசாமி. 'என்ன பிரச்னை இருந்தாலும் கட்சியை உடைக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டாராம் அவர். கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார் ஜி.கே.வாசன். 'தமிழ்நாட்டுக்கு முகுல் வாஸ்னிக்கை பொறுப்பாளராகப் போட்டார்கள். அவர் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கே வரவில்லை. யாரோடும் கூட்டணிப் பற்றிய பேச்சுவார்த்தையை டெல்லி தலைமை நடத்தவே இல்லை. 40 தொகுதிகளில் தனித்துப் போட்டி என்றும் அறிவிக்கவில்லை. வேட்பாளர்களை டெல்லியில் நான்கைந்து பேர் முடிவெடுத்து அறிவித்தார்கள். வேட்பாளர்களுக்கு ரூ.2 கோடி, ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்று ஏ, பி, சி, டி என்று பட்டியல் போட்டு கொடுத்தது, யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கே தெரியாது. ஆந்திராவைச் சேர்ந்த கே.பி.கிருஷ்ணமூர்த்தி மூலமாக இந்தப் பணத்தை சப்ளை செய்துள்ளார்கள். ஓரளவுக்கு செல்வாக்கான ஒருவருக்கு ரூ.2 கோடி கொடுத்திருந்தால் டெபாசிட் வாங்கும் அளவுக்காவது ஓட்டு வாங்கியிருக்க முடியும். அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் அதிக பணம் கொடுத்துள்ளனர். பணமே இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சமும் கோடீஸ்வரர்களுக்கு ரூ.2 கோடியும் கொடுத்துள்ளனர். எங்கேயோ யாரோ உட்கார்ந்துகொண்டு இதை எல்லாம் முடிவு செய்தால் தமிழ்நாட்டில் தலைவர் எதற்கு? நாங்கள் எதற்கு? எங்களை மதிக்காதவர் இடத்தில் நாங்கள் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று ஜி.கே.வாசன் கேட்டுள்ளார்.'' ''நியாயம்தான்?'' ''தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றி டெல்லி தலைமைக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதுதான் ஜி.கே.வாசனின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கான காரணங்களை ஆராய முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன் ஆஜரான ஜி.கே.வாசன், அப்போதே தனது விரக்தியை வெளிப்படுத்திவிட்டார். எனவே, வாசன் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதை எதிர்பார்த்தே டெல்லியும் இருந்துள்ளது. இந்த நிலையில் உறுப்பினர் அட்டை விவகாரம் வெடித்து தனிக் கட்சியை உருவாக்கிவிட்டது. திங்கட்கிழமை அன்று மதியம் 12.20 மணிக்குப் புதிய பாதையில், தன் பயணம் இருக்கப் போகிறது என்பதை வாசன் அறிவித்தார். கட்சியின் கொடி, பெயர் ஆகியவற்றை திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாகச் சொன்னார். அநேகமாக நவம்பர் 16-ம் தேதிக்குள் நடக்கலாம். சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால், மாநிலத்தின் மையப் பகுதியாக இருந்தால் நல்லது என்று திருச்சியைத் தேர்வு செய்தார்கள். மேலும், மாநிலம் முழுவதும் மழை பெய்து வருவதால் அதனைக் கவனித்துக் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாராம் வாசன். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சீரான பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி, நேர்மையான அரசு நிர்வாகம் ஆகியவைதான் தனது கொள்கை என்று சொல்லியிருக்கிறார். ஜி.கே.வாசனின் இந்த திடீர் குஷியை அனைத்துக் கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.'' ''அதைச் சொல்லும்!'' ''காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கில் 65 சதவிகிதத்துக்கு மேல் ஜி.கே.வாசன் பக்கமாகத்தான் இருக்கிறது என்பதை அனைத்துத் தலைவர்களும் உணர்ந்துள்ளார்கள். மேலும், அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர் வாசன். அதனால்தான் அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். விஜயகாந்த், வைகோ ஆகிய தலைவர்களும் வாசனுக்கு போன் போட்டு வாழ்த்துச் சொல்லியதாகச் சொல்கிறார்கள். 'வாசன் நம் பக்கமாக வந்தால் நம்முடைய கூட்டணி பலப்படும். அவருக்கு உரிய அங்கீகாரத்தைத் தருவோம்’ என்று கருணாநிதி தூது அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. ஸ்டாலினும் வாசனும் அடிக்கடி பேசிக் கொள்ளக்கூடியவர்கள்தான் என்பதால், இந்த உறவு பலப்பட வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் தரப்பு செய்திகளை தனக்கு உடனுக்குடன் சொல்லச் சொல்லி கருணாநிதியும் உத்தரவு போட்டுள்ளார். இதே நேரத்தில் ஜெயலலிதாவும் ஜி.கே.வாசனின் திடீர் கட்சியைக் கவனித்து வருகிறார். அது சம்பந்தமான ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வாசன் பிரிந்து வந்தால் அவருக்கு மூன்று தொகுதிகள் தரவேண்டும் என்று சிலர் பேசியபோது, 'வாசனை கூட்டணியில் சேர்ப்பது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்தத் தேர்தலில் நான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இதனை வாசனிடம் சொல்லிவிடுங்கள்’ என்று ஜெயலலிதா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். மீனவர்களைக் காப்பாற்ற கடலோரப் பாதுகாப்புப் படை ரோந்து கப்பல்கள் விடப்பட்டன. ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறையவில்லை. இந்த நிலையில் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஓர் அறிக்கையை வெளியிட்டார். அப்போது தயாரான அறிக்கையில், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் திருத்தம் செய்த ஜெயலலிதா, ஜி.கே.வாசன் பெயரை நீக்கிவிட்டு, மத்திய அரசு மீது மட்டும் புகார் சொல்லி அறிக்கையை வெளியிட்டார்.'' ''ஓஹோ!'' ''இப்போது நடந்ததைச் சொல்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சத்தியமூர்த்தி பவன், ஜி.கே.வாசனின் வீடு இருக்கும் ஆழ்வார் பேட்டை பகுதிகளில் போலீஸார் அதிகப்படியான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அறிவிப்பு வெளியிடப்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை ஹோட்டல் வரை வழிநெடுகிலும் வாசன் கட் அவுட்கள் வைக்கப்பட்டன. அதனை போலீஸார் தடுக்கவில்லை. சென்னை மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை. இவை அனைத்துமே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி வாங்கிய பிறகுதான் வைக்க வேண்டும். ஆனால், அந்த அனுமதி இல்லாமல் இந்த கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதை எல்லாம் பார்க்கும்போது, வாசனின் புதுக் கட்சிக்கு ஜெயலலிதா வலை வீசுவதற்கான முஸ்தீபுகள் என்றே சொல்கிறார்கள்.'' ''இதில் சிக்கிக்கொண்டவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தானா?'' ''கடந்த சில ஆண்டுகளாகவே வாசனும் இளங்கோவனும் அதீத அன்புடன் நட்பு பாராட்டி வந்தார்கள். அதனால்தான், தனக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டதும் வாசனைத்தான் முதலில் போய் பார்த்து ஆசி வாங்கினார் இளங்கோவன். இதனை டெல்லி எதிர்பார்க்கவில்லை. அப்போதே தான் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக வாசன் சொல்லிவிட்டார். அறிவிப்பு செய்த அன்றும், இளங்கோவனுக்கு இவர் வாழ்த்து தெரிவித்தார். 'வாசன் தனிக் கட்சி தொடங்கக் கூடாது’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் இளங்கோவன்.'' ''இளங்கோவன் பெயர் பட்டியலிலேயே இல்லையே, அவரை எப்படி அறிவித்தார்கள்?'' ''டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார் ஆகியோர் பெயர்கள்தான் பரிசீலனையில் இருந்தன. 'இளங்கோவனை நியமித்தால்தான் வாசன் தனிக் கட்சி தொடங்க மாட்டார்’ என்று டெல்லி நினைத்ததாம். ஆனால், அதனை மீறி வாசன் வெளியில் போனதை டெல்லி எதிர்பார்க்கவில்லை'' என்ற கழுகார், கடந்த இதழில் வந்த பா.ம.க செய்திகளுக்கு ஃபாலோ - அப் தர ஆரம்பித்தார். ''டாக்டர் ராமதாஸ் வீட்டுத் திருமணத்தில் ஸ்டாலினும் வைகோவும் சந்தித்துக்கொண்டதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் கூட்டு என்று செய்தி பரவியது. கூட்டணிக்குத் தயார் என்பதைப்போலவே கருணாநிதி, வைகோ, ஸ்டாலின் ஆகிய மூவரும் மாறி மாறி பேட்டிகள் கொடுத்தனர். இந்த நிலையில் திடீரென்று வைகோ, இந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பற்றி காங்கேயம் திருமணத்தில் மனம் திறந்துள்ளார்.'' ''அதைப் பற்றி வேறுவேறு செய்திகள் வருகின்றனவே?'' ''கடந்த 2-ம் தேதி ஈரோடு ம.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான கணேசமூர்த்தியின் மகன் கபிலனது திருமணம், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் உள்ள என்.எஸ்.என் மஹாலில் நடந்தது. திருமணத்தை நடத்திவைக்க வைகோ வந்திருந்தார். அங்கே பேசிய வைகோ, 'கடந்த மூன்று நாட்களாகப் பல்வேறு செய்திகள் பத்திரிகைகளிலே உலவிக்கொண்டிருக்கிற காரணத்தால் இது அரசியலிலே பரபரப்பான நேரம், மூன்று நாட்களாக ஒரு பெரிய கேள்வி எழுந்திருக்கிறது அதைப் பற்றிய வாழ்த்துகள்... விமர்சனங்கள்... இணையத்தில் பரவுகிற மின்னல்வேக செய்திகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. நான் ஒன்றைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இத்தனை நாட்களாக இல்லாமல் இனிமேலா நான் ஒரு பெரிய பதவியைப் பிடித்துவிட வேண்டும் என்று ஆசைப்படப் போகிறேன்? நாடாளுமன்றத் தேர்தலிலே பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க ஆகியவற்றோடு தோழமைகொண்டு போட்டியிட்டோம். எனது சகோதரர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பினேன். வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா எம்.பி-யாகும் வாய்ப்பு வைகோவுக்கு இருக்கிறது, நரேந்திர மோடியின் நேசத்துக்குரியவர், பி.ஜே.பி-யின் வடகுலத்து தலைவர்கள் எல்லாம் அவர் மீது அளவற்ற அன்புகொண்டிருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால், அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. பதவியேற்பு விழாவுக்கு வந்த ராஜபக்ஷேவை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டி கைதாகி இருந்தேன். எனக்கா சுயநலம்? நானா பதவி பவுசுகளை எதிர்பார்ப்பவன்? ராஜ்யசபா எம்.பி கொடுப்பார்களோ, நம்மை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற எண்ணம் வரவில்லையே... எப்படி வரும் எனக்கு? என்னிடம் பிழைகள் இருக்கலாம். என்னிடம் குறைகள் இருக்கலாம். நான் மாமனிதனல்ல. நான் ஒரு சாதாரண மனிதன். முழுமனிதனாக இருப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருப்பவன். எனக்கா பதவி ஆசை?’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துக்கொண்டே போனார் வைகோ.'' ''கூட்டணி பற்றி என்ன சொன்னார்?'' ''ராமதாஸ் இல்லத் திருமணத்துக்குச் சென்றதைப் பற்றி சொன்ன வைகோ, 'அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்ப்பது நலம் விசாரிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லது. அதற்கு அடையாளம்தான் சகோதரர் ஸ்டாலின் அவர்களுடனான சந்திப்பு என்று நான் சொன்னேன். கண், காது, மூக்கு வைத்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தி.மு.க கூட்டணியைப்பற்றி எல்லாம் நான் இப்போது சிந்திக்கவே இல்லை. எனக்கு என்னைவிட கட்சியும் கொள்கைகளுமே பெரியது’ என்று முடித்தார் வைகோ. இதேபோல் ராமதாஸும் 'தி.மு.க., அ.தி.மு.க இல்லாத கூட்டணி’ என்று கிளம்பியிருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போது அதனைச் சொல்ல வேண்டியது இல்லை என்று இந்த தலைவர்கள் முடிவுக்கு வந்திருக்கலாம்'' என்று சொல்லியபடி எழுந்த கழுகார், ''வைகோ - ஸ்டாலின் சந்தித்த போட்டோ, சம்பவம் நடந்த மறுநாள் முரசொலியில் வெளியிடப்படவில்லை என்று சொல்லியிருந்தேன். அதற்கு அடுத்த நாள் முரசொலியில் வெளியாகி உள்ளது. முக்கியத்துவம் கிடைத்துவிடாமல் 7-ம் பக்கத்தில், அடியில் அந்த போட்டோ வெளியிடப்பட்டு உள்ளது. 'வைகோவை சந்தித்தார் என்பதற்காகத்தான் அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதனால்தான் அடக்கி வாசித்தார் ஸ்டாலின்’ என்கிறார்கள் கட்சியில்'' என்றபடி பறந்த


வியாழன், 23 அக்டோபர், 2014

ஏரல் கடைகளில் சீன பட்டாசுகள் பறிமுதல் ஏரல், அக்.21: ஏரல் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தி சீன பட்டாசுகளை பறிமுதல் செய்து அழித்தனர். ஏரல் பஜார், பஸ்நிலை யம் மற்றும் பாளை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் நேற்று சோதனை நடத்தி ஆய்வு செய்தார். இதில் சீன பட்டாசுகள் விற்பனை செய்யபடுவதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பட்டாசு விற்பதற்கான அனுமதி பெற்றுள்ளனரா என ஆய்வு செய்தனர். இதில் ஸ்ரீவைகுண்டம் மண்டல துணை தாசில்தார் சந்திரன், ஏரல் ஆர்.ஐ பொன்லட்சுமி, கிராம உதவியாளர்கள் முருகானந்தம், ராமசாமி, கருணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஸ்ரீவை குண்டம் தாசில்தார் ராம சாமி கூறுகையில்; �ஏரலில் அனுமியின்றி விற்கப்பட்ட சீன பட்டாசுகள் ஒரு சில கடைகளில் கண்டுபிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டு அழிக்கப்பட்டன. மேலும் தீ விபத்து பாது காப்பு கருதி ஒவ்வொரு பட்டாசு கடை முன்பும் 5 வாளிகளில் தண்ணீ, மணல் கள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்� என்றார். அதிகாரிகள் நடவடிக்கை ஏரல் பட்டாசு கடைகளில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராமசாமி திடீர் சோதனை நடத்தினார்.


வியாழன், 28 ஆகஸ்ட், 2014

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா பக்தர்கள் தரிசனம்

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாலை அம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். அங்கு ஆண்டுதோறும் கொடை விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இரவில் மஞ்சள் காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது. 25-ந் தேதி இரவில் அம்மனுக்கு மாக்காப்பு தரிசனம், வில்லிசை நடந்தது.

விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் மதியம் அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது. இரவில் வில்லிசை, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜை நடந்தது.

சப்பர பவனி

வாணவேடிக்கை நடைபெற்றது. மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, நகரில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை, மதியம், இரவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நேற்று காலையில் திருவீதி உலா சென்ற அம்மன் கோவில் வந்து அமர்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மதியம் சிறப்பு பூஜை, இரவில் இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்

ஏரலில் விபத்து பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்; கூட்டுறவு பணியாளர் பலி

பஸ்–மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கூட்டுறவு பணியாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–
கூட்டுறவு பணியாளர்தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேயன்விளை கீழத்தெருவைச் சேர்ந்தவர், அருள் (வயது 40). இவர் ஆறுமுகநேரி ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூரில் நடந்த கோவில் விழாவையொட்டி, அங்குள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். நேற்று மாலையில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரிக்கு புறப்பட்டு வந்தார்.
பஸ் மோதி பலிஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட தாம்போதி பாலத்தின் வழியாக சென்ற போது, நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் அருள் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான அருளுக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் அகற்றம்

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு
ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் அகற்றம்
ஏரல், ஆக. 25:
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் பொது மக்கள் குளிக்கும் இடத்தில் ஆக்கிர மித்துள்ள அமலைச்செடி களை அகற்றினர். மாவட்ட மாணவ ரணி துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில், ஏரல் நகர செயலாளர் மூர்த்தி, துணைச் செய லாளர் முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அந்தோணி, நகர இளைஞ ரணி அன்னராஜன், பொரு ளாளர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணன் கூறுகையில், �ஏரல் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க முடியாத அளவுக்கு அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் அசுத்தமாகி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அமலைச்செடிகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஏரல் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளை தேமுதிகவினர் அகற்றினர்.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஏரலில் இஸ்ரேலை கண்டித்து முஸ்லிம் ஜமாத்த�ர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரல், ஆக. 24:
இஸ்ரேலை கண்டித்து ஏரலில் முஸ்லிம் ஜமாத்த�ர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த இரண்டு வருடங்களாக தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், மத்திய அரசு இஸ்ரேல் உடனான உறவை மறு பரீசிலனை செய்ய கோரியும் ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த முஸ்லிம் ஜமாத் சார்பில் ஏரல் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏரல் முஸ்லிம் வணிகர்நல சங்கம் தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார். நிஜாம்முதீன், இக்பால், முகமது உசேன், சிந்தாகனி முன்னிலை வகித்தனர். சேக் அஷ்ரப் அலி பைஜி துவக்க வைத்தார். பாப்பு லர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பி னர் முகைதீன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் தாக்குதலால் பொதுமக்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனை கள், வீடுகள், பள்ளி வாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகைய செயலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.சூழைவாய்க்கால் முன் னாள் பஞ்சாயத்து தலை வர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து ஏரலில் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலை கண்டித்து

புதன், 20 ஆகஸ்ட், 2014

ஏரல் அருகே உள்ள செடி, கொடிகள் ஆக்கிரமிப்பால் தடைபடும் நீரோட்டம்

ஏரல், ஆக. 20:
ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க் காலை ஆக்கிரமிப்பு செய் துள்ள செடி, கொடிகள் மற்றும் விழுந்து கிடக்கும் மரங்களால் தண்ணீர் செல்வது தடை பட்டு வந்தது. இதனை அப்பகுதி பாசன விவசாயிகள் அகற்றினர்.
ஏரல் அருகே உள்ள கொற்கை குளத்தை நம்பி ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது. இதில் 15 லட்சம் வாழைகளுக்கு மேல் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் தண்ணீர் வந்து ஏரல் அருகே சூளைவாய்க்கால் பாலம் மடை வழியாக வாய்க்கால் மூலம் குளத்திற்கு செல் லும்.
கடுமையான வறட்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தொடர்ந்து 2 மாதங்களாக தண்ணீர் வராத தால் குளம் காய்ந்து வாழைகள் கருக தொடங் கின. இதனால் கொற்கை குளம் பாசனத்தை நம்பியுள்ள உமரிக்காடு, முக் காணி, கொடுங்கனி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விவசாய சங்கத்தினர் மற்றும் தாமிரபரணி பாசன போராட்டக்குழுவை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கருகும் பயிர் களை காப் பாற்ற ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் வடகால் வாய்க்காலில் இருந்து நேரடியாக மடை மூலம் தண்ணீர் செல்லும் நிலங்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் கிடைத் தது.
ஆனால் குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேர வில்லை. வாய்க்காலில் தண்ணீர் குறைவாக வந்ததாலும் செடி, கொடிகள் மற்றும் அருகில் உள்ள காய்ந்து போன மரங்கள் தண்ணீரில் விழுந்து தடை ஏற்படுத்தியதாலும் நீரோட்டம் தடைபட் டது. இதனால் குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேர வில்லை.
கொற்கை குளத்தில் 12 பாசன மடைகள் உள்ளன. இதில் 5 மடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்து கொற்கை பாசன பகுதியை சேர்ந்த உமரிக் காடு வாழை விவசாய சங்க தலைவர் செந்தூர் பாண்டி, முக்காணி தலைவர் கோட்டை, கொடுங்கனி தலைவர் நாராயணன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி மூலம் வடகால் வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடி மற்றும் தண்ணீரில் விழுந்து கிடந்த மரங்களை நேற்று அகற்றினர். மேலும் 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீரில் இறங்கி செடி, கொடிகளை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து செந்தூர் பாண்டி கூறுகையில், �கருகும் பயிர்களை காப்பாற்ற திறந்துவிட்ட தண்ணீர் இந்த ஆக்கிரமிப்பு செடிகளால் ஒழுங்காக குளங்களுக்கு வந்து சேர வில்லை. இதனால் கொற்கை குளத்து பாசனத்தில் உள்ள வாழைகள் கருகி வருகின்றன. இந்த வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை குறைத்து விவசாயத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முழுமை யாக கிடைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விவசாயிகளே அகற்றினர்
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ள செடி, கொடிகளை கொற்கை பாசன விவசாயிகள் தண்ணீரில் இறங்கி அகற்றினர்.
இதுகுறித்து செந்தூர் பாண்டி கூறுகையில், �கருகும் பயிர்களை காப்பாற்ற திறந்துவிட்ட தண்ணீர் இந்த ஆக்கிரமிப்பு செடிகளால் ஒழுங்காக குளங்களுக்கு வந்து சேர வில்லை. இதனால் கொற்கை குளத்து பாசனத்தில் உள்ள வாழைகள் கருகி வருகின்றன. இந்த வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை குறைத்து விவசாயத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முழுமை யாக கிடைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு வி

சிறுத்தொண்டநல்லூர்
சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா
ஏரல், ஆக.11:
சிறுத் தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை அம்பாள் தபசு புறப்படுதல், ஏரல் தாமிரபரணி ஆற்றி லிருந்து பால்குடம் எடுத்து நகர் வலம் வருதல், பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங் கார தீபாராதனையும் நடந்தது.
மாலை 6 மணிக்கு சங்கரேஸ்வரர் சங்கர நாராயண ராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக திரைப் பட மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து இரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சி அளிக்கும் வைபவம் நடந்தது.
பின்னர் சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் பொன்சப்பரங்களில் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கரேஸ்வரர் கோயில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழாவில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

ஏரல் தாமிரபரணி ஆற்றின் தாம்போதி பாலத்தில் மெகா பள்ளம்

ஏரல் தாமிரபரணி ஆற்றின்
தாம்போதி பாலத்தில் மெகா பள்ளம்
விபத்து அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்
ஏரல், ஆக. 11:
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 2 இடங்களில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் பாலம் உடைந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத் தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. இப்பகுதியை தென்கரையோர பகுதி ஊர்மக்களுடன் இணைப்பது ஏரல் ஆற்றுப்பாலம் ஆகும். இந்த ஆற்றுப்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மழைக்காலத்தில் இந்த பாலம் தண்ணீரில் மூழ்குவதால் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கபட்டு வந்தது. இதனால் ஏரலில் வியாபாரம் பாதிப்ப தோடு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஏரல் பகுதிக்கு வரமுடியா மல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இதன் அருகிலேயே ரூ.16 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கபட்டது. ஆனால் இணைப்பு சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்காததால் பாலப்பணி ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் பழைய பாலத் தின் ஓரத்தில் பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் பாலம் எந்நேரத்திலும் உடையலாம் என்ற நிலை ஏற்பட்டது. எனவே போக்குவரத்திற்கு முக்கிய பாலமாக இருக்கும் இந்த பாலத்தை உடன் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரசு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலர் இவ்வழியாக சென்று வந்தாலும் உடைந்த இடத்தை சீரமைப்புக்கான எந்தவித வேலையும் நடைபெறவில்லை. இந்நிலையில் உடைந்த பாலத்தின் அருகிலேயே நடுப்பாலத்தில் இன்னொரு பெரிய பள்ளம் விழுந்துள்ளது. அதிகாரிகள் இதனையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பாலம் முற்றிலும் அந்த இடத்தில் உடைந்து ஏரல்&குரும்பூர் நேரடி போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைந்த பாலத்தின் ஓட்டையில் யாரும் விழுந்துவிடக்கூடாது என கல்லை தூக்கி பொதுமக்கள் வைத்துள்ளனர்.
பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பைக் மற்றும் வாகனத்தில் வருபவர்கள் இந்த கல்லில் மோதியும், பாலத்தின் ஓட்டையில் விழுந்தும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். புதிய பாலத்தின் வேலையும் நடைபெறாத நிலையில் பழைய பாலமும் உடைந் தால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரல் பகுதி வியாபாரி கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இரண்டு இடங்களில் பெரிய பள்ளத்தால் விபத்து ஏற்பட்டு வருகிறது. உள்படம்: அபாயகரமான பள்ளம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஏரலில் ரூ.16¼ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏரலில் ரூ.16¼ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தில் இணைப்பு சாலை அமைத்து, விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ரூ.16¼ கோடி செலவில் உயர்மட்ட பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக ஏரல் உள்ளது. ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது, தரைமட்ட தாம்போதி பாலத்தை மூழ்கடித்து செல்லும். இதனால் ஏரலில் இருந்து குரும்பூர், நாசரேத், தென்திருப்பேரை, சேதுக்குவாய்த்தான், குரங்கணி செல்லும் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
எனவே கடந்த 2011– 2012–ம் ஆண்டு நபார்டு ஆர்.ஐ.டி.பி.எப். திட்டத்தின் கீழ், ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலத்தின் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர் மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இணைப்பு சாலைஅமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி, புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். கடந்த 28–6–2012 முதல் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. 18 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தாமிரபரணி ஆற்றின் நடுவில் 20 தூண்களை அமைத்து புதிய உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைப்பதற்கான நிலம் வனத்துறைக்கு சொந்தமானது ஆகும். இதனால் வனத்துறை அனுமதி பெறுவதற்காக தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை.
ஓட்டை விழுந்த தாம்போதி பாலம்இதனால் புதிய பாலம் கட்டப்பட்ட நிலையிலும், கடந்த ஒரு ஆண்டாக தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் மேல் பகுதியில் உடை மரங்கள் ஆங்காங்கே முளைத்து உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் சில இடங்களில் ஓட்டை விழுந்து உள்ளன. இதனால் அந்த இடங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே மழைக்காலத்துக்கு முன்பாக புதிதாக கட்டப்பட்ட உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் வனத்துறை அனுமதி பெற்று, இணைப்பு சாலை அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன

வியாழன், 31 ஜூலை, 2014

ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏரல், ஜூலை 31:
ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு மிக அகலமாகவும், நல்ல நிலையில் இருப்பதால் இந்த ரோட்டில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த ரோட்டில் புதுமனை சேம்பரில் இருந்து வாழவல்லான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் வரை இடைப்பட்ட ரோட்டில் இரண்டு இடங்களில் ரோட்டில் படுகுழி ஏற்பட்டுள்ளது.
நல்ல ரோட்டில் உள்ள இந்த படுகுழியால் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் நல்ல ரோடு என நினைத்து வேகமாக பைக்கீல் வருபவர்கள் இந்த எதிர்பாராத பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் ஏரல் பள்ளிக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நல்ல நிலையில் உள்ள தார்ரோடு மேலும் சேதாரமடைவதிற்குள் திடீரென ஏற்பட்டுள்ள இந்த படுகுழிகளையாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரியம் அருகே ஏற்பட்டுள்ள திடீர் படுகுழியால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஏரல் & முக்காணி
பழுதான சாலையால் விபத்து அபாயம்

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் குறுமண் அள்ளிய ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்

ஆற்றங்கரையில் குறுமண் அள்ளிய
ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்
ஏரல், ஜூலை 31:
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் குறுமண் அள்ளிய ஜே.சி.பி மற்றும் 2 டிராக்டர்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஏரல் அருகே உமரிக்காடு தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக குறுமண் அள்ளப்படுவதாக ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறை அதிகாரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து மண்டல துணை தாசில்தார் சந்திரன் தலைமையில் விஏஓ ரமேஷ் மற்றும் தலையாரிகள் கருணன், ரத்தின பாண்டி ஆகியோர் உமரிக் காடு தாமிபரணி ஆற்றங் கரையோர பகுதிகளில் சோதனை செய்தனர்.
அப்போது ஜேசிபி மூலம் 2 டிராக்டர்களில் குறுமண் அள்ளிக் கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து ஜேசிபி மற்றும் 2 டிராக்டரை பறிமுதல் செய்து ஏரல் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கனிம சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏரல் அருகே அனுமதியின்றி
உமரிக்காட்டில் அனுமதியில்லாமல் ஆற்றங்கரையோரத்தில் குறுமண் அள்ளிய ஜேசிபி மற்றும் டிராக்டர்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதன், 30 ஜூலை, 2014

தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்

சிறப்பு தொழுகையில் திரளானோர் பங்கேற்பு
நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் பாளை ரோட்டில் உள்ள ஈத்கா தோட்டத்தில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்
ரம்ஜான் பண்டிகை கோலாகலம்
தூத்துக்குடி. ஜூலை 30:
தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் நடை பெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை யும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண் டனர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் மேலப்பாளையம் இமாம் ஷேக் உதுமான் தலைமை யில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தலைமை இமாம் அப்துல்ஆலிம், ஜாமியா பள்ளிவாசல் தலைவர் ஷாகுல்ஹமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ரோச்பூங்காவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகைக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமை வகித் தார். இதில் 200க்கும் மேற் பட்ட பெண்கள் உட் பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.
தூத்துக்குடி ஜாஹிர்உசேன் நகர் ஜூம்மா மசூதியில் இமாம் ரசூல் ரிஸ்தார் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வரும் திரேஸ்புரம், ரஹமத்துல்லாபுரம், ஜெயலாணி தெரு, புதுத்தெரு, முகம்மதுசாதலிபுரம், முத்தையாபுரம், முத்தம்மாள்காலணி, ரஹ்மத்நகர், மில்லர்புரம் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.
ஆறுமுகநேரி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காயல்பட்டினம் கிளை மற்றும் மஜிதுத் தவ்ஹீத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல் காயல்பட்டினம் இரட்டைக்குளத்து பள்ளி, புதுப் பள்ளி, தாயும்பள்ளி, ஆறாம்பள்ளி, கொடிமரத்து நயினா பள்ளி, அப்பா பள்ளி, காட்டு முகைதீன் பள்ளி உள்பட 24 பள்ளிவாசல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. பெரு நாளை முன்னிட்டு புத் தாடை அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
காயல்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை கடற்கரையில் நடந்தது.

ஏரல் வடகால் மற்றும் தென்காலில் கருகும் பயிர் களை காப்பாற்ற மணிமுத்தாறில் தண்ணீர் திறக்க வேண்டும்

ஏரல், ஜூலை 30:
ஸ்ரீவை குண்டம் வடகால் மற்றும் தென்காலில் கருகும் பயிர் களை காப்பாற்ற மணி முத் தாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாது காப்பு பேரவை அமைப் பாளர் நயினார் குலசேகரன், தாமிரபரணி பாசன விவசாயிகள் ஒருங் கிணைப் பாளர் வியனரசு, வடகால் விவசாயிகள் ஒருங்கிணைப் பாளர் சம்பத், உழவர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்மணி, நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சந்திர மோகன், விவசாயிகள் சங்கம் தலைவர் லட்சமி புரம் முருகேசன், தெற்கு ஆத்தூர் பேரூராட்சி தலைவர் சதீஷ்குமார், சமூக ஆர்வலர் ஏரல் ஜெய பாலன் ஆகியோர் தமிழக முதல்வர், கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி பாசனம் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் பகுதிகளில் பயிரிடப் பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. கருகும் வாழை கள் காற்றில் சாய்கின்றன. வடகால் மற்றும் தென் காலில் திறந்துவிடப்பட்ட மிக குறைந்த அளவு தண்ணீர் கருகும் விவசாய பயிர்களுக்கு போய் சேர வில்லை. இதனால் விவ சாயிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் பயிர்கள் அடி யோடு அழிந்து விவசாயி களுக்கு கோடிகணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும்.
இந்நிலையில் 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலம் தினசரி 20 மில்லியன் காலன் (9 கோடி லிட்டர்) தாமிரபரணி தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணையி லிருந்து எடுத்து தூத்துக்குடி பகுதியிலுள்ள 8 தொழிற் சாலைகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. 23&1&2006ல் அப்போதிருந்த கலெக்டர் சந்திரசேகரன் முன்னிலையில் 20 மில்லியன் காலன் தண்ணீர் விநியோகம் குறித்து நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கோடைகாலங்களில் தொழிற்சாலைகளுக்கு அடிப்படை அளவிலேயே தண்ணீர் வழங்கவேண்டும். நிலைப்பயிர்களுக்கு பாசனநீர் பற்றாக்குறை ஏற்படும் போது கலெக் டரின் அனுமதி பெற்ற பின்பே 20 எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலை களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. எனவே ஸ்ரீவைகுண்டம் அணையி லிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் எடுப் பதை உடன் நிறுத்தி கருகும் பயிர்களை காப்பாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மணிமுத்தாறு அணையில் தற்போது 57.52 அடி தண்ணீர் உள்ளது. மணிமுத்தாறு அணைத்தண்ணீர் 80 அடிக்கு கீழே உள்ள தண்ணீர் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி பாசனத்திற்கு பாத்தியப் பட்டதாகும். இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாட்டிலும் மணிமுத்தாறு அணையை திறக்காமல் பொதுப்பணித் துறை அடைத்து வைத் துள்ளது. எனவே அணை யை திறந்து தேவையான அளவு தண்ணீரை ஸ்ரீவை வடகால், தென்காலில் கூடுதலாக தண்ணீர் கீழ் கோடி பாசன மடை வரைக்கும் சேர ஏற்பாடு செய்து அழிந்து கொண்டி ருக்கும் பயிர்களை காப் பாற்ற வேண்டும். அதே போல் மருதூர் மேலக்கால், கீழக்கால் பகுதி விவசாயி களுக்கும் தேவையான தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தண்ணீர் திறந்து 2 வாரங்களாகியும் குறைந்த தண்ணீரே செல்வதால் பேய்குளத்திற்கு வந்து சேரவில்லை. இதனால் குளம் மைதானம் போல காட்சியளிக்கிறது.

வெள்ளி, 18 ஜூலை, 2014

ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா துவக்க விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா
ஏரல், ஜூலை 18:
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத் தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை பூஜைகள் நடந்தது.
கோயில் முன்மண்டபத்தில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடி யேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர். இரவு சுவாமி இரவு 8 மணிக்கு கேடயச்சப்பரத்தில் அருணாசல சுவாமி திருக்கோலம் திருக்கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், சிறப்பு நிகழ்ச்சியாக கருத்தப்பாண்டியன் கலையரங்கில் நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவை முன் னிட்டு தினசரி இரவு சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா 26ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா துவக்க விழாவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

ஏரல் அருகே குரங்கணி யில் பிரசித்தி பெற்ற

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவில் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் குடிசை அமைத்து தங்கியிருந்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா
ஏரல், ஜூலை 16:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஏரல் அருகே குரங்கணி யில் பிரசித்தி பெற்ற முத்து மாலை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திரு விழாக்களில் ஒன்றான ஆனித்திருவிழா கடந்த 1ம் தேதி கால்நாட்டுடன் துவங்கியது. அன்று முதல் பக்தர் கள் 15 நாள் நோன்பு இருந்தனர். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜை. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், பக்தர்கள் மா விளக்கு பெட்டி எடுத்து வருதல், இரவு 1 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு பூஜை நடந்தது. அதி காலை 2 மணிக்கு நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி வலம் வரு தலும், அதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்குள் வாண வேடிக்கையும் நடந்தது.
விழாவில் பக்தர்கள் மக்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும், மரத்தாலானா கை, கால்களை வாங்கி கோயிலில் கொடுத்து நேர்ச்சை செலுத்தியும் அம் மனை தரிசித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான ஆடு களையும் பலியிட்டனர். திருவிழாவுக்காக கார், வேன், மாட்டு வண்டிகள் மூலம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றங்கரையோரம், அருகில் உள்ள தோட்டங்களில் தற்காலிக பந்தல் மற்றும் குடில்கள் அமைத்து தங்கினர். நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட முக்கிய ஊர்களில் இருந்து கோயி லுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடு களை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி ராமராஜன் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார்திருநகரி கிங்ஸ்லி தேவஆனந்த், ஸ்ரீவை குண்டம் பிரான்சிஸ், பால் துரை, எஸ்.ஐ.க்கள் ஆழ்வார்திருநகரி ஜெயக்குமார், முத்துப்பட்டன், சாயர்புரம் பியூலா தங்கரத்தினம், ஏரல் மந்திரமூர்த்தி மற்றும் போலீசார் செய்திருந்தனர். பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் சிவராம்பிரபு மற்றும் குரங்கணி ஊர்மக்கள் செய்திருந்தனர்.

சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் பரிசு வழங்கினார்.

ஏரல் லோபா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் பரிசு வழங்கினார்.
ஏரல் லோபா பள்ளியில்
காமராஜர் பிறந்தநாள் விழா
ஏரல், ஜூலை 16:
ஏரல் லோபா மெட்ரிக்குலேஷன் உயர்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, பாட்டு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் மாடசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஏரல் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

ஏரல் அருகே அம்மாள்தோப்பு கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
ஏரல் அருகே குடிநீர் கேட்டு
கிராம மக்கள் சாலை மறியல்
ஏரல், ஜூலை 13:
ஏரல் அருகே அம்மாள்தோப்பு பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஏரல் அருகே வாழவல்லான் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மாள்தோப்பு, புது மனை, சத்தியாநகர், காம ராஜர் நகர் மற்றும் பூஞ் சோலை தெரு மக்களுக்கு அம்மாள்தோப்பில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார மாக இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
அப்பகுதி மக்கள் குடி நீருக்காக நேற்று மாலை ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் அம்மாள்தோப்பு பஸ் ஸ்டாப் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்குட்டி, அம்மாள்தோப்பு ஊர் தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் ராமச்சந்திரன், வாழவல்லான் பஞ்சாயத்து கவுன்சிலர் பெரிய சாமி, விடுதலை சிறுத்தை நகர துணை செயலாளர் முத்துராஜ் மற்றும் பெண்கள் உட்பட 200 பேர் காலிகுடங்களுடன் கலந்து கொண்டனர்.
ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் எஸ்.ஐ. மந்திரமூர்த்தி, சிறப்பு எஸ்.ஐ.க்கள் சுப்பிரமணியன், பண்டாரம், சுப்பையா மற்றும் வாழவல்லான் பஞ்சாயத்து தலைவர் துளசிஜெயபிர காஷ் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் நாளை(இன்று) மாலை குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மறியலில் ஈடுபட்ட மக்களிடம் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதன், 9 ஜூலை, 2014

ஏரல் அருகே வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர் பாக தொழிலாளி கைது

ஏரல், ஜூலை 10:
ஏரல் அருகே வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர் பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார். பலரது மத்தியில் 200 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள் ளார்.
ஏரல் அருகே மாரமங்கலம் தேவர் தெருவை சேர்ந்தவர் ராமர் (68). இவர் அதே ஊரில் டீக்கடை மற்றும் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி இரவு ஊருக்கு தென்புறம் உள்ள வாய்க்கால் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராமர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். டி.எஸ்.பி ராமராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ மந்திரமூர்த்தி, சிறப்பு எஸ்.ஐ.கள் சீனிவாசன், சுப்பிரமணியன், பண்டாரம், சுப்பையா, பூமிராஜ் மற்றும் தனிப்படை எஸ்.ஐ செல்வம், ஏட்டுகள் குமாரசாமி, பிரைம்குமார், மாடசாமி, விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை யாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், ராமரை கொலை செய்ததாக கூறி நேற்று காலை மாரமங்கலத்தை சேர்ந்த கர்ணன் (43) என்பவர் கொட்டரக் குறிச்சி வி.ஏ.ஓ. கோபாலிடம் சரணடைந்தார். போலீசார் கர்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசில் கர்ணன் அளித்த வாக்குமூலம்:
நான் வாழை இலை அறுக்கும் தொழில் செய்கிறேன். எனது வீட் டுக்கு தேவையான பொருட் களை ராமர் கடையில் வாங்குவேன். இந்த வகையில் அவருக்கு ரூ.200 கொடுக்க வேண்டி இருந்தது. இதை அவர் அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தார். கடந்த 7ம் தேதி மாலை கடையில் நான் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது நான்கு பேருக்கு மத்தியில் ராமர் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்டார்.
இது எனக்கு அவமானமாக இருந்தது. பின்னர் நான் மது குடித்து விட்டு சென்றபோது வாய்க் காலுக்கு வந்த ராமரை பார்த்து, பலரது மத்தியில் கடனை எப்படி கேட்கலாம் எனக் கூறி அவரிடம் தகராறு செய்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன் றேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்து விஏஓவிடம் சரணடைந்தேன்.இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கர்ணன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் மீது கடந்த 22&9&2008ல் மாரமங்கலத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த முத்தையாபுரம் நடராஜன் மனைவி கற்பகவல்லியை வெட்டியதாக ஏரல் போலீசில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதான தொழிலாளி வாக்குமூலம்
ஏரல் அருகே வியாபாரி கொலை
200 ரூபாய் கடனை திருப்பி
கேட்டதால் கொன்றேன்
கைதான கர்ணன்

Assalamu Alayka Ya Rasool Allah Albanian, English 2014

ஏரல் அருகே பயங்கரம் மளிகை கடைக்காரர் படுகொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

ஏரல் அருகே பயங்கரம் மளிகை கடைக்காரர் படுகொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


மளிகை கடைக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமர் (வயது 68). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை, டீக்கடையை ஒரே இடத்தில் நடத்தி வந்தார். அவருடைய மனைவி மல்லிகா.
இவர்களுக்கு மகேஷ் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகேஷ் தன்னுடைய தந்தையுடன் கடைகளை கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராமர் வழக்கம்போல் கடைகளை பூட்டிவிட்டு, ஊருக்கு அருகே உள்ள வாய்க்கால் படித்துறையை நோக்கிச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
வெட்டிக் கொலைஇதற்கிடையே நள்ளிரவில், அப்பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வாய்க்கால் படித்துறை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையோரத்தில் ராமர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கவனித்தார். அவரது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார், உடனடியாக ஓடிச்சென்று மகேசிடம் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காரணம் என்ன?மோப்ப நாய் டெய்சி வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய், மோப்பம் பிடித்துவிட்டு பக்கத்து ஊரான அகரம் வரை ஓடிச்சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மளிகை கடைக்காரர் ராமர் படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...