வியாழன், 30 ஜனவரி, 2014

ஏரல் பகுதிகளில் குடியரசு தின விழா

ஏரல் பகுதிகளில் 65வது குடியரசு தின விழா நடந்தது.
ஏரலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் பிரபா, கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், பேபி மகேஷ் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏரல் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு நகர காங். தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்து கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை சண்முகப்பிரியா தமிழ்செல்வி இனிப்பு வழங்கினார்.
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் தசரதபாண்டியன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் நவாஸ் கான், ஊராட்சி எழுத்தர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகளை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் கணபதிராஜா தலைமை வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் ராமர்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். வாழவல்லான் பஞ்சாயத்து அலுவகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் துளசி ஜெயபிரகாஷ் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சத்தீஷ், பஞ்சாயத்து உதவியாளர் கருவேலப்பாண்டி, கவுன்சிலர் பெரியசாமி, அருணாச்சலம், தொழிலதிபர் பச்சகுட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உமரிக்காடு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் செல்வி அருள் தலைமை வகித்து கொடியேற்றினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாமோதரன், கவுன்சிலர்கள் மாரியம் மாள், சங்கர், பஞ்சாயத்து எழுத்தர் வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2014–ற்கான விண்ணப்பப் படிவங்களை பிப்ரவரி 1–ந் தேதியில் (நாளை) இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும்.
வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. மார்ச் 15–ந் தேதியன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 31.3.15 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். ஐ.எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2014 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2014–ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் மேற்கூறப்பட்ட இணையதளத்தை அணுக வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு 300 ரூபாயை திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கு எண். 33564923057–ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு மார்ச் 15–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 27 ஜனவரி, 2014

ஏரலில் குடியரசு தின விழா நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி காந்திசிலைக்கு மாலை அணிவித்தார்.

ஏரலில் குடியரசு தின விழா
ஏரலில் காங்கிரஸ் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி காந்திசிலைக்கு மாலை அணிவித்தார்.
ஏரல், ஜன. 27:
ஏரல் நகர காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்து காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் கந்தசாமி, காங்கிரஸ் பிரமுகர்கள் அய்யம் பெருமாள், அந்தோணி காந்தி, வீரசுப்பிரமணியன், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஏரலில் முஸ்லிம் வணிகர் சங்க ஆண்டு விழா

ஏரலில் நடந்த முஸ்லிம் வணிகர் சங்க ஆண்டு விழாவில் சங்க தலைவர் பாக்கர் அலி இலவச தையல் இயந்திரம் வழங்கினார்.
ஏரலில் முஸ்லிம் வணிகர் சங்க ஆண்டு விழா
ஏரல், ஜன. 26:
ஏரல் முஸ்லிம் வணிகர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
விழாவுக்கு சங்க தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார். ஜாஹீர் உஷேன், புர்ஹான் அலி, ஜெயனுல் ஆப்தீன் இபுராஹீம், இஸ்மாயில், இக்பால், அபதுல் ஜப்பார், நவாஸ்�ன், முஹம்மது உஷேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு தலைவர் சிந்தாகனி வரவேற்றார். சங்க பொருளாளர் சாதிக்குல் அமீன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் சைக்கிள் வழங்கப்பட்டது. ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தசரதபாண்டியன், துணைத் தலைவர் தாணுலிங்கம்பிள்ளை, செயலாளர்கள் தர்மராஜ், சிதம்பரம், பொருளாளர் நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா, ஆலோசகர் அருணாசகலம், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் நிஜாம்முத்தின் நன்றி கூறினார்.

ஏரல்&சிறுத்தொண்டநல்லூர் சாலையில் குறுகிய பாலத்தால் விபத்து அபாயம்

ஏரலில் இருந்து சிறுதொண்டநல்லூர் செல்லும் மெயின் சாலையில் உள்ள 2 குறுகிய பாலத்தினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் வழியாக சாயர்புரம், சிவத்தையாபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடிக்கு அதிக அளவு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் பள்ளி மற்றும் சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளில் படிக் கும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர்.
சிறுத்தொண்டநல்லூர், மணலூர், நட்டாத்தி, பெருங்குளம், சூழைவாயக்கால், மொட்டத்தான்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, சாயர்புரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வியா பாரம், தொழில் சம்பந்த மாக ஏரல் வந்து செல்வதற்கு இந்த சாலையைதான் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் செல்லும் சாலையில் 2 குறுகிய மிக பழமையான பாலம் உள் ளது. இந்த பாலத்தில் ஒரு பஸ் செல்லும் போது பைக்கில் வருபவர்கள் கூட ஒதுங்க முடியாத அளவுக்கு மிக குறுகிய பாலமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த பழைய பாலத்தில் கனரக வாகனங்கள் சென்றதால் இதில் ஒரு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்றுவரை அந்த பாலம் கட்டப்படவில்லை.
மேலும் ஏரல் வாய்க்கால் பாலத்தில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் வாயக் கால் பாலம் வரை இந்த ரோடு பள்ளத்தில் இருப்ப தால் மழைக்காலத்தில் தண்ணீர் ரோட்டில் தேங்கிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல்& சிறுத்தொண்டநல்லூர் மெயின்ரோட்டில் உள்ள பழமையான இந்த குறுகிய 2 பாலத்தினையும் புதிதாக கட்டி, பள்ளத்தில் உள்ள ரோடு மட்டத்தையும் உயர்த்தி, அகலப்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் செல்லும் மெயின் சாலையில் உள்ள குறுகிய பாலத்தினால் விபத்து அபாயம் நிலவுகிறது.

வியாழன், 23 ஜனவரி, 2014

சிறுத்தொண்டநல்லூர் & பெருங்குளம் இணைப்பு சாலையில் முட்செடிகள் அகற்றும் பணி துவக்கம்

ஏரல், ஜன. 24:
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் & பெருங்குளம் இணைப்பு சாலையில் ஆக்கிரமித்துள்ள முட்செடிகள் தினகரன் செய்தியால் ஜேசிபி மூலம் அகற்றும் பணி துவங்கியுள்ளது.
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் இருந்து பெருங்குளம் செல்லும் இணைப்பு சாலையில் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும் சின்னநட்டாத்தி, நட்டாத்தி, மணலூர் பகுதிகளில் இருந்து ஏரல் மற்றும் சிறுத்தொண்டநல்லூர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இதனால் அவதிப்பட்டு வந்தனர்.
இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்களின் சட்டையை முட்செடிகள் கிழிப்பதோடு, கண்களையும் குத்தி காயப்படுத்தி வந்தது. மேலும் விவசாயிகளும் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவி கள் நலன் கருதி சிறுத்தொண்டநல்லூரில் இருந்து பெருங்குளம் செல்லும் இந்த இணைப்பு சாலையில் வளர்ந்துள்ள முட்செடி களை அப்புறப்படுத்தி, படுகுழியாக உள்ள ரோட் டை யும் சீரமைத் திட நடவடிக்கை எடுக்க வேண் டும் என தினகரனில் செய்தி வெளியானது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து ஜேசிபி மூலம் முட்செடி களை அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வரு கிறது.
இதனால் வியாபாரி கள், கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பழுதடைந்து படுகுழி யாக உள்ள இந்த ரோட்டையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தொண்டநல்லூரில் இருந்து பெருங்குளம் செல்லும் இணைப்பு சாலையில் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகள் தினகரன் செய்தியால் ஜேசிபி மூலம் அகற்றும் பணி துவங்கியது.

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடி ஏற்றம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேர்மன் அருணாசல சுவாமி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நேற்று காலையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலையில் சண்முக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று அதிகாலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7 மணிக்கு கோவிலின் முன்பு கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்த பாண்டிய நாடார் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
1–ம் திருநாள் முதல் 9–ம் திருநாள் வரையிலும் தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தை அமாவாசை
சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா வருகிற 30–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 31–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தல் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
1–ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவில் ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டிய நாடார் செய்து உள்ளார்

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...