வெள்ளி, 23 டிசம்பர், 2011

நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேதமாகிய பாலத்தை உடனே சீர் செய்ய வேண்டும்

தூத்துக்குடி :நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேர்மன் கோயில் அருகே உள்ள பாலம் சேதமாகியிருப்பதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இதனை சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் சேர்மன் கோயில் அருகே சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சமீபத்தில் பெய்த மழையினால் சேதமடைந்தது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் வழியாக அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது.
அதிக பஸ் போக்குவரத்தும் இருப்பதால் பிசியான ரோடாக இந்த ரோடு இருந்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையினால் பாலத்தின் சைடு சுவர் சேதமாகியும், பாலத்தின் மேல்தளத்தின் ஒரு பகுதி மோசமாகி இருக்கிறது.
இதனால் பஸ் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் மேற்கொள்வதற்காக பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக சிரமப்பட்டு பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக வாகன போக்குவரத்து இருபப்தால் இதே நிலை தொடர்ந்தால் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் இந்த பணியை செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும் என்று ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனி, 10 டிசம்பர், 2011

பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தொழிலாளி சிக்கினார்


ஏரல், டிச.10&
ஏரல் பகுதியில் கடந்த 2 ஆண்டாக பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய தொழிலாளி போலீசில் சிக்கினார்.
ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் பலருக்கு கடந்த 2 ஆண்டாக செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ்கள் வந்த வண்ணம் இருந்தது. இது வெளியில் தெரிந்தால் அசிங்கம் என கருதி போலீசில் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் தொல்லை தாங்கமுடியாத சிலர் போலீஸ் உதவியை நாடினர்.
போலீசாரும் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியவரின் நம்பரை நோட்செய்து விசாரித்தனர். இதில் செல்போனில் பேசியவர் ஏரல் டவர் எல்கையில் இருந்துதான் பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஏரல் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்த சண்முகவேலு மகன் மாரியப்பன்(37) என்பவரை கைது செய்தனர். தச்சு தொழிலாளியான அவர், பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதும் இதற்காக பல செல்போன் நம்பர்களை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
ஏரல் பகுதியில் 2 ஆண்டாக

லாரியில் மரத்தடி இறக்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி ஏரல்


லாரியில் மரத்தடி இறக்கிய
தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
ஏரல் அருகே
ஏரல், டிச. 10&
ஏரல் அருகே லாரியில் மரத்தடி இறக்கிய தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார். இதையொட்டி உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டனர்.
ஏரல் நாடார் 2வது தெருவைச் சேர்ந்த சிவதாணுலிங்கம் மகன் சேகர்(43). இவர் ஏரல் போலீஸ்நிலையம் அருகே மரக்கடை வைத்துள்ளார். இவருக்கு வாழவல்லான் ரோட்டில் மரம் அறுக்கும் ஷாமில்லும் உள்ளது.
நேற்றிரவு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து லாரியில் வந்த மரத்தடிகளை ஷாமில்லில் இறக்கும் பணி நடந்தது. இதில் தொழிலாளர்கள் நளராஜபுரம் வேதக்கோயில் தெரு ராசாண்டமுத்து மகன் நகுலராஜா(25), நடராஜபுரம் பால்ராஜ் மகன் பாலாஜி, கொத்தலரிவிளை சவுரிமுத்து மகன் மார்ட்டின், திருவழுதிநாடார்விளை அய்யாக்குட்டி மகன் அருள்ராஜ் ஆகியோர் கிரேன் மூலம் இறக்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் அந்த வழியாக சென்ற மின் வயரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. தொழிலாளர்கள் ஷாக்அடித்து தூக்கி வீசப்பட்டனர். இதில் நகுலராஜா மட்டும் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி, சப்&இன்ஸ்பெக்டர் பால்ஐசக் ஆகியோர் விசாரணை நடத்தி மரக்கடை அதிபர் சேகர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் ஜெயமுருகேஷ்(32) ஆகியோரை கைது செய்தனர்.

புதன், 30 நவம்பர், 2011

ஏரல் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்


வெள்ளம் வடிந்ததால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நேற்று போக்குவரத்து துவங்கியது. வெள்ளத்தால் ஏற்பட்ட அரிப்பில் பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தது
ஏரல் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
ஏரல், நவ. 30:
வெள்ளம் வடிந்ததால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது.
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 27ம் தேதி ஏரல் ஆற்றுப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. இதற்கிடையே பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி அமலைச்செடிகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இதை பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அகற்றினர்.
பாலத்தை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் ஆசிஷ்குமார் உத்தரவிட்டதன் பேரில் பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமலை செடிகள் அகற்றும் பணி நடந்தது. இதனால் பாலத்தின் மீது ஓடிய வெள்ளம் வடிந்தது. இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு நேற்று பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கியது.
வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் ஆரம்ப பகுதியில் குகை போல் பெரிய துளை ஏற்பட்டுள்ளது. அதன்மீது முள்செடியை வெட்டி போட்டு தற்காலிகமாக அடைத்துள்ளதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. மீண்டும் வெள்ளம் வந்தால் பாலம் இடிந்து விடும் அபாயம் நிலவுகிறது. எனவே அதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 28 நவம்பர், 2011

28news2 NEW


ஏரல், நவ.28&
தாமிரபரணி வெள்ளத்தில் மூழ்கிய ஏரல் ஆற்றுப்பாலம் இடிந்துவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் கடந்த 45 ஆண்டுக்கு முன் அதிகம் உயரமில்லாத பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதனால் ஆற்றில் வடபகுதியில் உள்ள ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், பெருங்குளம், நட்டாத்தி சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்களும், ஆற்றின் தென்பகுதியில் உள்ள குரும்பூர், குரங் கணி, தெந்திருப்பேரை, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன. ஏரல் வியாபார ஸ்தலம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கானபேர் வந்துசெல்கிறார்கள்.
ஆனால் மழைகாலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது இந்த பாலமும் மூழ்கிவிடும். தண்ணீர் வற்றிய பிறகுதான் மீண்டும் போக்குவரத்து தொடங்கும். இதனால் மழை காலங்களில் பள்ளி&கல்லூரிக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவர்கள் இங்கு வரவேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் சுற்றி ஆத்தூர் பாலம் அல்லது திருவைகுண்டம் பாலம், ஆழ்வார்தோப்பு பாலம் ஆகியவற்றை சுற்றித்தான் வரவேண்டும்.
மழைகாலத்தில் தவறாமல் ஏரல் பாலம் மூழ்குவதால் பாலம் நாளுக்கு நாள் சேதமடைந்த வண்ணம் இருந்தது. அந்த பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள்.
தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன் ரூ.15 கோடியில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சியில் இறங்கிய நிலையில் அவரது மந்திரி பதவி பறிக்கப்பட்டது. பாலத்தில் இரு ஓரங்களிலும் உள்ள தடுப்பு தூண் களை காணவில்லை. பல இடங்களில் ஓட்டை விழுந்து விட் டது. தற்போது பெய்த மழை யால் பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை சிறிதளவு தண்ணீர் குறைந்துள்ளதே தவிர பாலம் மூழ்கிய நிலையில் தான் உள்ளது. இதனால் இன்றும் போக்குவரத்து நடைபெறவில்லை. பாலத்தை சுற்றி அமலைச்செடிகளாக காட்சியளிக்கின்றன.
இதற்கிடையில் இன்று பாலத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டதாக செய்தி பரவியது. இதைத்தொடர்ந்து காலையில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வந்தனர். தற்போது பாலம் மூழ்கி இருப்பதால் உடைப்பு உள்ளதா என கண்டுபிடிக்கமுடியவில்லை. தண்ணீர் வற்றினால்தான் அதுபற்றி தெரியவரும். எது எப்படியோ இனியும் காலம் தாழ்த்தாது பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
ஆற்றில் இறங்கிய பேரூராட்சி தலைவர்
ஏரல் ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் ஓடுவதால் அமலைச்செடிகள் பாலத்தை முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் பாலத்தில் உள்ள குழாய் வழியாக செல்லமுடியாதநிலை உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் அமலைச்செடிகளை அகற்றும் பணியில் அவரே நேரடியாக களத்தில் இறங்கினார். பாலத்தின் மீது தண்ணீர் ஓடியபோதிலும் துணிச்சலாக அவர் பாலத்தில் இறங்கி அமலைச்செடிகளை அகற்றினார்.
அவருடன் கவுன்சிலர் மணிவண்ணன், மாநில வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சாந்தகுமார், மற்றும் நவுஷாத், மைக்கேல், சேகர், ராஜேஷ், ஜேசுராஜ், ஏட்டு நாராயணசாமி ஆகியோரும் ஈடுபட்டனர்.

HW¥ RÖ–WTW‚ B¼¿TÖX• ÙY·[†‡¥ ™²fV‰ ÚTÖehYW†‰ ‰z“


HW¥ RÖ–WTW‚ B¼¿TÖX• ÙY·[†‡¥ ™²fV‰
ÚTÖehYW†‰ ‰z“




HW¥, SY.28-

HW¥ RÖ–WTW‚ B¼¿TÖX• ÙY·[†‡¥ ™²fV‰. CR]Ö¥ HW¥, h£•”Ÿ ÚTÖehYW†‰ ‰zeLTyP‰.

ÙY·[†‡¥ ™²fV‰

І‰ehz UÖYyP†‡¥ LP‹R pX SÖyL[ÖL ÙRÖPŸ UÛZ ÙTš‰ Y£YRÖ¥ RÖ–WTW‚ B¼½¥ ÙY·[• LÛW“W| K|f\‰. C‹R ÙY·[ÙT£eLÖ¥, RÖ–WTW‚ B¼½¥ ÚS¼¿ LÖÛX 9 U‚ A[«¥ HW¥ B¼¿TÖX• ™²fVTz RƒŸ ÙNÁ\‰.

C‹R ÙY·[ÙT£eh h½†‰ A½‹R HW¥ N-CÁÍÙTePŸ TÖ¥INe, YÖXY¥XÖÁ fWÖU ŒŸYÖL A¨YXŸ ÚNLŸ, HW¥ SLW TtNÖV†‰ RÛXYŸ TÖXf£ÐQÁ BfÚVÖŸ «ÛW‹‰ ÙNÁ¿, TÖX†‡Á h¿eÚL L›¿ Lyz A‹R Y³VÖL ÚTÖehYW†ÛR Œ¿†‡ ‡£‘ «yP]Ÿ. ÚU¨• h£•”Ÿ, SÖNÚW† ÙN¥¨• TÍL· B†ŠŸ Y³VÖL ‡£‘ «PTyP].

Cµ†‰ ÙNÁ\‰

C‹R ŒÛX›¥ HW¥ B¼¿TÖX†‡Á G‡Ÿ“\• ÚUÖyPÖŸ ÛNef¸¥ TÖX†ÛR LPeL ˜VÁ\YÛW ÙY·[• ÚUÖyPÖŸ ÛNefºPÁ Cµ†‰ ÙNÁ\‰. AÚTÖ‰, AYŸ TÖX†‡Á E·[ ŠÛQ ‘z†‰ ÙLց| ŒÁ¿ ÙLցPÖŸ. B]Ö¥ A‹R ST¡Á ÚUÖyPÖŸ ÛNef· ÙY·[†‡¥ Cµ†‰ ÙN¥XTyP‰. B¼¿TÖX†‡¥ H¼TyP ÙY·[ ÙT£eLÖ¥ GÚTÖ‰• TWTWTÖL CVjh• HW¥ T^ÖŸ ÙY½oÚNÖz LÖQTyP‰.

UÛZLÖX†‡¥ H¼T|• ÙY·[ÙT£eLÖ¥ ÚTÖehYW†‰ ‰zeLT|YRÖ¥, HW¥ B¼¿TÖX†ÛR EVŸ†‡ LyP ÚY|• GÁ¿ ÙTÖ‰ UeL· ÚLÖ¡eÛL «|†‰·[]Ÿ.

திங்கள், 7 நவம்பர், 2011

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பதவி பறிப்பு


தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர்
எஸ்.பி.சண்முகநாதன்
பதவி பறிப்பு
சென்னை, நவ. 7&
அமைச்சர் பதவி பறிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் எஸ்.பி.சண்முகநாதன் நீக்கப்பட்டுள் ளார். பதவி பறிப்புக்கு பின்னணி என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல் கள் வெளியாகி உள்ளன. புதிய மாவட்ட செயலாளராக அமைச்சர் செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். சரவண பெருமாளுக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எஸ்.பி. சண்முகநாதன் அமைச்சர் பதவி யில் இருந்து நீக்கப்பட் டார்.
அமைச்சர் பதவி காலி யான ஒரு சில நாட்களில் அவர் வகித்து வந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக தொழிலா ளர் நலத் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.சண்முகநாதனுக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலா ளர் பதவி அள¤க்கப்பட்டுள்ளது. அந்த பொறுப் பில் இருந்த தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ உதயகுமாரிடம் இருந்து அதிமுக மாநில மாணவரணி செய லாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. புதிய மாணவரணி செயலாள ராக சரவணப்பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச் செய லாளரும், முதல்வருமான ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
எஸ்.பி.சண்முகநாதனின் அமைச்சர், கட்சி பதவிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பத வியில் இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அப்போது நடந்த சட்டசபை தேர்த லில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில மாதங்
5ம் பக்கம் பார்க்க
அமைச்சர் பதவியை தொடர்ந்து கட்சி பதவியும் போனது

சனி, 5 நவம்பர், 2011

எமது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


சகோதர, சகோதரி அனைவருக்கும்,

  எமது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்!  
அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!
இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே… ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் எமது உறவுகள் அத்தனை பேருக்கும் அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள்வானாக!
இதுவரை ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் போன அனைவ‌ருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!



பதவியை இழந்தார் சண்முகநாதன்



இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முக நாதன் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 2வது முறை யாக பாதியிலேயே வெளியேறியுள்ளார். ஸ்ரீவை குண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து பாதியி லேயே பறிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.பி.சண்முக நாதன். தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாள ராகவும் பதவி வகித்ததால் இவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் ‘பவர்புல் லாக‘ திகழ்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் திமுக வில் இணைந்ததால் கட்சியை பலப்படுத்த சீனியரான சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் பதவியேற்ற 6 மாதத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.கடந்த 2001ம் ஆண்டி லும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட¢டவர் எஸ்.பி.சண்முகநாதன். அப்போதும் இவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அப்போதும் 9 மாதத்தில் சண்முகநாதன் பதவியை இழந் தார். அதன் பின்னர் எம்எல்ஏவாகவே தொடர்ந்தார்.இந்நிலை யில் 2வது முறையாக பதவியேற்ற சண்முகநாதன் அமைச்சரவையில் 6 மாதம் மட்டுமே நீடித்துள்ளார். இதனால் ஸ்ரீவைகுண்டம் தொகு திக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து மீண்டும் பறி போயுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் கிடைத்த நிலையில் சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்ட போதும் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


நகைக்கடைகளில் ரகசிய கேமிரா: போலீசார் அறிவுரை ஏரலில் கலந்தாய்வு கூட்டம்


ஏரல், நவ.5&
ஏரலில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நகைக்கடைகளில் ரகசிய கேமிரா பொருத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நகைக்கடை உரிமையாளர்கள், நகை அடகுகாரர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏரல் ஜேஜே திருமண மண்டபத்தில் நடந்தது. திருவைகுண்டம் டிஎஸ்பி மணி தலைமை தாங்கினார். ஏரல் இன்ஸ்பெக்டர் ராம ராஜன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜூ முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகைகடைகளுக்கு இரவு காவலர்களை அந்தந்த கடைக்காரர்கள் கூடுதலாக நியமிக்கவேண் டும்நகை கடைகளில் ரகசிய கேமிரா பொருத்தவேண் டும். எச்சரிக்கை அலாரம் வைக்கவேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் வீரராஜ், ஏட்டு முத்தையா, ஏரல் நகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவரும் பேரூ ராட்சி தலைவருமான பாலகிருஷ்ணன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மந்திரம் மற்றும் ஏரல், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர், குரும்பூர் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலிருந்து நகைக்கடை உரிமையாளர்கள், அடகு கடைக்காரர்கள் கலந்து கொண்ட னர்.
நகைக்கடைகளில் ரகசிய
கேமிரா: போலீசார் அறிவுரை
ஏரலில் கலந்தாய்வு கூட்டம்

வியாழன், 3 நவம்பர், 2011

HW¥ B¼½Á h¿eÚL ¤.15 ÚLÖz›¥ “‡V TÖX• AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ RLY¥


HW¥ B¼½Á h¿eÚL
¤.15 ÚLÖz›¥ “‡V TÖX•
AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ RLY¥


HW¥, SY.3-

HW¥ B¼½Á h¿eÚL ¤.15 ÚLÖz ÙNX«¥ “‡V TÖX• LyPTP E·[‰ GÁ¿ AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ i½]ÖŸ.

HW¥ B¼¿ TÖX•

І‰ehz UÖYyP†‡¥ «VÖTÖW SLWUÖL HW¥ «[jhf\‰. ‡]˜• B›WeLQeLÖ] UeL· Ajh Y‹‰ ÙN¥fÁ\]Ÿ. ÙT£•TÖXÖ]YŸL· HW¥- h£•”Ÿ NÖÛX Y³VÖL Y‹‰ ÙN¥f\ÖŸL·.

C‹R NÖÛX›¥, HW¥ RÖ–WTW‚ B¼½Á h¿eÚL LyPTy| E·[ TÖX• EVW• hÛ\YÖ]‰. UÛZe LÖX†‡¥ B¼½¥ ÙY·[ÙT£eh H¼T|• ÚTÖ‰, ÚTÖehYW†‰ ‰zeLT|•. R¼ÚTÖ‰ UÛZ ÙTš‰ Y£YRÖ¥ B¼½¥ ÙY·[ÙT£eh H¼Ty| E·[‰. ÙY·[†‡¥ Az†‰ YWTyP AUÛXoÙNzL· TÖX†‡Á hZÖšL¸¥ AÛPÛT H¼T|†‡ E·[‰. CR]Ö¥ hZÖšL· Y³VÖL RƒŸ ÙN¥XÖU¥ ÚRjf Y£f\‰. UÛZ ÙRÖPŸ‹‰ ÙTšRÖ¥ TÖX†ÛR ™²f ÙN¥¨• ŒÛX H¼T|•. G]ÚY ÙTÖ‰UeL· –L°• pWUT|YÖŸL·.

CR]Ö¥ HW¥ B¼¿ TÖX†ÛR AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ ÚS¼¿ ÚS¡¥ TÖŸÛY›yPÖŸ. ÚU¨• AUÛXo ÙNzLÛ[ AL¼¿• T‚ÛV• Bš° ÙNšRÖŸ. ‘Á]Ÿ Œ£TŸLºeh ÚTyz A¸†RÖŸ. AÚTÖ‰ AYŸ i½VRÖY‰:-

¤.15 ÚLÖz J‰eg|

C‹R TÖX• EVW• hÛ\YÖL E·[‰. TÖX†ÛR EVŸ†‡ Lyze ÙLÖ|eL ÚY|• GÁ¿ ˜R¥- AÛUoNŸ Ù^VX¦RÖ«P• ÙTÖ‰UeL· ÚLÖ¡eÛL UÄ ÙLÖ|†‰ C£‹R]Ÿ. CÛR H¼\ ˜R¥- AÛUoNŸ, C‹R RÖ²YÖ] TÖX†‰eh T‡¥ EVWUÖ] TÖX• LyP ¤.15 ÚLÖz J‰eg| ÙNš‰ A½«†‰ E·[ÖŸ. «ÛW«¥ TÖX• Ly|• T‚L· ÙRÖPjLT|•.

CªYÖ¿ AÛUoNŸ N˜LSÖRÁ i½]ÖŸ.

AÛUoN£PÁ, UÖYyP TtNÖV†‰ RÛXYŸ pÁ]†‰ÛW, ~ÛYhP• JÁ½V A.‡.˜.L. ÙNVXÖ[Ÿ B¿˜LS›]ÖŸ, І‰ehz ïÂVÁ RÛXYŸ N˜LÚY¥, HW¥ SLW ÙNVXÖ[Ÿ B†‡TZ•, ÙT£jh[• SLW ÙNVXÖ[Ÿ ÙN¥X†‰ÛW, ÚTšh[• «YNÖ›L· NjL ÙTÖ£[Ö[Ÿ hQÚNLWÁ U¼¿• TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.


ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஏரலை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது


பரிகாரம் செய்வதாக கூறி அந்தமானில் கைவரிசை
ரூ.8 லட்சம்
நகை, பணம் சுருட்டல்
ஏரலை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது
ஏரல், அக். 30&
ஏரலில் இருந்து அந்தமானுக்கு ஜாதகம் மற்றும் குறி சொல்ல சென்ற 2 பேர் பரிகாரம் செய்வதாகக் கூறி 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை ஏமாற்றி எடுத்து வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட் டம் ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்கால் மகா கணபதியார்புரத்தை சேர்ந்த அழகிரி மகன் கணேசன். இதே ஊரைச் சேர்ந்த வரதராஜன் மகன் வேல்முருகன் (28). இவர்கள் ஜாதகம் மற்றும் குறி சொல்லி பிழைத்து வந்தனர். ஜாதகத்தில் உள்ள தோஷங்களுக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி பல லட்சங்கள் வசூலிப்பது வழக்கம்.
இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கும் சென்று ஜாதகம் மற்றும் குறி சொல்வது வழக்கம். இவ்வாறு சில மாதங்களுக்கு முன்பு அந்தமான்தீவுக்கு கணேச னும், வேல்முருகனும் சென்றனர்.
தெற்குஅந்தமான் கேப்டவுனில் வசித்து வரும் கண்ணன் மனைவி, அந்தமான் போர்ட்பிளேர் கருப்பசாமி கோயில் தெருவில் வசிக்கும் திருச்செல்வம் மகன் காளி முத்து, தெற்கு அந்தமானில் உள்ள மணிகண் டன் ஆகியோரது வீட்டுக்கு சென்றனர். அவர்களின் ஜாதகம் மற்றும் கைரேகையைப் பார்த்த 2 பேரும் உங்கள் குடும்பத்திற்கு தாலி தோஷம் உள்ளது என்று பயமுறுத்தினர். இதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் ரூ.25 ஆயிரம் வசூலித்தனர். பின்னர் அங்கேயே யாகம் செய்த னர். அதன்பின்னர் இங்கு மட்டும் பூஜை செய்தால் போதாது; தமிழ்நாட்டுக்கு சென்று ஜக்கம்மா கோயிலில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறி நகைகளை கேட்டனர்.
கண்ணன் குடும்பத்தினர் தாலி செயின் உட்பட 10 பவுன் நகையும், காளிமுத்து குடும்பத்தினர் 12 பவுன் தாலி செயின், ஒரு பவுன் டாலர் செயின், 5 கிராம் கல்மோதிரம் மற்றும் பேபி மோதிரங்கள் மூன்று, மணிகண்டன் குடும்பத்தினரி டம் 4 பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம் என மொத்தம் 30 பவுன் நகை களையும், பூஜைக்காக ரூ.2 லட்சத்தையும் வாங்கிக் கொண்டு தமிழகம் திரும்பினர்.
பூஜைகள் முடிந்த பின்னர் நகையை திருப் பித் தருவதாக கணேசனும், வேல்முருகனும் கூறினர். ஆனால் பல மாதங்களா கியும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கண்ணன், காளிமுத்து, மணிகண்டன் ஆகியோர் அந்தமான் பாம்பிளாஸ்ட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து விசா ரணை நடத்திய சப்& இன்ஸ்பெக்டர் மிசரா, தலைமைக் காவலர் ஹிமா சலம், ஏட்டு மனோஜ் ஆகியோர் தூத்துக்குடி எஸ்.பி.,யை சந்தித்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசா ரணை நடத்த உதவுமாறு கூறினர்.
இதையடுத்து அவர் ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்&இன்ஸ்பெக்டர் பால்ஐசக் மற்றும் குற்றப்பிரிவு ஏட்டு குமார சாமி மற்றும் போலீசார் சூளைவாய்க்காலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த கணேசன் மற்றும் வேல்முருகனை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கோர்ட் டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து நகை, பணம் மீட்கப்பட்டது.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அந்த மான் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட் டில் மனு செய்தனர். மாஜிஸ்திரேட், கணேசன், வேல்முருகன் ஆகி யோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்ததையடுத்து அவர்கள் 2 பேரையும் விசாரணைக் காக அந்தமான் அழைத்துச் சென்றனர்.

புதன், 26 அக்டோபர், 2011

சனி, 22 அக்டோபர், 2011

HW¥ SLW TtNÖV†‡¥

HW¥

HW¥ SLW TtNÖV†‡¥ A.‡.˜.L. NÖŸ‘¥ ÚTÖyz›yP ‡.˜.L. ÚYyTÖ[Ÿ H.TÖXf£ÐQÁ 1,843 Ky|L· ÙT¼¿ ÙY¼½ ÙT¼\ÖŸ. ÚYyTÖ[ŸL· ÙT¼\ Ky| «YW• Y£UÖ¿:-

ÙUÖ†R YÖeLÖ[ŸL·-5,944

T‡YÖ]ÛY - 4,813

YÖeh «†‡VÖN• - 276

1. Ú^.Ù^VpYr‘WU‚VÁ(A.‡.˜.L.)-1,567

2. H.TÖXf£ÐQÁ(‡.˜.L.) -1,843

3. G•.TÖeLŸA¦(LÖjfWÍ) -374

4. ÚL.™Ÿ†‡(ÚR.˜.‡.L.)-104

5. z.ÚRYWÖÇ(rÚV) -814

6. qÂYÖNÁ(rÚV) -34

7. Ù^VTÖX(rÚV) -53

8. Ù^Tpj(rÚV) -24

HW¥ SLW TtNÖV† YÖŸ| L°ÁpXŸ TR«eh ÙY¼½ ÙT¼\YŸL· «YW• Y£UÖ¿:-

1-Y‰ YÖŸ| ÙNhUÖÁ (‡.˜.L.) -135

2-Y‰ YÖŸ| R]Xyr– ÚTÖyz›Á½ ÚRŸ°

3-Y‰ YÖŸ| AÚNÖehUÖŸ(A.‡.˜.L) - 196

4-Y‰ YÖŸ| rYÖ–SÖRÁ(TÖ.^]RÖ) - 79

5-Y‰ YÖŸ| ˜†‰WÖÇ(‡.˜.L.) - 153

6-Y‰ YÖŸ| pYehUÖŸ(A.‡.˜.L.) - 141

7-Y‰ YÖŸ| gRÖ(A.‡.˜.L.) - 102

8-Y‰ YÖŸ| R¥p(‡.˜.L.) - 154

9-Y‰ YÖŸ| SYRf£ÐQÁ(‡.˜.L.) - 142

10-Y‰ YÖŸ| Wh¥’«(rÚV) - 195

11-Y‰YÖŸ| WÖUŸ(rÚV)-248

12-Y‰ YÖŸ| U‚YQÁ(‡.˜.L.) - 208

13-Y‰ YÖŸ| Ú^ÖN XÖWÁÍ(A.‡.˜.L.)- 141

14-Y‰ YÖŸ| ‘oÛNVÖ(A.‡.˜.L.) - 161

15-Y‰ YÖŸ| ÚR«UÚLÐ(‡.˜.L.) - 176

நெல்லையில் 17 டவுன் பஞ்சாயத்துகளில் அதிமுக வெற்றி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 17 டவுன் பஞ்சாயத்துகளில் அதிமுக கைப்பற்றியுள்ளது. திமுக 6 இடங்களிலும், சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக (17)

குற்றாலம் - லதா, மணிமுத்தாறு-சிவன்பாபு, ஆலங்குளம்-சொக்கலிங்கம், சேரன்மகாதேவி-இசக்கிபாண்டியன், பணகுடி லாரன்ஸ், திசையன்விளை-ஏகே சீனிவாசன், அச்சன்புதூர்-சுசீகரன், ஆழ்வார்குறிச்சி-முத்தையா, ஆய்க்குடி-குட்டியம்மாள், கோபாலசமுத்திரம்-கணேசன், இலஞ்சி-காத்தவராயன், மேலச்செவல்-மலைராஜ முருகேசன், மேலகரம்-பாலசுப்பிரமணியன், நாங்குநேரி-அசையாவீரன், புதூர் (செ)-ராதா, சாம்பவர்வடகரை-செல்வி, பண்பொழி-சங்கரசுப்பிரமணியன்.

திமுக(6)

சங்கர்நகர்-பேச்சிபாண்டியன், களக்காடு-ராஜன், கல்லிடைக்குறிச்சி-இசக்கிபாண்டி, கீழப்பாவூர்-பொன் அறிவழகன், நாராணம்மாள்புரம்-உமா மகேஸ்வரி, வடகரை கீழ்பிடாகை-முகமது ஷெரீப்.

சுயேட்சைகள் (8)

வடக்கு வள்ளியூர்-லாரன்ஸ், முக்கூடல்-லெட்சுமணன், ஏர்வாடி-ஆசாத், மூலக்கரைப்பட்டி-ராமசுப்பு, பத்தமடை-அல்லாபிச்சை, ராயகிரி-ராமையா, வாசுதேவநல்லூர்-ஆறுமுகம், திருக்குறுங்குடி-திருமலைநம்பி தலைவர்.

காங் (2)
சுரண்டை-ஜெயராணி, சுந்தரபாண்டியபுரம்-முருகையா.

மதிமுக 1
திருவேங்கடம்-சீனிவாசன்

மார்க்கிஸ்ட் 1
வீரவநல்லூர்-பழனிசாமி

இந்திய கம்யூ 1
சிவகிரி-ரணவீறு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...