ஏரல், ஜூன் 8:
ஏரலில் முன்விரோதத்தில் இறைச்சி கடையை சூறையாடிய சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் உட்பட 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல் புதுமனை தெருவை சேர்ந்தவர் அமீன் (58). இவர் ஏரல் வாய்க்கால் பாலம் அருகில் இறைச்சி கடை வைத்துள்ளார். அதே தெருவை சேர்ந்தவர் மக்தூம் முகம்மது மகன் ஹாஜா நஜ்முதின்(38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை அமீனின் மட்டன் கடையை ஹாஜா நஜ்முதின் தரப்பினர் ஜேசிபி மூலம் உடைத்தனர். இதை தடுக்க வந்த அமீன் மகன் பௌவ்மீனுக்கு (30) கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அமீன் ஏரல் போலீஸ் நிலையத்தில், ஹாஜாநஜ்முதின் தரப்பினர் தனது கடையை சூறையாடியதாகவும், கடையில் இருந்த ரூ.1 லட்சத்தை எடுத்து சென்றதாகவும் புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி ஹாஜா நஜ்முதின், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், ரவூப் சுல்தான் மகன் செய்யது அப்துல் ஹரீம், பீர்தொஸ் மற்றும் பீர்தொஸ் மகன் அப்துல் ரஹ்மான் உட்பட 15 பேரை தேடி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக