திங்கள், 16 ஜூன், 2014

ஏரலில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பாதிரியார் பலியானார்.

ஏரலில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பாதிரியார் பலியானார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கிறிஸ்தவ ஆலய பங்குதந்தை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை அடுத்த பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பீட்டர் (வயது 52). இவர் ஏரல் ஒத்தாசை மாதா ஆலயத்தில் பங்குதந்தையாக இருந்தார். மேலும் அங்குள்ள தூய இருதய நடுநிலைப்பள்ளி தாளாளராகவும் பணியாற்றி வந்தார்.

பீட்டர், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அலுவலக பணியாக, ஏரலில் இருந்து நாசரேத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் பலி

ஏரல் தாமிபரணி ஆற்றுப் பாலத்தின் வடக்கு பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பீட்டர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதனால் சாலையில் தூக்கி வீசப்பட்ட பீட்டரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவருடைய காதில் இருந்து ரத்தம் வழிந்தது.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பீட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி வழக்குப்பதிவு செய்தார்.

மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருச்செந்தூர் நாடார் தெருவைச் சேர்ந்த அப்துல் கபூர் மகன் ஹூசைனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...