சனி, 3 மே, 2014

ரல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நட்டாத்தி&மீனாட்சிபட்டி சாலை

ஏரல் அருகே
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நட்டாத்தி&மீனாட்சிபட்டி சாலை
ஏரல், மே 3:
ஏரல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நட்டாத்தி&மீனாட்சி பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோச மான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பெருங்குளம், பண்டாரவிளை, பண்ணை விளை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம் மற்றும் சாயர்புரம் பகுதி மக்கள் நெல்லைக்கு வாகனத்தில் சென்று வரவேண்டும் என் றால் நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி சாலையில் அணியாபரநல்லூர் வழியாக தெய்வசெயல்புரம் சென்று அங்கிருந்து நெல்லை மற்றும் புளியம் பட்டி கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பாதை தூரம் மிக குறைவாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அதிக அளவு இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில், ராஜபாளையம், கடம்பூர் மற்றும் மணியாச்சி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதற்கு தெய்வசெயல்புரம், மீனாட்சிபட்டி, நட்டாத்தி மற்றும் ஏரல் வழி இந்த பாதையை பயன் படுத்தி வருகின்றனர்.
மீனாட்சிபட்டியில் உள்ள தொழிற்சாலைகள், பொறியியல் கல்லூரிக்கும் இவ்வழியாக தொழிலாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இப்படி முக்கிய பாதையாக இருக்கும் நட்டாத்தி&மீனாட்சிபட்டி ரோடு குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றம் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலை.

ஏரல்&திருவழுதிநாடார்விளை சாலையில் தடுப்பு சுவரின்றி விபத்தில் சிக்கும் வாகனங்கள்

ஏரல் & திருவழுதிநாடார்விளை மெயின்ரோட்டில் ரோட்டை விட்டு இறங்கி மணலில் சிக்கிய அரசு பேரூந்து.
ஏரல்&திருவழுதிநாடார்விளை சாலையில்
தடுப்பு சுவரின்றி விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ஏரல், மே 3:
ஏரலில் இருந்து திருவழுதிநாடார்விளை சாலையோரத்தில் தடுப்பு தடுப்பு சுவர் அமைக்காததினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று ஏற்பட்ட பஸ் விபத்தில் அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்.
ஏரலில் இருந்து திருவழுதிநாடார்விளை சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன் விரிவாக்கப்பட்டது. அப்போது சாலையோர பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி விபத்துகள் நடந்தன. எனவே இதனை தடுக்க பள்ளமான இடங்களில் சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரனில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. ஆனால் மிகவும் பள்ளமாக இருந்த இடங்களிலும் தடுப்பு சுவர் அமைக்காமல் லாரிகளில் மூலம் மண் மட்டும் தட்டி சென்றனர்.
கடந்த மாதம் வாழைத்தார் ஏற்றி கொண்டு வந்த லாரி ரோட்டை விட்டு இறங்கிய போது இந்த பள்ளத்தில் தட்டப்பட்டுள்ள மணலில் சிக்கி கவிழந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் லோடு மேன்கள் உயிர் தப்பினர். இந்நிலையில் நேற்று காலை ஆத்தூரில் இருந்து ஏரல் வழியாக நெல்லைக்கு சென்ற அரசு பஸ் இதே ரோட்டில் வந்ததது. அப்போது தோல்கடை அருகில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்ட போது மணலில் பதிந்து பஸ் கவிழும் நிலை ஏற்பட்டது.
ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் கவிழாமல் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை பார்வையிட்டு மிக பள்ளமாக உள்ள இடங்களில் சாலையோரத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...