வெள்ளி, 24 மே, 2019
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணியை தென்மண்டல விமான நிலையங்களின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 5 முறை விமான சேவை நடந்து வருகிறது. இதில் தினமும் 600 பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக அரசு 600.10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கியுள்ளது. தொடர்ந்து விரிவாக்க பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை தென்மண்டல விமான நிலையங்களின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரிவாக்க பணிகளில் முதல் கட்டமாக விமானங்கள் இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அணுகு பாதையில் அமைக்கப்பட்டு உள்ள மின்விளக்குகளை ஸ்ரீகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் அணுகு பாதையில் இருந்த 3 மரங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு நடப்பட்டது. அந்த பணியையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் விமான நிலைய ஓடுதள பகுதியில் கண்காணிப்பு பணிகளுக்காக கூடுதலாக ஒரு வாகனம் வாங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் அதிநவீன புதிய தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், சென்னை கட்டுமான பிரிவு பொது மேலாளர் ராஜசேகர், கூடுதல் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை விமான நிலைய எலக்ட்ரிக்கல் பிரிவு துணை பொது மேலாளர் ராஜூ, தூத்துக்குடி விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவு துணை பொது மேலாளர் ஷைகிமோள் ஜார்ஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க. வெற்றி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகையா, அ.ம.மு.க. சார்பில் சுந்தரராஜ், மக்கள் நீதிமய்யம் சார்பில் காந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யா உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 பேர் ஆவர். கடந்த 19-ந் தேதி நடந்த இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 794 வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சண்முகையா முன்னிலை வகித்து வந்தார்.
மொத்தம் 19 சுற்றுகள் நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா 73,241 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் 53,584 ஓட்டுகள் வாங்கினார். இதனால் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா 19,657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தி, நோட்டோவை விட குறைவான வாக்குகளே பெற்றார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்தையா என்பவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. தற்போது, 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சண்முகையா வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-
1) சண்முகையா (தி.மு.க.)-73,241,

2) மோகன் (அ.தி.மு.க.)-53,584,
3) சுந்தரராஜ் (அ.ம.மு.க.)-29,228,
4) அகல்யா (நாம் தமிழர் கட்சி)-8666,
5) காந்தி (மக்கள் நீதி மய்யம்)-1734,
6) ராகவன் (சுயே.)-422,
7) சின்னசாமி (சுயே.)-387,
8) ராஜா (இந்திய குடியரசு கட்சி)-306,
9) மள்ளர் மன்னன் (சுயே.)-254,
10) அக்ரி பரமசிவன் (இளந்தமிழர் முன்னணி கழகம்)-221,

11) உதய செல்வன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)-124,
12) மாரியப்பன் (சுயே.)- 167,
13) பாலகிருஷ்ணன் (சுயே.)-119,
14) எட்டப்பன் (சுயே.)-116,
15) முருகன் (சுயே.)-116,
16) நோட்டா - 1,783
தேர்தலில் வெற்றி பெற்ற சண்முகையாவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் வெற்றி சான்றிதழ் வழங்கினார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி: பா.ஜனதா வேட்பாளர் தமிழிசையைவிட 3½ லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜனதா வேட்பாளர் தமிழிசையைவிட 3½ லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதி ஆகும். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி, பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய முக்கிய தலைவர்கள் போட்டியிட்டதால் இந்த தொகுதி தமிழகத்தில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இத்தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் புவனேசுவரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் உள்பட 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று எண்ணப்பட்டன. முதலில் இங்கு வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடந்தது. 37 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் வாக்குகள் எண்ணுவதற்கு ஊழியர்கள் சிரமப்பட்டனர். ஒரு சில வாக்குகள் எண்ணிக்கையில் குளறுபடி நடந்தது. இதனால் சுற்றுவாரியாக வாக்குப்பதிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இருந்தபோதிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் இருந்தார். அவர் சராசரியாக ஒவ்வொரு சுற்றுக்கும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதனால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். முடிவில்
கனிமொழி 5,63,143 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட
பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 ஓட்டுகளை பெற்றார்.
இவரைவிட 3,47,209 வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார்.
தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-
1) கனிமொழி (தி.மு.க.)-5,63,143,
2) தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா)-2,15,934,
3) புவனேசுவரன் (அ.ம.மு.க.)-76,886,
4) கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாம்தமிழர் கட்சி)-49,222,
5) பொன்குமரன் (மக்கள்நீதிமய்யம்)-25,702,
6) சுபாஷினி மள்ளத்தி (சுயே.)-8,109,
7) சிவனேசுவரன் (சுயே.)-5,252,
8) சங்கரலிங்கம் (சுயே.)-3029,
9) எம்.மகாராஜன் (பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி லோகியா)-2,922,
10) சிவா (பகுஜன் சமாஜ் கட்சி)-2927,
11) காபிரியேல் ஜேம்ஸ் பெர்ணான்டோ (பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா )-2,549,
12) ராஜகுமார் நாயுடு (தமிழ் தெலுங்கு நேஷனல் கட்சி)-2,516,
13) குரு (சுயே.)-2276,
14) சரவணன் (சுயே.)-2135,
15) அமலன் ராஜீவ் போனிபாஸ் (சுயே.)-2005,
16) பாலமுருகன் (சுயே.)-1699,
17) பா.ராமகிருஷ்ணன் (சுயே.)-1671,
18) ராஜலிங்கம் (சுயே.)-1866,
19) செல்வின் (சுயே.)-929,
20) அண்டோ ஹலரி (சுயே.)-924,
21) ஜெயகணேஷ் (நாம் இந்தியர்)-908,
22) பிரதீப் கணேசன் (சுயே.)-887,
23) ராஜ்குமார் போலையா (யுனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மண்ட்)-689,
24) ரமேஷ் (சுயே.)-669,
25) பொன்ராஜ் (சுயே.)-560,
26) சன்மேன்(சுயே)-615,
27) ஜெர்மன்ஸ் (கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி)-494,
28) ரவிசங்கர் (சுயே.)-487,
29) சேனை நடராஜன் (சுயே.)-474,
30) ம.ராமகிருஷ்ணன் (சுயே.)-472,
31) லூடஸ் (சுயே.)-460,
32) பொன்னுச்சாமி (சுயே.)-436,
33) ஜேஸ்பர் ஞானமார்ட்டின் (சுயே.)-436,
34) மரகதராகவராஜ் (சுயே.)-428,
35) ஜெயராஜ் (சுயே.)-477,
36) ஜேம்ஸ் (சுயே.)-407,
37) நோட்டா-9234
தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழிக்கு அதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி வழங்கினார். அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. (தெற்கு), கீதாஜீவன் எம்.எல்.ஏ. (வடக்கு) ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினருக்கு நன்றி. இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோருக்கும், கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு வாக்களிக்க மாட்டார்கள். அதை தாண்டி யார் இந்த நாட்டுக்காக உண்மையாக உழைக்கக்கூடியவர்கள் என்பதை புரிந்து கொண்டு தி.மு.க.வுக்கு வாய்ப்பளித்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி. இந்த நாட்டில் தற்போது வந்துள்ள வெற்றி அலையை தாண்டி தி.மு.க. தமிழகத்தில் வெற்றி பெற்று உள்ளது. இது தமிழகம் தனித்தன்மையுடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

மத்தியில் வெற்றி பெற்ற பா.ஜனதாவிற்கும், மோடிக் கும் எனது வாழ்த்துகள். என்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை பற்றி விமர்சனம் செய்து அவரை காயப்படுத்த விரும்பவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல், தமிழக மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராடும். இங்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாக்கு எண்ணும் மையத்தில் மயங்கி விழுந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பகுதியில் உள்ள வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இருந்தார். அப்போது, திடீரென்று அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகள் தெரியாமல் தவிப்பு
தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கையின்போது வழக்கமாக ஒவ்வொரு சுற்று முடிவுகளும் மைக் மூலம் அறிவிக்கப்படும். ஆனால் இந்த தடவை முறையாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் வாக்குச்சாவடிக்கு வெளியே திரண்டு இருந்த அரசியல் கட்சியினர் உள்பட பலர் தேர்தல் முடிவுகள் தெரியாமல் தவித்தனர்.

போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்-ஏரல் சாலை
நாசரேத் மே 24: போக்குவரத்துக்கு லாயக்கற்ற நாசரேத்- ஏரல் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாசரேத்-ஏரல் இடையே உள்ள குளத்துக்குடியிருப்பு, கடையனோடை, சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாகவும், பெரிய பள்ளங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் படாதபாடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள நாசரேத்-ஏரல் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய், 21 மே, 2019
ஏரல் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலை சேதம்
ஏரல், மே 21: ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் சாலையில் ஏற்பட்டுள்ள குடிநீர் உடைப்பினால் தண்ணீர் வீணாவதோடு அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஏரல் அருகே மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆற்றுக்குள் உறைகிணறு அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை, நட்டாத்தி, சாயர்புரம் வழியாக தூத்துக்குடி உட்பட்ட பகுதிகளுக்கு குடிதண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதேபோல் சாயர்புரம் கூட்டுகுடிநீர் திட்டத்திலும், பெருங்குளம், நட்டாத்தி பகுதிகளுக்கும் மங்கலகுறிச்சி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் வீணாக அருகில் உள்ள வயல் வெளிக்கு செல்கிறது. கோடை காலத்தில் பல கிராமங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் காலிகுடங்களுடன் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இங்கு குழாய் உடைப்பினால் தண்ணீர் இங்கு வீணாகி வருகிறது அப்பகுதி மக்களை வேதனை அடைய வைத்துள்ளது. மேலும் இந்த குடிநீர் உடைப்பினால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு படுகுழி ஏற்பட்டுள்ளது.
ஏரலில் இருந்து திருநெல்வேலி, வைகுண்டம், பெருங்குளம் பண்டாரவிளை செல்லும் அனைத்து வாகனங்களும் மங்கலகுறிச்சியில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் சென்று வர வேண்டியது உள்ளது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவு நடந்து வருகிறது.
இந்நிலையில் இவ்வழியாக வரும் வாகனங்கள் இந்த படுகுழியில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருப்பதற்காக குடிதண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு படுகுழியாக உள்ள இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இடத்தில் இரண்டு கம்பிகள் நடப்பட்டுள்ளன. ஆனால் இரவு நேரத்தில் இவ்வழித்தடத்தில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கி போய் உள்ளதால் சாலையில் வரும் வாகனங்கள் இந்த படுகுழி மற்றும் ரோட்டின் நடுவில் உள்ள இந்த கம்பிகளில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இந்த குடிநீர் குழாய் உடைப்பினை சீரமைத்து தண்ணீர் வீணாக செல்வதையும், விபத்து ஏற்பட்டு வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதன், 15 மே, 2019
ஸ்ரீவைகுண்டம் அருகே கோர விபத்து: வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது; 2 மாணவர்கள் பலி

ஸ்ரீவைகுண்டம் அருகே வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு மாணவர் உடல் கருகியும், மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தும் உயிரிழந்தனர்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சேர்ந்தவர்கள் செந்தில் முருகன் மகன் சாமிநாதன் (வயது 18), வேம்பு மகன் அசோக் கணேஷ் (18). நண்பர்களான இருவரும் ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தனர். சாமிநாதன் நேற்று காலை தனது மற்றொரு நண்பரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை இரவல் வாங்கினார். அதில் அசோக் கணேசை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ஒரு வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
காலை 9.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பாலத்தை கடந்தபோது, வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார்சைக்கிள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் சாமிநாதன் மீது தீப்பற்றியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு இடத்தில் தூக்கி வீசப்பட்ட அசோக் கணேசும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் மற்றும் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இறந்து கிடந்த 2 மாணவர்களின் உடல்களையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் வேனின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. சாமிநாதன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியிலும், அவரது உறவினர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திங்கள், 6 மே, 2019
ஏரல் சேர்மன் கோயிலில் 111வது ஆண்டு குருபூஜை விழா
ஏரல், மே 3: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் 111வது ஆண்டு குருபூஜை விழா 5ம்தேதி நடக்கிறது. பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்களில் சித்திரை மாத சுவாமியின் குருபூஜை விழா சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசை அன்று பக்தர்கள் கோயிலில் அரிசி, காய்கனிகள் உட்பட பொருட்களை கோயிலில் காணிக்கையாக செலுத்துவர். அதனை மறுநாள் சமைத்து கோயிலில் அன்னமலை சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு சித்திரை மாத அமாவாசை 4ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்று பக்தர்கள் கோயிலில் கொடுக்கும் அரிசி, காய்கனிகளை கொண்டு 5ம்தேதி சமைத்து காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் துவக்கி வைக்கிறார். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் செய்து வருகிறார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...