வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பஞ்., தலைவியிடம் 11 பவுன் நகை பறித்த 2 பேர் கைது


குரங்கணி
பஞ்., தலைவியிடம் 11 பவுன்
நகை பறித்த 2 பேர் கைது
ஏரல், ஏப். 20&
குரங்கணி பஞ்சாயத்து தலைவியிடம் 11 பவுன் நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணியைச்சேர்ந்த ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி(45) பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். நேற்று முன்தினம் இவர் அம்மன்கோயில் ரோட்டில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ராஜூ, குற்றப்பிரிவு எஸ்.ஐ. நாராயணன், ஏட்டுக்கள் குமாரசாமி, மாடசாமி மற்றும் போலீசார் தென்திருப்பேரை ஆத்தூரான் கால்வாய் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, குரங்கணி பஞ்சாயத்து தலைவியிடம் நகை பறித்தது அவர்கள்தான் என தெரியவந்தது. இதையொட்டி ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு அம்மன்கோயில் தெரு சின்னக்கண் மகன் ஜெகன்(36), செய்துங்கநல்லூர் சண்முகம் மகன் ஆறுமுகம்(31) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை மீட்கப்பட்டது.

ஏரல் சேர்மன்கோயில்


ஏரல் சேர்மன்கோயில்
104வது குருபூஜை
ஏரல், ஏப்.20&
ஏரல் சேர்மன் கோயில் 104வது குருபூஜை நாளை நடக்கிறது.
ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் குரு பூஜைவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் அம்மா வாசை மறுநாள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் வழங் கும் அரிசி, காய்கனிகள் மற்றும் நன்கொடைகள் மூலம் இவை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 104வது குருபூஜை விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று இரவு நடைபெறும் அமா வாசை பூஜையின் போது பொதுமக்கள் காய் கனி, அரிசி உள்ளிட்ட பொருட் கள் வழங்குகிறார் கள். நாளை காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கா னோர் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
நாளை நடக்கிறது

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஏரல் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை

ஏரல்: ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ.3850 அபராதம் விதிக்கப்பட்டது.
ஏரல்  பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.  பேரூராட்சி நிர்வாக அதிகாரி தனசிங் தலைமையில் இளநிலை உதவியாளர் கிருஷ்ணன், சுகா தார மேற்பார்வையாளர் எட்வர்டு ஜெபசீலன், அடைக்கலம், அலுவலக பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் காவல் துறையினருடன் ஏரல் பகுதி கடைகளில் சோதனை நடத்தினர். 
இதில் ஏரல் பஸ் நிலையம், பாரதியார் ரோடு, பள்ளிவாசல்  தெரு மற்றும் காந்திசிலை அருகில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 124 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு ரூ.3850 அபராதம் விதிக்கப்பட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து விற்றால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஏரல் பகுதியில் இதுவரை 154 கடைகளில் இருந்து  262 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏரலில் 4 நாட்கள் நகைக்கடைகள் அடைப்பு

ஏரல்: ஏரலில் இன்று முதல் 4 நாட்கள் கடையடைப்பு நடத்த நகைக்கடை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 
ஏரல் நகை வியாபாரிகள் சங்க கூட்டம் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தங்கத்துக்கு மத்திய அரசு புதிதாக விதித்துள்ள கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஏரலில் இன்று (5ம் தேதி) முதல் 8ம் தேதி வரை 4 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவா, அரிராமகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், சாதிக் அலி, முருகன், செல்வம், கணேசன், சைலப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...