வியாழன், 28 ஜூன், 2012

வெள்ளக் காலங்களில் தடைபடும் போக்குவரத்து ஏரல் ஆற்றுப்பால திட்டம் காலதாமதம் 40 ஆண்டுகால போராட்டத்திற்கு விடிவு கிடைக்குமா

ஏரல், :  ஏரல் பகுதி மக்களின் நீண்டநாள் கனவான தாமிரபரணியின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தாமதமாகி கொண்டே செல்கிறது. மழைக்காலம் தொடங்கும் முன் பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய வணிக நகரமாக ஏரல் உள்ளது. இங்கு வியாபாரம், தொழில் சம்பந்தமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தென்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஏரலுக்கு வர அங்கு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தாம்போதி பாலத்தைதான் பயன்படுத்துகின்றனர். இப்பாலத்தின் அருகில் பிரசித்தி பெற்ற சேர்மன் அருணாசலசுவாமி கோயிலும், குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலும் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவர். ஏரல்-குரும்பூர் சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாகவும் இப்பாலம் உள்ளது. 
30-10-1970ல்  இந்த பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பெரிய சிமென்ட் குழாய்கள் பதித்து அதன்மீது கான்கீரிட் கொட்டி தரைமட்டப் பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. உயரம் குறைவாக இருப்பதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால் ஆற்றின் தென்பகுதியில் உள்ள வியாபாரிகள், மாணவர்கள், விவசாயிகள் ஏரலுக்கு வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.  
மேலும் தூத்துக்குடியில் இருந்து ஏரல் வழியாக நாசரேத், சாத்தான்குளம், திருச்செந்தூர் செல்லும் பஸ்கள், ஏரலில் இருந்து குரங்கணி வழியாக திருநெல்வேலி செல்லும் பஸ்கள், வாகனங்கள் ஆத்தூர் பாலம் வழியாக மாற்றி விடப்படும். இதனால்  மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்லமுடியாமல் கஷ்டப்படுகின்றனர். பாலம் கட்டப்பட்டு 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் பழுதுபார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண அங்கு புதிய பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரல் பகுதி வியாபாரிகள், ஊர்மக்கள் 10 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 5 வருடங்களுக்கு முன் இப்பாலத்தை பார்வையிட்ட ஸ்ரீவைகுண்டம் முன்னாள் ஏம்எல்ஏ செல்வராஜ் புதிய பாலம் அமைக்க தமிழக அரசு நபார்டு வங்கிக்கு திட்ட மதிப்பீடு அனுப்பியிருப்பதாக கூறினார். ஜெயதுரை எம்பியும் புதிய பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.  தற்போது ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவாக இருக்கும் சண்முகநாதன் ரூ.15 கோடியில் ஏரல் ஆற்றுப்பாலம் கட்ட இருப்பதாகவும், பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கடந்த ஆண்டு தெரிவித்தார். அதன் பிறகு புதிய பாலம் கட்ட இடம் தேர்வு செய்வதற்காக பழைய பாலத்தின் மேல்பக்கம் மண் பரிசோதனை  செய்யப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் பாலம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு அளவீடு செய்ததுடன் இணைப்புச் சாலைகள் குறித்தும் ஆய்வு செய்தனர். ஆனால் பாலம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்காததால் வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் செய லாளர் ரவிசங்கர் கூறு கையில், ‘ஏரல் நகர வியாபாரத்திற்கு முக்கிய கார ணமாக விளங்குவது இந்த தரைவழி ஆற்றுப்பாலம்தான். கடந்த 2010ல் ஆற்றுப்பாலத்தின் நடுவில் குழாய்கள் திடீரென உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்க ப்பட்டது. கடந்த ஆண்டும் பாலத்தின் வடபகுதியில் அரிப்பு ஏற்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது. எனவே புதிய பாலப் பணியினை விரைவில் அரசு தொடங்க வேண்டும்’ என்றார். 
பேரூ ராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகை யில், ‘ஏரல் பகுதியில் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்கும் ஆற்றுப்பாலத்தின் நடுவில் கான்கீரிட் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பாலத்தின் அனைத்து  தூண்களும் உடைந்துள்ளன. 
பாலத்தில் தடுப்பு கம்பிகள், மின்விளக்கு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. புதிய பாலப்பணியை மழைக்காலத்திற்கு முன் தொடங்கவேண்டும்’ என்றார்

வெள்ளி, 15 ஜூன், 2012

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில்


ஏரல் அருகே உலக சுற்றுச்சூழல் தின விழா

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-06-15 10:57:58
ஏரல்: ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுடலைமுத்து தலைமை வகித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் விஜயா, பிரான் சிஸ், ஜோசப்பின் ஜோவிட்டா, ராமன் மற் றும் மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர்.
சிறுத்தொண்டநல்லூர் பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் மற்றும் சூளைவாய்க்கால், மணலூர் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வெள்ளி, 8 ஜூன், 2012

ஏரலில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

ஏரல்: ஏரல் தேர்வுநிலை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.  பேரூராட்சி அலுவலகம் முன்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைவர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நிர்வாக அதிகாரி தனசிங், துணைத்தலைவர் மணிவண்ணன், உறுப்பினர் பிச்சையா முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று காந்திசிலை அருகே முடிவடைந்தது.
ஊர்வலத்தில் ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் துணைத்தலைவர் தாணுலிங்கம்பிள்ளை, நல்லாசிரியர் வில்சன்வெள்ளையா, புள்ளியல் துறை முருகேசன், நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் கற்பகம், தங்கராஜ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் அடைக்கலம், எட்வர்டு ஜெபசீலன் மற்றும் அரசு மகளிர், தூய தெரசாள் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

І‰ehz UÖYyP†‡¥ p¿TÖÁÛU›] UÖQYŸL· L¥« ER«†ÙRÖÛL ÙT\ «Q‘eLXÖ•


    І‰ehz UÖYyP†‡¥
p¿TÖÁÛU›] UÖQYŸL· L¥« ER«†ÙRÖÛL ÙT\ «Q‘eLXÖ•
LÙXePŸ BÑÐhUÖŸ RLY¥


І‰ehz, ^ØÁ.8-

І‰ehz UÖYyP†‡¥ p¿TÖÁÛU›] UÖQYŸL· L¥« ER«†ÙRÖÛL ÙT\ «Q‘eLXÖ• GÁ¿ UÖYyP LÙXePŸ BÑÐhUÖŸ ÙR¡«†‰ E·[ÖŸ.

C‰ h½†‰ AYŸ ÙY¸›y|·[ A½eÛL›¥ i½ C£TRÖY‰:-

L¥« ER«†ÙRÖÛL

R–²SÖyz¥ E·[ AWr ER«ÙT¿• U¼¿• AWNÖ¥ AjgL¡eLTyP T·¸›¥ 1-• Yh“ ˜R¥ 10-• Yh“ YÛW Tzeh• f½Í‰Y, CÍXÖ–V, “†R, qefV U¼¿• TÖŸp YhÛT ÚNŸ‹R p¿TÖÁÛU›] UÖQY- UÖQ«L· L¥« ER«†ÙRÖÛL ÙT¿YR¼h «Q‘eLXÖ•

C†‡yP†‡Ág² L¥« ER«†ÙRÖÛL ÙT\ UÖQY-UÖQ«L¸Á ÙT¼Ú\ÖŸ A¥X‰ TÖ‰LÖYXŸL¸Á B| Y£UÖ]• ¤.1 XyN†‰eh –LÖU¥ C£eL ÚY|•. UÖQY-UÖQ«L¸Á ˜‹ÛRV BzÁ C¿‡ ÚRŸ«¥ 50 NR®R U‡ÙTLºeh hÛ\VÖU¥ ÙT¼¿ ÚRŸop ÙT¼¿ C£eL ÚY|•.

‘¼T|†RTyÚPÖŸ SX†‰Û\, B‡ ‡WÖ«PŸ SX†‰Û\, CRW ‰Û\L·, SX YÖ¡VjL· ™X• 2012-2013-• Bz¥ L¥« ER«†ÙRÖÛL ÙT¼¿ C£eLeiPÖ‰. h|•T†‡¥ A‡LTyN• 2 ÚT£eh L¥« ER«†ÙRÖÛL YZjLT|•. hÛ\‹R Y£UÖ]• ÙT¿• h|•T†‡¥ E·[ UÖQY-UÖQ«Lºeh ˜ÁÄ¡ÛU A¸eLT|•.

«QTjL·

H¼L]ÚY ER«†ÙRÖÛL YÖjh• UÖQY-UÖQ«L· “‰‘†R¨eLÖ] «QTjLÛ[•, ˜R¥ ˜Û\VÖL ER«†ÙRÖÛL YÖjL ÚLÖ£• UÖQY-UÖQ«L· AR¼h¡V «QTjLÛ[• RÖjL· Tzeh• T·¸›¥ Y£f\ 15-8-12-e h· ÙLÖ|eL ÚLy|e ÙLÖ·[T|f\ÖŸL·.

UÖQYŸL¸P• ÙT¼\ «QTjLÛ[ N•T‹RTyP T·¸ ŒŸYÖL†‡]Ÿ N¡TÖŸ†‰ AR¼LÖ] ÚLy“ TyzV¥LÛ[ E¡V TzY†‡¥ T‡‹‰ І‰ehz UÖYyP LÙXePŸ A¨YXL†‡¥ E·[ UÖYyP ‘¼T|†RTyÚPÖŸ U¼¿• p¿TÖÁÛU›]Ÿ SX A¨YX¡P• 25-08-2012-eh· NUŸ‘eL ÚY|•.

CªYÖ¿ A½eÛL›¥ LÙXePŸ BÑÐhUÖŸ ÙR¡«†‰ E·[ÖŸ.   

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...