வெள்ளி, 23 பிப்ரவரி, 2018
வியாழன், 22 பிப்ரவரி, 2018
ஏரலில் கிரிக்கெட் போட்டி
தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிகளின் விவரத்தை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் மளவராயநத்தம் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. மார்ச் 1–ந்தேதி அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, மாநகராட்சி 8 வட்டங்களில், நகராட்சியில் கட்சி கொடியேற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 3–ந்தேதி மதியம் 12 மணிக்கு திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் மாவட்ட கழகம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு சாத்தான்குளம் சாமிசன்னதி பகுதியில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
10–ந்தேதி காலை 8 மணிக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாமும், மாலை 6 மணிக்கு காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட முகாம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதே போல் ஏரலில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
மாரத்தான் போட்டி
11–ந்தேதி மாலை 6 மணிக்கு பேய்க்குளத்தில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. 17–ந்தேதி மாலை 6 மணிக்கு உடன்குடி பாரதி திடலில் நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 18–ந்தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூர் தேரடி திடலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 7–ந்தேதி மாலை 6மணிக்கு திருச்செந்தூர் தேரடிதிடலில் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், 8–ந்தேதி மாலை 6 மணிக்கு ஓட்டப்பிடாரத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. அதே போல் ஓட்டப்பிடாரத்தில் கபடி போட்டியும், ஸ்ரீவைகுண்டத்தில் ரேக்லா போட்டியும், கருங்குளம் வசவப்பபுரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
ஏரல் அருகே வாழவல்லானில் வாய்க்கால் கரையோரத்தை சுத்தம் செய்த மாணவர்கள்
.
ஏரல் அருகே வாழபல்லான் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை மாணவர்கள் அங்குள்ள வாய்க்கால் கரையோரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் முள்செடிகளை அகற்றி கரையோரப் பகுதியினை சுத்தம் செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியசீலி, முதுகலை ஆசிரியர் பாலகிருஷ்ணன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வசீகர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர் செல்வின் ஜூலியஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஏரலில் திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி
ஏரல், பிப். 22: திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் ஏரல் நகர திமுக சார்பில் ஏரலில் கிரிக்கெட் போட்டி நடந்தது. துவக்க விழாவுக்குத் தலைமை வகித்த ஒன்றியச் செயலாளர் பி.ஜி. ரவி, கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைத்தார். ஏரல் நகரச் செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
இப்போட்டியில் ஏரல், திருவழுதிநாடார்விளை, மொட்டத்தாதன்விளை, புளியநகர், சிவத்தையாபுரம், புதுக்கோட்டை, பண்டாரவிளை, சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, புதுமனை உட்பட 18 அணிகள் பங்கேற்றுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோப்பை மற்றும் பரிசு வழங்குகிறார்.
துவக்க விழாவில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், பாலமுருகன், சுபமாரியப்பன், பிரபாகரன், ராமசுப்பிரமணியன், வைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் மகராஜன், ஏரல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மணிவண்ணன், சாயர்புரம் நகரச் செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், நகர துணைச் செயலாளர் கிறிஸ்டோபர், இளைஞர் அணி கண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் சாதிக்குல் அமீன் மற்றும் கொற்கைமாறன், மணி, நிக்ஷன், முத்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சனி, 17 பிப்ரவரி, 2018
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு 1217 சாலை விபத்தில் 354 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தாண்டு நிகழ்ந்த 1217 சாலை விபத்துகளில் 354 பேர் பலியாகியுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் இரு, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 71 ஆயிரம் வாகனங்களும், டூவீலர்களும் சென்று வருகின்றன என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவட்டத்தில் உயிர்ப்பலி ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ள விபத்துகள் மூலம் பலியானவர்களின் விபரம்:தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் மொத்தம் 1217 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் சிறிய மற்றும் உயிர்பலி கொண்ட விபத்துகள் அனைத்தும் அடங்கும். இந்த விபத்துகளின் மூலம் 354 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த விபத்துகளின் மூலம் 1380 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே விபத்துகளும், அவற்றினால் ஏற்பட்ட உயிர்பலிகளும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2017ல் விபத்துகள் எண்ணிக்கையும், அதில் பலியானவர்கள் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது.
வட்டார போக்குவரத்து துறை, காவல்துறை, போக்குவரத்து காவல்துறையினர் ஆண்டு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் விபத்துகள் எண்ணிக்கை சிறிதளவே குறைந்துள்ளது.
உயிர்பலி ஏற்பட்ட விபத்துகளில் 110க்கும் மேற்பட்ட விபத்துகளுக்கு காரணமான டிரைவர்கள் குடிபோதையில் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிர்பலி விபத்துகள் பெரும்பாலானவை நெடுஞ்சாலையில், அதிகாலையில் 2 மணியில் இருந்து 4.30 மணிக்குள்தான் நடந்துள்ளன.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ல் விபத்துகள் குறைவுதான். நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் முறையான பராமரிப்பில்லாமலும், குண்டும் குழியுமாக உள்ளதும் விபத்துகளுக்கு ஒரு காரணம்.
இம்மாவட்டத்தில் அதிக விபத்துகள் டூவீலர்களால் நடந்துள்ளது. 20-30 வயதுக்குபட்டவர்களால் அதிகம் விபத்து ஏற்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். பைக் ரேஸ் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ரேஸ் பைக் வைத்திருப்பவர்களின் நடவடிக்கை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விபத்துகளை தவிர்க்க பல்வேறு வழிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர் முயற்சிகளால் அடுத்து வரும் ஆண்டுகளில் விபத்துகள் குறையும் என நம்புகிறோம் என்றனர்.
1.78 லட்சம் வழக்குகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன வழக்குகளை போலீசார் அதிகமாக பதிவு செய்து வருகின்றனர். 2017 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 1,78,291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஓய்வெடுக்காத டிரைவர்கள்வட்டார போக்குவரத்து அதிகாரி ரெங்கநாதன் கூறுகையில், ‘‘பெரும்பாலான விபத்துகள் அதிகாலை 2 மணி முதல் 5 மணிக்குள் தான் நடந்துள்ளன. இரவில் வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் பகலில் நன்றாக தூங்கி உடல் நிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனநிலையையும், சிந்தனையையும் சிதறவிடாமல் ஒருமுகத்தன்மையுடன் தனது வாகனத்தில் வரும் அனைத்து உயிர்களுக்கும் நாமே பொறுப்பு என்ற தன்மையுடன் பணியை மேற்கொள்ள வேண்டும். டிரைவிங்கின் போது போதை வஸ்துகளை தவிர்ப்பதன் மூலமும் விபத்துகளை தவிர்க்கலாம்’’ என்றார்.
தூத்துக்குடியில் இன்று மார்க்சிஸ்ட் மாநாடு துவக்கம் : ஏரல்லில், கலைக்குழு பிரசாரம்
ஏரல்: மார்க்சிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தூத்துக்குடியில் இன்று (17ம் தேதி) தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கலைக்குழு சார்பில் மாநாடு விளக்க பிரசாரம் மாவட்ட முழுவதும் நடந்து வந்தது. இதையடுத்து கலைக்குழு பிரசாரம் வைகுண்டம் ஒன்றிய பகுதிகளான ஏரல், சாயர்புரம், முக்காணி மற்றும் வைகுண்டம் பகுதிகளில் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் தலைமையில் புதுகை பூபாலம், முத்துசிறப்பி மற்றும் பாரதி கலைக்குழு சார்பில் நடத்தப்பட்டது. ஏரல் நகர செயலாளர் பெஸ்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் தர்மலிங்கம், சிலுவைமுத்து, காமராஜ்நகர் கிளை செயலாளர் லிங்கமுத்து மற்றும் சுந்தரம், பிரமையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஓட்டப்பிடாரம்:ஓட்டப்பிடாரம், பசுவந்தனை எப்போதும்வென்றான், குறுக்குசாலை மற்றும் புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் வீதி நாடகம் மூலம் பிரசாரம் செய்தனர். இதில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராகவன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கழுகுமலை:கழுகுமலைக்கு வேன் மூலம் வருகைதந்த கலைக்குழுவினருக்கு கழுகுமலை நகர மார்க்சிஸ்ட் செயலாளர் மாரியப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கழுகுமலை காந்தி மைதானத்தில் மாநில மாநாடு குறித்து கரகாட்டம், நாட்டுப்புறப்பாட்டு, தப்பாட்டம் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு, கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ், குருசாமி, முருகன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதன், 14 பிப்ரவரி, 2018
ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்களில் வித விதமான டிக்கெட் கட்டணம் வசூல்
ஆறுமுகநேரி, பிப். 15: தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்தன. மேலும், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கண்துடைப்புக்கு பஸ் டிக்கெட் கட்டணத்தை அரசு குறைத்தது. ஆனாலும், டிக்கெட் உயர்வைதிரும்ப பெறக்கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், டிக்கெட் கட்டண உயர்வுக்கு பின்னர் டிக்கெட் வசூலிப்பதில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. அதாவது ஒவ்வொரு பணிமனைக்கு ஒவ்வொரு விதமாக டிக்கெட் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதாவது, திருப்பூர், கோவை பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே மதுரை பணிமனை பஸ்களில் ரூ.31 கட்டணமும், நெல்லை பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் ரூ.25ம், சில பஸ்களில் ரூ.26ம், ரூ.31ம் என வித விதமாக மக்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே தனியார் பஸ்களில் ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அரசுப்பஸ்களை விட தனியார் பஸ்களில் கட்டணம் மிக குறைவாக இருப்பதால் தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அரசு பஸ்களில் பயணிக்கும் மக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில நேரங்களில் கண்டக்டருடன் மக்கள் வாக்குவாத்தில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.
இதுகுறித்து நீங்கள் பணிமனை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என கண்டக்டர்கள் கூறுகின்றனர். எனவே, உயர்த்திய கட்டணத்தையாவது, ஒரே விதமாக வசூலிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகரம்- ஏரல் சாலை முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த
ஏரல், பிப். 15: முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்த அகரம்- ஏரல் சாலையால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.பழையகாயல் அருகே அகரம் பாலத்தில் இருந்து அகரம் ஊர் வழியாக மாரமங்கலம், கொற்கை, வாழவல்லான் வழியாக ஏரலுக்கு செல்லும் சாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர், சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கியது. இதில் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளங்கள் உருவாகின. இதனால் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.
இந்த சாலை வழியாக அகரம், மாரமங்கலம், கொற்கை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாழவல்லான், உமரிக்காடு, ஏரல் பள்ளிகளுக்கு சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கடுமையாக அவதிப்படுகின்றனர். மேலும், வாழை விவசாயிகள் உள்ளிட்டோரும் இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே, இந்த சாலையை அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே ஆத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை
பிப். 15: ஆத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலை கைப்பற்றி அழித்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு ஆழ்வை வட்டார அலுவலர் கூறுகையில், ‘‘தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க சென்னை ஆணையர் அமுதா உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் வழிகாட்டுதலின்படி சுமார் 12 கடைகளில் நடத்திய சோதனையில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி அழித்துள்ளோம்’’ என்றார். சோதனையில் உடன்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் கணேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஏரலில் துணிகரம் கடை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் சிகரெட் திருட்டு
ஏரல், பிப். 14: ஏரலில் ஷாப்பிங் சென்டர் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.ஏரல் அருகே சென்னல்மாநகரைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார். இவர் ஏரல் பஸ் நிலையம் அருகில் கீழக்காட்டு ரோட்டில் தனது வீட்டின் கீழ் பகுதியில் ஷாப்பிங் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்கு கீழே வந்த போது கடையின் பின்பக்கம் உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். கடைக்குள் சென்று பார்த்த போது ரூ.3 லட்சம் பெறுமான சிகரெட் பண்டல்கள் மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முத்துக்
குமார் புகாரின் பேரில் ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ஏரல் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 14 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
ஏரல்,
ஏரல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அனிதா, சுந்தரராஜன் மற்றும் போலீசார் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர், குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தானைச் சேர்ந்த 17 வயது வாலிபர் என்பதும், இவர் பல்வேறு வீடுகளில் புகுந்து நகைகள், பணத்தை திருடியதும் தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
அந்த வாலிபர் கடந்த 22-1-2018 அன்று குரும்பூர் அருகே சுகந்தலையில் லிங்கஜோதியின் (36) வீட்டில் புகுந்து, பீரோவை உடைத்து 7 பவுன் தங்க நகைகளை திருடியதும், பின்னர் கடந்த 28-1-2018 அன்று ஏரல் அருகே மொட்டதாதன்விளையில் விவசாயி முத்துராஜாவின் (52) வீட்டில் புகுந்து, பீரோவை உடைத்து ரூ.11 ஆயிரம் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது.
மேலும் அவர், கடந்த 29-1-2018 அன்று குரும்பூர் அருகே காரவிளையில் செல்வியின் (45) வீட்டில் புகுந்து, பீரோவை திறந்து 7 பவுன் தங்க நகைகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 14 பவுன் தங்க நகைகள், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.11 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாலிபரை தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

ஏரலில் 10-ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து

ஏரலில் செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த டிரைவர், 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்தினார்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பெரியமணரா நாடார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 37), டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
வீட்டுக்கு சென்றவுடன் செல்போனில் ஆபாச படம் பார்க்குமாறு அந்த மாணவரை கருப்பசாமி கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு அந்த மாணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, அந்த மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் மாணவரின் கழுத்து, மார்பு பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் கருப்பசாமிக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த இருவரும் ஏரல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் கொடுத்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018
ஏரல் அருகே குறுகிய பாலத்தால் விபத்து அபாயம்
ஏரலில் இருந்து மங்களகுறிச்சி செல்லும் ரோடு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது இந்த பாலத்தை விரிவு படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் பாலத்தில் ஒரு பஸ் மட்டுமே செல்லும் அளவில் ரோடு மிக குறுகலாக இருப்பதால் இந்த இடத்தில் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விடமுடியவில்லை. மங்களகுறிச்சி, மேல மங்களகுறிச்சி, பெருங்குளம், சிவகளை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏரல் பள்ளிகளில் படித்து வரும் 500க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளும் இந்த வழியாகத்தான் ஏரல் வந்து செல்கின்றனர்.
இந்த ரோட்டின் இருபக்கத்திலும் நெல் மற்றும் வாழை விவசாயம் நடந்து வருவதால் விவசாயிகளும் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம், நெல்லை மற்றும் பண்டாரவிளை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் பஸ்கள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த குறுகிய பாலத்தில் வாகனங்கள் தட்டுதடுமாறியே செல்கின்றன. மேலும், இதில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே திருவழுதிநாடார்விளை பஸ் நிறுத்தம் அருகில் விபத்தை ஏற்படுத்தி வரும் குறுகலான பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு ரோடு விரிவாக்கத்திற்கு தகுந்தாற் போல் பாலத்தை விரிவுப்படுத்தி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளி, 9 பிப்ரவரி, 2018
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி, பிப். 9:வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரிய சகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியை வளர்த்து கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்த உதவும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெற முடியாது. இந்த திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்பெறுவதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்2 மற்றும் பட்டயப்படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். 31.12.2012க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இந்த திட்டத்தில் பயன்பெற எழுத படிக்க தெரிந்து இருந்தால் மட்டும் போதுமானது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு முடிவுற்றிருக்க வேண்டும். பயனாளிகள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. வகுப்பை சார்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இத்தகுதியுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், அலுவலக வேலை நாட்களில் வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் பிப்.23ம் தேதிக்குள் நேரில் வந்து கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 8 பிப்ரவரி, 2018
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணை தாமதத்தை தவிர்க்க புதிய திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாஸ்போர்ட் விசாரணை தாமதத்தை தவிர்க்க நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி,
தமிழகம் முழுவதும் பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, பொதுமக்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்கள் விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த விண்ணப்பங்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். இதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனை தவிர்ப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ‘டேப்லட் போன்’ வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் வீட்டுக்கு சென்று உரிய விசாரணை நடத்தியும், ‘டேப்லட் போனில்’ படம் பிடித்தும், உடனடியாக அறிக்கை ஆன்லைன் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அந்த விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் செயல்பட உள்ளது.
இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 49 போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தலா ஒரு ‘டேப்லட் போன்’ வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமை தாங்கி ‘டேப்லட் போன்’களை போலீசாருக்கு வழங்கினார். இனிமேல், பாஸ்போர்ட் விண்ணப்பம் மீதான விசாரணை அறிக்கையை காலதாமதம் இல்லாமல் அனுப்பி வைக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

ஆதார் பதிவு செய்தால் மட்டுமே விவசாயிகள் உரம் வாங்க முடியும்

தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ நெல் மற்றும் இறவை காய்கறி சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ நெல் மற்றும் இறவை காய்கறி சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகை உரங்களும், தனியார் மற்றும் தொடக்கக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
இந்த உரங்களை விலைக்கு வாங்கும் போது உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனைய எந்திரத்தில், தங்கள் ஆதார் எண் மற்றும் கைரேகைகளை பதிவு செய்தால் மட்டுமே உரம் வாங்க முடியும். கடந்த 1.1.2018 முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கபட்டு உள்ளது.
ஆகையால் விவசாயிகள் அனைவரும் உரம் வாங்கும் போது ஆதார் எண் கொண்டு சென்று கைரேகையை பதிவு செய்து அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு உரங்களை வாங்கிப் பயன்படுத்துமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

ஏரல் அருகே இரு பிரிவினரிடையே மோதல்
ஏரல், பிப். 9: ஏரல் அருகே சிவகளைகுளத்தில் நேற்று மாலை இரு பிரிவை சேர்ந்த வாலிபர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனையறித்த சிவகளை ஊர் இருபிரிவை சேர்ந்த பெரியவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து வைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ், பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம், இமானுவேல், ஜெயசேகரன், சுந்தரராஜன் மற்றும் 50 மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...