ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் திடீரென ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரல் ஆற்றுப்பாலத்தில்
திடீர் பள்ளத்தால் விபத்து அபாயம்
ஏரல், ஜூன் 9:
ஏரல் தாமிரபரணி பழைய ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிய பாலம் அமைக்கும் பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் மிக பழமையான பாலமாகும். மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் போதெல் லாம் பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படும். மேலும் கடந்த 2 வருடங்களுக்கு முன் இந்த பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதன்பின் ஆற்றில் தற் காலிக பாதை அமைக்கப் பட்டு உடைந்த இடத்தில் குழாய்கள் அமைத்து அதன் மீது கான்கீரிட் தளம் அமைத்து போக்குவரத்து துவங்கப்பட்டது.
இந்நிலையில் புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து நபார்டு ஆர்.ஐ.டி.பி.எப் 2011&12 திட்டத்தில் ரூ.16 கோடியே 39 லட்சத்தில் 2012 ஜூன் 28ம் தேதி பாலம் கட்டுவதற்கான வேலை துவங்கப்பட்டது. அப்பொழுது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் 2013 டிச.27ம் தேதிக்குள் வேலை முடிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் பாலம் அமைக்கபட்டு வடபகுதி யில் இணைப்பு சாலை அமைப்பதற்கு வனத்துறை அனுமதி கிடைக்காததினால் 2 வருடங்களாகியும் வேலை முடிக்கபடவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு மேல் வேலையும் நடை பெறாமல் உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் ஆற்றுப்பாலத்தில் ஓட்டை விழுந்தது. அந்த இடத்தை சரியாக சீரமைக்காமல் ஓட்டை விழுந்த இடத்தில் சரள்மணலை தட்டி தற்காலிகமாக ஓட்டை அடைக்கப்பட்டது. தற்போது ஏரல் தாமிரபரணி பழைய ஆற்றுப் பாலத்தில் அதே இடத்தில் மீண்டும் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகிலும் தரைப்பகுதி பள்ளம் விழுந்து இறங்கிய நிலையில் தளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தில் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் படுகுழியில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் நடந்து செல்பவர்கள் இந்த பாலத்தின் பள்ளத்தில் விழுந்து படுகாயமடை கின்றனர்.
மேலும் இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் முற் றிலும் பாலம் அந்த இடத் தில் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பாலத்தின் வேலையும் நடைபெற்ற மாதிரி இல்லை. இதனால் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி பழைய பாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சீரமைத் தும், புதிய பாலத்தின் இணைப்பு சாலை வேலை யை உடன் துவங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பாலப்பணிகள் முடிவது எப்போது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக