புதன், 4 டிசம்பர், 2013

குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் ஏரல் பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு

ஏரல், : தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்கும் ஏரலுக்கு தினசரி வியா பாரம், தொழில் நிமித்தமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து பஸ் மூலம் வந்து செல்கின்றனர். மேலும் 30க்கு மேற்பட்ட கிராம மக்கள் வெளியிடங்களுக்கு சென்றுவர ஏரல் பஸ் நிலையத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்குள்ள பஸ் நிலையம் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. 
பயணிகள் வெயில் அடித்தாலும், மழை பெய் தாலும் வெட்ட வெளியில் நின்றுதான் பஸ் ஏற வேண் டும். பஸ் நிலையத்தில் போடப்பட்ட சிமென்ட் தளமும் உடைந்து பல வருடங்களாகியும் சீரமைக்கப்படாததினால் கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிந்து பயணிகளின் கால்களை குத்தி கிளித்து விடுகின்றன.  இந்த குண்டும் குழியுமான ரோட்டில் மழை தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள ரோடுகள் உயர்வாக இருப்பதால் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுகிற மழை நீர் பஸ் நிலையத்திற்குள் புகுந்து வெளியேற முடியாமல் தேங்கி விடுகிறது. பஸ் நிலையத்தில் உள்ள கழிவு தண் ணீர் வெளியேற எந்தவித வடிகால் வசதி இல்லை. இதன் அருகிலேயே மகளிர் மேல்நிலைப்பள்ளி இருப்பதால் இப்பள்ளிக்கு பஸ்சில் இருந்து இறங்கி செல்லும் மாணவிகள் இந்த சேறும் சகுதியுமாக உள்ள தண் ணீரில் மிதித்து நடந்து சென்று வருகின்றனர். மேலும் மழைத்தண்ணீர் தேங்கியே கிடப்பதால் கொசு உற்பத்தியாகி பலவித நோய்கள் பரவி வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல் பஸ் நிலை யத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநில பயணிகள் நலச்சங்கம் தலைவர் சாந்தகுமார் கூறு கையில்,  ஏரல் பஸ் நிலையத்தில் பேரூந்து வந்து செல்வதைவிட கார், மற்றும் இரு சக்கர வாகனங்கள்தான் பஸ் நிலையத்தின் உள்ளே அதிக அளவு வந்து செல்கின்றன. இதனால் விபத்துக்குள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மழை நீர் வடிய வடிகால் வசதி பஸ் நிலையத்தில் இல்லாத தால் மழைதண்ணீர் உள்ளே தேங்கி துர்நாற்றம் அடிப்பதால் பலவித நோய்கள் ஏற் பட வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் வடிகால் வசதி செய்து, பஸ் நிலைய உட்புற ரோட்டினை வெளியே உள்ள ரோட்டை விட உயர்த்திட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வியாழன், 21 நவம்பர், 2013

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இந்திய கம்யூ. குழு கூட்டம்

ஏரல், : ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இந்திய கம்யூ. குழு கூட்டம் ஏரலில் நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஒன் றிய செயலாளர் வாழைச்செல்வம் முன்னிலை வகித்தார். 
இக்கூட்டத்தில் 2014ம் ஆண்டிற்கான கட்சி உறுப்பினர் சேர்த்தல், தூத்துக்குடி மாநகராட்சிக்கு மருதூர் கீழக்காலில் இருந்து 4வது பைப் குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் திட் டத்தை நிறுத்த வேண்டுவது, தாமிரபரணி ஆற்றில் முக்காணியில் புதிய அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வலி யுறுத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய குழு பொறுப்பாளர் பரமசிவம், தாலுகா குழு உறுப்பினர் கோபால் மற்றும் செல்லத்துரை, தங்கராஜ், நயினார், அனந்தப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளை புதுப்பிக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளை புதுப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காலநீட்டிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுகளில் எந்த பொருளும் வேண்டாம் என்பவர்களுக்கு வெள்ளை நிற ரேஷன்கார்டும், இருப்பிட முகவரி ஆதாரத்துக்காக தட்கல் முறையில் மஞ்சள் நிற ரேஷன்கார்டும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மாட்டார்கள் என்பதால், தங்கள் கார்டுகளை புதுப்பிக்க ரேஷன் கடைகளுக்கு வருவது இல்லை. இந்த நிலையில் அவர்களது ரேஷன்கார்டுகளை காலநீட்டிப்பு செய்து வழங்குமாறு கோரிக்கைகள் வந்தன.
இதன் அடிப்படையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ரேஷன்கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன்கார்டுகளை இணையதளம் மூலமாக 2013, 2014–ம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம். அதன்பிறகு காலநீட்டிப்பு பதிவு சீட்டு கம்ப்யூட்டரில் அச்சடித்து அளிக்கப்படும்.
சிறப்பு கூட்டம்
இதனை தங்கள் ரேஷன்கார்டுகளில் ஒட்டிக் கொள்ள வேண்டும். இத்தகைய கால நீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள “என்“ ரேஷன்கார்டுகள், புழக்கத்தில் உள்ள ரேஷன்கார்டாக கருதப்படும்.
இணைதளம் வசதியை பயன்படுத்த இயலாத ரேஷன்கார்டுதாரர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் “என்“ கார்டு புதுப்பிக்கும் சிறப்பு குறைதீர்வு கூட்டம் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வருகிற 2–ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வட்ட வழங்கல் அலுவலரை சந்தித்து ரேஷன்கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வசதிகள் 31–01–2014 வரை செயல்பாட்டில் இருக்கும். இதனை ரேஷன்கார்டுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்துள்ளார்

காங். உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

ஏரல், : ஏரல் பகுதிகளில் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது. ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்து கோட்டைக்காடு கிராமத்திற்கான காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டையினை ஜெயபாலிடம் வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் கந்தசாமி ஏரல் பகுதி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அய்யம்பெருமாள், சார்லின், பிஸ்மி, சுல்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 20 நவம்பர், 2013

மழையால் ஏரல்-குரங்கணி ரோடு சேதம்

ஆழ்வார்திருநகரி: ரலில் இருந்து குரங்கணி வழியாக திருநெல்வேலிக்கு செல்லும் சாலை மழையால் அரிக்கப்பட்டு அச்சப்படும் வகையில் உள்ளது.ஏரலில் இருந்து குரங்கணி, வழியாக திருநெல்வேலி மற்றும் நாசரேத் செல்லும் சாலை அதிகமாக போக்குவரத்து மிகுந்தது. இந்த சாலை ஆற்றங்கரை வழியாக குரங்கணி வரை இருபுறமும் மழையால் அரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தார்ரோடானது மேலே கவசம் போல் உள்ளது. இதன் மேல் வாகனம் சென்றால் இடிந்து விழும் அபாயமாக உள்ளது. இது கார்த்திகை மாதம் என்பதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வாகனங்கள் இந்த பாதையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த ரோடுகளில் செல்ல முடியாது. அதனால் பொதுமக்கள் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தின் மேல் குண்டுகற்களை வைத்து எச்சரிக்கை படுத்தி உள்ளனர். இது நெடுஞ்சாலை துறையினரால் சரி செய்யப்படுமா?

ஏரல் - குரும்பூர் ரோடு மீண்டும் சேதம் பொதுமக்கள் அதிருப்தி

ஏரல்: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு பின் சீரமைக்கப்பட்ட ஏரல்-குரும்பூர் ரோடு சில வாரங்களிலே மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஏரலில் இருந்து குரும்பூர் வரை செல்லும் ரோடு முக்கியமான ரோடாகும். தினமும் இவ்வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த ரோடு குறித்து பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து சீரமைப்பு பணிகள் தொடங்கியது. கோடை காலம், வறண்ட வானிலை உள்ள காலத்தையெல்லாம் விட்டு விட்டு மழைகாலம் தொடங்கிய நேரத்தில் இந்த ரோட்டின் பணிகள் தொடங்கப்பட்டன. சரியான முறையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் அவசரம் அவசரமாக தரமற்ற முறையில் இந்த ரோடு வேலை நடந்து வந்தது. பணிகள் இன்றும் முடியாத நிலையில் புதிதாக தார் ரோடு போட்ட இடங்களில் சில வாரங்களிலேயே தார்
ரோடு பெயர்ந்துவிட்டது. மேலும்
வேலையும் பாதியிலே நிற்பதால் ஓரங்களில் கற்கள் பெயர்ந்து டூவீலர்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனையோ ஆண்டுகளாக மோசமான நிலையில் கிடந்த ரோட்டை எவ்வளவு தரமான ரோடாக சீரமைக்க வேண்டும் என்பதை விட்டு விட்டு மழைகாலம் தொடங்கிய நேரத்தில் அவசர கோலத்தில் ரோட்டை சீரழித்தது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மழை காலம் தொடங்கிய பின்பு ஏன் இந்த ரோட்டின் வேலையை தொடங்கினர் என்பது தான் கேள்வியாக உள்ளது. இது பொதுமக்களிடைய கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை எடுத்து ஏரல்-குரும்பூர் ரோட்டை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

புதன், 16 அக்டோபர், 2013

காயல்பட்டினம்,ஆறுமுகநேரி, கடற்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் கடற்கரையில் நடந்த பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகை
காயல்பட்டினம் கடற்கரையில் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம், அல்ஜாமி உல் அஸ்ஹர் ஜூம்மா பள்ளிவாசல் சார்பில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நேற்று காலையில் நடந்தது. ஜூம்மா பள்ளி இமாம் நைனா முகம்மது தொழுகையை நடத்தினார். ஜூம்மா பள்ளி கத்தீபு அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பேருரை நிகழ்த்தினார்.
தொழுகை
ஜூம்மா பள்ளி தலைவர் அபுல் ஹசன் கலாமி, செயலாளர் ஏ.எஸ்.சி.நவாஸ், பொருளாளர் மக்கி ஹாஜி, துணைத் தலைவர்கள் இப்னு சவூது, மொகமது அபுபக்கர், அமானுல்லா ஹாஜி, துணைச் செயலாளர்கள் புஹாரி லெப்பை தம்பி, துணை பொருளாளர் ஹசன், முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர் அப்துல் வாஹீத்,
த.மு.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் முர்ஷீத், வர்த்தக அணி செயலாளர் ரபீக், நகர தலைவர் ஜாகீர் உசைன், செயலாளர் பிர்தோஷ், அன்னை கதீஜா மதரசா நிர்வாகி செய்யது முகம்மது உள்பட திரளானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

ஏரலில் பரிதாபம்: பாய்லரில் சிக்கி வாலிபர் சாவு


அம்பை புதுக்குடியை சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 25). இவர் ஏரலில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முருகேசன் மற்றும் ஆலங்குளம் மருதம்புத்தூரை சேர்ந்த ஜீவா (21)ஆகியோர் பாய்லரை நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தனர். 
அப்போது அங்கு வேலை பார்த்து வரும் ஆத்தூரை சேர்ந்த விஜயகோபால், ஜெயபிரகாஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக பாய்லருக்கான சுவீட்ச்சை ஆன் செய்தனராம். இதில் முருகேசன், ஜீவா ஆகியோர் பாய்லரில் சிக்கி காயமடைந்தனர். பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
இது குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் விஜயகோபால்,ஜெயபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுதொண்டநல்லூர்

ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்து மாலை அம்மன் கோயில் கொடை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது.
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் புகழ் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இரண்டாம் செவ்வாய் கிழமை முத்துமாலை அம்மனுக்கு கொடை விழா நடக் கிறது. இந்த ஆண்டு கொடைவிழா வரும் 27ம் தேதி (செவ்வாய்கிழமை) நடக் கிறது. இதை முன்னிட்டு 25ம் தேதி முதல் கொடை விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் மஞ்சள் காப்பு தரிசனம், 9 மணிக்கு வில்லிசை நடக்கிறது. 26ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் மாக்காப்பு தரிசனம், வில்லிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27ம் தேதி கொடை விழா நடக்கிறது.
அன்று மதியம் 12 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு தரிசனம், சிறப்பு பூஜை, அன்னதானம், இரவு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், கயிறு சுற்றி ஆடுதல், இரவு 12 மணிக்கு புஷ்ப அலங்கார தரிசனம், சிறப்பு பூஜையை தொடர்ந்து வாணம், மத்தாப்பு வேடிக்கை, சிங்காரி மேளதாளங்களுடன் கற்பக பொன் சப்பரத்தில் அம்மன் நகர் உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி உலா சென்ற அம்மன் கோயில் வந்து அமர்தல், காலை 9 மணிக்கு பொங்கலிடுதல், மதியம் சிறப்பு பூஜையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திரைப்பட மெல்லிசை மிமிக்ரி, நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கிறது. கொடை

திங்கள், 6 மே, 2013

õEè˜ Fùˆ¬î º¡Q†´


கோவில்பட்டி, மே 6 :
வணி கர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் ஏரல் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வணிகர் தினத்தை யொட்டி சென்னையில் அகில இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை யில் நடந்த இம்மாநாட்டில் உணவு தர நிர்ணய சட் டத்தை ரத்து செய்ய வேண்டும். அன்னிய நேரடி முதலீடு 51 சதவீதத்தை திரும்ப பெற வேண்டும்.
நுழைவு வரியை அமல்படுத்தக்கூடாது. ஓட்டல் மற்றும் அனைத்து கடைகளுக்கும் 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தூத்துக் குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பன்னீர்செல்வம், செய லாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான வணிகர்கள் நேற்று முன்தினம் (4ஆம் தேதி) வாகனங்களில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
மாநாட்டையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிகளான கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மார்க்கெட், ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள், ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகள், நகைகடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஏரல்:
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று மே 5ஆம் தேதி முழு கடையடைப்பு நடந்தது. பெரிய கடைகள் முதல் சிறிய டீ கடை வரை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரல் மெயின்பஜார் பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. மேலும் ஒரு சில இடங்களில் தற்காலிக டீ கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவில்பட்டி, ஏரலில் கடையடைப்பு
வணிகர் தினத்தை முன்னிட்டு
வணிகர் தினத்தை முன்னிட்டு ஏரலில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திங்கள், 22 ஏப்ரல், 2013

சூளவாய்க்காலில் புதிய ரேஷன் கடை


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சூளவாய்க்காலில் புதிய ரேஷன் கடையை எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி எம்.பி. எஸ்.ஆர். ஜெயதுரை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏரல் அருகேயுள்ள சூளவாய்க்காலில் புதிதாக ரேஷன் கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
இப்பணிகள் முடிவடைந்த நிலையில், ரேஷன் கடையை திறந்து வைத்த ஜெயதுரை எம்.பி. பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கி கடையின் செயல்பாட்டை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அப்துல் ரஹீம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக செயலர் மெய்யழகன், ஏரல் பேரூராட்சி துணைத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் 8 மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.


ஏரல், ஏப். 22:
ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் 8 மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஏரல் தென்பகுதி கிராமங்களை ஏரலுடன் இணைப்பது ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம். முதலில் தாம்போதியாக இருந்த இப்பாலத்தை குழாய்கள் பதித்து தரை மட்ட பாலமாக மாற்றி அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட் டது.
பாலம் அடிக்கடி பழுது பட்டு வந்ததாலும், மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் பாலம் தண்ணீரில் மூழ்குவதாலும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே, புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு நடவடிக்கை எடுத்து ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட நபார்டு ஆர்.ஐ.டி. பி.எப். திட்டத்தில் ரூ.16 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டது.
ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் கடந்த வருடம் ஜூலை மாதம் அடிக்கல் நாட்டி பாலம் கட்டும் வேலையை தொடங்கி வைத்தார்.
புதிய உயர்மட்ட பாலம் ஏற் கனவே இருக்கும் பழைய பாலத்தின் அருகே மேல் பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் 16 இடங்களில் பில்லர்கள் அமைக்கப்பட்டு, தற்போது ஆற் றின் தென்கரை ஓரத்தில் இருந்து தூண்களுக்கு மேல் தரைவழி பாதையில் 5 தூண்கள் வரை அமைக்கபட்டுள்ளது.
மேலும் இதற்கு அடுத்தாற்போல் 2 தூண்கள் நீளத்திற்கு தளம் அமைக்க கான்கிரீட் போட கம்பிகள் கட்டும் பணி நடந்து வரு கிறது. பாலம் வேலைகள் வரும் டிசம்பர் 27ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் வீரமணி கூறுகையில், �ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பால வேலைகளை இந்த வருடத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறக்கப்படும். பாலத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு மேல் தளம் வேலைகள் நடந்து வருகிறது. ஆற்றில் ஓடை தண்ணீர் செல்லக்கூடிய இடத்தில் மட்டும் தூண்கள் அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
தற்போது அந்த இடங்களிலும் தூண்கள் அமைப்பதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் பால வேலை முடிக்கப்படும்� என்றார்.







வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் தாமிரபரணியில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு சாக்கடையாக மாறும் குடிநீர்

ஏரல், : ஏரல் பகுதிகளில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் தாமிரபரணி நதியில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக மாறி வருகிறது. இவற்றை அகற்றி தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் வறட்சி நிலவுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் வறண்டு போய் கிடக்கின்றன. குடிநீருக்கு ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தாமிரபரணி ஆற்றையே நம்பியுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல்புறம் இருந்து பழைய காயலில் ஆறு கடலில் கலக்கும் வரை உள்ள ஆற்றுப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கும் வாழவல்லான் உள்பட பகுதிகளில் இருந்து குடிநீர் வாரியம் மூலமும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கும் குடிதண்ணீர் வழங்குவதற்காக ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. 
இந்த உறை கிணறுகளை சுற்றி சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.  இந்த உடை மரத்தின் வேர்கள் உறை கிணறுகளை துளையிட்டு தண்ணீரை மாசுபடுத்துகிறது. 
மேலும், இப்பகுதிகளில் அமலை செடிகளும் அதிகளவில் வளர்ந்து ஆறு முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால், தண்ணீர் ஓடுவதற்கு வழியின்றி, ஆங்காங்கே தேங்கி, சாக்கடையாக மாறி வருகிறது. இந்த தண்ணீர், உறைகிணறுகளில் புகுந்து குடிநீரும் மாசுபடுகிறது.
குறிப்பாக, ஏரல் தாமிரபரணி ஆற்றுக்கு கீழ்புறம் தண்ணீரே தெரியாத அளவுக்கு அமலை செடிகள் ஆக்கிரமித்து நதியை மூடியுள்ளன. இப்பகுதியில் குளிக்கக்கூட முடிவதில்லை. ஒரு சிலர் அமலை செடிகளை அப்புறப்படுத்திவிட்டு குளித்தாலும் அவர்களுக்கும் தோல் அரிப்பு ஏற்படுகிறது. 
மேலும் அமலை செடிகள் அடர்ந்து காணப்படுவதால் விஷ ஜந்துக்களும் இதற்குள் குடிபுகுந்துள்ளன. தண்ணீரும் சாக்கடை கலரில் கருப்பாக மாறி ஒருவித தூர்நாற்றம் அடிக்க தொடங்கியுள்ளது. கோடை காலம் என்பதால் ஆற்றில் தண்ணீரும் வற்றத் தொடங்கியுள்ளது. இதனால், தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செய லாளர் ரவிசங்கர் கூறுகை யில், ‘ஏரல் தாமிரபரணி ஆறு அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் சாக்கடை தண்ணீராக மாறி வருகிறது. மக்களுக்கு நோய்கள் பரவும் முன் இந்த அமலை செடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றார்.

வியாழன், 4 ஏப்ரல், 2013

ஆதிச்சநல்லூர்




உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

http://www.new.dli.ernet.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b66_263.pdf

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.

இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

http://archaeologyindia.com/adichanallur.asp

புதன், 27 மார்ச், 2013

ஏரல் முஸ்லிம் வணிகர் நல சங்கம் சார்பில் பரிசுள் வழங்கும் விழா

ஏரல், : ஏரல் தூயதெரசாள் நடுநிலைப்பள்ளியில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏரல் முஸ்லிம் வணிகர் நல சங்கம் சார்பில் பரிசுள் வழங்கும் விழா நடந்தது. 
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பீட்டர் தலைமை வகித்தார். செட்டிவிளை பங்குதந்தை செல்வஜார்ஜ், சூழவாயக்கால் முன்னாள் பஞ்சாயத்து  தலைவர் சாதிக்குல் அமீன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் கிறிஸ்டோபர் வரவேற்றார்.
 திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மரிய விக்டோரியா ராணி, ரம்யா, பிரதீப் ஆகியோருக்கு முஸ்லிம் வணிகர் நல சங்க தலைவர் பாக்கர் அலி, நிஜாம்தீன், பிஸ்மி சுல்தான் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். 
விழாவில் ஜாஹிர், ஆவுல் பாதுஷா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 22 மார்ச், 2013

சூழவாய்க்கால் மத்திய அரசிலிருந்து விலகல் திமுகவினர் கொண்டாட்டம்


மத்திய அரசிலிருந்து விலகல் திமுகவினர் கொண்டாட்டம்

பதிவு செய்த நேரம்:2013-03-22 10:54:41
37 KILLED AS GOA- MUMBAI BUS FALLS ...
MORE VIDEOS
ஏரல், : காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதை ஆதரித்து திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
காங்கிரஸ் கூட்டணி மற்றும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறியதை அடுத்து ஏரல் அருகேயுள்ள சூழவாய்க்காலில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் தலைமை வகித்தார்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல் அமீன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் முத்தலிபு, மன்சூராபேகம் மற்றும் பசீர், பாசித், பாயிஸ், ஜாசிம், கம்சா, சம்சுல், லூக்ஜான், சேகர், பரமசிவம், சின்னத்துரை, கருப்பசாமி, ஹைசர், சாலி, சபீக், வர்க்கீஸ், பண்டாரம், ஆண்டித்தேவர், அலிகான் ஹாமீது, ஜாகீர், ரசீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 13 மார்ச், 2013

அகஸ்தியர் அருவி - பொதிகைமலை, பாபநாசம், திருநெல்வேலி


அகஸ்தியர் அருவி…
நெல்லை அம்பாசமுத்திரம் சென்றபோது பாபநாசம் அருகே இருக்கும் அகஸ்தியர் அருவியில் எப்பொழுதும் தண்ணீர் வரத்து இருக்குமாம் என்று பாசக்கார பயபுள்ளங்க சொல்லவும் அங்கே செல்ல ஆசையாய் மனம் துடித்தது.சரி...போய் ஒரு விசிட் விட்டுட்டு வரலாம் என்று கிளம்பினோம்…
பாபநாசம் என்கிற ஊர் வர...... வழியிலேயே ஒரு சிவன் கோவில் நம்மை வரவேற்றது.கோவில் கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.அன்று விசேச நாள் போல…..ஏகப்பட்ட பக்தர்களின் கூட்டம்..தத்தம் பாவத்தை போக்க குவிந்து இருந்தனர்…
  
அந்த கோவிலை தாண்டி செல்லவும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாய்.....இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் அடக்க ஒடுக்கமாய் கிராமத்து அம்மணிகள் கூட்டம்.....க…க…க..க.....கல்லூரிச்சாலை ஏதோ ஒரு தமிழ்க்கல்லூரி போல….அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டுவிட்டு பயணித்தோம்…..மலைப்பாதை வரவேற்கிறது…..அருகிலேயே செக்போஸ்ட் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்………நிறைய எச்சரிக்கை போர்டுகள்……நம்மை மிரட்டியபடி புலிகளின் படங்கள்….
மலைப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தவுடன் இருபுறமும் பசுமை அன்னை தன் இயற்கையை போர்த்தியிருக்கிறாள்…மேலே இருந்து பார்க்கும் போது அருவி அழகாய் வழிந்து ஓடுவது மிக ரம்மியமாக இருக்கிறது..மலைப்பாதையில் இருந்து இடது பக்கம் பிரியும் ரோட்டில் இறங்க அருவிக்கு செல்லும் இடத்தினை அடைந்தோம்.
 
இயற்கை அன்னையின் மடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நீர்மின்தொகுப்பு இருக்கிறது. அதைத்தாண்டி சென்று கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினோம்…...ஒற்றை ஆலமரம்…அதில் ஏகப்பட்ட நம் முன்னோர்கள்…அதிலும் சிங்கவால் குரங்குகள் அதிகம்…
அவைகளை ரசித்தபடியே அருவிக்கு சென்றோம்..பாறை முகடுகளில் தண்ணீர் வழிந்து கொண்டுருக்கிறது.பெண்களுக்கு என்று தனியாக உடைமாற்றும் வசதிகள் இருக்கின்றன.
 
 
 
அருவியில் நீர்வரத்து எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கிறது.வருடம் முழுவதும் நீர் வரக்கூடிய ஒரே அருவி இந்த அகஸ்தியர் அருவி…கொஞ்ச நேரம் அருவியின் அழகை ரசித்துவிட்டு கை நனைக்க அருவியை தொட்டபோது செம குளிர்ச்சி…..சில்லென்ற சாரலில் நனைந்தபடி அருவியின் அழகைப் பருகினோம்….சூழ்நிலை மிக ரம்மியமாக இருக்கிறது…ஆங்காங்கே…எண்ணை தேய்த்து குளித்தபடி ஆண்களும் பெண்களும்…..எலே…….இங்க பாருல…..என்கிற நெல்லைத் தமிழ் கேட்க சுவையாய் இருக்கிறது…
 
ஏற்கனவே குளித்துவிட்டு வந்தபடியால் அகஸ்தியர் அருவியில் குளிக்கவில்லை…கைகால் முகம் அலம்பிவிட்டு மேலேறினோம்.
அருவிக்கு அருகிலேயே காவல் தெய்வமாய் ஒரு விநாயகப்பெருமான்....அவருக்கு ஒரு வருகைப்பதிவை உறுதி செய்துவிட்டு கிளம்பினோம்...
அங்கே இருக்கிற பாறை குழிகளில் மீன்களின் ராஜ்ஜியம் இருக்கோ இல்லையோ ஆனால் தவளையின் தலைப்பிரட்டைகள் நிறைய இருக்கிறது….
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் முன் வலதுபக்கம் ஒரு செங்குத்தான படிகள் இருக்கின்றன…அது கல்யாண தீர்த்தம் எனப்படும் இடமாகும்…(அதை அடுத்தபதிவில் பார்க்கலாம்...)
நல்ல ஒரு ரம்மியமான இடம்......சுற்றிலும் பசுமை .பசுமை…தாமிரபரணி தண்ணீர் உருவாகும் அகத்தியமலை அங்கிருந்து வந்து விழும் அகஸ்தியர் அருவி என அழகாய் இருக்கிறது…
நல்ல அமைதியும் இறைவன் அருளும் பெற சிறந்த இடம்...

ஏரல் அருகேயுள்ள சூழவாய்க்காலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சூழவாய்க்காலில் திமுக கொடியேற்றப்பட்டது.
சூழவாய்க்காலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஏரல், மார்ச் 13:
ஏரல் அருகேயுள்ள சூழவாய்க்காலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. பஞ்.தலைவர் அனஸ் தலைமை வகித்தார். முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல்ரஹீம், முன்னாள் பஞ்.தலைவர் சாதிக்குல் அமீன் முன்னிலை வகித்தனர். பேமஸ் சாகுல்ஹமீது திமுக கொடியேற்றினார். கொடிகம்பத்திற்கு மறைந்த ரவூப்தீன் பெயர் சூட்டப்பட்ட பலகையை அலிகான் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்.உறுப்பினர்கள் முத்தலிபு, மன்சூரா மற்றும் சேக்தாவூத் நெப்போலியன், கலீல், சம்சுல்ஆலம், ஜாஹிர், மர்சூக், ஐயுபு, ஜாசிம், ஜாவித், சுந்தரம், செந்தூர்பாண்டி பங்கேற்றனர்.

சனி, 23 பிப்ரவரி, 2013

ஏரலில் குண்டும் குழியுமான சாலை


ஏரல், பிப்.23:
ஏரலில் குண்டும், குழியுமாக உள்ள மெயின் சாலையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. தொழில் சம்மந்தமாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி ஏரல் வந்து செல்கின்றனர். மேலும் ஏரலில் புகழ்பெற்ற சேர்மன் அருணாசல சுவாமி கோயில், அருகே ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாடசுவாமி கோயில், குரங் கணி முத்துமாலையம்மன் கோயில் இருப்பதால் ஏரல் வழியாக பக்தர்கள் அதிக அளவு சென்றுவருகின்றனர். இதனால் ஏரலில் எப் பொதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இங்கு உள்ள முக்கிய சாலையான ஏரல் சினிமா தியேட்டர் அருகே இருந்து பஸ்நிலையம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய தார்ரோடு அமைக்க வேண் டும் என ஏரல் நகர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீரமைக்க வலியுறுத்தல்
ஏரல் சினிமா தியேட்டரிலிருந்து பஸ்நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...