சனி, 28 ஜூன், 2014

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சிறுத்தொண்டநல்லூர்&பெருங்குளம் சாலை

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சிறுத்தொண்டநல்லூர்&பெருங்குளம் சாலை
ஏரல், ஜூன் 28:
ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் வழியாக பெருங்குளம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஏரலில் இருந்து பெருங்குளத்திற்கு திருவழுதிநாடார்விளை, மங்கலகுறிச்சி வழியாக மெயின்ரோட்டில் பஸ் போக்குவரத்து உள் ளது. ஆனால் ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல் லூர் வழியாக பெருங்குளத்திற்கு செல்லும் ரோட்டில் பஸ் போக்குவரத்து இல்லாவிட்டாலும் இந்த பாதையில் பயண நேரம் குறைவு என்பதால் மக்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வழியாக இருசக்கர வாகனம் அதிக அளவு சென்று வருகின்றன. ஆனால் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோச மான நிலையில் உள்ளது.
நட்டாத்தி, சின்னநட்டாத்தி, கண்ணாண்டி விளை, வண்ணியனூர், மணலூர் உட்பட கிராமங்களில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் மற்றும் ஏரல் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இவ்வழியாக சென்று வருவதால் அவதிப்பட்டு வருகின்றனர். குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு படுகாயமடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியு மான சிறுத்தொண்டநல் லூர்&பெருங்குளம் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பாதிப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...