வியாழன், 26 ஏப்ரல், 2018

காஷ்மீரில் சிறுமி படுகொலை மனிதநேய ஜனநாயக கட்சி ஆத்தூரில் ஆர்ப்பாட்டம்




ஏப். 27: காஷ்மீரில் சிறுமி ஆஷிபா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆத்தூர்கிளை சார்பில் நடந்த இந்த கண்டன ஆரப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் அன்வர்பாஷா தலைமை வகித்தார்.  தலைமைச்  செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் முகமது நஜீப்  சாதிக் பாஷா, பொருளாளர் நவாஸ், இளைஞரணிச் செயலாளர் முகமது ராபிக், ராஸிக்  முஸம்மில், ஒன்றியச் செயலாளர்கள் ஆழ்வை ராசுகுட்டி, கருங்குளம்  முகமதுஅலி, திருச்செந்தூர் மீராசாகிபு, கிளை அமைப்பாளர் ராபீக்,  காயல்பட்டினம் நகரச் செயலாளர் மகதும், பொருளாளர் மீரான்  முன்னிலை  வகித்தனர்.     

ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்றோர், சிறுமி ஆஷிபாவின் படுகொலைக்கு  நீதி விசாரணை நடத்தக்கோரியும்,  குற்றவாளிகளை தூக்கிலிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில துணைச் செயலாளர்  செய்யது அலி, மாவட்டச் செயலாளர் ஜாஹீர் உசேன், ஆத்தூர் எஸ்.டி.பி.ஐ.  செயலாளர் மஜீத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆத்தூர் கிளை பொருளாளர்  இப்ராஹிம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆத்தூர் கிளை நிர்வாகிகளான அல்தாப், சித்திக், நவாஸ், ரியாஸ், அரபாத், ஹாரிஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

திங்கள், 23 ஏப்ரல், 2018

ஆத்தூர், ஆறுமுகநேரி குரும்பூர் பகுதிகளில் நாளை மின்தடை



 திருச்செந்தூர் கோட்டத்திற்குட்ட  ஆறுமுகநேரி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என திருச்செந்தூர் மின்வாரிய விநியோக பொறியாளர் பிரபாகர் கூறியுள்ளார். திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் (24ம்தேதி) நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் அன்றைய தினம் புன்னகாயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டிணம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தலைவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய ஊர்களுக்கு காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என கூறியுள்ளார்.

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா



ஏரல், ஏப்.23: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து 6ம் கால யாக பூஜை மற்றும் பிம்பசுத்தி, நாடி ஸ்ந்தானம், துர்கா மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. 5.30 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்படுதல், தொடர்ந்து விமான கோபுர கும்பாபிஷேகம் மற்றும் முத்துமாலை அம்மன், சந்தனமாரி அம்மன், தட்டப்பாறை அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேம் நடந்தது. 

தொடர்ந்து தீபாராதனை, மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் மஹேஸ்வர பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு 11 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி நகர் வலம் வருதல் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு காலை மற்றும் இரவு சிற்றுண்டியும், மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை முத்துமாலை அம்மன் கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

வியாழன், 19 ஏப்ரல், 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டில் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் அறிய ஏற்பாடு கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டில் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் அறிய ஏற்பாடு கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டில் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பாட்டில் குடிநீரின் தரத்தை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;–

தண்ணீரின் தரம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது.

https:/safewataerfssai.gov.in/cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் திஷிஷிகிமி எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் ஒரு வருட பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ. தரம், உணவுப் பாதுகாப்பு துறையின் FSSAI எண், காலம் (வேலிடிட்டி) போன்றவற்றை பொதுமக்கள் தெரிந்து கொண்டு குடிநீரின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் வாங்கும் ஒவ்வொரு குடிநீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும், அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ. எண் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை திஷிஷிகிமி எண் இரண்டையும் பதிவிடப்பட்டு இருக்கும். அதில் ஏதேனும் ஒரு எண்ணை இந்த இணையதளத்தை பயன்படுத்தி அதில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால், அந்த நிறுவனத்தின் ஐ.எஸ்.ஐ. தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதையும், அந்த நிறுவனத்தின் தண்ணீர் ஆய்வக அறிக்கையையும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

புகார்கள் 

இது குறித்து ஏதேனும் புகார்கள் இருந்தாலோ, உணவு தொடர்பான புகார்கள் இருந்தாலோ 94440– 42322 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் அதன் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில் ஐ.எஸ்.ஐ. மற்றும் திஷிஷிகிமி எண் இல்லை என்றால் அது போலியானது. அது தொடர்பாக உடனே புகார்களை தெரியப்படுத்தலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

பெருங்குளத்திலும் தென்திருப்பேரையிலும் அம்மா திட்ட முகாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம் 

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மேலத்தட்டப்பாறையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்திலும், திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரையிலும், சாத்தான்குளம் தாலுகா பிடானேரியிலும், கோவில்பட்டி தாலுகா இடைசெவல் பகுதி–2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா புதூர் குளக்கட்டாக்குறிச்சியிலும், எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு மற்றும் தி.சண்முகபுரம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா சில்லாங்குளத்திலும், கயத்தாறு தாலுகா செட்டிகுறிச்சியிலும் நடக்கிறது.

உடனடி தீர்வு 

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை


தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் தொடங்க நடவடிக்கை
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு தனியார் விமான சேவை ஜூன் மாதம் முதல் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையம் 

தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

அதே நேரத்தில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விரிவாக்கம் பணிகள் நடைபெற உள்ளன. அதே நேரத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்படுகிறது.

புதிய விமான சேவை 

இந்த விமான நிலையத்தில் இருந்து தற்போது தூத்துக்குடி–சென்னை இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிதாக மேலும் ஒரு தனியார் விமான நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அனைத்து ஆய்வு பணிகளும் நிறைவடைந்து உள்ள நிலையில், ஜூன் மாதம் முதல் அந்த தனியார் நிறுவனம் விமானத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விமானம் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி–சென்னை இடையே தினமும் 4 விமானங்கள் இயக்குவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக அமைதி வேண்டி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை


உலக அமைதி வேண்டி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை
காயல்பட்டினத்தில் நேற்று உலக அமைதி வேண்டி முஸ்லிம்கள் நடத்திய சிறப்பு பிரார்த்தனையில்(அபூர்வ துஆ) திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி, 

காயல்பட்டினத்தில் நேற்று உலக அமைதி வேண்டி முஸ்லிம்கள் நடத்திய சிறப்பு பிரார்த்தனையில்(அபூர்வ துஆ) திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை 

காயல்பட்டினம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற மஜ்லிஸீல் புகாரிஷ் ‌ஷரீபு சபையின் 91–வது ஆண்டு விழா கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக காலையில் உலக அமைதி வேண்டியும், நல்ல மழை வேண்டியும், அனைத்து மக்களும் வளமுடன் வாழ வேண்டியும், சிறப்பு பிரார்த்தனை(அபூர்வ துஆ) நடந்தது.

காயல்பட்டினம் ஹாமிதிய்யா மதரசா சபை பேராசிரியர் காஜா முகைதீன் ஆலிம், கத்முல் புகாரிஷ் ‌ஷரீபு எனும் ஏற்றமிகு பிரார்த்தனையை தமிழ் மொழிபெயர்ப்புடன் ஓதி மஜ்லிஸை நிறைவு செய்தார்.

எம்.எல்.ஏ.க்கள் 

நிகழ்ச்சியில் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வாவு வஜீஹா கல்லூரி செயலாளர் முஹ்தஸிம், கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க தலைவர் காயல் இளவரசு,

அ.தி.மு.க. நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் காயல் மவுலானா, தி.மு.க. நகர பொறுப்பாளர் முத்து முகமது, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் ஆசி 

பேராசிரியர் காஜா முகைதீன் ஆலிம் பிரார்த்தனையை முடித்தவுடன், அவரிடம் ஏராளமான முஸ்லிம்கள் ஆசி பெற்றனர். பின்னர் புகாரிஷ் ‌ஷரீபு சபையினர் இஸ்லாமிய பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக காஜா முகைதீன் ஆலிமை அவரது இல்லத்துக்கு அழைத்து சென்றனர். மாலையில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பந்தல் வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று, நேர்ச்சை வினியோகம் 

இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு நேர்ச்சை உணவு வினியோகம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை மஜ்லிஸீல் புகாரிஷ் ‌ஷரீபு சபை மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

வியாழன், 5 ஏப்ரல், 2018

,ஆத்தூர், பழையகாயல், ஆறுமுகநேரி,காயல்பட்டினம்,ஸ்ரீவைகுண்டம்,ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூரில் முழு கடையடைப்பு

யடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு, சாலை மறியல் நடந்தது.
ஆறுமுகநேரி, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, ஆத்தூர், பழையகாயல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆத்தூரை அடுத்த முக்காணி ரவுண்டானாவில் தி.மு.க. முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் காளிதாஸ் பண்ணையார், ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சுயம்புலிங்கம், பாலமுருகன், நகர செயலாளர்கள் பார்த்தீபன் உள்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 166 பேரை ஆத்தூர் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆத்தூரில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியம் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 18 பேரை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர். காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. பிரமுகர் முத்து முகமது தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினர் 92 பேரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.

உடன்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. உடன்குடி மெயின் பஜார் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறி யலில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசிங், நகர செயலாளர் ஜான் பாஸ்கர், வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப், ம.தி.மு.க. நகர செயலாளர் அந்தோணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 95 பேரை குலசேகரன்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் பெருமாள், வக்கீல் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 39 பேரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவைகுண்டத்தில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பார்த்தீபன், நகர செயலாளர் முத்துராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 73 பேரை ஆழ்வார்திருநகரி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

குரும்பூர் மெயின் ரோட்டில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் ராமஜெயம் (தென்திருப்பேரை) உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 48 பேரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேலாயுதபெருமாள், சின்னமாரிமுத்து, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நகர செயலாளர்கள் வேலுச்சாமி, தவசி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் வசந்தம் ஜெயகுமார், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன், மாவட்ட காங்கிரஸ் கலை இலக்கிய பிரிவு தலைவர் பெத்துராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 123 பேரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், நகர செயலாளர் பாரதி கணேசன், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 38 பேரை எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.

ஆறுமுகநேரி: ஆத்தூர், தெற்கு ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு

மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடையடைப்பு





4/6/2018 1:59:50 AM






தூத்துக்குடி, ஏப். 6: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் 5ம்தேதி முழு அடைப்பு  போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.
ஏரல்: சாயர்புரத்தில் வியாபாரிகள் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாயர்புரம் மெயின்பஜார் மற்றும் மீன் கடை பஜார் பகுதி ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. பஸ்கள் ஓரளவு ஓடினாலும் அதில் மக்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது. செய்துங்கநல்லூர்:செய்துங்கநல்லூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வியாபாரிகள்  கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஓட்டப்பிடாரம் :ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலையில் அனைத்து கடைகளும் புதியம்புத்தூரில் சுமார் 80 சதவீத கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆறுமுகநேரி: ஆத்தூர், தெற்கு ஆத்தூர், முக்காணி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
வைகுண்டம்: வைகுண்டத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுண்ட பாண்டியன் தலைமையிலான திமுகவினர் துண்டுபிரசுரம் விநியோகித்தனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

கழுகுமலை:கழுகுமலையில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஆனால் போதிய அளவு மக்கள் நடமாட்டம் இல்லாததால் கழுகுமலை பஜார் வெறிச்சோடி காணப்பட்டது. நாசரேத்:நாசரேத் பஜாரில் மெடிக்கல்ஸ், ஒரு சில டீக்கடைகள் தவிர பெரும்பாலான கடைகள்  அடைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல பஸ்கள் இயங்கின. அரசு அலுவலகங்கள்,  வங்கிகள், பள்ளிகள் தடையில்லாமல் இயங்கின. உடன்குடி:உடன்குடி பஜார் வீதிகள், பேருந்து நிலையம், சத்தியமூர்த்தி பஜார், தினசரி  மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் முழுமையாக  அடைக்கப்பட்டது. சொற்ப அளவிலேயே அரசு, தனியார் பேருந்துகள், வாகனங்கள்  இயக்கப்பட்டது. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவில்பட்டி:  கோவில்பட்டியில்  மெயின்ரோடு, தெற்குபஜார்,   நகராட்சி தினசரி  மார்க்கெட், மார்க்கெட் ரோடு, புதுரோடு, கடலையூர்ரோடு, பசுவந்தனைரோடு,  புதுக்கிராமம், ரயில் நிலைய ரோடு, ஏகேஎஸ் தியேட்டர் ரோடு உள்ளிட்ட நகரின்  அனைத்து பகுதிகளிலும் மெடிக்கல் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும்  அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமின்றி  கடைவீதிகள் வெறிச்சோடின. பஸ்கள் இயக்கப்பட்டாலும் கடைகள்  அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை: தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 45 ஆயிரம் கடைகள் உள்ளன. நேற்று மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோடு, புதிய பஸ்நிலையம் பகுதிகள், போல்பேட்டை, நந்தகோபாலபுரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் தூத்துக்குடியில் பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிறிது நேரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பின்னர் மீண்டும் சிறிது நேரத்தில் திறக்கப்பட்டன.

கோவில்பட்டி, எட்டயபுரம், திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில்  சிறிதளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் சுமார் 15சதவீத கடைகளும் மாவட்டம் முழுவதும் 20சதவீத கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர். இதற்கிடையே பஸ்கள் வழக்கம் போல இயங்கின. காலையில் சில பஸ்களில் கூட்டமின்றி காணப்பட்டாலும் மாலையில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. மினிபஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின. மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை.

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

தூத்துக்குடியில் போராட்டம் தொடர்கிறது ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி
தூத்துக்குடியில் போராட்டம் தொடர்கிறது
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டம் தொடர்கிறது. கீதாஜீவன் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் நேற்று கிராமமக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்கிறது. இவர்களின் போராட்டம் நேற்று 51-வது நாளாக நீடித்தது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பண்டாரம்பட்டி கிராமமக்கள் நேற்று 3-வது நாளாகவும், வடக்கு சங்கரப்பேரி பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ஏ.சி.முத்தையா ஐ.டி.ஐ. முன்பு மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த பிரேம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சாயர்புரம் போப் கல்லூரி, மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியபுரம் மக்களை கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள அடிபம்பில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை குடித்து பார்த்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலத்தடி நீர், காற்று, நிலம் மாசு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தி.மு.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அடுத்தக்கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன். இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரை சந்தித்து பேசுவேன் என்றார்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் டி.ஆர்.சந்திரசேகரன், துணைத்தலைவர் தனுஷ்கோடி, துணை பொதுச் செயலாளர் இளஞ்சேரன், அமைப்பு செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் ராஜ்கமார் மற்றும் நிர்வாகிகள் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து எர்ணாவூர் நாராயணன் ஆதரவு தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கிராமமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சமத்துவ மக்கள் கழகம் சார்பில் இங்கு வந்து உள்ளேன். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த மாவட்டத்துக்கு ஒரு மந்திரி இருக்கிறார். தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி. இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு பாதிப்புகள் இருக்கிறது. தற்போது அரசு நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கண்டறிய ஆய்வு நடத்தி உள்ளது. இதில் நோய் தாக்கம் இருக்கும் பல ஊர்களை விட்டு விட்டார்கள். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆலைக்கு அனுமதி கொடுக்க கூடாது. இந்த ஆலையை இங்கிருந்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏரலில் முழு கடையடைப்பு

ஏரல், ஏப். 4: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து 3ம் தேதி தமிழகம் தழுவிய ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். இதையடுத்து ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரல் மெயின்பஜார் மற்றும் பஸ் நிலையம் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன.

 கோவில்பட்டி: கோவில்பட்டி நகரில் நேற்று வழக்கம்போல் மெயின்ரோடு, மார்க்கெட்ரோடு, நகராட்சி தினசரி மார்க்கெட், தெற்குபஜார், மாதாங்கோவில்தெரு, புதுரோடு, எட்டயபுரம்ரோடு, ஏ.கே.எஸ்.தியேட்டர்ரோடு, கடலையூர்ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால் எப்போதும் போல் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.

ஏரல் ,திருச்செந்தூர்,குரும்பூரில் பகுதியில் கடையடைப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி
திருச்செந்தூர், ஏரல் பகுதியில் கடையடைப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்செந்தூர், ஏரல் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
திருச்செந்தூர், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி யும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தது. காமராஜர் சாலை, வடக்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. கோவில் வாசல் பகுதியில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஏரல் மெயின் பஜார், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

குரும்பூரில் பெரும்பாலான கடைகள் பூட்டிக் கிடந் தன. எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கயத்தாறு, தென்திருப்பேரை, ஆறுமுகநேரி, காயல்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...