வியாழன், 29 மார்ச், 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும்தமிழகத்தை உலுக்கிய ஒரு போராட்டத்தின் கதை #GroundReport

ஸ்டெர்லைட்: தமிழகத்தை உலுக்கிய ஒரு போராட்டத்தின் கதை #GroundReport

மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும் பொதுக்கூட்டமும், கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் உருவெடுத்தது ஏன்?
ஸ்டெர்லைட்
தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தாமிரத் தாதிலிருந்து தூய தாமிரத்தைப் பிரித்து கம்பிகளாக மாற்றுவது, அதன் துணைப் பொருட்களான அமிலத்தை பிரித்தெடுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகிறது.
இந்த ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாகவே போராடிவருகின்றனர்.
இந்த நிலையில், தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்ட மேலும் ஒரு ஆலையை அருகில் உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில் அமைப்பதற்கான முயற்சிகளை ஸ்டெர்லைட் காப்பர் மேற்கொண்டுள்ளது.
இந்த தகவல் அருகில் உள்ள கிராமங்களில் பரவியதும், அவர்கள் அதனை எதிர்த்து போராட்டத்தைத் துவங்கத் திட்டமிட்டனர். பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து அ. குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களுமாக சுமார் 300 பேர் திரண்டு எம்.ஜி.ஆர். பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார்-ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், போராட்டத்தை கைவிட மறுத்த பொதுமக்கள், அந்தப் பூங்காவில் குடியேற முயன்றனர். இதையடுத்து அங்கு கூடியிருந்த 271 பேரை காவல்துறை கைதுசெய்து பிறகு விடுவித்தது. 8 பேர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.
"அந்தப் போராட்டத்தைக் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கையாண்ட விதம் பெரும் கோபத்தை எங்களிடம் தூண்டியது" என்கிறார்கள் அ. குமரெட்டியாபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
"எங்கள் தொழிற்சாலையால் புற்றுநோய் ஏற்படவில்லை"
இதற்குப் பிறகு, அ. குமரெட்டியாபுரத்திலேயே ஒரு வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து தொடர் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தனர். அந்தத் தொடர் போராட்டம் தற்போதுவரை 45 நாட்களையும் கடந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் மார்ச் 9ஆம் தேதியன்று தூத்துக்குடியில் ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதற்குக் காவல்துறை அனுமதி மறுக்கவே போராட்டக்காரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதற்கிடையில், மார்ச் 17ஆம் தேதியன்று போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கோரி மீண்டும் காவல்துறையையும் அணுகினர்.
மார்ச் 14ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்தது. ஆனால், 17ஆம் தேதி மிக அருகில் இருந்ததால், இந்தப் பொதுக்கூட்டத்தை மார்ச் 24ஆம் தேதிக்கு போராட்டக்காரர்கள் தள்ளிவைத்தனர்.
இருந்தபோதும், இந்தப் போராட்டத்தை நடத்த காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்ததாக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழிடம் குற்றம்சாட்டினார். "ஊர்வலம் நடத்தக்கூடாது, வாகனங்களில் ஆட்களை அழைத்துவரக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்தது காவல்துறை. ஆனால், நீதிமன்ற உத்தரவில் அப்படியேதும் இருக்கவில்லை" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
ஸ்டெர்லைட்: தமிழகத்தை உலுக்கிய ஒரு போராட்டத்தின் கதை
இதையடுத்து, மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி நகரில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. முந்தைய போராட்டங்களைப் போல அல்லாமல் இந்த முறை வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்களிடமும் சென்று போராட்டக்காரர்கள் ஆதரவு கோரினர்.
"தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களில் பொதுவாக வணிகர் சங்கங்கள் பங்கேற்பதில்லை. இந்தத் தொழிற்சாலைக்கு எதிராக இப்பகுதி மக்கள் நீண்ட காலமாகப் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ஆகையால், இந்தப் போராட்டங்களில் பங்கேற்க வேண்டுமென முடிவுசெய்தோம்" என்கிறார் வணிகர் சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜா.
இதையடுத்து போராட்டம் நடக்கும் தினத்தன்று, தூத்துக்குடி, ஸ்ரீ வைகுண்டம், புதியமுத்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் கடைகளை முழுமையாக மூடுவது என்று முடிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு, உப்பு உற்பத்தியாளர்கள், தூத்துக்குடி வர்த்தகர் சங்கம், ஆட்டோ ரிக்ஷா யூனியன்களும் இதில் பங்கேற்க முடிவுசெய்தனர்.
மார்ச் 24ஆம் தேதியன்று சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகில் இந்தப் பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு வாகனத்தில் ஆட்கள் வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதால் வாகனங்கள் வெகுதூரத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன.
அந்த வாகனங்களில் வந்தவர்கள், அதிலிருந்து இறங்கி பொதுக்கூட்ட மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இதுதான் சிறு ஊர்வலங்களைப் போல காட்சியளித்தது.
மாலையில் பொதுக்கூட்டம் துவங்கியபோது சாலையே தெரியாத வண்ணம் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடியிருந்தனர். "இப்படி ஒரு கூட்டம் கூடுமென நாங்களே எதிர்பார்க்கவில்லை. இத்தனைக்கும் எந்த அரசியல்கட்சியும் இதில் பங்கேற்கவில்லை. பொதுமக்களும் வணிகர்களும் மட்டுமே இதில் பங்கேற்றனர்" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
ஸ்டெர்லைட்
சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்திற்குப் பிறகுதான், ஊடகங்கள் இந்த விவகாரத்தைக் கவனிக்க ஆரம்பித்ததால், ஊடகங்கள் மீதும் இப்பகுதி பொதுமக்களுக்குக் கோபம் இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, பொதுக்கூட்டம் நடந்ததற்கு அடுத்த நாள், தூத்துக்குடியில் வெளியாகும் பல நாளிதழ்களில், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கமளிக்கும் ஒரு விளம்பரமும் இடம்பெற்றது. இது ஊடகங்கள் மீதான கோபத்தை மேலும் அதிகரித்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும், குறிப்பாக நாளிதழ்களை வாங்கக்கூடாது என்றுகூறி பிரச்சாரங்கள் துவங்கப்பட்டிருக்கின்றன.

புதன், 28 மார்ச், 2018

22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் விலை போகாத ஒரே தலைவர் வைகோ |...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: இந்த போராட்டம் எதற்காக?

What is going on inside Sterlite? first time with full evidence tamil li...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக
மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது. இந்த நிலையில் அந்த ஆலையின் மருத்துவக்குழு வாகனத்தை சிறைபிடித்த கிராமமக்கள், அங்கிருந்த பேனருக்கு தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய அதன் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டங்களையும் நடத்தினர்.

அப்படி இருந்தும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார மக்கள் கடந்த 24-ந் தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் தர்ணா

இதற்கிடையே, அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்ந்து நேற்று 44-வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அரசியல் கட்சியினர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்திலும் கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நேற்றும் சில இடங்களில் போராட்டம் நடந்தது. அதாவது தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தீவிரமடையும் போராட்டம்

இதேபோன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர் சூசை தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திரளான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

கடந்த 24-ந் தேதி மாலையில் தூத்துக்குடியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்துகின்றனர். வாட்ஸ்-அப்பில் தகவல் பரப்பி போராட்டம் நடத்தினால் போலீசார் உஷாராகி, போராட்டத்தை தடுப்பார்கள் என மாணவர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பு

எனவே, திடீரென்று ஒன்று கூடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். அப்படித்தான் நேற்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இன்றும் மாணவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவக்குழு வாகனம் சிறைபிடிப்பு

இதற்கிடையே, முத்தையாபுரம் அத்திமரப்பட்டி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மாதம் 2 முறை தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவக்குழு வாகனம் மூலம் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வந்தது. நேற்று அந்த நடமாடும் மருத்துவக்குழு வாகனம் அத்திமரப்பட்டி பகுதியில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வந்தது. அங்கு உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்த வாகனத்தை அந்த பகுதி கிராமமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து சிறைபிடித்தனர்.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் வருகிறது. வாழைகள் கருகி விடுகின்றன. எனவே, ஸ்டெர்லைட் மருந்து இனி எங்களுக்கு தேவை இல்லை. மருத்துவ வாகனம் திரும்பி செல்ல வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மருத்துவக்குழு வாகனம் அங்கிருந்து திரும்பி சென்றது. அந்த பகுதியில் ஸ்டெர்லைட் மருத்துவக்குழு வாகனம் வரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனரை திரண்டு இருந்த பொதுமக்கள் தீவைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்



ஏரல், மார்ச் 28: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணி துவங்குவதற்கான கால்நாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி 2வது செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடைபெறும். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து கோயில் விழா குழவினர் மற்றும் ஊர் மக்கள் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். 

இதையடுத்து முத்துமாலை அம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஏப்.22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதனை முன்னிட்டு கோயில் கும்பாபிஷேக விழா திருப்பணிகள் தொடங்குவதற்கு முன் கோயில் முன்மண்டபத்தில் கால்நாட்டு விழா நடந்தது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் கால்நாட்டு விழா நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான ஊர்மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணி கும்பாபிஷேக குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 25 மார்ச், 2018

ஏரல் அருகே சாயர்புரம் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.


சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
சாயர்புரம், 

சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர் 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலை சேர்ந்தவர் சாமத்துரை. இவருடைய மகன் ஈசுவரமூர்த்தி (வயது 20). இவர் வாகைகுளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி நண்பர்களுடன் ஈசுவரமூர்த்தி சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரத்துக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்ததாக கூறப்படுகிறது.

தண்ணீரில் மூழ்கி... 

அப்போது எதிர்பாராத விதமாக ஈசுவரமூர்த்தி ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது, அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. மேலும் அந்த பகுதி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய ஈசுவரமூர்த்தியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்



ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

ஆள்சேர்ப்பு 

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10–ந் தேதி முதல் 23–ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்காக இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆவணங்களுடன் இன்றுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி சீட்டு

அதன் பின்னர் வருகிற 29–ந் தேதிக்கு பின்னர் அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து, அனுமதி சீட்டுடன் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரடியாக சென்று ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு; தியேட்டர்கள் மூடல் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு; தியேட்டர்கள் மூடல் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டன. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி–மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி நேற்று வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

8 ஆயிரம் கடைகள் 

தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள சுமார் 6 ஆயிரத்து 900 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர ஸ்ரீவைகுண்டத்தில் 320 கடைகளும், ஓட்டப்பிடாரம் பகுதியில் 94 கடைகளும், புதியம்புத்தூர் பகுதியில் 600 கடைகள் உள்பட மொத்தம் சுமார் 8 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வயல்களில் வேலை செய்தனர். காலாங்கரை, குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 600 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி நகரில் இயக்கப்பட்டு வந்த 47 மினி பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பழைய பஸ் நிலையத்தில் மினி பஸ்கள் நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது. மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் நகர்ப்புறங்களில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சில ஆட்டோ, வேன், லாரிகளும் ஓடவில்லை.

தியேட்டர்கள் மூடல் 

தூத்துக்குடி நகர் பகுதிகளில் உள்ள 8 தியேட்டர்களிலும் நேற்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அந்த தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஸ்டிக்கர்களையும் பொதுமக்கள் ஒட்டினர். வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மாலையில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 22 மார்ச், 2018

தூத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் இலவச திறன் எய்தும் பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

இலவச பயிற்சி 

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியினை முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பயிற்சி காலம் சுமார் 10 மாதம் ஆகும்.

இதில் எலக்ட்ரீசியன், கியாஸ் வெல்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் இலவச திறன் எய்தும் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் போக்குவரத்து கட்டணமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் 8–ம் வகுப்பு முடித்தவர்களும், அதற்கு மேல் படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது வருகிற 2.4.2018 முதல் தொடங்க உள்ளது.

விண்ணப்பம் 

இந்த பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பம் கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) வரை வழங்கப்படுகிறது.

பயிற்சிக்கு வரும் போது அசல் கல்வி ஆவணங்களுடன் 8–ம் வகுப்பு முடித்தவர்கள் மதிப்பெண் பட்டியல் அல்லது அதற்கு மேல் படித்த மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ்கள் அசல் மற்றும் ஒரு நகல், 5 புகைப்பட நகல்களுடனும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, அந்த வங்கி புத்தகத்தின் நகலையும் கொண்டு வர வேண்டும். மேலும் தொடர்புக்கு 0461–2340133 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

புதன், 21 மார்ச், 2018

ஏரலில் பஸ் மறியல்







ஏரல் : ஏரலில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி தலைமையில் திமுகவினர் பஸ் மறியல் செய்தனர். இதில் ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், சாயர்புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், கார்த்தீசன், ராமசுப்பிரமணியன், ஏரல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம் நகர துணை செயலாளர் கிறிஸ்டோபர், இளைஞரணி கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், ஏரல் துணை செயலாளர் மணி, ஊராட்சி செயலாளர்கள் நட்டார், குணசேகர், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் தாமஸ், ராஜன் உட்பட மறியலில் ஈடுப்பட்ட 31 திமுகவினர்  கைது செய்யப்பட்டனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவினர் மறியல் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 


தூத்துக்குடி, மார்ச் 21: ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட கட்சியினர் 65 பேரை போலீசார் கைது செய்தனர். விஎச்பி சார்பில் தமிழகத்தில் நடக்கும் ராமர் ரத யாத்திரைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் முன்பு நுழைவாயிலை மறித்து திமுகவினர் மறியடலில் ஈடுபட்டனர்.
 திமுக பொதுகுழு உறுப்பினர் என்பி.ஜெகன் தலைமை வகித்தார். 

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாணவரணி அமைப்பாளர் ஜாண் அலெக்சாண்டர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் பாலன், சுரேஷ்குமார், கோட்டுராஜா, கீதா முருகேசன், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் சாத்ராக், மாவட்டபிரதிநிதி ரவீந்திரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகுமார் என்ற செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்ளிட்ட 65 பேரை  மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் (பொ) பார்த்திபன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை: தூத்துக்குடி ஒன்றிய திமுக சார்பில் புதுக்கோட்டையில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் முத்துசாமி, துணை செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெங்கடாசல மாரியப்பன், ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் பொன்செல்வன், மாணவரணி துணை அமைபாளர் சேதுராஜன், கூட்டுடன்காடு கள்ளாத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி : கோவில்பட்டியில் நகர, ஒன்றிய திமுக சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு  நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மறியலின் போது திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். 

மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, சந்தானம், விஜயன், ராமமூர்த்தி, அன்பழகன், மாரிச்சாமி, கனகராஜ், பரமசிவம், கணேஷ்ராஜா, சோழபெருமாள், செல்வகுமார், தங்கப்பாண்டி, தாமோதரகண்ணன், கணேசன், முருகபூபதி, ஜெயபாலமுருகன், பவுல்ராஜ், முத்துராமன், மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் : புதூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டம் நாகலாபுரத்தில் நடந்தது. ஊராட்சி செயலாளர்கள் நாகலாபுரம்  கருப்பசாமி, வௌவால்தொத்தி ராதாகிருஷ்ணன், மாசார்பட்டி சண்முகம், வேடபட்டி கருப்பசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ஐயப்பன், தொண்டரணி அமைப்பாளர் மூக்காண்டி, வௌவால்தொத்தி முருகன், சிங்கிலிபட்டி சேதுபாண்டி, அயன்வடமலாபுரம் கண்ணன், கணேசன், நாகலாபுரம் முத்துலட்சுமி, ஜெயராஜ், மாரியப்பன், சண்முகவேலு, குமார், முத்துசெல்வம் பலர் கலந்து கொண்டனர்.இதில் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

 ஏரல் : ஏரலில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி தலைமையில் திமுகவினர் பஸ் மறியல் செய்தனர். இதில் ஏரல் நகர செயலாளர் பார்த்திபன், சாயர்புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், அனஸ், கார்த்தீசன், ராமசுப்பிரமணியன், ஏரல் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம் நகர துணை செயலாளர் கிறிஸ்டோபர், இளைஞரணி கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், ஏரல் துணை செயலாளர் மணி, ஊராட்சி செயலாளர்கள் நட்டார், குணசேகர், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் தாமஸ், ராஜன் உட்பட மறியலில் ஈடுப்பட்ட 31 திமுகவினர்  கைது செய்யப்பட்டனர்.

 உடன்குடி : உடன்குடி மெயின் பஜாரில் நகர செயலாளர் ஜாண்பாஸ்கர் தலைமையில் பொருளாளர் தங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் சலீம், மகபூப், அன்வர் சலீம் ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நகர இளைஞர் அணி செயலாளர் அமீர்சுல்தான், மருத்துவ அணி செயலாளர் பாலசிங்பாண்டியன் மற்றும் 32 ஆண்கள், 13பெண்கள் என 45பேர் கைது செய்யப்பட்டனர்.  திருச்செந்தூர்: திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நகர திமுக சார்பில் மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் மந்திரமூர்த்தி தலைமையில் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் கோமதிநாயகம், சுரேஷ், காயல் அஜ்வாஜ், பள்ளிபத்து முன்னாள் பஞ். தலைவர் ரவி, உடந்தை மகராஜன், ஆனந்த ராமச்சந்திரன், மனோகரன், மலர் உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். 

ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம் சார்பில் செயலாளர் நவீன்குமார் தலைமையில் குரும்பூர் பஜாரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூர் செய லாளர் ராமஜெயம், ஆத்தூர் நகர பொருளாளர் முருகபெருமாள், ஊராட்சி செயலாளர்கள் நட்டார், செந்தில் முருகன், சண்முகசுந்தரம், முருகேசன், ரகுராமர், பாலம் ராஜன் உட்பட 34 பேர் கலந்து கொண்டனர்.   சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். நகர செயலாளர் இளங்கோ, ஒன்றிய அவைத்தலைவர் சௌந்திரபாண்டியன், வர்த்தக பிரிவு அமைப்பாளர் சண்முகசுந்தரம், தொண்டரணி அமைப்பாளர் ராஜ்குமார், மருத்துவ பிரிவு அமைப்பாளர் மதுரம்செல்வராஜ், வக்கீல் பிரிவு அமைப்பாளர் மணிமாறன், மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு துணை அமைப்பாளர் மனோகரன், ஊராட்சி செயலாளர்கள் பாலசிங், பாலராஜ், தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் 35 பேரை கைது செய்தனர்.  ஓட்டப்பிடாரம்: புதியம்புத்தூர் பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகையா தலைமை வகித்தார். நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய ஆதிதிராவிட அமைப்பாளர் சுகுமார், மாவட்ட தொண்டரணி மாடசாமி, மாவட்ட பிரதிநிதி ஜேசப்மோகன், ஊராட்சி கழக செயலாளர் சிதம்பரம் வேலுசாமி, அருள்ராஜ், புவலிங்கம், செல்வராஜ், ஞானதுரை, செல்வின், அம்மாசி, சுரேஷ், உட்பட 2 பெண்கள் என 44 பேர் கைது செய்யப்பட்டனர்.


ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...