வியாழன், 12 ஜூலை, 2012

ஏரல் இலவச கண்சிகிச்சை முகாம்


சாயர்புரம் : மறைந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ.,ஊர்வசி செல்வராஜ் நினைவாக ஏரல் நகர மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்., தூத்துக்குடி அகர்வால் கண் ஆஸ்பத்திரியும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏரல் தூய தெரசாள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமிற்கு ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி தலைமை வகித்தார். நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா, ஏரல் டவுன் பஞ்.,தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் மணிவண்ணன், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்.,தலைவர் கந்தசாமி, நல்லகண்ணு, முன்னாள் யூனியன் கவுன்சிலர் மூக்கன்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஏரல் ஒத்தாசை மாதா கோயில் பங்கு தந்தை பீற்றர் ஆசியுரை வழங்கினார். இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட காங்.,தலைவர் ஜஸ்டின் துவக்கி வைத்தார். கண் மருத்துவ குழுவின் மேலாளர் சுப்பிரமணியன், ஜெயகாந்தன், நடராஜன், டாக்டர் கல்பனா ராஜேந்திரகுமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் 66 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 15 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 
நிகழ்ச்சியில் பீஸ்மி சுல்தான், நடராஜன், அந்தோணிகாந்தி, வீரசுப்பிரமணியன், ஐயம்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி


ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கிடைத்துள்ளது கண்டு பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷன் திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையேயான ரயில் பாதையில் மிக முக்கியமான சந்திப்பு ஸ்டேஷனாகும். இதனைச் சுற்றியுள்ள பல கிராம மக்களும் ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 4 மணி வரையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பு தினமும் காலை 8 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. அப்போது ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் தட்கல் டிக்கெட் முன்பதிவு வசதி செய்து கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். 
தட்கல் டிக்கெட் எடுக்க அருகில் உள்ள காயல்பட்டணம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையே உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் தட்கல் வசதி செய்ய வேண்டும் என ரயில்வே துறையினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இருப்பினும் போதி ய பணியாளர்கள் இல்லாததாலும், காலை 8 மணிக்கு ரயில் கிராசிங் இருந்ததாலும் டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தனர். இதுகுறித்து கடந் த சில தினங்களுக்கு முன்பு தினமலரில் சுட்டிக் காட்டப்பட்டது. இதனிடையே கடந்த 10ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தை காலை 10 மணி முதல் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் வழங்கும் முறை துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே ஸ்டேஷன் முன்பு அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர். ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் வசதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தால் வறண்டு உடைமர காடாக மாறிய பேய்க்குளம் 4 லட்சம் விவசாயிகள் பாதிப்பு

ஏரல், : தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தால் சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளம் வறண்டு உடைமர  காடாக காட்சியளிக்கிறது. இதனால் 4 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் அணை வடகால்வாய்க்கால் வழியாக தண்ணீர் வரும். இக்குளத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் இருப்பதால் சுற்றியுள்ள கிராமங்கள் பசுமையாக காணப்படும். 
இக்குளத்தை நம்பி சாயர்புரம், நடுவைக்குறிச்சி, நந்தகோபாலபுரம், புளியநகர், சிவத்தையாபுரம், பேய்க்குளம், இருவப்பபுரம், சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், போடம்மாள்புரம், கூட்டாம்புளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், வாழைகளை பயிர் செய்து வருகின்றனர். 
கோடைகாலத்தில் விவசாய சங்கங்கள் மூலம் குளத்திற்கு தண்ணீர் வரும் பாசன கால்வாயில் தூர்வாருதல், மடைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் இப்பகுதியில் நெல் இருபோகம் விளைந்தது. விவசாயம் செழித்திருந்த இப்பகுதியில் விவசாயிகளுக்கு இடி விழுந்தது போல ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் குளத்திற்கு முறையாக தண்ணீர் வரவில்லை. 
மழைக்காலத்தில் வடகால் வாய்க்கால் மூலம் 3 மாதங்கள் கூட குளத்திற்கு தண்ணீர் வருவது கிடையாது. 
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்போல காட்சி அளிக்கும் இந்த குளம் வறண்டு மணல் மேடாகவும் உடைமரங்கள் வளர்ந்து காடாகவும் காட்சி அளிக்கிறது. இருபோகம் விளைந்த இப்பகுதியில் ஒரு போகம் நெல் விளைவிக்கவே விவசாயிகள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தற்போது தண்ணீர் இல்லாததால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் கருகி சேதமடைந்துள்ளன. 
இதனால் எஞ்சியுள்ள வாழைகளை காப்பாற்ற விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து வருகின்றனர். குறு விவசாயிகள் பணம் இல்லாததால் வாழைகளை அப்படியே விட்டுவிட்டனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து இப்பகுதியில் தண்ணீர் உப்புநீராக மாறிவருகிறது. இதனால் குடிநீர் பிரச்னையும் தலைவிரித்தாடுகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். 
இதுகுறித்து பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் அபிவிருத்தி சங்க பொருளாளர் குணசேகரன் கூறுகையில், “நதிநீர் இணைப்பு திட்டம் என்ற பெயரில் கன்னடியன் அணையில் ஆற்றின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டதால் பேய்குளத்திற்கு தண்ணீர் வருவது தடைபட்டது. இதனால் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன பகுதிகளின் 25 ஆயிரம் ஏக்கரில்  விவசாயம் பாதிக்கப்பட்டு ள்ளது.  தடுப்பு சுவரை அகற்ற இருபாசன விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் எந்த பயனும் இல்லை. 
இந்தநிலையில் 23 எம்ஜிடி திட்டம் என்ற பெயரில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வாழ்வுரிமையை பாதிக்கும் வகையில் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து நேரிடையாக ராட்சத மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுத்துச் செல்லப்படுகிறது. மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் விவசாயத்திற்காக விவசாயிளின் பங்களிப்போடு கட்டப்பட்டதாகும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஊரக வளர்ச்சிதுறை தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு விற்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன பகுதியில் 4 லட்சம் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 
மேலும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் வகையில் வல்லநாடு பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வேண்டும். விவசாயத்தை பாதிக்ககூடிய  இத்திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல்மேடாக மாறியுள்ள பேய்க்குளத்தை தூர்வாரி அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார். 

தூத்துக்குடி, : சாயர்புரம்


சாயர்புரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-07-12 11:40:48
தூத்துக்குடி, : சாயர்புரம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சாயர்புரம் மற்றும் செந்தியம்பலம், நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரு குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த இக்குரங்குகள்  வீடுகளுக்குள் நுழைந்து உணவுப்பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றன. கடைகளின் மேல்பகுதிக்கு சென்று விற்பனைக்காக வைத்துள்ள பழம் உள்ளிட்ட பொருட்களையும் நாசம் செய்கின்றன.
குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை தட்டிப்பறித்து செல்வதுடன், அவர்கள் எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து பயமுறுத்துவதால் அசம்பாவிதம் நேரிடும் வாய்ப்புள்ளது. இவற்றை விரட்ட முயல்பவர்கள் மீது கோரை பற்களை காட்டி கடிக்க பாய்கின்றன.
இந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வல்லநாடு மலைப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதன், 11 ஜூலை, 2012

HW¥


HW¥ ÚLÖ«¨eh ÙN¥¨• NÖÛXÛV N¡ ÙNšV ÚLÖ¡eÛL

HW¥, ^ØÛX.11-

HW¥ ÚNŸUÁ A£QÖNX rYÖ– ÚLÖ«¨eh ÙN¥¨• NÖÛXÛV N¡ ÙNšV ÚY|• GÁ¿ ÙTÖ‰UeL·, TeRŸL· ÚLÖ¡eÛL «|†‰ Y£fÁ\]Ÿ.

HW¥ SLŸ

І‰ehz UÖYyP†‡¥ HW¥ ÙT¡V Y‚L SLWUÖh•. HW¨eh ÙTÖ‰UeL· Y‹‰ ÙN¥X NÖÛX YN‡ ˜efVUÖ]RÖh•. HW¥ pÂUÖ ‡ÚVyP¡¥ C£‹‰ ÚNŸUÁ A£QÖNXNÖ– ÚLÖ«¥ YÛW NÖÛX –L°• ÚUÖNUÖL E·[‰.

NÖÛX›¥ ÙT¡V, ÙT¡V T·[jL· E·[RÖ¥ C£ NeLW YÖL]jL¸¥ ÙN¥TYŸL· gÚZ «µ‹‰ «|f\ÖŸL·. CR]Ö¥ TX†R LÖVjL· H¼T|f\‰. C‹R NÖÛX›¥ YÖL]jLÛ[ Kyzo ÙN¥X –L°• TVT|f\ÖŸL·.

NÖÛX qWÛUeL ÚLÖ¡eÛL

ÚU¨• C‹R NÖÛX›Á Y³VÖL RÖÁ HW¥ A£QÖNXNÖ– ÚLÖ«¨eh ÙN¥X ÚY|•. ÚLÖ«¦¥ Bz AUÖYÖÛN ‡£«ZÖ«¥ B›WeLQeLÖ] TeRŸL· TÍ, ÚYÁ, LÖŸ ÚTÖÁ\ YÖL]jL¸¥ Y‹‰ ÙN¥f\ÖŸL·. C‹R B| ‡£«ZÖ SÛPÙT\ CÁÄ• J£ YÖWÚU E·[ ŒÛX›¥ NÖÛX›¥ ŒÛX T¡RÖT†‰eh¡VRÖL LÖQT|f\‰. ‡£«ZÖ SÛPÙT¿YR¼h· NÖÛXÛV ÚTÖŸeLÖX AzTÛP›¥ N¡ ÙNšV ÚY|• GÁ¿ TeRŸL·, ÙTÖ‰UeL· ÚLÖ¡eÛL «|†‰ E·[]Ÿ.


சனி, 7 ஜூலை, 2012

ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில்

ஏரல், :  ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா 9ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதையோட்டி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. இரவில் கேடயச்சப்பரத்தில் சுவாமி திருக்கோலம் கோயிலை வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி இரவில் திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்திலும், 11ம் தேதி இரவில் முல்லை சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரத்திலும், 12ம் தேதி இரவில் பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 13ம் தேதி இரவு 8 மணிக்கு திருப்புன்னைச் சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரத்திலும், 14ம் தேதி இரவு ஏகசிம்மாசன சப்பரத்தில் பாலசேர்மன் அலங்காரத்தில் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
15ம் தேதி இரவில் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்திலும், 16ம் தேதி இரவில் வில்வச்சப்பரத்தில் ராஜாங்க அலங்காரத்தில் கோயிலை வலம் வருதலும், சென்னை சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 17ம் தேதி இரவு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி ஏரல் நகர்வீதி வலம் வருதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா 18ம் தேதி நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பகப்பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது. 19ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், 6.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் காட்சியும், திருக்கற்பூர தீபதரிசனமும் நடக்கிறது. 
20ம் தேதி திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருநை நதியில் சுவாமி நீராடலும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரமும், இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியநாடார் செய்து வருகிறார்.

சிறுத்தொண்டநல்லூர்


சிறுத்தொண்டநல்லூரில் பட்டு வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-07-07 11:50:48
ஏரல், : ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் பட்டு வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் தசரதபாண்டியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நவாஸ்கான் வரவேற்றார்.
பட்டு வளர்ச்சித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் முருகன், தென்காசி உதவி இயக்குநர் வெற்றிவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டு வாரிய விஞ்ஞானி மோகன், சிறுத்தொண்டநல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் தங்கத்துரை, பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் ராமதுரை, ஏரல் பட்டுநூல் உற்பத்தியாளர் ஜெயகோவிந்தன், ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிசங்கர், தென்னை பாதுகாப்பு சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கண்ணன் பேசினர்.
முன்னோடி பட்டு விவசாயிகள் சிவந்திபட்டி ராமமூர்த்தி, ஓலைக்குளம் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திக்குளம் பட்டுவளர்ச்சித்துறை இளநிலை அலுவலர் பாக்கியசாமி நன்றி கூறினார்.

வியாழன், 5 ஜூலை, 2012

ஏரல் தாமிரபரணி ஆற்றில் ரூ.14.60 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்

ஏரல் : ஏரல் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு பலன் கிடைத்த வகையில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் நேற்று பூமிபூஜையுடன் துவங்கப்பட்டது. இதனால் ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய வியாபார ஸ்தலமான ஏரலில் ஆற்றுப்பாலம் தரைமட்ட பாலமாக அமைந்திருந்ததால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தின் போது பொது மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். மழைக் காலத்தில் வெள்ளத்தின் போது ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து தடைபட்டு சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டுவதற்கு நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர் கோரிக்கைக்கு பலன் கிடைத்த வகையில் இப்பாலத்திற்கு தமிழக அரசு 14 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று பூமி பூஜையுடன் உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் துவங்கப்பட்டது. நேற்று நடந்த விழாவில் ஸ்ரீவை.,தொகுதி எம்எல்ஏ.,சண்முகநாதன் கலந்து கொண்டு பூமிபூஜை மூலம் பாலத்தின் பணிகளை துவக்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது, ஏரலில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இன்று முதல் பணி துவங்கப்படுகிறது. தமிழகத்தில் பெரிய பெரிய திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் ஏரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக இந்த பாலத்திற்காக சர்வே செய்யப்பட்டு வில்லங்கம் பார்த்து அடிப்படை வேலைகளை முடித்து தற்போது பெரிய திட்டம் துவங்கப்படுகிறது. மேலும் ஏரல் நகருக்கு பைபாஸ் ரோடு தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கு எப்பொழுதும் நன்றியோடு செயல்படுவேன் இவ்வாறு அவர் பேசினார். நீண்ட காலமாக பொதுமக்கள் எதிர்பார்த்த உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் நேற்று துவங்கப்பட்டதால் ஏரல், சுற்று வட்டார கிராம மக்கள், வியாபாரிகள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூமி பூஜை விழாவில் முன்னாள் எம்எல்ஏ.,செல்லத்துரை, ஸ்ரீவை.,ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பெருங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, சிவத்தையாபுரம் குணசேகரன், ஏரல் நகர அதிமுக.,வினர், ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி, வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்திப்பழம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஏரல் நகர அதிமுக.,செயலாளர் ஆத்திப்பழம் செய்திருந்தார்.

ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலசுவாமி கோயில்

ஏரல் : ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வரும் 9ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. ஆடி அமாவாசை திருவிழா வரும் 18ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது).
புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு செல்வர். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 9ம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் 17ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 18ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், இரவு சுவாமி மூலஸ்தானம் வந்து சேர்தல், கற்பூர தரிசனம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

HW¥ RÖ–WT‚


HW¥ RÖ–WTW‚ B¼½¥
¤.15 ÚLÖz ÙNX«¥ EVŸUyP TÖX• Ly|• T‚ ÙRÖPjfV‰


HW¥, ^ØÛX.6-

HW¥ RÖ–WT‚ B¼½¥ ¤.15 ÚLÖz ÙNX«¥ “‡V EVŸUyP TÖX• Ly|• T‚ ÙRÖPjfV‰.

HW¥ RÛWUyP TÖX•

І‰ehz UÖYyP• HW¥ ÙRÁTh‡ UeLºPÁ CÛQeh• TÖXUÖL HW¥ RÛWUyP TÖX• E·[‰. LP‹R 30-10-1970 B| AzeL¥ SÖyPTy| hZÖšL· AÛU†‰ ARÁ —‰ LÖjg¡y ÚTÖy| C‹R RÛWY³TÖX• AÛUeLTyP‰.

C£‹RÖ¨• UÛZeLÖXjL¸¥ RƒŸ B¼½¥ ÙT£eÙL|†‰ Y£• ÚTÖ‰ TÖX• ™²f ÚTÖehYW†‰ RÛPT|•. CR]Ö¥ «VÖTÖ¡L·, T·¸ UÖQYŸL·, ÙTÖ‰UeL· –L°• pWUTy| Y‹R]Ÿ. CR]Ö¥ EVŸUyP TÖX• AÛUeL ÚY|• G] HW¥ Th‡ UeL· 40 B|L[ÖL AWreh ÚLÖ¡eÛL «|†‰ Y‹RÖŸL·.

“‡V TÖX• Ly|• T‚

C‹RŒÛX›¥ R¼ÚTÖ‰ STÖŸ| Yjf ‡yP†‡¥ HW¥ RÖ–WTW‚ B¼½¥ “‡V EVŸUyP TÖX• AÛUeL ¤.14 ÚLÖzÚV 60 XyN• Œ‡ J‰ef R–ZL AWr ÙNš‰·[‰. CR¼LÖ] ”– ”Û^ «ZÖ ÚS¼¿ SP‹R‰. ŒL²opeh N˜LSÖRÁ G•.G¥.H. RÛXÛU RÖjf T‚ÛV ÙRÖPjf ÛY†RÖŸ.

˜Á]RÖL HW¥ SLW A.‡.˜.L. ÙNVXÖ[Ÿ B†‡TZ• YWÚY¼\ÖŸ.

LX‹‰ ÙLցPYŸL·

ŒL²op›¥ ~ÛYhP• JÁ½V ÙNVXÖ[Ÿ B¿˜LS›]ÖŸ, JÁ½V ÙNVXÖ[ŸL· L£jh[• pYr‘WU‚VÁ, ‡£oÙN‹ŠŸ WÖUoN‹‡WÁ, ‡£oÙN‹ŠŸ SLW TtNÖV†‰ RÛXYŸ rÚWÐTÖ“, ˜Á]Ö· G•.G¥.H ÙN¥X†‰ÛW, pYLÛ[ TtNÖV†‰ RÛXYŸ LQT‡WÖ^Ö, «VÖTÖ¡L· NjL ÙNVXÖ[Ÿ RŸUWÖÇ, L°ÁpXŸ AÚNÖehUÖŸ E·TP TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.


ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...