வெள்ளி, 31 ஜூலை, 2015

புன்னக்காயல் மீனவர்கள் வியாழக்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புன்னக்காயல் மீனவர்கள் வியாழக்கிழமை கடலுக்கு செல்லவில்லை.
மேலும், புன்னக்காயலிலுள்ள ராஜகன்னிமாதா ஆலயத்தில் காலை 6.15 மணி திருப்பலியில் கலாமுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், காலை 10 மணியளவில் புன்னக்காயல் புனித ஜோசப்  மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி, புனித ஜோசப் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர், கப்பல் மாலுமிகள் சங்கத்தினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆலயம் முன்பிருந்து அருள் தந்தை அம்புரோஸ்  தலைமையில் மௌன ஊர்வலம் சென்றனர்.
பின்னர், புனித வளனார் மைதானத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரொன்கால்லி சில்வா அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார். ஏற்பாடுகளை ஊர் கமிட்டி தலைவர் அந்தோணியப்பா பர்னாந்து, துணைத் தலைவர் மைக்கிள் பர்னாந்து ஆகியோர் செய்திருந்தனர்.
மீனவர்கள் பலர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ராமேசுவரம் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கலாம் மறைவு காரணமாக சர்வசமய பிரார்த்தனை

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் கலாம் மறைவு காரணமாக சர்வசமய பிரார்த்தனை நடந்தது. இதில் சர்வகட்சியினர் பங்கேற்றனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடக்கம் நேற்று ராமேஸ்வரத்தில் நடந்தது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. மருந்து கடைகள், ஒரு சில இடங்களில் டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், அரபிக்கல்லூரியில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. ராஜாஜி பூங்காவில் சர்வசயத்தினர் சார்பில் பிரார்த்தனை நடந்தது. இதில் தமிழ்நாடு சுன்னத்கமிட்டி, தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாஜஹான், பிஷப் லயோலா, சிவன் கோயில் அர்ச்சகர் சங்கரராமன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். பல் வேறு அமைப்புகள் சார்பில் அனைத்து இடங்களிலும் அப்துல்கலாம் படம் வைக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. மீனவர்கள் சார்பில், 265 விசைப்படகுகள், ஆயிரக்கணக்கான நாட்டு, பைபர் படகுகள் கடலுக்குசெல்லவில்லை. அவர்கள் அப்துல் கலாம் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இரங்கல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி,

 IST
திருச்செந்தூர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் பெ.சுப்பிரமணியம் பேசினார். அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். மாலையில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

காயல்பட்டினம் கடற்கரையில் இரங்கல் கூட்டம் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக

 IST
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காயல்பட்டினம் கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்தது.
புதியம்புத்தூர்புதியம்புத்தூர் மெயின் பஜார் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அப்துல்கலாம் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கருப்பசாமி, செயலாளர் எஸ்.பால்ராஜ், பொருளாளர் எஸ்.முத்துக்குமார், துணைத்தலைவர் எஸ்.முத்துமணி, துணைச் செயலாளர் கே.வள்ளிநாயகம், இணைச்செயலாளர் ஏ.மாரிசங்கர், அமைப்பு செயலாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் பா.ஜனதா ஒன்றிய தலைவர் சி.கே.ஆர்.கணேசன், நாடார் உறவின் முறை தலைவர் து.முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதியம்புத்தூர் சுப்பையா மகன் எஸ்.முருகேசன் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம்ஸ்ரீவைகுண்டத்தில் முழு கடையடைப்பு, மவுன ஊர்வலம் நடந்தது. திருவள்ளுவர் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம், பெருமாள் கோவில் தெரு, போக்குவரத்து பணிமனை, ஆசாரிமார் தெரு வழியாக மேடை பிள்ளையார் கோவில் தெருவில் ஊர்வலம் நிறைவு அடைந்தது. அங்கு அப்துல் கலாம் உருவ படத்துக்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீவைகுண்டம் குமரகுருப சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்து வித்யாலயா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் அப்துல் கலாம் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
காயல்பட்டினம்காயல்பட்டினம் கடற்கரையில் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. நகரசபை தலைவி ஐ.ஆபிதா ஷேக், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அ.தி.மு.க. நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர், இளந்தளிர் முத்து, எல்.கே. பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஏ.செய்யது அகமது, பா.ஜ.க. காளிமுத்து, காங்கிரஸ் பாக்கர் சாகிப், துபாய் காயல் நலமன்ற தலைவர் அபுல் ஹசன், கொம்புத்துறை பவுல்ரோஸ், ஆசிரியர் பஷீருல்லா, நாடார் மக்கள் இயக்கம் சரவணகுமார், சமூக ஆர்வலர் ஆர்.எஸ்.கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காயல்பட்டினத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக அலங்கார வளைவு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

எட்டயபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எட்ட ய பு ரம், ஜூலை 31:
மறைந்த முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லா மிற்கு எட்ட ய பு ரத் தில் அர சி யல் கட் சி கள் உட் பட பல் வேறு அமைப் பு கள் அஞ் சலி செலுத் தி னர்.
எட்ட ய பு ரம் வர்த் த கர் கள் சங் கம் சார் பில் மாநில துணை த லை வர் ராஜா தலை மை யில் பட்டத்து விநா ய கர் கோவி லில் இருந்து மேல ரத வீதி பஸ் நிலை யம் வழி யாக பாரதி மணி மண் ட பம் வரை மௌன ஊர் வ லம் சென்று பின் னர் அங்கு நடந்த இரங் கல் கூட்டத் தில் அனை வ ரும் கலா மிற்கு அஞ் சலி செலுத் தி னர். கான் சா பு ரத் தில் காங் கி ரஸ் வடக்கு மாவட்ட பொரு ளா ளர் சீனி வா சன் தலை மை யி லும்
பஸ் நி லை யத் தில் மதி முக நகர செய லா ளர் காளி தாஸ் தலை மை யி லும் கலா மிற்கு அஞ் சலி செலுத் தி னர். இளம் பு வ னத் தில் வர்த் த கர் கள் சங்க தலை வர் சின் னச் சா மி பாண் டி யன் தலை மை யில் ஊர் வ ல மாக சென்று அஞ் சலி செலுத் தி னர். தாப் பாத் தி யில் ஊராட்சி ஒன் றிய நடு நி லைப் பள்ளி மாண வர் கள் மெழு கு வர்த்தி ஏந்தி அஞ் சலி செலுத் தி னர்.

கோவில்பட்டியில் கலாமிற்கு அஞ்சலி

கோவில்பட்டியில் கலாமிற்கு அஞ்சலி
கோவில் பட்டி, ஜூலை 31:
கோவில் பட்டி யில் ரோட்டரி சங் கம், லயன்ஸ் சங் கம், ஜேசிஐ அமைப் பு கள் சார் பில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லா மின் உரு வ ப டத் திற்கு ஏ.எஸ்.பி. முர ளி ராம்பா தலை மை யில் மாலை அணி வித்து அஞ் சலி செலுத் தப் பட்டது. பின் னர் மவுன ஊர் வ லம் நடந் தது.
கோவில் பட்டி யில் ரயில் நிலை யத் தில் ரயில்வே ஊழி யர் கள், ஆட்டோ ஓட்டு நர் கள், சதன் ரயில்வே மஸ் தூர் யூனி யன், இந்து மஸ் து சபா, ரயில்வே கேன் டிங் ஊழி யர் கள் சார் பில் மைக் கேல் தலை மை யில் அப் துல் க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித்து மெழு கு வர்த்தி ஏற்றி இரங் கல் தெரி விக் கப் பட்டது.
பாண் ட வர் மங் க லத் தில் பெதஸ்தா பவுன் டே சன் சார் பில் மாற் றுத் தி ற னா ளி கள் மெழு கு வர்த்தி ஏந்தி முக் கிய வீதி கள் வழி யாக சென்று அப் துல் க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித் த னர்.
கோவில் பட்டி யில் போட்டோ கிரா பர் கள் சங் கம் சார் பில் சுப் பா ரா யன் தலை மை யி லும், அகில இந் திய தேவர் மக் கள் கூட்ட மைப்பு நிறு வன தலை வர் அண் ணாத் துரை தலை மை யி லும் அப் துல் க லா மின் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித் த னர்.
காங் கி ரஸ் வடக்கு மாவட்ட தலை வர் காம ராஜ், க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார்.
இலுப் பை யூ ர ணி யில் மக் கள் நல் வாழ்வு அறக் கட்டளை, மக் கள் முன் னேற்ற அறக் கட்டளை, நலத் தொண்டு மாண வர் அறக் கட்டளை சார் பில் பஞ் சா யத்து தலை வர் செல்வி சந் தா னம் தலை மை யில் அறக் கட்டளை நிர் வா கி கள், உறுப் பி னர் கள், பொது மக் கள் அப் துல் க லா மின் உரு வ ப டங் களு டன் மௌன ஊர் வ லம் சென் ற னர். பசு வந் தனை ரோடு வியா பா ரி கள் சங்க தலை வர் பால் ராஜ் தலை மை யி லும், கட லை யூர் ரோடு வியா பா ரி கள் சங்க தலை வர் கணே சன் தலை மை யி லும் கலாம் உரு வ ப டத் திற்கு அஞ் சலி செலுத் தப் பட்டது.
கோவில் பட்டி யில் சமக நக ர செ ய லா ளர் முத் து க ணேஷ் தலை மை யில் அப் துல் க லாம் உரு வ ப டங் களை கைகளில் ஏந்தி அரசு மருத் து வ மனை வரை மவுன ஊர் வ லம் நடந் தது.
கோவில் பட்டி நாடார் மேல் நி லைப் பள் ளி யில் செய லா ளர் ஜெய பா லன் தலை மை யில் கலாம் படத் திற்கு அஞ் சலி செலுத் தப் பட்டது. தலை மை யா சி ரி யர் வடி வேல் உட் பட பலர் கலந் து கொண் ட னர். தட் சி ணா மூர்த்தி தெரு மாண வர் கள், இளை ஞர் கள் அப் துல் க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித்து மெழு கு வர்த்தி தீபம் ஏற்றி இரங் கல் தெரி வித் த னர்.
கோவில்பட்டியில் ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்கள் அப் துல் க லா மிற்கு அஞ்சலி செலுத்தினர்.
காட்டு ரா மன் பட்டி, துறை யூர் உள் ளிட்ட சுற் றுப் ப குதி கிரா மங் களில் அப் துல் க லாம் படத் திற்கு மலர் கள் தூவி மெழு கு வர்த்தி ஏந்தி மாண வர் கள், பொது மக் கள் அஞ் சலி செலுத் தி னர்.
கோவில்பட்டியில் ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்கள் அப் துல் க லா மிற்கு அஞ்சலி செலுத்தினர்.

ஏர லில் இந் தி யன் ஓவர் சீஸ் வங்கி இட மாற்ற புதிய கட்டி டத்தை மண் டல மேலா ளர் வளை யா பதி திறந்து வைத் தார்.

ஏர லில் இந் தி யன் ஓவர் சீஸ் வங்கி இட மாற்ற புதிய கட்டி டத்தை மண் டல மேலா ளர் வளை யா பதி திறந்து வைத் தார்.
ஏரலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு
ஏரல், ஜூலை 31:
ஏரல் பஜார் பகு தி யில் உள்ள ஒரு கடை யின் மாடி யில் செயல் பட்டு வந்த இந் தி யன் ஓவர் சீஸ் வங்கி தற் போது திருச் செந் தூர் ரோட்டில் உள்ள புதிய கட்டி டத் தில் இடம் மாற் றம் செய் யப் பட்டுள் ளது. இதன் திறப்பு விழா விற்கு முதன்மை மண் டல மேலா ளர் வளை யா பதி தலைமை வகித்து திறந்து வைத் தார்.
தொழி ல தி பர் கள் பிர பா கர், செல் வ ராஜ், கும ரே சன், வங்கி கிளை மேலா ளர் மகி பன், அதி கா ரி கள் சங்க தலை வர் முரு கான்ந்த், ஊழி யர் சங்க தலை வர் தன பால் குத்து விளக் கேற் றி னர். ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், தொழி ல தி பர் கள் தனுஷ் கோடி, சண் முக முரு கன், ஏரல் வியா பா ரி கள் சங் கம் துணைத் தலை வர் தாணு லிங் கம், செய லா ளர் ரவி சங் கர், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஏரல் நகர காங் கி ரஸ் தலை வர் பாக் கர் அலி, தொழி ல தி பர் கள் அழ கு ரா ம கி ருஷ் ணன், மோகன், திருப் ப ணி செட்டி கு ளம் பஞ் சா யத்து தலை வர் சுயம் பு லிங் கம் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் அப் துல் க லாம் மறை வுக்கு இரங் கல் தெரி வித்து மௌன ஊர் வ லம்

மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் அப் துல் க லாம் மறை வுக்கு இரங் கல் தெரி வித்து மௌன ஊர் வ லம் நடந் தது.
உடன் குடி, ஜூலை 31:
மெஞ் ஞா ன பு ரம் அம் பு ரோஸ் மேல் நி லைப் பள் ளி யில் அப் துல் க லாம் மறை வுக்கு அனு தா பம் தெரி வித்து தாளா ளர் பெஞ் ச மின் லிண் டால் தலை மை யில் மவுன ஊர் வ லம் நடந் தது.
தலைமை ஆசி ரி யர் ஜான் சன் பால் டே னி யல், மெஞ் ஞா ன பு ரம் பஞ்., தலை வர் ஜெப ராஜ் ராஜன் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
முன் ன தாக அப் துல் க லாம் படத் திற்கு மாலை அணி வித்து மாண வர் கள் 2 நிமி டங் கள் மவுன அஞ் சலி செலுத் தி னர். இதில் மெஞ் ஞா ன பு ரம் பஞ் சா யத்து துணைத் த லை வர் டேவிட் தமிழ்ச் செல் வன், பழைய மாண வர் கள் சங்க முன் னாள் தலை வர் பஞ் ச பதி மனோ க ரன் மற் றும் பலர் கலந்து கொண் ட னர்.
வேப் பங் காடு கீழ ரா ம சா மி யா பு ரம் புனித அன் னாள் தொடக்க மற் றும் உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி யர் தாளா ளர் நெல் சன் பால் ராஜ் தலை மை யில் முக் கிய தெருக் களின் வழி யாக அப் துல் க லாம் படத்தை ஏந் தி ய வாறு மௌன மாக ஊர் வ லம் சென் ற னர்.
இதில் ஆசி ரி யர் கள், மாண வர் கள், பொது மக் கள், நங் கை மொழி பஞ் சா யத்து தலை வர் உத ய கு மார் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
வேப் பங் காடு சி.பா.ஆதித் த னார் தொடக் கப் பள்ளி மற் றும் சிவந்தி ஆதித் த னார் உயர் நி லைப் பள் ளி யில் நடந்த ஊர் வ லத் திற்கு தொடக் கப் பள்ளி தலைமை ஆசி ரியை பூங் கொடி, உயர் நி லைப் பள்ளி தலைமை ஆசி ரி யர் செல் வ கு மார் ஆகி யோர் தலை மை யில் பள்ளி மாணவ, மாண வி யர், ஆசி ரி யை கள் அப் துல் க லாம் படத் திற்கு மாலை அ ணி வித்து அஞ் சலி செலுத்தி மௌன ஊர் வ லம் சென் ற னர்.
மெஞ்ஞானபுரத்தில் மவுன ஊர்வலம்

ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் ஆடி அமா வாசை திரு விழா ஆக. 5ம் தேதி காலை கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது.

ஏரல், ஜூலை 31:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் ஆடி அமா வாசை திரு விழா ஆக. 5ம் தேதி காலை கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது.
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் ஆடி அமா வாசை திரு விழா ஆக. 5ம் தேதி காலை 6 மணிக்கு கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது.
இரவு 8 மணிக்கு கேட ய சப் ப ரத் தில் அரு ணா சல சுவாமி திருக் கோ லம் கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடக் கி றது.
6ம் தேதி இரவு 8 மணிக்கு திரு ஆல் வாக னத் தில் குறி சொல் லும் கூத் தன் அலங் கா ரத் தில் கோயில் வலம் வரு தல் நடக் கி றது. 7ம் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப் ப ரத் தில் சதா சி வ மூர்த்தி அலங் கா ரம் கோயில் வலம் வரு தல், 8ம் தேதி இரவு 8 மணிக்கு பூங் கு யில் சப் ப ரத் தில் நட ரா ஜர் அலங் கா ரம் கோயில் வலம் வரு தல், 9ம் தேதி காலை சேர்ம விநா ய கர் திரு உலா நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு திருப் புன் னைச் சப் ப ரத் தில் நவ நீ த கி ருஷ்ண அலங் கா ரம் திருக் கோ யில் வலம் வரும் நிகழ்ச்சி நடக் கி றது.
முக் கிய நிகழ்ச்சியான ஆடி அமா வாசை திரு விழா 14ம் தேதி வெள் ளிக் கி ழமை நடக் கி றது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உரு கு ப ல கை யில் கற் பூ ர வி லா சம் வரும் காட்சி, சிறப்பு அபி ஷேக ஆரா த னை யும், மாலை 4.30 மணிக்கு இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோ ல மும், இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சுவாமி எழுந் த ரு ளல் நிகழ்ச்சி நடக் கி றது.
16ம் தேதி திரு விழா நிறைவு விழா நடக் கி றது. விழா ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய்து வரு கி றார்.
ஆக. 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
ஏரல் சேர்மன் கோயில்
ஆடி அமாவாசை திருவிழா

தூத் துக் குடி ராஜாஜி பூங் கா வில் முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் கலா மிற்கு அஞ் சலி செலுத் தும் வித மாக சர்வ சமய பிரார்த் தனை நடந்தது.

தூத் துக் குடி ராஜாஜி பூங் கா வில் முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் கலா மிற்கு அஞ் சலி செலுத் தும் வித மாக சர்வ சமய பிரார்த் தனை நடந்தது.
கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
சர்வ சமய பிரார்த்தனை
தூத் துக் குடி, ஜூலை 31:
தூத் துக் கு டி யில் முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் கலா மிற்கு அஞ் சலி செலுத் தும் வித மாக சர்வ சமய பிரார்த் தனை நடை பெற் றது.
தூத் துக் குடி ராஜாஜி பூங் கா வில் நடை பெற்ற இந் நி கழ்ச் சி யில் இந்து, கிறிஸ் தவ, இஸ் லா மிய முறைப் படி பிரார்த் தனை நடை பெற் றது. பிரார்த் த னைக்கு தூத் துக் குடி மறை மா வட்ட ஆயர் இல்ல பாதி ரி யார் லயோலா, சிவன் கோ வில் அர்ச் ச கர் சங் க ர ரா மன், தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி, முன் னாள் அமைச் சர் கீதா ஜீ வன், முன் னாள் கவுன் சி லர் வீ ராங் கனை அமைப்பு பேரா சி ரியை பாத் திமா பாபு, இந்து மகளிர் அணி அமைப்பு சார் பில் ராஜ லெட் சுமி, பாஜக சார் பில் தேசிய குழு உறுப் பி னர் சந் த ன கு மார் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இதில் தூத் துக் குடி மாவட்ட ஓய் வு பெற்ற காவ லர் நலச் சங்க தலை வர் ஜெப மணி, பொரு ளா ளர் ராம சாமி, நகர திமுக செய லா ளர் ஆனந் த சே க ரன், கிறிஸ் தவ ஐக் கிய சங் கம் சார் பில் பாதி ரி யார் ஜெய ராஜ், நாம் தமி ழர் கட்சி மாவட்ட ஒருங் கி ணைப் பா ளர் பிரபு, அதி முக நகர செய லா ளர் ஏசா துரை, தமி ழக வாழ் வு ரிமை கட்சி சார் பில் ரிச் சர்ட் தேவ ச கா யம், காங் . மகளி ரணி தலைவி கனி யம் மாள், மதி முக மாந கர துணைத் த லை வர் முரு க பூ பதி உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி
தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு
தூத் துக் குடி, ஜூலை 31:
முன் னாள் குடி ய ர சுத் தலை வர் அப் துல் கலாம் மறை வுக்கு அஞ் சலி செலுத் தும் வண் ணம் தூத் துக் கு டி யில் நேற்று அனைத்து கடை களும் அடைக் கப் பட்டி ருந் தன. வேம் பார் முதல் பெரி ய தாழை வரை நாட்டு பட கு கள் மற் றும் விசைப் ப ட கு கள் மீன் பி டிக்க செல் ல வில்லை.
முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறை வை யொட்டி நேற்று பொது விடு முறை அறி விக் கப் பட்ட தால் தூத் துக் குடி மாவட்டத் தில் பள்ளி, கல் லூ ரி கள் மற் றும் கல் வி நி லை யங் கள் இயங் க வில்லை. நேற்று முன் தி னம் இரவு முதலே பல் வேறு தரப் பி ன ரும் கலா மிற்கு அஞ் சலி செலுத்த வாக னங் களில் புறப் பட்டு ராமேஸ் வ ரம் சென்ற வண் ணம் இருந் த னர்.
தூத் துக் குடி டபிள் யூ ஜிசி ரோடு, ஜிசி ரோடு, மட்டக் கடை, தாள முத் து ந கர், திரேஸ் பு ரம், சண் மு க பு ரம், 3வது மைல் உள் ளிட்ட நக ரப் பகு தி கள் மற் றும் கோவில் பட்டி, திருச் செந் தூர், விளாத் தி கு ளம், வை குண் டம், சாத் தான் கு ளம், ஆழ் வார் தி ரு ந கரி, ஓட்டப் பி டா ரம், கயத் தாறு, எட்டை ய பு ரம் உள் ளிட்ட மாவட்டத் தின் பல இடங் களி லும் 95 சத வீத கடை கள் அடைக் கப் பட்டி ருந் தன. திரை அரங் கு களில் பகல் காட் சி கள் ரத்து செய் யப் பட்டன.
ஆனால், தூத் துக் குடி காம ராஜ் காய் கனி மார்க் கெட் காலை முதலே இயங் கி யது.
பஸ் கள் வழக் கம் போல் ஓடின. ஆனால், பய ணி கள் கூட்டம் குறை வாக இருந் தது. பெரும் பா லான லாரி கள், ஆட்டோக் கள், ஓட வில்லை. மாவட்டத் தில் மொத் தம் சுமார் 30 சத வீத வாக னங் கள் ஓட வில்லை.
லாரி கள் ஓடா த தால் புதிய துறை மு கத் தில் ஏற் று மதி இறக் கு மதி பாதிக் கப் பட்டது. 3வது தளம் முதல் 8வது தளம் வரை யில் 5 கப் பல் கள் நிறுத் தப் பட்டுள் ளன. 1வது மற் றும் 2வது தளத் தில் அனல் மின் நிலை யத் திற்கு நிலக் கரி கொண்டு செல் லும் பணி மட்டும் நடந்து வரு கி றது.
தூத் துக் கு டி யில் உள்ள சில தொழிற் சா லை கள் இயங் க வில்லை. இத னால் வாகன போக் கு வ ரத்து குறைந்து நகர வீதி கள் வெறிச் சோடி காணப் பட்டது. எப் போ தும் பர ப ரப் பாக காணப் ப டும் பழைய பஸ் நிலை யப் பகுதி, மக் கள் நட மாட்டம் அதி க மின்றி அமை தி யாக காட் சி ய ளித் தது.
நக ரின் பல் வேறு இடங் களில் பொது மக் கள் அப் துல் கலாம் உரு வப் படத் திற்கு மலர் தூவி மரி யாதை செலுத் தி னர். சிலர் வீடு கள் முன் பும் அப் துல் கலாம் படத் துக்கு மாலை அணி வித்து அஞ் சலி செலுத் தி னர். மாவட்டம் முழு வ தும் மூலை முடுக் கு களில் எல் லாம் அப் துல் க லாம் படங் கள், பேனர் கள் வைக் கப் பட்டி ருந் தன.
பல் வேறு அமைப் பு கள், நிறு வ னங் கள், இயக் கங் கள், குழுக் கள் என தனித் த னி யாக அஞ் சலி செலுத் தும் நிகழ்ச்சி நடந் தது. தூத் துக் குடி பள் ளி வா சல் காம்ப் ளக்ஸ் பகு தி களில் இரங் கல் தெரி விக் கும் வித மாக கறுப்பு கொடி கட்டப் பட்டி ருந் தது. மேலும் தூத் துக் குடி மாவட்டத் தில் வேம் பார் முதல் பெரி ய தாழை வரை 3 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட நாட்டு பட கு களும் 240க்கும் மேற் பட்ட விசைப் ப ட கு களும் மீன் பி டிக்க செல் ல வில்லை.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவை முன்னிட்டு தூத்துக்குடியில் டபுள்யூஜிசி சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தது.

21 குண் டு கள் முழங்க முழு ராணுவ மரி யா தை யு டன் கலாம் உடல் அடக் கம்

21 குண் டு கள் முழங்க முழு ராணுவ மரி யா தை யு டன்
கலாம் உடல் அடக் கம்
ராமேஸ் வ ரத் தில் நாடே திரண்டு கண் ணீர் அஞ் சலி
நல் ல டக் கம் செய் வ தற்கு முன், அப் துல் கலாம் உட லுக்கு பிர த மர் மோடி சுற்றி வந்து இறுதி மரி யாதை செலுத் து கி றார். (மேலும் படங்கள், செய்தி: பக்கம் - 5, 6, 7, 8)
ராமேஸ் வ ரம், ஜூலை 31:
ராமேஸ் வ ரத் தில் நாடே திரண்டு கண் ணீர் அஞ் சலி செலுத்த, முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லாம் உடல் நேற்று நல் ல டக் கம் செய் யப் பட்டது. பிர த மர் மோடி, காங் கி ரஸ் துணைத் தலை வர் ராகுல் காந்தி, மூன்று மாநில முதல் வர் கள் மற் றும் பல் வேறு அர சி யல் கட் சி களின் தலை வர் கள் இறுதி மரி யாதை செலுத் தி னர்.
முன் னாள் ஜனா தி பதி அப் துல் கலாம் (84), கடந்த 27ம் தேதி இரவு மேகா லயா தலை ந கர் ஷில் லாங் கில் கால மா னார். அவ ரது உடல் 28ம் தேதி காலை டெல் லி யில் உள்ள அவ ரது இல் லத் திற்கு கொண்டு வரப் பட்டது. நேற் று முன் தி னம் காலை கலா மின் உடல், தனி விமா னம் மூலம் மதுரை வந் தது. அங் கி ருந்து ஹெலி காப் ட ரில் அவ ரது சொந்த ஊரான ராமேஸ் வ ரத் துக்கு கொண்டு வரப் பட்டது.
ராமேஸ் வ ரம் தேசிய ெநடுஞ் சா லை யில் ஆத் திக் காடு என்ற இடத் தில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக் கள் அஞ் ச லிக் காக வைக் கப் பட்டது. மத் திய, மாநில அமைச் சர் கள், அர சி யல் தலை வர் கள், மாண வர் கள், இளை ஞர் கள் என 2 லட் சத் திற் கும் மேற் பட்டோர் அஞ் சலி செலுத் தி னர். இரவு 10 மணிக்கு ராமேஸ் வ ரம் முஸ் லிம் தெரு வில் உள்ள கலாம் அண் ணன் முக மது முத் து மீரா லெப்பை மரைக் கா யர் வீட்டிற்கு, ராணுவ வாக னத் தில் உடல் எடுத் துச் செல் லப் பட்டது. அங்கு கலா மின் குடும் பத் தி னர், உற வி னர் கள் மற் றும் பொது மக் கள் அவ ரது உட லுக்கு அஞ் சலி செலுத் தி னர்.
அடக் கம் செய் யப் பட்ட இடத் தில் மல ரஞ் சலி செலுத் தும் பொது மக் கள்.
மோடி, ராகுல், 3 முதல் வர் கள் இறுதி மரி யாதை
ராமேஸ் வ ரம் தேசிய ெநடுஞ் சா லை யில் ஆத் திக் காடு என்ற இடத் தில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக் கள் அஞ் ச லிக் காக வைக் கப் பட்டது. மத் திய, மாநில அமைச் சர் கள், அர சி யல் தலை வர் கள், மாண வர் கள், இளை ஞர் கள் என 2 லட் சத் திற் கும் மேற் பட்டோர் அஞ் சலி செலுத் தி னர். இரவு 10 மணிக்கு ராமேஸ் வ ரம் முஸ் லிம் தெரு வில் உள்ள கலாம் அண் ணன் முக மது முத் து மீரா லெப்பை மரைக் கா யர் வீட்டிற்கு, ராணுவ வாக னத் தில் உடல் எடுத் துச் செல் லப் பட்டது. அங்கு கலா மின் குடும் பத் தி னர், உற வி னர் கள் மற் றும் பொது மக் கள் அவ ரது உட லுக்கு அஞ் சலி செலுத் தி னர்.
ஜனாசா தொழுகை:
நேற்று காலை உற வி னர் கள், அவ ரது உட லுக் கான இறுதி சம் பி ர தா யங் களை மேற் கொண் ட னர். காலை 9.35 மணிக்கு முகை தீன் ஆண் ட வர் பள் ளி வா ச லுக்கு உடல் எடுத் துச் செல் லப் பட்டது. ஜமாத் தார் கள் சார் பில் அங்கு ஜனாசா தொழுகை நடந் தது.
பின் னர் அங் கிருந்து 10.30 மணிக்கு ராணுவ வாக னம் மூலம், ராமேஸ் வ ரத் தில் இருந்து 6 கிமீ தொலை வில் உள்ள பேக் க ரும்பு என்ற இடத் திற்கு ஊர் வ ல மாக உடல் எடுத்து செல் லப் பட்டது. கனத்த இத யத் து டன் லட் சக் க ணக் கான மக் கள் கண் ணீ ரு டன் ஊர் வ லத் தில் பங் கேற் ற னர். வழி யெங் கும் மக் கள் மலர் தூவி பிரி யா விடை கொடுத் த னர். காலை 11 மணிக்கு பேக் க ரும் பில் அடக் கம் செய்ய தேர்வு ெசய் யப் பட்டி ருந்த திட லுக்கு உடல் வந் த டைந் தது.
மோடி, ராகுல்:
அங்கு ராணுவ வீரர் கள் கலாம் உடல் இருந்த பெட்டியை இறக்கி வைத் த னர். அப் போது அப் துல் கலாம் உட லுக்கு பிர த மர் மோடி இறுதி அஞ் சலி செலுத் தி னார். அகில இந் திய காங் கி ரஸ் துணை தலை வர் ராகுல் காந் தி யும் மலர் தூவி இறுதி மரி யாதை செலுத் தி னார். தமி ழக கவர் னர் ரோசய்யா, மத் திய அமைச் சர் கள் மற் றும் மூன்று மாநில அமைச் சர் கள், மாநில முதல் வர் கள், முக் கி யப் பிர மு கர் கள் அஞ் சலி செலுத் தி னர். முப் படை வீரர் கள் மரி யாதை செய்து கலாம் உடல் மீது போர்த் தி யி ருந்த தேசி யக் கொ டியை அகற் றி னர். பின் னர் அலங் க ரிக் கப் பட்ட
8ம் பக்கம் பார்க்க
கடைசி நிமி டங் கள்...
09.35:
வீட்டில் இருந்து பள் ளி வா ச லுக்கு கலாம் உடல் வருகை.
10.30:
பச்சை போர் வை யு டன் உடல், திடலை நோக்கி இறுதி பய ணம்.
10.58:
காங் கி ரஸ் துணை தலை வர் ராகுல் வரு கி றார்.
11.00:
பிர த மர் மோடி கார் நுழை கி றது.
11.05:
திட லுக்கு வந்து சேர் கி றது கலாம் உடல்.
11.47:
தலை வர் கள் அஞ் ச லிக்கு பின் உடல், ஜமாத் தா ரி டம் ஒப் ப டைப்பு.
11.55:
21 குண் டு கள் முழங்க உடல் அடக் கம்.
12.10:
அடக் கம் செய்த இடத் தில் மலர் குவி யல்.
12.15:
மோடி, ராகுல் விடை பெறு கின் ற னர்.
12.20:
முப் படை வீரர் களும் வெளி யே று கின் ற னர்.

ஏரல் காந் தி சிலை அரு கில் உள்ள ஒரு பெட்டி கடை முன் அடை யா ளம் தெரி யாத ஒரு மூதாட்டி இறந்து கிடந் தா

ஏரல், ஜூலை 30:
ஏரல் காந் தி சிலை அரு கில் உள்ள ஒரு பெட்டி கடை முன் அடை யா ளம் தெரி யாத ஒரு மூதாட்டி இறந்து கிடந் தார். இது கு றித்து போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
ஏரல் காந் தி சிலை பஸ் ஸ்டாப் அரு கில் உள்ள ஒரு பெட்டி கடை முன் 80 வயது மதிக் க த்தக்க ஒரு மூதாட்டி இறந்து கிடப் ப தாக சிறுத் தொண் ட நல் லூர் விஏஓ காளி ராஜ் ஏரல் போலீ சில் புகார் செய் தார்.
இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ மந் தி ர மூர்த்தி மற் றும் போலீ சார் சம் பவ இடத் திற்கு வந்து விசா ரணை நடத் தி னர்.
இதில் இறந்த பெண் கடந்த ஒரு வார கால மாக ஏரல் பஜார் பகு தி யில் சுற்றித் தி ரிந் தது தெரி யவந் துள் ளது. மேலும் யார் அவர்? எந்த ஊர்? என் பது குறித்து போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லாம் மறை விற்கு இரங் கல் அஞ் சலி செலுத் தப் பட்டது.

ஏரல், ஜூலை 30:
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லாம் மறை விற்கு இரங் கல் அஞ் சலி செலுத் தப் பட்டது.
ஏரல் மணிக் கூண்டு அரு கில் அலங் க ரிக் கப் பட்டி ருந்த அப் துல் க லாம் உரு வப் ப டத் திற்கு நகர தலை வர் பாக் கர் அலி மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். நிகழ்ச் சி யில் முன் னாள் வட்டார தலை வர் கந் த சாமி, நிர் வா கி கள் பிஸ் மி சுல் தான், சிந்தா, ரியாஸ் தீன், முரு கன் மற் றும் சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சாதிக் குல் அமீன், ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் க பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ஏரலில் கலாமிற்கு அஞ்சலி
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் மறைந்த முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லாமிற்கு அஞ் சலி செலுத் தப் பட்டது.

சனி, 18 ஜூலை, 2015

குல சே க ரன் பட்டி ணம் பிஎஸ் எம் நடு நி லைப் பள்ளி மாணவி ஜெஸ் மின் ஷேக் பரிதா தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி

தேசிய திறனாய்வு தேர்வில்
குலசை பள்ளி மாணவி வெற்றி
உடன் குடி, ஜூலை 19:
குல சே க ரன் பட்டி ணம் பிஎஸ் எம் நடு நி லைப் பள்ளி மாணவி ஜெஸ் மின் ஷேக் பரிதா தேசிய அள வில் நடந்த திற னாய்வு தேர் வில் வெற்றி பெற் றுள் ளார்.
மத் திய அர சின் மனித வள மேம் பாட்டு துறை சார் பில் ஆண் டு தோ றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாண வி களுக் கான தேசிய அள வி லான திற னாய்வு தேர்வு நடத் தப் ப டு கி றது. கடந்த ஆண்டு நடந்த திற னாய்வு தேர்வு முடி வு கள் சமீ பத் தில் வெளி யி டப் பட்டது. இதில் குல சே க ரன் பட்டி னம் பிஎஸ் எம் பள்ளி மாணவி ஜெஸ் மின் ஷேக் பரிதா வெற்றி பெற் றுள் ளார். இவ ருக்கு மாதம் தோறும் கல்வி உத வித் தொகை யாக ரூ.500 தூத் துக் குடி மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ ல கத் தின் மூலம் வழங் கப் ப டும்.
வெற்றி பெற்ற மாண வியை பள் ளி யின் நிர் வாகி ஆனந் த கு மார், உடன் குடி உதவி தொடக் கக் கல்வி அலு வ லர் ஜேசு தாஸ் செல் வ கு மார், தலைமை ஆசி ரி யர் சுபாஷ் சந் தி ர போஸ், முன் னாள் தலைமை ஆசி ரி யர் முரு கன் மற் றும் ஆசி ரிய, ஆசி ரி யை கள் பாராட்டி னர்.

ஏரல்-புதுக்கோட்டை சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் கலெக்டரிடம் மக்கள் மனு

தூத் துக் குடி, ஜூலை 19:
ஏரல்-புதுக் கோட்டை மினி பஸ் செல் வ தற் கான சாலையை சீர மைக்க கோரிக்கை விடுக் கப் பட்டுள் ளது.
இது கு றித்து தூத் துக் குடி மாவட்ட கிரா ம வாழ் மக் கள் நலச் சங்க அமைப் பா ளர் நயி னார் கு ல சே க ரன் கலெக் ட ரிம் கொடுத் துள்ள கோரிக்கை மனு:
வை குண் டம் ஒன் றி யத் திற் குட் பட்ட சின் ன நட்டாத்தி, சிறு தொண் ட நல் லூர், கண் ணாண் டி விளை மற் றும் சுற் று வட்டார பகுதி கிரா ம மக் கள் பயன் பெ றும் வகை யில் இந்த வழி யாக ஏர லில் இருந்து புதுக் கோட்டை வரை மினி பஸ் பல வ ருட கால மாக இயக் கப் பட்டு வந் தது.
இந் நி லை யில், சின் ன நட்டாத்தி வடி கால் வாய்க் கா லின் தென் ப குதி கரை யில் இருந்து சிறு தொண் ட நல் லூர் பாலம் வரை யுள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூர சாலை யா னது மிக வும் பழு த டைந்து வாக னங் கள் எது வும் செல் ல மு டி யாத நிலை யில் உள் ளது. இதன் கா ர ண மாக இந்த வழி யாக இயக் கப் பட்டு வந்த மினி பஸ் திடீ ரென்று நிறுத் தப் பட்டு விட்டது.
சாலை பழு தால் மினி பஸ் நிறுத் தப் பட்டுள்ள நிலை யில் இதனை நம் பி யுள்ள கிரா ம மக் கள், மாணவ, மாண வி கள், வணி கர் கள், தொழி லா ளர் கள் என அனை வ ரும் பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
எனவே இப் ப குதி பொது மக் கள் பயன் பெ றும் வகை யில் பழு தான சாலையை உட ன டி யாக சீர மைத்து மினி பஸ் சீராக இயங் கிட துரித நட வ டிக்கை எடுத் தி ட வேண் டும் என்று அதில் கூறி யுள் ளார்.

வை குண் டம் வட கால் வாய்க் கா லில் சிவ ரா மமங் க லம் பாலம் அரு கில் உள்ள மடைப் ப கு தி யில் தண் ணீர் செல் வ தற்கு தடை யாக ஆக் கி ர மிப்பு செய் துள்ள அமலை செடி களை விவ சா யி கள் அகற் றி னர்.

ஏரல், ஜூலை 19:
வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் செல் வ தற்கு தடை யாக வாய்க் கா லில் ஆக் கி ர மித் தி ருந்த அமலை செடி களை விவ சா யி கள் ஜேசிபி மூலம் நேற்று அகற் றி னர்.
ஏரல் அருகே ஆறு மு க மங் க லம் குளம், கொற்கை குளம் மற் றும் பேய்க் கு ளம் குளங் கள் மூலம் பல ஆயி ரக் க ணக் கான ஏக் கர் பரப் ப ள வில் விவ சா யம் நடந்து வரு கி றது. இதில் பல லட் சம் வாழை மற் றும் நெல் விவ சா யி கள் பயிர் செய் துள் ள னர். வை குண் டம் வட கால் வாய்க் கால் மூலம் இந்த குளங் களுக்கு தண் ணீர் வந்து சேரும். இப் ப கு தி யில் உள்ள குளங் கள் அனைத் தும் தூர் வாரி பரா ம ரிக் கப் ப டா த தி னால் தண் ணீரை குளங் களில் அதிக அளவு தேக்கி வைக்க முடி யாத நிலை ஏற் பட்டுள் ளது.
இத னால் இரு போக விளைச் சல் கண்ட இப் ப கு தி யில் ஒரு போக விளைச் ச லுக்கே விவ சா யி கள் தண் ணீ ருக் காக ஆண் டு தோ றும் போராடி வரு கின் ற னர். தற் பொ ழுது இப் ப குதி குளங் களில் தண் ணீர் இல் லா மல் வறண்டு போய் உள் ளது. இத னால் இக் கு ளங் களை நம்பி பயிர் செய் துள்ள வாழை மற் றும் நெல் பயிர் கள் கரு கும் நிலை ஏற் பட்டு உள் ளது. இத னால் விவ சா யி கள் தங் கள் வாழை மற் றும் நெல் பயிர் களை காப் பாற்ற ஆயில் இன் ஜின் மூலம் தண் ணீர் பாய்த்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் தண் ணீர் திறந்து விடப் பட்டுள் ளது. ஆனால் வாய்க் கா லில் அமலை செடி கள் ஆக் கி ர மிப்பு, பட்ட மரங் கள் வாய்க் கா லில் சரிந்து விழுந்து கிடந் த தா லும் தண் ணீர் வரத்து வாய்க் கா லில் தடைப் பட்டு, குளத் திற்கு தண் ணீர் வந்து சேர வில்லை.
இத னால் உம ரிக் காடு, வாழ வல் லான், முக் காணி மற் றும் கொடுங் கனி பகுதி வாழை விவ சா யி கள் வை குண் டம் வட கால் வாய்க் கா லில் சிவ ரா ம மங் க லம் பாலம் அரு கில் ஆக் கி ர மிப்பு செய் துள்ள அம லை செ டி களை ஜேசிபி மூலம் அப் புற் ப டுத் தி னர். மேலும் மடை பகு தி யில் விவ சா யி கள் தண் ணீ ரில் இறங் கி யும் தண் ணீர் செல் வ தற்கு தடை ஏற் ப டுத்தி வரும் செடி, கொடி களை அப் பு றப் ப டுத் தி னர்.

புதுக்கோட்டை, உடன்குடியில் ரம் ஜான் தொழுகை

துக் கோட்டை யில் உள்ள ஜன் னத் துல் பிர் தௌஸ் ஜீம்ஆ பள்ளி வாச லில் நேற்று ரம் ஜான் தொழுகை நடந் தது.
புதுக்கோட்டை, உடன்குடியில்
ரம்ஜான் தொழுகை
புதுக் கோட்டை, ஜூலை 19:
புதுக் கோட்டை அருகே உள்ள கூட்டாம் புளி சாலை அருகே உள்ள ஜன் னத் துல் பிர் தௌஸ் ஜீம்ஆ பள்ளி வாச லில் நேற்று ரம் ஜான் தொழுகை நடந் தது.
ரம் ஜான் தொழு கையை மௌலவி உமர் பா ரூக் அவர் கள் நடத் தி னார்.இத் தொ ழு கை யில் நோன் பின் சிறப்பை பற்றி விரி வாக பேசி னார்.இதில் செய லா ளர் ஜனாப் செய் யது சுலை மான்,மற் றும் செய் யது சிக் கந் தர் ஆகி யோர் தொழு கை யில் கலந்து கொண் ட னர். இதில் புதுக் கோட்டையை சுற் றி யுள்ள பகு தி களி லி ருந்து முஸ் லீம் பெரு மக் கள் அனை வ ரும் கலந்து கொண்டு ஒரு வ ருக் கொ ரு வர் ரம் ஜான் வாழ்த் துக் களை தெரி வித் துக் கொண் ட னர்.
உடன் குடி:
தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் உடன் குடி கிளை சார் பில் நோன்பு பெரு நாள் தொழுகை நபி வழிப் படி எம் ஜு ஆர் நகர் திட லில் நடந் தது. இதில் குத் பு தீன் தொழுகை நடத் தி னார். கிளை தலை வர் தவ் லத் துல்லா, செய ளா ளர் ஹஸன் மற் றும் உமர், யுசுப், இப் ரா ஹிம், ஆரிப் மற் றும் பலர் கலந்து கொண் ட னர்.

காயல்பட்டினத்தில் ரம்ஜான் தொழுகை

காயல்பட்டினத்தில்
ரம்ஜான் தொழுகை
ஆறு மு க நேரி, ஜூலை 19:
காயல் பட்டி னத் தில் ரம் ஜான் பெரு நாளை முன் னிட்டு தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் கிளை சார் பில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் திர ளான முஸ் லிம் கள் கலந்து கொண் ட னர்.
நோன்பு பெரு நாள் சிறப்பு தொழுகை மற் றும் பெரு நாள் உரையை மஸ் ஜி துத் தவ் ஹித் பள்ளி கத் தீபு அப் துல் மஜீது உமரி நடத் தி னார். இந்த சிறப்பு தொழு கை யில் தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் கிளை நிர் வா கி கள், மாண வ ர ணி யி னர் உட் பட திர ளான முஸ் லிம் கள் கலந்து கொண் ட னர்.
புதுப் பள்ளி, மரைக் கார் பள்ளி, ஆறாம் பள்ளி, பெரிய குத்பா பள்ளி, சிறிய குத்பா பள்ளி, கொடி ம ரத்து சிறு நெய்னா பள்ளி, இரட்டை கு ளத்து பள்ளி, அரு ஸியா பள்ளி, குரு வித் துறை பள்ளி, தாயிம் பள்ளி, காட்டு மொக தூம் பள்ளி, மொதூம் பள்ளி உள் ளிட்ட 36 பள் ளி வா சல் கள், 28 பெண் கள் தைக் கா களி லம் சிறப்பு தொழுகை நடந் தது. ரம் ஜான் பெரு நாளை முஸ் லிம் கள் புத் தாடை அணிந்து ஒரு வ கொ ரு வர் கட்டி தழுவி வாழ்த்து தெரி வித் துக் கொண் ட னர். பாது காப்பு ஏற் பா டு களை ஆறு மு க நேரி இன்ஸ் பெக் டர் முத் து சுப் பி ர ம ணி யன் தலை மை யில் எஸ்ஐ மாட சாமி உட் பட ஏரா ள மான போலீ சார் ஈடு பட்ட னர்.



காயல் பட்டி னத்தில் தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் கிளை சார் பில் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடந் தது. இதில் திர ளான முஸ் லிம் கள் கலந்து கொண் ட னர்.

தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
தூத் துக் குடி, ஜூலை 19:
தூத் துக் கு டி யில் ரம் ஜான் பண் டி கையை முன் னிட்டு நடந்த சிறப்பு தொழு கை யில் ஆயி ரக் க ணக் கான முஸ்லிம்கள் கலந்து கொண் ட னர்.
முஸ் லிம் களின் முக் கிய பண் டி கை யான ரம் ஜான் பண் டிகை நேற்று வழக் க மான உற் சா கத் தோடு தூத் துக் குடி மாவட்டத் தில் கொண் டா டப் பட்டது.
இத னை யொட்டி தூத் துக் குடி, பாளை யங் கோட்டை ரோட்டில் அரசு மருத் து வ மனை அரு கில் உள்ள ஈத்கா மைதா னத் தில் இமாம் ஷேக் உது மான் தலை மை யில் சிறப்பு தொழுகை நடந் தது.
இதே போன்று ரோச் பூங் கா வி லும் தொழுகை நடத் தப் பட்டது. இதில் ஆயி ர க ணக் கான முஸ் லிம் கள் பங் கேற் ற னர்.
மேலும் தூத் துக் கு டி யில் திரேஸ் பு ரம், ரஹ மத் துல்லா நகர், ஜெயி லாணி தெரு, புதுத் தெரு, முத் தம் மாள் காலனி, ஜாகிர் உசேன் நகர் பகு தி களில் உள்ள பள்ளி வாசல் களில் நடந்த தொழு கை களில் புத் தா டை கள் அணிந்து வந்த முஸ் லிம் கள் ஒரு வரை ஒரு வர் கட்டித் த ழுவி வாழ்த் துக் களை தெரி வித் த னர்.
தூத்துக்குடி ஈத்கா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Needhi Ketkum Perani at Cuddalore

செவ்வாய், 14 ஜூலை, 2015

அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு ஏரல் பஸ் நிலைய சீரமைப்பு பணியை உடனே துவக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்

அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
ஏரல் பஸ் நிலைய சீரமைப்பு பணியை உடனே துவக்க வேண்டும்
பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
ஏரல், ஜூலை 14:
ஏரல் பஸ் நிலை யத்தை சீர மைக்க ரூ.50 லட் சம் நிதி ஒதுக் கப் பட்டுள் ளது. ‘பஸ் நிலை யத்தை சர்வே செய்து ஆக் கி ர மிப் பு களை அகற்றி உடனே பணி களை துவங்க வேண் டும்’ என பய ணி கள் நலச் சங் கம் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட்டத் தில் ஏரல் முக் கிய வியா பார த ல மாக உள் ளது. நூற் றுக் கும் மேற் பட்ட கிரா மங் களில் இருந்து தின சரி பல ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர்.
ஆனால் இங் குள்ள பஸ் நிலை யம் தரைப் ப குதி ரோடு கள் பெயர்ந்து, காங் கி ரீட் கம் பி கள் வெளியே தெரிந் த வண் ணம் உள் ளது.
மேலும் பஸ் நிலை யத் தில் உள்ள வடி கால் களும் இருந்த இடம் தெரி யா மல் தூர்ந்து போன தா லும், பஸ் நிலை யத்தை விட வெளியே சுற் றி யுள்ள ரோடு கள் உயர் வாக இருப் ப தா லும் மழைக் கா லத் தில் தண் ணீர் பஸ் நிலை யத் திற் குள் புகுந்து பஸ் நிலை யம் சேறும், சக தி யு மாக மாறி வி டும்.
வெயில் காலத் தில் வெயி லி லும், மழைக் கா லத் தில் மழை யி லும் நனைந்து ஒதுங்கி நிற் கக் கூட முடி யாத நிலை யில் பய ணி கள் அவ திப் பட்டு வரு கின் ற னர். மேலும், தனி யார் வாக னங் களை பஸ் நிலை யத் தில் நிறுத்தி வைப் ப தா லும், இரு சக் கர வாக னங் கள் பஸ் நிலை யத் திற் குள் அதிக அளவு வந்து செல் வ தா லும் பய ணி கள் மேலும் சிர மப் பட்டு வரு கின் ற னர்.
எனவே பஸ் நிலை யத்தை சீர மைத் திட வேண் டும் என ஏரல் பகுதி மக் கள் அர சுக்கு தொடர்ந்து பல ஆண் டு க ளாக கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில் தூத் துக் குடி கலெக் டர் ரவிக் கு மார் கடந்த மார்ச் மாதம் ஏரல் பஸ் நிலை யத்தை பார் வை யிட்டு ஆக் கி ர மிப் பு களை அகற்றி பஸ் நிலை யத்தை சீர மைக்க நட வ டிக்கை எடுப் ப தாக கூறி சென் றார்.
தற் போது, ஏரல் பஸ் நிலை யத்தை சீர மைக்க, இயக் கம் மற் றும் பரா ம ரிப்பு திட்டத் தின் கீழ் அரசு ரூ.50 லட் சம் நிதி ஒதுக் கீடு செய் தது.
இதற் கான, டெண் டர் விடப் பட்டு வேலை கள் கடந்த வாரம் தொடங் கப் பட்டன. பஸ் நிலை யத் தில் காம் ப வுண்ட் சுவர் கட்டு வ தற் காக ஜேசிபி மூலம் தோண் டி ய போது, பஸ் நிலை யத் தில் உள்ள வியா பா ரி கள் காம் ப வுண்ட் சுவர் கட்டப் பட்டால் தங் களுக்கு வியா பா ரம் பாதிக் கப் ப டும் என எதிர்ப்பு தெரி வித் த தால் வேலை கள் தொடர்ந்து நடை பெ றா மல் உள் ளது.
இதற் கி டை யில், ஏரல் பஸ் நிலை யத்தை முறைப் படி சர்வே செய்து ஆக் கி ர மிப்பு இடங் களை பேரூ ராட்சி நிர் வா கம் கைப் பற் ற வில்லை என பேரூ ராட்சி நிர் வா கத் தி னரை கண் டித் தும், ஆக் கி ர மிப்பு இடங் களை மாவட்ட நிர் வா கம் மீட்டு தர கோரி யும் ஏரல் அதி முக நிர் வா கி கள் சார் பில் பேரூ ராட்சி அரு கில் தட்டி போர்டு வைத் துள் ள னர்.
இது கு றித்து மாநில பய ணி கள் நலச் சங்க தலை வர் சாந் த கு மார் கூறு கை யில், ‘ஏரல் பஸ் நிலை யத் தில் குடி நீர், பய ணி கள் அமர் வ தற் கான இடம் உட் பட எந் த வித அடிப் படை வச தி களும் இல் லா மல் பய ணி கள் மிக வும் சிர மப் பட்டு வரு கின் ற னர். பஸ் நிலை யம் சீர மைப்பு பணி கள் டெண் டர் விடப் பட்டும் இன் னும் வேலை கள் நடை பெ றா மல் உள் ளது.
எனவே மாவட்ட கலெக் டர் ஏரல் பஸ் நிலை யத்தை சுற் றி யுள்ள நான்கு பக்க இடங் க ளை யும் முழு மை யாக சர்வே செய்து பஸ் நிலைய இடம் ஆக் கி ர மிப் பில் உள் ளதா, இல் லையா என கண் ட றிந்து அதன் பின் சீர மைப் புக் கான வேலையை உடனே துவங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என கூறி யுள் ளார்.
ஏரல் பஸ் நிலை யத்தில் மர நிழலில் காத்து கிடக்கும் பய ணி கள்.

சனி, 4 ஜூலை, 2015

கருங் கு ளம்- கொங் க ரா ய கு றிச்சி இடையே ஆற் று பா லம் பணி துவங் கி யது.

கருங் கு ளத் தில் ஆற் றுப் பா லம் கட்டு வ தற் காக அணுகு சாலை அமைக் கப் பட்டுள் ளது. அடுத் த ப டம்: ஆற் றுப் பா லம் பணிக் காக ஜேசிபி இயந் தி ரங் கள் நிறுத் தப் பட்டுள் ளன.
கருங்குளம்-கொங்கராயகுறிச்சி இடையே
செய் துங் க நல் லூர், ஜூலை 4:
கருங் கு ளம்- கொங் க ரா ய கு றிச்சி இடையே ஆற் று பா லம் பணி துவங் கி யது. இத னால் இப் ப குதி மக் கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் கருங் கு ளம்-கொங் க ரா ய கு றிச்சி இடைய ஆற் றுப் பா லம் கட்ட வேண் டும் என இப் ப குதி மக் கள் கடந்த 48 ஆண்டு கால மாக கோரிக்கை விடுத்து வந் த னர். கருங் கு ளம் ஒன் றி யத் துக் குட் பட்ட 31 பஞ் சா யத் து களில் 16 பஞ் சா யத்து தாமி ர ப ரணி கரைக்கு மேல் பக் க மும், 15 பஞ் சா யத்து தாமி ர ப ரணி கரைக்கு கீழ் பக் க மும் உள் ளது. இதில் மணக் கரை, ஆறாம் பண்ணை, கொங் க ரா ய கு றிச்சி, ஆழ் வார் கற் கு ளம் பஞ் சா யத்து மக் கள் யூனி யன் அலு வ ல கம் வர வேண் டும் என் றால் இரண்டு பஸ் கள் ஏறி வை குண் டம் அல் லது வல் ல நாடு சுற்றி தான் வர வேண் டும். இந்த கிரா மத்து மக் கள் கோடை காலத் தில் கருங் கு ளம் ஆற்றை கடந்து தான் ைவகுண் டம் வந்து செல் கின் ற னர். எனவே, பள்ளி மாணவ, மாண வி கள், நோயா ளி களும் இந்த வழி யா கத் தான் வந்து செல் கி றார் கள். ஆற்று வெள் ளம் வந் தால் இந்த பகு தி யில் வரும் டவுன் பஸ் ஸில் முட்டி மோதி ஏற வேண் டிய அவல நிலை உள் ளது.
இத னால் இந்த இடத் தில் பாலம் கட்ட வேண் டும் என்று இந்த பகுதி மக் கள் பல் வேறு போராட்டங் களை நடத்தி வந் த னர். இந்த போராட்டம் 1996க்கு பிறகு தீவி ரம் அடைந் தது. கருங் கு ளம் கிராம மக் கள் நல குழு செய லா ளர் உடை யார் இதற் கான மனுவை தொடர்ந்து அனுப்பி வந் தார். வாழ் வு ரிமை இயக் க த லை வர் டாக் டர் ஏ.வி.ஏ.கஸ் ஸாலி தலை மை யில் இப் ப குதி மக் களை திரட்டி உண் ணா வி ரத போராட்டம் நடந் தது.
1996ல் எம்.எல்.ஏவாக இருந்த டேவிட் செல் வின் பாலம் கட்டு வ தற் கான முயற்சி எடுத் தார். அப் போது 5 கோடி ரூபாய்க்கு திட்டம் தீட்டப் பட்டு, நெடுஞ் சாலை துறை யி னர் இப் ப ணியை உரு வாக்க ஆயத் த மா னார் கள். இதற் கி டை யில் ஆழ் வார் தோப்பு பாலம் கட்டப் பட்டது. எனவே போதிய நிதி இல் லா மல் இத் திட்டம் கை வி டப் பட்டது. 2001 ல் அமைச் சர் சண் மு க நா தன் எம்.எல்.ஏவாக இருந்த போது ரூ.10 கோடி மதிப் பீடு செய் யப் பட்டு நபார்டு திட்டத் தின் கீழ் இத் திட்டம் செயல் பட ஆயத் த மா னது.
எதிர் பா ராத வித மாக அது வும் ரத் தாகி விட்டது. 2006ல் காங் கி ரஸ் எம்.எல்ஏ ஊர் வசி செல் வ ராஜ் முயற் சி யில் மீண் டும் ஊர் மக் களை திரட்டி சென் னை யில் உள்ள முக் கிய அதி கா ரி களை நேரில் சந் தித்து இப் பா லம் கட்ட நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டது. இந்த சம யத் தில் ஸ்ரீவை குண் டத் தில் கூடு தல் பாலம் அமைக் கும் பணி துவங் கிய கார ணத் தி னால் மீண் டும் இத் திட்டம் கைவி டப் பட்டது. தொடர்ந்து இடை தேர் த லில் வெற்றி பெற்ற காங் கி ரஸ் எம்.எல்ஏ. சுட லை யாண்டி இத் திட்டத் துக்கு உயிர் ஊட்டி னார். பால் கு ளத் தினை சேர்ந்த ஓய்வு பெற்ற பொறி யா ளர் செல் வ ராஜ், வழக் க றி ஞர் மக ரா ஜன் ஆகி யோர் அதற் கான ஏற் பா டு களை செய் த னர். அதற் குள் 2 0 11 தேர் தல் வந் தது. மீண் டும் அமைச் சர் சண் மு க நா தன் எம்.எல்.ஏ ஆனார். இதை ய டுத்து நபார்டு திட்டத் தின் கீழ் இத் திட்டம் மேற் கொள்ள நட வ டிக்கை மேற் கொள் ளப் பட்டது.
இதற் காக 14.32 கோடி ரூபாய் மதிப் பீடு செய் யப் பட்டு மீண் டும் பணி துவங் கி யது. கொங் க ரா ய கு றிச்சி, கருங் கு ளம் பகு தி யில் இடங் கள் கைய கப் ப டுத் த பட்டன. தற் போது பணி டெண் டர் விடப் பட்டு துவங்க உள் ளது. இதற் கான அடிக் கல் நாட்டு விழா வரு கிற 12ம் தேதி நடை பெ று கி றது.
இதற் கி டை யில் சர் வீஸ் ரோடு அமைத் தல், தள வா ட பொ ருள் கள் வைக்க ஷெட் அமைக் கும் பணி துவங் கி யுள் ளது. இது கு றித்து மணக் க ரையை சேர்ந்த போஸ்ட் மாஸ் டர் காளி முத்து கூறும் போது, ‘பள்ளி குழந் தை கள், நோயா ளி கள், வேலைக்கு போகி ற வர் கள் என்று தின மும் ஆயி ரக் க ணக் கான மக் கள் ஆற்று பாலம் இல் லா மல் கஷ் டப் பட்டு வந் தோம். தற் போது இங்கு பாலம் அமைப் பது எங் களுக்கு மிக வும் மகிழ்ச் சி யாக உள் ள து’ என் றார்.
கிராம மக்கள் மகிழ்ச்சி
ஆற்றுப்பாலம் பணி துவங்கியது
ஆற் றுப் பா லம் அமைய உள்ள இடத் தில் மண் பரி சோ தனை நடந் தது.
தாமி ர ப ரணி ஆற் றில்
16வது பாலம்
தாமி ர ப ரணி ஆற் றில் இது வரை 9 மாற்று பாலங் களும், 6 புதிய பாலங் களும் கட்டப் பட்டுள் ளன. தற் போது தாமி ர ப ரணி ஆற் றில் கருங் கு ளம்-கொங் க ரா ய கு றிச்சி இடையே கட்டப் ப டும் பாலம் 16 வது பாலம் என் பது குறிப் பி ட தக் கது. தாமி ர ப ரணி ஆற் றில் தரை மட்ட பால மாக இருந்த சேரன் ம கா தேவி, ஆத் தூர், ஏரல் தரை மட்ட பாலங் கள் உயர் மட்ட பாலங் க ளாக கட்டப் பட்டு விட்டது. கோபா ல ச முத் தி ரம் மற் றும் சீவ லப் பேரி பாலங் கள் மட்டுமே தற் போது தரை மட்ட பால மாக உள் ளது.

ஏரலில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த 4 பேர் கைது

ஏரல், ஜூலை 4:
ஏர லில் வெளி மா நில மது பாட்டில் களை கடத்தி வந்த வாலி பர் உட் பட 4 பேரை போலீ சார் கைது செய் த னர். இது தொ டர் பாக பார் உரி மை யா ளர் உட் பட 3 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் மற் றும் நாச ரேத் பகுதி பார் களில் வெளி மா நில மது பாட்டில் கள் கடத்தி வந்து அதிக விலைக்கு விற் ப தாக போலீ சா ருக்கு ரக சிய தக வல் கிடைத் தது.
இதனை தொடர்ந்து எஸ்பி அஸ் வின் கோட் னீஸ் உத் த ர வின் பே ரில் வைகுண் டம் டிஎஸ்பி விஜ ய கு மார், ஏரல் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், சப் இன்ஸ் பெக் டர் மந் தி ர மூர்த்தி, சிறப்பு எஸ்ஐ பூமி ராஜ், ஏட்டு தர் மர் மற் றும் போலீ சார் நேற்று ஏரல் சினிமா தியேட்டர் பகு தி யில் வாகன சோத னை யில் ஈடு பட்ட னர்.
அப் போது அந்த வழி யாக வந்த காரை சோத னை யிட்ட தில் காரில் கோவா மாநில மது பாட்டில் கள் இருப் பது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து அதனை பறி மு தல் செய்த போலீ சார் காரை ஓட்டி வந் த வ ரி டம் நடத் திய விசா ர ணை யில், அவர் ஏரல் அருகே உள்ள மாற மங் க லம் பெரு மாள் கோயில் தெருவை சேர்ந்த கருத் தப் பாண்டி மகன் செல் லப்பா(26) என் ப தும், அவர் கோவா வி லி ருந்து நெல் லைக்கு ரயில் மூலம் மது பாட்டில் களை கடத்தி வந்து, அங் கி ருந்து கார் மூலம் ஏரல் பகு தி யில் உள்ள டாஸ் மாக் பாருக்கு சப்ளை செய் தது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து அவரை கைது செய்த போலீ சார் மது பாட்டில் கள் மற் றும் கடத் த லுக்கு பயன் ப டுத் திய காரை பறி மு தல் செய் த னர். தொடர்ந்து அவர் கொடுத்த தக வ லின் பே ரில் ஏரல் பஸ் நிலை யம் அருகே உள்ள டாஸ் மாக் பாரில் போலீ சார் சோத னை யிட்ட தில், அங்கு கோவா மாநில மது பாட்டில் கள் இருப் பது தெரி ய வந் தது.
இத னை ய டுத்து பார் உரி மை யா ளர் ஏரல் கீழ காட்டு தெருவை சேர்ந்த நாரா ய ண ராஜ் தம் பி க ளான பால சி வ லிங் கம்(31), ஆத் தி ராஜ்(28), விற் ப னை யா ளர் வீர மா கா ளி அம் மன் கோயில் தெருவை சேர்ந்த ரமேஷ்(31) ஆகிய 3 பேரை யும் கைது செய் த னர்.
இது கு றித்து ஏரல் போலீ சார் வழக் குப் ப திவு செய்து பார் உரி மை யா ளர் நாரா ய ண ராஜ், மற் றொரு விற் ப னை யா ளர் சம் சு தீன், செல் லப்பா உத வி யா ளர் சுந் தர் ஆகிய 3 பேரை யும் தேடி வரு கின் ற னர்.
பார் உரிமையாளர் உட்பட 3 பேருக்கு வலை
ஏர லில் வெளி மா நில மது பாட்டில் கள் கடத்தி வந் த வரை போலீ சார் கைது செய் த னர்.

வைகுண் டம் அணை யில் நேற்று 4வது நாளாக தூர் வா ரும் பணி நடந் தது. 4வது நாளாக தூர் வாரும் பணி

வைகுண் டம் அணை யில் நேற்று 4வது நாளாக தூர் வா ரும் பணி நடந் தது.
4வது நாளாக தூர் வாரும் பணி
வை குண் டம், ஜூலை 4:
வை குண் டம் அணை யில் நேற்று 4வது நாளாக தூர் வாரும் பணி நடந் தது. அணை யி லுள்ள பட்டுப் போன மரங் களை அகற்ற வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பசுமை தீர்ப் பா யத் தின் உத் த ரவை தொடர்ந்து வை குண் டம் அணை யில் தூர் வாரும் பணி நேற்று 4வது நாளாக நடந் தது. முதல் கட்ட மாக அணை யி லுள்ள புதர் கள், வேலிக் காத் தான், சீமை க ரு வேல மரங் கள் அனைத் தும் ஜேசிபி இயந் தி ரம் மூல மாக அகற் றப் பட்டு வரு கி றது. இதனை தொடர்ந்து அணை யின் மேல் பகு தி யி லுள்ள வண் டல் மண், களி மண் இயந் தி ரங் கள் மூல மாக எடுக் கப் பட்டு அதன் பின் னரே ஆற் று ம ணல் அள் ளப் ப டும் என்று கூறப் ப டு கி றது.
அணை யில் உள்ள 900 மீட்டர் வனப் ப கு தி யில் மணல் அகற் றும் பணி களை ஓராண் டுக் குள் முடிக் க வேண் டும் என்று வனத் துறை தரப் பில் கூறப் பட்டுள் ளது. வனத் து றைக்கு சொந் த மான இடத் தில் மணல் எடுக் கப் ப டும் சூழ லில் மரங் களுக்கு எந் த வி த மான பாதிப் பும் இல் லா மல் ஆற் று ம ணலை அகற்ற வேண் டும். வனத் து றைக்கு உரிய இடத் தி லுள்ள மணலை அகற் றும் போது மரங் களுக்கு இடையே குறிப் பிட்ட அளவு இடை வெளி விட்டு மணல் அள் ள வேண் டும். எக் கா ர ணம் கொண் டும் மரங் கள் பாதிக் கப் ப டக் கூ டாது, மரக் கி ளை களை வெட்டக் கூ டாது, மரங் களில் வாழும் பறவை உள் ளிட்ட உயி ரி னங் களுக்கு பாதிப்பு ஏதும் ஏற் ப டக் கூ டாது என்று வனத் துறை தரப் பில் கட்டுப் பா டு கள் விதிக் கப் பட்டுள் ளன.
இதற் கேற்ப அணையை தூர் வாரும் பணி களை மேற் கொள் ள வேண் டும் என்ற விதி மு றை களின் அடிப் ப டை யில் தற் போது தூர் வாரும் பணி நடை பெற்று வரு கி றது. வை குண் டம் அணை யின் தூர் வாரும் பணி களை மாவட்ட வனத் துறை அலு வ லர் தலை மை யி லான வனத் து றை யி னர் கண் கா ணித்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் அணை யின் உட் ப கு தி யில் பல் வேறு இடங் களில் பட்டுப் போன மரங் கள் அதி க ள வில் உள் ளன. விலை உயர்ந்த மரு தம், வேம்பு உள் ளிட்ட பட்டுப் போன மரங் கள் அகற் றப் ப டா ம லேயே தூர் வாரும் பணி நடை பெற்று வரு கி றது. பட்டுப் போன இந்த மரங் க ளால் யாருக் கும் எந் தப் ப ல னும் இல்லை.
பயன் இல் லாத இந்த மரங் கள் காற் று வே க மாக அடித் தால் கீழே விழுந் து வி டும் நிலை யில் உள் ளது. எனவே இந்த பட்டுப் போன மரங் களை பாது காப் பாக அகற் றி ட வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
வைகுண்டம் அணையில்
பட்டுப்போன மரங்கள் அகற்றப்படுமா?
அணை யில் உள்ள பட்டுப் போன மரங் கள்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...