வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தில் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. ஆய்வு

ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக புதிய பாலம் திறக்கப்படவில்லை. ஆனாலும் பொதுமக்கள் அந்த பாலத்தின் வழியாக வாகனங்களில் சென்று வருகின்றனர். பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி., ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய பாலம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தற்போதைய அரசு, புதிய பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் விரைவு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் வந்து செல்லாமல் மெயின் ரோட்டில் சென்று விடுகின்றன. மின் விளக்குகள் அமைக்கப்படாததால் புதிய பாலத்தில் இரவு நேரத்தில் செல்லும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய பாலத்தில் மின் விளக்குகள் அமைத்து, அதிகாரப்பூர்வமாக திறக்க வேண்டும். மேலும் கருங்குளம்– கொங்கராயகுறிச்சி, விளாத்திகுளம்– வைப்பார் ஆகிய பகுதிகளில் புதிய பாலம் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறினார்

புதன், 26 பிப்ரவரி, 2014

ஏரல் பைனான்சியர் கைது

தொழிலதிபர் குடும்பத்தோடு தற்கொலை
ஏரல் பைனான்சியர் கைது
பாளை தொழிலதிபர் குடும்பத் தோடு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஏரல் பைனான்சியர் கைது செய் யப்பட்டார். அவரது கூட் டாளி மற்றும் உறவினர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாளை. கேடிசி நகர் அருகே உள்ள ரவிசங்கர் நகரில் வசித்த தொழிலதிபர் பரிபூரண கண்ணன் கடந்த 22ம்தேதி தனது மனைவி, மகளுடன் காரில் அமர்ந்த வாறு சிலிண்டரை வெடிக் கச்செய்து தற்கொலை செய்தார். ஏரலை சேர்ந்த லட்சுமணன், சுப்பிரமணியன் ஆகியோர் அதிக வட்டி தருவதாக கூறி இவரிடம் பல லட்சம் பணம் பெற்றனர். அதை கொடுக்காததோடு, தனது மீது புகாரும் கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்தது போலீஸ் விசா ரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து விசாரித்த பாளை. பெருமாள்புரம் போலீசார் நேற்று ஏரலுக்கு சென்று சுப்பிரமணியனை கைது செய்தனர். இதற்கிடையே ஏரல் மங்களகுறிச்சியை சேர்ந்த லட்சுமணன், அவரது தாய் பேச்சியம்மாள், உறவினர் மாணிக்கவாசகம் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டாளிகள் முன்ஜாமீன் மனு

ஏரல் அருகே குரங்கணியில் குறுகிய வளைவு பாலத்தினால் விபத்து அபாயம்

ஏரல்  அருகே குரங்கணியில் குறுகிய வளைவு பாலத்தினால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே பாலத்தை விரிவுப்படுத்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகேயுள்ள குரங் கணி மெயின் ரோட்டில் உள்ள குறுகிய வளைவு பாதையினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏரலில் இருந்து குரங்கணி, தென்திருப்பேரை வழியாக திருநெல்வேலி மற்றும் நாசரேத்துக்கு பஸ்கள் சென்று வருகின்றன.
குரங்கணி, மாவடிபண்ணை, தென்திருப்பேரை பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு இவ்வழியாக லாரிகளில் குறுமண் மற்றும் செங்கல்களை ஏற்றி சென்று வருகிறது. மேலும் இப்பகுதி மாணவ, மாணவிகள் ஏரல், சிறுத்தொண்டநல்லூர் பள்ளிகள் மற்றும் சாயர்புரம் கல்லூரிகளுக்கும் இந்த வளைவு பாலத்தின் வழியாகத்தான் சைக்கிள், பைக்கில் சென்று வருகின்றனர்.
இங்குள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்பாலம் குறுகிய வளைவு பாதையில் இருப்பதால் பெரிய வாகனங்கள் திரும்பும் போது பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரவில் பைக் கில் வருபவர்களும் தடுப்பு சுவரில் மோதி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறுகிய வளைவு பாலத்தை விரிவுபடுத்துவதுடன் தடுப்பு சுவரையும் சீரமைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள், மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரங்கணியில் அடிக்கடி விபத்து ஏற்படும் குறுகிய வளைவு பாலம்.

ஏரலில் வடிகால் வசதி இல்லாததால் கொடிக்காலில் அழுகும் வெற்றிலை

ஏரல் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் கொடிக்காலில் வெற்றிலைகள் அழுகி சேதம் அடைகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருவழுதிநாடார்விளை, வாழவல்லான், லெட்சுமிபுரம், உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர், மேல ஆத்தூர், சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, மரந்தலை, வெள்ளக்கோயில், சுகந்தலை உட்பட பகுதிகளில் முக்கிய விவசாய தொழிலாக வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. ஐப்பசி மாதம் வெற்றிலை கொடிக்கால் தொழிலை விவசாயிகள் தொடங்குகின்றனர். நன்கு வளர்ந்த ஒரு கொடியில் மாதத்திற்கு ஒரு முறை பறிக்கின்றனர். ஒரு வெற்றிலை கொடிக்கால் இரண்டரை ஆண்டுகள் வரை பலன்தரும்.
வெளிமார்க்கெட்டுக்கு அனுப்பப்படும் வெற்றிலை விலையை இப்பகுதியில் தலைமையிடமாக செயல்படும் தெற்கு ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம்தான் நிர்ணயம் செய்யும். வெற்றிலை விலை கடந்த 5 மாதங்களுக்கு முன் நல்ல விலைக்கு விற்பனையானது. ஆனால் தற்போது வெற்றிலை விலை 2 மாதங்களாக குறைந்துள்ளது.
மேலும் ஏரல்&மங்கலகுறிச்சி ரோடு விரிவாக்கம் செய்ததில் திருவழுதிநாடார்விளை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஏரல் சினிமா தியேட்டர் வரை உள்ள பாசன கால்வாயை சிதைத்து விட்டனர். மேலும் பல வயல்களில் குறுமண் போட்டு வயலை ரோடு மட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டதால் தண்ணீர் சரியாக விவசாய நிலங்களில் வடியாமல் தேங்குகிறது. இதனால் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள கொடிக்காலில் உள்ள வெற்றிலை பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
அரசு காப்பாற்ற வேண்டும்
இதுகுறித்து ஏரல் வெற்றிலை விவசாயி பெருமாள் கூறுகையில், “ஏரல் மற்றும் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் ஏக்கரில் வெற்றிலை விவசாயம் நடந்து வந்தது. ஆனால் தற்போது 500 ஏக்கராக குறைந்துள்ளது. ஏரல் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீரை வடியவைக்க முடியாமலும், கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
வெற்றிலையில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு அதிக அளவு பாதிக்கப்படுகிறது. தற்போது வெற்றிலை விலையும் குறைந்துள்ள நிலையில் விவசாயிகள் நலன் கருதி அழிந்து வரும் இத்தொழிலை காப்பாற்ற விவசாயிகளுக்கு கடன் வசதி செய்து தர வேண்டும். மேலும் கோடைக்காலத்தில் போர் அமைத்து இலவச மின்மோட்டார் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீரை வடிய வைக்க வடிகால் வசதியும் அரசு செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.
ஏரல் பகுதி விவசாயிகள் பாதிப்பு





ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மும்பை தொடர் திருட்டில் தொடர்புடைய கார் ஓட்டுநர் ஏரலில் கைது

மும்பையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுநர் ஏரலில் கைது செய்யப்பட்டார்.
ஏரல் அருகே உள்ள அகரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் சரவணன் (36). மும்பையில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த சரவணனை, அங்கு நிகழ்ந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புள்ளதாக மும்பை பார்லே பகுதியைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன் சொந்த ஊரான அகரத்துக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் தூத்துக்குடி வந்த தனிப்படையினர், மாவட்ட எஸ்.பி. துரையின் ஆலோசனையின்பேரில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமராஜன் தலைமையிலான ஏரல் போலீஸாருடன் சென்று கைது செய்தனர்.
இந்நிலையில் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து மும்பை போலீஸார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

சூழவாய்க்கால் பஞ்சாயத்து பகுதிகளில் இலவச மிக்சி, கிரைண்டரை பஞ்சாயத்து தலைவர் அனஸ் வழங்கினார்.

சூழவாய்க்கால் பஞ்சாயத்து பகுதிகளில் இலவச மிக்சி, கிரைண்டரை பஞ்சாயத்து தலைவர் அனஸ் வழங்கினார்.
சூழவாய்க்காலில்
மிக்சி, கிரைண்டர் வழங்கல்
ஏரல், பிப்.21:
ஏரல் அருகே சூழவாய்க்கால் பஞ்சாயத்து பகுதியில் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவர் அனஸ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் பொன்லெட்சமி, முஸ்லிம் ஜமாத் தலைவர் அப்துல்ரஹீம், பஞ்சாயத்து துணைத்தலைவர் சங்கரநாராயணன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பசீராபீவி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் மன்சூரா பேகம், காசிநாராயணன், முத்தலிபு, வேளாங்கண்ணி மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. 10வது மாநில மாநாடு தலைவர்கள் முதல் நாள் மாலை உரை

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சூளைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

சாதிச் சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு



காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சூளைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
 பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த தங்களது குழந்தைகள் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருவதாகவும், அவர்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கப் படுவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.  மதுரை, ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் தங்களது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதுபோல தங்களது குழந்தைகளுக்கும் பழங்குடியினர் என்ற சான்றிதழை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  எட்டயபுரம் அருகேயுள்ள சக்கிலியப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், 1970-ம் ஆண்டு முதல் தங்களது பகுதியில் இருந்த ரேஷன் கடை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கீழநாட்டுக்குறிச்சி பகுதியில் உள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.  ஆனால், 1003 குடும்ப அட்டைகள் உள்ள இப் பகுதிக்கு தாற்காலிகமாக உள்ள கடை மூலம் பொருள்கள் வழங்கப் பட்டு வருகிறது. இருப்பினும், வாடகைத் தொகை செலுத்தினால்தான் பொருள்கள் வழங்குவதாக கூறுகிறார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ரேஷன் பொருள்கள் முழுமையாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஏரலில் ரோடு விரிவாக்கத்திற்காக பாசன மடை வாய்க்கால் பாலம் விஸ்தரிப்பு

ஏரல் புதிய ஆற்றுப்பாலம் இணைப்பு ரோட்டிற்காக ரோட்டை அகலப்படுத்தும் பணியில் பழைய பாலம் அடிமட்ட அளவிற்கு தோண்டப்படாமல் பாலம் அமைக்கப்படுவதாக கூறி விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏரலில் ரோடு விரிவாக்கத்திற்காக
பாசன மடை வாய்க்கால் பாலம் விஸ்தரிப்பு
ஏரல், பிப். 14:
ஏரலில் ரோடு விரிவாக்கத்திற்காக ஏரல் சினிமா தியேட்டர் அருகில் உள்ள பாசன மடை பாலம் விரிவாக்கம் செய்வதற்காக புதிய கல்வெட்டு பாலம் அமைக்க தோண்டப்பட்டது. இதனால் தண்ணீர் வடியாது என கூறி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் புதிய மேல்மட்ட பாலம் அமைக்கப்பட்டு, ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஏரல் சினிமா தியேட்டர் அருகில் உள்ள பாசனமடை பாலத்தை விரிவுபடுத்துவதற்காக பழைய மடை பாலத்திற்கு மேல்புறம் தோண்டப்பட்டது.
பழைய பாலத்தின் அடிமட்டத்திற்கு தோண்டாமல் புதிய பாலம் மேல்மட்டமாக போட்டால் மழைக்காலத்தில் பாலத்திற்கு மேல்புறம் உள்ள வயல்களில் தேங்கும் தண்ணீர், வாய்க்கால் மடையின் வழியாக கீழ்பகுதி வாய்க்காலுக்கு செல்வதில் தடை ஏற்படும். இதனால் தண்ணீர் வடியாமல் வெற்றிலை, வாழை மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயம் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதில் விவசாயிகள் சண்முகநாதன், அருணாச்சலம், கந்தன், சிவமுருகன், இசக்கி, மேகலிங்கம், தங்கம் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் விவசாயிகள் சார்பில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பழைய மடை பாலத்தின் அடிமட்ட அளவிற்கு தோண்டி, புதிய பாலத்தின் அடிமட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு அதிகாரிகள் சம்மதித்து உடனடியாக ஜேசிபி வரவழைக்கப்பட்டு பழைய பாலம் அளவிற்கு தோண்டி வேலையை தொடங்கியதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகள் எதிர்ப்பால் பரபரப்பு

திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஏரல் அருகே மங்கலகுறிச்சி & பெருங்குளம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு

ஏரல் அருகே மங்கலகுறிச்சி & பெருங்குளம் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினால் தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஏரல் அருகேயுள்ள மங்களகுறிச்சி தாமிரபரணி ஆற்றுக்குள் இருந்து குடி தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் மங்களகுறிச்சி, பெருங்குளம், நட்டாத்தி, சாயர்புரம் வழியாக தூத்துக்குடி மற்றும் வழியோர கிராமங்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள பாலத்தில் குடிநீர் இரும்பு குழாயில் மூன்று இடங்களில் பெரிய உடைப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த உ�ட்பில் இருந்து வெளிவரும் தண்ணீர் பாலத்தின் மீது தேங்கி வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் நடப்பவர்கள் மீது சேரும், சகுதியும் ஆகிறது. பைக்கில் செல்பவர்கள் மீது தண்ணீர் சீறி பாய்வதால் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பினால் அருகில் உள்ள ரோடுகள் அரிப்பு ஏற்பட்டு படுகுழிகளாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். இந்த உடைப்பினால் தினசரி பல லட்சம் லிட்டர் குடி தண்ணீர் வீணாக அருகில் உள்ள வாய்க்காலுக்கும், வயல் வெளிக்கும் செல்கிறது.
இதேபோல் பண்டாரவிளையில் இருந்து நட்டாத்தி செல்லும் மெயின் ரோட்டில் பண்டாரவிளை அருகிலும் இரண்டு இடங்களில் இதே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் ரோடு சேதாரமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள இந்த உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே மங்கலகுறிச்சி & பெருங்குளம் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

Champions | Grand Finale | Dt 09-02-14

ஏரல் & திருவழுதிநாடார்விளை சாலையில் தடுப்பு சுவர் கட்டாததால் விபத்து அபாயம்


ஏரல்&திருவழுதிநாடார்விளை சாலை விரிவாக்கம் செய்த வயல் பகுதியில் தடுப்பு சுவர் கட்டாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி மெயின் ரோட்டில் திருவழுதிநாடார்விளை பஸ்நிறுத்தம் வரை சாலை அகலமாக இருந்தது. ஆனால் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏரல் வரை சாலை மிககுறுகலாக இருந்தது.
இதனால் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடந்த மாதம் இச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சில இடங்களில் சாலை 7 அடி உயரமாக உள்ளது. மேலும் சாலையோரத்தில் மண் போடப்படாமல் உள்ளது.
இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது சாலைவிட்டு கீழே இறங்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
ஏரலில் இருந்து பெருங்குளம், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மற்றும் பண்டாரவிளை, நட்டாத்தி, சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கும் அதிகமாக பஸ் போக்குவரத்து உள்ளது.
இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் திருவழுதிநாடார்விளை, மங்கலகுறிச்சி, மொட்டச்சி குடியிருப்பு, பெருங்குளம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏரல் பள்ளிகளுக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பயன்படுகின்றனர்.
எனவே திருவழுதிநாடார்விளை பஸ்நிறுத்தத்தில் இருந்து ஏரல் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் தடுப்பு சுவர்கள் அமைத்து பலப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரலில் இருந்து திருவழுதிநாடார்விளை பஸ் நிறுத்தம் வரை சாலை விரிவாக்கம் செய்ததில் தடுப்பு சுவர் கட்டாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏரலில் திமுக இளைஞரணி துண்டு பிரசுரம் விநியோகம்


ஏரலில் திமுக இளைஞரணி துண்டு பிரசுரம் விநியோகத்தை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி, மாவட்ட இளைஞரணி ஜெகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஏரலில் திமுக இளைஞரணி துண்டு பிரசுரம் விநியோகம்
ஏரல், பிப். 9:
ஏரலில் திமுக இளைஞரணி சார்பில் திமுக ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக அரசின் அவலநிலையும் விளக்கி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் பிஜி ரவி தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அமீர் ஹம்சா, நகர செயலாளர்கள் ஏரல் பார்த்திபன், சாயர்புரம் வரதராஜ் ஸ்டாலின், பெருங்குளம் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பூபதி, மாவட்ட இளைஞரணி ஜெகன் ஆகியோர் துண்டு பிரசுரம் விநியோகத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், தூத்துக்குடி மாநகர துணை அமைப்பாளர் அருண் சுந்தர், ஸ்ரீவை ஒன்றிய துணை செயலாளர் வைகுண்டராமன், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் மணிவண்ணன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், நகர இளைஞரணி அமைப்பாளர்கள் முருகராஜ், கண்ணன், நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

உடன்குடியில் பள்ளிவாசலில் பூட்டு உடைப்பு அதே தெருவில் வீட்டில் கொள்ளை முயற்சி


உடன்குடியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து பள்ளிவாசல்- வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கொள்ளை முயற்சி
உடன்குடி கூல தெருவில் முஸ்லிம் பள்ளிவாசல் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பள்ளிவாசலை அதன் நிர்வாகிகள் பூட்டிச் சென்றனர். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் பள்ளிவாசல் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு அனைத்து இடங்களிலும் மர்மநபர்கள் தேடி பார்த்தனர். ஆனால் எந்த விலை உயர்ந்த பொருட்களும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அதே தெருவில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி அம்மாள். இவர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் ஜெயலட்சுமி அம்மாளின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கும் விலை உயர்ந்த பொருட்களும் ஏதும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
போலீசார் விசாரணை
நேற்று காலையில் பள்ளிவாசல் மற்றும் ஜெயலட்சுமி அம்மாளின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏரலில் காங். விளக்க கூட்டம்

ஏரலில் காங் கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது. ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் கந்தசாமி, வட்டார செயலாளர் சுயம்புலிங்கம், கொற்கை தலைவர் அந்தோணிசாமி, கோட்டைக்காடு தலைவர் மந்திரம், பெருங்குளம் முன் னாள் கவுன்சிலர் மூக் காண்டி ஆகியோர் முன் னிலை வகிததனர். இதில் மாநில பேச்சாளர் வின் சென்ட், தூத்துக்குடி இளை ஞர் காங்கிரஸ் பாராளுமன்ற செயலாளர் அருண் நேருராஜ் ஆகியோர் மத் திய அரசின் சாதனையை விளக்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் பிஸ்மி சுல்தான், அய்யம்பெருமாள், வீரசுப்பிரமணியன், சார்லி, ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Super Singer 4 | Grand Finale (+பட்டியல்)

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...