புதன், 30 நவம்பர், 2011

ஏரல் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்


வெள்ளம் வடிந்ததால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நேற்று போக்குவரத்து துவங்கியது. வெள்ளத்தால் ஏற்பட்ட அரிப்பில் பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்தது
ஏரல் ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
ஏரல், நவ. 30:
வெள்ளம் வடிந்ததால் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து துவங்கியது.
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 27ம் தேதி ஏரல் ஆற்றுப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. இதற்கிடையே பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி அமலைச்செடிகள் மலைபோல் குவிந்து கிடந்தன. இதை பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அகற்றினர்.
பாலத்தை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் ஆசிஷ்குமார் உத்தரவிட்டதன் பேரில் பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமலை செடிகள் அகற்றும் பணி நடந்தது. இதனால் பாலத்தின் மீது ஓடிய வெள்ளம் வடிந்தது. இதையடுத்து 2 நாட்களுக்கு பிறகு நேற்று பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கியது.
வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் ஆரம்ப பகுதியில் குகை போல் பெரிய துளை ஏற்பட்டுள்ளது. அதன்மீது முள்செடியை வெட்டி போட்டு தற்காலிகமாக அடைத்துள்ளதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. மீண்டும் வெள்ளம் வந்தால் பாலம் இடிந்து விடும் அபாயம் நிலவுகிறது. எனவே அதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 28 நவம்பர், 2011

28news2 NEW


ஏரல், நவ.28&
தாமிரபரணி வெள்ளத்தில் மூழ்கிய ஏரல் ஆற்றுப்பாலம் இடிந்துவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் கடந்த 45 ஆண்டுக்கு முன் அதிகம் உயரமில்லாத பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதனால் ஆற்றில் வடபகுதியில் உள்ள ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், பெருங்குளம், நட்டாத்தி சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்களும், ஆற்றின் தென்பகுதியில் உள்ள குரும்பூர், குரங் கணி, தெந்திருப்பேரை, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன. ஏரல் வியாபார ஸ்தலம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கானபேர் வந்துசெல்கிறார்கள்.
ஆனால் மழைகாலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது இந்த பாலமும் மூழ்கிவிடும். தண்ணீர் வற்றிய பிறகுதான் மீண்டும் போக்குவரத்து தொடங்கும். இதனால் மழை காலங்களில் பள்ளி&கல்லூரிக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவர்கள் இங்கு வரவேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் சுற்றி ஆத்தூர் பாலம் அல்லது திருவைகுண்டம் பாலம், ஆழ்வார்தோப்பு பாலம் ஆகியவற்றை சுற்றித்தான் வரவேண்டும்.
மழைகாலத்தில் தவறாமல் ஏரல் பாலம் மூழ்குவதால் பாலம் நாளுக்கு நாள் சேதமடைந்த வண்ணம் இருந்தது. அந்த பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள்.
தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன் ரூ.15 கோடியில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சியில் இறங்கிய நிலையில் அவரது மந்திரி பதவி பறிக்கப்பட்டது. பாலத்தில் இரு ஓரங்களிலும் உள்ள தடுப்பு தூண் களை காணவில்லை. பல இடங்களில் ஓட்டை விழுந்து விட் டது. தற்போது பெய்த மழை யால் பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை சிறிதளவு தண்ணீர் குறைந்துள்ளதே தவிர பாலம் மூழ்கிய நிலையில் தான் உள்ளது. இதனால் இன்றும் போக்குவரத்து நடைபெறவில்லை. பாலத்தை சுற்றி அமலைச்செடிகளாக காட்சியளிக்கின்றன.
இதற்கிடையில் இன்று பாலத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டதாக செய்தி பரவியது. இதைத்தொடர்ந்து காலையில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வந்தனர். தற்போது பாலம் மூழ்கி இருப்பதால் உடைப்பு உள்ளதா என கண்டுபிடிக்கமுடியவில்லை. தண்ணீர் வற்றினால்தான் அதுபற்றி தெரியவரும். எது எப்படியோ இனியும் காலம் தாழ்த்தாது பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
ஆற்றில் இறங்கிய பேரூராட்சி தலைவர்
ஏரல் ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் ஓடுவதால் அமலைச்செடிகள் பாலத்தை முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் பாலத்தில் உள்ள குழாய் வழியாக செல்லமுடியாதநிலை உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் அமலைச்செடிகளை அகற்றும் பணியில் அவரே நேரடியாக களத்தில் இறங்கினார். பாலத்தின் மீது தண்ணீர் ஓடியபோதிலும் துணிச்சலாக அவர் பாலத்தில் இறங்கி அமலைச்செடிகளை அகற்றினார்.
அவருடன் கவுன்சிலர் மணிவண்ணன், மாநில வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சாந்தகுமார், மற்றும் நவுஷாத், மைக்கேல், சேகர், ராஜேஷ், ஜேசுராஜ், ஏட்டு நாராயணசாமி ஆகியோரும் ஈடுபட்டனர்.

HW¥ RÖ–WTW‚ B¼¿TÖX• ÙY·[†‡¥ ™²fV‰ ÚTÖehYW†‰ ‰z“


HW¥ RÖ–WTW‚ B¼¿TÖX• ÙY·[†‡¥ ™²fV‰
ÚTÖehYW†‰ ‰z“




HW¥, SY.28-

HW¥ RÖ–WTW‚ B¼¿TÖX• ÙY·[†‡¥ ™²fV‰. CR]Ö¥ HW¥, h£•”Ÿ ÚTÖehYW†‰ ‰zeLTyP‰.

ÙY·[†‡¥ ™²fV‰

І‰ehz UÖYyP†‡¥ LP‹R pX SÖyL[ÖL ÙRÖPŸ UÛZ ÙTš‰ Y£YRÖ¥ RÖ–WTW‚ B¼½¥ ÙY·[• LÛW“W| K|f\‰. C‹R ÙY·[ÙT£eLÖ¥, RÖ–WTW‚ B¼½¥ ÚS¼¿ LÖÛX 9 U‚ A[«¥ HW¥ B¼¿TÖX• ™²fVTz RƒŸ ÙNÁ\‰.

C‹R ÙY·[ÙT£eh h½†‰ A½‹R HW¥ N-CÁÍÙTePŸ TÖ¥INe, YÖXY¥XÖÁ fWÖU ŒŸYÖL A¨YXŸ ÚNLŸ, HW¥ SLW TtNÖV†‰ RÛXYŸ TÖXf£ÐQÁ BfÚVÖŸ «ÛW‹‰ ÙNÁ¿, TÖX†‡Á h¿eÚL L›¿ Lyz A‹R Y³VÖL ÚTÖehYW†ÛR Œ¿†‡ ‡£‘ «yP]Ÿ. ÚU¨• h£•”Ÿ, SÖNÚW† ÙN¥¨• TÍL· B†ŠŸ Y³VÖL ‡£‘ «PTyP].

Cµ†‰ ÙNÁ\‰

C‹R ŒÛX›¥ HW¥ B¼¿TÖX†‡Á G‡Ÿ“\• ÚUÖyPÖŸ ÛNef¸¥ TÖX†ÛR LPeL ˜VÁ\YÛW ÙY·[• ÚUÖyPÖŸ ÛNefºPÁ Cµ†‰ ÙNÁ\‰. AÚTÖ‰, AYŸ TÖX†‡Á E·[ ŠÛQ ‘z†‰ ÙLց| ŒÁ¿ ÙLցPÖŸ. B]Ö¥ A‹R ST¡Á ÚUÖyPÖŸ ÛNef· ÙY·[†‡¥ Cµ†‰ ÙN¥XTyP‰. B¼¿TÖX†‡¥ H¼TyP ÙY·[ ÙT£eLÖ¥ GÚTÖ‰• TWTWTÖL CVjh• HW¥ T^ÖŸ ÙY½oÚNÖz LÖQTyP‰.

UÛZLÖX†‡¥ H¼T|• ÙY·[ÙT£eLÖ¥ ÚTÖehYW†‰ ‰zeLT|YRÖ¥, HW¥ B¼¿TÖX†ÛR EVŸ†‡ LyP ÚY|• GÁ¿ ÙTÖ‰ UeL· ÚLÖ¡eÛL «|†‰·[]Ÿ.

திங்கள், 7 நவம்பர், 2011

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பதவி பறிப்பு


தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர்
எஸ்.பி.சண்முகநாதன்
பதவி பறிப்பு
சென்னை, நவ. 7&
அமைச்சர் பதவி பறிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் எஸ்.பி.சண்முகநாதன் நீக்கப்பட்டுள் ளார். பதவி பறிப்புக்கு பின்னணி என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல் கள் வெளியாகி உள்ளன. புதிய மாவட்ட செயலாளராக அமைச்சர் செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். சரவண பெருமாளுக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எஸ்.பி. சண்முகநாதன் அமைச்சர் பதவி யில் இருந்து நீக்கப்பட் டார்.
அமைச்சர் பதவி காலி யான ஒரு சில நாட்களில் அவர் வகித்து வந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக தொழிலா ளர் நலத் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.சண்முகநாதனுக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலா ளர் பதவி அள¤க்கப்பட்டுள்ளது. அந்த பொறுப் பில் இருந்த தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ உதயகுமாரிடம் இருந்து அதிமுக மாநில மாணவரணி செய லாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. புதிய மாணவரணி செயலாள ராக சரவணப்பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச் செய லாளரும், முதல்வருமான ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
எஸ்.பி.சண்முகநாதனின் அமைச்சர், கட்சி பதவிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பத வியில் இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அப்போது நடந்த சட்டசபை தேர்த லில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில மாதங்
5ம் பக்கம் பார்க்க
அமைச்சர் பதவியை தொடர்ந்து கட்சி பதவியும் போனது

சனி, 5 நவம்பர், 2011

எமது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


சகோதர, சகோதரி அனைவருக்கும்,

  எமது இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்!  
அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!
இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே… ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் எமது உறவுகள் அத்தனை பேருக்கும் அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள்வானாக!
இதுவரை ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் போன அனைவ‌ருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!



பதவியை இழந்தார் சண்முகநாதன்



இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முக நாதன் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 2வது முறை யாக பாதியிலேயே வெளியேறியுள்ளார். ஸ்ரீவை குண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து பாதியி லேயே பறிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.பி.சண்முக நாதன். தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாள ராகவும் பதவி வகித்ததால் இவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் ‘பவர்புல் லாக‘ திகழ்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் திமுக வில் இணைந்ததால் கட்சியை பலப்படுத்த சீனியரான சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் பதவியேற்ற 6 மாதத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.கடந்த 2001ம் ஆண்டி லும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட¢டவர் எஸ்.பி.சண்முகநாதன். அப்போதும் இவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அப்போதும் 9 மாதத்தில் சண்முகநாதன் பதவியை இழந் தார். அதன் பின்னர் எம்எல்ஏவாகவே தொடர்ந்தார்.இந்நிலை யில் 2வது முறையாக பதவியேற்ற சண்முகநாதன் அமைச்சரவையில் 6 மாதம் மட்டுமே நீடித்துள்ளார். இதனால் ஸ்ரீவைகுண்டம் தொகு திக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து மீண்டும் பறி போயுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் கிடைத்த நிலையில் சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்ட போதும் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


நகைக்கடைகளில் ரகசிய கேமிரா: போலீசார் அறிவுரை ஏரலில் கலந்தாய்வு கூட்டம்


ஏரல், நவ.5&
ஏரலில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நகைக்கடைகளில் ரகசிய கேமிரா பொருத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நகைக்கடை உரிமையாளர்கள், நகை அடகுகாரர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏரல் ஜேஜே திருமண மண்டபத்தில் நடந்தது. திருவைகுண்டம் டிஎஸ்பி மணி தலைமை தாங்கினார். ஏரல் இன்ஸ்பெக்டர் ராம ராஜன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜூ முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகைகடைகளுக்கு இரவு காவலர்களை அந்தந்த கடைக்காரர்கள் கூடுதலாக நியமிக்கவேண் டும்நகை கடைகளில் ரகசிய கேமிரா பொருத்தவேண் டும். எச்சரிக்கை அலாரம் வைக்கவேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் வீரராஜ், ஏட்டு முத்தையா, ஏரல் நகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவரும் பேரூ ராட்சி தலைவருமான பாலகிருஷ்ணன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மந்திரம் மற்றும் ஏரல், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர், குரும்பூர் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலிருந்து நகைக்கடை உரிமையாளர்கள், அடகு கடைக்காரர்கள் கலந்து கொண்ட னர்.
நகைக்கடைகளில் ரகசிய
கேமிரா: போலீசார் அறிவுரை
ஏரலில் கலந்தாய்வு கூட்டம்

வியாழன், 3 நவம்பர், 2011

HW¥ B¼½Á h¿eÚL ¤.15 ÚLÖz›¥ “‡V TÖX• AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ RLY¥


HW¥ B¼½Á h¿eÚL
¤.15 ÚLÖz›¥ “‡V TÖX•
AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ RLY¥


HW¥, SY.3-

HW¥ B¼½Á h¿eÚL ¤.15 ÚLÖz ÙNX«¥ “‡V TÖX• LyPTP E·[‰ GÁ¿ AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ i½]ÖŸ.

HW¥ B¼¿ TÖX•

І‰ehz UÖYyP†‡¥ «VÖTÖW SLWUÖL HW¥ «[jhf\‰. ‡]˜• B›WeLQeLÖ] UeL· Ajh Y‹‰ ÙN¥fÁ\]Ÿ. ÙT£•TÖXÖ]YŸL· HW¥- h£•”Ÿ NÖÛX Y³VÖL Y‹‰ ÙN¥f\ÖŸL·.

C‹R NÖÛX›¥, HW¥ RÖ–WTW‚ B¼½Á h¿eÚL LyPTy| E·[ TÖX• EVW• hÛ\YÖ]‰. UÛZe LÖX†‡¥ B¼½¥ ÙY·[ÙT£eh H¼T|• ÚTÖ‰, ÚTÖehYW†‰ ‰zeLT|•. R¼ÚTÖ‰ UÛZ ÙTš‰ Y£YRÖ¥ B¼½¥ ÙY·[ÙT£eh H¼Ty| E·[‰. ÙY·[†‡¥ Az†‰ YWTyP AUÛXoÙNzL· TÖX†‡Á hZÖšL¸¥ AÛPÛT H¼T|†‡ E·[‰. CR]Ö¥ hZÖšL· Y³VÖL RƒŸ ÙN¥XÖU¥ ÚRjf Y£f\‰. UÛZ ÙRÖPŸ‹‰ ÙTšRÖ¥ TÖX†ÛR ™²f ÙN¥¨• ŒÛX H¼T|•. G]ÚY ÙTÖ‰UeL· –L°• pWUT|YÖŸL·.

CR]Ö¥ HW¥ B¼¿ TÖX†ÛR AÛUoNŸ GÍ.‘.N˜LSÖRÁ ÚS¼¿ ÚS¡¥ TÖŸÛY›yPÖŸ. ÚU¨• AUÛXo ÙNzLÛ[ AL¼¿• T‚ÛV• Bš° ÙNšRÖŸ. ‘Á]Ÿ Œ£TŸLºeh ÚTyz A¸†RÖŸ. AÚTÖ‰ AYŸ i½VRÖY‰:-

¤.15 ÚLÖz J‰eg|

C‹R TÖX• EVW• hÛ\YÖL E·[‰. TÖX†ÛR EVŸ†‡ Lyze ÙLÖ|eL ÚY|• GÁ¿ ˜R¥- AÛUoNŸ Ù^VX¦RÖ«P• ÙTÖ‰UeL· ÚLÖ¡eÛL UÄ ÙLÖ|†‰ C£‹R]Ÿ. CÛR H¼\ ˜R¥- AÛUoNŸ, C‹R RÖ²YÖ] TÖX†‰eh T‡¥ EVWUÖ] TÖX• LyP ¤.15 ÚLÖz J‰eg| ÙNš‰ A½«†‰ E·[ÖŸ. «ÛW«¥ TÖX• Ly|• T‚L· ÙRÖPjLT|•.

CªYÖ¿ AÛUoNŸ N˜LSÖRÁ i½]ÖŸ.

AÛUoN£PÁ, UÖYyP TtNÖV†‰ RÛXYŸ pÁ]†‰ÛW, ~ÛYhP• JÁ½V A.‡.˜.L. ÙNVXÖ[Ÿ B¿˜LS›]ÖŸ, І‰ehz ïÂVÁ RÛXYŸ N˜LÚY¥, HW¥ SLW ÙNVXÖ[Ÿ B†‡TZ•, ÙT£jh[• SLW ÙNVXÖ[Ÿ ÙN¥X†‰ÛW, ÚTšh[• «YNÖ›L· NjL ÙTÖ£[Ö[Ÿ hQÚNLWÁ U¼¿• TXŸ LX‹‰ ÙLցP]Ÿ.


ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...