ஞாயிறு, 31 மார்ச், 2019

ஏரல் அருகே கனிமொழி எம்.பி. வாக்கு சேகரிப்பு சேதுக்குவாய்த்தான், தொட்டியன்குடியிருப்பு, குரங்கணி, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, மணல்மேடு, மேல கடம்பா, குருகாட்டூர், மணத்தி, புறையூர், கல்லாம்பாறை, குரும்பூர், நாலுமாவடி, பணிக்கநாடார்குடியிருப்பு, இடையன்விளை, துரைச்சாமிபுரம், கச்சனாவிளை, நாசரேத் கனிமொழி எம்.பி.

“பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்”கனிமொழி எம்.பி. பேச்சு
“பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்” என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
திருச்செந்தூர், 

“பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்” என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி எம்.பி. பேசினார்

.அப்போது அவர் கூறியதாவது:-

உரிமைகள் பறிக்கப்படும்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விரோதம் கிடையாது. பெண்களுக்கு வாக்குரிமையை பெற்று தந்தது தந்தை பெரியாரின் திராவிட இயக்கம். நாட்டிலேயே பெண்களுக்கு முதன்முதலாக திருமண உதவித்தொகையை வழங்கியவர் கலைஞர் கருணாநிதிதான். உள்ளாட்சி தேர்தலிலே 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதும் கருணாநிதிதான்.

மத்திய பா.ஜனதா அரசு 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தர மறுக்கிறது. மேலும் பெண்களுக்கு குறைந்தபட்ச அங்கீகாரத்தையும் தர மறுக்கிறது. பா.ஜனதாவின் சித்தாந்தம் பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக, அடித்தட்டு மக்களாக கருதுகிறது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்.

ரூ.50 ஆயிரம் கடன்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒரு பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு பதிலாக 150 நாட்கள் பணி வழங்கப்படும். பழைய முறைப்படி கியாஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் சுழல்நிதி வழங்கப்படும் என்று எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும் விரைவில் பதவி ஏற்பார்கள். அப்போது ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

அடிப்படை வசதிகள்

அ.தி.மு.க. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், செயற்கைக்கோளை சுட்டதாகவும், தூத்துக்குடியில் புல்லட் ரெயிலை விடுவதாகவும் கூறுவார்கள். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முதலில் தீருங்கள். பெண்களின் உரிமைகளை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

கூட்டத்தில், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

வாக்கு சேகரிப்பு

முன்னதாக கனிமொழி எம்.பி. குரும்பூர் அழகப்பபுரத்தில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர், காரவிளை, சோழியக்குறிச்சி, சேதுசுப்பிரமணியபுரம், சேதுக்குவாய்த்தான், தொட்டியன்குடியிருப்பு, குரங்கணி, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, மணல்மேடு, மேல கடம்பா, குருகாட்டூர், மணத்தி, புறையூர், கல்லாம்பாறை, குரும்பூர், நாலுமாவடி, பணிக்கநாடார்குடியிருப்பு, இடையன்விளை, துரைச்சாமிபுரம், கச்சனாவிளை, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.




வெள்ளி, 29 மார்ச், 2019

கனிமொழி கருணாநிதியுடன் ஒரு சிறப்பு நேர்காணல் | Special Interview with Ka...

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டி/ இறுதி பட்டியல் வெளியீடு

இறுதி பட்டியல் வெளியீடு:தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி முதல் 26-ந்தேதி வரை நடந்தது. இதில் 48 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு பரிசீலனையின்போது, 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 40 பேர் மனு ஏற்கப்பட்டது. தொடர்ந்து வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இயக்குனர் கவுதமன் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். நேற்று மாலை 3 மணியுடன் வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்தது. நேற்று மொத்தம் 2 பேர் வாபஸ் பெற்றனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பா.ஜனதா, தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 37 பேர் களத்தில் உள்ளனர்.

பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர்கள் சீமா சர்மா ஜெயின், துக்கி சியாம் பெய்க், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேட்பாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்து கொடுத்த சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஒரே சின்னத்தை 2 பேர் கேட்கும்போது, குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம் வருமாறு:-

கனிமொழி கருணாநிதி (தி.மு.க.) - உதயசூரியன்,
 தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜனதா) - தாமரை, 
ம.புவனேசுவரன்(அ.ம.மு.க.) - பரிசு பெட்டகம், 
த.பொ.சீ.பொன்குமரன் (மக்கள் நீதி மய்யம்) - டார்ச்லைட்,
 சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் (நாம் தமிழர் கட்சி) - கரும்பு விவசாயி, வே.சிவா (பகுஜன் சமாஜ்) - யானை, 
காபிரியேல் ஜேம்ஸ் பெர்ணான்டோ 
(பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா(செ))- 
ரொட்டி, ம.மகாராஜன் (பிரகதிசில் சமாஜ்வாடி கட்சி(லோகியா)) - சாவி, 
ஈ.வி.எஸ்.ராஜகுமார் நாயுடு (தமிழ் தெலுங்கு நேஷனல் கட்சி) - டிராக்டர் இயக்கும் விவசாயி, 
ராஜ்குமார் போலையா (யுனிவர்சல் பிரதர்ஹூட் மூவ்மண்ட்)- 
புல்லாங்குழல், 
து.ஜெயகணேஷ் (நாம் இந்தியர்) - ஆட்டோ ரிக்‌ஷா, 
எஸ்.ஜெர்மனஸ்(கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி) - ஹெலிகாப்டர், 
மை.அண்டோ ஹிலரி (சுயேச்சை) - தலைக்கவசம், 
அமலன் ராஜீவ்போனிபாஸ் (சுயே) - வைரம், 
மு.கணேசன்(சுயே) - கால்பந்து, க.குரு (சுயே) - ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை, மு.சங்கரலிங்கம் (சுயே) - காளிபிளவர், 
க.சரவணன் (சுயே) - புட்டி, வே.சன்மேன் (சுயே) - கிரிக்கெட் மட்டை,
 ஜெ.சிவனேசுவரன் (சுயே) - பலூன், 
இரா.ச.சுபாஷினி மள்ளத்தி (சுயே) - தீப்பெட்டி, 
பா.செல்வின் (சுயே) - பிரஷர் குக்கர், 
ரா.சேனை நடராஜன் (சுயே) - வாயு சிலிண்டர், 
பூ.பாலமுருகன் (சுயே) - தென்னந்தோப்பு,
 பிரதீப் கணேசன் (சுயே) - மோதிரம், 
ச.பொன்ராஜ் (சுயே) - கடித பெட்டி, 
மு.பொன்னுசாமி (சுயே) - அன்னாசி பழம், 
மரகதராகவராஜ் (சுயே) - நடைவண்டி, 
அ.ரமேஷ் (சுயே) - தொப்பி,
 ஜெ.ரவிசங்கர் (சுயே) - கப் அண்ட் சாசர்
, ம.ராமகிருஷ்ணன் (சுயே) - பானை, 
பா.ராமகிருஷ்ணன் (சுயே) - கப்பல், 
மு.ராஜலிங்கம் (சுயே) - தொலைபேசி, 
எஸ்.லூடஸ் (சுயே) - தண்ணீர் ஊற்றும் ஜாடி, 
ஆ.ஜெயராஜ் (சுயே) - வாளி, 
கா.ஜேம்ஸ் (சுயே) - டீசல் பம்பு, 
ஞா.ஜேஸ்பர் ஞானமார்ட்டின் (சுயே) - புகைபோக்கி.


கனிமொழி கருணாநிதியுடன் ஒரு சிறப்பு நேர்காணல் | Special Interview with Ka...

Interview Thoothukudi DMK Candidate Kanimozhi | Lok Sabha elections 2019

தூத்துக்குடியில் தமிழிசைக்கு ஐந்தாவது இடமே கிடைக்கும் TAMILISAI fifth pl...

5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத மோடி அரசு கனிமொழி எம்.பி.





தூத்துக்குடி, மார்ச் 29: கடந்த 5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத மத்திய அரசு, ஆட்சி முடியும் நேரத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்குகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மக்களவை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அரங்கத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மஹ்முதுல் ஹஸன் வரவேற்றார். தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி பேசுகையில், எல்லோரும் இந்த மண்ணை நம்பி வாழ்கிறோம். இந்தியாவை நேசிக்கிறோம். இன்றைய அரசியலில் கலாசாரத்தை கடைப்பிடிக்க வேண்டிய மோடி அரசு அதனை கடைப்பிடிக்காமல் பல்வேறு வகையில் பிரித்தாலும் செயலில் ஈடுபடுகிறது. தேசப்பற்று, மொழிபற்றில் பா.ஜ.க.வினரைவிட நாம் குறைந்தவர்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளைதான் செயல்படுத்தினர். தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு மக்களுக்கு திட்டங்களை கொண்டு வருவது போல் ஆட்சி முடியும் நேரத்தில் அடிக்கல் நாட்டுகின்றனர். அதில் ஒன்றுதான் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமாகும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்போது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேசுகையில், கருணாநிதியின் மகளாக இங்கு போட்டியிடும் கனிமொழி தன்னுடைய தொகுதி பிரசாரத்திற்கு இடையில் சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து 9 இடங்களில் பிரசாரம் செய்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற முஸ்லிம்லீக் கட்சியினர் அனைவரும் வாக்குகளை மாவட்டம் முழுவதும் சேகரிக்க வேண்டும் என்றார். கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசுகையில், வங்கியில் நம்முடைய பணம் இருந்தால் அதற்கு மாதந்தோறும் வட்டியை வங்கி சார்பில் கொடுத்து வந்தனர். ஆனால் மோடி ஆட்சியில் வங்கியில் குறைவாக பணம் இருந்தால் அதற்கு அபராதம் விதித்து பணத்தை எடுக்கிறார்கள். பதவிக்காக எதையும் செய்ய தயங்காத கூட்டம் வருகிறது. ஆகவே அனைவரும் விழிப்புணர்வோடு இருந்து பணியாற்ற வேண்டும் என்றார்.கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் மைதீன், மாவட்ட துணை தலைவர் பாதுல்அஸ்ஹப், மாநகர தலைவர் சகாப்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா-அ.தி.மு.க. ஆட்சியில்“மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவுகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்”கனிமொழி எம்.பி. பிரசாரம்



பா.ஜனதா-அ.தி.மு.க. ஆட்சியில்“மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவுகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்”கனிமொழி எம்.பி. பிரசாரம்
“பா.ஜனதா-அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவுகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்“ என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
கோவில்பட்டி,

“பா.ஜனதா-அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவுகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்“ என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.

கனிமொழி எம்.பி. பிரசாரம்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் கோவில்பட்டி அன்னை தெரசா நகரில் திறந்த வேனில் சென்று தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் மந்திதோப்பு, கரிசல்குளம், சிவந்திபட்டி, துறையூர், ராஜீவ்நகர், முத்துநகர், வடக்கு திட்டங்குளம், லாயல்மில் காலனி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, லிங்கம்பட்டி, குலசேகரபுரம் ஆகிய பகுதிகளிலும் சென்று வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

மக்கள் சந்தித்த துயரங்கள்

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பா.ஜனதா ஆட்சியில் பொதுமக்கள் சந்தித்த துயரங்கள் ஏராளம். சரக்கு சேவை வரி விதித்ததால் தீப்பெட்டி, பட்டாசு, கடலை மிட்டாய் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் நலிவடைந்து, எண்ணற்ற தொழிலாளர்கள் வேலை இழந்தனர். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாததால், ஆண்டுதோறும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறியவர்கள், தற்போது தேசிய ஊரக தொழிலாளர்களின் சம்பளத்தை கூட அவர்களது வங்கி கணக்கில் முறையாக வரவு வைப்பது இல்லை.

விலைவாசி உயர்வு

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.300-ஆக இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,000-ஐ தாண்டி விட்டது. மேலும் பெரும்பாலானவர்களுக்கு கியாஸ் மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதே இல்லை. பெட்ரோல், டீசல் விலையையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி விட்டு, தற்போது தேர்தலுக்காக சற்று குறைத்துள்ளனர். விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நியாயத்துக்காக போராடுகிறவர்களை சுட்டு கொல்வதற்கு தயங்காதவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மத்திய பா.ஜனதா அரசின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு உள்ளது. வருகிற தேர்தலில் இந்த 2 அரசுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். மத்தியில் தமிழர்களையும், தமிழர்களின் உணர்வுகள், அடையாளங்களை மதிக்கின்ற அரசு அமைய வேண்டும்.

உதயசூரியன் சின்னத்தில்...

ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயில நீட் தேர்வை ரத்து செய்கின்ற அரசு அமைய வேண்டும். மக்களுக்கு பயன்படக்கூடிய வேலைவாய்ப்புகளை தரக்கூடிய அரசு அமைய வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நல்லாட்சி அமைவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விவசாய கடன், கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வட்டியில்லாத கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். 10-ம் வகுப்பு படித்த ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்கப்படும். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த துயரங்களுக்கு முடிவு கட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

அப்போது வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செயல்வீரர்கள் கூட்டம்

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மீராசா தலைமை தாங்கினார். தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மகமதுல்ஹசன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, “பா.ஜனதாவினர் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து விட்டு தேர்தல் வந்தவுடன் அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர். தேர்தலுக்காக செய்யக்கூடிய ஒரு காட்சிதான் இது. நிச்சயமாக எய்ம்ஸ் வரும். ஆனால் பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட்டு எங்களுடைய கூட்டணி ஆட்சியில் தான் எய்ம்ஸ் தமிழ்நாட்டுக்கு வரும்” என்றார்.




செவ்வாய், 26 மார்ச், 2019

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 48 பேர் மனுதாக்கல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில்தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 48 பேர் மனுதாக்கல்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 48 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 48 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று காலை 11 மணி முதல் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வந்து கொண்டே இருந்தனர்.

நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் புவனேசுவரன், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் பொன்குமரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். மனுதாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

48 வேட்பாளர்கள்

அப்போது, 13 பேர் மனுதாக்கல் செய்வதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் காத்து இருந்தனர். இதனால் அவர்களின் பெயர்களை எழுதி வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளராக சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு தாக்கல் மாலை 5-30 மணி வரை நீடித்தது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 28 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். 3 மணிக்கு பிறகு ஒருவர் மனுதாக்கல் செய்வதற்காக வந்தார். ஆனால் அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை.

மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க., பா.ஜனதா உள்பட மொத்தம் 48 வேட்பாளர்கள் 62 மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நேற்று கடைசிநாள் என்பதால் அதிகளவில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் வந்த கார்களில் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தினர்.

வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் பரிசீலிக்கப்படுகிறது. பரிசீலனையின்போது வேட்பாளர், அவருடைய தேர்தல் முகவர், முன்மொழிந்த ஒரு நபர் மற்றும் வேட்பாளரால் எழுத்து மூலமாக அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு நபர் ஆக மொத்தம் 4 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து வருகிற 29-ந்தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

ஏரல் அருகே ஆத்தூரில் 9 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் வழக்கில் துப்பு துலங்கியது:தண்ணீரில் மூழ்கடித்து விவசாயி கொலை2 பேர் கைது-பரபரப்பு வாக்குமூலம்

ஆத்தூரில் 9 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் வழக்கில் துப்பு துலங்கியது:தண்ணீரில் மூழ்கடித்து விவசாயி கொலை2 பேர் கைது-பரபரப்பு வாக்குமூலம்
ஆத்தூரில் 9 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயி தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி, 

ஆத்தூரில் 9 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயி தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெற்றிலை விவசாயி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சேனையர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). இவர் வெற்றிலை கொடிக்கால்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் கடந்த 24-6-2018 அன்று மாரியப்பனின் நண்பரான ஆத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மணி விபத்தில் உயிரிழந்தார். எனவே, மாரியப்பன் துக்கம் விசாரிக்க தனது நண்பரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாளில் இருந்து மாரியப்பன் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குளத்தில் உடல் மீட்பு

இதையடுத்து கடந்த 2-7-2018 அன்று ஆத்தூர் குளத்தில் அமலைச்செடிகளுக்கு இடையில் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அது மாரியப்பனின் உடலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அந்த உடலை பார்வையிட்ட மாரியப்பனின் குடும்பத்தினர், அது மாரியப்பனின் உடல் இல்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து அந்த உடலின் பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பினர். இதன் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் ஆத்தூர் குளத்தில் இறந்து கிடந்தது மாரியப்பன் என்பது உறுதியானது. இதற்கிடையே, நேற்று முன்தினம் ஆத்தூரில் நடந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்துவிடம் 2 மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் இசக்கிமுத்து பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது மர்மநபர்கள், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஒருவரை ஆத்தூர் குளத்தில் தண்ணீரில் மூழ்கடித்து கொன்று தங்க மோதிரத்தை திருடி விட்டு, அவரது உடலை அமலைச்செடிக்குள் வீசியதாகவும், அதேபோன்று இசக்கிமுத்துவையும் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிச்சென்ற இசக்கிமுத்து, இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

2 பேர் கைது

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த 2 மர்மநபர்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் துப்பு துலங்கியது. பிடிபட்டவர்கள் ஆத்தூர் அருகே கொழுவைநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முத்துகுமார் (35), சங்கர் (40) என்பதும், இவர்கள் தங்களுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து மாரியப்பனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வெற்றிலை விவசாயி மாரியப்பன் மாயமான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து முத்துகுமார், சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மாரியப்பன் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதான முத்துகுமார், சங்கர் ஆகியோர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

தங்க மோதிரத்துக்காக...

நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் கடந்த 25-6-2018 அன்று ஆத்தூர் குளத்தில் குளிக்க சென்றோம். அப்போது அங்கு குளத்தில் குளித்து கொண்டிருந்த மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினோம். ஆனால் அவர் பணத்தை தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 5 பேரும் சேர்ந்து மாரியப்பனை தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்து இருந்து தங்க மோதிரத்தை திருடிக்கொண்டு, அவரது உடலை அமலைச்செடிகளுக்கு நடுவில் வீசிச்சென்றோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை கனிமொழி எம்.பி. வெளியிட்டார்



தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் அறிக்கை கனிமொழி எம்.பி. வெளியிட்டார்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையை கனிமொழி எம்.பி. நேற்று வெளியிட்டார்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார்.

அவர் நேற்று மதியம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று மாலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி விமான நிலையத்தை பன்னாட்டு விமான முனையமாக மாற்ற நடவடிக்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிக, சரித்திர புகழ்பெற்ற இடங்களை சுற்றுலா மையங்களாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தூத்துக்குடியை கல்வியில் முதன்மை மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். தூத்துக்குடியில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, சரக்கு வாகனம் நிறுத்துவதற்கு தனி முனையம், வ.உ.சி. துறைமுக விரிவாக்கத்துக்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.

கிராமப்புற மக்களுக்காக உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு மைதானம், கலையரங்கம், சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும், தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தரமான சாலைகள், குடிநீர் வசதி செய்து தரப்படும். பாசன குளங்கள், மானாவாரி குளங்கள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படும். கிராமப்புற மக்கள் மற்றும் பெண்களுக்காக சிறு, குறு தொழில்கள் உருவாக்கப்படும். விவசாய பொருட்களை பதப்படுத்துவதற்கு குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி உருவாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு தேவையான இடங்களில் தூண்டில் வளைவு, குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்றால், தமிழிசை யார்? நான் பிரதமரின் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தில் தூத்துக்குடி பகுதியில் உள்ள கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு உள்ளேன். நான் தொடர்ந்து இங்கு பணியாற்றி வருகிறேன்.

சேதுசமுத்திரம் திட்டம் பற்றி தவறான தகவல் மீனவர்களிடையே பரப்பப்பட்டு உள்ளது. அதுபற்றி மீனவர்களுக்கு தெளிவுபடுத்தி, இயற்கையை பாதிக்காதவாறு சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படும். ரபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துவிட்டு, பா.ஜனதா நேர்மை பற்றி தமிழிசை பேசட்டும். மத பிரச்சினைகளை தூண்டுவதே பா.ஜனதா கட்சிதான். அதற்காக தான் அதை எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம். நான் மாநிலங்களவையில் 600 கேள்விகள் கேட்டு உள்ளேன். 142 விவாதங்களில் பங்கேற்று உள்ளேன். சிறந்த பெண் எம்.பி. என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

கொடநாடு கொலை விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க. தனித்தன்மையையோ, கொள்கையையோ விட்டுக்கொடுத்தது இல்லை. ஜெயலலிதாவின் கொள்கைகளை கூட கடைபிடிக்க முடியாதவர்களாக அ.தி.மு.க.வினர் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து கனிமொழி எம்.பி. தூத்துக்குடி முத்தையாபுரம், ஸ்பிக்நகர், அத்திமரப்பட்டி, பாரதி நகர், முள்ளக்காடு, ராஜூவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் மோடி வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறினார். ஆனால் இதுவரை செலுத்தப்படவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை எல்லாம் உச்சத்துக்கு சென்று விட்டன. இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் அமைதியாக போராடிய மக்கள் மீது மத்திய அரசு உத்தரவுபடி மாநில அரசு நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்த அ.தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதுவும் செய்யவில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார். 

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...