சிறுத்தொண்டநல்லூர் வாய்க்காலில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு
நோய் பரவும் அபாயம்
ஏரல், பிப். 23:
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் வாய்க்காலில் அமலை செடிகளின் ஆக்கிரமிப் பால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெருங்குளம் குளத்தில் இருந்து உபரி தண்ணீர் மறுகால் வாய்கால் வழியாக பெருங்குளம், சின்னநட்டாத்தி, மணலூர், சிறுத்தொண்டநல்லூர் வழியாக ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் ஏரல் அருகே சூழவாய்க் கால் பகுதியில் வந்து சேரு கிறது.
இந்த வாய்க்காலில் உள்ள தண்ணீரில் சின்னநட்டாத்தி, மணலூர், சிறுத்தொண்டநல்லூர் பகுதி மக்கள் குளித்து வருகின்றனர். ஆனால் இந்த வாய்க் கால் தண்ணீரில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் இருப்பதே தெரிவதில்லை. மேலும் அமலைசெடிகள் அடர்ந்து காணப்படுவ தால் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாகி வரு கிறது. இந்த தண்ணீரில் குளிக்கும் மக்களுக்கு தோலில் அரிப்பு ஏற்படுகிறது.
இதனால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விஷ சந்துகளும் இந்த அமலை செடிகளுக் குள் குடிபுகுந்துள்ளதால் பொதுமக்கள் வாய்க்காலில் குளிப்பதற்கு அஞ்சுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு நோய் வராமல் தடுக்க இந்த வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் வாய்க்காலில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.