ஏரல், ஜன. 22&
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி தினமும் காலை இரவு சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உள் வீதி உலா வந்தார்.
முக்கியநிகழ்ச்சியான தை அமா வாசையான இன்று அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல் வேறு சிறப்பு பூஜைகள், அபி ஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்த னர்.இன்று பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு எழுமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோலக்காட்சியும், இரவு 10மணிக்கு 1ம் காலம் கற்ப கப் பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடக்கிறது.
23ம் தேதி காலை 5 மணிக்கு 2ம்கால வெள்ளைசாத்தி தரிச னமும், கா¬9மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பகல் 1.30 மணிக்கு 3ம் கால பச்சைசாத்தி தரிசனமும், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தல் தாகசாந்தியும், இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோவில் மூலஸ்தானம் வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
24ம் தேதி தை அமாவாசை திருவிழா நிறைவுநாள் விழா நடக்கி றது. அன்று காலை தாமிரபரணி நதியில் நீராடலும், பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு ஆலிலைச் சயனம் மங்கள தரிச னம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண் டிய நாடார் செய்துவருகிறார்.
தை அமாவாசையை முன் னிட்டு பக்தர்கள் இரவில் தங்க வசதியாக கோவிலில் மின்விளக்கு வசதி, சாலை மற்றும் குடி நீர்உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட்டு உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள் ளிட்ட இடங்களில் இருந்து ஏர லுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏரல் இன்ஸ்பெக் டர் ராமராஜன் தலைமை யில் எஸ்.ஐ.பால்ஐசக் மேற்பா£ர்வை யில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.
ஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா
திரளான பக்தர்கள் புனித நீராடி தரிசன
