திங்கள், 23 ஜூன், 2014

ஏரல் பெரியமணரா தெருவை சேர்ந்த சேக்முகைதீன் மகன் ஆசிக் அலியை (23) கைது

ஏரல், ஜூன் 23:
ஸ்ரீவை குண்டம் ஒன்றிய இந்து முன்னணி தலை வருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே கொற்கை மணலூரை சேர்ந்தவர் நாராயணன் (59). இவர் இந்து முன்னணி ஸ்ரீவை குண்டம் ஒன்றிய தலைவ ராக உள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி செய லாளர் சுரேஷ்குமார் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப் அருகில் நேற்று முன்தினம் இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாராயணன் கலந்து கொண்டார். அப்போது ஒரு வாலிபர் இந்த ஆர்ப்பாட்டத்தை தனது செல் போனில் படம் எடுத்தார். இதனை நாராயணன் தடுத்தார். இதனால் அந்த வாலிபர் நாராயணனை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து நாராய ணன் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், விரோத வளர்ச்சிகளை தூண்டும் வகையில் வாலி பர் நடந்து கொண்டதாக ஏரல் போலீசில் புகார் செய்தார்.
ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்ஐ மந்திரமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தி ஏரல் பெரியமணரா தெருவை சேர்ந்த சேக்முகைதீன் மகன் ஆசிக் அலியை (23) கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...