வெள்ளி, 30 ஜூன், 2017

ஜிஎஸ்டி அமலால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?- முழு பட்டியல்


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியால் விலை குறையும் பொருட்கள்

உணவுப் பொருட்கள்
பால்பவுடர்
தயிர்
மோர்
பிராண்ட் அல்லாத இயற்கை தேன்
பாலாடைக் கட்டி
நறுமணப் பொருட்கள்
தேயிலை
கோதுமை
அரிசி
கடலை எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெய்
பாமாயில்
தேங்காய் எண்ணெய்
கடுகு எண்ணெய்
சர்க்கரை
வெல்லம்
பாஸ்தா
மாக்ரோனி
நூடுல்ஸ்
பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஊறுகாய்
ஜாம்
சாஸ் வகைகள்
இனிப்பு வகைகள்
இன்ஸ்டண்ட் உணவு மிக்ஸ்
ஐஸ்
மினரல் வாட்டர்
முந்திரி
பிஸ்கட்
பேக்கிங் பவுடர்
தினசரி பயன்படும் பொருட்கள்
குளியல் சோப்
தலைக்கு தடவக்கூடிய எண்ணெய்
சோப்புத் தூள்
சோப்
டிஸ்யூ பேப்பர்ஸ்
நாப்கின்ஸ்
மெழுகுவர்த்திகள்
மண்ணெண்ணெய்
எல்பிஜி டொமஸ்டிக்
தீப்பெட்டிகள்
ஸ்பூன்கள் மற்றும் போர்க்
அகர்பத்திகள்
பற்பசை மற்றும் பற்பொடி
எல்பிஜி ஸ்டவ்
ஸ்டேஷனரி பொருட்கள்
நோட்டு புத்தகம்
பேனா
அனைத்து வகையான பேப்பர்
கிராப் பேப்பர்
பள்ளி புத்தகப்பை
படம், ஓவியம், வண்ணம் தீட்டும் புத்தகங்கள்
கார்பன் பேப்பர்
பிரிண்டர்ஸ்
மருந்துகள்
இன்சுலின்
எக்ஸ்ரே பிலிம்
மருத்துவப் பரிசோதனை பொருட்கள்
கண்ணாடிகள்
சர்க்கரை மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள்
ஆடை சம்பந்தப்பட்ட பொருட்கள்
பட்டு
கம்பளி பொருள்
காதி துணிகள்
ரூ.500க்கும் கீழ் உள்ள காலணிகள்
ரூ.1,000 வரை உள்ள ஆடைகள்
மற்றவை
15 ஹெச்பிக்கும் குறைவான திறன் உள்ள டீசல் இன்ஜின்
டிராக்டர்
எடை மெஷின்கள்
எலெக்ட்ரிக் டிரான்பார்மர்ஸ்
வைண்டிங் வொயர்ஸ்
ஹெல்மட்
பட்டாசுகள்
இரு சக்கர வாகனங்கள்
சொகுசு கார்கள்
ஸ்கூட்டர்ஸ்
எகானாமி பிரிவு விமான டிக்கெட்டுகள்
ரூ.7,500 க்கும் குறைவான அறை வாடகை கொண்ட ஹோட்டல்கள்
சிமெண்ட்
செங்கற்கள்

விலை உயரும் பொருட்கள்

பன்னீர்
காபி
மசாலா பவுடர்
நெய்
சுவிங்-கம்
ஐஸ் கிரீம்
சாக்லேட்
தங்கம்
7500 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஓட்டல் அறை
ஐந்து நட்சத்திர ஓட்டல்
100 ரூபாய்க்கு மேல் இருக்கும் டிக்கெட் கட்டணம்
ஐபிஎல் போட்டிகள்
1000 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஆடைகள்
ஷாம்பு
வாசனை திரவியம்
முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு டிக்கெட்கள்
ஏசி
குளிர்சாதன பெட்டி
வாஷிங் மெஷின்
தொலைக்காட்சி பெட்டி
கொரியர் சேவைகள்
மொபைல் கட்டணங்கள்
வங்கி சேவைகள்
பிராட்பேண்ட்
கிரெடிட் கார்டு கட்டணம்
350 சிசிக்கும் மேலான இரு சக்கர வாகனம்
சிறிய மற்றும் நடுத்தர கார்
எஸ்யூவி
மீன் வலை
ஸ்மார்ட்போன்
லேப்டாப்
டெஸ்க்டாப்
உடற்பயிற்சி சாதனங்கள்
காற்றடைக்கப்பட்ட பானங்கள்
சிகரெட்
புகையிலை
மதுபானம்
சொகுசு பொருட்கள்

தூத்துக்குடி, ஆத்தூர் உடன்குடியில் கடையடைப்பு ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி, ஆத்தூர்
உடன்குடியில் கடையடைப்பு
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு
ஆறு மு க நேரி, ஜூன் 30-
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரி வித்து தூத் துக் குடி, ஆத் தூர், உடன் கு டி யில் இன்று கடை கள் அடைக் கப் பட் டன.
நாடு முழு வ தும் நாளை முதல் ஜிஎஸ்டி வரி அமு லுக்கு வரு கி றது. இத னால் சில வகை பொருட் கள் தவிர மற்ற பொருட் க ளுக்கு 12 முதல் 18 சத வீ தம் வரை விலை உய ரும். ஜிஎஸ்டி வரி விதிப் பிற்கு எதிர்க் கட் சி கள் கடும் கண் ட னம் தெரி வித் துள் ளன. வியா பா ரி க ளும் எதிர்ப்பு தெரி வித்து வரு கி றார் கள். இதை யொட்டி தமி ழ கத் தில் இன்று வியா பா ரி கள் கடை ய டைப்பு போராட் டம் நடை பெ றும் என்று வணி கர் சங்க தலை வர் வெள் ளை யன் அறி வித் தி ருந் தார்.
அதன் படி தூத் துக் குடி மாவட் டத் தில் தூத் துக் குடி நகர பகு தி க ளில் பீச் ரோடு, பாளை ரோடு, விவி ரோடு பகு தி யில் 10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட கடை க ளும், மாவட் டத் தில் வடக்கு மற் றும் தெற்கு ஆத் தூ ரில் 600க்கும் மேற் பட்ட கடை க ளும் அடைக் கப் பட் டன. ஆறு மு க நே ரி யில் வழக் கம் போல் கடை கள் திறந் தி ருந் தன. வெள் ளை ய னின் சொந்த ஊரான பிச் சு விளை அரு கில் உள்ள உடன் கு டி யி லும் முழு கடை ய டைப்பு நடந் தது.







வியாழன், 29 ஜூன், 2017

ஆறுமுகநேரியில் 2–வது நாளாக அறிவியல் கண்காட்சி ரெயிலை 23 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்

ஆறுமுகநேரியில் 2–வது நாளாக அறிவியல் கண்காட்சி ரெயிலை 23 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்
ஆறுமுகநேரியில் 2–வது நாளாக அறிவியல் கண்காட்சி ரெயிலை 23 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஆறுமுகநேரி, 
ஆறுமுகநேரியில் 2–வது நாளாக அறிவியல் கண்காட்சி ரெயிலை 23 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சி ரெயில்
இந்திய ரெயில்வே சார்பில், மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலில் உள்ள 13 குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வானிலை மாற்றத்துக்கான புரிந்துணர்வு, அதனை சீர்படுத்துதல், உலகளாவிய வானிலை மாற்றத்துக்கான புரிதல், உயிர்வள ஆதாரம், இயற்கை பாதுகாப்பிற்கான உயிர் தொழில்நுட்பம், வானிலையை சீர்படுத்துவதற்கான இந்தியாவின் பங்களிப்பு,
அறிவியல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புகள், அறிவியலில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல், குழந்தைகள் பகுதி என பல்வேறு வகையான அறிவியல் தொடர்பான படங்கள், காட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
23 ஆயிரம் மாணவர்கள்
அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதனை முதல்நாளில் சுமார் 11 ஆயிரம் மாணவ– மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து 2–வது நாளாக நேற்று அறிவியல் கண்காட்சி ரெயிலை 188 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 23 ஆயிரம் மாணவ– மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
மாணவர்களின் வசதிக்காக ரெயில் நிலைய வளாகத்தில் 15 இடங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்பானம், உணவு போன்றவற்றை வழங்கினர். மாலையில் பொதுமக்களும் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிட்டனர்.
இன்றும் (வெள்ளிக்கிழமை) அறிவியல் கண்காட்சி ரெயில், ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிடலாம்.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று காலை தொடங்கியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று காலை தொடங்கியது.
கலந்தாய்வு
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 480 மாணவ–மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி 2017–18–ம் ஆண்டுக்கான மாணவ–மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த படிப்புகளில் சேருவதற்கு மொத்தம் 737 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை கலந்தாய்வு தொடங்கியது. காலையில் 431–க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கும் கலந்தாய்வு நடந்தது. மாலையில் 418 முதல் 430 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இந்த கலந்தாய்வு கல்லூரி முதல்வர் சுப்பாராஜ் தலைமையில் நடந்தது. படிப்புகளின் இருக்கை விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் காண்பிக்கப்பட்டது. மாணவ–மாணவிகள் தாங்கள் விரும்பும் படிப்புகளை தேர்வு செய்தனர். அரசு விதிமுறைகளின்படி இனம் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட்டன. எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் மாணவிகள் மட்டும் சேர்க்கப்பட்டனர்.
இன்று
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 395 முதல் 417 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 370 முதல் 394 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 1 மணி வரை 340 முதல் 369 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 340–க்கு குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு–சாலைமறியல்

தாலுகா அலுவலகம் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு–சாலைமறியல்
ஸ்ரீவைகுண்டத்தில் தாலுகா அலுவலகம் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட 113 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம், 
ஸ்ரீவைகுண்டத்தில் தாலுகா அலுவலகம் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட 113 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய தாலுகா அலுவலகம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகரின் மையப்பகுதியில் அரசு ஆஸ்பத்திரி அருகில் தாலுகா அலுவலகம் உள்ளது. இதன் அருகில் பஸ் நிலையம், நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம், நூலகம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
எனவே ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் போலீஸ் நிலையம், நீதிபதி குடியிருப்புக்கு அருகில் தாலுகா அலுவலகத்துக்கு சொந்தமான 4 ஏக்கர் 38 சென்ட் நிலத்தில் ரூ.2 கோடியே 39 லட்சம் செலவில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இடமாற்றத்துக்கு எதிர்ப்பு
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்துக்கு ஏரல், பெருங்குளம், சாயர்புரம், வல்லநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தை இடமாற்றம் செய்தால், அப்பகுதி மக்கள் 2 பஸ்களில் மாறி வர வேண்டிய நிலை ஏற்படும். மேலும் தற்போது இயங்கும் தாலுகா அலுவலக வளாகத்திலேயே அதன் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் அதிகளவு இடவசதி உள்ளது.
எனவே அங்கேயே புதிய தாலுகா அலுவலகத்தை கட்ட வேண்டும். தாலுகா அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி, அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் முழு கடையடைப்பு மற்றும் சாலைமறியல் போராட்டம் அறிவித்தனர்.
முழு கடையடைப்பு
அதன்படி ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. டீக்கடை, மெடிக்கல் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நகர் முழுவதும் வெறிச்சோடியது.
தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நெல்லை– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சாலைமறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது
சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகுண்ட பாண்டியன், நகர செயலாளர் பெருமாள், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் காளியப்பன், துணை தலைவர் கந்த சிவசுப்பு, செயலாளர் தங்கவேல்மணி, ம.தி.மு.க. நகர செயலாளர் வள்ளிமுத்து, பா.ஜ.க. மாவட்ட வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் ரமேஷ், வட்டார காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், ராஜவேல், ஜெயபாலன், சந்துரு, காசிராமன், சீனிவாசன், வீரசங்கர்,
விவசாய சங்க பிரதிநிதி வேலையா, ஜமாத் செயலாளர்கள் ஷாஜகான், அப்துல் சலீம், சைவ வேளாளர் சங்க செயலாளர் காளியப்பன், தி.மு.க. கிளை செயலாளர் அருண்குமார், தொழிலாளர் அணி சங்கரபாண்டியன், இலக்கிய அணி அண்ணாமலை, வர்த்தக அணி ராகவன், விவசாய அணி பட்டாணி மற்றும் 43 பெண்கள் உள்பட 113 பேரை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

புதன், 28 ஜூன், 2017

தென்திருப்பேரை, கடம்பா குளத்தில் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.

கடம்பா குளம் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது
கடம்பா குளத்தில் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.
தென்திருப்பேரை,
கடம்பா குளத்தில் தூர்வாரும் பணி மீண்டும் தொடங்கியது.
கடம்பா குளம்
ஸ்ரீவைகுண்டம் தென்கால் மூலம் பாசன வசதி பெறும் குளங்களில் முதன்மையானது கடம்பா குளம் ஆகும். ‘கடலில் பாதி கடம்பா‘ என்று அழைக்கப்படும் இந்த குளம் நிரம்பினால்தான், திருச்செந்தூர் வரையிலான அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் செல்லும். தென்திருப்பேரை அருகே உள்ள இந்த குளம் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது தண்ணீரின்றி குளம் முழுவதும் மணல் மேடாகவும், புதர் செடிகளாகவும் காட்சி அளிக்கிறது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், கடம்பா குளத்தை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தங்களது விவசாய நிலங்களுக்கு தேவையான கரம்பை மண்ணை அள்ளிச் சென்றனர். அப்போது சிலர் ஆற்று மணலை மட்டுமே தொடர்ந்து அள்ளியதால், தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
மீண்டும் தூர்வாரும் பணி
இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில், கடம்பா குளம் தூர்வாரும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். தென்திருப்பேரையை அடுத்த கடையனோடை மதகில் இருந்து கடம்பா குளத்தில் தூர்வாரும் பணி நடந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் கரம்பை மண்ணை அள்ளி, லாரியில் ஏற்றி விவசாய நிலங்களில் கொண்டு சென்று கொட்டினர். தொடர்ந்து 10 நாட்கள் தூர்வாரும் பணி நடக்கிறது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், தாசில்தார் அழகர், ஸ்பிக் நிறுவன இயக்குனர் ராமகிருஷ்ணன், நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஏரல் ஜெ.ஜெ.திருமண மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை தொடங்குகிறது
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
செயல்வீரர்கள் கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் ஐ.எம்.ஏ. திருமண மண்டபத்திலும், 2–ந் தேதி காலை 10 மணிக்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் குரும்பூர் டி.ஏ.பி. திருமண மண்டபத்திலும், 8–ந் தேதி காலை 10 மணிக்கு கருங்குளம் வடக்கு ஒன்றிய கூட்டம் வல்லநாடு தம்புராட்டி திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு கருங்குளம் தெற்கு ஒன்றிய கூட்டம் செய்துங்கநல்லூர் குரு திருமண மண்டபத்திலும், 9–ந் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கூட்டம் ஸ்ரீவைகுண்டம் சுபா திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய கூட்டம் ஏரல் ஜெ.ஜெ.திருமண மண்டபத்திலும்,
15–ந் தேதி
15–ந் தேதி காலை 10 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கூட்டம் புதியம்புத்தூர் செங்குன்ற முதலியார் திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய கூட்டம் பேய்க்குளம் சுபபாலாஜி திருமண மண்டபத்திலும், 16–ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி ஒன்றியம் மற்றும் மாநகராட்சி வார்டு 1, 2, 5, 55, 56, 57, 58, 59 ஆகிய 8 வார்டுகளுக்கான கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கிலும், மாலை 5 மணிக்கு காயல்பட்டினம் நகர செயல்வீரர்கள் கூட்டம் ரத்தினாபுரி துளிர்வளாகத்திலும், 23–ந் தேதி காலை 10 மணிக்கு உடன்குடி ஒன்றிய கூட்டம் உடன்குடி ஆர்.எஸ்.யு. திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு சாத்தான்குளம் ஒன்றிய கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்திலும் நடக்கிறது.
கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்த்தல், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
எனவே செயல்வீரர்கள் கூட்டங்களில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, ஊராட்சி கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்

ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்
ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
ஆறுமுகநேரி, 
ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சி ரெயில்
இந்திய ரெயில்வே சார்பில், மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலில் உள்ள 13 பெட்டிகளில் பல்வேறு விதமான அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறிவியல் கண்காட்சி ரெயில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர், கரூர், கொடைக்கானல் ரோடு, விருதுநகர் ஆகிய 4 இடங்களில் மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த அறிவியல் கண்காட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் ஆறுமுகநேரிக்கு வந்தது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ரெயில், ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் 3–வது பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிடுவதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவ– மாணவிகள் ஏராளமான வேன்கள், பஸ்களில் வந்தனர். அவர்கள் ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் இருந்து மெயின் பஜார் வரையிலும் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து வரிசையாக நின்றனர்.
தொடக்க விழா
காலை 10.15 மணி அளவில் அறிவியல் கண்காட்சி ரெயிலில் தொடக்க விழா நடந்தது. தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாக உதவி தலைவர் ஜெயகுமார், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
தொடக்க விழாவில் பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், நகர தலைவர் மகேந்திரன், பெர்ல்ஸ் பள்ளிக்கூட நிர்வாகி மபத்லால், ஆத்தூர் பள்ளிக்கூட நிர்வாகி ரஞ்சித்சிங், கோசல்ராம் பேரவை தலைவர் பற்குணபெருமாள், ரெயில் நிலைய வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ரெயிலில் உள்ள 13 பெட்டிகளில் வானிலை மாற்றத்துக்கான புரிந்துணர்வு, அதனை சீர்படுத்துதல், உலகளாவிய வானிலை மாற்றத்துக்கான புரிதல், உயிர்வள ஆதாரம், இயற்கை பாதுகாப்பிற்கான உயிர் தொழில்நுட்பம், வானிலையை சீர்படுத்துவதற்கான இந்தியாவின் பங்களிப்பு, அறிவியல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்புகள், அறிவியலில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல், குழந்தைகள் பகுதி என பல்வேறு வகையான அறிவியல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.
18 ஆயிரம் மாணவர்கள்
ஒவ்வொரு ரெயில் பெட்டிகளிலும் உள்ள அறிவியல் தொடர்பான படங்கள், காட்சிகளையும் வல்லுனர் குழுவினர் தமிழிலும், ஆங்கிலத்திலும் விளக்கி கூறினர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். அனைத்து ரெயில் பெட்டிகளும் குளிரூட்டப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதனால் மாணவ– மாணவிகள் ஒவ்வொரு ரெயில் பெட்டியிலும் உள்ள அறிவியல் தொடர்பான கண்காட்சி படங்களையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
ரெயில் நிலைய நுழைவு வாயிலில் மாணவர்களின் பெயர் விவரம் பதிவு செய்யப்பட்டது. ரெயிலின் முதல் பெட்டியில் ஏறி, கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் கடைசி பெட்டியில் இறங்கி செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 18 ஆயிரம் மாணவ– மாணவிகள் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிட்டனர். ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ– மாணவிகளுக்கு குடிநீர், குளிர்பானம் போன்றவற்றை தன்னார்வலர்கள் வழங்கினர்.
மாலையில் பொதுமக்களும் அறிவியல் கண்காட்சி ரெயிலை ஆர்வமுடன் பார்வையிட்டனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அறிவியல் கண்காட்சி ரெயில், ஆறுமுகநேரி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவ– மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அறிவியல் கண்காட்சி ரெயிலை பார்வையிடலாம்.

ஏரலில் விவசாய சங்க மாநாடு

ஏரலில் விவசாய சங்க மாநாடு
ஏர லில் நடந்த விவ சாய சங்க மாநாட் டில் கொடி யேற் றப்பட்டது.
ஏரல், ஜூன் 29:
ஏர லில் தமிழ் நாடு விவ சா யி கள் சங் கத் தின் ஸ்ரீவை குண் டம் ஒன் றிய 22வது மாநாடு நடந் தது.
ஒன் றிய தலை வர் பொன் ராஜ் தலைமை வகித் தார். மாவட்ட செயலா ளர் பெரு மாள், ஒன் றிய செய லா ளர் கணபதி, பொரு ளா ளர் உல கம் மாள், மார்க் சிஸ்ட் ஒன் றிய செயலா ளர் நம் பி ரா ஜன் மற் றும் ராம லிங் கம், சுவா மி தாஸ், பெஸ்டி, முத் து ரா மன், சிலு வை முத்து, கந் த சாமி, சந் தி ரன், சிவ னைந்த பெரு மாள், மாயாண்டி உட் பட பலர் பேசி னர்.
மாநாட் டில், விடு பட் டுள்ள விவ சா யி க ளுக் கும் வறட்சி நிவா ர ணம் வழங்க வேண் டும். அனைத்து குளங் க ளை யும் தூர் வார வேண் டும். தூர் வா ரப் படும் குளங் க ளில் மோசடி முறை கே டு கள் நடை பெ றா மல் இருப் ப தற்கு மாவட்ட நிர் வா கம் தலை யிட்டு முறைப் ப டுத்த வேண் டும் உட் பட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
முன் ன தாக விவ சா யி கள் சங் கம் சார் பில் கொடியேற் றும் நிகழ்ச்சி நடந் தது. இதில் திர ளான விவ சா யி கள் கலந்து கொண் ட னர்.

ஏரலில் துவக்கப்பள்ளியை சுற்றி குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

ஏரலில் துவக்கப்பள்ளியை சுற்றி
குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர்
ஏரல், ஜூன் 29:
ஏரல் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி சுற்றி சாக் கடை கழி வு நீர் குளம் தேங்கி கிடப் ப தால் மாணவ, மாண வி க ளுக்கு நோய் பர வும் அபாய நிலை ஏற் பட் டுள் ளது.
ஏரல் கணே ச பு ரத் தில் உள்ள ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளி யில் 50 மாணவ, மாண வி கள் படிக் கின் ற னர். 3 ஆசி ரி யர் கள் பணி யாற்றி வரு கின் ற னர். மேலும் இப் பள்ளி அரு கில் 45க்கும் மேற் பட்ட தாழ்த் தப் பட்ட சமு தாய மக் கள் வசிக் கும் வீடு கள் உள் ளன. ஏரல் சிவன் கோ யில் அரு கில் இருந்து இப் பள் ளிக் கும், வீடு க ளுக் கும் செல் லும் பாதை உள் ளது.
இந்த பாதை யின் இரு பு ற மும் வயல் பகுதி அமைந் துள் ளது. இதில் கீழ் பு றம் உள்ள வயல் க ளில் கடந்த 5 ஆண் டு க ளாக விவ சா யம் செய் யப் ப ட வில்லை. இத னால் அவை தரிசு நிலங் க ளாக உள் ளன. மேல் பு றம் உள்ள பகு தி யில் விவ சா யம் நடந்து வரு கி றது.
இந் நி லை யில் ஏரல் பேரூ ராட் சி யில் உள்ள வீடு கள், நிறு வ னங் க ளில் இருந்து வெளி யே றும் சாக் கடை கழி வு நீர் அங் குள்ள கான் வழி யாக வந்து தாமி ர ப ரணி ஆற் றுக் குள் கலந்து வந் தது. இத னால் விவ சா யம் பாதிக் கப் ப டு வ தாக விவ சா யி கள் குற் றம் சாட்டி வந் த னர்.
இதனை பேரூ ராட்சி நிர் வா கம் கண் டு கொள் ளாத நிலை யில், தற் போது ஆற் றுக்கு செல் லும் பாதை தூர்ந்து போன தால், கழி வு நீர் கணே ச பு ரத் தில் உள்ள ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளிக்கு அருகே உள்ள தரிசு நிலத் தில் குளம் போல தேங்கி வரு கி றது.
பச்சை நிறத் தில் காட்சி ய ளிக் கும் இந்த கழி வு நீ ரில் இருந்து துர் நாற் றம் வீசு கி றது. இத னால் ஆசி ரி யர் கள் பள்ளி பின் பு றம் உள்ள ஜன் னல் களை அடைத்து வைத் துள் ள னர். ஆனா லும், இந்த துர் நாற் றம் பள்ளி வகுப் பறை வரை வீசு வ தால் மாணவ, மாண வி கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். இதில் சாக் கடை கழி வு நீரில் பன்றி க ளும் உருண்டு புரண்டு செல் கின் றன. மேலும் கொசுக் கள் உற் பத் தி யாகி பகல் பொழு தில் ரீங் கா ர மிட்டு வரு கின் றன. பக லில் கடிக் கும் கொசுக் களில் இருந்து தான் டெங்கு உள் ளிட் டவை பர வு வ தாக சுகா தார துறை யி னர் எச் ச ரித் துள் ள னர்.
ஆனால், ஏரல் பேரூ ராட் சி யில் நிரந் தர வடி கால் இல் லா த தால் முத லில் ஆற் றில் கலந்து வந்த கழி வு நீர் தற் போது பள்ளி அருகே தேங்கி அப் ப குதி முழு வதும் நோய் பரப்பி வரு கி றது. இத ன ருகே இருந்து ஆற் றங் க ரை யோர சாலை இருந்த இடமே தெரி யா மல் போய் விட் டது.
இது கு றித்து சமூக ஆர் வ லர் கள், பொது மக் கள் அரசு அதி கா ரி க ளுக்கு தெரி யப் ப டுத் தி யும் இது வரை எந் த வித நட வ டிக்கை எடுக் க வில்லை என குற் றம் சாட் டு கின் ற னர்.
எனவே, மாவட்ட கலெக் டர் இப் பி ரச் னை யில் உட ன டி யாக தலை யீட்டு ஏரல் பேரூ ராட் சிக்கு நிரந் தர கழி வு நீர் வடி கால் அமைக்க வேண் டும். பள் ளியை சுற்றி சுகா தாரத்தை பேண நட வடிக்கை எடுக்க வேண் டும். ஆற் றங் க ரை யோ ரத் தில் இருந்த சாலையை மீண் டும் அமைக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்
ஏரல் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளியை சுற்றி சாக் கடை கழி வு நீர் குளம்போல் தேங்கியுள் ள தால் மாணவ, மாண வி க ளுக்கு நோய் பர வும் நிலை அபாயம் உள் ளது.

ஏரல் பெரியமணாரா தெருவை சேர்ந்த முஹம்மது பாசில் (21) மாணவனுக்கு சமூக சேவைக்கான விருது (Eral Muhammad Fasil (21) student -- Award for Social Service

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பெரியமணாரா தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (51) அவரது மகன் முஹம்மது பாசில் (21) மாணவன் தொடர்ந்து சமூக பணிகளை செய்து வந்துள்ளான் இரத்ததானம் மரக்கன்று நடுதல் கல்வி உதவி போன்ற பல பணிகளை செய்துள்ளான் அதனை பாராட்டி அவருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது சமூக இயக்கங்களால் வழங்கப்பட்டது இதில் ஏரல் பெரியமணரா ஜமாத் தலைவர் பாக்கர் அலி அவர்கள் வழங்கினார் மூஸ்லீம் வணிக சங்கத்தின் பொருளார் சாதிக்குல் அமீன் சூழைவாய்கால் ஊராட்சி மன்ற தலைவர் அனஸ் மற்றும் சமூக ஆர்வலர் ஆவுல் பாதுஷா, ஜாகீர் பெரியமணரா தெரு பள்ளி இமாம் அப்துல் அஜீஸ் ஆலிம் பாகவி மற்றும் சாகுல் ஹமீது ஆலிம் பாகவி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக இயக்கதின் நிர்வாகிகள் யாசின் , சாதிக் பெரியமணரா தெரு இளைஞர்கள் கலந்து கொண்டனர்
மற்றும் அனைவரும் இளைஞனை பாராட்டினர்


சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது







---------- From the United Arab Emirates AKS ----------
----------     ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏ. கே ஷபிக் அகமத்----------


செவ்வாய், 27 ஜூன், 2017

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடலில் மூழ்கி அண்ணன் - தம்பி பலி



தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கோமான் மேல தெருவை சேர்ந்தவர் ரிபாய். சமையல் தொழிலாளி. இவரது மகன்கள் வருசா அகமது (வயது 17), ஷாலிக்(15). யூசுப் தஹா என்ற மகளும் உள்ளார். இவர்களில் வருசா அகமது செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஷாலிக் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி ரிபாய் தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் தங்கை பஷிர் நிஷா காரில் மணப்பாட்டுக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் மணப்பாடு கடற்கரையை சுற்றி பார்த்தனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் வருசா அகமது, ஷாலிக் உள்ளிட்ட சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது ஷாலிக் கடலில் திடீரென்று வந்த பெரிய அலையில் சிக்கி மூழ்கினான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வருசா அகமது, தனது தம்பியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ராட்சத அலையில் இருவரும் சிக்கி மூழ்கினர். உடனே அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள் கூச்சலிட்டனர்.

இதையடுத்து சத்தம் கேட்டு கடற்கரையில் இருந்த மீனவர்கள் ஓடிச் சென்று கடலில் இறங்கி இருவரையும் தேடினர். முதலில் வருசா அகமதுவையும், சிறிது நேரத்தில் ஷாலிக்கையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வந்த இடத்தில் தங்களது இரு மகன்களையும் ஒரு சேர பறிகொடுத்து விட்டு ரிபாயும், அவரது மனைவியும் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

இதுகுறித்து குலசேகரன் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஏரல் அருகேயுள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில்

ஏரல், ஜூன் 28:
குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் ஆனிப் பெருந் தி ரு விழா கால் நாட் டு டன் நேற்று துவங் கி யது. இதில் பக் தர் கள் திர ளா கக் கலந் து கொண் ட னர்.
ஏரல் அரு கே யுள்ள குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் தென் மாவட் டத் தில் பிர சித்தி பெற் றது. இங்கு ஆண் டு தோ றும் நடை பெ றும் ஆனிப் பெருந் தி ரு விழா தனித் து வ மிக் கது. இதன் படி இந் தாண் டுக் கான திரு விழா ஜூலை 11ம் தேதி நடக் கி றது. இதற் கான கால் நாட்டு விழா நேற்று மதி யம் நடந் தது.
இதை யொட்டி அம் ம னுக்கு சிறப்பு அபி ஷேக அலங் கார தீபா ரா தனை நடந் தது. இதை தொடர்ந்து கோயில் வளா கத் தில் கால் நாட்டு விழா நடந் தது. இதில் பக் கர் கள் திர ளாக கலந் து கொண் ட னர்.
திரு வி ழாவை முன் னிட்டு ஜூலை 10ம் தேதி முதல் திரு விழா முடி யும் வரை முத் து மாலை அம் மன் தங்க அலங் கா ரத் து டன் பக் தர் க ளுக்கு காட் சி ய ளிப் பார். மேலும் ஜூலை 10ம் தேதி யன்று மாலை 6 மணிக்கு அேயாத் தியா காண் டம், மாலை 7 மணிக்கு பட் டி மன் றம், இரவு 9 மணிக்கு திரைப் பட மெல் லிசை கச் சேரி நடை பெ றும். 11ம் ேததி அதி காலை 1 மணிக்கு சிறப்பு பூஜை யும், 2 மணிக்கு நா ரா யண சுவாமி எழுந் த ரு ளல் நிகழ்ச் சி யும் நடக் கி றது.
காலை 9 மணிக்கு கிளா ரி னெட் இன் னிசை, 11 மணிக்கு ஆன் மிக சொற் பொ ழிவு, மதி யம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, பிற் ப கல் 3 மணிக்கு மங் கள இசை, மாலை 4 மணிக்கு பக்தி சொற் பொ ழிவு, மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ் வர கச் சேரி நடக் கி றது.
இரவு 7 மணிக்கு இன் னிசை பாட்டு பட் டி மன் றம், இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடு தல், 10 மணிக்கு மாவி ளக்கு எடுத்து வரு தல் நடை பெ றும். இரவு 10.30 மணிக்கு நாத ல யம் இன் னிசை நிகழ்ச் சி யும், நள் ளி ரவு ஆனிப் பெ ருந் தி ரு விழா சிறப்பு பூஜை யும், மறு நாள் அதி காலை 2 மணிக்கு நாரா ய ண சு வாமி எழுந் த ரு ளி ய தும் வீதி யு லா வும் நடக் கி றது.
ஏற் பா டு களை செயல் அலு வ லர் அஜித், குரங் கணி 60 பங்கு நாடார் பொது மக் கள் மற் றும் குரங் கணி ஊர் மக் கள், சென்னை வாழ் குரங் கணி நாடார் சங் கத் தி னர் செய்து வரு கின் ற னர்.
திரளானோர் பங்கேற்பு
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில்
ஆனிப் பெருந்திருவிழா கால்நாட்டுடன் துவக்கம்
குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் ஆனிப் பெருந் தி ரு விழா கால் நாட் டு டன் துவங் கி யது. இதில் ஏரா ள மான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...