திங்கள், 22 ஜனவரி, 2018

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

ஸ்ரீவைகுண்டத்தில்
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்
ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு

ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 25-ந்தேதி மாநில அளவிலான ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டி டம் அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

அதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இதுவரை நடந்தது இல்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவற்கு உரிய விதிமுறைகளின்படி ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதிக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

ஆயத்த பணி

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நேற்று காலையில் பூமி பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா, அகில இந்திய பார்வர்டு பிளாக் இளைஞர் அணி மாநில தலைவர் சுரேஷ், டி.டி.வி.தினகரன் பேரவை மாவட்ட செயலாளர் மாரியப்பன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கந்தசிவசுப்பு, பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் ராஜா, பசும்பொன் ரத்ததான கழக மாவட்ட தலைவர் ராமர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஏரல் அருகே விவசாயி கொலையில் கூலிப்படையை சேர்ந்தவர் விஏஓவிடம் சரண்





ஏரல், ஜன.22: ஏரல் அருகே விவசாயி கொலையில் கூலிப்படையை சேர்ந்தவர் விஏஓவிடம் சரணடைந்தார்.ஏரல் அருகேயுள்ள அகரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் லெனின்(40). விவசாயியான இவர் மீது போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு அக்.22ம் தேதி இரவு மாரமங்கலம் அருகே தனது வாழைத்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு நண்பர் கோட்டாளமுத்துவுடன்(38) பைக்கில் வீட்டுக்கு வரும் வழியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தியதில், தொழில் முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த ஈசாக் மகன் பொன்சீலன் என்ற சிங்கம் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொன்சீலன் உட்பட 14 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் அக்.24ம்தேதி சுந்தரபாண்டியபுரம் முருகன்(47), தீப்பாச்சி திருமால்ராஜ்(34), தீப்பாச்சி சக்திவேல்(41) ஆகிய 3 பேர் நாங்குநேரி கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் முள்ளக்காடு தாமஸ்(32), அகரம் பொன்ராஜ்(28), சாயல்குடி சிம்சன், தாளமுத்துநகர் இசக்கிராஜா என்ற இசக்கிமுத்து(44) உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான பொன்சீலன் உட்பட சிலரை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் தூத்துக்குடி தாளமுத்துநகர் புஷ்பராஜ் மகன் விமல்(34) சிறுத்தொண்டநல்லூர் விஏஓ ராமசாமியிடம் சரணடைந்தார். 
ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்.ஐ சரவணன் மற்றும் போலீசார் விமலை கைது செய்து விசாரித்ததில் இவர் அகரம் விவசாயி லெனின் கொலையில் கூலிப்படையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விமலை வைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். 

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு எவ்வளவு?

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு எவ்வளவு?
அதிகாரி தகவல்
தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு எவ்வளவு? என்ற விவரத்தை போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண உயர்வு எவ்வளவு? என்ற விவரத்தை போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

பஸ் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் அரசு பஸ் கட்டணத்தை திடீரென அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு நேற்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்திலும் அரசு பஸ்களில் நேற்று காலை முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல இடங்களில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் எவ்வளவு என்று தெரியாமல் பயணிகள் குழப்பம் அடைந்தனர். கட்டண உயர்வால் கடும் அதிருப்தியும் அடைந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வருமாறு:-

புதிய கட்டண விவரம்

தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.24-ல் இருந்து ரூ.39 ஆகவும், எஸ்.எப்.எஸ். பஸ்களில் ரூ.31-ல் இருந்து ரூ.46 ஆகவும், பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களில் ரூ.31-ல் இருந்து ரூ.52 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும், எஸ்.எப்.எஸ். பஸ்களில் ரூ.25-ல் இருந்து ரூ.39 ஆகவும், விரைவு பேருந்துகளில் ரூ.27-ல் இருந்து ரூ.44 ஆகவும்

, கோவில்பட்டிக்கு செல்லும் பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களில் ரூ.34-ல் இருந்து ரூ.51 ஆகவும், 

நாசரேத் செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.20-ல் இருந்து ரூ.27 ஆகவும், 

ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாதாரண பஸ்களில் ரூ.16-ல் இருந்து ரூ.24 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் விரைவு பஸ்களில் ரூ.90-ல் இருந்து ரூ.141 ஆகவும்,

 சென்னை செல்லும் விரைவு பஸ்களில் ரூ.425-ல் இருந்து ரூ.675 ஆகவும், சென்னை செல்லும் அரசு குளிர்சாதன பஸ்களில் ரூ.580-ல் இருந்து ரூ.900 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

டவுன் பஸ்

தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வ.உ.சி. கல்லூரிக்கு ரூ.7-ம், 

3-ம் மைல் பகுதிக்கு ரூ.8-ம்,

 கோரம்பள்ளத்துக்கு ரூ.9-ம், 

தட்டப்பாறை விலக்கு பகுதிக்கு ரூ.11-ம்,

 புதுக்கோட்டைக்கு ரூ.12-ம்,

 கூட்டாம்புளிக்கு ரூ.14-ம், 

குலையன்கரிசலுக்கு ரூ.15-ம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

சனி, 20 ஜனவரி, 2018

ஏரல் அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏரல் அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
ஏரல் அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏரல், 

ஏரல் அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலையாரிக்கு அரிவாள் வெட்டு

ஏரலை அடுத்த மங்களகுறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற வள்ளி (வயது 55). இவர் அப்பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் ஏரல் சலூன் கடையில் முடி வெட்டி கொண்டிருந்தபோது, அவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்துக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில், மங்களகுறிச்சியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான முத்துசெல்வம் (41), முத்துசாமி (37) ஆகிய 2 பேரும் சேர்ந்து, அப்பகுதியில் சரிந்து கிடந்த வேப்ப மரத்தை வெட்டி கடத்த முயன்றனர். இதனை இசக்கிமுத்து கண்டித்தார். மேலும் அவர் அந்த மரத்தை தாசில்தார் மூலம் ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துசெல்வம், முத்துசாமி ஆகிய 2 பேரும் சேர்ந்து இசக்கிமுத்துவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து முத்துசெல்வம், முத்துசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இசக்கிமுத்துவை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் நேற்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ்ஜெயமணி, உதவி அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். 

வியாழன், 18 ஜனவரி, 2018

ஏரலில் சலூன் கடைக்குள் புகுந்து தலையாரிக்கு அரிவாள் வெட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஏரலில்
சலூன் கடைக்குள் புகுந்து தலையாரிக்கு அரிவாள் வெட்டு
மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஏரலில் பட்டப்பகலில் சலூன் கடைக்குள் புகுந்து தலையாரியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏரல், 

ஏரலில் பட்டப்பகலில் சலூன் கடைக்குள் புகுந்து தலையாரியை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலையாரிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை அடுத்த மங்களகுறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற வள்ளி (வயது 55). இவர் அப்பகுதியில் கிராம நிர்வாக உதவியாளராக (தலையாரி) பணியாற்றி வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். லட்சுமிக்கு திருமணமாகி விட்டது.

இசக்கிமுத்து நேற்று மாலையில் முடி வெட்டுவதற்காக, ஏரலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் ஏரல் சினிமா தியேட்டர் எதிரில் உள்ள சலூன் கடையில் முடி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சலூன் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் அரிவாளால் இசக்கிமுத்துவை சரமாரியாக வெட்டினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடினர். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து ஏரல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காயம் அடைந்த இசக்கிமுத்துவை ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலையாரியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திங்கள், 8 ஜனவரி, 2018

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.
ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.
சேர்மன் அருணாசலசாமி கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி மாதங்களில் அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோடியேற்ற நிகழ்ச்சியை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் நடத்தி வைத்தார். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு சேர்மன் அருணாசலசாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து 9–ம் திருநாள் வரை தினமும் காலை, இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தை அமாவாசை
10–ம் திருநாளான வருகிற 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தை அமாவாசை திருவிழா நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி உருகுபலகை தரிசனம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
11–ம் திருநாளான 17–ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு சுவாமி கோவில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சி நடக்கிறது.
ஊஞ்சல் சேவை
12–ம் திருநாளான 18–ந்தேதி (வியாழக்கிழமை) தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் ஆலிலை சயனம் மங்கள தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

தூத்துக்குடியில் ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியது

தூத்துக்குடியில் ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை
பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கியது
தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை களை கட்ட தொடங்கியுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் கரும்புகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை களை கட்ட தொடங்கியுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு மார்க்கெட் பகுதியில் கரும்புகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் வீடுகள் தோறும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அப்போது கரும்பு உள்ளிட்ட பொருட்களை சாமிக்கு படைத்து வழிபடுவார்கள். அதே நேரத்தில் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் பொங்கல்படியாக கரும்பு, வாழைத்தார் போன்றவற்றை கொடுப்பது வழக்கம்.
கரும்பு விற்பனை
இதனால் மக்கள் தற்போது இருந்தே கரும்பு கட்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இதற்கு ஏற்ப தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் கரும்பு கட்டுகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு உள்ளது. நேற்று ஒரு கட்டு கரும்பு ரூ.350–க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது குறித்து கரும்பு வியாபாரி கூறும் போது, ‘கரும்பு தேனி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் குறைவாக இருப்பதால், விலை தொடர்ந்து உயரும் வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு ‘காணும் பொங்கலுக்கு’ தயாராகும் ஸ்ரீவைகுண்டம் அணை பகுதி

15 ஆண்டுகளுக்கு பிறகு ‘காணும் பொங்கலுக்கு’ தயாராகும் ஸ்ரீவைகுண்டம் அணை பகுதி
ஸ்ரீவைகுண்டம் அணை பகுதி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கலுக்கு தயாராகி வருகிறது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அணை பகுதி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கலுக்கு தயாராகி வருகிறது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காணும் பொங்கல்
ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் பகுதியில் இருந்த மணல் பாங்கான பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரையில் சுற்றுவட்டார கிராம மக்கள் காணும் பொங்கல் தினத்தன்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கரும்பு, பனங்கிழங்கு சாப்பாட்டுடன் உற்சாகமாக விளையாடி மகிழ்வர்.
தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ் பகுதியில் புன்னக்காயல் வரையுள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் பாங்கான பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதனால், காணும் பொங்கல் தினத்தன்று ஆற்றுக்குள் விளையாடும் பழக்கம் காலப் போக்கில் மறைந்தது.
கலெக்டர் நடவடிக்கை
இந்த நிலையில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தாமிரபரணி ஆற்றை அழகுப்படும் பணியையும் பாசன குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தும் பணியையும் கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்படி தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதிகளில் தேங்கி இருந்த அமலைச் செடிகளை முற்றிலுமாக அகற்றியதால், தற்போது அணையில் தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கின்றது. மேலும், அணையின் கீழ்பகுதியில் பழைய பாலத்திலிருந்து புது பாலம் வரையில் அடர்ந்து வளர்ந்து இருந்த கருவேல மரங்களும் அகற்றப்பட்டன.
காணும் பொங்கலுக்கு...
இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் காணும் பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் விளையாடுவதற்கு ஏதுவாக ஸ்ரீவைகுண்டம் அணையின் கீழ்பகுதியில் சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்ட பகுதியில், பள்ளம் மேடுகள் தெரியாத வகையில் மீண்டும் மணல் பாங்காக கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை தாசில்தார் தாமஸ்பயஸ் அருள் நேற்று காலையில் பார்வையிட்டார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இது ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...