ஞாயிறு, 25 அக்டோபர், 2020
திங்கள், 13 ஏப்ரல், 2020
ஏரல் பகுதி அஞ்சல் நிலையங்களில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி
ஏரல் வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் இணையதள சேவை முடங்கியதால், அஞ்சலக சேமிப்பாளா்கள் மற்றும் முதியோா் உதவித்தொகை பெறுவோா் தவித்து வருகின்றனா்.
வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் தலைமை அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு அஞ்சலக சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அஞ்சல் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனா்.
இந்னிலையில் ஏரல் வட்டத்துக்குள்பட்ட பண்ணைவிளை, சிவகளை உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் நிலையங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இணையதள சேவை முடங்கியதால், பொதுமக்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனா்.
மேலும், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட பயனாளிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இணையதள சேவை குறைபாட்டை சீரமைக்க அஞ்சலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
ஏரலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

ஏரலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த கையெழுத்து இயக்கத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
ஏரல்,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் ஏரல் நகர பஞ்சாயத்து அருகில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஏரல் காந்திசிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவர் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது;-
போராட்டம்
தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு நமது உணர்வை தெரியப்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட அப்பொழுதே மாணவர்கள், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதில் பல இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலைக்காக எத்தனை பேர்களோ போராடி உயிரை விட்டுள்ளார்கள். ஆனால் அப்படி பெற்ற விடுதலையை இந்த மத்திய அரசிடம் இழந்துவிடக்கூடாது.
குடியுரிமை திருத்த சட்டத்தினால் முஸ்லிம் சமுதாயம் மட்டும் அல்லாமல் இந்து உள்பட அனைத்து சமுதாய மக்களும், குறிப்பாக பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படகூடும். ஆகையால் நாம், நம் குடும்பத்தை பாதுகாத்து கொள்ள இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம், நம்மை பாதுகாத்து கொள்ள இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் ஏரல் பஜாரில் கடை, கடையாக ஏறி இறங்கி வியாபாரிகளிடம் கையெழுத்து வாங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் வாழவல்லான் மகராஜன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்பாளர் தமிழினியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...