வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Polio drops will be providing tomorrow in TN


சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 மையங்கள் செயல்படும். மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 1000 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.



ஏரல் சேர்மன் கோயிலில்

ஏரல் சேர்மன் கோயிலில் குருபூஜை
திரளானோர் பங்கேற்பு
ஏரல், ஏப். 28-
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில் 109வது குரு பூஜை நடந் தது. இதில் திர ளா னோர் பங் கேற்று தரி ச னம் செய் த னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏர லில் உள்ள பிர சித் திப் பெற்ற சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில் சித் திரை அமா வாசை திரு விழா நேற்று முன் தி னம் நடந் தது. இதில் மாநி லத் தின் பல் வேறு பகு தி க ளில் இருந்து வந் தி ருந்த திர ளான பக் தர் கள், தாமி ர ப ரணி ஆற் றில் நீராடி சேர் மன் சுவா மியை தரி சித்து தாங் கள் கொண் டு வந் தி ருந்த அரிசி, காய் கனி உள் ளிட்ட பொருட் களை கோயி லில் வழங் கி னர். இதை யொட்டி சுவா மிக்கு சிறப்பு அபி ஷேக, அலங் கார பூஜை நடந் தது.
மேலும் பக் தர் க ளால் மன மு வந்து வழங் கிய அரி சி யா னது அன் ன ம லை யாக படைக் கப் பட்டு சிறப்பு தீபா ரா தனை நடந் தது. மகேஷ் வர பூஜைக்கு பிறகு அன் ன தா னத்தை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் துவக்கி வைத் தார். இதை யொட்டி பக் தர் க ளுக்கு அன் ன தான பிர சா தம் வழங் கு வ தற்கு பல ஆயி ரக் க ணக் கான பனை மர ஓலை பெட் டி யில் சாதம் வைத்து அதில் குழம்பு ஊற்றி, அதன் மேல் கூட்டு பொறி யல் கள் மற் றும் பழங் கள் வைக் கப் பட் டி ருந் தன. இவற்றை பக் தர் கள் நீண்ட வரி சை யில் நின்று பெற் றுச் சென் ற னர்.
குரு பூ ஜையை முன் னிட்டு நெல்லை, தூத் துக் கு டி யில் இருந்து அர சுப் போக் கு வ ரத் துக் கழ கம் சார் பில் சிறப்பு பஸ் கள் இயக் கப் பட் டன. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் தி ருந் தார்.
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் 109வது ஆண்டு குரு பூ ஜையை முன் னிட்டு பக் தர் க ளுக்கு வழங் கு வ தற் காக தயா ரிக் கப் பட்ட அன் னத் தில் சுவா மி யின் திரு மு கம் போல் வடி வ மைக் கப் பட் டி ருந் தது அனை வ ரை யும் கவர்ந் தது.

ஏரல் ஆற்றில் குளித்த வியாபாரி சாவு

ஏரல் ஆற்றில் குளித்த வியாபாரி சாவு
ஏரல், ஏப். 28-
ஏரல் ஆற் றில் குளித்த பழ வியா பாரி பரி தா ப மாக இறந் தார்.
காயல் பட் டி னம் மேல நெசவு தெரு வைச் சேர்ந் த வர் சுட லை முத்து(70). இவர் அங் குள்ள தனி யார் மெட் ரிக் பள்ளி முன்பு பழ வியா பா ரம் செய்து வந் தார். இவ ரது மனைவி காளி யம் மாள்(65). இவர் க ளுக்கு 3 மகள், ஒரு மகன். அனை வ ருக் கும் திரு ம ண மா கி விட் டது. சுட லை முத்து அடிக் கடி ஏரல் கோயி லுக்கு செல் வது வழக் க மாம். கடந்த 24ம்தேதி சேர் மன் கோ யி லுக்கு சாமி கும் பிட வந் தார். முன் ன தாக அவர் ஆற் றில் குளித் த போது மயங்கி நீரில் மூழ் கி னார். அவரை அங் குள் ள வர் கள் மீட்டு தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர்.
அங்கு நேற் றி ரவு இறந் தார். சுட லை முத் துக்கு ரத்த அழுத் தம் மற் றும் நீரி ழிவு நோய் இருந் த தாக தெரி கி றது. தந்தை இறந்த செய் தியை ஏரல் போலீ சில் மகன் குமார்(44) தெரி வித் தார். போலீ சார் விசா ரித்து வரு கி றார் கள்.

ஆத்தூரை அடுத்த புன்னக்காயல் அருகே கடலில் மணல் தடுப்பு உடைந்ததால் தாமிரபரணி ஆற்றில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகுந்த கடல் நீர்

மணல் தடுப்பு உடைந்ததால் தாமிரபரணி ஆற்றில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகுந்த கடல் நீர்
ஆறுமுகநேரி:

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கும் தாமிரபரணி ஆறு, ஆத்தூரை அடுத்த புன்னக்காயல் அருகே கடலில் சங்கமிக்கிறது. ஆத்தூர் பகுதியில் எக்காலத்திலும் நிறைந்த தண்ணீருடன் தான் ஒரு ஜீவநதி என்பதை நிரூபித்து வந்த தாமிரபரணிக்கு இந்த ஆண்டு சோதனையும், வேதனையும் ஆகிப்போனது. பருவமழை அடியோடு பொய்த்துப் போனதால், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஆறு வறண்டு மைதானம் போல மாறிவிட்டது.

ஆத்தூர், உமரிக்காடு பகுதிகளை சேர்ந்த மக்கள் தாங்கள் குளிப்பதற்காக ஆற்றுக்குள் ஆங்காங்கே ஊற்று தோண்டி கிணறுகளைப்போல அமைத்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மணல் தடுப்பு உடைந்ததால் இங்கு நேற்று கடல் நீர் புகுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலையில் இருந்தே ஆற்றுக்குள் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய கடல் நீர் மாலையில் மிகுந்த வேகத்துடன் சுனாமியைப் போல பாய்ந்து ஆற்றை ஆக்கிரமித்துவிட்டது. கடலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள வாழவல்லான் தடுப்பணை வரைக்கும் ஆற்றுக்குள் கடல் நீர் நிரம்பியது.

இதனால் ஆத்தூர் சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறும் அவல நிலை உள்ளது. ஆற்றங்கரைகளில் ஊற்று தோண்டி மோட்டார் மூலம் விவசாயத்தை காப்பாற்ற தண்ணீர் எடுத்து வந்த நிலைக்கும் இப்போது ஆபத்து வந்துவிட்டது. இதனிடையே மணல் தடுப்பை மீண்டும் அமைப்பதற்கான அவசர ஆய்வை தொடங்கியுள்ளனர். அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே தற்போது உடைந்த மணல் தடுப்பு பகுதியின் அருகில் புதிய தடுப்பணை அமைக்கும் பணியை அரசு தொடங்கியது. ஆனால் அதனை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறி மக்கள் கடந்த வாரம் மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளது. 

வியாழன், 27 ஏப்ரல், 2017

ஏரல் பகுதியில் தொடர் திருட்டு: சித்தியுடன் வாலிபர் கைது

ஏரல் பகுதியில் தொடர் திருட்டு: சித்தியுடன் வாலிபர் கைது

ஏரல் பகுதியில் தொடர் திருட்டு: சித்தியுடன் வாலிபர் கைது
ஏரல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர்– சித்தியுடன் கைது செய்யப்பட்டார்.
ஏரல்,
ஏரல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர்– சித்தியுடன் கைது செய்யப்பட்டார். மேலும், இவர்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.
வாலிபர் சிக்கினார்
ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகிலா, சப்– இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம், பயிற்சி சப்– இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சகாய அனிஷ்கா மற்றும் போலீசார் ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரை வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றார். அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையை அடுத்த கூட்டாம்புளியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் வீரமணி (வயது 19) என்பதும், இவர் ஏரல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான வீரமணி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
சிறுவயதில் கொலை
நான், கடந்த 2013–ம் ஆண்டு எங்களது வீட்டின் அருகில் வசித்த கண்ணன் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன். பின்னர் சென்னையில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கூடத்தில் அடைக்கப்பட்டேன். அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்த நான் மிளகுராஜ் மகன் முத்துசாமியுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கும், வாழைத்தார் ஏற்றி இறக்கும் வேலைக்கும் சென்று வந்தேன். பின்னர் அவருடன் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தேன்.
கதவை உடைத்து திருட்டு
கடந்த ஜனவரி 27–ம் தேதிஅன்று இரவில் நானும், முத்துசாமியும் ஏரல்– உமரிக்காடு ரோட்டில் பூட்டி கிடந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த வெள்ளி, பித்தளை பொருட்களை திருடினோம். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஏரல் அருகே செல்வநாயகபுரத்தில் ஒரு வீட்டில் இரவில் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தவர்களிடம் மொத்தம் 12¾ பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்றோம்.
நகைகடைக்காரரிடம் வழிப்பறி
மறுநாள் இரவில் ஆத்தூரில் நகைக்கடை வைத்திருக்கும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வாழவல்லான் தண்ணீர் தொட்டி அருகில் அவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி வீசி தாக்கி, அவரிடம் இருந்த ரூ.1,200–யை பறித்து சென்றோம். பின்னர் பெருங்குளத்தில் ஒரு வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து, அதில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, தங்க கம்மல் ஆகியவற்றை திருடிச் சென்றோம்.
மொபட்டுகள்–மோட்டார் சைக்கிள் திருட்டு
கடந்த 9–ந்தேதி ஏரல் நட்டார் அம்மன் கோவில் கொடை விழாவுக்கு சென்றபோது, அங்கு நின்ற மொபட்டை திருடிச் சென்றோம். கடந்த 14–ந்தேதி ஏரல் பிள்ளையார் கோவில் அருகில் நின்ற மொபட்டை திருடிச் சென்றோம். கடந்த 22–ந்தேதி ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையில் கிறிஸ்தவ ஆலயம் அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றோம்.
சித்தியிடம்....
கடந்த 24–ந்தேதி ஏரல் மங்கலகுறிச்சி தடுப்பணையில் குளிக்க சென்ற ஒருவர் தனது தங்க சங்கிலியை கழட்டி மணிபர்சில் வைத்து, ஆடைகளுடன் கரையில் வைத்து இருந்தார். அவற்றை திருடிச் சென்றேன். நாங்கள் திருடிய பொருட்களை எனது சித்தியான ஆத்தூர் அருகே தலைவன்வடலியில் வசித்து வரும் மாரிமுத்து மனைவி பால்தங்கத்திடம் கொடுத்து வைத்து செலவு செய்து வந்தேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து பால்தங்கத்தையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான முத்துசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான வீரமணி, பால்தங்கம் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் அன்னமலை தரிசனம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் அன்னமலை தரிசனம்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் குருபூஜையை முன்னிட்டு அன்னமலை தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு பெட்டிச்சோறு வழங்கப்பட்டது.
ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் 109–ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு அன்னமலை தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு பெட்டிச்சோறு வழங்கப்பட்டது.
சேர்மன் அருணாசலசாமி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசை தினத்துக்கு மறுநாள் குருபூஜை நடைபெறும். இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் சித்திரை மாத அமாவாசை தினத்தில் கோவிலுக்கு வருவார்கள்.
பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்களை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். பக்தர்கள் வழங்கிய பொருட்களை கொண்டு, மறுநாள் குருபூஜை தினத்தில் சமைத்து அன்னமலை தீபாராதனை நடத்தி, அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.
அன்னமலை தரிசனம்
இந்த ஆண்டு அமாவாசை தினமான நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காணிக்கை பொருட்களை வழங்கினர். அவற்றை சேர்மன் அருணாசலசாமியின் 109–வது குருபூஜை தினமான நேற்று அதிகாலையில் சமைத்தனர். காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னமலை சிறப்பு தரிசனம் நடந்தது.
பின்னர் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்களுக்கு பெட்டிச்சோறும் வழங்கப்பட்டது.

ஏரல் பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையன் சித்தியுடன் கைது செய்யப் பட்டார்

பிரபல கொள்ளையன் சித்தியுடன் கைது
ஏரல், ஏப். 27-
ஏரல் பகு தியை கலக் கிய பிர பல கொள் ளை யன் சித் தி யு டன் கைது செய் யப் பட் டார். அவ ரி ட மி ருந்து நகை மற் றும் பைக் பறி மு தல் செய் யப் பட் டது.
ஏரல் இன்ஸ் பெக் டர் (பொறுப்பு) கோகிலா, எஸ் ஐக் கள் சர வ ணன், சண் மு க சுந் த ரம், பயிற்சி எஸ் ஐக் கள் செல் வன், சகாய அனிஷா, ஏட் டுக் கள் ரீகன், செந் தில் ஆறு மு கம், மாரி முத்து, தர் மர் ஆகி யோர் நேற்று ஏரல் சேர் மன் கோ யில் பகு தி யில் ரோந்து சென் ற னர். அப் போது பைக் கில் நின்ற வாலி பர் போலீ சாரை பார்த் த தும் தப் பிக்க முயற் சித் தார். அவரை மடக்கி பிடித் த னர். விசா ர ணை யில் அவர் முக் காணி வாட் டர் டேங்க் அரு கில் காம் ப வுண் டில் வசித்து வரும் சுயம் பு லிங் கம் மகன் வீர மணி(19) என தெரி ய வந் தது. அவரை கைது செய் த னர். விசா ர ணை யில் அவர் ஏரல் பகு தி யில் பல இடங் க ளில் வீடு மற் றும் திரு வி ழாக் க ளில் தனது சித் தி யு டன் கொள் ளை ய டித் தது தெரி ய வந் தது.
போலீ சில் வீர மணி அளித்த வாக் கு மூ லம்: நாங் கள் குடும் பத் து டன் 2013ம் ஆண்டு புதுக் கோட்டை அருகே உள்ள கூட் டாம் பு ளி யில் வசித்து வந் தோம். அப் போது அதே ஊர் முத் து சாமி என் ப வ ரு டன் பழக் கம் ஏற் பட் டது. அவர் ஆடம் ப ர மாக பணம் செலவு செய் வதை பார்த்து, எப் படி பணம் வரு கி றது என்று கேட் டேன். அதற்கு அவர், கஞ்சா மற் றும் திருட்டு தொழி லில் ஈடு ப டு வ தால் இப் படி பணம் கிடைக் கி றது என் றார். என் னை யும் திருட்டு தொழில் சேர்த்து கொள் ளும் படி கூறி னேன். அதன் பி றகு இரு வ ரும் சேர்ந்து இந்த தொழில் இறங் கி னோம்.
திருச் செந் தூர் அருகே தலை வன் வ ட லி யைச் சேர்ந்த சித்தி பால் தங் கத் தி டம் திருட்டு தொழில் ஈடு ப டு வது பற்றி தெரி வித் தேன். அவர் என்னை சத் தம் போ டு வார் என நினைத் தேன். ஆனால் மாறாக தன் னை யும் திருட்டு தொழில் சேர்த் துக் கொள் ளும் படி கூறி னார். எனக்கு இது ஆச் ச ரி யத்தை தந் த போ தி லும் விருப் பப் பட்டு வரும் சித் தியை என் னு டன் சேர்த் துக் கொண் டேன். நானும் சித் தி யும் 27.1.17 தை அமா வாசை அன்று ஏரல் சேர் மன் கோ யில் வந் தோம்.
அங்கு ஆற் றில் குளித்து கொண் டி ருந் த வர் கள் கரை யில் வைத் தி ருந்த சட் டைப் பை யில் இருந்த மணி பர்சை எடுத் தோம். அதன் மூலம் ரூ.4800 தேறி யது. என் னு டன் சித்தி சேர்ந்து திரு டிய முதல் திருட்டு அது தான். அன் றி ரவு உம ரிக் காட் டில் பூட் டிய வீட்டை உடைத்து நானும் முத் து சா மி யும் உள்ளே சென் றோம். அந்த வீடு கட் டு மான பணி யின் போது நானும் வேலை செய் த தால் அந்த வீடு பற்றி எனக்கு முழு மை யாக தெரி யும். அங் கி ருந்த வாட்ச், வெள்ளி டம் ளர் மற் றும் பித் தளை சாமான் களை எடுத் துச் சென் றோம்.
அடுத் த நாள் இரவு ஆறு மு க மங் க லத் தில் திறந்து கிடந்த வீட் டில் நுழைந் தோம். அப் போது அங்கு தூங்கி கொண் டி ருந்த பெண் ணின் கழுத் தில் கிடந்த 11 பவு னும், ஆணி டம் 2 பவு னும் பறித் தோம். அதன் பி றகு ஆத் தூ ரில் நகை கடை நடத்தி வரு ப வர் இரவு கடையை அடைத்து விட்டு அவ ரும், மற் றொ ரும் பைக் கில் ஏர லுக்கு புறப் பட் ட னர். அவர் களை நானும், முத் து சா மி யும் பின் தொ டர்ந்து பைக் கில் வந் தோம். வாழ வல் லான் குடி நீர் வடி கால் வாரி யம் ரோட் டில் வரும் போது பின் னால் இருந் த வர் முகத் தில் மிள காய் பொடி தூவி யும் கத் தி யால் குத் தி யும் அவ ரி டம் இருந்த பையை பறித் தோம். அதில் நகை எது வும் இல்லை. ரூ.1200 மட் டும் தான் இருந் தது.
இது போல் பெருங் கு ளத் தில் ஆள் இல் லாத வீட்டை உடைத்து பீரோ வில் இருந்த 5 பவுன் நகை மற் றும் கம் மல் ஆகி ய வற்றை திரு டி னோம். திரு டிய நகை, பணத்தை வைத்து நான், முத் து சாமி, சித்தி ஆகி யோர் ஜாலி யாக இருந் தோம். கடந்த 9ம்தேதி பங் குனி உத் தி ரத் தன்று ஏரல் நட் டா ரம் மன் கோயி லுக்கு வந் தோம். அங்கு போலீஸ் பாது காப்பு பல மாக இருந் த தால் பொது மக் க ளி டம் கைவ ரிசை காட் ட மு டி ய வில்லை. ஆனால் அங்கு நிறுத்தி இருந்த பைக்கை எடுத்து சென் றோம். இது போல் 14ம்தேதி ஏரல் பஸ் நி லை யம் பிள் ளை யார் கோயில் முன் நிறுத் தி யி ருந்த பைக்கை எடுத் துச் சென் றோம். 22ம்தேதி ஏரல் சேர் மன் கோயி லுக்கு வந் தோம். அங்கு பக் தர் கள் கூட் டம் அதி கம் இல் லா த தால் திரு வ ழு தி நா டார் விளை வழி யாக வரும் போது சர்ச் முன் நிறுத் தி யி ருந்த பைக்கை திரு டிச் சென் றோம்.
இந்த பைக் கில் 24ம்தேதி நானும் சித் தி யும் ஏரல் அருகே மங் க ல கு றிச்சி தடுப் ப ணைக்கு வந் தோம். அங்கு குளித் துக் கொண் டி ருந்த தூத் துக் குடி மெக் கா னிக் பர் சில் இருந்த 2 பவுன் நகையை எடுத்து சென் றோம். ஏரல் கோயி லில் குரு பூ ஜை யை யொட்டி பக் தர் கள் கூட் டம் அதி க மாக இருக் கும் என் ப தால் 26ம்தேதி(நேற்று) நானும் சித் தி யும் அங்கு பைக் கில் வந் தோம். சித் தியை ஆற் றில் குளிப் ப வர் க ளி டம் எது வும் சிக் கு கி றதா என்று பார்த்து வரும் படி கூறி விட்டு நான் பைக் கில் நோட் ட மிட் ட படி இருந் தேன். அப் போது ஏரல் போலீ சார் என்னை பிடித்து விட் ட னர்.
இவ் வாறு அவர் வாக் கு மூ லத் தில் கூறி யி ருப் ப தாக போலீசார் தெரி வித் தனர்.
வீர ம ணியை கைது செய்த போலீ சார் கோயி லில் சுற் றித் தி ரிந்த அவ ரது சித்தி பால தங் கத் தை யும் பிடித் த னர். வீர மணி கூட் டாளி முத் து சா மியை தேடி வ ரு கி றார் கள்.
வீர ம ணி யி டம் இருந்து திரு வ ழு தி நா டார் விளை சர்ச் சில் திருடி பைக் கும் மங் க ல கு றிச்சி தடுப் ப ணை யில் மெக் கா னிக் கி டம் பறித்த 2 பவுன் நகை யை யும் தற் போது போலீ சார் மீட் டுள் ள னர்.
மற்ற நகை களை விற்று செல வ ழித்து விட் ட தாக தெரி வித் துள் ளார். அவற்றை மீட் ப தில் போலீ சார் தீவி ர மாக உள் ள னர். சித் தி யு டன் சேர்ந்து வாலி பர் திருட்டு தொழி லில் ஈடு பட்ட சம் ப வம் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.
கொலை வழக் கில் சிறை சென் ற வர்
திருட்டு வழக் கில் கைதான வீர மணி சொந்த ஊர் கூட் டாம் புளி. 2013ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த கண் ணன் என் ப வர் கொலை செய் யப் பட் டார். அதில் முக் கிய குற் ற வா ளி யான வீர மணி கைது செய் யப் பட்டு சென்னை சிறு வர் சீர் தி ருத் தப் பள் ளி யில் அடைக் கப் பட் டார். 5 மாதம் தண் டனை முடிந்து வெளியே வந் தார். அதன் பி ற கு தான் அவ ரது குடும் பம் முக் கா ணிக் கிற்கு இடம் பெயர்ந் தது குறிப் பி டத் தக் கது.
ஏரல் பகுதியை கலக்கிய
நகை, பைக் மீட்பு

ஏரல் பகுதியில் முதியவர்கள் 2 பேர் சாவு

ஏரல் பகுதியில்
முதியவர்கள் 2 பேர் சாவு
ஏரல், ஏப். 27-
ஏரல் பகு தி யில் முதி ய வர் கள் 2 பேர் இறந் த னர்.
ஏரல் அருகே உள்ள தெற்கு வாழ வல் லான் மேற்கு தெரு வைச் சேர்ந் த வர் இசக் கி முத்து(74). இவ ருக்கு இசக் கி யம் மாள் என்ற மனைவி மற் றும் ஒரு மகன், 4 மகள் கள் உள் ள னர். இசக் கி முத்து வாய் பே ச மு டி யா த வர். அதோடு மன நி லை யும் பாதிக் கப் பட் டி ருந் தா ராம். கடந்த 24ம்தேதி வெளி யில் சென் ற வர் வீடு திரும் ப வில்லை. அவரை தேடி யும் கிடைக் க வில்லை. நேற்று காலை ஆல டி யூர் சுடு காட் டில் இசக் கி முத்து இறந்து கிடப் பது தெரி ய வந் தது. இதைத் தொ டர்ந்து அவ ரது மகன் பல வே ச முத்து(25) ஏரல் போலீ சில் புகார் செய் தார். எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வரு கி றார்.
இது போல் மற் றொரு சம் ப வ மும் நடந் துள் ளது. ஏரல் அருகே உள்ள மாற மங் க லம் பர தர் தெரு வைச் சேர்ந் த வர் ஜெய பா லன்(67). இவ ரது மனைவி ஜெசிந்தா. இவர் க ளுக்கு ஒரு மகன், 6 மகள் கள் உள் ள னர். ஜெய பா லன் ரத்த அழுத்த நோயால் அவ திப் பட்டு வந் தார்.
கடந்த 24ம்தேதி இரவு அதற் கான மாத் திரை சாப் பிட்டு படுத் த வர் மறு நாள் எழுந் தி ருக் க வில்லை. அவரை தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு நேற்று காலை ஜெய பா லன் இறந் தார். இது கு றித்து ஏரல் போலீ சில் அவ ரது மகன் ஜேசு கி ளாட் வின் புகார் செய் தார். போலீ சார் விசா ரித்து வரு கி றார் கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலை நிறுத்தம்
அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன.
ஆர்ப்பாட்டம்
நேற்று காலை அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட சி.ஐ.டி.யு. துணை தலைவர் ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் வைஜெயந்தி மாலா, வணிகவரித்துறை பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகன், நில அளவையர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி–விளாத்திகுளம்
இதேபோல் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெகநாதன், இணை செயலாளர் சின்னதம்பி, முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வெறிச்சோடின. விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார செயலாளர் செந்தில்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 25 ஊழியர்களில் 7 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். இதனால் தாலுகா அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 36 ஊழியர்களில் 9 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 10 ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 33 ஊழியர்களில் 17 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர்.

ஏரல் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை
ஏரல் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
ஏரல்,
ஏரல் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
டாஸ்மாக் கடையை முற்றுகை
ஆத்தூரை அடுத்த முக்காணி ரவுண்டானாவில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதற்கு பதிலாக ஏரல் அருகே உள்ள கொற்கை குளக்கரை சாலையில் உள்ள தென்னந்தோப்பு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்று வட்டார கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு வழங்கினர்.
ஆனாலும் அங்கு டாஸ்மாக் கடையை திறப்பதற்காக நேற்று முன்தினம் மது பாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டன. நேற்று காலையில் அங்கு டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்று வட்டார கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
கொளுத்தும் வெயிலில்...
ஏழூர் நாடார் நலச்சங்க தலைவர் ஏ.முருகேசன், செயலாளர் எஸ்.முருகேசன், பொருளாளர் செல்லச்சாமி, வாழவல்லான் ஊர் தலைவர் சுப்பையா இளவழகன், கொற்கை மணலூர் ஊர் தலைவர் ஆனந்தராஜ், கிராம கமிட்டி தலைவர் காமராஜ் காந்தி,
இந்து முன்னணி ஒன்றிய தலைவர் நாராயணன், தி.மு.க. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், ஒன்றிய துணை செயலாளர் மகராஜன், பட்டுராஜ், பாரத் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கொளுத்தும் வெயிலிலும் திரளாக கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாதவன், தாசில்தார் தாமஸ் பயாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா (ஏரல் பொறுப்பு), விஜயகுமார் (ஆத்தூர்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), சப்– இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டாஸ்மாக் கடையை இங்கு திறக்க கூடாது. டாஸ்மாக் கடையில் உள்ள அனைத்து மது பாட்டில்களையும் எடுத்து சென்றால்தான், அங்கிருந்து கலைந்து செல்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அங்கிருந்த அனைத்து மது பாட்டில்களையும் மினி லாரியில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக ஐடிஐகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்
புதிதாக ஐடிஐகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத் துக் குடி, ஏப். 27:
தூத் துக் குடி கலெக் டர் ரவிக் குமார் வெளி யிட்ட செய் திக் குறிப்பு: தமிழ் நாடு அரசு வேலை வாய்ப்பு மற் றும் பயிற் சித் துறை யின் மூலம் தனி யார் தொழிற் பள் ளி க ளில் பொறி யி யல் மற் றும் பொறி யி யல் அல் லாத 54 நீண்ட கால தொழிற் பிரி வு கள் மற் றும் 36 குறு கிய கால தொழிற் பிரி வு க ளில் பயிற்சி வழங் கப் பட்டு வரு கி றது. புதி தாக தொழிற் பள் ளி கள் தொடங் கு வ தற் கான அங் கீ கா ரம் வழங் க வும் ஏற் கெ னவே அங் கீ கா ரம் பெற்ற செயல் பட்டு வரும் தொழிற் பள் ளி க ளுக்கு அங் கீ கார நீட் டிப்பு ஆணை வழங் க வும் ஆண்டு தோறும் ஜன வரி 2 முதல் ஏப் ரல் 30 வரை விண் ணப் பங் கள் விற் பனை செய் யப் ப டும்.
2016-17ம் ஆண்டு வரை இத் து றை யின் மூலம் விண் ணப் பங் கள் துறை யின் மண் டல இணை இயக் கு நர் அலு வ ல கங் கங் கள் மூல மாக வழங் கப் பட்டு, தகு தி யுள்ள பள் ளி க ளுக்கு அங் கீ கா ரம் வழங் கும் நடை முறை பின் பற் றப் பட் டது. மண் டல இணை இயக் கு நர் அலு வ ல கங் க ளுக்கு சென்று விண் ணப் பங் க ளைப் பெற்று விண் ணப் பிக் கும் நடை மு றை யில் உள்ள சிர மங் களை கருத் தில் கொண்டு தொழிற் பள் ளி க ளுக் கான அங் கீ கார நீட் டிப்பு மற் றும் புதி தாக தொழிற் பள் ளி கள் தொடங் கு வ தற்கு விருப் ப முள் ள வர் கள் எளி தாக விண் ணப் பிக் கும் வகை யில் www.skilltraining.tn.gov.in என்ற இணை ய த ளம் வாயி லாக விண் ணப் பங் கள் பெற லாம். எனவே, தொழிற் பள் ளி கள் புதி தாக தொடங் க வும் அங் கீ கார நீட் டிப்பு ஆணை பெற வும் விரும் பு ப வர் கள் விண் ணப் பத் தினை இணை ய த ளம் மூல மா கவே ஏப் ரல் 30ம் தேதிக் குள் விண் ணப் பிக்க வேண் டும்.
அங் கீ கா ரம் வழங் கும் முறையை எளி தாக் க வும் வெளிப் ப டைத் தன் மை யு டன் மேற் கொள் ள வும் இணை ய த ளம் வாயி லாக செயல் ப டுத் தப் ப டு வ தால் அனை வ ரும் இந்த வாய்ப்பை பயன் ப டுத் திக் கொள் ள லாம்.
இவ் வாறு அதில் தெரி வித் துள் ளார்.

ஆறுமுகநேரியில் காவலர் தேர்வுக்கு இலவச பயற்சி வகுப்பு

ஆறுமுகநேரியில்
காவலர் தேர்வுக்கு இலவச பயற்சி வகுப்பு
ஆறு மு க நேரி, ஏப். 27:
ஆறு மு க நேரி இளம் முன் னோ டி கள் சங் கம் சார் பில் காவ லர் பணி க ளுக் கான வழி காட்டி மற் றும் இல வச பயிற்சி வகுப்பு துவங்கி நடந்து வரு கி றது.
ஆறு மு க நே ரி யில் உள்ள இளம் முன் னோ டி கள் சங் கம் என்ற தொண்டு நிறு வ னம் கடந்த 20 ஆண்டு களாக அரசு வேலைக் கான வழி காட்டி மற் றும் இல வச பயிற்சி வகுப் பு களை நடத்தி வரு கி றது. இந் நி லை யில் தமிழ் நாடு ஒருங் கி ணைந்த காவல் தேர் வுக் கான இல வச பயிற்சி வகுப்பு ஆறு மு க நேரி கே.ஏ.மேல் நி லைப் பள் ளி யில் கடந்த 20ம் தேதி முதல் துவங் கி யது. இது மே 20ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதி யம் 1.30 மணி வரை நடை பெ று கி றது.
இளம் முன் னோ டி கள் சங்க நிறு வ ன ரும், சென் னை யில் டிஎஸ் பி யாக பணி யாற்றி வரு ப வ ரு மான ஜான் கென் னடி, நிறு வன செய லா ள ரும் தீய ணைப் புத் து றை யில் ஏடி எப் ஓ வாக பணி யாற்றி வரு ப வ ரு மான ராஜேஷ் கண் ணன் ஆகி யோர் சிறப்பு வகுப் பு கள் நடத் து கின் ற னர். ஏற் பா டு களை செய லா ளர் ரமேஷ் ராம லிங் கம் செய் துள் ளார்.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஏரல்திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் மறியல் போராட்டம்: எம்.எல்.ஏ. உள்படகைது



ஏரல்

ஏரல் காந்தி சிலை பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவி,  நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் அலி, இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் பெஸ்டி உள்பட 40 பேரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.30 மணிக்கு நெல்லைக்கு புறப்பட இருந்த பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு முயன்ற 40 பேரை திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் போசார் கைது செய்தனர்.


ருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 423 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர்,

விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து,  நேற்று திருச்செந்தூர், கோவில்பட்டி, ஏரல், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, குரும்பூர், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், எட்டயபுரம், கழுகுமலை, ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெட்டிக்கடைகள், டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோக் கள் பெரும்பாலும் ஓடவில்லை. பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

எம்.எல்.ஏ. கைது

திருச்செந்தூர் பஸ் நிலையம் முன்பு, எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக கோ‌ஷங் கள் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் செங்குழி ரமேஷ், உடன்குடி பாலசிங், நகர செயலாளர் மந்திரம், வக்கீல் பிரிவு ஜெபராஜ், ஆறுமுகநேரி டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நடேச ஆதித்தன், ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகவேல் உட்பட 95 பேரை  துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே 2–வது கட்டமாக பஸ்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட  9 தி.மு.கவினரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி நகரசபை டவுன் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், நகர செயலாளர் கருணாநிதி, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், நகர தலைவர் சண்முகராஜ், மாவட்ட செயலாளர் தங்க மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலளர் கதிரேசன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை நகர செயலாளர் பாட்ஷா, பெருந்தலைவர் மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் நாராயண சாமி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செண்பகராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் காஜா மீரான் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

எட்டயபுரம்

எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர செயலாளர் பாரதி கணேசன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அயன்வடமலாபுரத்தில் முன்னாள் பஞ்சாயத்து  தலைவர் வரதராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை மாசார்பட்டி போலீசார் கைது செய்தனர்.

குரும்பூரில் தி.மு.க ஒன்றிய செயலாளர் நவீன்குமார், பொருளாளர் பாதாள முத்து ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அலுவலகங்கள் வெறிச்சோடின
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவல கங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தூத்துக்குடி, 

ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

பூட்டப்பட்ட அலுவலகங்கள்

இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட 8 தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடி கிடந்தன. கலெக்டர் அலுவலகத்தில் குறைந்த அளவு ஊழியர்கள் இருந்தனர். ஊழியர்கள் இல்லாததால் தாலுகா அலுவலக கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால், தாலுகா அலுவலகங்களில் பட்டா மாற்றம், மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கோவில்பட்டியில்...

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், கோவில்பட்டியிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 40 பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

போராட்டத்திற்கு வட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெகநாதன், இணை செயலாளர் சின்னதம்பி, தணிக்கையாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தார்.

இதில் 24 பெண்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலியானார்.

ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி
ஏரல், ஏப். 26:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் மூழ்கி பிளஸ் 1 மாண வர் பலி யா னார்.
தூத் துக் குடி நட ரா ஜ பு ரத்தை சேர்ந்த கருப் ப சாமி மகன் சிவா(16). இவர் அங் குள்ள பள் ளி யில் பிளஸ் 1 படித்து வந் தார். இந் நி லை யில் நேற்று மதி யம் சிவா, தனது அண் ணன் மாரிச் செல் வன்(21) மற் றும் நண் பர் கள் உட் பட 9 பேர் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் குளிப் ப தற் காக 4 பைக் கு க ளில் வந் த னர். அவர் கள் ஏரல் அருகே மங் க ள கு றிச்சி தாமி ர ப ரணி ஆறு தடுப் ப ணை யில் குளித்து கொண் டி ருந் த னர். அப் போது சிவா தண் ணீ ரில் மூழ் கி யுள் ளார். அவரை உட ன டி யாக நண் பர் கள் மீட்டு தூத் துக் குடி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். அங்கு அவரை பரி சோ தித்த டாக் டர் கள் ஏற் க னவே சிவா இறந்து விட் ட தாக தெரி வித் த னர். ஏரல் போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

ஏரல் அருகே துணிகரம் ஆற்றில் ஆசை தீர குளித்த மெக்கானிக்கிடம் நகை அபேஸ்

ஏரல் அருகே துணிகரம்
ஆற்றில் ஆசை தீர குளித்த மெக்கானிக்கிடம் நகை அபேஸ்
ஏரல், ஏப். 26:
ஏரல் அருகே ஆற் றில் ஆசை தீர குளித் து கொண் டி ருந்த மெக் கா னிக் கி டம் இரண்டு பவுன் நகை திரு டி ய வரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
தூத் துக் குடி கீழ சண் மு க பு ரம் 4வது தெரு வைச் சேர்ந் த வர் ஜெயக் கு மார் (56). இங் குள்ள வாட் டர் ஹீட் டர் கம் பெ னி யில் மெக் கா னிக் காக வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன் தி னம் சொந்த வேலை யாக பைக் கில் ஆத் தூர் வந் தார். பின் னர் ஏரல் அருகே உள்ள மங் க ல கு றிச்சி வந்த இவர், குளிப் ப தற் காக பைக்கை நிறுத் தி விட்டு கழுத் தில் அணிந் தி ருந்த 2 பவுன் நகையை கழற்றி தனது மணி பர் சில் வைத் தார். அதன் பி றகு சட்டை துணி யு டன் அதை ஒரு பையில் கரை யில் வைத் து விட்டு தாமி ர ப ரணி தடுப் பணை பகு தி யில் ஆசை தீர குளித் து கொண் டி ருந் தார்.
இதை நோட் ட மிட்டு அறிந் து கொண்ட வாலி பர் ஒரு வர், ஜெயக் கு மா ரின் துணிப் பையை எடுத் துக் கொண்டு ஓடி னார். இதை கண்டு பத றிய ஜெயக் கு மார் கரைக்கு திரும் பி ய தோடு அங் குள் ள வர் கள் உத வி யு டன் வாலி பரை பிடிக்க விரட் டிச் சென் றார்.
ஆனால் அந்த வாலி பர் பர் சில் இருந்த நகை மற் றும் 500 ரூபாயை எடுத் துக் கொண்டு அந்த மணி பர்சை அங் குள்ள முள் பு த ரில் வீசி விட்டு தப் பிச் சென் றார். இது கு றித்த புகா ரின் பேரில் ஏரல் எஸ்ஐ சர வ ணன், சிறப்பு எஸ்ஐ சுந் த ர ரா ஜன் ஆகி யோர் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

முக்காணியில் தடுப்பணை கட்டுவதை முடுக்கிவிட வேண்டும்

முக்காணியில்
தடுப்பணை கட்டுவதை முடுக்கிவிட வேண்டும்
முக் கா ணி யில் தடுப் பணை கட் டும் பணி தீவி ரப் ப டுத்த கோரி தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கத் துக்கு உம ரிக் காடு கிராம விவ சா யி கள் திரண்டு வந் த னர்.
தூத் துக் குடி, ஏப். 25:
முக் கா ணி யில் தடுப் பணை கட் டு வ தற்கு சம் பந் த மில் லா த வர் கள் முட் டுக் கட்டை போடு வ தா க வும், இதைப் பொருட் ப டுத் தா மல் தடுப் பணை கட் டும் பணியை முடுக் கி விட வேண் டும் என் றும் உம ரிக் காடு கிராம விவ சா யி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம், உம ரிக் காடு தாமி ர ப ரணி வட கால் கொற்கை குளம் பகுதி 2 நீரினை பயன் ப டுத் து வோர் சங் கத் தி னர் அதன் தலை வர் அரு ணா ச லம் தலை மை யில் தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கத் துக்கு நேற்று காலை திரண்டு வந்து ஆர்ப் பாட் டம் நடத் தி னர். பின் னர் அவர் கள் கலெக் டர் ரவிக் கு மா ரி டம் அளித் துள்ள மனு வில் கூறி யி ருப் ப தா வது:
உம ரிக் காடு பகு தி யில் சுமார் 2 கி.மீ. தொலை வுக்கு கடல் நீர் புகு வ தால் எங் க ளது விளை நிலங் க ளுக் கான கிணற் று நீர் பாதிக் கப் பட் டுள் ளது. இத னால் மன வே தனை அடைந்த எங் க ளுக்கு ஆறு த லாக ஆற் று நீ ரைத் தேக் கும் வகை யில் முக் கா ணி யில் தடுப் பணை அமைக் கும் பணி துவங் கப் பட் டது. இதற் கான பணி கள் நடந் து வ ரும் நிலை யில் எங் கள் ஊருக்கு சம் பந் த மில் லா த வர் கள் சிலர் முட் டுக் கட்டை போடு கின் ற னர். எனவே, அதைப் பொருட் ப டுத் தா மல் தடுப் பணை கட் டும் பணியை முடுக் கி விட வேண் டும். குறிப் பாக வரும் மழை காலத் துக்கு முன் ன தாக முக் கா ணி யில் தடுப் பணை கட் டும் பணியை முடிக் க வேண் டும் என மனு வில் வலி யு றுத் தி யுள் ள னர்.
விவசாயிகள் வலியுறுத்தல்

முழு அடைப்பு போராட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று லாரிகள் ஓடாது

முழு அடைப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று லாரிகள் ஓடாது
தூத் துக் குடி, ஏப். 25:
தூத் துக் குடி மாவட்ட லாரி உரி மை யா ளர் கள் சங் கத் தலை வர் ஜெகன், செய லா ளர் விவே கா னந் தன் கூட் டாக வெளி யிட்ட அறிக்கை: தமி ழக விவ சா யி க ளுக் காக இன்று நடக் கும் முழு அ டைப் புக்கு ஆத ரவு தெரி வித்து தூத் துக் கு டி யில் லாரி கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என அதில் தெரி வித் துள் ள னர்.
இதே போல் நெடுஞ் சாலை துறை சாலை பணி யா ளர் கள் சங்க மாநில தலை வர் சண் மு க ராஜா விடுத் துள்ள அறிக்கை: தமி ழக விவ சா யி கள் போராட் டத் திற்கு தமி ழக நெடுஞ் சா லை துறை சாலை பணி யா ளர் கள் சங் கம் முழு மை யாக ஆத ரவு தெரி வித் துள் ளது. இத னால் இன்று (25ம்தேதி) ஒரு நாள் மட் டும் தமி ழ கம் முழு வ தும் உள்ள பத் தா யி ரம் சாலை பணி யா ளர் கள் சிறு விடுப்பு எடுத்து போராட் டத் தில் ஈடு ப டு வது என்று முடிவு செய் யப் பட் டுள் ளது.
முடி தி ருத் தும் தொழி லா ளர் நலச் சங்க மண் டல செய லா ளர் விஜ ய கு மார் விடுத் துள்ள அறிக்கை: முழு அடைப்பு போராட் டத் துக்கு தமிழ் நாடு மருத் து வர் சமு தாய சங் கம், முடி தி ருத் தும் தொழி லா ளர் சங் கம் முழு ஆத ரவை தெரி வித் து கொள் வ து டன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை யில் அனைத்து சலூன் க ளும் அடைக் கப் பட் டி ருக் கும் என அதில் குறிப் பிட் டுள் ளார்.

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரி ஏரல், துண்டு பிரசுரம் விநியோகம்

முழு அடைப்பு போராட் டத் துக்கு ஆத ரவு கோரி ஏர லில் அனைத்து கட் சி யி னர் துண்டு பிர சு ரம் விநி யோ கித் த னர்.
ஏரல், ஏப். 25:
விவ சா யி களுக்கு ஆத ர வாக இன்று நடக் கும் முழு அடைப்பு போராட் டத் துக்கு ஆத ரவு கோரி ஏரல், குளத் தூ ரில் அனைத்து கட் சி யி னர் துண்டு பிர சு ரம் விநி யோ கித் த னர்.
ஏர லில் நடந்த நிகழ்ச் சிக்கு வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். திமு க வைச் சேர்ந்த முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ண கு மார், வை குண் டம் ஒன் றிய துணைச் செய லா ளர் மக ரா ஜன், மாவட்ட அணி துணை அமைப் பா ளர் கள் பால கி ருஷ் ணன், ராயப் பன், அனஸ், சுப மா ரி யப் பன், பால மு ரு கன், கார்த் தீ சன், ராம சுப் பி ர ம ணி யன், ஒன் றிய அவைத் தலை வர் சாதிக் குல் அமீன், நக ரச் செய லா ளர் கள் ஏரல் பார்த் தி பன், சாயர் பு ரம் வர த ராஜ் ஸ்டா லின், மாவட் டப் பிர தி நிதி ஜெய் சங் கர், முன் னாள் பேரூ ராட்சி துணைத் தலை வர் கள் ஏரல் மணி வண் ணன், சாயர் பு ரம் கண் ணன் மற் றும் நிர் வா கி கள் கிறிஸ் டோ பர், காயல் மு கம் மது, குளத் தான், மார்க் சிஸ்ட் நிர் வாகி பெஸ்டி, முக் காணி நகர காங் கி ரஸ் தலை வர் சிவ ணைந்த பெரு மாள் உள் ளிட்ட அனைத்து கட்சி பிர மு கர் கள் பலர் கலந் து கொண் ட னர்.
குளத் தூர்:
இதே போல் குளத் தூ ரில் துண்டு பிர சு ரம் வழங் கும் நிகழ்ச் சிக்கு திமுக கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் சின் ன மா ரி முத்து தலைமை வகித் தார். குளத் தூர் வட் டார காங் கி ரஸ் தலை வர் முத் து கி ருஷ் ணன், விடு த லைச் சிறுத் தை கள் ஒன் றி யச் செய லா ளர் மாத வன், திமுக இளை ஞர் அணி அமைப் பா ளர் கள் இம் மா னு வேல், டேவிட் ராஜ், ஒன் றிய அமைப் பா ளர் கன க ராஜ், துணை அமைப் பா ளர் பேச் சி முத்து, நெச வா ளர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் முரு கே சன், விவ சாய அணி அ மைப் பா ளர் கருப் ப சாமி, மாவட் டப் பிர தி நிதி செல் வ பாண் டி யன், சிறு பான்மை பிரிவு நிர் வாகி தர் ம நே ச செல் வின், குளத் தூர் வட் டார திமுக நிர் வா கி கள் பொன் னுச் சாமி, கெங் கு மணி, மாரீஸ் வ ரன், முத் துப் பாண்டி, முரு கன், ஜெய வேல், வைப் பார் பால மு ரு கன் ஆதித் தன் உள் ளிட் டோர் வியா பா ரி க ளி டம் துண் டு பி ர சு ரம் வழங்கி முழு அடைப் புக்கு ஆத ரவு திரட் டி னர்.
குளத் தூ ரில் வியா பா ரி க ளி டம் ஆத ரவு திரட் டிய அனைத்து கட் சி யி னர்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

ஏரலில் அனைத்து கட்சிகள் ஆலோசனை முழு அடைப்பு போராட்டம்

முழு அடைப்பு போராட்டம்
ஏரலில் அனைத்து கட்சிகள் ஆலோசனை
ஏரல், ஏப். 24:
தமி ழ கத் தில் நாளை நடக் கும் முழு அடைப்பு போராட் டம் குறித்து ஏர லில் அனைத்து கட் சி யி னர் ஆலோ சனை நடத் தி னர்.
கூட் டத் துக்கு வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன், சாயர் புரம் நக ரச் செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், காங் கி ரஸ் மாவட் டச் செயலாளர் ஜெயக் குமார், இந் திய கம்யூ. ஒன் றி யச் செய லாளர் அம் பி கா பதி, மார்க் சிஸ்ட் நக ரச் செய லா ளர் பெஸ்டி முன்னிலை வகித் த னர். இதில் போராட் டத்தை வெற் றி பெ றச் செய் வது என தீர் மா னிக் கப் பட் டது.
கூட் டத் தில் திமு க வைச் சேர்ந்த வை குண் டம் ஒன் றிய அவைத் தலை வர் சாதிக் குல் அமீன், துணைச் செய லா ளர் கள் மக ரா ஜன், சக் தி வேல், விவ சாய அணி மாவட்ட துணை அமைப் பா ளர் ராயப் பன், இளை ஞர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அனஸ், வர்த் தக அணி துணை அமைப் பா ளர் பால கிருஷ் ணன், தொண் டர் அணி துணை அமைப் பாளர் கார்த் தீசன், ஆதி திரா வி டர் நலக் குழு துணை அமைப் பா ளர் ராம சுப் பி ர ம ணி யன், மாவட் டப் பிர தி நிதி ஜெய் சங் கர், தொண் டர் அணி காயல் முகம் மது, இந் திய கம்யூ. ஏரல் நக ரச் செய லா ளர் பேச் சி முத்து, ஏரல் நகர காங் கி ரஸ் தலை வர் பாக் கர் அலி, இந் திய யூனி யன் முஸ் லிம் லீக் சாகுல் ஹ மீது மற் றும் பலர் பங் கேற் ற னர்.
ஆறு மு க நேரி:
முழு அடைப்பு போராட் டம் குறித்து ஆத் தூ ரில் வடக்கு வியா பா ரி கள் சங்க நிர் வா கி கள் அவ சர கூட் டம் நடந் தது. அப் போது அங்கு வந்த எம் எல்ஏ அனிதா ராதா கி ருஷ் ணன் போராட் டத் துக்கு ஆத ரவு கோரி னார்.
இதே போல் ஆத் தூர் குளம் கீழ்ப் ப குதி விவ சா யி கள் சங் கம், ஆத் தூர் சுற் று வட் டார வெற் றிலை விவ சா யி கள் சங் க மும் ஆத ரவு கோரி யி ருந் தன. இவற்றை ஏற்று நாளை (25ம் தேதி) காலை 6 முதல் மாலை 6 மணி வரை கடை ய டைப்பு செய்து ஆத ரவு தெரி விப் பது என தீர் மா னம் நிறை வேற் றப் பட் டது.
மேலும் மே 5ம் தேதி வணி கர் தினத் தை யொட்டி முழு கடை யடைப்பு நடத் த வும் தீர் மானிக் கப் பட் டது.
ஆத் தூர் வியா பாரி கள் சங் கத் தலை வர் தமி ழ ர சன் தலை மை யில் நடை பெற்ற இக் கூட் டத் தில் சங் கச் செய லா ளர் சேகர், பொரு ளா ளர் முகமது இக் பால் உள்ளிட்ட நிர்வா கி கள் பலர் கலந்து கொண் ட னர்.
ஏர லில் நடந்த அனைத்து கட்சி ஆலோ சனை கூட்டத்தில் வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செய லா ளர் பிஜி ரவி பேசி னார்.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல்
அரசு மரியாதையுடன் அடக்கம்
அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி, 
அசாமில் விபத்தில் பலியான தூத்துக்குடி ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று காலை அடக்கம் செய்யப்பட்டது.
ராணுவவீரர்
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் முத்துசந்தனகுமார் (வயது 25). இவர் அசாமில் ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த 18–ந் தேதி அசாம் மாநிலம் திஸ்பூரில் ராணுவ லாரியை ஓட்டி சென்ற போது எதிரே வந்த லாரியும், முத்துசந்தனகுமார் ஓட்டிச் சென்ற லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முத்துசந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
அஞ்சலி
இதைத்தொடர்ந்து அவரது உடல் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கும், அங்கிருந்து மதுரைக்கும் கொண்டு வரப்பட்டது. மதுரையில் இருந்து ஆம்புலன்சு வாகனம் மூலம் சொந்த ஊரான பொட்டல்காடு கிராமத்துக்கு ராணுவ வீரர்கள் கொண்டு வந்தனர். அங்கு முத்துசந்தனகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் ரவிகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஷ், தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் நாகராஜன், தேசிய மாணவர் படை 29–ம் பிரிவை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அடக்கம்
தொடர்ந்து 8 ராணுவ வீரர்கள், 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 24 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மரியாதையுடன் முத்துசந்தனகுமார் உடல், அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெற, மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெற, மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெற, மாற்றங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
அரசு இ–சேவை மையங்கள் மூலம் புதிய ரே‌ஷன் கார்டு பெறவும், ஏற்கனவே உள்ள ரே‌ஷன் கார்டில் மாற்றங்கள் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ–சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

இச்சேவை மையங்கள் மூலம், வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

முயற்சிகள் 

மேலும், இந்த பொது சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்சேவை மையங்கள் வாயிலாக மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகிறார்கள். இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதலான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டி அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரே‌ஷன் கார்டு பெற விண்ணப்பித்தல் 

அதன் ஒரு பகுதியாக 24–ந் தேதி முதல் அரசு இ–சேவை மையங்கள் வாயிலாக புதியதாக ரே‌ஷன் கார்டு பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், செல்போன் எண் மாற்றம் செய்தல் போன்ற ரே‌ஷன் கார்டு தொடர்பான சேவைகள், வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரே‌ஷன் கார்டு சம்பந்தமான மேற்படி சேவைகள் பெற்றிட பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள இ–சேவை மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...