செவ்வாய், 28 நவம்பர், 2017

ஏரல் அருகே பெருங்குளம் குளத்திற்கு தண் ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் மற்றும் சுற்று வட் டார கிராமமக்கள் திரண்டனர்.

\






பெருங்குளம் குளத்திற்கு தண்ணீர் திறக்க கோரி
விவசாயிகள் சாலை மறியல் முயற்சி
பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் திறந்து விடக் கோரி சாலை மறி ய லில் ஈடு பட முயன்ற போராட்ட குழு வி ன ரு டன் வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள் பேச் சு வார்த்தை நடத் தி னார். அடுத்த படம்: பரு வ மழை முடி யும் நிலை யில் பெருங் கு ளம் குளத் திற்கு இன் னும் தண் ணீர் வரா மல் வறண்டு கிடக் கி றது.
ஏரல், நவ. 29:
ஏரல் அருகே பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் திறந்து விடக் கோரி விவ சா யி கள் மற் றும் சுற் று வட் டார கிராம மக் கள் திரண் ட னர். அவர் க ளி டம் தண் ணீர் திறக் கப் ப டும் என அதி கா ரி கள் உறுதி அளித் ததை தொடர்ந்து கலைந்து சென் ற னர்.
ஏரல் அருகே பெருங் கு ளம் குளம் 826 ஏக் கர் பரப் ப ளவு கொண்ட பெரிய குள மா கும். தாமி ர ப ர ணி யில் இருந்து வரும் தண் ணீர் மரு தூர் கீழக் கால் மூலம் வை குண் டம் குளத் திற்கு தண் ணீர் வந்து நிறைந்த பின் அங் கி ருந்து பேரூர் குளத் திற் கும், பின் னர் சிவ களை குளம் வழி யாக பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் வந்து சேரும். இந்த குளம் கடைசி பகு தி யில் இருப் ப தால் தண் ணீர் அதிக அளவு வந்து மற்ற குளங் கள் நிறைந் தால் மட் டுமே இந்த குளத் திற்கு தண் ணீர் வந்து பெரு கும். இந்த குளத் தில் தண் ணீர் நிரம் பும் போது கடல் போல் காட்சி அளிக் கும். இதன் மூலம் ஆயி ரக் க ணக் கான ஏக் கர் பரப் ப ள வில் விவ சா யம் நடந்து வந் தது.
விவ சா யி கள் மற் றும் இப் ப குதி ஊர் மக் கள் வேண் டு கோளை தொடர்ந்து கடந்த 20 ஆண் டு க ளுக்கு முன் சிவ களை மற் றும் பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் நேரி டை யாக வரு வ தற் காக தோழப் பன் பண்ணை அரு கில் இருந்து தனி கால் வாய் அமைக் கப் பட் டது. இந்த கால் வாய் வழி யாக குளங் க ளுக்கு தண் ணீர் வந்து கொண் டி ருந் தது.
கடந்த 2 ஆண் டு க ளாக பரு வ மழை சரி யாக பெய் யா த தா லும், குள மும் தூர் வாரப் ப டா மல் கிடந் த தா லும் குளம் பாதி ய ளவு நிறை வதே கடி ன மாக இருந்து வந் தது. இதில் கடந்த ஆண்டு குளத் திற்கு தண் ணீர் வரத்து முற் றி லும் நின்று வறண் டது. இத னால் இப் ப குதி விவ சாய நிலப் ப ரப்பு அனைத்து கரு வேல மரங் கள் வளர்ந்து காடு போல் காட் சி ய ளித்து வரு கி றது. மேலும் இப் ப கு தி யில் உள்ள வீடு க ளில் நிலத் தடி தண் ணீ ரும் வற்றி உப்பு தண் ணீ ராக மாறி யுள் ளது.
இந் நி லை யில் இந்த ஆண்டு பரு வ மழை தொடங்கி முடி யும் நிலை யில் பெருங் கு ளம் குளத் திற்கு இன் னும் ஒரு சொட்டு தண் ணீர் கூட வர வில்லை. இந்த குளத் திற்கு தண் ணீர் வரும் தனிக் கால் வா யில் சிலர் அடைத்து வைத் தி ருப்ப தி னால் பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் வர வில்லை என விவ சா யி கள் குற் றம் சாட் டி னர்.
இதை ய டுத்து பெருங் கு ளம், பண் டா ர விளை, பண் ணை விளை பங் களா, புதூர், வண் ணி ய னூர், ஆல டி யூர் உட் பட சுற் று வட் டார கிராம பகுதி விவ சா யி கள் மற் றும் பொது மக் கள் பெருங் கு ளம் முன் னாள் பேரூ ராட்சி தலை வர் சுந் த ர ரா ஜன் தலை மை யில் நேற்று காலை சாலை மறி ய லில் ஈடு பட பெருங் கு ளத் தில் திரண் ட னர்.
தக வல் அறிந்து வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், இன்ஸ் பெக் டர் வெங் க டே சன், ஏரல் எஸ்.ஐக் கள் சர வ ணன், அனிதா, சிறப்பு எஸ்.ஐக் கள் சண் மு க சுந் த ரம், சுந் த ர ரா ஜன் மற் றும் அதி கா ரி கள் வந்து பேச் சு வார்த்தை நடத் தி னர். இதில் தனி கால் வா யில் உள்ள அடைப் பு கள் எடுக் கப் பட் டது. இனி பெருங் கு ளம் குளத் திற்கு தண் ணீர் வரும் கால் வாயை அடைக்க விட மாட் டோம் என அதி கா ரி கள் உறுதி அளித் த னர். இதை ய டுத்து மறி யல் போராட் டம் கைவி டப் பட் டது.
பெருங் கு ளம் பேரூ ராட்சி முன் னாள் துணை தலை வர் கள் சந் தி ர பால், சுடலை, முன் னாள் கவுன் சி லர் கள் மந் தி ரம், வைத் தி யர் துரை, விவ சா யி கள் முரு கா னந் தம், மாயன், பெருங் கு ளம் முரு கன், மாரி முத்து, திருக் கு ளந்தை சுந் தர் சாமி உட் பட 100க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர்.
ஏரல் அருகே பரபரப்பு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த நாளை கடைசி நாள்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த நாளை கடைசி நாள்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த
நாளை கடைசி நாள்
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, 
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
காப்பீடு திட்டம்
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி நோய் தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் குறைவுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2017–ம் ஆண்டுக்கு பிசான பருவத்துக்கான நெற்பயிருக்கு காப்பீடு தொகை செலுத்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் ஒரே விதமான பயிர் காப்பீடு தொகை மற்றும் சேர்க்கைக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நாளை கடைசிநாள்
அதன்படி நெற்பயிருக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு கட்டணமாக (பிரீமியம்) ஒரு ஏக்கருக்கு ரூ.345 செலுத்த வேண்டும். இந்த பிரீமியம் தொகை செலுத்துவதற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் பிசான பருவ நெற்பயிருக்கு உரிய காப்பீடு கட்டணத்தை நாளைக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்திலோ, தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ செலுத்தி பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏரல் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.15 கோடி நகைகள்– பணம் தப்பின



ஏரல் அருகே துணிகரம் வங்கியில் கொள்ளை முயற்சி ரூ.15 கோடி நகைகள்– பணம் தப்பின
ஏரல் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. ரூ.15 கோடி நகைகள்– பணம் தப்பின.
ஏரல், 
ஏரல் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. ரூ.15 கோடி நகைகள்– பணம் தப்பின.
வங்கி
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது கொற்கை. இங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக மதிரேகா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் வேலை முடிந்ததும், வங்கியை பூட்டு விட்டு சென்றார்.
நேற்று காலையில் வங்கி ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அப்போது வங்கியின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்மநபர்கள், வங்கிக்குள் வந்து சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுபற்றி ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம், சுப்பிரமணியம், அனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வங்கியில் இருந்த நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரிய வந்தது. இருந்தாலும் கைரேகை உதவி போலீஸ் சூப்பிரண்டு நாகரத்தினம், வங்கியில் பதிவான கைரேகைகள், தடயங்களை பதிவு செய்தார்.
கண்காணிப்பு கேமரா
வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 2 மர்மநபர்கள் வங்கிக்குள் நுழைவது போன்றும், அவர்களில் ஒருவர் சிவப்பு நிற பிளாஸ்டிக் பையில் சிறு சிறு துளைகள் இட்டு, முகத்தில் அணிந்து இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் வங்கிக்குள் நுழைந்த சிறிதுநேரத்தில் கொள்ளை முயற்சியை கைவிட்டு திரும்பி சென்றதும் பதிவாகி இருந்தது.
போலீஸ் மோப்ப நாய் கோ–கோ, வங்கியில் இருந்து வங்கியின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பு வரையிலும் ஓடிச் சென்று, அங்கு கொள்ளையர்கள் விட்டு சென்ற சிவப்பு நிற பிளாஸ்டிக் பையை கவ்வி எடுத்து வந்தது.
ரூ.15 கோடி நகைகள் தப்பின
போலீசாரின் மேல் விசாரணையில், நள்ளிரவில் வங்கிக்குள் புகுந்த மர்மநபர்கள், வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, கம்பிகளை கியாஸ் வெல்டிங் மூலம் துண்டித்தனர். அதன் வழியாக 2 மர்மநபர்கள் வங்கிக்குள் நுழைந்தனர். பின்னர் வங்கியில் உள்ள அலாரத்தின் இணைப்புகளையும் துண்டித்துள்ளனர். அப்போது வங்கியின் வெளியில் ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டுள்ளதால் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு வங்கியின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பு வழியாக தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது.
கொள்ளை முயற்சி நடந்த வங்கியின் லாக்கரில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள், பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அவைகள் அதிர்ஷ்டவசமாக கொள்ளை போகாமல் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திங்கள், 27 நவம்பர், 2017

ஏரலில் கடையை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு






ஏரலில் கடையை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
ஏரல், நவ. 28:
ஏர லில் மரக் க டை யின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கள் அங் கி ருந்த ரூ.1 லட் சத்தை திரு டிச் சென் ற னர்.
ஏரல் புது மனை முஸ் லிம் தெரு வைச் சேர்ந்த பெரி ய சாமி மகன் சுந் தர் (42). ஏரல் சினிமா தியேட் டர் அருகே மரக் கடை நடத்தி வரும் இவர், கடந்த 25ம் தேதி வியா பா ரம் முடிந்த பிறகு கடையை பூட் டி விட்டு வீட் டுக் குச் சென் றார். மறு நாள் ஞாயிற் றுக் கி ழமை விடு முறை என் ப தால் கடையை திறக் க வில்லை.
பின் னர் நேற்று காலை வழக் கம் போல் கடையை திறக்க வந் த போது முன் பக்க பூட்டு உடைக் கப் பட் டி ருந் தது. உள் அ றை யில் மேஜை டிரா ய ரில் வைத் தி ருந்த ரூ.1 லட் சம் திருட்டு போனது தெரி ய வந் த தும் அதிர்ச் சி ய டைந் தார். இது கு றித்து அவர் கொடுத்த புகா ரின் பேரில் ஏரல் எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வரு கி றார். எப் போ தும் வாக னங் கள் அதிக அள வில் வந்து செல் லும் பகு தி யில் நடந் துள்ள இச்சம் ப வம் ஏரல் வியா பா ரி களை கலக் க ம டை யச் செய் துள் ளது.

வியாழன், 23 நவம்பர், 2017

ஏரல்-ஐ தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுகா -முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 
தூத்துக்குடி மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார்கள்
 
1) ஏரல்-ஐ   தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் தோற்றுவிக்கப்படும். 
2) கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில், பெரியசாமிபுரம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய இடங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும்.
3) அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் தூத்துக்குடி வ.உ.சி. சந்தையினை நவீனப்படுத்தி, வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், புதிய வணிக வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
4) தூத்துக்குடி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளான சங்கரப்பேரி, மீளவிட்டான், தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம் மற்றும் அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலைப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
5) தூத்துக்குடி மாநகராட்சியின் அவசர மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக உரிய பணியாளர்கள் படிப்படியாக நியமிக்கப்படுவார்கள்.  
6) தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு மற்றும் புதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கும் ஏற்படுத்தப்படும். 
7) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில்  சி.பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும்.  இதற்கான பணி 2018-19ஆம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்.
8) மணப்பாடு கடற்கரைப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், வாகன நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமரா, வழிகாட்டிப் பலகைகள், மீட்புப் படகுகள், கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சாதனங்கள் வழங்கி அப்பகுதி சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்தப்படும்.
9) தூத்துக்குடி  அரசு மருத்துவக் கல்லூரியில் இந்திய மருத்துவக் கழகம் உரிய அனுமதி வழங்கியதும்,  மருத்துவப்  பட்ட மேற்படிப்புகள் துவக்கப்படும்.
10) விளாத்திகுளம் தாலுகா, சிவஞானபுரம் கிராமத்திலும், கயத்தார் ஊராட்சி ஒன்றியம், வானரமுட்டி  கிராமத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
 
11) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும். மூப்பியல் பிரிவு மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை      வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். 
 
12) கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு             டயாலிசிஸ் கருவிகள், எண்டோஸ்கோப் ஆய்வக உபகரணங்கள்   வழங்கப்படும். 
13) ஏரல் அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
14) திருச்செந்தூர் சமுதாய சுகாதார மையத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். 
15) கருங்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும். 
16) விளாத்திகுளம் வட்டம், பெரியசாமிபுரம் கிராமம் மற்றும் வேம்பார் கிராமத்தில் வேம்பாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும். 
17) ஸ்ரீவைகுண்டம் வட்டம், அகரம் குடியிருப்பு அருகே வல்லநாடு கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே  ஒரு தடுப்பணை கட்டப்படும். 
18) சாத்தான்குளம் வட்டம், பள்ளக்குறிச்சி கிராமத்தில் கருமேனி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை  கட்டப்படும். 
19) கோவில்பட்டி வட்டம், ஆவுடையம்மாள்புரம் கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணை கட்டப்படும். 
20) கோவில்பட்டி வட்டம், சிதம்பரம்பட்டி கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். 
21) கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். 
22) உடன்குடி, செட்டிக்குறிச்சி, அரசரி கிராமம் மற்றும் தூத்துக்குடி கடற்கரை சாலை ஆகிய 4 இடங்களில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
23) பொட்டலூரணி - சேக்காரக்குடி - பேரூரணி - மங்களகிரி சாலையில் ஒரு சிறு பாலம் கட்டப்படும். 
24) மீனாட்சிபுரம் - வெங்கடாச்சலபுரம் சாலையில் ஒரு சிறு பாலம் கட்டப்படும். 
25) கோவில்பட்டி - கடலையூர் - முத்தாலபுரம் - பெரிலோவன்பட்டி - பிள்ளையார்நத்தம் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.
26) திசையன்விளை - உடன்குடி சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். 
27) கயத்தார் - கழுகுமலை சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். 
28) புதூர் - பரளச்சி சாலையில் ஓர் உயர்மட்டப் பாலம்  கட்டப்படும். 
29) மீளவிட்டான் - தூத்துக்குடி ரயில்வே நிலையங்களுக்கு இடையே 
            1. ரயில்வே கடவு எண் 486-இல் சாலை மேம்பாலம் 
          2. மற்றும் 487-இல் அளவான பயன்பாட்டு சுரங்கப்பாதை                                       கட்டப்படும். 
30) தூத்துக்குடி - கொல்லம் சாலையில் கூடுதல் சாலை மேம்பாலம் கட்டப்படும். இப்பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. 
31) படர்ந்தபுளி அருகில் பாலப் பணி மேற்கொள்ளப்படும். 
32) கோவில்பட்டி - குமாரபுரம் - கோபாலபுரம் - செட்டிக்குறிச்சி சாலையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். 
33) கோவில்பட்டி ரயில்வே நிலையம் முதல் லெட்சுமி மில் மேம்பாலம் வரையிலான சாலையானது நான்கு வழித்தட சாலையாக அகலப்படுத்தப்படும். 
34) மணியாச்சி வழியாக வடக்கு நோக்கி செல்லும் 
15-க்கும் மேற்பட்ட இரயில்களின் பயண வசதியைத் தூத்துக்குடி நகர மக்கள் பயன்படுத்திடும் வகையில் மீளவிட்டான் முதல் மணியாச்சி வரை இரயில் பாதையை ஒட்டி வாகனங்கள் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.என்று அவரது பேச்சு  குறிப்பில் தெரிவித்தார்.

திங்கள், 20 நவம்பர், 2017

ஏரல் லோபா பள்ளி மாணவி சாதனை





மாநில சிலம்பாட்ட போட்டி
ஏரல் லோபா பள்ளி மாணவி சாதனை
ஏரல், நவ. 20:
தமிழ் நாடு சிலம் பாட்ட கழ கம், நாமக் கல் மாவட்ட சிலம் பாட்ட கழ கம் இணைந்து மாநில அள வி லான சிலம் பாட்ட போட் டியை நாமக் கல் லில் நடத் தின.
இப் போட் டியை தமிழ் நாடு மாநில சிலம் பாட்ட கழ கத் தலை வர் ராஜேந் தி ரன் தலைமை வகித்து துவக் கி வைத் தார். இதில் ஏரல் லோபா மெட் ரிக் உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி கள் பங் கேற்று அபா ர மாக விளை யா டி னர். 19 வய துக்கு உட் பட் டோர் பிரி வில் 8ம் வகுப்பு மாணவி அபிஷா 40-45 எடை பிரி வில் 2ம் இடத்தை வென் றார்.
சாதனை படைத்த மாணவி அபி ஷா வை யும், ஊக் கு வித்த பயிற் சி யா ளர் ஸ்டீ பன், உடற் கல்வி ஆசி ரி யர் ஜான கி ரா மன் ஆகி யோரை பள்ளி நிறு வ னர் லோபா முரு கன், முதல் வர் ரெஜினா மற் றும் ஆசி ரி யர் கள், அலு வ லர் கள், மாணவ, மாண வி கள் பாராட் டி னர்.
நாமக் கல் லில் நடந்த மாநில சிலம் பாட்ட போட் டி யில் 2ம் இடம் வென்ற ஏரல் லோபா பள்ளி மாணவி அபி ஷாவை பள்ளி நிர் வா கத் தி னர் பாராட் டி னர்.

ஏரலில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தம்






ஏரலில் இருந்து சென்னை செல்லும்
அரசு பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தம்
ஏரல், நவ. 20:
ஏர லில் இருந்து சென் னைக்கு கடந்த 10 ஆண் டு க ளாக இயக் கப் பட்டு வந்த அரசு விரைவு பஸ் முன் ன றி விப் பின்றி திடீ ரென நிறுத் தப் பட் டுள் ளது. இத னால் பய ணி கள், வியா பா ரி கள், கிராம மக் கள் என அனைத் துத் த ரப் பி ன ரும் கடு மை யாக அவ திப் ப டு கின் ற னர்.
ஏர லில் இருந்து சென்னை செல்ல ஏது வாக கடந்த 10 ஆண் டு க ளுக்கு முன்பு வை குண் டம் அர சுப் போக் கு வ ரத்து கழ கம் சார் பில் (தடம் எண் 178 ஹெச்) அரசு பஸ் இயக் கப் பட் டது. இந்த பஸ் தின மும் ஏரல் பஸ் நிலை யத் தில் இருந்து புறப் பட்டு முக் காணி, பழை ய கா யல் வழி யாக சென் னைக்கு சென்று வந் த தோடு அதிக அள வில் வரு வாய் ஈட் டி யது. இத னி டையே, கடந்த 5 ஆண் டு க ளுக்கு முன்பு திடீ ரென இந்த பஸ் நிறுத் தப் பட் டது. இத னால் பாதிக் கப் பட்ட ஏரல் வியா பா ரி கள் மற் றும் பய ணி கள், பொது மக் கள் ஏர லில் இருந்து சென் னைக்கு சென்று வந்த ஒரே அரசு பஸ் நிறுத் தப் பட் டுள் ளதை கண் டித் தும், இந்த பஸ்சை மீண் டும் இயக் க வும் வலி யு றுத் த னர்.
அதன் அடிப் ப டை யில் ஏர லில் இருந்து சென் னைக்கு அரசு விரைவு பஸ் மீண் டும் இயக் கப் பட் டது. இந்த பஸ் சா னது வை குண் டம் அர சுப் போக் கு வ ரத்து கழ கத் தில் இருந்து இயக் கப் ப டு வ தற் குப் பதி லாக திரு செந் தூர் அர சுப் போக் கு வ ரத்து கழ கம் சார் பில் விரைவு பஸ் சாக இயக் கப் பட் டது. திருச் செந் தூர் அர சுப் போக் கு வ ரத் துக் கழ கத் தில் இருந்து புறப் பட்டு ஏரல் வந்து இங் கி ருந்து பய ணி களை ஏற் றிக் கொண்டு பண் டா ர விளை, நட் டாத்தி, சாயர் பு ரம் புதுக் கோட்டை வழி யாக சென் னைக்கு சென் றது.
இந்த வழித் த டத் தி லும் இந்த பஸ் அதிக அள வில் வரு வாய் ஈட்டி வந் தது. இந் நி லை யில் திரு விழா காலங் க ளில் திருச் செந் தூ ரில் இருந்து புறப் ப டும் போதே சென் னைக்கு பய ணி களை இந்த பஸ் ஏற் றிக் கொண்டு வந் த தால் ஏர லில் பய ணி கள் ஏறு வ தற்கு சீட் கிடைக் காத நிலை ஏற் பட் டது. இதை ய டுத்து ஏரல் வியா பா ரி கள் மற் றும் பய ணி கள் நலச் சங் கம் சார் பில் ஏரல் பஸ் நிலை யத் தில் இந்த பஸ்சை மறித்து திரு செந் தூ ரில் இருந்து பய ணி களை ஏற்றி வரக் கூ டாது என் றும் ஏர லில் இருந்து தான் சென் னைக்கு பய ணி களை ஏற்ற வேண் டும் என வலி யு றுத் தி னர். அந்த அள வுக்கு இந்த பஸ் அதிக அள வில் வசூ லு டன் சென் னைக்கு சென்று வந் தது.
ஆனால், கடந்த 10 நாட் க ளுக்கு முன் னர் இந்த பஸ் எந் த வித முன் ன றி விப் பும் இன்றி திடீ ரென நிறுத் தப் பட் டுள் ளது. அதற் குப் பதி லாக திரு செந் தூ ரில் இருந்து திரு வெற் றி யூர் சென்று வந்த அரசு பஸ்சை ஏரல் வழி யா கச் செல் லு மாறு மாற் றி வி டப் பட் டுள் ளது. மேலும் இந்த பஸ் சென் னை யில் இருந்து வரும் போது ஏரல் வரா ம லேயே திருச் செந் தூ ருக்கு செல் கி றது. இத னால் ஏரல், சாயர் பு ரம் மற் றும் சுற் று வட் டார கிராம மக் கள், வியா பா ரி கள் என அனைத் துத் தரப் பி ன ரும் கடு மை யாக அவ திப் ப டு கின் ற னர்.
எனவே, திடீ ரென நிறுத் தப் பட்டு அரசு விரைவு பஸ்சை ஏர லில் இருந்து சென் னைக்கு மீண் டும் இயக்க சம் பந் தப் பட்ட போக் கு வ ரத் துத் துறை அதி கா ரி கள் துரித நட வ டிக்கை எடுக்க முன் வ ரு வார் க ளா? என்ற எதிர் பார்ப்பு மக் கள் மத் தி யில் பல மாக எழுந் துள் ளது.
கிராம மக்கள் கடும் அவதி
நட வ டிக்கை எடுக் கப் ப டு மா?
இது கு றித்து மாநில பய ணி கள் நலச் சங் கத் தலை வர் சாந் த கு மார் கூறு கை யில், ‘‘ஏரல் மற் றும் ஏரல் வழி யாக 10க்கும் மேற் பட்ட தனி யார் ஆம்னி பஸ் கள் சென் னைக்கு சென்று வரு கி றது. இந் நி லை யில் ஏர லில் இருந்து சென் னைக்கு ஒரே ஒரு அரசு பஸ் மட் டும் தான் சென்று வந் தது. இந்த அரசு பஸ் சும் நல்ல வசூ லு டன் ஓடிய நிலை யில் திடீ ரென நிறுத் தப் பட் டுள் ளது. இது தனி யார் ஆம்னி பஸ் க ளுக்கு ஆத ர வாக இந்த அரசு பஸ் நிறுத் தப் பட் டுள் ள தாக பய ணி கள் குற் றம் சாட்டி வரு கின் ற னர். எனவே பொது மக் கள் மற் றும் பய ணி கள், வியா பா ரி கள் நலன் கருதி ஏர லில் இருந்து சென் னைக்கு அரசு விரைவு பஸ் விட சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் துரித நட வடிக்கை எடுக்க வேண் டும் ’’ என் றார்.

செவ்வாய், 14 நவம்பர், 2017

ஏரலில் இருளில் மூழ்கி கிடக்கும் தாமிரபரணி ஆற்றுப் பால




ஏர லில் இருளில் மூழ்கி கிடக் கும் தாமி ர ப ரணி ஆற் றுப் பாலத் தில் மின் விளக்கு அமைக்க வேண் டும் என வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் 3வது பெரிய வணிக நக ர மாக உள் ளது. இங்கு வியா பா ரம் மற் றும் தொழில் சம் மந் த மாக தின மும் நூற் றுக் கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பல ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர். தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக் கெ டுக் கும் போது ஏர லில் உள்ள தாம் போதி பாலம் மூழ்கி போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும்.
இதை ய டுத்து ஏரல் பகுதி வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள் அர சுக்கு கோரிக்கை விடுத் த தை ய டுத்து ரூ.16 கோடி 50 லட் சம் செல வில் புதிய உயர் மட்ட பாலம் கட் டப் பட்டு கடந்த 2016ல் பிப். 14ம் தேதி திறக் கப் பட் டது. ஆனால் பாலத் தில் இன் னும் மின் வி ளக்கு அமைக் கப் ப டா மல் இரவு நேரத் தில் இரு ளில் மூழ்கி கிடக் கி றது. இத னால் இந்த பாலத் தில் இரவு மக் கள் செல் வ தற்கு அச் சப் ப டு கின் ற னர்.
இரவு நேரத் தில் பாலத் தில் அடிக் கடி விபத் து க ளும் ஏற் பட்டு வரு கி றது. இந்த பாலம் அரு கில் புகழ் பெற்ற சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் உள் ள தால் இரவு நேரத் தில் இக் கோ யி லுக்கு வரும் பக் தர் க ளும் சிர மத் திற் குள் ளாகி வரு கின் ற னர். இதை ய டுத்து ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லத் தில் மின் விளக்கு அமைக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண் டும் என வியா பாரி சங் கம் மற் றும் சமூக அமைப் பு கள் சார் பில் கலெக் டர் மற் றும் பேரூ ராட்சி அதி கா ரிக்கு கோரிக்கை மனு கொடுத் துள் ள னர்.
இது கு றித்து ஏரல்முஸ் லிம் வணி கர் நலச் சங் கம் தலை வர் பாக் கர் அலி கூறு கை யில், ‘‘தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக கட் டப் பட் டுள்ள ஆழ் வார் தி ரு நகரி, வை குண் டம் மற்றும் ஆத் தூர் பாலங் களில் எல் லாம் மின் விளக்கு அமைக் கப் பட் டுள் ளது. ஆனால் ஏரல் ஆற் றுப் பா லம் கட் டப் பட்டு 2 ஆண் டு க ளா கி யும் இன் னும் மின் வி ளக்கு அமைக் கப் ப டா மல் உள் ளது.
பாலத் தில் மின் விளக்கு இல் லா த தால் வியா பா ரி கள், மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் அவதிப் பட்டு வரு கின் ற னர்.
எனவே உட ன டி யாக ஏரல் பாலத் தி லும் மின் வி ளக்கு அமைத் திட அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் ’’ என் றார். இது கு றித்து அவர் ஏரல் பேரூ ராட்சி செயல் அலு வ ல ரி ட மும் கோரிக்கை மனு கொடுத் துள் ளார்.
ஏரலில் மின்விளக்குகள் இல்லை
இருளில் மூழ்கும் தாமிரபரணி ஆற்றுப்பாலம்
வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் தில் மின் விளக்கு அமைக் கா த தால் இரு ளில் மூழ்கி உள் ளது.

ஏரல் அருகே பயங்கரம் தொழிலாளி விறகு கட்டையால் அடித்துக் கொலை



ஏரல், 
ஏரல் அருகே தொழிலாளி விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மது போதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட உறவினரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
ஏரலை அடுத்த திருவழுதிநாடார்விளையை சேர்ந்தவர் ஆத்திப்பழம் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் சமையல் வேலை, வாணவெடி போடும் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கு சென்று வந்தார். இவருடைய மனைவி முத்துக்கனி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே முத்துக்கனி 2 மகன்களுடன் சாயர்புரம் பகுதியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் ஆத்திப்பழம் தனது ஊரில், மற்றொருவரின் 2–வது மனைவியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி என்பவரை தன்னுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். மகாலட்சுமிக்கும் 4 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களை, 2–வது கணவரிடம் விட்டு விட்டு, ஆத்திப்பழத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
விறகு கட்டையால் தாக்கி...
இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி (46). இவர் சென்னையில் உள்ள பாத்திரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தியும், ஆத்திப்பழமும் உறவினர்கள் ஆவர். சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி சொந்த ஊருக்கு வந்தார்.
பின்னர் நேற்று முன்தினம் மாலையில் கிருஷ்ணமூர்த்தியும், ஆத்திப்பழமும் தங்களது ஊரில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகில் சென்றபோது, மது போதையில் இருந்த கிருஷ்ணமூர்த்திக்கும், ஆத்திப்பழத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, ஆத்திப்பழத்தை கீழே தரையில் தள்ளி விட்டு, விறகு கட்டையால் அவரை தாக்கினார்.
உறவினர் கைது
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆத்திப்பழம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகிலா, வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார். மது போதையில் தொழிலாளியை விறகு கட்டையால் உறவினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதன், 8 நவம்பர், 2017

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18–ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18–ந் தேதி நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் வேலைநாடுபவர்கள் நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
நவம்பர் 09, 2017, 03:45 AM
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வருகிற 22–ந் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமை தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 18–ந் தேதி(சனிக்கிழமை) நடத்துகின்றன. இந்த முகாமில் 60 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆகையால் வேலை நாடுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் முதுநிலை பட்டதாரி, என்ஜினீயர் பட்டதாரி உள்ளிட்டோர் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும், அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறும் வேலைநாடுபவர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தாமாகவே அரசு அங்கீகாரம் பெற்ற ncs.gov.in என்ற இணையதளத்தில் நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய வேண்டும். அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்.

இதே போன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்து ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2015 வரை உள்ள புதுப்பித்தல் காலக்கெடுவுக்குள் புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள், அரசு அறிவித்து உள்ள சிறப்பு சலுகை அடிப்படையில் பதிவை புதுப்பிக்கலாம். முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

வெள்ளி, 3 நவம்பர், 2017

ஏரல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி




ஏரல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
ஏரல் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. வங்கியின் இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி ரூபாய் நகைகள்–பணம் தப்பியது.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் செயலாளராக பணியாற்றுபவர் சுப்பையா. கடந்த 1–ந் தேதி பணிகள் முடிவடைந்ததும் மாலையில் வழக்கம்போல் சுப்பையா, வங்கியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள், கூட்டுறவு வங்கியின் பக்கவாட்டில் உள்ள ஜன்னலின் கம்பிகளை வளைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் வங்கியின் இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர். இதனால் அதில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள்–பணம் தப்பியது.
நேற்று முன்தினம் காலையில் சுப்பையா வங்கிக்கு சென்றபோது வங்கியின் ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு இருந்ததையும், இரும்பு லாக்கர் சேதப்படுத்தப்பட்டு இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சகாயஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வியாழன், 2 நவம்பர், 2017

ஏரல் டீக்கடையில் வடையில் இருந்த ‘பல்லி’யால் மக்கள் அதிர்ச்சி





ஏரல் டீக்கடையில்
வடையில் இருந்த ‘பல்லி’யால் மக்கள் அதிர்ச்சி
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
ஏரல், நவ. 2:
முக் காணி ஜெய ரா மச் சந் திரா பு ரத்தை சேர்ந் த வர் முனி ய ராஜ்(32). இவ ரது மனைவி சந் த ன மாரி(27). இவர் நேற்று முன் தி னம் காலை உடல் பரி சோ த னைக் காக ஏரல் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத் து வ மனை செல் வ தற் காக முக் கா ணி யில் இருந்து தனது மகள் ராஜ லெட் சு மி யு டன்(1) ஏரல் பஸ் சில் வந் துள் ளார்.
ஏரல் பஸ் நிலை யம் அரு கில் உள்ள ஒரு டீ கடை யில் மகள் ராஜ லெட் சு மிக்கு உளுந்த வடை வாங்கி கொடுத் துள் ளார். அப் போது அந்த வடை யில் ஒரு பல்லி இருந் துள் ளதை பார்த்து அதிர்ச்சி அடைந் துள் ளார். வடை யில் பல்லி இருப் பதை பார்த்த பொது மக் கள் அதி கா ரி க ளுக்கு தக வல் கொடுத் த னர். இதை ய டுத்து வை குண் டம் ஒன்றிய உணவு பாது காப்பு அலு வ லர் டைட் டஸ், உணவு பாது காப்பு மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் தங் க விக் னேஷ் வந்து பார் வை யிட்டு விசா ரணை நடத் தி னர். மேலும் வடை வாங் கி ய தாக கூறப் ப டும் பஸ் நிலை யம் அரு கில் உள்ள கடைக்கு சென்று அங் கி ருந்த ரூ.490 மதிப் புள்ள வடை களை கைப் பற்றி அழித் த னர். மேலும் கடையை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும், உணவு பண் டங் களை பாது காப் பா க வும் வைக்க அறி வுரை வழங் கி னர். அது வரை தற் கா லி க மாக அந்த கடையை மூட உத் த ர விட்டு சென் ற னர். இதை ய டுத்து அந்த கடை உரிமை யா ளர் கடையை சுத் தம் செய்து, கடைக்கு பெயின்ட் செய்து வரு கி றார்.
ஏரல் பஸ் நிலை யம் அரு கில் உள்ள டீக்கடையில் வாங் கிய வடை யில் பல்லி இருந் ததை முன் னிட்டு அதி கா ரி கள் அந்த கடையை சோத னை யிட் ட னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...