புதன், 4 டிசம்பர், 2013

குளம்போல் தேங்கியுள்ள மழைநீரால் ஏரல் பஸ் நிலையத்தில் சுகாதாரக்கேடு

ஏரல், : தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்கும் ஏரலுக்கு தினசரி வியா பாரம், தொழில் நிமித்தமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து பஸ் மூலம் வந்து செல்கின்றனர். மேலும் 30க்கு மேற்பட்ட கிராம மக்கள் வெளியிடங்களுக்கு சென்றுவர ஏரல் பஸ் நிலையத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்குள்ள பஸ் நிலையம் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. 
பயணிகள் வெயில் அடித்தாலும், மழை பெய் தாலும் வெட்ட வெளியில் நின்றுதான் பஸ் ஏற வேண் டும். பஸ் நிலையத்தில் போடப்பட்ட சிமென்ட் தளமும் உடைந்து பல வருடங்களாகியும் சீரமைக்கப்படாததினால் கம்பிகள் அனைத்தும் வெளியே தெரிந்து பயணிகளின் கால்களை குத்தி கிளித்து விடுகின்றன.  இந்த குண்டும் குழியுமான ரோட்டில் மழை தண்ணீர் தேங்கி குளம் போல் உள்ளது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள ரோடுகள் உயர்வாக இருப்பதால் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுகிற மழை நீர் பஸ் நிலையத்திற்குள் புகுந்து வெளியேற முடியாமல் தேங்கி விடுகிறது. பஸ் நிலையத்தில் உள்ள கழிவு தண் ணீர் வெளியேற எந்தவித வடிகால் வசதி இல்லை. இதன் அருகிலேயே மகளிர் மேல்நிலைப்பள்ளி இருப்பதால் இப்பள்ளிக்கு பஸ்சில் இருந்து இறங்கி செல்லும் மாணவிகள் இந்த சேறும் சகுதியுமாக உள்ள தண் ணீரில் மிதித்து நடந்து சென்று வருகின்றனர். மேலும் மழைத்தண்ணீர் தேங்கியே கிடப்பதால் கொசு உற்பத்தியாகி பலவித நோய்கள் பரவி வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல் பஸ் நிலை யத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநில பயணிகள் நலச்சங்கம் தலைவர் சாந்தகுமார் கூறு கையில்,  ஏரல் பஸ் நிலையத்தில் பேரூந்து வந்து செல்வதைவிட கார், மற்றும் இரு சக்கர வாகனங்கள்தான் பஸ் நிலையத்தின் உள்ளே அதிக அளவு வந்து செல்கின்றன. இதனால் விபத்துக்குள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மழை நீர் வடிய வடிகால் வசதி பஸ் நிலையத்தில் இல்லாத தால் மழைதண்ணீர் உள்ளே தேங்கி துர்நாற்றம் அடிப்பதால் பலவித நோய்கள் ஏற் பட வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையத்தில் வடிகால் வசதி செய்து, பஸ் நிலைய உட்புற ரோட்டினை வெளியே உள்ள ரோட்டை விட உயர்த்திட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...