வெள்ளி, 30 செப்டம்பர், 2016

மிஸ்டர் கழுகு : அப்போலோ நிமிடங்கள்! – மன்னார்குடி மருத்துவர்கள்

மிஸ்டர் கழுகு : அப்போலோ நிமிடங்கள்! – மன்னார்குடி மருத்துவர்கள்

‘‘அப்போலோவில் முதலமைச்சர் ஜெயலலிதா அட்மிட் ஆகி ஒரு வாரத்துக்கு மேல் ஓடிவிட்டது. அரசாங்கம், அப்போலோ நிர்வாகம், ஜெயலலிதாவைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. முதல்வர் எப்போது மருத்துவ மனையைவிட்டு வருவார் என்பது இன்றுவரை முடிவாகவில்லை’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகார், குறிப்பு நோட்டில் ஆழ்ந்தார்.
‘‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி மத்திய அரசு அறிக்கை வாங்கியதாமே?’’
‘‘மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நாள்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிக்கொண்டு​தான் இருக்கின்றனர். ஆனால், அந்த அறிக்கைகள் மத்திய ஆட்சியாளர்களுக்குத் திருப்தி தரவில்லை. அந்த அறிக்கைகளில் கூடுதல் விவரங்கள் என எதுவுமில்லை. ‘அமைச்சர்​களுக்கே அப்போலோவில் 144 தடை. யாரும் ஜெயலலிதாவை போய்ப்  நேரடியாக பார்க்கவே முடிய​வில்லையே? பிறகு, எப்படி உண்மை​யான அறிக்கையை கொடுக்க முடியும்?’ என இங்குள்ள, அதிகாரிகள் சொன்னார்கள். இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தையே தொடர்பு கொண்டுப் பேசி, அறிக்கை கேட்டார்களாம்”
‘‘கொடுத்தார்களா?”

‘‘கொடுக்கப்பட்டு இருக்கலாம்! அதேபோல் கவர்னர் கேட்டபோதும் அவருக்கு முழு​விவரங்கள் தரப்படவில்லையாம். முதலமைச்சரைச் சுற்றி மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரையும் அவர்கள் பார்க்க அனுமதிப்பதும் இல்லை. தொற்றுநோய் வல்லுநர் டாக்டர் ராமசுப்பிரமணியன், ஜெயலலிதாவின் ஆஸ்தான டாக்டர்கள் சாந்தாராம், பி.சி.ரெட்டி ஆகியோர் தலைமையில் செயல்படும் டாக்டர்கள் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்கிறது. இந்தக் குழுவில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகள் பிரபாவின் கணவர் டாக்டர் சிவக்​குமார்், டாக்டர் பாமா, மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் சுப்பையா, டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் வெங்கட், டாக்டர் ரமேஷ் ஆகியோர் உள்ளனர். 18 வகையான மருத்துவப் பரிசோதனைகள் இதுவரை முடிந்துள்ளன. நுரையீரல், இதயம், கிட்னி, கல்லீரல் செயல்பாடுகள் பற்றிய அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப் பட்டிருக்கின்றன. அவற்றின் ரிசல்ட் இன்னும் முழுமையாக வரவில்லை என அறிக்கை கொடுத்துள் ளார்களாம். ஆனால், இந்த விவரங்களை உறுதிசெய்து கொள்வதற்காகவே, மத்திய அரசு மேலும் ஒரு வகையில் நூல்விட்டது. அதுதான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் அட்டன்டென்ட்ஸ். ஆனால், மத்திய அரசின் அந்த வியூகம் பலிக்க வில்லை. காரணம், பொன்.ராதாகிருஷ்ணனும் முதலமைச்சரைப் பார்க்கவில்லை. மாறாக, முதலமைச்சரின் செயலாளர் வெங்கட்ரமணனை மட்டும் பார்த்துவிட்டு, அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் ‘உடல்நலம் குணமடைய வாழ்த்துகள்’ என குறிப்பு எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டார்.”
‘‘மருத்துவக்குழுவைக் கண்காணிக்கும் மன்னார்குடி மருத்துவர்கள் யார்?”
‘‘டாக்டர் சிவக்குமார்தான், முதலமைச்சரின் சிகிச்சை தொடர்பான எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொள்கிறார். அப்போலோவில் அவர்தான் ‘ஆல் இன் ஆல்’ என்று வலம் வருகிறார். டாக்டர் சிவக்குமார், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரும்கூட. அவர், அங்கு பிளாஸ்டிக் சர்ஜனாக உள்ளார். டாக்டர் சிவக்குமார் தவிர, திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கியும் அவருடைய கணவர் டாக்டர் விக்ரமும் முதலமைச்சருக்கான சிகிச்சைகளை கவனித்துக்கொள்கின்றனர். இவர்களின் மேற்பார்வையில்தான், அப்போலோ டாக்டர்கள் குழு செயல்படுகிறதாம். இவர்கள்தான் ஜெயலலிதாவுக்கும் அப்போலோ நிர்வாகத்துக் குமான மீடியேட்டர்களாக உள்ளனராம். சில நேரங்களில் சீனியர் டாக்டர்களுக்கும் இவர்களுக்குமே மாறுபட்ட கருத்துக்கள் வந்துவிடுகிறதாம். தமிழகத்தில் பிரபலமான டாக்டர்களை ஒதுக்கிவிட்டு வெளிமாநில, வெளிநாட்டு டாக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகக் குறை சொல்லப்படுகிறது. அப்போலோவில் இருக்கும் பிரபல இதய மருத்துவரைத்தான் டெல்லி, மும்பை என அழைப்பார்கள். ஆனால் அவரை இங்கே ஒதுக்கிவிட்டார்கள். இ.என்.டி. தொடர்பாக மும்பையில் இருந்து ஒரு மருத்துவர் வந்தார். அவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவர் பெயரைக் குறிப்பிட்டு ‘அவரது ரிப்போர்ட் எங்கே?’ என கேட்டுள்ளார். ‘அவரை நாங்கள் தொடர்பு கொள்வது இல்லை’ என சொல்லி இருக்கிறார்கள். ‘நானே அவரைத்தான் கலந்தாலோசனை செய்வேன். நீங்கள் அவரை அழைக்க மாட்டேன் என்கிறீர்களே’ என்றார். ஜெயலலிதாவுக்கு இதுவரை பார்த்த மருத்துவர்களை மட்டும் அனுமதிக்கிறார்கள். தொழில் முறை ரீதியாக அப்போலோவுக்கு வராத மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. வெளிநாட்டு, வெளிமாநில மருத்துவர்களாக இருந்தால் அவர்கள் ஆலோசனை கேட்கப்படுகிறது.’’
‘‘முதலமைச்சர் எப்போது வீடு திரும்புவார்’’
‘‘22-ம் தேதி மருத்துவமனைக்குப் போனார்.
23-ம் தேதி மதியம் வந்துவிடுவார் என்றார்கள். அப்படியே நாட்கள் தள்ளிப் போயின. 28-ம் தேதி புதன்கிழமை வீடு திரும்புவார் என சொல்லப்பட்டது. அந்த நாளில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து கிடைக்கும் என்பது ஜெயலலிதாவின் நம்பிக்கையாம். ஆனால், அவருடைய உடல்நிலை புதன்கிழமை மீண்டும் கொஞ்சம் பாதிக்கப்பட்டதால், அன்றும் அவர் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ‘சில நேரங்களில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது’ எனவும் தகவல்கள் கசிகின்றன. சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் வேறு அறைக்குப் போகச் சொல்லிவிட்டனர். முதலமைச்சருடன் ‘பாரா மெடிக்கல்’ பணியாளர்கள்தான் எப்போதும்  இருக்கின்றனர். அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பணியாளர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு டாக்டர்களின் செல்போன் எண்களையும் போலீஸ் வாங்கி வைத்திருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, தற்போது போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் மருத்துவ உபகரண வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றனவாம். ஒரு ஹை கிளாஸ் மருத்துவமனையில் இருப்பதுபோல், அங்கே ஏற்பாடுகள் நடக்கின்றன. அது முடிந்ததும், ஜெயலலிதாவின் உடல்நிலையும் கொஞ்சம் தேறியதும் டிஸ்சார்ஜ் ஆவாராம். அதற்கு எப்படியும் இன்னும் ஒரு வார காலம் ஆகலாம் என்​கிறார்​கள்.”
‘‘ஓஹோ!’’
‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை இந்த விவகாரத்தில் இழுத்துவிட சிலர் முயற்சித்தார்​களாம். முதலமைச்சரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. ஆனால், வெளியில் செய்திகள் வருவது இல்லை. மேலும், மன்னார்குடி குடும்பம்தான் ஒட்டுமொத்தமாக மருத்துவமனையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுபற்றி, கருணாநிதியை ஒரு அறிக்கை வெளியிடச் சொன்னார்களாம். அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட கருணாநிதி, ‘இப்போதைக்கு அப்படிச் செய்வது நன்றாக இருக்காது’ என்று சொல்லிவிட்டாராம். இதில் எதிர்முகாம் எல்லாம் முக்கியமில்லை. அப்போலோ மருத்துவமனைதான் மிகவும் இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறதாம்”
‘‘என்ன சிக்கல்?”
‘‘முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான தகவல்களை அவர்களால் வெளியில் சொல்ல முடியவில்லை. ‘நன்றாக இருக்கிறார்’ என மருத்துவமனை அறிவிக்கிறது. ஆனால், வெளியில் பரவும் வதந்திகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. இது அ.தி.மு.க. தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருப்பதால் போலீஸ் நெருக்கடி வேறு அதிகமாக உள்ளது. இது மற்ற நோயாளிகள், அவர்களது உறவினர்களைப் பாதிக்கிறது.  புற நோயாளிகளின் வருகையே குறையத் தொடங்கிவிட்டதாம். வெளிநாட்டு, வெளிமாநில நோயாளிகளுக்கு ‘நம்மூர்’ அரசியல் எல்லாம் புரியாது அல்லவா? மருத்துவர்கள் நினைத்த நேரத்துக்கு மருத்துவ மனைக்குள் செல்ல முடியவில்லை. வெளியே போக முடியவில்லை. ஒரு மருத்துவரை இரண்டரை மணிநேரம் வெளியில் காக்க வைத்துத்தான் உள்ளே விட்டுள்ளார்கள். மருத்துவமனை நிர்வாகம் இதுசம்பந்தமாக கவலையோடு பல பிரச்னைகளைப் பேசி உள்ளதாம்.”
‘‘ம்.’
‘‘முக்கியஸ்தர்கள் எனக் கட்சியினர் இதுவரை நம்பிக்கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களுக்கே ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி எதுவும் தெரியவில்லையாம். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளிவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்​களுக்கான பட்டியல், மருத்துவமனையில் மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம், சீனியர்கள்கூட முதலமைச்சரை பார்க்க முடியவில்லை என்ற தகவல்கள் எல்லாம் கேள்விப்பட்டு கட்சியினர் கடும் விரக்தியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருக் கிறார்கள். கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அது அவர்களைக் கடுமை​யாக சோர்வடைய வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலைதான் என்றாலும், அ.தி.மு.க-வை அமோகமாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைத்த கொங்கு மண்டலத்தில், இந்த அதிருப்தியும் அவநம்பிக்கையும் கடுமையாக இருக்கிறது. காரணம் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கொங்கு மண்டலத்தில் நடக்கும் விஷயங்கள் அ.தி.மு.க-வை தஞ்சை மாவட்டத்துக்கு நகர்த்தி விடும் என்ற அச்சம் கொங்கு மண்டலத்துப் பெருந்​தலைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த அச்சத்தை அவர்களது நல விசாரிப்புகளில் தெரிந்துகொள்ள முடிகிறது” என்ற புதுக்குண்டு தூக்கிப் போட்டபடி பறந்தார் கழுகார்! சில மணி நேரம் கழித்து ‘அலார்ட்’ என தலைப்பிட்டு ஒரு வாட்ஸ் அப் தகவலை அனுப்பினார்.

புதன், 28 செப்டம்பர், 2016

மிஸ்டர் கழுகு : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

மிஸ்டர் கழுகு : சுப்ரீம் கோர்ட் காய்ச்சல்!

ஸ்டெத்தாஸ்கோப், வெள்ளை கோட் சகிதமாக வந்தார் கழுகார். ‘‘அப்போலோவில் கெடுபிடி அதிகமாக இருப்பதால் சோர்ஸை பார்க்க காஸ்ட்யூமை மாற்றினேன்.’’ என விளக்கம் கொடுத்துவிட்டு டேபிளில் இருந்த மேட்டர்களை எடுத்து விறுவிறு என கண்களை ஓட்டினார். ‘‘அப்போலோ மேட்டர்களை அக்குவேறு ஆணிவேராக உம் நிருபர்கள் அலசிவிட்டார்கள். அரசியல் பின்னணியை மட்டும் சொல்கிறேன்’’ என சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார் கழுகார்.
‘‘விமான நிலையம் முதல் சின்னமலை வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை 21-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே ஜெயலலிதா வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கொடி அசைத்து வைத்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு கலந்து கொண்டார். விமான நிலையத்தில் இருந்த காட்சிகள் கோட்டையிலும், கோட்டையில் நடக்கும் காட்சிகள் விமான நிலையத்திலும் தெரியும்படி பெரிய திரைகள் வைக்கப்பட்டிருந்தன. விமான நிலைய டி.வி. திரையில் ஒரு காட்சி சில வினாடிகள் மட்டுமே மறைந்து போனதை சிலர்தான் கவனித்தார்கள். அதுதான் அப்போலோ மருத்துவமனைக்குப் போக ஆரம்ப விதை’’ என சஸ்பென்ஸ் வைத்துவிட்டு குறிப்பு நோட்டை புரட்ட ஆரம்பித்தார் கழுகார்.
‘‘மெட்ரோ ரயில் திட்டத் தொடக்க விழா முதல்வர் சேம்பருக்கு அருகே ஒரு அறையில் நடைபெற்றது. அந்தக் அறைக்கு வருவதற்காக ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவை திறந்தபோது தூரத்தில் ஜெயலலிதா வீல் சேரில் வருவதுபோல தெரிந்தது. இந்தக் காட்சி விமான நிலைய ஸ்கிரீனில் சில வினாடிகள் வந்து மறைந்தன. கடந்த ஓராண்டாகவே நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா உட்கார்ந்துதான் பேசுகிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இருந்து இது தொடர்கிறது. சட்டசபையிலும் நிகழ்ச்சிகளிலும் தேர்தல் பிரசாரங்களிலும் இருக்கையில் அமர்ந்து கொண்டுதான் பேசுகிறார். அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதைத்தான் இது காட்டியது. ஆனால், சமீப காலமாக நடப்பதற்கு ஜெயலலிதா ரொம்பவே சிரமப்பட்டார். சமீபத்தில் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற போது நிறையப் பேருக்கு விருதுகள் கொடுத்தார் ஜெயலலிதா. அடுத்தடுத்து விருதுகள் தரப்பட்டதால் கொஞ்ச நேரம் இருக்கையில் அமர்ந்துவிட்டுத்தான் விருதுகள் வழங்கினார். நிற்க முடியாத நிலையில் அருகில் இருந்த கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் நின்றார். நிகழ்ச்சியின் மேடைக்கே ஜெயலலிதாவின் கார் வரும் வகையில்தான் ஏற்பாடுகள் செய்தார்கள். ஆர்.கே. நகரில் நடந்த நிகழ்ச்சியில் மேடைக்கு வருவதற்கே லிஃப்ட் அமைத்தார்கள். லேண்ட் க்ருஸர் காரைதான் ஜெயலலிதா பயன்படுத்துகிறார்.  அந்தக் காரின் தளம் ரோட்டில் இருந்து 8.8 இஞ்ச் உயரம். சுமார் முக்கால் அடி உயரத்தில் காலை தூக்கிவைத்துதான் அந்த காரில் ஏற முடியும். ஜெயலலிதா ஏறுவதற்கு வசதியாக இரண்டு அடுக்கு கொண்ட ஸ்பெஷல் படிக்கட்டை ரெடி செய்து வைத்திருக்கிறார்கள். அந்தப் படிக்கட்டு ஜெயலலிதா காரிலேயே பயணம் ஆகும். அவர் இறங்கும்போதும், காரில் ஏறிச் செல்லும் போதும் அந்தப் படிக்கட்டை தூக்கி வைப்பார்கள். அதைப் பயன்படுத்தித்தான் ஜெயலலிதா காரில் ஏறுவார், இறங்குவார். இது எல்லாமே ஜெயலலிதாவின் உடல்நிலையைப் பற்றிச் சொல்லும் விஷயங்கள். இப்போது நடப்பதற்கே சிரமமாக இருப்பதால்தான் வீல் சேரை உள்ளுக்குள் பயன்படுத்துகிறார் எனச் சொல்கிறார்கள்.’’
‘‘ஓஹோ’’
‘‘மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் ஜெயலலிதாவோடு தலைமைச் செயலாளர் பி.ராமமோகன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், ஜப்பான் தூதர் சைஜி பாபா, ஜைகா நிறுவன தலைமைப் பிரதிநிதி டகேமா சுகமோடோ, துணை தலைமைப் பிரதிநிதி ஹிரோஷி யோஷிடா, தமிழக திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் ச.கிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்தபோது அதை நாற்காலியில் அமர்ந்தபடியேதான் ஜெயலலிதா வாங்கினார். அதாவது, மெட்ரோ ரயில் திட்ட நிகழ்ச்சியில் இருந்தே ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லை. அடுத்த நாள் கோட்டையில் மருத்துவப் புத்தகங்கள் வெளியீடு, அதானி நிறுவனத்தின் சூரிய சக்தி மின்சாரம், தாலிக்குத் தங்கம் திட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்பிறகு இரவு போயஸ் கார்டனில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இப்படித் தொடர்ந்து பணியாற்றியதால் சோர்வடைந்தார். அதன்பிறகு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகள் பிரபாவின் கணவர் சிவக்குமார் டாக்டராக இருக்கிறார். அவர்தான் மருத்துவர்களுடன் உடனே வந்திருக்கிறார். மருத்துவமனையில் சேர்த்தால் நல்லது என அவர்கள் சொன்ன பிறகுதான் அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை ஆம்புலன்ஸில் அழைத்துப் போயிருக்கிறார்கள்.’’
‘‘மருத்துவமனைக்கு அவர் போனதே ஆச்சர்யம்தான்.”
‘‘எந்த நிலையிலும் மருத்துவமனையின் பக்கம் எட்டிப் பார்க்காதவர் முதல்வர். அவரையே அட்மிட் ஆகும் நிலைக்கு அவர் உடல்நிலை தள்ளியிருக்கிறது. முதல்வர் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது தளம் பிக் ஷாட்டுகள் மட்டுமே தங்குவார்கள். ஸ்டார் ஓட்டல் தரத்தில் ஒவ்வொரு அறையும் சூட் போல இருக்கும். அந்தப் பகுதியில் இருந்த அத்தனை சூட்டுகளும் முதல்வருக்காக ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டன. பெட், தலையணை, மருந்து உபகரணங்கள் என எல்லாமே புத்தம் புதிதாக வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பாத்ரூம் டைல்ஸ், டாய்லெட் என அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆர்.ஓ. வாட்டரும் அமைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனை உணவை அவர் சாப்பிடவில்லை. வீட்டில் இருந்துதான் உணவு வருகிறது. பக்கத்து சூட்டுகளில் சசிகலா குடும்பத்தினரும் கார்டனுக்கு நெருக்கமானவர்களும் மட்டுமே இருக்கிறார்கள். அமைச்சர்கள் எல்லாம் உள்ளே போய் வருவது எல்லாம் சும்மாதான். இரண்டாவது தளத்துக்குள் அவர்கள் போக முடியவில்லை. கார்டனில் எப்படி உள்ளே போய் அங்கே இருக்கிற அலுவலகத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்துவிட்டு வருவது போலவே அப்போலோவிலும் அரங்கேறியது. இதுவரையில் கட்சிக்காரர்கள் ஒருவரைக்கூட ஜெயலலிதா பார்க்கவில்லை. எல்லாம் சசிகலா மூலம் தகவல்கள் வெளியே வரும் அவ்வளவுதான்.’’
‘‘ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியைப் புதுப்பித்தது எல்லாம் எதற்கு?’’
‘‘இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என அப்போலோ டாக்டர்கள் குழு பேட்டி அளித்திருக்கிறார்கள். அதற்காக இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அரசியலோடு முடிச்சுப் போட்டு, காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள் சிலர். செப்டம்பர் மாதத்தை ஜெயலலிதாவால் எளிதில் மறந்துவிட முடியாது. 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதிதான் குன்ஹா தீர்ப்பு அளித்து ஜெயலலிதாவை சிறையில் அடைத்தார். அதே செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதே செப்டம்பர் 8-ம் தேதி முக்கியமான நாள். ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்வதற்கு காரணமாக இருந்த நாள் என செப்டம்பர் 8-ம் தேதியை கை காட்டுகிறார்கள் டெல்லி சோர்ஸ்கள். ‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பளிக்கப்படும்’ என அன்றைக்குத்தான் சுப்ரீம் கோர்ட் சொன்னது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதாக கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அறிவித்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கின் விசாரணை நடந்து முடிந்துவிட்டது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது சுயசரிதையை ஆல் ஃபிரம் மெமரி (அனைத்தும் நினைவில் இருந்து) என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் எனக்குப் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன’ என சொல்லியிருந்தார். இதை சுட்டிக்காட்டி தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மனுப் போட்டார். அதில் ‘சொத்துக் குவிப்பு வழக்கில் அழுத்தங்கள் இருந்ததாகக் ஆச்சார்யா சொல்லியிருப்பதால் அவரிடம் விசாரணைக்கு நடத்த வேண்டும்’ என சொல்லியிருக்கிறார். இந்த வழக்கு செப்டம்பர் 8-ம் தேதி விசாரணை வந்தபோது நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ‘வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர். ‘இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன’ என ரத்தினத்தின் வழக்குரைஞர் கேள்வி எழுப்பியபோது ‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப் படும்’ என தெரிவித்தனர். இந்த நீதிபதிகள்தான் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்தவர்கள். செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து நான்கு வாரம் என்றால் அக்டோபர் 7-ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம்.”
‘‘அதுவரை மருத்துவமனையில் இருந்து விடுவாரா?” என்ற கேள்வியை கவனிக்காதவர் போலப் பறந்தார் கழுகார்.

ஏரல் அருகே மழைக் காலத் தில் தண்ணீ ரில் மூழ்கி போக்கு வரத்து துண் டிக்கப் பட்டு வரும் தாம் போதி பாலத்தை உயர்த்தி அமைக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண் டும்

ஏரல், செப். 28:
ஏரல் அருகே மழைக் கா லத் தில் தண் ணீ ரில் மூழ்கி போக் கு வ ரத்து துண் டிக் கப் பட்டு வரும் தாம் போதி பாலத்தை உயர்த்தி அமைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட் டி கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளம் வழி யாக பெரும் ப டை சாஸ்தா கோயில், சிவத் தை யா பு ரம் சாலை, போடம் மாள் பு ரம், புதுக் கோட்டை வழி யாக தூத் துக் கு டிக்கு அதிக அளவு வாக னங் கள் சென்று வரு கின் றன.
ஆறு மு க மங் க லம், கண ப தி ச முத் தி ரம் உட் பட கிரா மங் க ளில் இருந்து சாயர் பு ரத் தில் உள்ள பள்ளி, கல் லூ ரி க ளுக்கு ஏரா ள மான மாணவ, மாண வி கள் இந்த சாலை வழி யாக சென்று வரு கின் ற னர்.
மேலும் ஆறு மு க மங் க லம் குளத்து பாசன வழி யாக பல ஆயி ரக் க ணக் கான ஏக் க ரில் நெல், வாழை பயிர் செய் ய பட் டுள் ள தால் விவ சா யி கள் தங் கள் வயல் க ளுக்கு உரம் கொண்டு செல் வ தற் கும், விளைந்த வாழைத் தார் களை வெட்டி மார் க்கெட் டிற்கு அனுப் பு வ தற் கும் வாக னங் களை இந்த வழி யாக பயன் ப டுத்தி வரு கின் ற னர். இத னால் இந்த சாலை தற் போது போக் கு வ ரத்து அதி கம் கொண்ட முக் கிய சாலை யாக உள் ளது.
ஆறு மு க மங் க லம் குளம் நிறைந் து விட் டால் தண் ணீர் மறு கால் வாய்க் கா லில் திறந்து விடப் ப டும். அப் போது இந்த தண் ணீர் பெரும் படை சாஸ்தா கோயில் அருகே உள்ள தாம் போதி பாலத்தை கடந்து கட லுக்கு உப ரி நீர் செல் லும். மழைக் கா லத் தில் குளத் திற்கு தண் ணீர் வந்து கொண் டி ருக் கும் போது மறு கால் வாய்க் கா லில் அதி க ளவு தண் ணீர் திறந்து விடப் ப டும். அப் போது இந்த தாம் போதி பாலம் தண் ணீ ரில் மூழ்கி போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும்.
இது ஆண் டு தோ றும் மழைக் கா லத் தின் போது வழக் க மாக நடந்து வரு கி றது. இத னால் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் இந்த ரோடு வழி யாக செல்ல முடி யா மல் பல கிலோ மீட் டர் தூரம் வரை சுற்றி குறிப் பிட்ட நேரத் தில் பள்ளி, கல் லூ ரி ளுக்கு செல்ல முடி யா மல் சிர மப் ப டு கின் ற னர்.
இதே போல் வாகன ஓட் டி கள் மற் றும் பொது மக் கள், விவ சா யி க ளும் இந்த ரோட்டை பயன் ப டுத்த முடி யா மல் மாற்று பாதை வழி யாக சுற்றி செல்ல வேண் டிய நிலை ஏற் ப டு கி றது.
எனவே அதி கா ரி கள் பெரும் ப டை சாஸ்தா கோயில் அரு கில் அமைந் துள்ள இந்த தாம் போதி பாலத் தினை உயர்த்தி கட்ட நட டி வக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி பொது மக் கள், பள்ளி கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் அருகே
தாம்போதி பாலத்தை உயர்த்த வேண்டும்
ஏர லில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் துக் கரை மெயின் சாலை யில் பெரும் படை சாஸ்தா கோயில் அரு கில் அமைந் துள்ள தாம் போதி பாலம்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் மெயின் சாலை குண்டும், குழியுமாகி போக்கு வரத் துக்கு லாயக் கற்ற நிலையில்

ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் மெயின் சாலை குண் டும், குழி யு மாகி போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற நிலை யில் உள் ள தால் வாகன ஓட் டி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
ஏர லில் இருந்து குரும் பூர் வழி யாக நாச ரேத், சாத் தான் கு ளம், திசை யன் விளை மற் றும் திருச் செந் தூ ருக் கும், குரும் பூ ரில் இருந்து ஏரல் வழி யாக தூத் துக் கு டிக் கும் பஸ் கள் சென்று வரு கின் றன. மேலும் ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் ரோட் டில் சேதுக் கு வாய்த் தா னில் இருந்து குரும் பூர் வரை ரோட் டின் இறு பு றத் தி லும், வாழை, நெல் விவ சா யம் நடந்து வரு வ தால் இந்த ரோட் டினை விவ சா யி க ளும் பயன் ப டுத்தி வரு கின் ற னர். மேலும் குரும் பூர், காரச் சேரி, சேது சுப் பி ர ம ணி ய பு ரம், சேதுக் கு வாய்த் தான், ராஜ பதி உட் பட நூற் றுக் கும் மேற் பட்ட பகு தி க ளில் இருந்து ஏரல் மற் றும் சாயர் பு ரம் பள்ளி, கல் லூ ரி க ளில் 500க்கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர். இப் ப கு தி க ளில் இருந்து ஏர லுக்கு வியா பா ரம் சம் மந் த மாக தின சரி ஆயி ரக் க ணக் கான மக் க ளும் வந்து செல் கின் ற னர். புகழ் பெற்ற ஏரல் சேர் மன் கோயி லும் இருப் ப தால், குரும் பூர்-ஏரல் மெயின் ரோட் டில் எப் போ தும் வாகன போக் கு வ ரத்து அதி க மாக காணப் ப டும்.
இந் நி லை யில் ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் மெயின் ரோட் டில் கற் கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக போக் கு வ ரத் துக்கு லாய்க் கற்ற நிலை யில் உள் ளது. இந்த ரோட் டில் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் புதி ய தாக உயர் மட்ட பாலம் கட் டப் பட் டுள் ளது. இத ன ரு கேயே ஏர லுக்கு இணைப்பு சாலை அமைக் கப் பட் டது. இதில் ஏர லில் இருந்து ஆற் றுப் பா லம் வரை தார் ரோடு நல்ல நிலை யில் உள் ளது. ஆனால் பாலத் திற்கு தென் பு றம் இருந்து சேதுக் கு வாய்த் தான் வழி யாக குரும் பூர் வரை சாலை படு மோ ச மாக உள் ளது. இத னால் புதி ய தாக தார் ரோடு அமைக்க வேண் டும் என பொது மக் கள் நீண்ட கால மாக அர சுக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலை யில் கடந்த ஆண்டு பெரிய பள் ளங் கள் இருந்த இடத் தில் மட் டும் கற் களை நிரப்பி தார் ஊற்றி தற் கா லி க மாக சீர மைத் த னர். அதன் பின் ரோடும் புதி ய தாக அமைக் கா மல் அப் ப டியே போட்டு விட் டு விட் ட னர். இத னால் தற் போது இந்த ரோட் டில் மேலும் பல இடங் க ளில் குண் டும், குழி யும் ஏற் பட்டு பொது மக் கள் மற் றும் பள்ளி கல் லூரி மாணவ, மாண வி கள், விவ சா யி கள் இந்த ரோட் டில் நடந்து கூட செல்ல முடி யா மல் அவ திப் பட்டு வரு கின் ற னர்.
எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் மெயின் சாலை யில் ஆற் றுப் பா லத் திற்கு தென் பு றம் இருந்து குரும் பூர் வரை மோச மான உள்ள இந்த சாலையை புதி ய தாக தார் ரோடு அமைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள், வாகன ஓட் டி கள் மற் றும் பொது மக் கள் அர சுக்கு கோரிக்கை விடுத் துள் ள னர்.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
ஏரல்-குரும்பூர் இடையே
பொதுமக்கள் பாதிப்பு
ஏர லில் இருந்து குரும் பூர் செல் லும் சாலை கற் கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக உள் ளது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஏரலில் இருந்து சிறுத்தொண்ட நல்லூர் வழியாக சாயர் பு ரம் செல் லும் மெயின் சாலை குண்டும், குழியுமாக

ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம் செல் லும் மெயின் சாலை குண் டும், குழி யு மாக உள் ள தால் வாகன ஓட் டி கள் மற் றும் பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
ஏரல் மற் றும் சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து சாயர் பு ரம் கல் லூரி, பி.எட் மற் றும் பொறி யி யல் கல் லூரி, பள் ளி க ளில் 500க்கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் படித்து வரு கின் ற னர்.
மேலும் சிறுத் தொண் ட நல் லூர், மொட் டத் தா தன் விளை உட் பட பகு தி க ளில் ரோட் டின் இரு பு றத் தி லும் உள்ள இடங் க ளில் வாழை மற் றும் முருங்கை, தென்னை மரம் தோட் டங் கள் அதி க ளவு இருப் ப தால் விவ சா யி க ளும் அதி க ளவு இந்த ரோட்டை பயன் ப டுத்தி வரு கின் ற னர். ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை மற் றும் தூத் துக் கு டிக்கு இந்த வழி யாக தான் பஸ் கள் சென்று வரு கின் றன.
இந் நி லை யில் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், மொட் டத் தா தன் விளை, சக் கம் மாள் பு ரம், திருப் ப ணி செட் டிக் கு ளம் வழி யாக சாயர் பு ரம் செல் லும் மெயின் சாலை கற் கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற நிலை யில் உள் ளது.
மாணவ, மாண வி கள் பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு இரு சக் கர வாக னத் தில் குண் டும், குழி யு மான சாலை வழி யாக சென்று வரு கின் ற னர். இத னால் அவர் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். இந்த சாலை வழி யாக நடந்து சென் றால் கற் கள் குத்தி கால் களை பதம் பார்த் து வி டு கி றது.
இதில் குறிப் பாக மொட் டத் தா தன் வி ளை யில் இருந்து சக் கம் மாள் பு ரம் பஸ் நிறுத் தம் வரை வாக னங் கள் தட்டி தடு மாறி தான் சென்று வரு கின் ற னர். மேலும் சாயர் பு ரம் மெயின் ப ஜா ரில் மக் கள் நட மாட் டம் அதி க ளவு உள்ள அந்த இடத் தி லேயே பெரிய, பெரிய பள் ளங் கள் ஏற் பட் டுள் ளது. இத னால் வியா பா ரி கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர்.
ஏற் க னவே கடந்த ஆண்டு இந்த சாலை யில் பெரிய குழி கள் இருந்த இடத் தில் மட் டும் கற் களை நிரப்பி தார் ஊற்றி தற் கா லி க மாக (பேட்ஜ் ஓர்க்) சீர மைத் த னர். அதன் பின் புதி ய தாக ரோடு அமைக் கப் ப டும் என மக் கள் எதிர் பார்த் த னர். ஆனால் புதிய ரோடு அமைக் கப் ப டா மல் அப் ப டியே விட் ட தால் தற் போது ரோடு குண் டும், குழி யு மாக உள் ளது.
எனவே நெடுஞ் சாலை துறை அதி கா ரி கள் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர் வழி யாக சாயர் பு ரம் செல் லும் சாலை மைய உடன் புதி தாக போட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என அப் ப குதி மக் கள், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல்-சாயர்புரம் இடையே
கற்கள் பெயர்ந்து குண்டும்
குழியுமாக மாறிய சாலை
ஏர லில் இருந்து சாயர் பு ரம் செல் லும் சாலை யில் சக் கம் மாள் பு ரத் தில் கற்கள் பெயர்ந்து குண் டும், குழி யு மாக உள் ளது.
பொதுமக்கள் பாதிப்பு

சனி, 24 செப்டம்பர், 2016

ஏரலில் இருந்து சூழவாய்க்கால் செல்லும் இடிந்து கிடக்கும் வாய்க்கால் பால தடுப்பு சுவர்

ஏரல் அருகே 2 ஆண்டுகளாக
இடிந்து கிடக்கும் வாய்க்கால் பால தடுப்பு சுவர்
ஏரல், செப். 23:
ஏர லில் இருந்து சூழ வாய்க் கால் செல் லும் மெயின் ரோட் டில் வை குண் டம் வட கால் வாய்க் கால் கரை யோ ரத் தில் இரண்டு மடை பா லம் உள் ளது. வை. வட கால் வாய்க் கா லில் வரும் தண் ணீர் இந்த மடை யின் வழி யாக தான் ஆறு மு க மங் க லம் குளத் திற்கு செல் லும். இந்த 2 மடை பாலங் க ளும் மிக குறு க லாக உள் ள தால் பெரிய வாக னங் கள் சிர மப் பட்டே சென்று வரு கின் றன. இத னால் இந்த பாதை வழி யாக பஸ் போக்கு வரத்து இல்லை.
மேலும் சூழ வாய்க் கால் மற் றும் சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து ஏரல் மக ளிர் மேல் நி லைப் பள்ளி மற் றும் நடு நி லைப் பள் ளி களில் படித்து வரும் மாணவ, மாண வி க ளும் இந்த பாலத் தின் வழி யா கத் தான் சைக் கி ளில் செல் கின் ற னர். இந்த பாலத் தின் மேல் வாக னங் கள் வரும் போது எதிரே வரும் வாக னத் திற்கு வழி வி ட மு டி யா மல் கடு மை யான போக் கு வ ரத்து நெருக் கடி இந்த ரோட் டில் ஏற் பட்டு வரு கி றது.
எனவே இந்த குறு கிய நிலை யில் உள்ள இந்த 2 பழ மை யான பாலத் தினை அகற்றி போக் கு வ ரத் திற்கு ஏற்ப அக ல மான நிலை யில் புதிய பாலம் கட் டிட வேண் டும் என இப் ப குதி மக் கள் நீண்ட கால மாக அர சுக்கு கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில் கடந்த 2 ஆண் டு க ளுக்கு முன் இவ் வ ழி யாக சென்ற ஒரு லாரி பாலத் தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத் துக் குள் ளா னது. இதில் பாலத் தின் வட பு ரம் உள்ள தடுப்பு சுவர் உடைந்து சேத ம டைந் தது. இந்த தடுப்பு சுவர் உடைந்து விழுந்து இரண்டு வரு ட மா கி யும் இன் னும் அதனை சீர மைக் கப் ப ட வில்லை. ஏற் க னவே பாலம் குறு கி ய தாக இருப் ப தா லும், இதில் தடுப்பு சுவர் இல் லா மல் இருப் ப தா லும் இப் ப கு தி யில் தொடர்ந்து சிறிய, சிறிய விபத் துக் கள் ஏற் பட்டு வரு கி றது.
பஸ், கார் கள் இந்த பாலத் தில் சிறிது தடு மா றி னா லும் வாய்க் கா லில் விழுந் து வி டும் அபா யம் உள் ளது. இத னால் ஒரு வித அச் சத் து டனே சென்று வரு கி றார்.
எனவே இந்த பாலத் தில் பெரி ய வ கை யில் விபத்து ஏற் ப டு வ தற் குள் தடுப்பு சுவரை சீர மைக்க வேண் டும் என வாகன ஓட் டி கள், பள்ளி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
மேலும் போக் கு வரத்தை விரிவு படுத் திட இந்த 2 குறு கிய பாலத் தி னை யும் அப் பு றப் ப டுத்தி அக ல மான பாலங் க ளாக கட் ட வும் அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வும் வலி யு றுத் தி யுள் ள னர்.
தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்
ஏர லில் இருந்து சூழ வாய்க் கால் செல் லும் மெயின் ரோட்டில் உள்ள வாய்க் கால் பாலத் தின் தடுப்பு சுவர் இடிந்து கிடப் ப தால் விபத்து ஏற் பட்டு வரு கி றது.

வியாழன், 1 செப்டம்பர், 2016

சிறுத் தொண்ட நல்லூர் முத்து மாலை அம்மன் கோயில் கொடை விழா

சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் கொடை விழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந் தது.
ஏரல், செப். 1:
சிறுத் தொண்ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் கொடை விழா வில் அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந் தது. இதில் திர ளான பக் தர்கள் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர்.
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் முத் து மாலை அம் மன் கோயில் கொடை விழா கடந்த 28ம் தேதி தொடங்கி நடந்து வந் தது. முக் கிய கோயில் கொடை விழா நேற்று முன் தி னம் நடந் தது. பகல் 12 மணிக்கு அம் மன் சந் த ன காப்பு தரி ச னம், இரவு 9 மணிக்கு வில் லிசை, 11 மணிக்கு பக் தர் கள் முளைப் பாரி, மாவி ளக்கு எடுத்து வரு தல் மற் றும் கயிறு சுற்றி ஆடு தல் நிகழ்ச் சி யும் நடந் தது. இரவு 12 மணிக்கு அம் ம னுக்கு புஷ்ப அலங் கார தரி ச னம், சிறப்பு பூஜை யும் நடந் தது. தொடர்ந்து அம் மன் கற் பக பொன் சப் ப ரத் தில் எழுந் த ருளி கோயில் வளா கம் மற் றும் ஊர் தெருக் க ளில் நகர் உலா வரும் நிகழ்ச் சி யும், வாண வே டிக்கை நிகழ்ச் சி யும் நடந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர்.
நேற்று காலை 8 மணிக்கு வெளியே உலா சென்ற அம் மன் திருக் கோ யில் வந் த டைந் தது. தொடர்ந்து பக் தர் கள் அம் ம னுக்கு பொங் க லி டு த லும், பகல் 12 மணிக்கு சிறப்பு அலங் கார தீபா ரா தனை பூஜை நடந் தது. இதி லும் ஊர் மக் கள் அனை வ ரும் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர். இரவு சிறப்பு நிகழ்ச் சி யாக இன் னிசை கச் சேரி நடந் தது.
ஏற் பா டு களை கோயில் விழாக் கு ழு வி னர் மற் றும் ஊர் மக் கள் செய்து இருந் த னர்.
சிறுத்தொண்டநல்லூரில்
முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா
திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஏரலில் நடந்த திமுக பொதுக் கூட் டத் தில் மாவட்ட செயலாளர் பெரிய சாமி பேசி னார்.

ஏர லில் நடந்த திமுக பொதுக் கூட் டத் தில் மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி பேசி னார்.
உள்ளாட்சி தேர்தலில்
அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும்
ஏரல், செப். 1:
தமி ழக சட் ட மன் றத் தில் ஜன நா ய கம் படும் பாடு கண் டன திமுக பொதுக் கூட் டம் ஏர லில் நடந் தது.
வை குண் டம் கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி தலைமை வகித் தார். நகர செய லா ளர் கள் ஏரல் பார்த் தி பன், சாயர் பு ரம் வர த ராஜ் ஸ்டா லின், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், துணை தலை வர் மணி வண் ணன், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய சங் கர், சாயர் பு ரம் பேரூ ராட்சி துணை தலை வர் கண் ணன், மாவட்ட மருத் துவ அணி துணை அமைப் பா ளர் அற வாழி, மாவட்ட விவ சாய அணை துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப் பா ளர் அனஸ், கொட் டா ரக் குறிச்சி செய லா ளர் துரை முன் னிலை வகித் த னர். முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ணக் குமார் வர வேற் றார்.
தெற்கு மாவட்ட செய லா ளர் பெரி ய சாமி பேசு கை யில், ‘‘உள் ளாட்சி தேர் த லில் திமு க வி னர் அனை வ ரும் ஒற் று மை யு டன் கூட் டணி கட் சி யி ன ரு டன் சேர்ந்து பணி யாற் றி னால் திமு கவை ஜெயிக்க யாரா லும் முடி யாது.
எனவே, வரு கிற உள் ளாட்சி தேர் த லில் மாவட் டத் தில் உள்ள அனைத்து இடங் க ளை யும் திமுக கைப் பற்ற வேண் டும் ’’ என் றார். தொடர்ந்து மாவட்ட கலை இலக் கிய பகுத் த றிவு பேரவை அமைப் பா ளர் சரத் பாலா பேசி னார்.மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், தலைமை செயற் குழு உறுப் பி னர் ஜெயக் கு மார் ரூபன், மாவட்ட அணி களின் துணை அமைப் பாளர் கள் சிவக் கு மார், பால மு ரு கன், சுப மா ரி யப் பன், ராம சுப் பி ர ம ணி யன், கார்த் தீ சன், மதி ய ழ கன், சர வ ணன், ஒன் றிய நிர் வா கி கள் மக ரா ஜன், சாதிக் குல் அமீன், சக் தி வேல், கண் ணன் மாவட்ட பிர தி நி தி கள் சொர் ண பாண்டி, சுடலை, செந் தில் ஆறு மு கம், ஜெயக் கு மார், அருள் கண் ணையா மற்றும் கென் னடி, குண சேகர், நட் டார், சாமு வேல், இம் மா னு வேல் உட் பட பலர் கலந்து கொண் ட னர். ஒன் றிய துணை செய லா ளர் மக ரா ஜன் நன்றி கூறி னார். ஏற் பா டு களை வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் செய்ப் பட் டி ருந் தது.
ஏரலில் பெரியசாமி பேச்சு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...