புதன், 26 மார்ச், 2014

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக 6 முனை போட்டி



தூத்துக்குடி,
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி முதல் முறையாக 6 முனை போட்டியை சந்திக்கிறது.
பாராளுமன்ற தேர்தல்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு தூத்துக்குடி தொகுதி உருவானது. தூத்துக்குடி தொகுதி இந்த தேர்தலில் 6 முனை போட்டியை சந்திக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா கூட்டணி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.
அ.தி.மு.க.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்து உள்ளார். பல்வேறு நடிகர்களும் வாக்கு சேகரித்து உள்ளனர். வேட்பாளரும் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் இறங்கி உள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. பெரும்பான்மை வாக்கு வங்கியை கொண்டு உள்ளது. அந்த வாக்குகளை சேகரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தி.மு.க.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமியின் மகன் ஜெகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மேலும் வேட்பாளர் ஜெகன் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். தி.மு.க.வில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பா.ஜனதா கூட்டணி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஜோயல் அறிவிக்கப்பட்டு உள்ளார். வக்கீலான இவர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த கூட்டணியில் பா.ஜனதா, ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. தொடர்ந்து வேட்பாளர் ஜோயல் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்த இருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வி.சண்முகம் களம் இறங்கி உள்ளார். இவர் தூத்துக்குடி தொகுதியில் பிரபலமானவர் ஆவார். ஏற்கனவே சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு மயிரிழையில் வெற்றியை நழுவவிட்டவர் ஆவார். தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
தூத்துக்குடி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக ஏ.மோகன்ராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் கட்சியின் மாவட்ட செயலாளராகவும், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவராகவும் உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவுக்கு கம்யூனிஸ்டு கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால் அந்த வாக்குகளை முழுமையாக பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளார்.
ஆம் ஆத்மி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் புஷ்பராயன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார். இவருக்கு ஆதரவாக சமீபத்தில் தூத்துக்குடியில் மறைமாவட்ட பாதிரியார்களின் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் புஷ்பராயனை ஏகமதாக ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இவர் தூத்துக்குடி கடலோர பகுதி மக்களின் ஓட்டுக்களை கணிசமாக பெறுவார் என்று கூறப்படுகிறது.
6 முனைப்போட்டி
இதனால் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக 6 முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. 6 வேட்பாளர்களும் தூத்துக்குடி மக்களுக்கு பரிட்சயமானவர்களாகவும், பலம் வாய்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இதனால் இந்த தொகுதியில் வாக்குகள் சிதறக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த பலத்த போட்டியின் இடையே வெற்றி பெறப்போவது யார் என்பது தேர்தல் முடிவு வெளியானது தெரியவரும்.

செவ்வாய், 25 மார்ச், 2014

ஏரலில் நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரித்தார்.


 தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜிக்கு ஆதரவாக ஏரலில் நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரித்தார்.
கொள்ளையர்களிடம் மக்களை அடகு வைத்த காங்கிரஸ்
ஸ்ரீவைகுண்டத்தில் நடிகர் சிங்கமுத்து பேச்சு
ஸ்ரீவைகுண்டம், மார்ச் 26:
�வெள்ளையர்களிடம் 200 வருடம் அடிமைப்பட்டு கிடந்த நம்மை தனியார் கொள்ளையரிடம் காங்கிரஸ் அடகு வைத்து விட்டது� என ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பிரசாரத்தில் நடிகர் சிங்கமுத்து பேசி னார்.
ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அதிமுக வேட் பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப் போது அவர் பேசியதாவது:
இது ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் இல்லை. இந்தியாவின் தலை விதியை நிர்ணயிக்கப் போகும் தேர்தல். எனவே வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான திட்டங்கள் எதையும் மத்திய அரசு தராமல் ஏமாற்றி வருகிறது.
எனவே தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப் போது தான் தமிழகத்தின் உரிமைகள் நமக்கு கிடைக் கும்.
இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது. தவறான பொருளாதார கொள்கையால் காங்கிரஸ் கட்சி நாட்டை சீரழித்து விட்டது.
வெள்ளையர்களிடம் 200 வருடம் அடிமைப்பட்டு கிடந்த நம்மை தனியார் கொள்ளையரிடம் காங்கிரஸ் அடகு வைத்து விட்டது.
விவசாயத்தை கூட செயற்கை விதைகளால் அளிக்க நினைக்கிறது. எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீவைகுண்டம் பேருராட்சி தலைவர் அருணாசலம், நகர செயலாளர் பால்துரை, மாவட்ட வக்கீல் அணி துணைச் செயலாளர் கருப்பசாமி, ஒன்றிய ஜெ. பேரவை பொருளாளர் அய்யனார், மாவட்ட அவைத் தலைவர் தக்கர் சுப்பையா, பார்வர்டு பிளாக் மாநில இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் உடையார், நகர செயலாளர் அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் ஏரல் காந்திசிலை பஸ் நிறுத்தம் அருகில் நடிகர் சிங்கமுத்து திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய முன்னாள் செய லாளர் ஆறுமுகநயினார், ஏரல் நகர செயலாளர் ஆத்திப்பழம், பெருங்குளம் செயலாளர் செல்லத்துரை, தொழிலதிபர் அழகுராம கிருஷ்ணன், தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீவை குண்டம் யூனியன் முன் னாள் கவுன்சிலர் அழ கேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

ஏரல் அருகே முன்விரோதத்தில் 800 வாழைகள் வெட்டி சாய்ப்பு

ஏரல் அருகே பெருங்குளம் உடையடியூரில் முன்விரோதத்தில் குலை தள்ளிய வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.
ஏரல் அருகே முன்விரோதத்தில்
800 வாழைகள் வெட்டி சாய்ப்பு
ஏரல், மார்ச் 16:
ஏரல் அருகே முன்விரோதத்தில் 800 வாழைகளை வெட்டி சாய்க்கப்பட்டன. இது தொடர்பாக அண்ணன்& தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்.
ஏரல் அருகே பெருங்குளம் உடையடியூரை சேர்ந்தவர் கோபால் மகன் முருகப்பெருமாள் என்ற கண்ணன் (32). விவசாயி. இவர் ஊருக்கு அருகில் உள்ள தனது வயலில் வாழை பயிரிட்டுள்ளார். நேற்று அதிகாலை முருகப்பெருமாள் தனது வாழைத்தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்றார். அப் போது தோட்டத்திற்குள் இருந்து அதே ஊரை சேர்ந்த வத்திரப்பு மகன்கள் கருவேலமுத்து, கருவேல ராஜா இருவரும் முன் விரோதத்தில் 800க்கும் மேற்பட்ட வாழைகளை அரிவாளால் வெட்டி விட்டு முருகப்பெருமா ளுக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இது குறித்து அவர் ஏரல் போலீ சில் புகார் செய்தார். எஸ்.ஐ. மந்திரமூர்த்தி விசா ரணை நடத்தி கருவேலமுத்து, கருவேலராஜா இருவரையும் தேடி வருகிறார். முன் விரோதத்தில் வாழை கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் ஏரல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏரலில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்

ஏரல், மார்ச் 16:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏரல் பகுதியில் உள்ள கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன.
நாடாளுமன்ற தேர் தலை யொட்டி விளம்பர போர்டுகள், சுவரொட்டிகள், கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏரல் வருவாய் ஆய்வாளர் பொன்லெட்சமி தலைமையில் சிறுத்தொண்டநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரி, வாழவல்லான் கிராம நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சுவரொட்டிகள், விளம்பர நோட்டீஸ்கள், பேனர்களை அகற்றினர். ஏரலில் சில கட்சியினர் கட்சி கொடிக்கம்பங்கள் தெரியாதவாறு துணியை சுற்றி மறைத்து இருந்தனர்.
அப்படி மறைத்து வைக்காமல் ஏரல் காந்தி சிலை அருகே இருந்த 7 கட்சி கொடிக் கம்பங்கள் மற்றும் பஸ் நிலையம் அருகிலிருந்த 5 கொடி கம்பங் களை அதிகாரிகள் வெட்டி அகற்றினர்.

வியாழன், 13 மார்ச், 2014

ஏரலிலும்,17-ல் மு.க. ஸ்டாலின் பிரசாரம்

தூத்துக்குடியில் 17-ல் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்யும் இடங்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பி. ஜெகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மார்ச் 17-ம் தேதி பிரசாரம் செய்கிறார்.
இது குறித்து திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.ஜெகனை ஆதரித்து கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மார்ச் 17-ம் தேதி பிரசாரம் செய்கிறார். அன்றையதினம், மாலை 3 மணிக்கு செய்துங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் அவர், தொடர்ந்து 3.30 மணிக்கு ஆழ்வார்திருநகரியில் பேசுகிறார். மாலை 4 மணிக்கு குரும்பூரிலும், 4.30 மணிக்கு திருச்செந்தூரிலும், 5 மணிக்கு காயல்பட்டினத்திலும், 6 மணிக்கு ஆறுமுகனேரியிலும், 6.30 மணிக்கு ஆத்தூரிலும், 7 மணிக்கு ஏரலிலும், 7.30 மணிக்கு சாயர்புரத்திலும், 8 மணிக்கு புதுக்கோட்டையிலும் பிரசாரம் செய்கிறார்.
இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர் செல்வநாயகபுரம் பிரதான சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 10 மார்ச், 2014

ஏரல் அருகே பழையகாயல்&அகரம் பழுதான சாலை சீரமைக்கப்படுமா?

பழையகாயலில் இருந்து அகரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
ஏரல் அருகே
பழையகாயல்&அகரம்
பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
ஏரல், மார்ச் 10:
ஏரல் அருகே பழையகாயல் & அகரம் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் அருகே பழையகாயல் மெயின் ரோட்டில் இருந்து அகரம் ஊருக்கு செல்லும் ரோடானது குண்டும், குழியுமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாரமங்கலம், அகரம் உட்பட பகுதிகளில் இருந்து பழையகாயல் பள்ளிக்கு இரு சக்கர வாகனங்களில் சென்று வரும் மாணவ, மாணவிகள் இந்த ரோட்டில் தட்டு தடுமாறி அவதிப்பட்டு சென்று வருகின்றனர். விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களுக்கு அதிக அளவு இந்த ரோட்டை பயன் படுத்தி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடிக்கு வியாபாரம், தொழில் சம்மந்தமாக சென்று வர வேண்டும் என்றால் அகரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் இவ்வழியாக பழையகாயல் சென்று அங்கிருந்து மக்கள் தூத்துக்குடிக்கு சென்று வருகின்றனர்.
எனவே அகரம் பகுதி மக்களுக்கு முக்கிய ரோடாக உள்ள அகரம்&பழையகாயல் ரோட்டை உடன் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் அகரத்தில் இருந்து மாரமங்கலம் செல்லும் மெயின் ரோடும் குண்டும், குழியுமாக உள் ளது. இந்த ரோட்டையும் சேர்த்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏரலில் அனைத்து கட்சியினருடன் போலீசார் தேர்தல் ஆலோசனை

ஏரல் போலீஸ்  நிலையத்தில் போலீசார் மற் றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு ஸ்ரீவை குண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்துரை தலைமை வகித்தார். ஏரல் எஸ்.ஐ.க்கள் மந்திரமூ�த்தி, சுடலைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக சார்பில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் பிஜி. ரவி, ஏரல் செயலாளர் பார்த்திபன், பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அதிமுக சார்பில் நகர செயலாளர் ஆத்திப்பழம், அழகுப்பிள்ளை, காங் கிரஸ் நகர தலைவர் பாக்கர் அலி, சமக ஸ்ரீவை ஒன்றிய தெற்கு செயலாளர் தேவராஜ், ஏரல் துணைச்செயலாளர் கண்ணன், பாஜ ஒன்றிய பொதுச்செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைத்தலைவர் முத்துமாலை உட்பட சர்வகட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசி யல் கட்சி வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பு இடம், நாள், நேரம் குறித்த விபரங்களை போலீசில் 48 மணி நேரத்திற்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தலில் கடைபிடிக்க கூடிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூறப்பட்டது.

ஏரல் மகளிர் பள்ளி ஆண்டு விழா

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் மோகன், பொருளாளர் வில்சன் வெள்ளையா, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ராபட்சன் சுதந்திரராஜ், திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பொறுப்பு ஞானசெல்விஜோதி வரவேற்றார். பள்ளியில் முதலிடம் பெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஜபினத்து மாஜனா, 10ம் வகுப்பு மாணவிகள் பாத்திமா பஹ்மியா, பிரியங்கா ஆகியோருக்கு சேர்மன் கோயில் அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் தலா 1 பவுன் தங்கம் வழங்கி பேசினார். 12 மற்றும் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு புஷ்பம் ரமேஷ் தலா 2 கிராம் தங்கமும், 3ம் இடம் பெற்ற மாணவிக்கு சவுந்திரபாண்டியன், நானராஜன் ஆகியோர் 1 கிராம் தங்கமும் பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் ராயப்பன், சீனிவாசன் அறக்கட்டளை ஆலோசகர் முருகன், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைவர் தசரதபாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் பாக்கர் அலி, வியாபாரிகள் சங்கம் துணைத் தவைலர் தாணுலிங்கம், எல்.ஏ குரூப்ஸ் சண்முகமுருகன், அரிமா அருணாச்சலம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் முருகேசன் உட்பட பலர் பேசினர். முதுகலை ஆசிரியர் அன்டோ அருள் ரத்தினம் நன்றி கூறினார்.

ஞாயிறு, 9 மார்ச், 2014

அ.தி.மு.க., வேட்பாளரை வைத்து ஆடு - புலி ஆட்டம் ஆடும் கட்சியினர்

தூத்துக்குடி : தூத்துக்குடி அ.தி.மு.க., வேட்பாளரை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடி வரும் மாவட்ட அ.தி.மு.க., வினர். பிரசாரத்தில் விறுவிறுப்பு இல்லை. தூத்துக்குடி அ.தி.மு.க., சார்பில் எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ஜெயசிங் தியாகராஜ நட்டர் ஜி இவர் வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தாலும், கட்சியின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களில் அதிகம் கலந்து கொள்வதில்லை. வெறும் பார்வையாளராக மட்டுமே அ.தி.மு.க., வில் இருந்து வந்துள்ளார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க., நிர்வாகிகள் தரப்பில் கடும் அதிருப்தி நிலவியது. இருந்தும் முதல்வர் "ஜெ' அறிவித்த வேட்பாளர் என்பதால் வேறு வழியின்றி பிரசாரங்களில் ஈடுபட முடிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.,வில், சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள் சார்பில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ.,வுமான செல்லப்பாண்டியன் முக்கிய நபராக இருந்து வந்தார். தற்போது புதியதாக எம்.பி., வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜநட்டர்ஜியை அறிவிப்பு செய்ததுமே நமக்கு கட்சியில் முக்கியத்துவம் போய்விடுமோ, என்பதால் தீவிரமாக பணிகளில் ஈடுபடவில்லை. பெயரளவிற்கு பங்கேற்றால் போதும், என்ற நிலையில் உள்ளார். மாவட்ட செயலாளரும், தற்போதைய அமைச்சருமான சண்முகநாதன் எம்.பி., வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும், இல்லாவிட்டால் தமது அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவி பறி போய்விடுமோ, என்ற அச்சத்தில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.அ.தி.மு.க., வில் அதிருப்தி கோஷ்டியாக ஒரு அணி தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த அணி எப்படியாவது, அ.தி.மு.க., வேட்பாளரை தோற்கடித்து, மாவட்ட செயலாளருளம், அமைச்சருமான சண்முகநாதனை பழி வாங்க வேண்டும், என ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். தூத்துக்குடி எம்.பி., தொகுதி ஆ.தி.மு.க., வேட்பாளர் நட்டர்ஜி இந்த ஆடுபுலி ஆட்டத்தில் சிக்கி தவித்து வருகிறார்.

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில்தீர்மானிக்கும் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள்

தூத்துக்குடி : தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள் என்பதால் அனைத்து கட்சியினரும், சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்களை களம் இறக்க முன் வந்துள்ளன. அ.தி.மு.க., தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பவர் ஜெயசிங் தியாகராஜநட்டர் ஜி,சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார் இனத்தை சேர்ந்தவர். மற்ற கட்சிகளில் போட்டியிடும் நபர்களாக இதே இனத்தை சேர்ந்தவர்களே களம் இறக்கப்படவுள்ளனர். தி.மு.க., தரப்பில் தற்போதைய மாவட்ட செயலாளரான பெரியசாமியின் மகன் ஜெகன் தான் வேட்பாளர் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனது மகனை எப்படியும் ஜெயிக்க வைக்க வேண்டும், என பெரியசாமி களம் இறங்கியுள்ளார். இதில் முக்கிய அ.தி.மு.க., புள்ளிகளை வளைக்கும் வியூகத்தை வகுத்து வருகிறார். ஜெகன் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார் இனத்தை சேர்ந்தவர். பா.ஜ. கட்சி கூட்டணி சார்பில் ம.தி.மு.க., தூத்துக்குடி தொகுதியை குறி வைத்து களம் இறங்கியுள்ளது. இதில் வேட்பாளராக ம.தி.மு.க.,வின் மாவட்ட செயலாளராக இருக்கும் ஜோயலுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் நிலை உள்ளது. ம.தி.மு.க., தரப்பில் மீனவர்கள், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், என வாக்காளர்களை வளைத்து வருகின்றனர். இவரும் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார் இனத்தை சேர்ந்தவர். இந் நிலையில் பா.ஜ., கட்சி தரப்பில் இந்து மதத்தை சார்ந்தவரை போட்டியிட வைக்க வேண்டும், என தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர். அது எடுபடாத நிலை உள்ளது. முக்கிய கட்சிகள் சார்பில் களம் இறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்கள் என்பதால், தூத்துக்குடி தொகுதி வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கப்போகிறவர்கள் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ நாடார்களாக உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலைச்செடிகள் ஆக்கிரமிப்பு தூர்வார வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை



ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆக்கிரமித்து உள்ள அமலைச்செடிகளை அகற்றி, தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அமலைச்செடிகள்
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய பயன்பாட்டுக்கும் ஆதாரமாக தாமிரபரணி ஆறு விளங்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்து உள்ளது. இங்கிருந்து வடகால், தென்கால் மூலம் பாசன வசதிக்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வடகால் மூலம் ஏரல், தூத்துக்குடி பகுதிகளும், தென்கால் மூலம் ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர் பகுதிகளும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணை முழுவதும் ஏராளமான அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் அணையில் அதிகளவு சகதி, மணல் மேடு நிறைந்து உள்ளது. இதனால் அணையில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றின் மூலம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு வந்த தண்ணீரை தேக்க முடியாமல் வீணாக கடலுக்கு செல்கிறது.
அகற்ற கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அணையில் உள்ள அமலைச்செடிகளை அகற்றுவதற்காக தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்தன. ஆனாலும் அவற்றை அகற்றிய சில நாட்களிலேயே மீண்டும் அதே இடத்தில் அமலை செடிகள் தோன்றுகின்றன. வெளிநாடுகளில் மருந்து தெளித்து அமலை செடிகளை அழிக்கின்றனர். ஆனால் அந்த மருந்தானது தண்ணீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது. அதிகமான வெள்ளம் வரும்போது மட்டும் தான் அமலை செடிகளை முழுவதுமாக ஆற்று நீர் அடித்து கடலுக்கு கொண்டு செல்லும். ஆனாலும் அணையில் உள்ள அமலை செடியின் வேரானது மீண்டும் சில நாட்களில் முளைத்து விடுகிறது.
எனவே அணையின் அடியில் உள்ள சகதிகள், மணல் மேடுகளை அகற்றும்போது, அமலை செடியின் வேரும் அகற்றப்படுவதால் அமலை செடிகள் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்காது. எனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள அமலை செடிகள், மணல் மேடுகளை அகற்றி தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவித்தனர்.

சனி, 8 மார்ச், 2014

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு

ஏரல்
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
ஏரல் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:–
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே முதல்– அமைச்சர் ஜெயலலிதா 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்தார். தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு, தீவிர பிரசார சுற்று பயணத்தையும் தொடங்கி விட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். நாம் மக்களிடம் அதை எடுத்து சொல்லி வாக்குகள் கேட்கலாம். நமது வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி கடந்த 30 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறார்.
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை இந்தியாவின் பிரதமராக்க அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் செ.முருகன் (ஸ்ரீவைகுண்டம்), ராஜ்மோகன் (சாத்தான்குளம்), ஷேக் தாவூது (ஆழ்வார்திருநகரி), சிவ சுப்பிரமணியன் (கருங்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, யூனியன் தலைவர்கள் முத்துசெல்வி அழகேசன் (ஸ்ரீவைகுண்டம்), பிச்சையா (கருங்குளம்), விஜயகுமார் (ஆழ்வார்திருநகரி), சுரேஷ்குமார் (சாத்தான்குளம்), பஞ்சாயத்து தலைவர் தசரத பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 6 மார்ச், 2014

தூத்துக்குடி லோக்சபா தொகுதி ஜெயதுரை எம்.பி., கூறியதாவது:

தூத்துக்குடி லோக்சபா தொகுதிக்கு எம்.பி., வளர்ச்சி நிதி 19.05 கோடி ரூபாய்மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அனைத்து தொகைக்கும் எம்.பி., பணிகள் ஒதுக்கீடு செய்துள்ளார். இதுவரையில் 17.53 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.58 கோடி ரூபாய்க்கான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இதுவரையில் 92.14 சதவீதம் அளவிற்கு நிதியை பயன்படுத்தியுள்ளார். 
கல்விக்கு முக்கியத்துவம்: எம்.பி., நிதியில் கல்விக்காக பள்ளி கட்டடங்கள், சுற்றுச்சுவர், குடி நீர் இல்லாத பகுதிகளில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பணியகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான குளங்கள், வரத்துக்கால்வாய்கள் தூர் வாற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012 ம் ஆண்டு ஒதுக்கீடு செய்ய பணிகள் கூட நிறைவு பெறாத நிலையில் பல பணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஜெயதுரை எம்.பி., கூறியதாவது: 
*கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் தொகுதி மக்களை எத்தனை முறை சந்தித்து உள்ளீர்கள்? 
மாதத்தில் மூன்று நாட்கள் தொகுதி மக்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளேன். இதில் காலை 6 மணிக்கு துவங்கினால் இரவு 12 மணி வரை மக்களை சந்தித்துள்ளேன். எத்தனை முறை என்பது கணக்கிட முடியாது. 
*உங்கள் தொகுதி குறித்து பார்லிமென்டில் என்னென்ன பேசியுள்ளீர்கள்? 
*மத்திய அரசு நிதி மூலமாக ஏதேனும் திட்டங்களை உங்கள் தொகுதிக்கு கொண்டுவந்து உள்ளீர்களா? 
செமி மெக்கானிசத்தில் தீப்பெட்டி உற்பத்தி செய்பவர்கள் கலால் வரியால் துன்பப்பட்டனர். அது குறித்து பேசி 10 சதவீத வரியை ஆறு சதவீதமாக குறைத்துள்ளேன். விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேசி நில ஆர்ஜித பணிகள் 586 ஏக்கரில் 380 ஏக்கர் வரை ஆர்ஜிதம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இ.எஸ்.ஐ., மருத்துவமனை குறித்து பேசியதால் தற்போது பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தமிழக அரசு இடம் தாராததால் 
துறைமுக நிர்வாகம் கொடுக்க ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பள்ளி அமையவுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தினை சிங்கப்பூர், சீனாவில் உள்ள ஷாங்காய் துறைமுகம் போல மாற்றம் செய்ய பேசியுள்ளேன். 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு படிப்படியாக பணிகள் நடந்து வருகிறது. கடல் சார் பயிற்சி மையம் குறித்து பேசி பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலை கழிவுகளால் தூத்துக்குடி நகர் மாசுபட்டு, மக்களுக்கு நோய்கள் பரவி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும், தொழிற்சாலைகள் தங்கள் தண்ணீர் தேவைக்கு ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு மேல் எடுப்பதால் 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீருக்கு கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தில் மூலம் எடுக்க வலியுறுத்தியுள்ளேன். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்குதல், திருநெல்வேலி -திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில், திருச்செந்தூர்- பழனி தினசரி ரயில் சேவை, சென்னை, கோவைக்கு லிங் எக்ஸ்பிரஸ் வசதி ஆகியவற்றை பேசி பெற்று தந்துள்ளேன். மதுரையில் இருந்து மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு நேரடி இரட்டை ரயில் பாதை, கிழக்கு கடற்கரை பகுதிகளை இணைக்கும் விதமாக ரயில் பாதை வசதி, மதுரையில் இருந்து நேரடியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை வசதி கேட்கப்பட்டு ஆய்வு பணியில் உள்ளது. 
*எத்தனை மசோதாக்களுக்கு ஆதரவாக, நீங்கள், ஓட்டு அளித்து உள்ளீர்கள்? 
எனக்கு தெரிந்து நிறைய மசோதாக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளேன். கட்சியின் கட்டுப்பாட்டின் படி எனது நிலைப்பாடு இருந்தது. எத்தனை என்பது கணக்கிட்டு சொல்ல முடியவில்லை. 
* கடந்த ஐந்து ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களில், எது மிக முக்கிளானது என கருதுகிறீர்கள்? 
கட்டாய கல்வி சட்டம், கல்வியால் தான் தமிழகம் முன்னேறியுள்ளது. வட மாநிலங்களில் கல்வி அறிவு குறைவு காரணமாக வளர்ச்சியில்லை. உணவு பாதுகாப்பு சட்டம். தமிழகத்தில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. வடமாநிலங்களில் இது போன்ற வழங்கப்படாததால் இந்த சட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. 
* உங்கள் செயல்பாடுகளால், தொகுதி மக்களிடையே, உங்கள் கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டு உள்ளதா? 
ஒரு எம்.பி.,யால் இவ்வளவு தான் செய்ய முடியும், திருப்திகரமாக செயல்பட்டுள்ளதால், நிச்சயம் தி.மு.க., விற்கு நற்பெயர் பெற்று தந்துள்ளேன்.உங்கள் *தொகுதியில், உங்கள் கட்சி, இந்த முறை வெற்றிபெறுமா? 
மீண்டும் நானே நிறுத்தப்பட்டால் வெற்றி உறுதியாகும். கட்சி வேட்பாளர் அறிவிப்பை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? 9–ந் தேதி வாக்குச்சாவடிகளில்சரிபார்த்துக் கொள்ளலாம்



தூத்துக்குடி,
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்று வாக்குச்சாவடிகளில் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–
நடத்தை விதிகள் அமல்
தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொகுதியில் 1,413 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும் 23 வாக்குச்சாவடிகள் அமைக்க ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 2009–ம் ஆண்டு தேர்தலில் 69.24 சதவீதம் வாக்குகளும், 2011–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 74.83 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்த தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து வாக்காளர்களையும் ஓட்டுபோட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக விழிப்புணர்வு சிறப்பு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளார். யாருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் நோட்டா பொத்தானை பயன்படுத்தலாம். வருகிற 9–ந் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் சேர்க்கப்படாதவர்கள் படிவம் 6–ல் தங்களது பெயரை சேர்க்க மனு செய்யலாம்.
பதற்றமான...
பொதுமக்கள் தேர்தல் தொடர்பாக எந்த புகாராக இருந்தாலும் கட்டணமில்லாத டெலிபோன் எண் 1800 4257040 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதே போன்று tut2014நீஷீனீஜீறீணீவீஸீts@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற இணையதள முகவரியிலும் புகார்களை அனுப்பலாம்.
தேர்தலையொட்டி 36 பறக்கும் படைகள் மற்றும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்கு தனியாக 6 குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று பதற்றமான வாக்குச்சாவடிகளாக 233 முதல் 250 வாக்குச்சாவடிகள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
அரசு விழாவுக்கு தடை
வருகிற 29–ந் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது. 5–ந் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். அடுத்த மாதம் 24–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அரசு விழாக்கள், குறைதீர்க்கும் நாள், மனுநீதிநாள் ஆகியவை தேர்தல் பணிகள் முடிவடையும் வரை நடக்காது. அரசியல் கட்சி, வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு விரும்பும் பட்சத்தில் கூட்டம் நடைபெறும் நாள், இடம், நேரம் குறித்த விவரங்களை போலீசுக்கு தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும்.
ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கியுடன் வாகன பிரசாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கியை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தக்கூடாது. அரசியல் கட்சியினரால் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் அனைத்தும் அவர்களாகவே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் அரசு செலவில் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
பணம் எடுத்தல்
வங்கியில் இருந்து தனிநபர் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கும் போது உரிய ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும், வேட்பாளரோ, அவரது பிரதிநிதியோ போஸ்டர்கள் அல்லது மது போன்ற ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பெறுமானம் உள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள், பரிசு பொருட்கள் வாகனத்தில் வைத்து இருந்தால் அந்த வாகனம் கைப்பற்றப்படும். பெரிய அளவில் வழிபாட்டு தலங்களுக்கு வெளியில் அன்னதானம் நடத்தக்கூடாது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.
அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஆறுமுகம், தேர்தல் பிரிவு தாசில்தார் நெல்லை நாயகம் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ம.ரவிகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலான மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி எடுத்தது. இதனால் சாலையோர குளிர்பான கடைகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திடீர் மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை திடீரென வலுத்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது. காலை சுமார் 10 மணி வரை பெய்த மழையால் தூத்துக்குடியில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. பெரும்பாலான இடங்களில் ரோடுகளை மூழ்கடித்தபடி தண்ணீர் கிடக்கிறது. இதில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஏரல், பழையகாயலில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

ஏரலில் நகர திமுக சார் பில் 62 மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடந்தது.
நகர செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். ஒன்றிய திமுக பொறுப் பாளர் ரவி, முன்னாள் பேரூ ராட்சி தலைவர் எட்வர்ட், மின்திட்ட செயலாளர் சக்திவேல், பேரூராட்சி துணை தலைவர் மணிவண் ணன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் திமுக கொடியேற்றி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கி பேசினார்.
யூனியன் கவுன்சிலர் ராயப்பன், சூழவாய்க்கால் பஞ். தலைவர் அனஸ், முன்னாள் பஞ். தலைவர் சாதிக்குல் அமீன், நகர இளைஞரணி அமைப் பாளர் முருகராஜ், மாண வரணி அமைப்பாளர் சங்கர்கண்ணன், துணை அமைப்பாளர் சுதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் பழையகாயலில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அமீர்ஹம்சா தலைமை வகித்து இனிப்பு வழங்கினார். முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மாதவன், கூட்டுறவு சங்கம் தலைவர் ஜெயசங்கர், பஞ். கவுன்சிலர் காயல் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஹென்றி திமுக கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் தொம்மை யா, கடல்தாசன், சுடலை மணி, தர்மர், பொன்னுமுத்து, அப்ருதீன், கன்னிமுத்து, பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாழவல்லானில் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் நலஉதவிகள் வழங்கினார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...