ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஏரலில் நடந்த மழைக் கால சித்த மருத்துவ முகாமில்

ஏரலில் நடந்த மழைக் கால சித்த மருத்துவ முகா மில் பேரூராட்சி தலைவர் பாலகி ருஷ் ணன் பொது மக் க ளுக்கு நில வேம்பு கசாயம் வழங் கி னார்.
ஏரலில் மழைக்கால
சித்த மருத்துவ முகாம்
ஏரல், நவ.29:
ஏரல் ஆரம்ப சுகா தார நிலையம் சார் பில் மழைக் கால சிறப்பு மருத் துவ முகாம் மருத் துவ வளா கத் தில் நடந் தது. ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் மருத் துவ முகாமை துவக்கி வைத் தார். டாக் டர் கிருஷ் ண கு மாரி, சித்தா டாக் டர் சுப் பு லெட் சுமி உட் பட மருத் து வர் கள சிகிச்சை அளித் த னர். நிகழ்ச் சி யில் கவுன் சி லர் சேகு ஜமான் மற் றும் சேது உட் பட பலர் கலந்து கொண் ட னர். மருத் துவ முகா மில் 246 நபர் க ளுக்கு சிகிச்சை அளிக் கப் பட் டது. இந்த முகா மில் கலந்து கொண்ட அனை வ ருக் கும் நில வேம்பு குடி நீர் கசா யம் வழங் கப் பட் டது.

வெள்ளி, 27 நவம்பர், 2015

ஏரல் அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது

ஏரல் அருகே
கோயில் உண்டியலை உடைத்து திருடிய 2 பேர் கைது
ஏரல், நவ.28:
ஏரல் அருகே கோயில் உண் டி யலை உடைத்து பணம் திருட்டு உட் பட 9 வழக் கு க ளில் சம் பந் தப் பட்ட 2 பேரை போலீ சார் கைது செய் த னர்.
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் வாய்க் காங் கரை கீழ் பு றம் உள்ள படுகை சுட லை மாட சுவாமி கோயி லில் 25ம் தேதி இரவு மர்ம நபர் கள் கதவு பூட்டு மற் றும் உண் டி யலை உடைத்து பணத்தை திருடி சென் றுள் ள னர். இது கு றித்து கோயில் தர் ம கர்த்தா பால் துரை ஏரல் போலீ சில் புகார் செய் தார். இதை ய டுத்து போலீ சார் விசா ரணை நடத்தி வந் த னர்.
இந் நி லை யில் நேற் று முன் தி னம் ஏரல் போலீ சுக்கு கிடைத்த ரக சிய தக வ லை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி, சிறப்பு எஸ்.ஐ பண் டா ரம் மற் றும் போலீ சார் ஆழ் வார் தி ரு ந கரி ஆற் றுப் பா லம் சென் ற னர். அங்கு போலீசை கண் ட தும் ஓட முயன்ற 2 பேரை பிடித்து ஏரல் போலீஸ் நிலை யம் கொண்டு வந்து விசா ரணை நடத் தி னர். இதில் மேல ஆழ் வார் தோப்பு மணி கண் டன் (62), ஆழ் வார் தி ரு ந கரி முகை தீன் தெரு கபீர் முகம் மது மகன் காஜா முகை தீன் (19) என் பது தெரிய வந் தது. மேலும் சிறுத் தொண் ட நல் லூர் படுகை சுட லை மாட சுவாமி கோயி லில் உண் டி யலை உடைத்து பணம் திரு டி யது தெரிய வந் தது.
இதை ய டுத்து போலீ சார் மணி கண் டன் மற் றும் காஜா முகை தீன் ஆகிய இரு வ ரை யும் கைது செய் த னர். மேலும் இவர் க ளி டம் உண் டி ய லில் திரு டிய பணம் ரூ.450 மற் றும் 2 மின் மோட் டார், 2 மின் வி சிறி ஆகி ய வற்றை போலீ சார் பறி மு தல் செய் த னர்.
மேலும் இவர் க ளி டம் தொடர்ந்து நடத் திய விசா ர ணை யில் ஸ்ரீவை குண் டம் போலீ சில் 4 திருட்டு வழக் கு க ளும், ஆழ் வார் தி ரு ந கரி, குரும் பூர் போலீஸ் நிலை யத் தில் தலா ஒரு வழக் கும், ரயில்வே போலீ சில் 2 வழக்கு உட் பட 9 வழக் குள் உள் ளது தெரி ய வந் தது. மேலும் 2 பேர் க ளி ட மும் தொடர்ந்து போலீ சார் விசா ரித்து வரு கின் ற னர்.
மணி கண் டன், காஜா முகை தீன்

வியாழன், 26 நவம்பர், 2015

ஏரல் தரைமட்ட பாலத்தை தண்ணீர் அரித்தது

ST
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஏரல் தரைமட்ட பாலத்தை தண்ணீர் அரித்துச் சென்றது.

தரைமட்ட பாலம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். இங்கிருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும்போது, தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து செல்வது வழக்கம். எனவே அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 28-6-2012 அன்று தொடங்கியது.

புதிய பாலத்தின் தெற்கு பகுதியில் வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, 2 ஆண்டுகளுக்கு பிறகு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. புதிய பாலத்தின் இரு புறமும் இணைப்பு சாலைகளில் தார் சாலை அமைப்பது, தடுப்பு சுவர், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

வெள்ளம் அரித்துச் சென்றது

இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை 3 முறை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அதன் அருகில் உள்ள புதிய உயர்மட்ட பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்து தொடங்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் ஓடியது. இதனால் அனைத்து வாகனங்களும் புதிய உயர்மட்ட பாலத்தின் வழியாகவே செல்கின்றன.

நேற்று காலையில் வெள்ளம் குறைந்து, தரைமட்ட தாம்போதி பாலத்தின் வழியாக தண்ணீர் ஓடியது. அப்போது தரைமட்ட பாலத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஓட்டை விழுந்த பகுதி முழுவதையும் வெள்ளம் அரித்துச் சென்றது தெரிய வந்தது. பாலத்தின் அடியில் இருந்த ராட்சத குழாய்கள் வெளியே தெரிந்தன.

அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் கோபால், நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக உதவியாளர்கள் ராமசாமி, கர்ணன் ஆகியோர் வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை பார்வையிட்டனர்.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன், சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே ஏரல் புதிய உயர்மட்ட பாலத்தில் விரைவில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நிரந்தரமாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 

ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூர் வாய்க் காங் கரை கீழ் பு றம் படுகை மாட சுவாமி கோயில்


ஏரல், நவ. 27:
சிறுத் தொண் ட நல்லூர் வாய்க் காங் கரை கீழ் பு றம் படுகை மாட சுவாமி கோயில் உள் ளது. சிறுத் தொண் ட நல் லூர் மேலத் தெரு பால் துரை (50) என் ப வர் இக் கோ யில் தர் ம கர்த் தா வாக உள் ளார். மேலும் இவர் சிறுத் தொண்ட நல் லூர் மெயின் ரோட் டில் டீ கடை வைத்து நடத்தி வருகி றார்.
பால் துரை நேற் று முன் தி னம் இரவு படுகை மாட சு வாமி கோயி லில் பூஜை செய் து விட்டு கோயில் மெயின் கதவை பூட் டி விட்டு வீட் டுக்கு வந் து விட் டார்.
நேற்று காலை வழக் கம் போல் கோயி லுக்கு பூஜை நடத்த சென் ற வர் கோயில் பூட்டு உடைக் கப் பட்டு கிடப் பதை பார்த்து அதிர்ச் சி ய டைந் தார். கோயி லுக்கு உள்ளே சென்று பார்த்த போது உண் டி யல் உடைக் கப் பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருப் பது தெரி ய வந் துள் ளது. இது கு றித்து பால் துரை ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ ராஜா மணி, சிறப்பு எஸ்.ஐ. பண் டா ரம் மற் றும் போலீ சார் விசா ரணை நடத்தி மர்ம நபர் களை தேடி வரு கின் ற னர்.
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஏரல் தாம்போதி பாலம் உடைந்தது

ஏரல் தாம்போதி பாலம் உடைந்தது
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கினால்
ஏரல், நவ. 27:
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் உடைந் தது. இதனால் இணைப்பு சாலை முடி யாத நிலை யில் புதிய உயர் மட்ட பாலத் தி லேயே போக் கு வ ரத்து தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
நெல்லை மற் றும் தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய் த தால் தாமி ர பரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு 23ம் தேதி ஏரல் தாம் போதி ஆற் றுப் பாலம் தண் ணீ ரில் மூழ் கி யது.
இத னால் பழை பாலத் தின் வழி யாக போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டது. புதிய உயர் மட்ட பாலம் வழி யாக மட் டும் தொடர்ந்து போக் கு வரத்து நடை பெற்று வந் தது.
பழைய தாம் போதி பாலத் தில் ஓட்டை விழு வ தும், அதன் பின் அதனை அடைப் ப து மாக இருந்த இடத் தில் இந்த வெள் ளத் தி னால் உடைப்பு ஏற் பட் டுள் ளது.
இத னால் தண் ணீர் ஆற் றில் குறைந் தா லும் பழைய தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து முழு மை யாக துண் டிக் கப் பட் டுள் ளது. மேலும் இவ் வ ழி யாக இரு சக் கர வாக னங் கள் கூட செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது.
இந்த உடைந்த பாலத் தினை வை குண் டம் தாசில் தார் இளங்கோ, ஏரல் ஆர்.ஐ சாமி நா தன், விஏஓ கோபால், ஏரல் பேரூராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், கிராம உதி யா ளர் கள் ராம சாமி, கர் ணன் ஆகி யோர் பார் வை யிட் ட னர்.
பழைய தாம் போதி பாலத் தில் ஏற் பட் டுள்ள உடைப்பை சீர மைத் தும், புதிய மேல் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை வேலையை உடன் துவங்கி விரை வாக முடிக் க வும் அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஏரல் பகுதி வியா பா ரி கள் மற் றும் பொது மக் கள், வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் டுள்ள வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் உடைந்து சேத ம டைந் துள் ளது.

சனி, 21 நவம்பர், 2015

ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.

IST
ஏரல்,
ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
ரூ.16¼ கோடியில் புதிய பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். அங்கிருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்வது வழக்கம்.
தரைமட்ட பாலத்தின் நடுவில் அடிக்கடி ஓட்டை விழுந்து பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த 9–ந்தேதி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தரைமட்ட பாலத்தை மூழ்கடிக்கும் நிலை ஏற்பட்டதால், புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. பின்னர் 3 நாட்களில் வெள்ளம் குறைந்தவுடன் புதிய பாலம் மூடப்பட்டு, மீண்டும் தரைமட்ட பாலத்தில் வாகனங்கள் சென்றன.
3–வது முறையாக...அதேபோன்று கடந்த 15–ந் தேதியும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், காலை முதல் மாலை வரை 2–வது முறையாக புதிய பாலத்தில் வாகனங்கள் சென்றன. பின்னர் வெள்ளம் குறைந்தவுடன் புதிய பாலம் மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஏரல் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால், 3–வது முறையாக புதிய பாலத்தில் வாகனங்கள் சென்றன.
எனவே ஏரல் புதிய உயர்மட்ட பாலத்துக்கு விரைவில் திறப்பு விழா நடத்தி, திறக்க வேண்டும், பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 16 நவம்பர், 2015

ஏரல் தாம்போதி ஆற்றுப்பாலத்தில் அமலைச் செடிகள் அகற்றம்

ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் உள்ள குழாய் க ளில் அடைத்திருந்த அம லைச் செ டி களை நெடுஞ் சா லை துறை அதி கா ரி கள் ஜேசிபி மூலம் அகற் றி னர்.
ஏரல் தாம்போதி ஆற்றுப்பாலத்தில் அமலைச் செடிகள் அகற்றம்
ஏரல், நவ. 16:
நெல்லை மற் றும் தூத் துக் குடி மாவட் டத் தில் நல்ல மழை பெய்து வரு வ தால் தாமி ர ப ரணி ஆற் றில் வெள்ள பெருக்கு ஏற் பட் டுள் ளது. இந்த தண் ணீ ரில் அடித்து வரப் பட்ட முள் செ டி கள் மற் றும் அம லை செ டி கள் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லத் தில் உள்ள குழாய் க ளில் அடைப்பு ஏற் ப டுத் தி யுள் ளது.
இத னால் தாம் போதி பாலம் குழாய் கள் வழி யாக தண் ணீர் செல் வது தடை பட் டது. ஏற் க னவே பாலம் நடு வில் ஓட்டை விழுந் தும், குண் டும் குழி யுமாக பாலம் உள்ள நிலை யில் இந்த அமலை ச்செ டி க ளின் அடைப் பால் தண் ணீர் பாலத் தின் மேல் செல் லும் நிலை ஏற் பட் டால் தாம் போதி பாலம் உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது.
திருச் செந் தூர் நெடுஞ் சா லை துறை உதவி கோட்ட பொறி யா ளர் திரு வெங் க ட ரா ம லிங் கம் தலை மை யில் உதவி கோட்ட பொறி யா ளர் முத் து ராஜ், ஆர்.ஐ சண் மு க நா தன் ஆகி யோர் முன் னி லை யில் ஜேசிபி மூலம் தாம் போதி பாலத் தின் குழாய் க ளில் அடைப்பு ஏற் ப டுத் தி யி ருந்த அம லை செ டி களை அப் பு றப் ப டுத் தி னர். இத னால் பாலத் தின் குழாய் கள் வழி யாக தண் ணீர் தடை யின்றி பாய்ந்து சென் றது.
இந் நி கழ்ச் சி யில் ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், மாநில பய ணி கள் நலச் சங் கம் தலை வர் சாந் த கு மார் கலந்து கொண்டு நெஞ் சாலை துறை அதி கா ரி களு டன் சேர்ந்து அம லைச் செடி களை அப் பு றப் ப டுத்த உத வி னர்.

ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தை திறந்து மூடுவதால் மக்கள் தவிப்பு

தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் ட வெள் ளப் பெருக் கி னால் நேற்று ஏரல் தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து புதிய உயர் மட்ட பாலத் தில் மீண் டும் போக் கு வ ரத்து துவங் கி யது. அடுத்த படம்: வெள்ளம் குறைந்ததால் 3 மணி நேரத்திற்கு பின் மீண்டும் பாலம் அடைக்கப்பட்டது.
ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தை
திறந்து மூடுவதால் மக்கள் தவிப்பு
ஏரல், நவ. 16:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் கட் டப் பட்ட புதிய பாலத்தை திறப் ப தும், மூடு வ து மாக கண் ணா மூச்சு ஆடு வ தால் பொது மக் கள் திண று கின் ற னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற் பட் டது. இத னால் போலீ சார் கடந்த 9ம் தேதி இரவு தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்தை நிறுத் தி னர். தீபா வ ளிக்கு முந் தைய நாளாக இருந் த தால் பொருள் வாங்க ஏரல் பஜா ருக்கு செல்ல முடி யா மல் வட் டார பொது மக் கள் தவித் த னர். இதை ய றிந்த பேரூ ராட்சி நிர் வா கத் தி னர் முழுமை பெறா மல் காட்சி பொரு ளாக நின்ற இணைப்பு சாலை மேடு பள் ளங் களை ஜேசிபி மூலம் சரி செய்து 2 மணி நேரத் தில் புதிய பாலத் தில் போக் கு வ ரத்தை தொடங்கி வைத் த னர். ஆற் றில் தண் ணீர் வற் றிய போதும் வாக னங் கள் அனைத் தும் பழைய தாம் போதி பாலம் வழி யாக செல் லா மல் புதிய பாலம் வழி யாக சென்று வந் தன.
இந் நி லை யில் கான்ட் ராக் டர் புதிய பாலத் தில் இணைப்பு சாலை யில் பள் ளங் களை தோண் டி யும், ரோட் டின் முகப் பில் அடைப் பு களை ஏற் ப டுத் தி யும், புதிய பால போக் கு வ ரத்தை தடை செய் தார். இத னால் மீண் டும் குண் டும், குழி யு மான பழைய தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து நடந் தது.
கடந்த 2 நாட் க ளாக பெய்த பலத்த மழை யி னால் நேற்று முன் தி னம் பழைய தாம் போதி பாலத் தில் ஓட்டை விழுந் தது. ஆற் றில் வேறு வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு தாம் போதி பாலம் மூழ் கும் நிலை உரு வா னது.
நேற்று காலை புதிய பாலத் தில் கான்ட் ராக் டர் ஏற் ப டுத் திய தடை களை அகற்றி புதிய பாலத் தில் இரண் டாம் முறை யாக போக் கு வ ரத்து தொடங் கப் பட் டது. இத னால் வட் டார பொது மக் கள், வியா பா ரி கள் மகிழ்ச்சி அடைந் த னர். காலை 11.30 மணி மு தல் மதி யம் 2.30 மணி வரை புதிய பாலத் தில் போக் கு வ ரத் திற்கு நடந்த நிலை யில் ஆற் றில் தண் ணீர் குறைந் த தால் மீண் டும் புதிய பாலம் மூடப் பட் டது. தாம் போதி பாலத் தில் வாக னங் கள் விடப் பட் டன.
சாலைப் ப ணியை மிக வும் மந் த மாக நடத்தி மழைக் கா லத் தில் தடை க ளை யும் ஏற் ப டுத்தி வட் டார போக் கு வ ரத்தை முடக் கு வ தால் பொது மக் கள் அதி ருப்தி அடைந் துள் ள னர்.
இணைப் புச் சாலை வேலையை முடித்து விரை வில் போக் கு வ ரத்தை நிரந் த ர மாக புதிய பாலத் தில் துவங்க வேண் டு கோள் விடுத் துள் ள னர்.
தாம்போதி பாலம் மூழ்கும் அபாயம்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக சாயர்புரம் பகுதியில் 2 குளங்கள் உடைந்தன

T
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாயர்புரம் பகுதியில் 2 குளங்கள் உடைந்தன.
பலத்த மழைவங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி கிடக்கிறது. இந்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 74 மில்லி மீட்டர் மழை பெய்தது.
2 குளங்கள் உடைந்ததுசாயர்புரம் பகுதியில் உள்ள நட்டாத்தி, கட்டாலங்குளம், திருப்பணி செட்டிக்குளம், பேய்குளம், ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் அதிகமாக வந்து குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதில் திருப்பணிசெட்டிகுளம் புனைக்குளம் ஆகிய 2 குளங்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நட்டாத்தி மெயின் ரோட்டில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் சில மணி நேரங்கள் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேய்குளத்திலிருந்து சாயர்புரம் வழியாக பெருங்குளம் செல்லும் சாலை குண்டு குழியாக கிடக்கிறது. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழை விவரம்தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:–
கோவில்பட்டி– 22
ஓட்டப்பிடாரம்– 74
சாத்தான்குளம்– 31
ஸ்ரீவைகுண்டம்– 70.20
தூத்துக்குடி– 30.30
திருச்செந்தூர்– 60.20
விளாத்திகுளம்– 29.20
கயத்தாறு– 39
காயல்பட்டினம்– 52
குலசேகரன்பட்டினம்– 52.50
கீழஅரசடி– 68
எட்டயபுரம்– 21
கடம்பூர்– 42
மணியாச்சி– 72
வேடநத்தம்– 67
சூரங்குடி– 28
காடல்குடி– 20
வைப்பார்– 49
கழுகுமலை– 20

ஏரல் அருகே பெருங் கு ளம்-சாயர் பு ரம் மெயின் ரோட் டில் நட்டாத்தி சாலை மழைநீரில் மூழ்கியது

நட்டாத்தி சாலை மழைநீரில் மூழ்கியது
ஏரல், நவ. 15:
ஏரல் அருகே பெருங் கு ளம்-சாயர் பு ரம் மெயின் ரோட் டில் நட் டாத் தி யில் மழை தண் ணீர் ரோட் டில் பெருக் கெ டுத்து ஓடு வ தால் வாகன ஓட் டி கள் சிர மப் பட்டு சென்று வரு கின் ற னர்.
சாயர் பு ரம் மற் றும் சுற்று வட் டார பகு தி க ளில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை யி னால் பெருங் கு ளம் -சா யர் புரம் மெயின் ரோட் டில் நட் டாத் தி யில் தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது. இத னால் இப் ப கு தி யில் ரோடு குண் டும், குழி யு மாக ஏற் பட் டது. மேலும் ரோட்டு கரை யோ ரத் தில் மண் அரிப்பு ஏற் பட்டு இருந் தது.
இத னால் வாகன ஓட் டி கள் மிக வும் சிர மப் பட்டு வந் த னர். இது கு றித்து தின க ரன் பத் தி ரிக் கை யில் 12ம் தேதி செய்தி படத் து டன் வெளி யா னது. இதை ய டுத்து அன் றைய தினமே _வை குண் டம் நெடுஞ் சாலை துறை உட் கோட்ட அதி கா ரி கள் இந்த ரோட்டை பார் வை யிட்டு குண் டும், குழி யு மான உள்ள இடங் களை தற் கா லி க மாக சீர மைத் த னர்.
இந் நி லை யில் நேற் று முன் தி னம் விடிய, விடிய பெய்த மழை யி னால் நட் டாத்தி ரோட் டில் மீண் டும் மழை தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது. இத னால் தார் ரோடு இருந்த இடம் தெரி யா மல் இப் ப குதி ரோடு முழு வ தும் தண் ணீர் நிறைந்து காணப் பட் ட தால் நேற்று முன் தி னம் மாலை இந்த வழி யாக பஸ் போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டது. இத னால் ஏர லில் இருந்து பெருங் கு ளம், பண் டா ர விளை, நட் டாத்தி வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை மற் றும் தூத் துக் கு டிக்கு சென்ற பஸ் கள் நிறுத் தப் பட் டன.
இந்த பஸ் கள் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், மொட் டத் தா தன் விளை, சுப் பி ர ம ணி ய பு ரம் மற் றும் சாயர் பு ரம் வழி யாக தூத் துக் கு டிக்கு விடப் பட் டன. இத னால் ஏர லில் இருந்து பண் டா ர விளை, பண் ணை விளை மற் றும் நட் டாத்தி பகு தி க ளுக்கு ஏர லில் இருந்து இரவு நேரத் தில் மக் கள் மற் றும் கடை ஊழி யர் கள் திரும்ப வீடு க ளுக்கு செல்ல முடி யா மல் சிர மப் பட் ட னர். இந் நி லை யில் நேற்று (14ம் தேதி) மழை இப் ப கு தி யில் குறைந் த தால் ஓர ள வுக்கு தண் ணீர் நட் டாத்தி ரோட் டில் குறைந் த தால் காலை முதல் பெருங் கு ளம்-சாயர் பு ரம் ரோட் டில் மீண் டும் பஸ் போக் கு வ ரத்து துவங் கி யது. ஆனால் சிறிய வாக னங் கள் தண் ணீ ரில் செல்ல முடி யா மல் சிர மப் பட் ட னர். மேலும் இப் ப கு தி யில் ரோடு மீண் டும் அரிப்பு ஏற் பட்டு குண் டும், குழி யு மாக ஏற் பட் டுள் ளது.
பெருங் கு ளம்-சாயர் பு ரம் ரோட் டில் மழைக் கா லத் தில் தண் ணீர் ரோட் டில் பெருக் கெ டுத்து ஓடு வ தும், இத னால் போக் கு வ ரத்து இப் ப கு தி யில் அடிக் கடி பாதிக் கப் ப டு வ தும் வழக் காக உள் ளது. மேலும் இத னால் இப் ப கு தி யில் ரோடும் அடிக் கடி சேதம டைந்து வரு கி றது.
எனவே அதி கா ரி கள் இந்த ரோட்டை பார் வை யிட்டு நிரந் தர தீர் வாக இப் ப கு தி யில் பாலம் அமைத்து தண் ணீர் ரோட்டை கடந்து செல் லா த வாறு தண் ணீரை கால் வாய் கள் வழி யாக செல் லு மாறு ஏற் பாடு செய் தால் தான் இதற்கு நிரந் தர தீர்வு கிடைக் கும் என இப் ப குதி மக் கள் கூறு கின் ற னர்.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
பெருங் கு ளம்-சாயர் பு ரம் மெயின் ரோட்டில் நட் டாத் தி யில் இருந்த இடம் தெரியாமல் தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது.

ஏரல் தாமி ர ப ரணி ஆற்று தாம் போதி பாலம் நடு வில் மீண் டும் ஓட்டை விழுந் துள் ள தால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது.

தாம்போதி பாலத்தில் மீண்டும் ஓட்டையால் விபத்து அபாயம்
ஏரல் தாமிரபரணி ஆற்றில் உள்ள
ஏரல், நவ. 15:
ஏரல் தாமி ர ப ரணி ஆற்று தாம் போதி பாலம் நடு வில் மீண் டும் ஓட்டை விழுந் துள் ள தால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது.
ஏரல் தாமி ர ப ரணி தாம் போதி ஆற் றுப் பா லம் மிக பழ மை யானது. மழைக் காலத் தில் தாமி ர ப ரணியில் வெள் ளப் பெ ருக்கு ஏற் ப டும் போதெல் லாம் இந்த பாலம் மூழ்கி ஏரல்-குரும் பூர் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். இத னால் ஏரல் பகு தி யில் வியா பா ரம் பாதிக் கப் ப டு வ தோடு நூற் றுக் கும் மேற் பட்ட கிராம மக் க ளும் பாதிக் கப் படுகின் ற னர்.
கடந்த ஆண்டு தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள்ள பெருக் கின் போது பாலத் தில் நடு வில் உடைந்து பாலம் சேதம டைந்து. இத னால் இப் ப கு தி யில் போக் கு வ ரத்து முற் றி லும் ஒரு மாத மாக நிறுத் தப் பட்டு பாலம் சீர மைக் கப் பட் டது. முறை யாக சீர மைக் கப் ப டா த தால் அந்த இடத் தில் ஓட்டை விழு வ தும், பின் அதி கா ரி கள் சீர மைப் ப தும் என தொடர்ந்து நடை பெற்று வரு கி றது. இதே போல் அந்த இடத் தில் 10க்கும் மேற் பட்ட இடங் க ளில் ஓட்டை விழுந்து தற் கா லி க மாக சரி செய் யப் பட்டு வந் துள் ளது.
இந் நி லை யில் கடந்த வாரம் பாலத் தின் நடு வில் இப் ப கு தி யில் மிக பெரிய ஓட்டை விழுந் தது. இந்த பாலத் தில் மின் வி ளக்கு இல் லா த தால் இரவு நேரங் க ளில் இரு சக் கர வாக னத் தில் சென்று வரு ப வர் கள் இந்த ஓட் டை யில் விழுந்து காய ம டைந்து வந் த னர். இதை ய டுத்து பாலத் தில் ஏற் பட் டுள்ள ஓட் டையை தற் கா லி க மாக சீர மைத் த னர். இந் நி லை யில் நேற்று இதன் அரு கி லேயே மற் றொரு ஓட்டை விழுந் துள் ளது. இத னால் பழைய பாலத் தில் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது. தாமி ர ப ரணி ஆற் றி லும் தண் ணீர் வரத்து அதி க ரித்து வரு வ தால் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் 2012ம் ஆண்டு துவங் கப் பட்ட புதிய உயர் மட்ட பாலம் கட்டி முடிக் கப் பட் டும் இன் னும் இணைப்பு சாலை வேலை கள் முழுமை பெறாத நிலை யில் உள் ளது. இந் நி லை யில் பழைய தாம் போதி பால மும் அடிக் கடி ஓட்டை விழுந்து பொது மக் கள் மற் றும் வாகன ஓட் டி களை பய மு றுத்தி வரு கி றது. எனவே அதி கா ரி கள் பழைய பாலத் தில் ஏற் பட் டுள்ள இந்த ஓட் டையை சீர மைத்து, புதிய பாலத் தின் இணைப்பு சாலை வேலை களை யும் விரைந்து முடித் திட நட வ டிக்கை எடுக்க இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஏரல் புதிய மேல் மட்ட ஆற் றுப் பா லத் தில் திடீ ரென போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டுள் ள தால் வாகன ஓட் டி கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.

ஏரல் புதிய உயர் மட்ட பாலத் தில் சென் று வந்த போக் கு வ ரத்தை நிறுத் து வ தற் காக பள் ளம் தோண்டி, தடுப்புக்கள் வைத்து அடைக் கப் பட் டுள் ளது.
ஏரல், நவ. 14:
ஏரல் புதிய மேல் மட்ட ஆற் றுப் பா லத் தில் திடீ ரென போக் கு வ ரத்து நிறுத் தப் பட் டுள் ள தால் வாகன ஓட் டி கள் பாதிக் கப் பட் டுள் ள னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கி னால் கடந்த 9ம் தேதி இரவு ஏரல் தாம் போதி பழைய ஆற் றுப் பா லம் மூழ் கும் நிலை ஏற் பட் டது. ஏற் க னவே இந்த பாலத் தின் நடு வில் பல இடங் க ளில் ஓட்டை விழுந்து, பாலம் குண் டும், குழி யு மாக இருந்து வந் த தால் பாது காப்பை கருதி போலீ சார் தாம் போதி பாலம் வழி யாக செல் லும் போக் கு வ ரத்தை நிறுத் தி னர். இத னால் தீபா வளி பண் டி கையை முன் னிட்டு வெளி யூர் க ளில் இருந்து ஏர லுக்கு ஜவுளி, பட் டாசு உட் பட பொருட் கள் வாங்க வந் த வர் கள் ஊருக்கு செல்ல முடி யா மல் ஏரல் ஆற் றுப் பா லம் அரு கில் வந்து குவிந் த னர்.
இத னால் ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன் நட வ டிக் கை யால் ஜேசிபி கொண் டு வ ரப் பட்டு பழைய பாலம் அரு கில் கட்டி முடிக் கப் பட்டு இணைப்பு சாலை முழுமை பெறா மல் காட்சி பொரு ளாக இருந்து வந்த புதிய உயர் மட்ட பாலத் தில் இணைப்பு சாலை யில் இருந்த பள் ளங் களை சீர மைத்து போக் கு வ ரத்து நடக்க ஏற் பாடு செய் தார். இத னால் புதிய உயர் மட்ட பாலத் தில் முதன் மு த லாக 9ம் தேதி இரவு முதல் போக் கு வ ரத்து துவங் கப் பட் டது.
இந் நி லை யில் தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு குறைந்த போதி லும் வாகன அனைத் தும் பழைய பாலம் வழி யாக செல் லா மல் புதிய உயர் மட்ட பாலம் வழி யா கத் தான் சென்று வந் த ன. இந் நி லை யில் பாலம் காண்ட் ராக் டர் புதிய பாலத் தில் இணைப்பு சாலை யில் மீண் டும் பள் ளங் களை தோண்டி வாக னங் கள் செல்ல முடி யாத நிலையை ஏற் ப டுத்தி, ரோட் டின் முகப் பி லும் அடைப் பு களை ஏற் ப டுத் தி யுள் ளார். இத னால் மீண் டும் வாக னங் கள் புதிய பாலம் வழி யாக செல்ல முடி யா மல் 4 நாட் க ளுக்கு பின் மீண் டும் குண் டும், குழி யு மான பழைய தாம் போதி ஆற் றுப் பா லத் தில் சென்று வரு கி றது.
ஏற் க னவே பழைய தாம் போதி பாலத் தின் நடு வில் ஓட்டை விழுந் துள் ளது. தற் பொ ழுது மழை தொடர்ந்து பெய் து வ ரு வ தால் ஆற் றில் வெள் ளம் பெருக்கு ஏற் பட் டால் இந்த தாம் போதி பாலம் உடைந்து போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. புதிய மேல் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை வேலை க ளும் விரைந்து முடித் த பா டில்லை. தற் போ ழுது புதிய பாலத் தில் சென் று வந்த போக் கு வ ரத் தை யும் நிறுத் தி யுள் ள னர். எனவே சம் மந் தப் பட்ட அதி கா ரி கள் இணைப்பு சாலை வேலை களை உடன் துவங்கி, விரை வாக முடித்து புதிய பாலத் தில் மீண் டும் போக் கு வ ரத்தை துவங் கிட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் புதிய மேல்மட்ட ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
வாகன ஓட்டிகள் பாதிப்பு

வியாழன், 12 நவம்பர், 2015

ஏரல்-முக்காணி மெயின் ரோட்டில் முட்செடிகள் ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம்

ஏரல்-முக்காணி மெயின் ரோட்டில்
முட்செடிகள் ஆக்கிரமிப்பால்
விபத்து ஏற்படும் அபாயம்
ஏரல், நவ. 13:
ஏர லில் இருந்து முக் காணி செல் லும் மெயின் ரோட் டில் முட் செ டி கள் ஆக் கி ர மிப் பால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது. எனவே முட் செ டி களை அகற்ற வேண் டு மென வாகன ஓட் டி கள், மாணவ, மாண வி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
ஏர லில் இருந்து முக் காணி செல் லும் மெயின் ரோட் டில் தின சரி ஆயி ரக் க ணக் கான வாக னங் கள் சென்று வரு கின் றன. மேலும், ஏரல் மற் றும் சுற்று வட் டா ரங் க ளில் உள்ள நூற் றுக் கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து தூத் துக் குடி பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு சென்று வரும் மாணவ, மாண வி க ளும் இந்த ரோட்டை அதிக அளவு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
இந்த ரோட் டின் கரை யோ ரப் பகு தி யில் அதிக அளவு செங் கல் சூளை கள் இருப் ப தால் தொழி லா ளர் க ளும் இந்த ரோட் டில் சென்று வரு கின் ற னர். ஏரல், வாழ வல் லான், உம ரிக் காடு பகு தி க ளில் இந்த ரோட்டை ஒட் டி ய வாறு வாழை, வெற் றிலை கொடிக் கால் விவ சா யம் நடந்து வரு வ தால் விவ சா யி க ளும் உரம் கொண்டு செல் வ தற் கும், வாழை தார் களை வெட்டி எடுத்து செல் ல வும் இந்த ரோட்டை பயன் ப டுத்தி வரு கின் ற னர். இத னால் இந்த ரோட் டில் அதிக அளவு போக் கு வ ரத்து நெருக் கடி உள் ளது.
ஏரல்-முக் காணி மெயின் ரோட் டில் புது ம னை யில் இருந்து வாழ வல் லான் குடி நீர் வடி கால் வாரிய அலு வ ல கம் மேல் பக் கம் வரை ரோட் டின் இரு பக் க மும் அடர்ந்து வளர்ந் துள்ள முட் செ டி கள் ரோட்டை ஆக் கி ர மிப்பு செய் துள் ளன. இத னால் வாகன ஓட் டி கள் வளைவு பாதை யில் செல் லும் போது எதிரே வரும் வாக னம் தெரி யா மல் விபத் துக் குள் ளாகி வரு கின் ற னர்.
இரு வாக னங் கள் ஒரே நேரத் தில் செல் லும் அள விற்கு இருந்த ரோடு தற் போது எதிரே வரும் வாக னத் திற்கு கூட வழி விட முடி யாத நிலை யில் முட் செ டி கள் ஆக் கி ர மிப்பு உள் ளது. இத னால் பஸ் சில் பய ணம் செய் யும் ஜன் னல் ஓர பய ணி க ளின் சட்டை கிழிந்து காயம் பட்டு வரு கின் ற னர். மேலும் பைக் கில் செல் ப வர் க ளின் கண் களை குத்தி கிழித் து வி டு கின் றன. எனவே ஏரல்-முக் காணி மெயின் ரோட் டில் ஆக் கி ர மிப்பு செய் துள்ள முட் செ டி களை வெட்டி அப் பு றப் ப டுத்த அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வாகன ஓட் டி கள், விவ சா யி கள், மாணவ, மாண வி கள் மற் றும் தொழி லா ளர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏர லில் இருந்து முக் காணி செல் லும் மெயின் ரோட்டில் முட் செ டி கள் ஆக் கி ர மித்துள்ளன.

ஏரல், பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
ஏரல், நவ. 13:
ஏரல் பர தர் வடக்கு தெருவை சேர்ந் த வர் கார்த் தி கே யன் (45). ஏரல் - திருச் செந் தூர் ரோட் டில் மளிகை கடை வைத் துள் ளார். மேலும் இதன் அரு கில் உள்ள ஒரு கட் டி டத் தில் பில் டிங் கன்ஸ்ட் ரக்க்ஷன் ஆபீஸ் வைத்து நடத்தி வரு கி றார். இந்த ஆபீஸ் அரு கில் 10ம் தேதி மீன் மார்க் கெட் தெருவை சேர்ந்த செல் லப்பா மகன் ஆறு மு கம், அவ ரது தம்பி சிவா ஆகிய இரு வ ரும் தீபா வளி பட் டாசு வெடித் துள் ளர்.
இதைப் பார்த்த கார்த் தி கே யன், ‘பழைய பில டிங் காக இருப் ப தால் இந்த இடத் தில் வெடி வெடிக் கா தீர் கள்’ என கூறி ய தால் அவர் க ளுக் குள் வாக் கு வா தம் ஏற் பட் டது. இந் நி லை யில் அன்று மாலை கார்த் தி கே யன் வீட் டில் இருந் த போது அங்கு வந்த ஆறு மு கம் அவ தூ றாக பேசி, கையில் வைத் தி ருந்த அரி வா ளால் வெட் டி ய போது கார்த் தி கே ய னின் மகன் மணி கண் டன் (14) இதனை தடுக்க முயற் சித் தார்.
இதில் மணி கண் ட னின் கையில் அரி வாள் வெட்டு விழுந் தது. மணி கண் டன் தூத் துக் குடி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டார். மணி கண் டன் 9ம் வகுப்பு படித்து வரு வது குறிப் பி டத் தக் கது. இது கு றித்து மணி கண் ட னின் தந்தை கார்த் தி கே யன் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து சிறப்பு எஸ்.ஐ பண் டா ரம் விசா ரணை நடத்தி ஆறு மு கத்தை தேடி வரு கி றார்.
ஏரலில் தந்தையை காப்பாற்ற சென்ற

ஏரல் புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது

IST
ஏரல்,
ஏரல் புதிய உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
புதிய பாலம்தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, தரைமட்ட பாலத்தை மூழ்கடித்து செல்வதால், வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும். எனவே அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
புதிய உயர்மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்க கடந்த ஆண்டு வனத்துறையினரிடம் அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றது. தற்போது புதிய உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து தொடக்கம்கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரவில் ஏரல் தரைமட்ட பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதன் அருகில் உள்ள புதிய உயர்மட்ட பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்றன.
தற்போது பஸ், லாரி, கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் புதிய உயர்மட்ட பாலத்தின் வழியாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய உயர்மட்ட பாலத்தில் மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

பெருங்குளம்-சாயர்புரம் சாலை சீரமைக்கப்படுமா? மழையால் சேமடைந்த

ஏரல், நவ. 12:
ஏரல் அருகே மழை யால் சேத ம டைந்த பெருங் கு ளம்-சாயர் பு ரம் சாலையை சீர மைக்க கிராம மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
ஏரல் அருகே பெருங் கு ளத் தில் இருந்து சாயர் பு ரம் வரை உள்ள தார் ரோடு சமீ பத் தில் பெய்த பலத்த மழை யில் ரோடு சேத ம டைந்து குண் டும் குழி யு மாக ஏற் பட் டுள் ளது. இந்த ரோட் டில் பண் டா ர விளை, நட் டாத்தி மற் றும் சுப் பி ர ம ணி ய பு ரத் தில் ரோட் டில் மழை தண் ணீர் தேங்கி படு கு ழி கள் ஏற் பட் டுள் ளன. மேலும் நட் டாத்தி பஸ் ஸ்டாப் அரு கில் மழை தண் ணீர் ரோட் டில் தென் ப கு தி யில் இருந்து பெருக் கெ டுத்து ரோட்டை கடந்து வட பக் க மாக தண் ணீர் சென் ற தால் பல இடங் க ளில் ரோட் டில் அரிப்பு ஏற் பட் டுள் ளது. இத னால் ரோட் டில் வாக னங் கள் நட் டாத் தி யில் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. ரோட் டின் ஓரத் தில் மண அரிப்பு ஏற் பட் டுள் ள தால் வாக னங் கள் எதிர் வரும் மற் றொரு வாக னத் திற்கு வழி விட ரோட் டின் ஓரத் திற்கு சென் றால் இந்த மண் அரிப் பில் சிக்கி விபத்து ஏற் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது. பெருங் கு ளத் தில் இருந்து பண் டா ர விளை, பண் ணை விளை, நட் டாத்தி, சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக சாயர் பு ரம் பள்ளி மற் றும் கல் லூ ரி க ளுக்கு நூற் றுக் கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் இந்த ரோட் டின் வழி யாக சென்று வரு கின் ற னர். மேலும் ஏர லில் இருந்து பெருங் கு ளம் வழி யாக புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு அதிக அளவு போக் கு வ ரத்து இப் பா தை யில் உள் ள தால் மழை யால் சேதா ர ம டைந்த இந்த ரோட்டை விரை வாக உடன் போட அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் மற் றும் மாணவ, மாண வி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஏரல் தாம் போதி பாலம் மூழ்கும் அபாயம் ஏற் பட்ட தால் புதிய பாலத் தில் அவசரகதி யில் போக்கு வரத்து தொடங்கியது. தாம்போதி பாலம் மூழ்கும் அபாயம்

ரல் தாம் போதி பாலம் மூழ் கும் அபா யம் ஏற் பட் ட தால் புதிய பாலத் தில் அவ சர கதி யில் போக் கு வ ரத்து தொடங்கியது.
தாம்போதி பாலம் மூழ்கும் அபாயம்
ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தில் அவசரமாக போக்குவரத்து தொடக்கம்
ஏரல், நவ. 12:
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள்ளத் தால் ஏரல் தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற்பட் டது. இத னால் புதிய பாலத் தில் அவ சர க தி யில் போக் கு வரத்து தொடங் கப் பட் டது.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் முக் கிய வணிக நக ர மாக உள் ளது. இங்கு வியா பா ரம், தொழில் சம் மந் த மாக தினசரி நூற்றுக் கும் மேற் பட்ட கிரா மங் க ளில் இருந்து பல ஆயி ரக் க ணக் கான மக்கள் ஏரல் வந்து செல் கின் ற னர். இவர் க ளில் பெரும் பா லோர் தாமி ர ப ரணி தாம் போதி பாலத் தையை போக் கு வரத் துக்கு பயன் படுத் தி னர்.
மழைக் கா லத் தில் ஆற் றில் வெள் ளம் ஏற் ப டும் போது இந்த பாலம் தண் ணீ ரில் மூழ்கி ஏரல்-குரும் பூர், தென் தி ருப் பேரை போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும். இத னால் பொது மக் கள் பாதிக் கப் பட்டு வந் த னர். இதை யடுத்து தாம் போதி பாலம் அரு கில் புதிய உயர் மட்ட பாலம் கட் டப் பட் டது. ஆனால், தென் ப கு தி யில் இணைப்பு சாலை அமைப் ப தற்கு வனத் துறை அனு மதி அளிக் கா த தால் ஒரு வரு டத் திற்கு மேல் பால வேலை கிடப் பில் போடப் பட் டது. இந் நி லை யில் இந்த ஆண்டு வனத் துறை அனு மதி அளித் த தால் இணைப்பு சாலைக் கான பணி துவங் கி யது. ஆனால், மரங் களை வெட்டி இணைப்பு சாலை அமைக் கும் பணி மந் த மாக நடை பெற் றது.
இந் நி லை யில் தாம் போதி பாலத் தின் நடு வில் ஓட்டை விழுந் த தால் வாகன போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டது. அதே நேரத் தில் பரு வ ம ழை யின் காரண மாக தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு கடந்த 9ம் தேதி இரவு தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற் பட் டது.இத னால் பாது காப்பை கருதி போலீ சார் இரவு 7 மணி அள வில் போக் கு வ ரத்தை நிறுத் தி னர். தீபா வளி நேரத் தில் போக் கு வ ரத்து தடை செய் யப் பட் ட தால் பொது மக் கள் பாதிக் கப் பட் ட னர்.
இதை ய டுத்து ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், ஜேசிபி மூலம் புதிய பாலத் திற்கு இணைப்பு சாலை யில் இருந்த பள் ளங் களை நிரப்பி போக் கு வ ரத்து நடக்க ஏற் பாடு செய் தார்.
இதை ய டுத்து புதிய பாலத் தில் அவ ச ர மாக பஸ் போக் கு வ ரத்து துவங் கப் பட் டது. இத னால் பொது மக் கள், வாகன ஓட் டி கள் மகிழ்ச்சி அடைந் த னர்.
நேற்று தாமி ர பரணி ஆற் றில் வெள் ளம் குறைந் தா லும் பஸ் மற் றும் வாக னங் கள் பழைய தாம் போதி வழி யாக செல்லா மல் புதிய பாலத் தின் வழி யாக சென்று வந் தது.

செவ்வாய், 10 நவம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் 41 குளங்கள் நிரம்பின ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தம்

IST
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 41 குளங்கள் நிரம்பி உள்ளன. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது.
பலத்த மழைதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மழை பெய்ய வில்லை. அவ்வப்போது வெயில் அடித்தது. நேற்று முன்தினம் தூத்துக்குடியில் மட்டும் 12.20 மில்லி மீட்டர் மழை பெய்து இருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் சராசரியாக 383 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதில் 303 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. நவம்பர் மாதம் சராசரியாக 185 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இதுவரை 111 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இந்த ஆண்டு கூடுதல் மழை நமது மாவட்டத்துக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஓட்டப்பிடாரம், கயத்தாறு பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
41 குளங்கள்தாமிரபரணி நேரடி பாசனத்தில் உள்ள 53 குளங்களில் 28 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 குளங்கள் 75 சதவீதமும், 23 குளங்கள் 75 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. கோரம்பள்ளம் வடிநில கோட்டத்தில் உள்ள 54 குளங்களும் 75 சதவீதத்துக்கு குறைவாகவே நிரம்பி இருக்கிறது. வைப்பாறு வடிநில கோட்டத்தில் உள்ள 29 குளங்களில் 6 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 2 குளங்கள் 75 சதவீதமும், 21 குளங்கள் 75 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன. 403 பஞ்சாயத்து குளங்களில் 7 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. 132 குளங்கள் 75 சதவீதம் நிரம்பி இருக்கின்றன. இந்த மழை காரணமாக இதுவரை ஒருவர் இறந்து உள்ளார். 15 கால்நடைகள் இறந்து உள்ளன. 29 வீடுகள் முழுமையாகவும், 66 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்து உள்ளன.
ஸ்ரீவைகுண்டம் அணைதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலான இடங்களில் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ததால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் 7–வது அணைக்கட்டான மருதூர் தடுப்பணையின் மேல்பகுதியில் தண்ணீர் தாண்டி விழுந்து பாய்கிறது.
இதேபோன்று தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையின் மதகுகளையும் தாண்டி விழுந்து தண்ணீர் செல்கிறது. மருதூர் மேலக்காலில் 1,000 கன அடியும், கீழ காலில் 400 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகியவற்றில் முறையே தலா 900 கன அடியும், சடையனேரி கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அணையில் தூர்வாரும் பணி கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்கு காரசேரி குளம் நிரம்பியது. குளத்தின் கரையானது சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் உடையும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தின் வழியாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஆத்தூர், புன்னக்காயல் வழியாக சென்று கடலில் சங்கமிக்கிறது.

திங்கள், 9 நவம்பர், 2015

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை மழைநீர் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார்

T
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஆழ்வார்திருநகரியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை கலெக்டர் ம.ரவிகுமார் பார்வையிட்டார்.
பலத்த மழைதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலான இடங்களில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல், தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், உடன்குடி, குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், தட்டார்மடம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. பின்னர் காலையிலும் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
திருச்செந்தூர் கோவில் பஸ் நிலையத்தில் குளம்போன்று தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம்புதூரில் உள்ள கிருஷ்ணன்குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் சேரகுளம், வெட்டிகுளம், அரசகுளத்திலும் தண்ணீர் நிரம்பி வருகிறது.
ஆத்தூர், ஏரல் பகுதிகளில் வாழை, வெற்றிலை கொடிக்காலில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆறுமுகநேரியில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. நாசரேத், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதிகாலையில் பரவலான மழை பெய்தது. கயத்தாறு, கழுகுமலை, விளாத்திகுளம் பகுதிகளில் இரவு முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
கலெக்டர் பார்வையிட்டார்ஆழ்வார்திருநகரியில் தாழ்வான பகுதிகளான அண்ணா நகர், வ.உ.சி. நகர், கக்கன்ஜி நகர் ஆகிய 3 இடங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. தேங்கிய மழைநீரை வடிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று மதியம் ஆழ்வார்திருநகரியில் மழையால் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூடுதல் மோட்டார்கள் மூலம் மழைநீரை உறிஞ்சி தாமிரபரணி ஆற்றுக்குள் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், வட்ட வழங்கல் அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர பஞ்சாயத்து தலைவர் ஆதிநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது

T
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான இடி மின்னலும் இருந்தது. தொடர்ந்து அதிகாலையில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சில மணி நேரங்கள் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான இடங்களில் மழைநீர் ஆறாக பாய்ந்து ஓடியது.

இதே போன்று மணியாச்சி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழைவெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் புதுக்கோட்டை அருகே உள்ள ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. புதுக்கோட்டை பழைய பாலம் அருகே உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் வேகமாக சென்றது. இதனால் அந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. குளம் வேகமாக நிரம்பி வந்த நிலையில் குளத்தில் உள்ள 24 கண் மதகில் 3 மதகு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. கோரம்பள்ளம்-அத்திமரப்பட்டி இடையேயான ரோட்டில் உள்ள தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து உள்ளது.

குளத்தூரில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதே போல் குளத்தூரை சுற்றியுள்ள பனையூர், முத்துராமலிங்கபுரம், சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், வேடநத்தம், முத்துக்குமாரபுரம், கெச்சிலாபுரம் மற்றும் பல கிராமங்களில் பலத்த மழை பெய்ததையொட்டி அனைத்து குளங்களும் நிரம்பி வருகிறது. குளத்தூரில் உள்ள குளங்களுக்கு கடந்த 3 வருட காலமாக தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் தெற்கு, வடக்கு குளங்கள் நிரம்பி வருகிறது.

மழை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

கோவில்பட்டி - 11

ஓட்டப்பிடாரம் - 20

சாத்தான்குளம் - 34

ஸ்ரீவைகுண்டம் - 37

தூத்துக்குடி - 33.20

திருச்செந்தூர் - 38

விளாத்திகுளம் - 4.5

கயத்தாறு - 6

காயல்பட்டினம் - 38

குலசேகரன்பட்டினம்- 28

கீழஅரசடி - 4

எட்டயபுரம் - 4

கடம்பூர் - 21

மணியாச்சி - 65

வேடநத்தம் - 30

சூரங்குடி - 29

காடல்குடி - 5

வைப்பார் - 66

கழுகுமலை - 13 

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்
தொடர் மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தூத் துக் குடி, நவ.9:
தூத் துக் குடி மாவட் டத் தில் கடந்த சில நாட் க ளாக பலத்த மழை பெய்து வரு கின் றது. இத னால் நீர் நி லை க ளுக்கு நீர் வ ரத்து அதி க ரித் துள் ளது. பச னக் கு ளங் கள் நிறை யத் து வங் கி யுள் ளன. பல் வேறு பகு தி க ளில் விவ சா யி கள் விவ சா யப் ப ணி களை துவக் கி யுள் ள னர். குறிப் பாக மானா வரி விவ சா யி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
தாழ் வான பகு தி க ளில் மழை நீர் தேங்கி கிடப் ப தால் சுகா தார சீர் கேடு ஏற் பட்டு வரு கி றது. இதற் கா க வும், வெள் ளத் த டுப்பு பணி யி லும் மாவட்ட நிர் வா கம் உத் த ர வின் பேரில் அனைத்து முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை க ளும் மேற் கொள் ளப் பட் டுள் ளது. காட் டாற்று வெள் ளம் அதி க மாக வரு வ தால் புதுக் கோட்டை அருகே உள்ள ஓடை யின் இரு க ரை க ளை யும் கடந்த வெள் ளம் அங் குள்ள தாம் போ தியை நிறைத்து கோரம் பள் ளம் குளத் திற்கு செல் கி றது. அத் தி ம ரப் பட்டி-கோரம் பள் ளம் ரோட் டில் உள்ள பாலத்தை நிறைத்து வெள் ளம் செல் கி றது. மேலும் கடந்த சில நாட் க ளாக தொடர்ந்த மழை மேலும் இரு நாட் க ளுக்கு நீடிக் கும் என் ப தால் மீன வர் க ளுக்கு இது தொடர் பான எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. மழைக்கு மாவட் டத் தில் திருச் செந் தூர், தூத் துக் குடி,ஓட் டப் பி டா ரம் உள் ளிட்ட பகு தி க ளில் முழு மை யா க வும் பகு தி ய ள வி லும் 30க்கும் மேற் பட்ட வீடு கள் இடிந் துள் ளன.
விவசாயிகள் மகிழ்ச்சி
மழை அளவு விபரம்
திருச் செந் தூர்-38மிமீ, காயல் பட் டி னம்-38, குலசை-28, விளாத் தி கு ளம்-5, காடல் குடி-5, வைப் பாறு-66, சூரங் குடி-24, கயத் தாறு-6,, கழு கு மலை-13,வேட நத் தம்-30, கோவில் பட்டி-11, கடம் பூர்-21, ஓட் டப் பி டா ரம்-20, மணி யாச்சி-65, கீழ அ ர சடி-4, எட் டை ய பு ரம்-4, சாத் தான் கு ளம்-38, வை குண் டம்-38, தூத் துக்குடி-33.2 மி.மீ பதி வா கி யுள் ளது. மாவட் டம் முழு வ தும் சரா ச ரி யாக 26 மில் லி மீட் டர் மழை பதி வா கி யுள் ளது. மாவட் டத் தில் ஒரு சில இடங் க ளில் மழை அதி க மாக பெய் துள்ள நிலை யி லும் சில பகு தி க ளில் முற் றி லும் குறை வா கவே பதி வா கி யுள் ளது.

ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தின் இணைப்புச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்

இணைப்புச்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்
ஏரல் தாமிரபரணி உயர்மட்ட பாலத்தின்
தூத் துக் குடி, நவ. 9:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றின் குறுக்கே கட் டப் பட் டுள்ள உயர் மட்ட பாலத் திற்கு இணைப் புச் சாலை அமைக் கும் பணி களை விரைந்து மேற் கொள்ள மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று ம.தி.மு.க மாவட்ட செய லா ளர் ஜோயல் வலி யு றுத் தி யுள் ளார்.
இது கு றித்து அவர் விடுத் துள்ள அறிக்கை:
ஏரலை நெல்லை-திருச் செந் தூர் சாலை யி லுள்ள தென் தி ருப் பேரை, குரும் பூர் மற் றும் நாச ரேத் து டன் இணைக் கும் வகை யில் தாமி ர ப ரணி ஆற் றின் குறுக்கே தாம் போதி பாலம் உள் ளது.வெள் ளப் பெ ருக்கு ஏற் ப டும் காலங் க ளில் தரைப் பா லம் தண் ணீ ரில் மூழ்கி வாகன போக் கு வ ரத்து முற் றி லும் துண் டிக் கப் பட்டு விடும்.
இந் நாட் க ளில் சுற் று வட் டார கிராம பொது மக் கள், வணி கர் கள், மாணவ-மாண வி யர் பல மைல் தூரம் சுற் றி செல் லும் நிலை பல வருட கால மாக தொடர் கி றது. இந்த தாம் போதி பாலம் கடந்த சில ஆண் டு க ளுக்கு முன்பு தாமி ர ப ர ணி யில் வந்து பெரும் வெள் ளத் தால் அரிப்பு ஏற் பட்டு ஓட்டை விழுந்து சேத மா னதை தொடர்ந்து புதி ய தாக உயர் மட்ட பாலம் கட் டு வ தற்கு அரசு அனு மதி அளித் தது.
இத னை ய டுத்து கடந்த 2011-12ம் ஆண் டில் ஏரல் தாமி ப ரணி ஆற் றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட் டு வ தற்கு நபார்டு வங்கி ரூ.16.35 கோடி வழங் கி யது. நிதி ஒதுக் கீட்டை தொடர்ந்து கடந்த 28.6.2012 அன்று தாம் போதி பாலத் தின் மேற் ப கு தி யில் புதி ய தாக உயர் மட்ட பாலம் கட் டும் பணி கள் துவங் கப் பட் டது.
குறிப் பிட் ட படி உயர் மட்ட பாலம் கட் டும் பணி கள் கடந்த 2014ம் ஆண்டு நிறை வ டைந் து விட் டது.
இந்த பாலத் தில் தென் தி ருப் பேரை, குரும் பூர்-குரங் கணி சாலையை இணைக் கும் பகு தி யில் இணைப் புச் சாலை அமைக்க வனத் துறை முட் டுக் கட்டை போட் ட தால் இதில் பல மா தங் கள் தாம தம் ஏற் பட் டது. இதற்கு நாங் கள் கடும் எதிர்ப்பு தெரி வித்த சூழ லில் இணைப் புச் சாலை அமைக்க வனத் து றை யும் அனு மதி அளித் து விட் டது.
இருந் த போ தும் இணைப் புச் சாலை அமைக் கும் பணி களை பொதுப் ப ணித் துறை விரைந்து மேற் கொள் ளா மல் இன் று வரை மந் த க தி யில் செயல் ப டுத்தி வரு கி றது. தற் போது தொடர்ந்து பெய்து வரும் வட கி ழக்கு பரு வ ம ழை யின் கார ண மாக தாமி ர ப ர ணி யில் தண் ணீர் வரத்து அதி க ரித் துள் ளது.
இந் நி லை யில், பழைய தாம் போதி பாலத் தில் மீண் டும் ஓட்டை விழுந்து வாக னப் போக் கு வ ரத்து முற் றி லு மாக தடை ப டும் சூழல் ஏற் பட் டுள் ளது.
எனவே, மாவட்ட நிர் வா கம் இதில் உட ன டி யாக தலை யிட்டு புதிய உயர் மட்ட பாலத் திற் கான இணைப் புச் சாலை அமைக் கும் பணி களை விரைந் து மு டிந் தி ட வேண் டும்.
இந்த சாலை யில் வாக னப் போக் கு வ ரத்து சீராக நடை பெ றும் பொருட்டு உயர் மட்ட பாலத்தை வாக னப் பயன் பாட் டிற்கு கொண் டு வந் தி ட வேண் டும். இல் லா விட் டால் பொது மக் களை திரட்டி போராட் டம் நடத் தப் ப டும். இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.
ேஜாயல் வலியுறுத்தல்

புதன், 4 நவம்பர், 2015

ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மீண்டும் அபாய குழி

ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லத் தில் மீண் டும் ஏற் பட் டுள்ள குழி யால் விபத்து அபா யம் உள் ளது.
ஏரல் தாமிரபரணி
ஆற்றுப்பாலத்தில்
மீண்டும் அபாய குழி
ஏரல், நவ.4:
ஏரல் தாமி ர ப ரணி தாம் போதி ஆற்று தாம் போதி பாலத் தில் மீண் டும் ஓட்டை விழுந் துள் ளது. இத னால் விபத்து அபா யம் ஏற் பட் டுள் ளது.
தாமி ர ப ரணி ஆற் றில் கடந்த ஆண்டு ஏற் பட்ட வெள் ளத் தில் ஏரல் தாம் போதி ஆற் றுப் பா லம் உடைந்து சேதம் அடைந் தது. இத னால் ஏரல்-குரும் பூர் போக் கு வ ரத்து ஒரு மாதம் துண் டிக் கப் பட் டது.
அதன் பின் உடைந்த இடத் தில் பாலம் சீர மைக் கப் பட்டு பின் னர் மீண் டும் போக் கு வ ரத்து துவங் கப் பட் டது.
ஆனால் பாலம் சரி யான முறை யில் சீர மைக் கப் ப ட வில்லை என வியா பா ரி கள் பொது மக் கள் குற் றம் சாட்டி வந் த னர். 5 மாதத் தில் பாலம் சீர மைத்த இடத் தில் குழி விழுந் தது. இதனை தற் கா லி க மாக அதி கா ரி கள் சீரமைத்த போது இதன் அரு கில் மற் றொரு குழி விழுந் தது. இப் படி சீர மைத்த இடத் தில் பல இடங் க ளில் மாறி, மாறி குழி விழுந்து வரு வ தும் தற் கா லி க மாக அடைப் ப தும் என நிகழ்ந்து வரு கி றது.
இந் நி லை யில் கடந்த இரண்டு நாட் க ளாக பெய்த மழை யி னால் மீண் டும் பெரிய அள வில் பாலத் தில் குழி விழுந் துள் ளது. இந்த குழி யில் வாக னங் கள் சிக் கி வி டா மல் இருப் ப தற் காக குழி யில் முள் செ டியை வைத் துள் ள னர்.
இத னால் பக லில் செல் லும் வாக னங் கள் விபத் தில் இருந்து தப்பி வரு கி றது. ஆனால் பாலத் தின் மின் வி ளக்கு இல் லா த தால் இரவு நேரத் தில் வாக னங் கள் இந்த குழியில் விழுந்து விபத்து ஏற் பட்டு வரு கி றது.
குறிப் பாக இரு சக் கர வாக னத் தில் சென்று வரு ப வர் கள் இந்த குழி விழுந் துள் ளது தெரி யா மல் கீழே விழுந்து அதிக அளவு பாதிக் கப் பட்டு வரு கின் ற னர்.
மேலும் மழைக் கா லம் துவங் கி யுள் ள தால் ஆற் றில் வெள் ளம் வரும் போது இந்த பழைய பாலத்தில் சேதம டைந்து முற் றி லும் போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
உயர் மட்ட பாலம் பணி
விரை வு ப டுத் தப் ப டு மா?
ஏரல் தாம் போதி பாலத் தின் கட் டப் ப டுள்ள உயர் மட்ட பாலத் திற்கு இணைப்பு சாலை அமைக் கும் பணி முடி யாத நிலை யில் உள் ளது. தாமி ர ப ரணி ஆற் றில் வெள் ளம் வரும் நேரத் தில் பழைய தாம் போதி ஆற் றுப் பா ல மும் சேத ம டைந்து போக் கு வ ரத்து துண் டிக் கப் ப டும் நிலை யில் புதிய பாலத் தி லும் போக் கு வ ரத்து துவங்க முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது. எனவே அதி கா ரி கள், பழைய பாலத் தில் தற் போது ஏற் பட் டுள்ள குழியை சீர மைத் தும், புதிய பாலத் திற்கு இணைப்பு சாலை பண கிளை விரை வாக முடித் தி ட வும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வியா பா ரி கள், பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...