ஏரல் பால இணைப்பு சாலை பணிகள்
ஒரு மாதத்தில் துவங்காவிட்டால் போராட்டம்
ஏரல், ஜன.9:
ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் ஏரலில் நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் ஜஸ்டின் தலைமை வகித்தார். மேற்கு வட்டார தலைவர் நல்லகண்ணு, கிழக்கு வட்டார தலைவர் கந்தசாமி, திருப்பணிசெட்டிக்குளம் பஞ். தலைவர் சுயம்புலிங்கம் முன்னிலை வகித்தனர். ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி வரவேற்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி உள்பட பலர் பேசினர். இக்கூட்டத் தில், �ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்காமல் ஒரு வருட மாக வேலை நடைபெறா மல் உள்ளது.
இதனால் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பாலத்தின் வேலையை ஒரு மாத்திற்குள் துவங்க நடவடிக்கை அரசு எடுக்காவிட்டால் காங்கிரஸ் சார் பில் ஏரலில் போராட்டம் நடத்துவது, ஏரலில் இருந்து முக்காணி வழியாக தூத்துக்குடி செல்லும் சாலையை இருவழி சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஸ்ரீவை குண்டம் அணையை தூர் வார வேண்டும்.
மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் வக்கீல் சந்திரசேகர், வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட செயலாளர் மச்சேந்திரன், ஆத்தூர் நகர தலைவர் ஸ்ரீராம், ஸ்ரீவை நகர தலைவர் சேதுபாண்டியன், உடன்குடி வட்டார தலைவர் சிவசுப்ரமணியன், வட்டார துணைத் தலைவர் சீனி ராஜேந்திரன், பெருங்குளம் நகர தலைவர் ஜெபமாலை, முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஏசுவடியான் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் ஜேக்கப் நன்றி கூறினார்.
காங். எச்சரிக்கை
ஏரலில் நடந்த ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம் பேசினார்.