வியாழன், 31 ஜூலை, 2014

ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏரல், ஜூலை 31:
ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு மிக அகலமாகவும், நல்ல நிலையில் இருப்பதால் இந்த ரோட்டில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த ரோட்டில் புதுமனை சேம்பரில் இருந்து வாழவல்லான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் வரை இடைப்பட்ட ரோட்டில் இரண்டு இடங்களில் ரோட்டில் படுகுழி ஏற்பட்டுள்ளது.
நல்ல ரோட்டில் உள்ள இந்த படுகுழியால் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் நல்ல ரோடு என நினைத்து வேகமாக பைக்கீல் வருபவர்கள் இந்த எதிர்பாராத பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் ஏரல் பள்ளிக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நல்ல நிலையில் உள்ள தார்ரோடு மேலும் சேதாரமடைவதிற்குள் திடீரென ஏற்பட்டுள்ள இந்த படுகுழிகளையாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரியம் அருகே ஏற்பட்டுள்ள திடீர் படுகுழியால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஏரல் & முக்காணி
பழுதான சாலையால் விபத்து அபாயம்

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் குறுமண் அள்ளிய ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்

ஆற்றங்கரையில் குறுமண் அள்ளிய
ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்
ஏரல், ஜூலை 31:
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் குறுமண் அள்ளிய ஜே.சி.பி மற்றும் 2 டிராக்டர்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஏரல் அருகே உமரிக்காடு தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக குறுமண் அள்ளப்படுவதாக ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறை அதிகாரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து மண்டல துணை தாசில்தார் சந்திரன் தலைமையில் விஏஓ ரமேஷ் மற்றும் தலையாரிகள் கருணன், ரத்தின பாண்டி ஆகியோர் உமரிக் காடு தாமிபரணி ஆற்றங் கரையோர பகுதிகளில் சோதனை செய்தனர்.
அப்போது ஜேசிபி மூலம் 2 டிராக்டர்களில் குறுமண் அள்ளிக் கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து ஜேசிபி மற்றும் 2 டிராக்டரை பறிமுதல் செய்து ஏரல் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கனிம சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏரல் அருகே அனுமதியின்றி
உமரிக்காட்டில் அனுமதியில்லாமல் ஆற்றங்கரையோரத்தில் குறுமண் அள்ளிய ஜேசிபி மற்றும் டிராக்டர்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதன், 30 ஜூலை, 2014

தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்

சிறப்பு தொழுகையில் திரளானோர் பங்கேற்பு
நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் பாளை ரோட்டில் உள்ள ஈத்கா தோட்டத்தில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்
ரம்ஜான் பண்டிகை கோலாகலம்
தூத்துக்குடி. ஜூலை 30:
தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் நடை பெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை யும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண் டனர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் மேலப்பாளையம் இமாம் ஷேக் உதுமான் தலைமை யில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தலைமை இமாம் அப்துல்ஆலிம், ஜாமியா பள்ளிவாசல் தலைவர் ஷாகுல்ஹமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ரோச்பூங்காவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகைக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமை வகித் தார். இதில் 200க்கும் மேற் பட்ட பெண்கள் உட் பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.
தூத்துக்குடி ஜாஹிர்உசேன் நகர் ஜூம்மா மசூதியில் இமாம் ரசூல் ரிஸ்தார் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வரும் திரேஸ்புரம், ரஹமத்துல்லாபுரம், ஜெயலாணி தெரு, புதுத்தெரு, முகம்மதுசாதலிபுரம், முத்தையாபுரம், முத்தம்மாள்காலணி, ரஹ்மத்நகர், மில்லர்புரம் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.
ஆறுமுகநேரி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காயல்பட்டினம் கிளை மற்றும் மஜிதுத் தவ்ஹீத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல் காயல்பட்டினம் இரட்டைக்குளத்து பள்ளி, புதுப் பள்ளி, தாயும்பள்ளி, ஆறாம்பள்ளி, கொடிமரத்து நயினா பள்ளி, அப்பா பள்ளி, காட்டு முகைதீன் பள்ளி உள்பட 24 பள்ளிவாசல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. பெரு நாளை முன்னிட்டு புத் தாடை அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
காயல்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை கடற்கரையில் நடந்தது.

ஏரல் வடகால் மற்றும் தென்காலில் கருகும் பயிர் களை காப்பாற்ற மணிமுத்தாறில் தண்ணீர் திறக்க வேண்டும்

ஏரல், ஜூலை 30:
ஸ்ரீவை குண்டம் வடகால் மற்றும் தென்காலில் கருகும் பயிர் களை காப்பாற்ற மணி முத் தாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாது காப்பு பேரவை அமைப் பாளர் நயினார் குலசேகரன், தாமிரபரணி பாசன விவசாயிகள் ஒருங் கிணைப் பாளர் வியனரசு, வடகால் விவசாயிகள் ஒருங்கிணைப் பாளர் சம்பத், உழவர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்மணி, நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சந்திர மோகன், விவசாயிகள் சங்கம் தலைவர் லட்சமி புரம் முருகேசன், தெற்கு ஆத்தூர் பேரூராட்சி தலைவர் சதீஷ்குமார், சமூக ஆர்வலர் ஏரல் ஜெய பாலன் ஆகியோர் தமிழக முதல்வர், கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி பாசனம் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் பகுதிகளில் பயிரிடப் பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. கருகும் வாழை கள் காற்றில் சாய்கின்றன. வடகால் மற்றும் தென் காலில் திறந்துவிடப்பட்ட மிக குறைந்த அளவு தண்ணீர் கருகும் விவசாய பயிர்களுக்கு போய் சேர வில்லை. இதனால் விவ சாயிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் பயிர்கள் அடி யோடு அழிந்து விவசாயி களுக்கு கோடிகணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும்.
இந்நிலையில் 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலம் தினசரி 20 மில்லியன் காலன் (9 கோடி லிட்டர்) தாமிரபரணி தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணையி லிருந்து எடுத்து தூத்துக்குடி பகுதியிலுள்ள 8 தொழிற் சாலைகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. 23&1&2006ல் அப்போதிருந்த கலெக்டர் சந்திரசேகரன் முன்னிலையில் 20 மில்லியன் காலன் தண்ணீர் விநியோகம் குறித்து நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கோடைகாலங்களில் தொழிற்சாலைகளுக்கு அடிப்படை அளவிலேயே தண்ணீர் வழங்கவேண்டும். நிலைப்பயிர்களுக்கு பாசனநீர் பற்றாக்குறை ஏற்படும் போது கலெக் டரின் அனுமதி பெற்ற பின்பே 20 எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலை களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. எனவே ஸ்ரீவைகுண்டம் அணையி லிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் எடுப் பதை உடன் நிறுத்தி கருகும் பயிர்களை காப்பாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மணிமுத்தாறு அணையில் தற்போது 57.52 அடி தண்ணீர் உள்ளது. மணிமுத்தாறு அணைத்தண்ணீர் 80 அடிக்கு கீழே உள்ள தண்ணீர் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி பாசனத்திற்கு பாத்தியப் பட்டதாகும். இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாட்டிலும் மணிமுத்தாறு அணையை திறக்காமல் பொதுப்பணித் துறை அடைத்து வைத் துள்ளது. எனவே அணை யை திறந்து தேவையான அளவு தண்ணீரை ஸ்ரீவை வடகால், தென்காலில் கூடுதலாக தண்ணீர் கீழ் கோடி பாசன மடை வரைக்கும் சேர ஏற்பாடு செய்து அழிந்து கொண்டி ருக்கும் பயிர்களை காப் பாற்ற வேண்டும். அதே போல் மருதூர் மேலக்கால், கீழக்கால் பகுதி விவசாயி களுக்கும் தேவையான தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தண்ணீர் திறந்து 2 வாரங்களாகியும் குறைந்த தண்ணீரே செல்வதால் பேய்குளத்திற்கு வந்து சேரவில்லை. இதனால் குளம் மைதானம் போல காட்சியளிக்கிறது.

வெள்ளி, 18 ஜூலை, 2014

ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா துவக்க விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா
ஏரல், ஜூலை 18:
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத் தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை பூஜைகள் நடந்தது.
கோயில் முன்மண்டபத்தில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடி யேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர். இரவு சுவாமி இரவு 8 மணிக்கு கேடயச்சப்பரத்தில் அருணாசல சுவாமி திருக்கோலம் திருக்கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், சிறப்பு நிகழ்ச்சியாக கருத்தப்பாண்டியன் கலையரங்கில் நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவை முன் னிட்டு தினசரி இரவு சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா 26ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா துவக்க விழாவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார்.

செவ்வாய், 15 ஜூலை, 2014

ஏரல் அருகே குரங்கணி யில் பிரசித்தி பெற்ற

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவில் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் குடிசை அமைத்து தங்கியிருந்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா
ஏரல், ஜூலை 16:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஏரல் அருகே குரங்கணி யில் பிரசித்தி பெற்ற முத்து மாலை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திரு விழாக்களில் ஒன்றான ஆனித்திருவிழா கடந்த 1ம் தேதி கால்நாட்டுடன் துவங்கியது. அன்று முதல் பக்தர் கள் 15 நாள் நோன்பு இருந்தனர். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜை. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், பக்தர்கள் மா விளக்கு பெட்டி எடுத்து வருதல், இரவு 1 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு பூஜை நடந்தது. அதி காலை 2 மணிக்கு நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி வலம் வரு தலும், அதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்குள் வாண வேடிக்கையும் நடந்தது.
விழாவில் பக்தர்கள் மக்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும், மரத்தாலானா கை, கால்களை வாங்கி கோயிலில் கொடுத்து நேர்ச்சை செலுத்தியும் அம் மனை தரிசித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான ஆடு களையும் பலியிட்டனர். திருவிழாவுக்காக கார், வேன், மாட்டு வண்டிகள் மூலம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றங்கரையோரம், அருகில் உள்ள தோட்டங்களில் தற்காலிக பந்தல் மற்றும் குடில்கள் அமைத்து தங்கினர். நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட முக்கிய ஊர்களில் இருந்து கோயி லுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடு களை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி ராமராஜன் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார்திருநகரி கிங்ஸ்லி தேவஆனந்த், ஸ்ரீவை குண்டம் பிரான்சிஸ், பால் துரை, எஸ்.ஐ.க்கள் ஆழ்வார்திருநகரி ஜெயக்குமார், முத்துப்பட்டன், சாயர்புரம் பியூலா தங்கரத்தினம், ஏரல் மந்திரமூர்த்தி மற்றும் போலீசார் செய்திருந்தனர். பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் சிவராம்பிரபு மற்றும் குரங்கணி ஊர்மக்கள் செய்திருந்தனர்.

சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் பரிசு வழங்கினார்.

ஏரல் லோபா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் பரிசு வழங்கினார்.
ஏரல் லோபா பள்ளியில்
காமராஜர் பிறந்தநாள் விழா
ஏரல், ஜூலை 16:
ஏரல் லோபா மெட்ரிக்குலேஷன் உயர்நிலை பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, பாட்டு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சூளைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ் பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் மாடசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஏரல் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

ஏரல் அருகே அம்மாள்தோப்பு கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
ஏரல் அருகே குடிநீர் கேட்டு
கிராம மக்கள் சாலை மறியல்
ஏரல், ஜூலை 13:
ஏரல் அருகே அம்மாள்தோப்பு பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஏரல் அருகே வாழவல்லான் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மாள்தோப்பு, புது மனை, சத்தியாநகர், காம ராஜர் நகர் மற்றும் பூஞ் சோலை தெரு மக்களுக்கு அம்மாள்தோப்பில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார மாக இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
அப்பகுதி மக்கள் குடி நீருக்காக நேற்று மாலை ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் அம்மாள்தோப்பு பஸ் ஸ்டாப் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்குட்டி, அம்மாள்தோப்பு ஊர் தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் ராமச்சந்திரன், வாழவல்லான் பஞ்சாயத்து கவுன்சிலர் பெரிய சாமி, விடுதலை சிறுத்தை நகர துணை செயலாளர் முத்துராஜ் மற்றும் பெண்கள் உட்பட 200 பேர் காலிகுடங்களுடன் கலந்து கொண்டனர்.
ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் எஸ்.ஐ. மந்திரமூர்த்தி, சிறப்பு எஸ்.ஐ.க்கள் சுப்பிரமணியன், பண்டாரம், சுப்பையா மற்றும் வாழவல்லான் பஞ்சாயத்து தலைவர் துளசிஜெயபிர காஷ் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் நாளை(இன்று) மாலை குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மறியலில் ஈடுபட்ட மக்களிடம் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதன், 9 ஜூலை, 2014

ஏரல் அருகே வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர் பாக தொழிலாளி கைது

ஏரல், ஜூலை 10:
ஏரல் அருகே வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர் பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார். பலரது மத்தியில் 200 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள் ளார்.
ஏரல் அருகே மாரமங்கலம் தேவர் தெருவை சேர்ந்தவர் ராமர் (68). இவர் அதே ஊரில் டீக்கடை மற்றும் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி இரவு ஊருக்கு தென்புறம் உள்ள வாய்க்கால் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராமர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். டி.எஸ்.பி ராமராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ மந்திரமூர்த்தி, சிறப்பு எஸ்.ஐ.கள் சீனிவாசன், சுப்பிரமணியன், பண்டாரம், சுப்பையா, பூமிராஜ் மற்றும் தனிப்படை எஸ்.ஐ செல்வம், ஏட்டுகள் குமாரசாமி, பிரைம்குமார், மாடசாமி, விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை யாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், ராமரை கொலை செய்ததாக கூறி நேற்று காலை மாரமங்கலத்தை சேர்ந்த கர்ணன் (43) என்பவர் கொட்டரக் குறிச்சி வி.ஏ.ஓ. கோபாலிடம் சரணடைந்தார். போலீசார் கர்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசில் கர்ணன் அளித்த வாக்குமூலம்:
நான் வாழை இலை அறுக்கும் தொழில் செய்கிறேன். எனது வீட் டுக்கு தேவையான பொருட் களை ராமர் கடையில் வாங்குவேன். இந்த வகையில் அவருக்கு ரூ.200 கொடுக்க வேண்டி இருந்தது. இதை அவர் அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தார். கடந்த 7ம் தேதி மாலை கடையில் நான் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது நான்கு பேருக்கு மத்தியில் ராமர் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்டார்.
இது எனக்கு அவமானமாக இருந்தது. பின்னர் நான் மது குடித்து விட்டு சென்றபோது வாய்க் காலுக்கு வந்த ராமரை பார்த்து, பலரது மத்தியில் கடனை எப்படி கேட்கலாம் எனக் கூறி அவரிடம் தகராறு செய்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன் றேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்து விஏஓவிடம் சரணடைந்தேன்.இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கர்ணன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் மீது கடந்த 22&9&2008ல் மாரமங்கலத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த முத்தையாபுரம் நடராஜன் மனைவி கற்பகவல்லியை வெட்டியதாக ஏரல் போலீசில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதான தொழிலாளி வாக்குமூலம்
ஏரல் அருகே வியாபாரி கொலை
200 ரூபாய் கடனை திருப்பி
கேட்டதால் கொன்றேன்
கைதான கர்ணன்

Assalamu Alayka Ya Rasool Allah Albanian, English 2014

ஏரல் அருகே பயங்கரம் மளிகை கடைக்காரர் படுகொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

ஏரல் அருகே பயங்கரம் மளிகை கடைக்காரர் படுகொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


மளிகை கடைக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமர் (வயது 68). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை, டீக்கடையை ஒரே இடத்தில் நடத்தி வந்தார். அவருடைய மனைவி மல்லிகா.
இவர்களுக்கு மகேஷ் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகேஷ் தன்னுடைய தந்தையுடன் கடைகளை கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராமர் வழக்கம்போல் கடைகளை பூட்டிவிட்டு, ஊருக்கு அருகே உள்ள வாய்க்கால் படித்துறையை நோக்கிச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
வெட்டிக் கொலைஇதற்கிடையே நள்ளிரவில், அப்பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வாய்க்கால் படித்துறை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையோரத்தில் ராமர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கவனித்தார். அவரது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார், உடனடியாக ஓடிச்சென்று மகேசிடம் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காரணம் என்ன?மோப்ப நாய் டெய்சி வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய், மோப்பம் பிடித்துவிட்டு பக்கத்து ஊரான அகரம் வரை ஓடிச்சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மளிகை கடைக்காரர் ராமர் படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திங்கள், 7 ஜூலை, 2014

ஏரலில் நெற்பயிர்கள் மற்றும் வாழை பயிர்கள் கருகி வருகின்றன.

ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் 2 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வராததினால் ஏரலில் நெற்பயிர்கள் கருகியுள்ளது.
6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகின
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்
ஏரல், ஜூலை 7:
ஸ்ரீவைகுண் டம் வடகால் வாய்க்காலில் 2 மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஏரல், பேய்க்குளம் பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல், சாயர்புரம் பகுதிகளில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள ஆறுமுகமங்கலம், கொற்கை, அகரம், பழையகாயல், பேய்க்குளம் மற்றும் பெட்டைக்குளம், கோரம்பள்ளம் குளம் ஆகிய குளங்களுக்கு ஸ்ரீவைகுண் டம் வடகால் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும்.
குளத்து பாசனம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் நேரடி பாசனம் மூலம் 12 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றன. தங்குதடையின்றி வடகால் வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் வந்ததால் இப்பகுதி நிலங்களில் இருபோக விளைச்சல் நடைபெற்று வந்தது.
தற்போது தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் முறையாக வருவதில்லை. மேலும் குளங்கள் தூர் வாரப்படாததாலும் அவற்றில் தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் தற்போது ஒருபோக விளைச்சலுக்கே விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் இருபோக விவ சாயத்தை கைவிட்ட நிலையில் ஏரல் பகுதியில் ஒரு சில விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தொடர்ச்சியாக 2 மாதத்திற்கு மேல் தண்ணீர் வராததால் இதனை நம்பி பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் கருகி விட்டன. மேலும் எப்படியாவது நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியுடன் ஒரு சில விவசாயிகள் கழிவு நீரை விவசாய நிலத் தில் திருப்பிவிட்டுள்ளனர்.
வெற்றிலை மற்றும் வாழை பயிர்களுக்கு போர் அமைத்து ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீரை விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவு ஆகிறது. மேலும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கடைசி குளமான பேய்க்குளம் வறண்டு காடாக காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் லட்சக்கணக்கான வாழைகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2 மாதமாக வாய்க்காலில் தண்ணீர் வராததால் ஏரல், சாயர்புரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் வீடுகளில் உள்ள போர்வெல் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது.
எனவே விவசாயிகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு கடைசி குளமான பேய்க்குளம் வரை நிரம்ப சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் வரும் தண்ணீரை வைத்து நெல் நாற்று நடவு செய்தோம். ஆனால் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன.
எனவே அரசு எங்கள் நிலங்களை பார்வையிட்டு கருகிய பயிர்களுக்கு இழப்பீடு தருவதுடன் மீண்டும் விவசாயம் செய்ய கடன் வசதி செய்து தர வேண்டும்� என்றார்.
விவசாயிகள் வேதனை
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் 2 மாதமாக தண்ணீர் திறந்து விடாததினால் ஏரலில் நெற்பயிரை காப்பாற்றிட விவசாயிகள் கழிவு நீரை பாய்ச்சி வருகின்றனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...