சனி, 28 ஜூலை, 2018
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்
- SUBSCRIBE TO THE HINDU TAMIL
கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரிக்கும் ஆளுநர் பன்வாரிலால் | படம்: ம.பிரபு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 18-ம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல்நலம் குறித்த செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ட்ரக்யோஸ்டமி குழாய் புதிதாக பொருத்தப்பட்டதால் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை தரப்பில், “கருணாநிதியின் உடல்நலத்தில் சிறிது நலிவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர். திமுக தொண்டர்களும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவருக்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் நள்ளிரவிலும் காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் கூடினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் கருணாநிதியின் உடலில் ரத்த அழுத்தம் சீராகத் தொடங்கியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியத்திற்கு ஆளானார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் ரத்த அழுத்தம் குறைந்து அபாய கட்டத்தை தாண்டி விட்டார்” என்று தெரிவித்தார். காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் இந்தத் தகவலே குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரை சந்தித்து விசாரித்தார்.
இவ்வளவுதாங்க திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதிமுக தொண்டர்கள் நடந்துகொண்ட விதமும், திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் திமுக தொண்டர்கள் நடந்து கொள்ளும் விதம் மாறுபட்டதாக இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நள்ளிரவில் ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி இருந்த அவருக்கு தொடர்ந்து, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. இதன் நடுவே ஜெயலலிதாவை சந்திப்பதற்கு அதிமுக தொண்டர்கள் முதல் ஆளுநர் வரை யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. அவர் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டபோது கூட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுதான் அதில் கவனிக்கத்தக்கது. ஒரு நபர் சாம்ராஜ்யம் தொண்டர்கள் மருத்துவமனையின் வெளியே நிறுத்தப்பட்டனர். முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் மாடி வரை சென்று சசிகலா உள்ளிட்டோர் இடம் தான் உடல்நிலை குறித்து கேட்டறிந்து திரும்பினார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி விஷயத்தில் அப்படி எந்த ஒளிவுமறைவும் கிடையாது ஏற்கெனவே அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கூட அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிப்படையாக பகிரப்பட்டன. வீடியோ எடுத்த ஊடகங்கள் இன்றும் கூட முக்கிய நிர்வாகிகள் பலரும் மருத்துவமனை சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். நேற்று அவரை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்சில் காவேரி மருத்துவமனை அழைத்துச் சென்ற போது கூட ஊடகங்கள் அதை வீடியோவாக எடுக்க முடிந்தது. ஆனால் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் கூட இப்போது இல்லை. மக்கள் போராட்டம் அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் நடுவே ஒரு பெரிய வித்தியாசத்தைக் இந்த காலகட்டத்தில் பார்க்க முடிந்தது. நேற்றைய தினம் கருணாநிதி உடல்நிலை நலிவுற்ற செய்தி அறிந்த பிறகும் கூட தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். போராட்டத்தை கைவிட திமுக தலைமை உத்தரவிடவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அதிமுகவினர் பல்வேறு வழிபாடுகள் வேண்டுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் திமுகவினர் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து உள்ளனர் என்று திமுக நெட்டிசன்கள் இணையதளங்களில் பெருமிதம் தெரிவித்திருந்தனர். அழகிரியும், ஸ்டாலினும் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது நெருங்கிய ரத்த உறவுகள் கூட அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை .ஆனால் திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதித்த பிறகு கூட அவரது இரத்த உறவுகள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கருத்து வேறுபாடுகள் கடந்த காலங்களில் இருந்தபோதும் கூட ஸ்டாலின், அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனையில் இணைந்து தங்களது தந்தையின் உடல் நலத்தை பேணி வருகின்றனர். மருத்துவமனைக்குள் நிர்வாகிகள் மருத்துவமனைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட, திமுக நிர்வாகி தமிழன் பிரசன்னா கதறி அழுத காட்சி கூட இணைய தளங்களில் பரவி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இப்படி உணர்வு பூர்வமாக பெரிய நிர்வாகிகள் யாரையும் பார்க்க முடியவில்லை. டிஆர் பாலு, துரைமுருகன் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு இணையாக நின்று டாக்டர்களிடம் பேச முடிவதை பார்க்க முடிகிறது.
R
கருணாநிதிக்கு மருத்துவ உதவி செய்ய அரசு தயார் : முதல்வர்
சேலம் : சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அவர் 5 முறை முதல்வராக இருந்தவர். தற்போது எம்எல்ஏ.,வாகவும் இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் அவருக்கு மருத்துவ உதவி கேட்டால், வழங்க அரசு தயாராக உள்ளது.
அவருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அவர் 5 முறை முதல்வராக இருந்தவர். தற்போது எம்எல்ஏ.,வாகவும் இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் அவருக்கு மருத்துவ உதவி கேட்டால், வழங்க அரசு தயாராக உள்ளது.
கருணாநிதி சுகவீனம்: ஜனாதிபதி, பிரதமர், ராகுல் விசாரிப்பு
தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல் நிலை குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள், நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும்விசாரித்தனர்.

கருணாநிதிக்கு சிகிச்சை அளிப்பதற்கு, தேவையான உதவி கள் செய்ய தயாராக இருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியல் பணியிலிருந்து ஒதுங்கி, 19 மாதங்களாக, சென்னை, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். இம்மாதம், 24ல், அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து, அவரது தொண்டை குழாய், சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டது.இதையடுத்து, கருணாநிதியின் உடல்நிலை நலிவு அடைந்தது. சென்னை கோபால புரத்தில் உள்ள வீட்டில் அவரை, 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்ஸ்கள் குழுவினர், கண்காணித்து வருகின்றனர்.
கருணாநிதியின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்ற, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அவரது உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர். ஏராளமான, தி.மு.க., தொண்டர்களும், கோபால புரம் வீட்டின் முன்,நள்ளிரவு வரை கூடியிருந்தனர். 'கருணாநிதி நன்றாக இருக்கிறார்; வீட்டின் முன்,யாரும் காத்திருக்க வேண்டாம்' என, தொண்டர் களுக்கு தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை , கருணாநிதியின் உடல்நிலை மேலும் பாதிக்கப் பட்டது. 9:00 மணிக்கு, கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் வந்தார்.
வரை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையிலி ருந்து, நான்கு டாக்டர்கள் வந்தனர்; கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.காலை,9:45 மணிக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், அவரை தொடர்ந்து, முதன்மை செயலர் துரைமுருகன், பொதுச்செயலர் அன்பழகன் வந்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தொலை பேசி வாயிலாக, கருணாநிதியின் உடல்நிலை குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தேன். அவர், விரைவில் பூரண நலம் பெற்று, பொது வாழ்க்கைக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுலும், ஸ்டாலினை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
தென் ஆப்ரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே, ஸ்டாலின், கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து, டுவிட்டர் பக்கத்தில், மோடி கூறியிருப்பதாவது: கருணாநிதியின் உடல் நிலை குறித்து, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.மருத்துவ சிகிச்சைக்கு தேவைான உதவிகள் செய்ய, தயாராக இருப்பதாககூறினேன். கருணாநிதி முழுமையாக குணமடைந்து, நல்ல உடல் நலத்துடன் வாழ, கடவுளை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர்கூறியுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கையில், 'கருணாநிதிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர், விரைவில் குணமடைவார்.' அனைவரின் வாழ்த்தும், பிரார்த்தனையும், கருணாநிதியை குணப்படுத்தும். விரைவில், தொண்டர்களை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 'டுவிட்டர்' பக்கத்தில், 'தொலை பேசி வாயிலாக, கருணாநிதியின் உடல்நிலை குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தேன். அவர், விரைவில் பூரண நலம் பெற்று, பொது வாழ்க்கைக்கு வர வேண்டும்' என, கூறியுள்ளார்.
காங்., தலைவர் ராகுலும், ஸ்டாலினை தொலை பேசியில் தொடர்பு கொண்டு, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
தென் ஆப்ரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்தபடியே, ஸ்டாலின், கனிமொழியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து, டுவிட்டர் பக்கத்தில், மோடி கூறியிருப்பதாவது: கருணாநிதியின் உடல் நிலை குறித்து, ஸ்டாலின் மற்றும் கனிமொழியை தொடர்பு கொண்டு விசாரித்தேன்.மருத்துவ சிகிச்சைக்கு தேவைான உதவிகள் செய்ய, தயாராக இருப்பதாககூறினேன். கருணாநிதி முழுமையாக குணமடைந்து, நல்ல உடல் நலத்துடன் வாழ, கடவுளை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர்கூறியுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கையில், 'கருணாநிதிக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர், விரைவில் குணமடைவார்.' அனைவரின் வாழ்த்தும், பிரார்த்தனையும், கருணாநிதியை குணப்படுத்தும். விரைவில், தொண்டர்களை
சந்திப்பார்; தன் சொந்தக் குரலில், அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார்' என, கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் பலரும், தி.மு.க., தலைவர் உடல் நலம் குறித்த தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் பலரும், தி.மு.க., தலைவர் உடல் நலம் குறித்த தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
நலமுடன் இருக்கிறார் துரைமுருகன் தகவல்
''தி.மு.க., தலைவர் கருணாநிதி நன்றாக உள்ளார்,'' என, தி.மு.க., முதன்மை செயலர், துரைமுருகன் தெரிவித்தார். கருணாநிதி வீட்டின் முன், அவர் அளித்த பேட்டி: கருணாநிதி நன்றாக உள்ளார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நேற்றை விட இன்றைக்கு, பல மடங்கு வித்தியாசம் உள்ளது. அவரிடம் சமிக்சை உள்ளது. சிலர் வேண்டுமென்றே, வேண்டாத வதந்திகளை பரப்பி, மக்களை குழப்புகின்றனர்.
எங்கள் முகத்தை பார்த்தாலே, தலைவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடி யும். அவர், விரைவில் பூரண குணமடைவார் என, கருதுகிறேன்; நாளை பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, பூரண நலம் பெற பிரார்த்திக்க
சென்னை: காய்ச்சல், சிறுநீரக தொற்று காரணமாக, உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, பூரண நலம் பெற வேண்டும் என அக்கட்சியினர் பிரார்த்திக்க துவங்கி உள்ளனர். 24 மணி நேரமும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை காணவும் நலம் விசாரிக்கவும், கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குவிவதால் சென்னை கோபாலபுரம் பரபரப்புடன் காணப்படுகிறது.
சென்னை, கோபாலபுரம் வீட்டில் மருத்துவமனையில் இருப்பதை போன்று அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது தொண்டையில் பொருத்தப் பட்டிருந்த குழாய் மாற்றப் பட்டதில் நோய் தொற்று உருவாகி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக பாதையிலும் தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை அவரது உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சிறப்பு சிகிச்சை அளிக்க காவேரி மருத்துவமனையில் இருந்து நான்கு டாக்டர்கள் விரைந்து வந்தனர். திடீர் பாதிப்புக்கான காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சையும் அளித்தனர்.
இருப்பினும், அவரால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடிய வில்லை; கண் திறக்க முடியவில்லை. படுத்த படுக்கையாகவே இருக்கிறார். நோய் தொற்று குணமடைய அவரது உடல் தாங்கக் கூடிய அளவுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் அளிக்கப்பட்டு உள்ளன.இதனால் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அவசரமாக செய்தியாளர்களை அழைத்து ''கருணாநிதி,காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்டிருந்த நோய் தொற்றும் குணமாகி வருகிறது.
எனவே கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, விளக்கம் அளித்தார். டில்லியிலிருந்து நேற்று மாலை அவசரமாக சென்னை திரும்பிய கனிமொழி கூறுகையில் ''கருணாநிதி, விரைவில் தேறி விடுவார். அவருக்கு 24 நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை அளிக்க கூடிய வசதிகள் அனைத்தும் உள்ளன. அவர் குணமாகி, மீண்டும், தமிழக மக்களுக்கு பணியாற்ற வருவார்'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில் ''நேற்றை விட இன்று கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர் நலமாக உள்ளார்,'' என்றார்.பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறுகையில் ''கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தேன். காய்ச்சலுக்கான சிகிச்சை தொடர்கிறது. உடல்நிலை முன்னேறி வருவதாக டாக்டர்கள் கூறியதாக ஸ்டாலின் சொன்னார். கருணாநிதிபூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்'' என்றார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்; பூரணமாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தி.மு.க., பொதுசெயலர் அன்பழகன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் செயலர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பல தலைவர்கள், கோபாலபுரம் வந்த வண்ணம் இருந்தனர்.
கருணாநிதி வீடு அமைந்துள்ள தெரு முழுவதும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதற்கிடையில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி மகள் செல்வி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள சில கோயில்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர். தி.மு.க.,வினரும், கருணாநிதி நலம் பெற வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆதரவாளர்களுடன் அழகிரி முகாம்
● கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க தேவையான சில மருத்துவ உபகரணங்கள் காவேரி மருத்துவமனையில் இருந்து, நேற்று மாலை 'ஆம்புலன்ஸ் வேனில்' கொண்டு வரப்பட்டன
● கருணாநிதியின் மகன் அழகிரி நேற்று காலை மூன்று கார்களில் தன் ஆதரவாளர்களுடன், சென்னை வந்தார். அவர் போயஸ் கார்டனில் உள்ள மகன் தயாநிதி வீட்டிற்கு சென்று விட்டு, பின் கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்தார்.
இதையடுத்து தன் ஆதரவாளர்களிடம் 'கருணாநிதியின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் நான் நான்கைந்து நாட்கள் தங்க வேண்டியது இருக்கும்' என அழகிரி கூறியுள்ளார். அவரது ஆதரவாளர்களும் சென்னையில் தங்க திட்டமிட்டுள்ளனர்.
வதந்திகளை நம்பாதீர்: ஸ்டாலின்
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகள் எதையும் தொண்டர்களும் மக்களும் நம்ப வேண்டாம். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் தொடர் சிகிச்சையின் விளைவாக, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. டாக்டர்கள் 24 மணி நேரமும் நன்கு கவனித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும். விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவிமடுக்க வேண்டாம்; வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி-சென்னை இடையே மேலும் ஒரு தனியார் விமான சேவை

தூத்துக்குடி-சென்னை இடையே மேலும் தனியார் விமான சேவை நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி-சென்னை இடையே மேலும் தனியார் விமான சேவை நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விமான நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு நேரடியாகவும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு தனியார் விமானம் நிறுவனம் தூத்துக்குடி-சென்னை இடையே 3 நேரங்களில் விமானத்தை இயக்குகிறது. இந்த விமானம் சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு 7.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது.
7.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. தொடர்ந்து சென்னையில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்டு 12.05 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. பின்னர் மதியம் 12.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 2.15 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.சென்னையில் இருந்து 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 6.15 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.
தொடக்கம்
இந்த விமான சேவை நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடிக்கு காலை 7.09 மணிக்கு வந்தடைந்தது. தூத்துக்குடிக்கு வந்த விமானத்துக்கு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 61 பயணிகள் வந்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இறங்கிய பயணிகளுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், மேலாளர் ஜெயராமன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் சைனிமோள், விமான நிறுவன மேலாளர் பிரவின் ஆகியோர் பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் தூத்துக்குடியில் இருந்து 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
பயணிகள் மகிழ்ச்சி
இதே போன்று 2-வது விமானம் காலை 11.40 மணிக்கு 59 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்தது. அப்போது நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர். பின்னர் அந்த விமானம் 12.16 மணிக்கு 47 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. மாலையில் விமானம் 74 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்தது. 72 பயணிகள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
இதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 5 விமான சேவை கிடைத்து உள்ளது. இதனால் தூத்துக்குடி பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வியாழன், 19 ஜூலை, 2018
ஏரல் அருகே குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கை ரூ.14 லட்சத்தை தாண்டியது.
தென்திருப்பேரை,
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கை ரூ.14 லட்சத்தை தாண்டியது.
உண்டியல்கள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த 10-ந்தேதி நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர் கள் செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.நெல்லை அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் தலைமை தாங்கினார். கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் நிர்வாக அலுவலர் அஜித், அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன், அறங்காவலர்கள் சேர்மதங்கம், மோகனா, முன்னாள் ஊர் கமிட்டி தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.14 லட்சத்தை தாண்டியது
தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் கோபிநாத், உதவி மேலாளர் பிரசாத் மற்றும் வங்கி ஊழியர்கள், மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், உண்டியல்களில் இருந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
மொத்தம் ரூ.14 லட்சத்து 21 ஆயிரத்து 758-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 37 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தேர்வுக்குழு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளை தேர்வு செய்யும், மாவட்ட அளவிலான முதல் தேர்வுக் குழு கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, கடன் உதவி கேட்டு விண்ணப்பம் செய்த நபர்களிடம், சுய தொழில் தொடங்குவது தொடர்பாக, கலந்துரையாடி, வங்கிகளுக்கு பரிந்துரை செய்தார்.
பின்னர் அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டிற்கு 89 விதமான தொழில்கள் தொடங்க ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடன்பெற விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் மூலம் பெறப்பட்ட 73 விண்ணப்பங்கள், மதுரை கதர் கிராமத் தொழில் ஆணையம் மூலம் பெறப்பட்ட 63 விண்ணப்பங்கள் மற்றும் நெல்லை கதர் கிராமத் தொழில்கள் வாரியம், மூலம் பெறப்பட்ட 73 விண்ணப்பங்கள் என மொத்தம் 209 விண்ணப்பங்கள் நேர்முகத் தேர்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய விண்ணப்பங்களை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
மேலும், கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், தொழில் முனைவோர் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் ஸ்வர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் விஜயகுமார், மத்திய அரசு குறு, சிறு தொழில் நிறுவன உதவி இயக்குனர் ஜெரினாபப்பி மற்றும் வங்கி மேலாளர்கள், காதர் கிராம தொழில் ஆணையம் மற்றும் காதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதன், 18 ஜூலை, 2018
செவ்வாய், 17 ஜூலை, 2018
ஏரலில் காமராஜர் பிறந்த நாள் விழா
காங்கிரஸ் கட்சி சார்பில் ஏரலில் நடந்த காமராஜரின் பிறந்தநாள் விழாவில், ஏழைகளுக்கு தையல் மிஷின், குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 116வது பிறந்த நாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏரலில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.
இவ் விழாவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில், ‘’காமராஜர் காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் இங்கே அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் இன்றைய இளைஞர்கள் காமராஜரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தனுஸ்கோடி ஆதித்தன், ‘’தமிழகத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் காமராஜர். . இரண்டு முறை பிரதமராக வாய்ப்பு கிடைத்த போதும் அதை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவைத்தவர்.. தன்னலம் கருதாது மக்கள் மக்கள் என்று மக்களுக்காகவே வாழ்ந்தவர். 1960வது களில் நான் மாணவர் காங்கிரசில் இருந்த போது மூன்று முறை காமராஜரை வைத்து பொது கூட்டம் நடத்தியதை நான் பெருமையாக கருதுகிறேன். வாழும் போதும் சரி இறக்கும் போதும் சாரி தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாதவர் காமராஜர், ‘’ என்று பேசினார்.
மேலும் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர்கள் சிரஞ்சீவி, செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், சந்திரசேகரன், காமராஜ், தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் ஸ்ரீராமன், சங்கர், ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் தென்மண்டல அமைப்பாளர் ஆஸ்கர்; பிரடி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடசென்னை மாவட்ட தலைவர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். வட்டாரத் தலைவர்கள் ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, சாத்தான்குளம் ஜனார்த்தனம், திருச்செந்தூர் சற்குரு, ஆழ்வை கோதண்டராமன், உடன்குடி ஜோசப் துரைராஜ், காயல்பட்டினம் முத்துவாப்பு ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
விழாவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் சார்பில் 10 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், ஆதரவற்ற மற்றும் ஏழை பெண்கள் 30 பேருக்கு இலவச தையல் மிஷின், 10 அயர்ன் பாக்ஸ், 2500 குக்கர் மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு ஸ்கூல் பேக் உள்ளிட்ட பலவேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், முத்த காங்கிரஸ் தலைவர்களான மங்கலகுறிச்சி அருணாசலம், ஆதிநாதபுரம் சுப்பிரமணியன், ஆறுமுகநேரி சண்முகம், சாத்தான்குளம் ராஜகோபால், உடன்குடி ஆதித்தன் ஆகியோருக்கு பண முடிப்பு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி நன்றி கூறினார்.
விழாவில் காங்கிரஸ் வட்டார, நகர, நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.
திங்கள், 16 ஜூலை, 2018
ஏரல் அருகே பண்டாரவிளையில் ரூ.30 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட அடிக்கல்
ஏரல் அருகே பண்டாரவிளையில் ரூ.30 லட்சம் மதிப்பில் இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
பெருங்குளம் பேரூராட்சிக்குள்பட்ட பண்டாரவிளையில் ரூ.19 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பில் மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார். பேரூராட்சி செயல்அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்றார். தனி அலுவலர் கோபிவெங்கடாசலம், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி செயற்பொறியாளர்
பெருங்குளம் பேரூராட்சிக்குள்பட்ட பண்டாரவிளையில் ரூ.19 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பில் மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார். பேரூராட்சி செயல்அலுவலர் ரமேஷ்பாபு வரவேற்றார். தனி அலுவலர் கோபிவெங்கடாசலம், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் ஆறுமுகநயினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி செயற்பொறியாளர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...









