செவ்வாய், 30 மே, 2017

ஏரல், ஸ்ரீவைகுண்டம்சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்து இருந்தன.



தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டல்கள், மருந்து கடைகள் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டல்கள், மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.
தூத்துக்குடி, 

மத்திய அரசு புதிதாக அறிவித்து உள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில், ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்துக்கு குறைவாக உள்ள சிறிய உணவகங்களுக்கான வரி 0.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், ஆண்டு விற்பனை ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு 2 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ஏ.சி. வசதி உள்ள சாதாரண ஓட்டல்களுக்கு 8 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த பலமடங்கு வரி உயர்வை கண்டித்து ஓட்டல் உரிமையாளர்கள் நேற்று ஒரு நாள் ஓட்டல்களை அடைத்து போராட்டம் நடத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 120 ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் வழக்கம் போல் நேற்று திறந்து இருந்தன. இதனால் அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மருந்து வணிகர்கள்

இதேபோன்று அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும், மருந்து கொள்முதல், விற்பனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய புதிய சேவை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதனை கண்டித்து மருந்து வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 400 மருந்துகடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் மருந்து பொருட்களை வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இதேபோல், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள 155 மருந்து கடைகளும் மூடப்பட்டன. கோவில்பட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களும் திறக்கப்படவில்லை.

கயத்தாறில் அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. நாற்கர சாலையில் உள்ள பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டன. டீக்கடைகள், சிறிய ஓட்டல்கள் திறந்து இருந்தன. கழுகுமலை, எட்டயபுரத்தில் அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. விளாத்திகுளத்தில் பெரும்பாலான மருந்து கடைகள் மூடப்பட்டன.

திருச்செந்தூர்

திருச்செந்தூரில் அனைத்து ஓட்டல்களும் திறந்து இருந்தன. பெரும்பாலான மருந்து கடைகள் மூடப்பட்டன. காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர், செய்துங்கநல்லூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. ஸ்ரீவைகுண்டம், ஏரல், சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்து இருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 8ல் பள்ளிகள் திறப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்
ஜூன் 8ல் பள்ளிகள் திறப்பு
7ம் தேதி வைகாசி விசாகத்தையொட்டி விடுமுறை
தூத் துக் குடி, மே 31:
தூத் துக் குடி மாவட் டத் தில் ஜூன் 8ம் தேதி பள் ளி கள் திறக் கப் ப டு கின் றன.
தமி ழ கத் தில் கோடை விடு மு றைக்கு பின்பு அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி கள் ஆண் டு தோ றும் ஜூன் 1ம் தேதி திறக் கப் ப டு வது வழக் கம். இந் தாண்டு வெயி லின் தாக் கம் அதி கம் இருந் த தால் பள் ளி க ளுக்கு முன் கூட் டியே விடு முறை விடப் பட் டது. இத னி டையே, ஜூன் 1ம் தேதி பள் ளி கள் திறக் கப் ப டும் என எதிர் பார்க் கப் பட் டது. ஆனால், வெயி லின் தாக் கம், குடி நீர் தட் டுப் பாடு போன் ற வற் றால் பள் ளி கள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு மாற் றப் பட் டது. இத னால் பள் ளி கள் அனைத் தும் ஜூன் 7ம் தேதி திறக் கப் பட இருந் தது. ஆனால், அன் றைய தினம் (7ம் தேதி) திருச் செந் தூர் சுப் பி ர ம ணிய சுவாமி திருக் கோ யி லில் நடை பெ றும் வைகாசி விசா கத்தை முன் னிட்டு மாவட் டத் துக்கு உள் ளூர் விடு முறை அளித்து கலெக் டர் ரவிக் கு மார் உத் த ர விட் டுள் ளார்.
இதை ய டுத்து தூத் துக் குடி மாவட் டத் தில் மட் டும் பள் ளி கள் அனைத் தும் ஜூன் 8ம் தேதி திறக் கப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ளது.

தூத்துக்குடி மாவட்த் தில் மொத்தம் உள்ள மருந்து கடை க ளில் 400க்கும் மேற் பட்டவை அடைக்கப்பட்டிருந்தன. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஆன் லைனில் மருந்து விற்பனையை கண்டித்து

மத் திய அர சின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஆன் லைனில் மருந்து விற் ப னையை கண் டித்து தூத் துக் கு டி யில் ஓட் டல் க ளும், மருந்து கடை க ளும் மூடப் பட் டி ருந் தன. கடைசி படம்: கோவில் பட்டி மெயின் ரோட் டில் அடைக் கப் பட் டி ருந்த மருந்து கடை கள்.
தூத் துக் குடி, மே 31:
மத் திய அர சின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஆன் லைனில் மருந்து விற் ப னையை கண் டித்து தூத் துக் குடி, கோவில் பட்டி உள் ளிட்ட மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் உள்ள பெரும் பா லான ஓட் டல் கள், மருந் து க டை கள் அடைக் கப் பட் டி ருந் தன.
நாடு முழு வ தும் ஜூலை 1 முதல் அம லுக்கு வரும் மத் திய அர சின் ஜிஎஸ்டி வரி விதிப் புக் கும், மருந் து களை ஆன் லை னில் விற் ப தற் கும் கடும் எதிர்ப்பு கிளம் பி யுள் ளது. வர்த் த கர் கள், வர்த் தக அமைப் பு கள் சார் பில் பல் வேறு போராட் டம் நடந்து வரு கி றது. அந்த வகை யில் தூத் துக் குடி மாவட் டத் தில் மொத் தம் உள்ள மருந்து கடை க ளில் 400க்கும் மேற் பட் டவை அடைக் கப் பட் டி ருந் தன. ஒரு சில பெரிய பெரிய மருத் து வ ம னை யு டன் இணைந்த மருந் த கங் கள் மட் டுமே திறந் தி ருந் தன.
இதே போல், மாவட் டம் முழு வ தும் உள்ள பெரும் பா லான ஓட் டல் கள், நைட் கிளப் பு கள், சிறிய உண வ கங் கள் அடைக் கப் பட் டி ருந் தன. மேலும் இது கு றித்த அறி விப்பு முன் னரே வெளி யி டப் பட் டி ருந் தது. இருப் பி னும் தொழில் ந க ர மான தூத் துக் கு டி யில் நேற்று ஒரே நாளில் 120க்கும் மேற் பட்ட ஓட் டல் கள் மூடப் பட் டி ருந் த தால் தொழி லா ளர் கள், தனி யார் மற் றும் அரசு நிறு வன, தொழிற் சாலை ஊழி யர் கள், வெளி யூர் பொது மக் கள், கல் லூரி பள்ளி அட் மி ஷ னுக்கு வந்த பொது மக் கள், பெற் றோர், மாணவ, மாண வி கள் என அனைத் துத் தரப் பி ன ரும் கடும் அவ திக்கு உள் ளா கி னர்.
கோவில் பட்டி:
கோவில் பட் டி யில் உள்ள அனைத்து ஓட் டல் க ளும் நேற்று அடைக் கப் பட் டி ருந் தன. இதே போல் ஆன் லைன் வர்த் த கத் திற்கு எதிர்ப்பு தெரி வித்து மருந் துக் கடை கள் முற் றி லும் மூடப் பட் டன. கோவில் பட் டி யில் அண்ணா பஸ் நிலைய மெயின் ரோடு பகுதி, புது ரோடு, மெயின் ரோடு, கட லை யூர் ரோடு, புதுக் கி ரா மம், மார்க் கெட் ரோடு போன்ற அனைத்து இடங் க ளி லும் உள்ள ஓட் டல் கள் நேற்று மூடப் பட் டி ருந் தன.
இதே போல் ஆன் லைன் மூலம் மருந்து விற் கப் ப டும் என்ற மத் திய அர சின் உத் த ரவை ரத் து செய்ய வலி யு றுத்தி மாவட் டத் தில் உள்ள பெரும் பா லான மருந்து கடை க ளும் நேற்று அடைக் கப் பட் டி ருந் தன. இதை யொட்டி கோவில் பட் டி யில் மாவட்ட மருந்து வணி கர் கள் சங் கம் சார் பில் சங்க மாவட் டத் தலை வர் ஜான் பி ரிட்டோ தலை மை யில், தாலுகா தலை வர் திருப் ப தி ராஜா, செய லா ளர் பால கி ருஷ் ணன், பொரு ளா ளர் குரு ரா ம சாமி, மருந்து சில் லறை வியா பா ரி கள் சங்க தலை வர் ஜெக தீஸ் முன் னி லை யில் மருந்து கடை களை அடைத்து உரி மை யா ளர் கள் போராட் டத் தில் ஈடு பட் ட னர். இதை யொட்டி நக ரில் மெயின் ரோடு, தெற் கு ப ஜார், மாதாங் கோ வில் தெரு, புது ரோடு, மார்க் கெட் ரோடு, ரயில் நி லைய ரோடு, கட லை யூர் ரோடு, மந் தித் தோப் பு ரோடு, பசு வந் த னை ரோடு, புதுக் கி ரா மம் போன்ற பகு தி யில் உள்ள அனைத்து மருந்து கடை க ளும் அடைக் கப் பட் டி ருந் தன.
நாச ரேத்:
இதே போல், நாச ரேத் தில் பஸ் நிலை யம், கே.வி.கே, சாமி சிலை, சந்தி பஜா ரில் உள்ள பெரும் பா லான ஓட் டல் கள், மருந்து கடை கள் அடைக் கப் பட் டி ருந் தன. இத னால் பொது மக் கள் பெரி தும் சிர மத் துக்கு உள் ளா கி னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்
ஓட்டல்கள், மருந்து கடைகள் அடைப்பு
நாச ரேத் தில் மூடப் பட் டி ருந்த ஓட் டல் கள், மருந்து கடை கள்.

ஞாயிறு, 28 மே, 2017

Makkah Live HD - قناة القران الكريم

தூத்துக்குடியில் தி.மு.க. செயலாளர் பெரியசாமி உடலுக்கு ஸ்டாலின்–கனிமொழி அஞ்சலி இன்று காலை உடல் அடக்கம்



தி.மு.க. செயலாளர் பெரியசாமி உடலுக்கு ஸ்டாலின்–கனிமொழி அஞ்சலி இன்று காலை உடல் அடக்கம்
தி.மு.க. மாவட்ட செயலாளர் மறைந்த என்.பெரியசாமி உடலுக்கு தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின்,
தூத்துக்குடி, 
 கனிமொழி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவருடைய உடல் அடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.
பெரியசாமி மரணம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த என்.பெரியசாமி (வயது 79) கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மு.க.ஸ்டாலின்
நேற்று அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு நேற்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று காலை 11 மணி அளவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போல்பேட்டையில் உள்ள என்.பெரியசாமி வீட்டுக்கு வந்தார். அவர் என்.பெரியசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து வந்த கனிமொழி எம்.பியும், பெரியசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு, பொன்.முத்துராமலிங்கம், பூங்கோதை, தங்கம் தென்னரசு, மதிவாணன், தமிழரசி, முன்னாள் எம்.பி. ஜெயதுரை, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி. அப்பாதுரை, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், வசந்தகுமார், கருணாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அப்பாவு, மார்க்கண்டேயன், என்.கே.பெருமாள், கருப்பசாமி பாண்டியன், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், தட்சணமாற நாடார் சங்க தலைவர் சபாபதி நாடார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் பொதுமக்கள், உறவினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று உடல் அடக்கம்
மரணம் அடைந்த பெரியசாமியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு போல்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

தென்திருப்பேரையில் ஆற்றில் மூழ்கி தங்கையுடன், புதுமாப்பிள்ளை சாவு

வு

தென்திருப்பேரையில் ஆற்றில் மூழ்கி தங்கையுடன், புதுமாப்பிள்ளை சாவு
தென்திருப்பேரையில், ஆற்றில் மூழ்கி தங்கையுடன், புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
தென்திருப்பேரை, 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கருணாநிதி நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26). இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மிட்டாய் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும், தென்திருப்பேரை மாவடிபண்ணையை சேர்ந்த மாரியப்பன்–நாராயண வடிவு தம்பதியின் மகள் ஆனந்திக்கும்(21) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் செந்தில்குமார் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து வந்தார். எனவே அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தென்திருப்பேரை மாவடிபண்ணையில் உள்ள தனது மாமனாரின் வீட்டுக்கு சென்றார். அப்போது செந்தில்குமார், தனது தங்கை ராதாவையும்(18) தன்னுடன் அழைத்து சென்றார்.
ஆற்றில் மூழ்கி அண்ணன்–தங்கை பலி
நேற்று மாலையில் செந்தில்குமார், ஆனந்தி, ராதா மற்றும் ஆனந்தியின் தாயார் உள்ளிட்ட அனைவரும் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக செந்தில்குமார், அவருடைய தங்கை ராதா ஆகிய இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அனைவரும் கூச்சலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய ராதாவை மீட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் செந்தில்குமாரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சில வினாடிகளில் செந்தில்குமார், ராதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆற்றில் மூழ்கி பலியான செந்தில்குமார், ராதா ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 2 மாதத்தில் மனைவியின் கண் எதிரே புதுமாப்பிள்ளை, தங்கையுடன் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

வெள்ளி, 26 மே, 2017

ஏரல் அருகே தொழிலாளி பைக் திருட்டு

ஏரல் அருகே
தொழிலாளி பைக் திருட்டு
ஏரல், மே 27:ஏரல்
அருகே மாரமங்கலத்தை சேர்ந்த பெர்க் மாஸ்ட் மகன் இரு த ய ராஜ்(29). கூலி தொழி லா ளி யான இவர் 24ம் தேதி இரவு வீட்டு முன்பு பைக்கை நிறுத் தி யி ருந் தார். 25ம் தேதி காலை யில் பைக்கை பார்த்த போது திருட்டு போனது தெரி ய வந் துள் ளது. இது கு றித்து இரு த ய ராஜ் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ சண் மு க சுந் த ரம் விசா ரணை நடத்தி பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடி வரு கி றார்.

வியாழன், 25 மே, 2017

Thoothukudi DMK District Secretary N.Periyasamy dies, MDMK Chief Vaiko P...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி உடலுக்கு ஸ்டாலின...

தூத்துக்குடியில் திமுகவை வளர்த்த பெரியசாமி மரணம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்



தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் என்.பெரியசாமி. இவர்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை என்.பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

தட்டார் மடத்தை சேர்ந்த பெரியசாமி 30 ஆண்டுகளாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். நெருக்கடி நேரத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். மேலும் திமுக தலைவர் கலைஞரால் முரட்டு பக்தன் என அழைக்கப்பட்டவர்.

என்.பெரியசாமி 1989, 1991 தேர்தல்களில் வெற்றி பெற்று தூத்துக்குடி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் 1996ல் நகராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும் திமுகவின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகள் கீதாஜீவன் தற்போது தூத்துக்குடி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.  

ஞாயிறு, 21 மே, 2017

அனிதா ராதாகிருஷ்ணன் முயற்சியால் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடை அகற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

அனிதா ராதாகிருஷ்ணன் முயற்சியால் திருச்செந்தூரில் டாஸ்மாக் கடை அகற்றம்: பொதுமக்கள் மகிழ்ச்சி















திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூராக மூன்று மதுபானக்கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டரிடம் இந்த கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.
மேலும் இந்த மாதம் 25-ந் தேதி திருச்செந்தூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் நெடுஞ்சாலைதுறை இணை இயக்குநர் முன்னிலையில் மதுபானக் கடையை நெடுஞ்சாலையில் இருந்து அளந்து பார்க்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி 500 மீட்டருக்குள் அதாவது 270மீட்டர் தூரத்தில் கடை செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து நேற்று இந்த கடையை மாவட்ட மேலாளர் சௌந்திர பாண்டியன் மூட உத்திரவிட்டார். அந்த கடை நேற்று பூட்டப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சந்தோ‌ஷமடைந்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முயற்சியால் மூடப்பட்டதால் பொது மக்கள், மற்றும் பக்தர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டங்களில் ஏரல், முக்காணி, ஆத்தூர், திருச் செந்தூர் வல் ல நாடு, கொங்க ராய குறிச்சி, ஸ்ரீவை குண்டம், ஆழ்வார் திருநகரி, தென் திருப்பேரை, குரும்பூர், நாசரேத்,உள் ளிட்ட பகுதி களில்

தூத் துக் குடி மாவட் டத்தை பொறுத் த வரை விவ சா யமே பிர தான தொழி லாக உள் ளது.  தூத்துக் குடி மாவட் டத் தில்  டத் தில் 40 ஆயி ரம் ஏக் க ரும், தூத் துக் குடி மாவட் டத் தில் 46 ஆயி ரத்து 107 ஏக் கர் விவ சாய விளை நி லங் க ளும் உள் ளன.
தூத் துக் குடி மாவட் டத் தின் தென் ப கு தி க ளான வல்ல நாடு, கொங்க ராய கு றிச்சி, ஸ்ரீவை குண் டம், ஆழ்வார் திரு நகரி, தென் திருப் பேரை, குரும்பூர், நாச ரேத், ஏரல், முக்காணி, ஆத்தூர், திருச் செந் தூர் உள் ளிட்ட பகு தி க ளில் தாமி ர ப ரணி ஆற் றின் பாச னத்தை நம்பி நெல், வாழை, வெற்றிலை போன் றவை சாகு படி செய் யப் பட்டு வந் தது. மரு தூர் அணை யின் மேலக் கால்-கீழக் கால் மற் றும் ஸ்ரீவை குண் டம் அணை யின் வட கால்-தென் கால் பாசன வாய்க் கால் களை நம்பி மாவட் டத் தில் இந் நி லங் க ளில் பெரும் பா லும் நெல் சாகு ப டியே செய் யப் பட்டு வந் தது.
கடந்த 15வரு டங் க ளுக்கு முன்பு வரை கார், பிசா னம், அட் வான்ஸ் கார் என முப் போக நெல் ப யிர் சாகு படி முறை த வ றா மல் நடை பெற்று வந் தது. ஆனால் கால மாற் றத் தி னால் தாமி ர ப ரணி பாச னத் தில் நெல் ப யிர் சாகு படி கொஞ் சம் கொஞ் ச மாக முடங் கிப் போய் விட் டது.
விவ சா யத் திற் கான தண் ணீரை தொழிற் சா லை க ளுக்கு தாரை வார்த்து வரு வ தால் முப் போக நெல் ப யிர் சாகு படி தற் போது ஒரு போக நெல் ப யிர் சாகு ப டி யாக மாறிப் போய் விட் டது. கடந்த 10 வரு டங் க ளுக் கும் மேலாக இதே நிலை நீடித்து வரு வ தால் தாமி ர ப ரணி பாச னத் தில் நெல் வி ளைச் சல் பல ஆ யி ரம் குவிண் டால் குறைந் து போ ன து டன், பல கோடி ரூபாய் வரு வாய் இழப் பும் ஏற் பட்டு விவ சா யி கள் வேலை யின்றி பாதிக் கப் பட் டுள் ள னர்.
தண் ணீர் பற் றாக் கு றை யால் நெல் விளைச் சல் குறைந் து போன நிலை யில் சில பல விவ சா யி கள் நிலத் தடி நீரை ஆதா ர மாக கொண்டு வாழை, கத் தரி, வெண்டை, பூச் செ டி கள் போன் ற வற்றை தற் போது சாகு படி செய்து வரு கின் ற னர். இந் நி லை யில், தாமி ர ப ரணி பாச னத் தில் கடந்த 8மாதங் க ளாக நெல் வி ளைச் சல் நடை பெ று வ தற்கு வழி யில் லா மல் போன தால் நெல் விளை யும் வயல் கள் எல் லாம் தற் போது சீமை க ரு வே ல ம ரங் க ளின் கூடா ர மாக மாறி வரு கின் றன. தண் ணீ ரின்றி கிடக் கும் வயல் வெ ளி க ளில் அவ் வப் போது திடீ ரென்று பெய் து வ ரும் கோடை மழை யால் சீமை க ரு வே ல ம ரங் கள் அடர்த் தி யாக செழித்து வளர்ந்து வரு கின் றன.
மதுரை உயர் நீ தி மன்ற கிளை யின் உத் த ர வால் தமி ழ கம் முழு வ தும் அனைத்து மாவட் டங் க ளி லும் சீமை க ரு வேல மரங் கள் அகற் றப் பட்டு வந் தது. இந்த உத் த ர வினை மதித்து சில பல விவ சா யி க ளும் தங் க ளது வயல் க ளில் முளைத் தி ருந்த சீமை க ரு வேல மரங் களை வெட்டி அப் பு றப் ப டுத்தி வந் த னர். ஆனால் சீமை க ரு வேல மரங் களை அகற்ற திடீ ரென்று இடைக் கால தடை விதிக் கப் பட்டு விட் டது.
இத னால் தற் போது விவ சா யி க ளும் சீமை க ரு வேல மரங் களை அகற்ற முன் வ ரா மல் போய் விட் ட னர். இதன் கா ர ண மாக வச வப் ப பு ரம், ஆழி குடி, வல் ல நாடு, மணக் கரை, நடு வக் கு றிச்சி, கொங் க ரா ய கு றிச்சி, தோழப் பண் பண்ணை, பத் ம நா ப மங் க ளம், ஸ்ரீவை குண் டம், பேட் து ரைச் சா மி பு ரம், நள ரா ஜ பு ரம், ஆழ் வார் தோப்பு, ஆழ் வார் தி ரு ந கரி, தென் தி ருப் பேரை உள் ளிட்ட பெரும் பா லன பகு தி க ளி லுள்ள வயல் க ளில் சுற் றுச் சூ ழ லுக்கு கேடு வி ளை விக் கும் சீமை கரு வேல மரங் கள் அடர்ந்து வளர்ந்து வரு கின் றன.
விவ சாய விளை நி லங் கள், பொது இ டங் கள் மற் றும் சாலை யோ ரங் க ளில் வளர்ந்து கிடக் கும் சீமை கரு வேல மரங் களை தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி யா ளர் கள் மூல மாக அகற் று வ தற்கு மாவட்ட நிர் வா கம் முன் வ ர வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
நெல்ைல, தூத்துக்குடி மாவட்டங்களில்
முப்போகமும் முடங்கிய தாமிரபரணி பாசனம்
வைகுண் டம் வய லில் முளைத் துள்ள சீமை கரு வே ல ம ரங் கள்.
கருவேல மரமாக மாறிவரும் வயல்வெளிகள்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பீர்கனி(வயது 65).ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது

ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது

ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் கேட்டு தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் பீர்கனி(வயது 65). இவர் சங்குகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதேபோல் நேற்று காலை தூத்துக்குடி கடற்கரை சாலையில் நடை பயிற்சிக்கு சென்றார்.

7.30 மணி அளவில் அவர் கடற்கரை சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே வந்து கொண்டிருந்த பீர்கனியை 3 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது. அங்கு இருந்தவர்கள் பீர்கனியை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

காலை 8 மணிக்கு பீர்கனியின் மகன் மைதீன்(33) செல்போன் எண்ணிற்கு ஒரு போன் வந்துள்ளது.

இதில் பேசிய மர்ம நபர், நாங்கள் உனது தந்தையை கடத்தி உள்ளோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிரோடு விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைதீன் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மைதீன் செல்போனிற்கு வந்த எண்ணை கண்காணித்தபோது, அது முதலில் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் இருப்பதாகவும், பின்னர் நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் இருப்பதாகவும் சிக்னல் காட்டியது. கடைசியாக சாத்தான்குளம் பன்னம்பாறை பகுதியில் அந்த சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனால் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மீட்பு; 2 பேர் கைது

இதையடுத்து மதியம் 1.25 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை பகுதி சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு காரை அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது காரில் பீர்கனி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக செயல்பட்டு காரில் இருந்து பீர்கனியை மீட்டனர். தொடர்ந்து அவரை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த செழியன் மகன் மதன்(30) என்பதும், மதுரை பாவை நகரை சேர்ந்த முருகன் மகன் வீரசுப்பு (32) என்பதும் தெரிய வந்தது. போலீசார் அவர்களை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.

வெள்ளி, 19 மே, 2017

மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சண்முகநாதன் எம்எல்ஏ ஆறுதல்

மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சண்முகநாதன் எம்எல்ஏ ஆறுதல்
தூத் துக் குடி, மே 20:
செய் துங் க நல் லூர் அருகே மின்னல் தாக்கி காய மடைந்து நெல்லை அரசு மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற்று வரும் விவ சா யி களை சண் மு க நா தன் எம் எல்ஏ சந் தித்து ஆறு தல் கூறி னார்.
வை குண் டம் சட்ட மன்ற தொகுதி, கருங் குளம் ஒன் றி யம், புளி யங்குளம் கிரா மத்தை சேர்ந்த 16 விவ சா யி கள் நேற்று முன் தி னம் மின் னல் தாக்கி காய ம டைந் த னர்.
இவர் கள் அனை வரும் நெல்லை அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ மனையில் சிகிச்சை பெற்று வரு கின் ற னர். அவர் களை வை குண் டம் சட் ட மன்ற உறுப் பினர் எஸ்பி.சண் மு க நா தன் நேரில் சென்று பார்த்து ஆறு தல் கூறி பழங் கள் வழங் கினார்.
அவ ரு டன் மாவட்ட ஜெ.பேரவை இணைச் செ ய லா ளர் ராஜ் நாராயணன், வக் கீல் திருப் பாற் க டல், ஆறு முக நயி னார், பால ஜெ யம், சாம் ராஜ் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
மின் னல் தாக்கி நெல்லை அரசு மருத் து வ ம னையில் சிகிச்சை பெற்று வரும் விவ சா யி களை சண்முகநா தன் எம் எல்ஏ சந் தித்து ஆறு தல் கூறி னார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழ வல்லான், ஆத்தூர், சிவகளை, கொங்கராய குறிச்சி -44 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில்
44 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி
தூத் துக் குடி, மே 20:தூத்
துக் குடி மாவட் டத் தில் 44 அரசு பள் ளி கள் 100% தேர்ச்சி பெற் றுள் ளன.
தூத் துக் குடி மாவட் டத் தில் 10ம் வகுப்பு தேர்வு முடி வு கள் வெளி யி டப் பட் டுள் ளன. தற் போது புதிய முறை யில் தேர்வு முடி வு கள் வெளி யி டப் பட் டா லும், ரேங் கு கள் கிடை யாது என்று அறி விக் கப் பட் ட தா லும் பர ப ரப்பு ஏதும் இல் லா மல் அமை தி யா கவே வெளி யா னது.
இந் நி லை யில் மாவட் டம் முழு வ தும் மொத் தம் 294 பள் ளி களை சேர்ந்த மாணவ மாண வி யர் பத் தாம் வகுப்பு தேர்வு எழு தி னர். இதில் 157 பள் ளி கள் 100 சத வீத தேர்ச் சியை பெற் றுள் ளன.
முழு வ தும் 82 அரசு பள் ளி கள் தேர் வில் கலந்து கொண் ட தில் 44 அரசு பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளன. இதில் தூத் துக் குடி சாமு வேல் பு ரம் மாந க ராட்சி பள்ளி, கோவில் பட்டி நக ராட்சி பள்ளி, சிவ ஞா ன பு ரம், தரு வை கு ளம், வான ர முட்டி, வேம் பார், செங் கோட்டை, வேப் ப லோடை, நாலாட் டின் பு தூர், எட் ட ய பு ரம், காடல் குடி, காளம் பட்டி, கொடுங் கை பட்டி, கொல் லங் கி ணறு, படர்ந் த புளி ஆகிய ஊர் க ளில் உள்ள அரசு பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளன.
இது போல மாவட் டத் தில் பரி வல் லிக் கோட்டை, வெம் பூர், சிதம் ப ரம் பட்டி, கோவில் பட்டி லாயல் மில் கா லனி பள்ளி, மேல் மாந்தை, வடக்கு இலந் தை கு ளம், வேட நத் தம், சென் ன ம ரெட் டி பட்டி, படுக் ப் பத்து, வாழவல்லான், கீழ் பூவாணி, ராமானு ஜம் பு தூர், ஆத்தூர், சிவ களை, கொங்கராய குறிச்சி, காயா மொழி, கொம் ம டிக் கோட்டை, நடு நா லு மூலை கிணறு, கால் வாய், காசி லிங் க பு ரம், வெங் கட் ராமானு ஜம் புதூர், அனவரத நல்லூர், சுண்டங் கோட்டை, பொட் டல் காடு, பன் னம் பாறை, புதுக் கு ளம், கொம் பன் கு ளம், தேரிக் கு டி யி ருப்பு ஆகிய பகு தி க ளில் உள் ள அ ரசு உயர் நிலை மற் றும் மேல் நிலை பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளன.
கடந்த ஆண்டை விட இது அதி க மான தேர்ச் சி யா கும். வெற் றி க ளுக்கு கார ண மான அரசு பள்ளி தலை மை யா சி ரி யர் கள், ஆசி ரி யர் களை மாவட்ட முதன்மை கல்வி அலு வ லர் ஆனந்தி மற் றும் கல்வி அதி கா ரி கள் பாராட் டி னர்.

வியாழன், 18 மே, 2017

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 480க்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு

8

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது.  451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது. 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது. 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது. 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 96.2% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 94,167 மாணவ, மாணவியர்கள் தேர்வுகளை எழுதினர்.

பிளஸ் 2 தேர்வுக்கு அறிவித்தது போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் இடம்பெறாது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவு தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்களும் செல்போனில் தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது. 451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது. 426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது. 401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது. 301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது.

தமிழகம் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . இதில் மாணவர்கள் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 96.2% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.8% கூடுதல் ஆகும். 5059 பள்ளிகள் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 5059 பள்ளிகளில் 1557 அரசு பள்ளிகள் அடங்கும்.

விருதுநகர் மாவட்டம் முதலிடம்

98.55% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.   தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.59 ஆக உள்ளது.  மேலும் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம்
பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் 2-வது இடம்- 98.17% தேர்ச்சி
* ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடம்- 98.16% தேர்ச்சி
* ஈரோடு மாவட்டம் 4-வது இடம்- 97.97% தேர்ச்சி
* தூத்துக்குடி மாவட்டம் 5-வது இடம்- 97.16% தேர்ச்சி

பாட வாரியாக 100க்கு 100

* தமிழ் பாடத்தில் 69 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* கணக்கு பாடத்தில் 13759 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* அறிவியல் பாடத்தில் 17481 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* சமூக அறிவியல் பாடத்தில் 61,115 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர்.
* ஆங்கிலப் பாடத்தில் யாரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.

தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, kalvi.dinakaran.com  ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம். 

10ஆம் வகுப்பு ரிசல்ட் முடிவிலும் விருதுநகர் தான் முதலிடம்.. கடலூருக்கு கடைசி இடம்!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதிலும் அதிக தேர்ச்சி சதவீதத்தை கொடுத்து விருதுநகர் மாவட்டமே முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

பிளஸ் 2 தேர்வை போலவே பத்தாம் வகுப்பு தேர்விலும், ரேங்க் முறை அறிவிக்கப்படவில்லை.தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ப்ளஸ் டூ ரிசல்ட்டிலும் விருதுநகர் மாவட்டமே முதலிடம் பெற்றது. கன்னியாகுமரி 98.17% எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ராமநாதபுரம் 98.16% எடுத்து மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த ஈரோடு மாவட்டம் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிலும் கடலூர் மாவட்டம் 88.7 சதவீதம் பெற்று கடைசி இடத்தையே பிடித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவிலும் கடலூர் மாவட்டம் கடைசி இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தப்படி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
இதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்டது. அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கம் போல மாணவிகள் அதிக தேர்வு பெற்றுள்ளனர். மொத்தம் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu SSLC results come out today

ஏரல் தாமிரபரணி ஆற்றுப் பாலம் தரைத் தளம் மீண்டும் உடைந்து

ஏரல், மே 19:ஏரல்
தாமி ர ப ரணி ஆற் றில் ₹16 கோடி 50 லட் சம் செல வில் உயர் மட்ட பாலம் கட் டப் பட்டு கடந்த ஆண்டு பிப்.14ம் தேதி அப் போ தைய முதல் வர் ஜெய ல லி தா வால் திறந்து வைக் கப் பட் டது. ஆனால் பாலம் திறக் கப் பட்டு மூன்றே மாதத் தில் பாலத் தின் தரைத் த ளம் உடைந் தது.
இதனை தின க ரன் பத் தி ரிக் கை யில் செய்தி படத் து டன் வெளி யிட் ட தன் எதி ரொ லி யாக தரைத் த ளம் அப் போது சீர மைக் கப் பட் டது. அதன் பின் ஒரு வ ரு டத் திற் குள் மூன்று தடவை பாலத் தின் தரைத் த ளம் உடைந்து சீர மைக் கப் பட் டுள் ளது.
இந் நி லை யில் பாலத் தின் நடு வில் தரைத் த ளம் 5 மாதங் க ளுக்கு முன் மீண் டும் உடைந்து இன் னும் சீர மைக் கப் ப டா மல் உள் ளது. இத னால் வாக னங் கள் செல்ல, செல்ல அந்த இடத் தில் சிமென்ட் தளம் உடைந்து கொண்டே செல் கி றது. தற் போது சேதுக் கு வாய்த் தான் குளத்து பகு தி யில் இருந்து ஆயி ரக் க ணக் கான லாரி கள் மணல் ஏற்றி ஏரல் ஆற் றுப் பா லம் வழி யாக தின மும் செல் கின் றன.
இத னால் பாலத் தின் தரைத் த ளம் மேலும் உடைந்து கொண்டே செல் கி றது. இத னால் பைக் கில் செல் ப வர் கள் இந்த பாலத் தில் உள்ள பள் ளத் தில் கவ னிக் கா மல் செல் லும் போது விபத் துக் குள் ளாகி வரு கின் ற னர். மேலும் பெரிய வாக னங் கள் இந்த பள் ளத் தில் கடந்து செல் லும் போது பயங் கர சத் தம் கேட் கி றது.
எனவே அதி கா ரி கள் இந்த பாலத் தில் தரைத் த ளத் தின் ஏற் பட் டள்ள உடைப்பை சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் பாலம் கட்டி ஒரு வ ரு ட மா கி யும் இன் னும் மின் வி ளக்கு பாலத் தில் அமைக் கப் ப டா மல் இருப் ப தால் பாலம் இரு ளில் மூழ்கி போய் உள் ளது. எனவே பாலத் திற்கு மின் வி ளக் கும் அமைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஏரல் பகுதி வியா பா ரி கள், பொது மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தில்
தரைத்தளம் மீண்டும் உடைந்தது
உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல்
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லம் தரைத் த ளம் மீண் டும் உடைந் துகிடக்கிறது.

ஏரல் அரசு மக ளிர் மேல் நி லைப் பள்ளி பிளஸ்2 தேர்வில்மாணவி செய்யது இர்பானா முதலிடம் பெற்றுள்ளார்.

பிளஸ்2 தேர்வு
ஏரல் அரசு மகளிர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
ஏரல், மே 19:
ஏரல் அரசு மக ளிர் மேல் நி லைப் பள்ளி பிளஸ்2 தேர் வில் 100 சத வீ தம் தேர்ச்சி பெற் றுள் ளது.
ஏரல் அரசு மக ளிர் மேல் நி லைப் பள் ளி யில் பிளஸ்2 தேர்வு எழு திய 114 மாண வி க ளும் தேர்ச்சி பெற் றுள் ள னர். மாணவி செய் யது இர் பானா 1123 மதிப் பெண் கள் பெற்று பள் ளி யில் முத லி டம் பெற் றுள் ளார்.
மாண வி கள் ஐஸ் வ ரியா மற் றும் பாத் திமா முஸ் பிரா ஆகி யோர் 1095 மதிப் பெண் கள் பெற்று இரண் டா வது இட மும், மாணவி முத் த ழகி லெட் சுமி 1093 மதிப் பெண் கள் பெற்று மூன் றா வது இட மும் பெற் றுள் ள னர். 29 மாண வி கள் 1000 மதி பெண் க ளுக்கு மேல் பெற் றுள் ள னர்.
தேர்ச்சி பெற்ற மாண வி க ளை யும், பள்ளி தலைமை ஆசி ரி யர் காளி யம் மாள் மற் றும் ஆசி ரி யர் களை ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தச ர த பாண் டி யன், பெற் றோர் ஆசி ரி யர் கழ கத் தலை வர் மோகன், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, துணைத் தலை வர் பாக் கர் அலி, இணை செய லா ளர் எட் வர்ட் மற் றும் வியா பா ரி கள், அரிமா சங் கத் தி னர் பாராட் டி னர்.

தூத்துக் குடி மாவட்டத்தில் 4 இடங்களில் இலவச பயிற்சி வகுப்புகள்

4 இடங்களில் இலவச பயிற்சி வகுப்புகள்
தூத் துக் குடி, மே 18-
டிஎன் பி எஸ்சி குருப் 2 நிலை தேர் வுக் காக தூத் துக் குடி மாவட் டத் தில் 4 இடங் க ளில் இல வச பயிற்சி வகுப் பு கள் துவக் கப் ப டு கின் றன.
தமிழ் நாடு அர சுப் ப ணி யா ளர் தேர் வா ணை யத் தால் பல் வேறு துறை க ளுக் கான 1953 டிஎன் பி எஸ்சி குருப் 2 நிலை யி லான பணிக் கா லி யி டங் கள் அறிக்கை வெளி யி டப் பட் டுள் ளது.
இத் தேர் விற்கு விண் ணப் பிக்க இறுதி நாள் மே 26ம் தேதி யா கும். இதற் கான எழுத்து தேர்வு 6.8.2017 அன்று நடக் கி றது.
இத் தேர் விற்கு விண் ணப் பிக்க ஏதே னும் ஒரு பட் டப் ப டிப்பு முடித் தி ருக்க வேண் டும். விண் ணப் பக் கட் ட ணம் ₹150, ஆதி தி ரா வி டர், ஆதி தி ரா வி டர் (அருந் த தி யர்), பழங் கு டி யி னர் ஆத ர வற்ற வித வை கள் மற் றும் மாற் றுத் தி ற னா ளி க ளுக்கு விண் ணப் பக் கட் ட ணத் தில் விலக்கு உண்டு.
பொதுப் பி ரி வி னர் தவிர ஏனைய பிரி வி னர் அனை வ ருக் கும் வயது வரம்பு கிடை யாது. பொதுப் பி ரி வி ன ருக்கு உச் ச வ யது வரம்பு 30 வய தா கும். மேலும் பிற விவ ரங் களை www.tnpsc.gov.in என்ற இணை ய த ளத் தின் வாயி லாக அறிந் து கொள் ள லாம்.
பட் டப் ப டிப்பு முடித்து இத் தேர் வின் மூலம் அர சுப் பணி வாய்ப்பு பெற ஆர் வ மு டை ய வர் கள் அனை வ ரும் விண் ணப் பிக் கு மா றும், இத் தேர் விற்கு இது வரை விண் ணப் பிக் கா த வர் கள் தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் திற்கு வேலை நாட் க ளில் நேரில் வந்து இணை ய த ளம் வாயி லாக விண் ணப் பிக்க மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் சிறப்பு ஏற் பா டு கள் செய் யப் பட் டுள் ளன.
இத் தேர் விற்கு வேலை வாய்ப் புத் துறை யின் மூலம் அரசு மக ளிர் மேல் நி லைப் பள்ளி, ஸ்ரீவை குண் டம், கோவில் பட்டி, திருச் செந் தூர் மற் றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கம், தூத் துக் குடி ஆகிய 4 மையங் க ளில் இல வச பயிற்சி வகுப் பு கள் ஜூன் மற் றும் ஜூலை மாதங் க ளில் நடை பெற உள் ளது. இப் ப யிற்சி வகுப் பு க ளில் சேர விருப் ப முள் ள வர் கள் employtut@gmail.com என்ற மின் னஞ் சல் முக வ ரி யில் முன் ப திவு செய்து கொள் ள லாம்.இத் த க வலை கலெக் டர் ரவிக் கு மார் தெரி வித் துள் ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு
கலெக்டர் தகவல்

புதன், 17 மே, 2017

தூத்துக்குடி மாவட்டத்தில், தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

ம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில், தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில், தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தொழிற்பயிற்சி நிலையம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள்(ஐ.டி.ஐ) மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைன் மூலம் வருகிற 31–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 8–ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ–களில் சேர ஷ்ஷ்ஷ்.sளீவீறீறீtக்ஷீணீவீஸீவீஸீரீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிடுதல் வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

கலந்தாய்வு 

மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மதிப்பெண் மற்றும் இனஒதுக்கீட்டின்படி மாவட்ட கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியல் இணையதளத்தில் ஜூன் முதல் வாரம் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலின்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு விண்ணப்பித்த மாணவர்கள் கோரம்பள்ளம், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வைத்து நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்தாய்வுக்கு வரும் போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் அசல் மாற்றுசான்றிதழ், 8, 10–ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், அசல் சாதி சான்றிதழ், சிறப்பு நிலை முன்னுரிமை இருப்பின் அதற்கான அசல் சான்று கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழ்களில் 5 நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5–ம் கொண்டு வரவேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச திட்டங்கள், உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 0461–2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும், என அவர் தெரிவித்து உள்ளார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...