வெள்ளி, 30 மார்ச், 2012

ஏரல் அருகே அரசு பள்ளி சூறை

ஏரல்: ஏரல் அருகே அரசு பள்ளி சூறை யாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார் கள்.
ஏரல் அருகே  உமரிக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் வெளிப்பகுதி யில் மாணவர்கள் உட்கார்ந்து படிக்கவும், சாப்பிடவும் சிமென்டால் ஆன பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மர்ம கும்பல் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட சிமென்ட் பெஞ்சுகளை உடைத்தன. இதன் சேதமதிப்பு ரூ.10 ஆயிரமாகும். 
கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் உடனடியாக இது தெரியவில்லை. திங்கட்கிழமை பள்ளி திறந்த பிறகே கும்பலின் வெறியாட்டம் தெரியவந்தது. 
இதுகுறித்து ஏரல் போலீசில் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மைக்கேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமராஜன் விசா ரணை நடத்தி வருகிறார். பள்ளியை மர்ம கும்பல் சூறையாடிய சம்பவம் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 28 மார்ச், 2012

ஏரல் திமுக இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்

ஏரல்: தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளை நேரில் சென்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேர்கானல் நடத்தி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.  அதன்படி ஏரல் நகர திமுக இளைஞரணி நிர்வாகிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நகர இளைஞரணி அமைப்பாளராக முருகராஜா, துணை அமைப்பாளராக முத்துமாரியப்பன், முத்துமாலை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இளைஞரணி புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மெய்யழகன், ஏரல் நகர செயலாளர் பார்த்திபன் உடனிருந்தனர்.

வெள்ளி, 23 மார்ச், 2012

ஏரல் ஆசிரியையாக நடித்த பெண் கைவரிசை


ஆசிரியையாக நடித்த பெண் கைவரிசை
ஏரல், மார்ச் 23&
ஏரல் கோயிலில் குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து பெண்ணிடம் நகைபறித்த சம்பவம் நடந்துள்ளது. இதையொட்டி ஆசிரியையாக நடித்த பெண்ணை தேடிவருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள நொச்சிக்குளம் வடக்குத்தெருவைச்சேர்ந்த செல்லையா மனைவி சரஸ்வதி(50). இவர் தனது மகள் பிரேமா உள்பட 5 பெண்களுடன் ஏரல் சேர்மன்கோயிலுக்கு அமாவாசையையொட்டி சாமிகும்பிட வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் கோயில் வளாகத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இவர்களிடம் வந்தார். தான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டீச்சராக வேலைபார்ப்பதாகவும். கணவர் பிரிந்து சென்றுவிட்டார் என்றும் தனது சோகக் கதையை எடுத்து விட்டார். சரஸ்வதி மற்றும் அவருடன் வந்த பெண்கள் அந்த பெண் விட்ட புருடாவை நம்பிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து நள்ளிரவு நேரம் அந்த பெண் கொண்டுவந்த கூல் டிரிங்ஸ்சை ஒரு கிளாசில் ஊற்றி கொடுத்தார். சரஸ்வதியும் அவருடன் வந்த ஒரு பெண்ணும் கூல்டிரிங்ஸ்சை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அப்படி யே மயங்கி சரிந்தனர். இதைபார்த்த மற்றபெண்கள் தூக்கம் வந்ததால் படுத்துவிட்டார்கள் என கருதி அவர்களும் படுத்துக்கொண்டனர். கூடவே அந்தபெண்ணும் அவர்களுடன் தங்கினார்.
இந்நிலையில் நேற்று காலை கண்விழித்து பார்த்தபோது, தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை காணாது சரஸ்வதி பதறினார். கீழே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என தேடிபார்த்தார். ஆனால் செயின் கிடைக்காததால் தங்களு டன் தங்கிய பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த பெண் இரவோடு இரவாக அங்கிருந்து கம்பி நீட்டிவிட்டார்.
இதுகுறித்து ஏரல் போலீசில் புகார் செய்யப்பட்டது. எஸ்ஐ சுந்தரமகாலிங்கம் விசாரித்து வருகிறார்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பெண்ணிடம் நகை ‘அபேஸ்’
ஏரல் கோயிலில் பரபரப்பு

தினகரன் செய்தி எதிரொலி


தினகரன் செய்தி எதிரொலி ஏரலில் பழுதடைந்த மின்கம்பம் மாற்றம்

கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-03-23 10:30:50
ஏரல்: ஏரல் பஸ்நிலையம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்த மின்கம்பம் கான்கீரிட் பெயர்ந்து, கம்பி கள் அனைத்தும் வெளியே தெரியும்படி காட்சியளித்தது. பள்ளி மாணவிகள் இந்த மின்கம்பம் அருகே சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். மேலும் இதனருகே வீடுகளும் உள்ளன. இந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக ஏரல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரமேஷ், மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து மோசமான நிலையிலிருந்த மின்கம்பம் அகற்றப் பட்டு, புதிய மின்கம்பம் நடப்பட்ட

திங்கள், 19 மார்ச், 2012

சுங்க வரி உயர்வு ஏரலில் நகை கடைகள் அடைப்பு

ஏரல்: தங்கத்தின் மீதான சுங்க வரியை மத் திய பட்ஜெட்டில் உயர்த்தி யதை கண்டித்து நாடு முழு வதும் நகைக்கடைகளை அடைத்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 
2வது நாளான நேற்று ஏரலில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகைக்கடை களை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இன்றும் வியாபாரிகள் கடையடைப்பு செய்கின்றனர். 3 நாட்களாக நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகைகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். 

ஏரலில் பள்ளி அருகே ஆபத்தான மின்கம்பம்

ஏரல்: ஏரல் பஸ் நிலையம் அருகில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் சைக்கிள்களை நிறுத்த பள்ளி வளாகத்தில் இடவசதி இல்லாததால் வெளியில் உள்ள கேட் பகுதியிலும், எதிர்புறம் ரோட்டோர பகுதிகளிலும் நிறுத்தி விட்டு பூட்டிச் செல்கின்றனர்.  
மாணவிகள் சைக்கிள் நிறுத்தும் பகுதியிலுள்ள மின்கம்பத்தில் கான்கீரிட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் ஒடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் வீடுகளும் உள்ளன.
எனவே விபத்து ஏற்படும் முன் பழுதான மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள், தெருமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  இதேபோல் ஏரல் அருகே திருவழுதிநாடார்விளை காலனி கீழத்தெருவில் உள்ள கடைசி மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதுமாக அரிக்கப்பட்டு கான்கீரிட் பெயர்ந்து, மின்கம்பம் அருகில் உள்ள வீட்டு மீது விழும் நிலையில் சாய்ந்து நிற்கிறது. இந்த மின்கம்பத்தையும் மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சனி, 10 மார்ச், 2012

ஆன்லைன் மூலம் ரேஷன் அட்டை புதுப்பிக்


சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டதின் கீழ் வழங்கப்படும் குடும்ப (ரேஷன்) அட்டைகளை நிமிட நேரத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ள அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன  ஆனால். இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை புதுப்பித்து இந்த 2012 ஆம் ஆண்டு இறுதி வரை உபயோகப்படுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சென்று குடுமப அட்டையை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் குடும்பஅட்டைகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது.
புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் புதுபித்தல் நிறைவடையாததை தொடர்ந்து  அந்த காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் பொது விநியோகத் துறை சார்பில்   www.consumer.tn.gov.in    என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்ப உறுப்பினர்கள்  சேர்த்தல் மற்றும் நீக்கப்பட வேண்டியவர், சமையல் எரிவாயு விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின்னர், உங்கள் கருத்துக்கள் என்ற கேள்வி வரும். கருத்துக்கள் இருந்தால் எழுதவும் இல்லையெனில், ‘இல்லை’ என்று எழுதி, அதை சேமிக்கவும் சேமித்த  அடுத்த சில வினாடிகளிலேயே நமது குடும்ப அட்டை புதுப்பிக்கப்பட்டு, துணை ஆணையர் கையெழுத்துடன் இணையதளத்தில் ரசீது வருகிறது. இந்த ரசீதை அவரவர் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று, ஆன்லைன் பதிவு விவரங்களை காண்பித்து  அட்டையில் கையெழுத்து மற்றும் சீல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள நேரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறை மூலம் ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டு ரசீதும் கிடைத்துவிடுவதால் மக்கள் இந்த முறையை பெரிதும் வரவேற்கின்றனர்.

சனி, 3 மார்ச், 2012

ஏரலில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஏரல்: ஏரல் பகுதியில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தி விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் தலைமையில் இளநிலை உதவியாளர் கிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் எட்வர்ட் ஜெபசீலன், அடைக்கலம், அலுவலக பணியாளர்கள் ராஜா, அழகுமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் ஏரல் பேரூராட்சி பகுதிகளில் உள்ள தினசரி மார்க்கெட் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...