திங்கள், 23 ஜூன், 2014

ஏரல் பகுதிகளில் வறட்சி

வாட்டும் வறட்சி, வடிகால் வசதி இல்லாமல்
ஏரல் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் பாதிப்பு
ஏரல், ஜூன் 24:
ஏரல் பகுதிகளில் வறட்சி மற்றும் வடி கால் வசதி இல்லாததால் வெற்றிலை கொடிக்கால் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான திருவழுதிநாடார்விளை, வாழவல் லான், உமரிக்காடு, முக்காணி ஆத்தூர், தெற்கு ஆத்தூர், சேதுக்குவாய்த் தான், சொக்கப்பழக்கரை, நெடுங்கரை, மரந்தலை, வெள்ளக்கோயில் உட்பட பகுதிகளில் வெற்றிலை பயிரிடப்படுகிறது.
சக்கை, மாத்து மற்றும் பொடி வெற்றிலை என பல வகை யான வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. இதில் முதல் ரகமான சக்கை மற்றும் மாத்து ரக வெற்றிலைகள் ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உட்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பொடி வெற்றிலை ரகங்கள் தூத்துக்குடி, நெல்லை மதுரை உட்பட மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
தெற்கு ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம் தான் வெற்றிலை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. தற்போது சக்கை வெற்றிலை ரகம் கிலோ ரூ.101, மாத்து ரகம் ரூ.81, பொடி வெற்றிலை ரகம் ரூ.45க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி வளர்ந்து வந்த வெற்றிலை கொடிக்கால்கள் சமீபகாலமாக விசாய கூலியாட்கள் தட்டுப்பாடு, வறட்சி, வடிகால் வசதி இல்லாத தால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முன்பெல்லாம் ஏரல் பகுதிகளில் எங்கு பார்த் தாலும் வெற்றிலை கொடிக் கால் சோலைவனமாக காட்சி அளிக்கும். ஆனால் திருவழுதிநாடார்விளை பஸ் ஸ்டாப்பில் இருந்து சினிமா தியேட்டர் வரை கடந்த ஆண்டு ரோடு விரிவாக்கம் செய்ததில், ரோடு பாதுகாப்பிற்காக பக்க வாட்டில் மணல் போடுவதற்காக, அருகில் சென்ற பாசன வாய்க்காலில் ஜேசிபி மூலம் மணல் எடுத்து, வாய்க்காலை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர்.
இதனால் ரோட்டின் வடபுறம் தண்ணீர் வாய்க்கால் மூலம் கொண்டு வந்து பாய்க்க முடியாமலும், மழை காலத்தில் தண்ணீரை வடிய வைக்க முடியாததினாலும் இப்பகுதி யில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது.
தற்போது ஏரல்&மங்கலகுறிச்சி ரோட் டிற்கு தென்புறம் மட்டும் வெற்றிலை கொடிக்கால் பயிர் செய்துள்ளனர். அதுவும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் வறட்சியால் வெற்றிலை கொடிக்கால் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் வரும் வரை வெற்றிலை கொடிக் காலை எப்படியும் காப் பாற்றிவிட வேண்டும் என விவசாயிகள் போர் அமைத்தும், தூரத்தில் உள்ள கிணறுகளில் இருந்து ஆயில் இன்ஜின்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்தும் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தண் ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
வெற் றிலை விவசாயி சிவக்குமார் கூறியதாவது:
இப்பகுதி யில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெற்றி லை விவசாயம் நடந்து வந்தது. 20 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாவும் பயன் பெற்று வந்தனர்.
தற்போது வெற்றிலை நல்ல விலைக்கு சென்றாலும், ஒரு விவசாயி 10 கிலோ பறிக்கும் இடத்தில் வறட்சியின் காரணமாக தற்போது அந்த இடத்தில் 5 கிலோ வெற்றிலை தான் பறிப்புக்கு வருகிறது.
மேலும், ஏரல் பகுதிகளில் வறட்சி மற்றும் வடி கால் வசதி இல்லாததால், வெற்றிலை கொடிக்கால் விவசாயம் படிப்படியாக குறைந்து தற்போது 500 ஏக்கர் பரப்பளவு என்ற நிலைக்கு வந்து விட்டது. பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் வேறு வழியில்லாமல் பிற தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
எனவே அரசு இத் தொழிலை பாதுக்காக்க உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக் கவும், மழைக்காலத்தில் வயல்களில் தண்ணீர் தேங்குவதை வெளியேற்ற வடிகால் வசதி, விவசாயிகளுக்கு கடன் மற்றும் உரம் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிற தொழிலுக்கு
மாறும் விவசாயிகள்
ஏரலில் உள்ள கொடிக்காலில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது.
சிவக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...