வெள்ளி, 25 மே, 2012

அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை


1990 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 18.11 ரூபாய்

1991 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 25.79 ரூபாய்

1992 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 28.95 ரூபாய்

1993 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 31.44 ரூபாய்

1994 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 34.39 ரூபாய்

1995 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 34.92 ரூபாய்

1996 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 35.83 ரூபாய்

1997 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 39.15 ரூபாய்

1998 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 42.58 ரூபாய்

1993 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 43.45 ரூபாய்

2000 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 46.88 ரூபாய்

2001 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 47.93 ரூபாய்

2002 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 48.23 ரூபாய்

2003 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 45.66 ரூபாய்

2004 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 44.00 ரூபாய்

2005 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 46.11 ரூபாய்

2006 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 44.49 ரூபாய்

2007 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 39.33 ரூபாய்

2008 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 49.82 ரூபாய்

2009 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 46.29 ரூபாய்

2010 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 45.09 ரூபாய்

2011 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 51.10 ரூபாய்

2012 - ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் விலை - சுமார் 54.47 ரூபாய்

வெள்ளி, 18 மே, 2012

சட்டமன்றத் தொகுதிகள் தூத்துக்குடி மாவட்டம்


இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரம்:
  1. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - கடம்பூர் செ. ராஜூ - அ.இ.அ.தி.மு.க
  2. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) - சி.த. செல்லப்பாண்டியன் - அ.இ.அ.தி.மு.க
  3. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) - ஜி. வி. மார்க்கண்டேயன் - அ.இ.அ.தி.மு.க
  4. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) - எஸ்.பி. சண்முகநாதன் - அ.இ.அ.தி.மு.க
  5. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - தி.மு.க
  6. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) - டாக்டர். கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்



செவ்வாய், 8 மே, 2012

ஏரல் தாமிரபரணி ஆற்றில் வாகனங்களை கழுவுவதால் தண்ணீர் மாசுபடுகிறது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏரல்:  ஏரல் தாமிரபரணி ஆற்றில் வாகனங்களை கழுவுவதால் தண்ணீரில் ஆயில், மற்றும் டீசல் கலந்து பொதுமக்களுக்கு தோல் நோய் ஏற்படும் நிலை உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 
ஏரல் பேரூராட்சி பகுதி மக்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் தாமிர பரணி ஆற்றையே நம்பி உள்ளனர். ஏரல் ஆற்றுப்பாலத்தின் மேல்புறம் 5க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் அமைத்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு திருவழுதிநாடார்விளை மற்றும் ஏரல் பேரூராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை  நீர்தேக்க தோட்டிகளில் நிரப்பி அங்கிருந்து வீட்டு இணைப்புகள் மற்றும் தெருபைப்புகள் வழியாக குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.  மேலும் அருகில் உள்ள சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் ஊராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்களுக்கும் இங்கிருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது. 
சமீப காலமாக ஏரல் ஆற்றுப்பாலம் அருகே லாரி, வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை ஆற்றில் கழுவுவதால் தண்ணீரில் ஆயில் கலக்கிறது. இதனால் ஆற்றில் குளிப்பவர்களுக்கு  தோலில் அரிப்பு ஏற்படுகிறது.  மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படுகின்றன. 
இதன் அருகில் உள்ள உறைகிணறுகளில் இருந்து குடிநீர் எடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாகனங்களை ஆற்றுக்குள் இறக்கி கழுவாமல் தடுக்க தடுப்பு சுவர்கள் அமைத்தோ அல்லது வாகனங்கள் செல்லும் இடத்தில் குழிகள் தோண்டியோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். மேலும் ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மேல்புறம் மணல் அதிகம் உள்ளது. 
பொதுமக்கள் மற்றும் ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலுக்கு வரக்கூடிய பக்த்தர்கள் ஆற்றுமணலில் ஒய்வு எடுப்பது வழக்கம். தற்போது இரவு நேரங்களில் சமூக விரோதி கள் அங்கு மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைப்பதால் பக்தர்களின் காலில் காயம் ஏற்படுகிறது. எனவே, இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தாமிர பரணி பாதுகாப்பு இயக்க துணைத்தலைவர் பொறி யாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத் தில் குரங்கணி, முக்காணி , தோழப்பன்பண்ணை உள் ளிட்ட இடங்களில் அதிகள வில் மண் அள்ளியதால் தாமிரபரணி யில் மரண பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.  இங்குள்ள செங்கல் சூளை களுக்கு குறு, களி மண் ஆற்றில் திருடப்படுகிறது. 
மேலும் ஏரல் ஆற்றில் தினமும் நூற்றுக்கும் மேற் பட்ட வாகனங்களை கழுவு கின்றனர். இதை தடுக்க பேரூராட்சி நிர் வாகம் எச்சரிக்கை பலகை களை வைக்க வேண்டும். காவல் துறையினர் வாகனங்களை ஆற்றில் இறங்காதவாறு தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...