புதன், 30 ஏப்ரல், 2014

மிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'!

மிஸ்டர் கழுகு: ஜெ. 'பிரதமர்'!
கழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் இருந்து கால்குலேட்டரும் விழுந்தது.

''நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மே 16-ம் தேதிதான் வரப்போகிறது. காங்கிரஸ் கட்சியே ஆட்சியைத் தக்கவைக்குமா, பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்குமா அல்லது  இரண்டு பேருமே ஆட்சி அமைக்கும் பலத்தை அடையாமல் போக... மூன்றாவது அணி முன்னுக்கு வருமா என்பது எல்லாம் ரிசல்ட் நாள் அன்று இரவுதான் லேசாகத் தெரிய வரும். அதற்குப் பிறகுதான் சாணக்கியபுரியான டெல்லியில் அரசியல் சதுரங்க ஆட்டம் சரசரவெனத் தொடங்கும். ஆனால், கடந்த ஒரு வாரமாகவே காங்கிரஸ் மேலிடத்தில் இதற்கான முஸ்தீபுகள் தொடங்க ஆரம்பித்து இருப்பதுதான் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமான விஷயங்கள்!''
''என்ன செய்யத் தொடங்கியிருக்கிறதாம் காங்கிரஸ்?''
''மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாம் காங்கிரஸ் மேலிடம். இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களும் 110 இடங்களை காங்கிரஸ் தாண்டும் என நம்பிக்கையைக்கூடத் தரவில்லையாம். 100 இடங்களை தாண்டினாலே பெரிய விஷயம் என்று​தான் சொல்கிறதாம். ஜோசியர்கள் சிலர் 65 முதல் 73 தொகுதிகள்தான் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்று சொல்லி பதற்றத்தை அதிகப்படுத்துகிறார்கள். எனவே, காங்கிரஸின் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. முதலில் ராகுல் மட்டுமே பிரசாரம் செய்தால் போதும் என்று நினைத்தார்கள். சோனியா, அவரது தொகுதியை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் என்றார்கள். சோனியா உடல்நிலையும் அவ்வளவாக சரியில்லை. ஆனாலும் தேர்தல் சூழ்நிலை சரியில்லை என்றதும் சோனியாவும் பல மாநிலங்களுக்கும் போக வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து பலவீனமான சர்வேக்களே வெளியான நிலையில், பிரியங்காவும் வீட்டை விட்டு வெளியேறி வர வேண்டிய நிலை உருவானது. இவர்கள் மூவரும்தான் இந்தியாவை வலம்வர வேண்டி உள்ளது. இதுகூட காங்கிரஸின் மரியாதையைக் காப்பாற்றுமே தவிர, ஆட்சிக்குக் கொண்டுவரும் பலத்தைக் கொடுக்காது என்ற நிலையில்தான், சோனியா தனது மேல்மட்டப் பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்தினார்!''
''என்ன பேசினார்களாம் அதில்?''
''காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இந்தப் பின்னடைவு என்று காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள். இவை எல்லாம் அனைவரும் அறிந்த சமாசாரங்கள்தான். அதனை விட்டுவிட்டு அடுத்த கட்ட ஆலோசனை​களை மட்டும் சொல்கிறேன். 'ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக நாம் அறிவித்திருக்க வேண்டும்’ என்றார்களாம் சிலர். 'இது காலம் கடந்த யோசனை’ என்றாராம் சோனியா. 'மூன்று மாதத்துக்கு முன் ராகுல் பெயரை அறிவித்திருந்தால், அதுவே நெகடிவ் ஆனது என்றும் சிலர் சொல்லியிருப்பார்கள்’ என்றாராம் சோனியா. அடுத்து சொல்லப்பட்டதுதான் முக்கியமானது. 'காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பி.ஜே.பி-யை வரவிடக் கூடாது. பி.ஜே.பி. வந்து உட்கார்ந்தால் 10 ஆண்டு காலத்துக்கு அவர்கள்தான் ஆட்சியில் இருப்பார்கள். இரண்டு தடவை தொடர்ச்சியாக பிரதமராக நரேந்திர மோடி இருந்துவிடுவார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் காங்கிரஸ் இல்லாமல் போனால், இந்தியா முழுமைக்கும் காங்கிரஸின் கட்டமைப்பைக் காப்பாற்றுவது கஷ்டம். பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும் இல்லை. அதனால் மாநில காங்கிரஸை ஒருங்கிணைப்பதும் முடியாது. எனவே, ஏதாவது குழப்பான சூழ்நிலையை உருவாக்கி இரண்டு வருட காலம் பி.ஜே.பி. இல்லாத காங்கிரஸ் பின்னிருந்து இயக்கும் கூட்டணி ஆட்சி வந்தால்கூட பரவாயில்லை’ என்று அந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது!''
''அப்படியா?''
''உடனேயே கால்குலேட்டர் புலிகள் தங்களது கூட்டல் கழித்தலைப் போட ஆரம்பித்தார்கள். காங்கிரஸ், பி.ஜே.பி-க்கு வெளியில் இருக்கும் கட்சிகளில் இருந்து மொத்தம் எத்தனை எம்.பி-க்கள் வருவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முலாயம்சிங் யாதவ், மாயாவதி, நிதிஷ்குமார், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய ஒன்பது பேர் பெயர் எழுதப்பட்டு ஒவ்வொருவருக்கும் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்றும் தோராயக் கணக்கு போட்டுள்ளார்கள். இவர்களுக்கு அவர்களின் பழைய செல்வாக்கு ஓரளவு தக்க வைக்கப்பட்டாலே மொத்தம் 120 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று சொல்லப்பட்டதாம். 'இதில் யாராவது ஒருவரை பிரதமராக முன்மொழிந்து அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் கூட்டணி பின்னால் இருந்து ஆதரித்தால் என்ன? நமக்கு பி.ஜே.பி. வரக் கூடாது, மற்றபடி யார் வந்தால் என்ன?’ என்று ஆலோசிக்கப்பட்டது. இதில் முலாயம்சிங், ஜெயலலிதா ஆகிய இருவரும் பிரதமர் ஆசையை அரசல்புரசலாக வெளிப்படுத்தியவர்கள். ஜெயலலிதா பிரதமர் ஆக, மம்தா தனது விருப்பத்தைச் சொல்லிவிட்டார். முலாயம் சிங்கை தடுக்க வேண்டுமானால் ஜெயலலிதாவை ஆதரிக்க மாயாவதி தயங்க மாட்டார். நவீன் பட்நாயக், எப்போதும் ஜெயலலிதாவின் விசிறி. 'தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக என்னுடைய ஆதரவு உண்டு’ என்று ஜெகன்மோகனும், சந்திரசேகர ராவும் முன்வரலாம். இப்படி பல்வேறு சூழ்நிலை ஜெயலலிதாவை நோக்கி கனிந்து வந்ததை காங்கிரஸ் யோசித்தது. இதைத் தொடர்ந்து தனது தூதர் ஒருவரை பெங்களூரில் இருந்து கார்டனுக்கு அனுப்பியதாம் காங்கிரஸ்!''
''யாராம் அவர்?''
''பெங்களூரைச் சேர்ந்த, முன்னாள் முதல்வ​ராகவும் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தவருக்கு நெருக்கமான பெண்மணி அவர். ஜெயலலிதாவுக்கும் அவர் ஆரம்பகாலத் தோழி. காங்கிரஸின் விருப்பங்கள் ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட்டன. எதிர்க்காற்று தான் போகும் திசைக்கு சாதகமாக அடிக்க ஆரம்பிக்கும் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை. காங்கிரஸ் கசப்பை விலக்கி வைத்துவிட்டு, பி.ஜே.பி. வெறுப்பை அன்று முதல் அகலமாக்கிக்கொண்டார் ஜெயலலிதா. அவரின் இறுதிக்கட்ட சென்னைப் பிரசாரப் பேச்சுக்களைக் கவனித்தால் இது புரியும்!''
''ம்! சொல்லும்!''
''தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து, 'காங்கிரஸை வீட்டுக்கு அனுப்புவதே என் வேலை’ என்று பிரசாரம் செய்துவந்த ஜெயலலிதா, காங்கிரஸை விலக்கிவிட்டு, 'இது மோடியா... இந்த லேடியா என்று முடிவெடுக்கிற தேர்தல்’ என்று சொல்ல ஆரம்பித்தது இதனால்தான் என்கிறார்கள். ஜெயலலிதா இப்படி சென்னையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, ராமநாதபுரத்தில் இருந்தார் ராகுல். 'குஜராத்தைவிட தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்’ என்று அவர் சொன்னார். 'குஜராத்தை மோடியும் தமிழ்நாட்டை ஜெயலலிதாவும் மோசமாக ஆள்கிறார்கள்’ என்றுதானே ராகுல் பேசியிருக்க வேண்டும்? அவர் ஏன் மோடியைவிட ஜெயலலிதா ஆட்சி சூப்பர் என்று மறைமுக ஆதரவைத் தரவேண்டும்? இங்குதான் இருக்கிறது சூட்சுமம். 'பி.ஜே.பி. வரக் கூடாது’ என்பதற்கான ஒன்றுபட்ட சிந்தனை ராகுலுக்கும் வந்துவிட்டது. ஜெயலலிதாவுக்கும் வந்துவிட்டது. அதனால்தான் மோடியை அதிகமாக விமர்சிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா ஆட்சியை மறைமுகமாக ராகுல் பாராட்டினார் என்றும் சொல்கிறார்கள்!''
''அப்படிப் போகிறதா விஷயம்?''
''பெங்களூரு தூதுவைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து இன்னொருவரும் வந்துள்ளார். மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கே இருப்பவரை 'மாளிகை’யில் சந்தித்துள்ளார். அவர் அ.தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு முன்பு முயற்சித்தவர் என்பதால், பேச்சு சுமூகமாகப் போனதாம். ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பாசம் ஏற்பட அந்த 'ஐயா’ பயன்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, சில வாரங்களாக அமுங்கியிருந்த பிரதமர் ஆசை மீண்டும் ஜெயலலிதாவுக்குத் துளிர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவரது நினைப்பு ஒன்றுதான், காங்கிரஸ், பி.ஜே.பி. இல்லாத மூன்றாவது அணி சார்பில் போட்டியிடும் கட்சிகளில் அ.தி.மு.க. அதிகமான எம்.பி-களை வைத்திருக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் துடிப்பாக இருக்கிறதாம். இன்றைய சூழ்நிலையில் மம்தா 30 எம்.பி-க்களை தாண்டக் கூடும். ஆனாலும், அவர் டெல்லி வர மாட்டார். உ.பி-யில் இருந்து வரும் தகவல்கள் முலாயம்சிங் யாதவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது என்றே சொல்கிறதாம். ஒருவேளை மாயாவதிக்குக் கிடைக்கலாம். எனவே இந்தக் கட்சிகளின் வரிசையில் 30 இடங்களுக்கு மேல் பிடிக்கும் கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ஜெயலலிதா நினைக்கிறார். யார் அதிக எம்.பி-களை வைத்துள்ளார்களோ அவர்களையே மூன்றாவது அணி பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு அந்த இடத்தை ஜெயலலிதா பிடிப்பார் என்கிறார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஜெயலலிதாவை முன்மொழிய இப்போதே தயாராகிவிட்டார். காங்கிரஸ் கட்சியும் மனதளவில் தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறியே டெல்லி, பெங்களூரு தூதுவர்கள்!''
''பெரிய மாற்றமாக இருக்கிறதே?''
''மனதளவில் காங்கிரஸ் தயாராகிவிட்டது என்பதற்கு உதாரணம்தான் அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சு. தனது சொந்த மாநிலமான உ.பி. சென்ற குர்ஷித், 'தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கு, தேவைப்பட்டால் மூன்றாவது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தருவது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும். அதுமட்டுமல்லாமல், ஆட்சியமைக்க மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவைப் பெறுவது பற்றி காங்கிரஸ் கட்சி யோசிக்கும்’ என்று குர்ஷித் சொல்லியிருக்கிறார். மூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்கள் இப்போதே டெல்லிக்கு கிளம்பத் தயாராகிவிட்டார்கள்!''
''அதில் ஜெயலலிதாவும் ஒருவரா?''
''ம்! குர்ஷித் சொன்ன அதே நாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் அபிஷேக் மனு சிங்வி கொல்கத்தாவில் இருந்தார். அவரும், 'தேர்தலுக்குப் பிறகு யாருக்கு எத்தனை இடங்கள் என்ற எண்ணிக்கைதான் ஆட்சியைத் தீர்மானிக்கிறது. எனவே, தேர்தல் முடிவுக்குப் பிந்தைய சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும்’ என்று அபிஷேக் மனு சிங்வி சொல்லியிருக்கிறார். இதே நாளில் மும்பையில் நிருபர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவாண், 'மூன்றாவது அணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லியிருக்கிறார். குர்ஷித், சிங்வி, சவாண் ஆகிய மூவரும் சோனியா, ராகுல் குரலை மட்டுமே வழிமொழியக் கூடியவர்கள். எனவேதான் அவர்களது பேச்சு உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.''
''இது சாத்தியமா?''
''பி.ஜே.பி-யும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 272 தொகுதிகளை எட்டிவிட்டால் இந்த வாதப்பிரதிவாதங்களுக்கே அவசியம் இல்லை. அது வராமல் போனால்தான் சிக்கலே! பி.ஜே.பி-யை முலாயம் சிங், மாயாவதி, ஜெயலலிதா, நவீன் பட்நாயக் ஆகிய தலைவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. மோடியை நிதிஷ்குமார் ஆதரிக்கமாட்டார் என்று காங்கிரஸ் நினைக்கிறது. மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகிய மூவரும் ஒருவேளை பி.ஜே.பி-யை ஆதரிக்கலாம். காங்கிரஸின் இந்த மூவ் தெரிந்ததால்தான் மோடி, 'ஜெயலலிதா, மம்தா, மாயாவதி ஆகியோர் தயவு தேவைப்படாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையை பி.ஜே.பி. பெறும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இப்படி ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பச்சைக்கொடி காட்ட ஆரம்பித்திருப்பதை அறிந்த மாயாவதியும், 'நான் பிரதமர் வேட்பாளர்தான்’ என்று திடீரெனச் சொல்ல ஆரம்பித்துள்ளார். முலாயம்சிங் தனது பிரதமர் கனவை வெளிப்படுத்தி இரண்டு மாதங்கள் ஆகிறது. முலாயம் எதைச் சொன்னாலும் உடனடியாக ரியாக்ஷன் காட்டக் கூடிய மாயாவதி இதுநாள் வரை அமைதியாக இருந்துவிட்டு, இப்போது தனது பிரதமர் கனவை வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பதன் பின்னணியும் இதுதான் என்கிறார்கள்!''
''முதல்வர் கொடநாடு சென்று விட்டாரே?''
''ஏப்ரல் 27-ம் தேதி கொடநாடு கிளம்பிவிட்டார். 'அங்கிருந்தபடியே அரசு பணிகளை சில நாட்கள் கவனிப்பார்’ என்று தமிழக அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால், அமைச்சர்கள் கோட்டைக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், அவர்களைப் பார்க்க பொதுமக்கள் வராததால் கோட்டை வெறிச்சோடியே காணப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் அமைச்சர்கள், சொந்த மாவட்டத்தில் இருக்க உத்தரவு போடப்பட்டு உள்ளது. கொடநாட்டில் இருக்கும் முதல்வர், மே 9-ம் தேதி, சென்னை திரும்புவார் என்கிறார்கள். அன்றைய தினம் 12-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகிறது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் முதல்வரைச் சந்திக்கவும் திட்டம் இருக்கிறது.''
''தேர்தல் ரிசல்ட் வரை அங்கு இருப்பார் என்கிறார்களே?''
''மே 9-ம் தேதி வராவிட்டால், 12-ம் தேதிக்கு மேல் வருவார் என்கிறார்கள்!'' என்று சொல்லிவிட்டு சிறகை விரிக்கத் தயாரானவர், ''அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் முடிந்ததும் 26-ம் தேதி திடீர் மூச்சுத்திணறலால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். மறுநாள் முதல்வர் கொடநாடு புறப்பட்டபோது ஆஸ்பத்திரியில் இருந்த ஓ.பி.எஸ். விமானநிலையத்திற்கு போய் வழியனுப்பிவிட்டு, மீண்டும் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார்'' என்றபடி  பறந்தார்.
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்


கொண்டுபோனவர்கள் யார்?
சென்னையில் இருந்து எல்லாத் தொகுதிக்கும் எப்படி பணம் கொண்டுசெல்லப்பட்டது என்பதை மத்திய உளவுத் துறை கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். அரசியல்வாதிகளைப் பயன்படுத்தாமல் வர்த்தகப் பிரமுகர்களை இதில் பயன்படுத்தினார்களாம். அவர்கள்தான் வருடம் முழுவதும் பணத்தைப் பக்குவமாகக் கொண்டுசெல்பவர்கள் என்பதால், அவர்களைத் தேர்வு செய்தார்களாம். ஒரு துணிக் கடை அதிபர், இரண்டு ஹோட்டல் முதலாளிகள், ஒரு ஸ்டீல் கம்பெனி, ரெட்டி அடை மொழி கொண்ட இருவர், ராவ் அடைமொழி கொண்ட ஒருவர் என்று பெயர் திரட்டி உள்ளதாம் மத்திய உளவுத் துறை!

ஆளுக்கு 10 தொகுதி!
தேர்தல் செலவுகளை ஒழுங்காகப் பார்க்காத வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் யார் எவர் என்பதைக் கண்டுபிடித்து விசாரிக்க ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுக்கு 10 தொகுதியை கண்காணிக்கச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். சென்னை தலைமைக் கழகத்தில் புகார்கள் குவிகிறதாம்.

''இதெல்லாம் காரணமாய்யா?''
தி.மு.க. வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக கருணாநிதியைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு இவர்கள் நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 'உங்க தொகுதியில என்ன நிலவரம்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பீங்க?’ என்று இவர்களிடம் கேட்கிறாராம் கருணாநிதி. தி.மு.க-தான் உறுதியாக ஜெயிக்கும் என்று சிலர் சொன்னார்களாம். இன்னும் சிலரோ, 'கடைசி நேரத்தில் ஆளுங்கட்சி பணம் கொடுத்துவிட்டது’ என்றார்களாம். 'இதெல்லாம் ஒரு காரணமாய்யா... ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லக் கூடாது’ என்று கடுகடுத்தாராம் கருணாநிதி.
தி.மு.க. கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வந்தது பற்றியும், ஸ்டாலின் பிரசாரம் பற்றியும் சிலர் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். ''கூட்டத்தை வைத்து எல்லாம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது. இதுமாதிரி கூட்டத்தை 50 வருஷமா நான் பார்க்கிறேன்’ என்றாராம்!

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

ஏரல் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் அபாயம்

ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் ஓட்டையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரல் ஆற்றுப்பாலம் இடிந்து விழும் அபாயம்
புதிய பாலம் திறக்க மக்கள் வலியுறுத்தல்
ஏரல், ஏப். 26:
ஏரல் ஆற்றுப்பாலத்தில் ஓட்டை விழுந்ததால் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய பாலம் அமைக்கும் பணிகளை முடித்து உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஏரல் சேர்மன் கோயில் பகுதி தாமிரபரணி ஆற்றில் பாலம் உள்ளது. மிகவும் பழமையான இந்த பாலம் ஆற்றில் வெள்ளம் வந்தால் மூழ்கிவிடும். அப்போது போக்குவரத்து மாற்றி விடப்படும். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டதால் உயரமான புதிய பாலம் கட்டவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து 2 ஆண்டுக்கு முன் ரூ.16.50 கோடியில் புதிய பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதன் பணி நடைபெற்று வந்தது. பாலம் வேலை முழுமையாக முடிந்த போதிலும் இரு பகுதியிலும் கரைக்கு செல்லும் வழி மட்டும்தான் முடிவுபெறாமல் உள்ளது. வனத் துறையினர் அனுமதி கிடைக்காததால் இந்த தாமதம் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஏற்கனவே உள்ள பழைய பாலம் 2 ஆண்டுகளாகவே பழுதடைந்து காணப்பட்டது. ஒரு இடத்தில் பாலம் உடைந்து விழுந்ததால் குழாய் பதித்து கான்கிரீட் போட்டு சீரமைத்து இருந்தனர்.
இதற்கிடையில் அந்த இடத்தில் நேற்று திடீரென்று பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கயிற்றால்கட்டியும் குழி விழுந்த இடத்தில் பெரிய பாறாங்கல்லை வைத்தும் தடுத்து உள்ளனர். ஓட்டை விழுந்ததால் ஒரு வழியாகத்தான் போக்குவரத்து நடக்கிறது. மேலும் அங்கு விரிசலும் காணப்படுவதால் எந்த நேரத்திலும் பாலம் முழுவதும் இடிந்து விழும் ஆபத்து உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனித்து புதிய பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏரலில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு

இயந்திரத்தில் திடீர் கோளாறு
ஏரலில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிப்பு
ஏரல், ஏப். 25:ஏரலில்
வாக்குப்பதிவு நடந்த போது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி 7 மற்றும் 8வது வார்டுகளுக்கான வாக்கு பதிவு (பூத் எண். 87) திருவழுதிநாடார்விளை டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளியில் நடந்தது. இதில் தேர்தல் அதிகாரியாக சுந்தரி ஜெயசிங் (55) இருந்தார். காலை 11.30 மணிக்கு 232 வாக்குகள் பதிவாகி இருந்த போது வாக்கு பதிவு இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. உடன் வாக்குபதிவு நிறுத்தப்பட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராமசாமி, சிறுத்தொண்டநல்லூர் வி.ஏ.ஓ. சமுத்திரக்கனி மற்றும் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ. மந்திரமூர்த்தி விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு மீண்டும் வாக்கு பதிவு துவங்கியது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தமிழக தேர்தல் பற்றி டெலிவிஷன்களின் கருத்து கணிப்பு முடிவுகள்

தமிழக தேர்தல் பற்றி டெலிவிஷன்களின் கருத்து கணிப்பு முடிவுகள்

சென்னை,
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களை அ.தி.மு.க கைப்பற்றும் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதுபோல பா.ஜனதாவும் தே.மு.தி.க., ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
என்றாலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
வெற்றி யாருக்கு
இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற போவது யார் என்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்டு கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. தமிழ் தொலைக்காட்சியான தந்தி டி.வி.யும் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது.
டெலிவிஷன்கள் நடத்திய கருத்துகணிப்பில் வெளியான முடிவுகள் பற்றிய விவரம் வருமாறு:–
தந்தி டி.வி.
அ.தி.மு.க: 18
தி.மு.க: 8
பா.ஜனதா கூட்டணி: 5
இழுபறி– 9
சி.என்.என். ஐ.பி.என்
அ.தி.மு.க: 15–21
தி.மு.க: 10–16
பா.ஜனதா கூட்டணி: 6–10
என்.டி.டி.வி
அ.தி.மு.க: 22
தி.மு.க: 14
பா.ஜனதா கூட்டணி: 3
டைம்ஸ் நவ்
அ.தி.மு.க: 27
தி.மு.க: 6
பா.ஜனதா கூட்டணி: 3
காங்கிரஸ்: 1
கம்யூனிஸ்டு: 2

'நச்' நிலவரம்: விருதுநகர் - ராமநாதபுரம் - தூத்துக்குடி

'நச்' நிலவரம்: விருதுநகர் - ராமநாதபுரம் - தூத்துக்குடி
பட்டாசுக்கும் பரோட்டாவுக்கும் பெயர்போன தொகுதி விருதுநகர். வைகோ இங்கே போட்டியிடுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் தொகுதியாகிவிட்டது.

சிவகாசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பிலும், தி.மு.க-வில் தொழிலதிபர் ரத்தினவேலுவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சாமுவேல்ராஜும் வேட்பாளர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் வேலைகளில் சுறுசுறுவென களமிறங்கினார் அ.தி.மு.க. வேட்பாளர். ஆனால் தொகுதிக்குள் பிரதானமாக இருக்கும் மின்வெட்டு, குடிநீர் பிரச்னைகளால் சோர்ந்துவிட்டார். பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்ப... என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். ஆனாலும், இலைக்காக இருக்கும் ஓட்டு தன்னைக் காப்பாற்றும் என்பது அவரது நம்பிக்கை.
ம.தி.மு.க. வேட்பாளரான வைகோ, கடந்த முறை இந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். அந்த அனுதாபம் மக்களிடம் நிறையவே இருக்கிறது. நல்ல வேட்பாளர் என்ற இமேஜும் மக்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. 'மோடி தலைமையிலான ஆட்சி அமையும்போது, வைகோ அதில் முக்கிய இடம் பிடிப்பார். அதனால், தொகுதிக்கு நல்லது நடக்கும்’ என்று தொகுதிக்குள் பரவலான பேச்சு இருக்கிறது. இதுதான் வைகோவின் ப்ளஸ். உள்ளூர் பட்டாசுத் தொழிலுக்கு சவாலாக சீன பட்டாசு பிரச்னை. 'வைகோ வந்தால்தான் அதனைத் தடுக்க முடியும்’ என்ற நம்பிக்கை பட்டாசு அதிபர்கள், தொழிலாளர்கள் மத்தியில் உருவாகிவிட்டது.
தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேலுக்காக, விருதுநகரைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் மற்றும் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓட்டுக்களும் அவருக்குக் கிடைக்கும் என்பது தி.மு.க-வினரின் நம்பிக்கை. அத்துடன் பண விஷயத்திலும் தாராளம் காட்டிவருகிறார் ரத்தினவேல்.
அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு ஈடுகொடுத்து தேர்தல் வேலைகளைச் செய்துவருகிறார் காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர். இவர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், கணிசமாக உள்ள அந்த சமுதாய வாக்குகள் மாணிக்கம் தாகூருக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொகுதியில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்பதே உண்மை. அ.தி.மு.க-வுக்கு போக வேண்டிய வாக்குகளை கணிசமாக இவர் பிரிப்பார் என்கிறார்கள்.
தீப்பெட்டித் தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி உண்டு. தீண்டாமை ஒழிப்பு, சமூகப் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடும் கம்யூனிஸ்ட்களுக்குக் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கடைசிகட்ட நிலவரப்படி, டெல்லிக்கு கிளம்பத் தயாராகிறார் வைகோ!

******

இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் உள்ளாகி பரபரப்பு செய்திகளில் அடிக்கடி இடம் பிடிக்கும் தொகுதி ராமநாதபுரம்.
வாழ்வாதாரத்தை இழந்து வாடும் லட்சகணக்கான மீனவர்கள், வானம் பார்த்த பூமியை நம்பியிருக்கும் விவசாயிகள், அடுத்த வேளை உணவுக்காகப் போராடும் நெசவாளர்கள், பிரச்னைகளுக்கு மத்தியில் வாழும் தலித்துகள்... இதுதான் ராமநாதபுரம் தொகுதியின் நிலைமை.
முக்குலத்தோர், தலித்துகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இஸ்லாமிய வாக்குகளை நம்பி அன்வர்ராஜாவை களம் இறக்கியிருக்கிறது அ.தி.மு.க. இங்கு  தீர்க்கப்படாத சிக்கல்கள் ஏராளம். இதனால் அன்வர்ராஜா சந்தித்து வரும் பிரச்னைகளும் தாராளம். கடந்த முறை 20 மாதங்கள் மாநில அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு உருப்படியான திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்கிற குறை மக்களிடம் இருக்கிறது. தொண்டர்களிடம் நெருங்கிப் பழகாதது, யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் எந்த சமயத்திலும் பாக்கெட்டை காலியாகவே வைத்திருப்பது கட்சியினரை முகம் சுழிக்க வைக்கிறது.
இதுபோதாது என்று முதுகுளத்தூர் தொகுதியில் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீதான கோபம், தேவர் குருபூஜையின்போது அரசு விதித்த கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்ட முக்குலத்து மக்களின் எதிர்ப்பு, அதனை சரிசெய்ய நினைத்து தங்கக் கவசம் வழங்கியதன் மூலம் தலித் சமூகத்தினரிடையே எழுந்துள்ள கோபம் என அன்வர்ராஜாவுக்கு எதிரான ஓட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன.
மு.க.அழகிரியால் வசைபாடப்பட்ட முகம்மது ஜலீல் இந்தத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர். கூட்டணி பலத்தாலும் பண பலத்தாலும் வாக்குகளை கவர்ந்துவிட முடியும் என்பது இவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அழகிரி ஆதரவாளர்களின் வாக்குகள் இவருக்கு எதிராக மாறும் என நினைத்திருந்த வேளையில், ரித்தீஷ் அ.தி.மு.க-வுக்கு தாவியதால், வெறுப்படைந்த கட்சிக்காரர்கள் மீண்டும் ஜலீலுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர். அ.தி.மு.க-வுக்கு கிடைக்க வேண்டிய முக்குலத்தோர் வாக்குகளைக் கணிசமாக தேசிய பார்வர்டு ப்ளாக் வேட்பாளரான பி.டி.அரசகுமார் பிரிப்பதுவும் ஜலீலுக்கு கூடுதல் தெம்பு.
காங்கிரஸ் வேட்பாளரான திருநாவுக்கரசர், தனது நீண்ட கால ஆதரவாளர்களை நம்பியே களமாடுகிறார். இதுதவிர, பி.ஜே.பி-யின் குப்புராமு கூட்டணி பலத்தையும் முக்குலத்தோர் மற்றும் யாதவ சமுதாய வாக்குகளையும் நம்பியிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான உமாமகேஸ்வரி பிரிக்கும் வாக்குகளும் அ.தி.மு.க-வின் அன்வர்ராஜாவின் கணக்கில் இருந்தே கழிக்கப்பட வேண்டும்.
இந்தக் கணக்குகளை வைத்துப் பார்த்தால், ராமநாதபுரத்தில் ஜலீல் கொடி உயரப் பறக்கிறது!



****
ஆற்றுமணல் கொள்ளை, தாது மணல் அள்ளும் விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை என எப்போதும் தகித்துக்கொண்டிருக்கும் தொகுதி, தூத்துக்குடி. இந்தத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி என ஆறு முனை போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறார் வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி. வழக்கறிஞரான இவர், தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லாதவர். இவருக்கு சீட் கொடுத்ததால், கட்சியினர் மேற்கொள்ளும் உள்குத்து வேலைகள் இவருக்கு எதிராக இருக்கின்றன. ஆனால், இதை எல்லாம் மீறி இந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இவருக்கு ப்ளஸ்.
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரான பெரியசாமியின் மகன் ஜெகன் களம் இறக்கப்பட்டு இருக்கிறார். தனது மகனை எப்படியாவது ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பெரியசாமி தீவிரமாக களம் இறங்கியிருக்கிறார். முக்கியப் பிரமுகர்களை சந்திப்பது, அதிருப்தியில் இருக்கும் மாற்றுக் கட்சியினரைக் 'கவனித்து’ உள்குத்து வேலைகளைச் செய்ய ஊக்குவிப்பது, சொந்த கட்சிக்குள் நிலவும் குழப்படிகளைத் தீர்த்துவைப்பது என அவர் செய்யும் பஞ்சாயத்துகள் ஜெகனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தொகுதிக்குள் இருக்கும் தலித் வாக்கு வங்கி, சிறுபான்மையினர் வாக்குகளுடன் கட்சியின் வாக்குகளும் சேரும்போது வெற்றி சுலபமாகி, தனது மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட முடியும் என்பது பெரியசாமியின் நம்பிக்கை. ஆனாலும், சொந்தக் கட்சியைச்  சேர்ந்தவரான அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரக் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அத்துடன், சிட்டிங் எம்.பி-யான ஜெயதுரை தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார். இதெல்லாம் அவருக்கு மைனஸ்.
பி.ஜே.பி. கூட்டணி பலத்துடன் ம.தி.மு.க-வின் சார்பில் களம் இறங்கியிருக்கும் ஜோயல், தொகுதிவாசிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். ஆற்று மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் பிரச்னை என எந்தப் போராட்டக் களமாக இருந்தாலும், முன்னணியில் ம.தி.மு.க. இருந்தது.  தி.மு.க-வின் எதிர்ப்பு அணியினரின் வாக்குகள் தனக்கே கிடைக்கும் என நம்புகிறார். கூட்டணி பலமும், மோடி அலையும் தன்னை கரை சேர்க்கும் என்பது இவரது நம்பிக்கை. தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் ம.தி.மு.க. வலுவான செல்வாக்குடன் இருப்பதும் இவருக்கு பலம்.
காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி.வி.சண்முகம், சி.பி.ஐ. சார்பில் மோகன்ராஜ் ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள். ஆம் ஆத்மியில் களம் இறங்கும் புஷ்பராயனுக்கு மீனவ கிராமங்களில் செல்வாக்கு அமோகமாக உள்ளது. அவர்களின் வாக்குகளில் கணிசமானவற்றை இவர் கைப்பற்றுவார்.
இப்படி வாக்குகள் பிரிந்துகிடக்கும் சூழலில், தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தத் தொகுதியில் பம்பரம் சுழல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது!

மிஸ்டர் கழுகு: வெற்றிக்கணக்கு!


கழுகார் உள்ளே நுழைந்ததும், ''உமது நிருபர்கள் எடுத்த 40 தொகுதி நச் நிலவரங்கள் எப்படி இருக்கின்றன?'' என்ற கேள்வியைப் போட்டு நம்மைக் கவனித்தார். அவரைப் பார்த்துச் சிரித்தோம். ''ஒவ்வொரு தொகுதியிலும் முந்தி நிற்கும் மூன்று வேட்பாளர்களாக யாரை நீர் சொல்லப்போகிறீர் என்பதைத்தான் தமிழ்நாடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. நான் சில கணிப்புகளை வைத்துள்ளேன். அதோடு இதுவும் ஒத்துப்போகிறதா என்று பார்ப்போம்!'' என்றார். தொகுதிவாரியாக எடுக்கப்பட்டதை பார்த்துக்கொண்டே வந்த கழுகார், சில இடங்களில் நிறுத்தி தனது டைரியில் ஏதோ குறித்துக்கொண்டார். அப்புறம் நம்மிடம் சொல்ல ஆரம்பித்தார்!

''மத்திய மாநில உளவுத் துறை எடுத்துவைத்துள்ள கணிப்புகளும் உமது கணிப்புகளும் ஒத்துப்போகின்றன. மத்திய புலனாய்வுத் துறை இந்த வாரத்தில் ஒரு சர்வே எடுத்துள்ளார்களாம். அதன்படி, அ.தி.மு.க-வுக்கு 18 இடங்களும், தி.மு.க-வுக்கு 13 இடங்களும் பி.ஜே.பி. கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளதாம். மாநில உளவுத் துறை எடுத்த கணிப்பின்படி அ.தி.மு.க-வுக்கு 22 தொகுதிகளும், தி.மு.க-வுக்கு 10 தொகுதிகளும், பி.ஜே.பி. அணிக்கு 8 தொகுதிகளும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளதாம். இவர்கள் இருவர் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் தோராயமாக அ.தி.மு.க. அணிக்கு 18 முதல் 22 தொகுதிகளும், தி.மு.க. அணிக்கு 10 முதல் 13 தொகுதிகளும் பி.ஜே.பி. கூட்டணிக்கு 8 முதல் 10 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே இப்போதைய நிலவரம்!''
''அ.தி.மு.க. எதிர்ப்பார்ப்புக்கு இவை குறைவாக இருக்கிறதே?''
''32 தொகுதிகள் நிச்சயம் ஜெயிப்போம் என்று ஜெயலலிதா சொல்லிவருகிறாராம். அதற்காக அவர் சொல்லும் சிம்பிளான லாஜிக் என்ன தெரியுமா? 'எல்லோருமே அ.தி.மு.க-வை விமர்சித்துத்தான் வாக்கு கேட்கிறார்கள். அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் நான்காகப் பிரியும்போது அ.தி.மு.க. எளிமையாக ஜெயிக்கும்’ என்று சொல்லிவருகிறாராம். அ.தி.மு.க-வுக்கு 30 சதவிகிதம் வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது என்றும் அவர் நம்புகிறார். இந்தளவுக்கு வாக்கு வங்கி தி.மு.க-வுக்கு இல்லை என்பதும் பி.ஜே.பி. கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்தாலும் கிடைக்காது என்பதும் அவரது கணிப்பு. இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை இப்படித்தான் இருந்தது அந்த நிலவரம். ஆனால், மோடி, சோனியா, ராஜ்நாத் சிங் வந்து சென்றதும், அத்வானி வருகையும் மன்மோகன், ராகுல் ஆகியோர் வர இருப்பதும், 'இது நாடாளுமன்றத் தேர்தல். அதற்கு ஏற்ப வாக்குகளை அளிக்க வேண்டும்’ என்ற சிந்தனையை படித்த வாக்காளர்கள், நகர்ப்புற மக்கள் மத்தியில் விதைத்துவிட்டது. 'பிரதமராக யார் வர வேண்டும் என்ற தோற்றத்தை அது உருவாக்கிவிட்டது. இது அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட முதல் பலவீனம். இப்படி நினைக்கும் வாக்காளர்கள், 'அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தால், அது பி.ஜே.பி. ஆட்சி அமைக்கத்தான் உதவும்’ என்று முதலில் நினைத்தார்கள். ஆனால், 'காங்கிரஸ், பி.ஜே.பி. ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம்’ என்று ஜெயலலிதா சொன்னது அடுத்த சறுக்கலாக மாறியது. 'அப்படியானால் ஜெயலலிதா யாரை ஆதரிப்பார்?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். 'மோடியை அரசியல்ரீதியாக முதலில் விமர்சித்திருக்க வேண்டும். கடைசியில் விமர்சிக்க வந்தது அ.தி.மு.க-வுக்குத்தான் நெருக்கடியை ஏற்படுத்தியது’ என்கிறார்கள். படித்தவர்கள் மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை இது சரித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால்தான், சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்த ஜெயலலிதா, அந்த வாசகங்களைச் சொல்லவில்லை. 'நாங்கள் காங்கிரஸ், பி.ஜே.பி. ஆட்சி அமைக்க ஆதரவைத் தர மாட்டோம்’ என்பதையும் சொல்லவில்லை. மத்திய சென்னை சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் தொகுதி. அங்கும் அவர் இதனை உஷாராகச் சொல்லாமல் விட்டார்!''
''ஏன் இந்தக் குழப்பம்?''
''யாரை ஆதரிப்போம், யாரை ஆதரிக்க மாட்டோம் என்பதை இப்போது எதற்காகச் சொல்ல வேண்டும்? சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் போகின்றன. அ.தி.மு.க-வையும் இன்னொரு பி.ஜே.பி-யாகத்தான் சிறுபான்மையினர் பார்க்கிறார்கள். அதனை மாற்ற நினைத்துத்தான் பி.ஜே.பி. மோடி மீது விமர்சனங்களை தொடுத்தார். அதுவே அவருக்கு நெகடிவ் ஆகிவருகிறது என்றும் சொல்கிறார்கள்!''
''சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் வலைதளத்தில், 'கிறிஸ்துவ பாதிரியார்களும் முஸ்லிம் மதத் தலைவர்களும் சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களுடைய ஓட்டுக்களை இழக்க வேண்டிவரும் என்றும் மிரட்டுகின்றனர். இதற்கு என்ன செய்யப்போகிறார் ஜெ.ஜெ.?’ என்று பதிவிட்டுள்ளாராமே?''
''திடீரென்று இந்த மேட்டர் கிளம்பி உள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில், புதுவை சிறப்பு நீதிமன்றம் காஞ்சி ஜெயேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் நிரபராதி என்று விடுதலை செய்தது. வழக்கமாக இந்த மாதிரி தீர்ப்பு வந்தால், மாநில அரசு அப்பீல் செய்யும். ஆனால், தமிழக அரசு அமைதியாக இருந்தது. ஆனால், மேல்முறையீடு செய்யப்போகிறார்கள் என்று இரண்டு, மூன்று நாட்களாக செய்தி பரவிக்கிடக்கிறது. தீர்ப்பு வந்த 60 நாட்களுக்குள் அப்பீல் செய்ய வேண்டும் என்பது விதி. நவம்பர் 26-ம் தேதி தீர்ப்பு வந்தது. ஜனவரி 26-க்குள் அப்பீல் செய்திருக்க வேண்டும். ஆனால், திடீரென இப்போது இந்தக் காரியங்களில் இறங்குவதற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசு அதிகாரி ஒருவர், இதனை வருத்தப்பட்டு பேசிக்கொண்டு இருந்தாராம். 'ஜெயலலிதா உள்துறையை தன்னுடைய கைகளில் வைத்திருந்தாலும்கூட, நிர்வாகம் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது. சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்க முடியாது. அதில் உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், மேல்முறையீடு செய்யவும் குறிப்பிட்ட வழக்கின் விசாரணை அதிகாரி யாரோ அவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால், காஞ்சி மடத்துக்கு எதிராக இப்போது அவர் எடுக்கப்போகும் இந்த நடவடிக்கை முற்றிலும் விதிமுறைகளுக்கு மாறானது. சட்டத்துக்குப் புறம்பானது’ என்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உள்ளது!''
''பி.ஜே.பி-யுடன் மோதுவதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?''
''இந்த விவகாரத்தைத் தெரிந்துகொண்ட சுப்பிரமணியன் சுவாமி, தன்னுடைய ட்விட்டர் தளத்தில் இதுபற்றி பதிவிட்டார். அதையடுத்து ஜெயலலிதாவுக்கு எதிராகவும், மடத்துக்கு ஆதரவாகவும் ஏராளமான பின்னூட்டங்கள் வந்தன. தன்னுடைய அந்தப் பதிவில் சுவாமி, '2016-ம் ஆண்டுத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, சிறுபான்மையினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார்’ என்றும் பதிவிட்டுள்ளார். 'பி.ஜே.பி. தன்னை மதிக்காமல் விலகி நின்று விமர்சிப்பதற்குக் காரணம் ஜெயேந்திரர்தான் என்று ஜெயலலிதா நினைக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள்!''
''என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!''
''காவல் துறையினர் தபால் ஓட்டுக்களை தபாலில் அனுப்பாமல் வாக்குப்பெட்டியில் போடுவதற்காக சிறப்பு மையங்களை இந்த முறை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இரண்டு நாளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டிருந்தது. இது ஒரு புதிய முயற்சி என்றாலும், 'இதில் ஏகப்பட்ட கோல்மால்கள் நடக்கிறது மையம் அமைக்கப்பட்ட தகவலை ஆளுங்கட்சியைத் தவிர மற்றவர்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை’ என்ற புகார் கிளம்பியுள்ளது.''
''இந்த வாக்குகளும் கணிசமானவைதானே?''
''மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்குள் அமைக்கப்​பட்டிருந்த சிறப்பு மையத்தில் வாக்களிக்கும் இடத்தில் ஆளுங்கட்சியினர் நின்றுகொண்டு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பதாக தகவல் வரவும், மற்ற கட்சியினர் அங்கு வந்துவிட்டனர். 'இப்படியொரு மையம் அமைக்கப்பட்டதே எங்களுக்குத் தெரியாது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் சிலர், வாக்களிப்போருக்கு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தனர். சில காவல் துறை உயர் அதிகாரிகளே ஆளுங்கட்சிக்கு கேன்வாஸ் செய்கிறார்கள். இதையெல்லாம் தேர்தல் அலுவலர்கள் கண்டு​கொள்வது இல்லை. இதுபற்றி கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கை இல்லை என்றால், வழக்கு தொடருவோம்’ என்கிறார்கள் தி.மு.க. வக்கீல்கள். தே.மு.தி.க-வினரும் காங்கிரஸாரும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.''
''கடைசி இரண்டு நாட்கள்தானே ஏராளமான விஷயங்கள் நடக்கும்?''
''ஆமாம்!'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ''ஆலோசகர் அந்தஸ்துடன் கார்டனுக்குள் நுழைந்த ஓர் அதிகாரியை, அதற்குள் கல்தா கொடுத்துவிட்டார்களாமே?'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!
படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்
சிக்கலில் 'கோச்சடையான்'

'கோச்சடையான்’ மே 9-ல் ரிலீஸ் ஆவதில் சிக்கல். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு எதிராக திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளதுதான் பிரச்னைக்குக் காரணம்.
ஈராஸ் நிறுவனத்தின் சார்பில் ஏராளமான பொருட்செலவில் 'கோச்சடையான்’ படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து இருக்கிறார் முரளி மனோகர். இதற்கு முன்பு ஈராஸ் வாயிலாக சூர்யா நடித்த 'மாற்றான்’ படத்தை வாங்கி ரிலீஸ் செய்தார். அதில் விநியோகஸ்தர்களுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம். 'கோச்சடையான்’ படத்தைத் தருவதாகச் சொல்லி முன்கூட்டியே விநியோகஸ்தர்களிடம் 26 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். மொத்த பணத்தையும் செட்டில் செய்த பிறகுதான் 'கோச்சடையான்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கிடுக்கிபிடிப் போட்டு இருக்கிறார்களாம். இதுதொடர்பாக பஞ்சாயத்து பேசிய பனியன் நகரைச் சேர்ந்த மணியான மனிதரிடம், 'என்னை 'கோச்சடையான்’ படத்துல நடிக்க கூப்பிட்டாங்க... நடிச்சேன். ஃபைனான்ஸ், ரிலீஸ் பிரச்னை பத்தி எனக்குத் தெரியாது...’ என்று கட் அண்ட் ரைட்டாக பதில் சொல்லிவிட்டாராம் ரஜினி.

தலைவர்களின் இறுதி கட்ட பிரசாரம்

தமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இறுதிக் கட்டம் நெருங்குகிறது. வலம்வரும் தலைவர்கள் சொல்வது என்ன?

''மக்களை பிரிக்க நினைக்கிறார் மோடி!''
காங்கிரஸ் கட்சியின் இளம் சிங்கமாக சோலோவாக மாநிலம் மாநிலமாகச் சென்று தீவிர பிர​சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் காங்​கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்னை. பி.ஜே.பி-யை அக்குவேறு ஆணிவேறாகக் கிழித்து தோரணம் கட்டுகிறார். பேசும்போது நடு நடுவே காமெடி, கோபம் என கலந்துகட்டி அடிக்கிறார் மனிதர்.
கடந்த வாரம் அசாமில் பேசும்​போது ''ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்று பி.ஜே.பி-யும், மோடியும் பிரித்தாள நினைக்கிறார்கள். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கி​யர்கள்... என பல மதத்தினர் இந்தி​​யாவில் வாழ்கின்றனர். இவர்​களின் ஒற்றுமைதான் இந்தி​யாவின் வலிமையே. ஆனால், இவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறார்கள். பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசும் மோடி, சுவரொட்டிகளில்கூட பெண்களின் படத்தை இடம்பெறச் செய்வது இல்லை. பெண்களைப் புறக்கணிக்கிறார்கள். தன் மனைவியையே இவ்வளவு நாட்களாக மறைத்து இருக்கிறார் என்றால், இவர் எப்பேர்பட்ட பொய் ஆசாமி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். மங்களூரில் அந்தக் கட்சியினர் பெண்களைத் தாக்குகிறார்கள். குஜராத்தில் ஒரு பெண்ணின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது; அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க அதிகாரிகள் பின்தொடர்கின்றனர். மோடி நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். உங்கள் கையில், ஒரு விரலில்தான் மந்திரம் இருக்கிறது. மோடியைத் தேர்ந்தெடுத்து, எதிர்காலத்தில் வருத்தப்படாதீர்கள்'' என்று போட்டுத்தாக்குகிறார் ராகுல்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
''இந்தக் கூட்டணி தொடரும்!''
பி.ஜே.பி. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் தமிழகச் சுற்றுப்​பயணத்தில் அவரது பேச்சு தெளிவாக இருக்கிறது.
''தமிழகத்தில் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி, வரும் சட்ட​மன்றத் தேர்தலிலும் தொடரும். இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியும் சரி... தமிழகத்தை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க-வும் சரி... தலைவிரித்தாடும் மீனவப் பிரச்னைக்கு என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லையே! மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், மாநில அரசுடன் இணைந்து தேசிய மீனவர் நலவாரியம் அமைத்து, மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இலங்கை பிரச்னையிலும் மத்திய, மாநில அரசுகள் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிகாரப் பகிர்வை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் அதையும் செய்துகொடுப¢போம்.
2003-ம் ஆண்டு சிக்கிம் எங்களுடைய பகுதி என¢று சொன்னது சீனா. அப்போது ஆட்சி செய்த எங்கள் வாஜ்பாய், 2004-ம் ஆண்டு சீனா சென்று, சீன பரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிக்கிம் இந்தியாவின் பகுதிதான் என்று சொல்ல வைத்தவர். அதுபோன்று காங்கிரஸ் தலைவர்களால் செய்ய முடியுமா?
நம்முடைய ராணுவ வீரர்கள் பகைவர்களால் சுட்டுக்கொல்லப்​பட்டது மட்டுமல்லாமல், அவர்களின் தலையை வெட்டி எடுத்து அவர்கள் நாட்டுக்கே கொண்டுசென்றுவிட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி மௌனமாக இருக்கிறார்கள். ஏன்? பயமா? தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மோடி தலைமையில் அமைந்தால், அதற்கு நாங்கள் ஒரு முடிவு கட்டாமல் விடமாட்டோம். இது நாடாளுமன்றத் தேர்தல். அதனை மனதில் வைத்து வாக்களியுங்கள்!'' என¢று கர்ஜித்தார் ராஜ்நாத் சிங்.
- ஏ.ராம்
''காய்ச்சல் இருந்தாலும் வந்து சந்திப்பேன்!''
ஹெலியில் பிரசாரத்தை முடித்து, இப்போது சென்னையில் வேனில் சுற்றி பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.
திருவல்லிக்கேணியில் மத்திய சென்னை வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்துப் பிரசாரம் செய்தபோது, ''நானும் சோனியாவும் மோதிக்கொள்வதால்தான் தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை என கன்னியாகுமரியில் மோடி பேசியிருக்கிறார். அவரே ராமநாதபுரத்தில் பேசும்போது, மத்தியில் வலுவான அரசு இல்லாததால்தான் மீனவர்கள் தாக்கப்​படுவதாகச் சொன்னார். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் அரசு சிறைப்பிடிப்பதற்குக் காரணம், நரேந்திர மோடியும் சோனியாவும் மோதிக்கொள்வதால்தான் என்று எடுத்துக்கொள்ளலாமா? தமிழக மீனவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள்தான். இன்று எனக்குக் கடுமை​யான காய்ச்சல் இருக்கிறது. மாத்திரையைப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன். அதுதான் உங்கள் அன்புச் சகோதரியின் நடைமுறை'' என்று சென்டிமென்ட் டச் செய்தார்.
- நா.சிபிச்சக்கரவர்த்தி
''மக்கள் மறித்துவிடுவார்கள் என்ற பயம் ஜெயலலிதாவுக்கு!''
திருச்சியில் தொடங்கினால் ஜெயம் எனும் நம்பிக்கையில் எப்போதும் திருச்சியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் தி.மு.க. பொருளாளர் முக.ஸ்டாலின், இந்த முறை திருச்சியில் பிரசாரத்தை முடிக்கிறார்.  
''தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் நாங்கள் இல்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்களுடன் இருக்கிறவங்க நாங்கதான்.  அந்த உரிமையோடு ஓட்டுக் கேட்டு வந்திருக்கிறோம். இன்று நாட்டில் எத்தனையோ தலைவர்ங்க இருக்காங்க... சில தலைவர்ங்க தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்கேட்டு வருவாங்க என்பது உங்களுக்குத் தெரியும்.
இப்போ நாங்க ஹெலிகாப்டரில் வரல. ஹெலிகாப்டர் என்றால், ஜெயலலிதா; ஜெயலலிதா என்றால், ஹெலிகாப்டர்! அப்படி ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கிளம்பி... டகடக டக டகடக டகன்னு (ஹெலிகாப்டர் செல்வதுபோல் சத்தமிடுகிறார்) பறந்து வர்றாங்க. ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கிளம்பும்போது போலீஸார், 'கிளம்பிவிட்டார் ஓவர், பறக்கிறார் ஓவர்’ எனச் சொல்கிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டு மக்கள்,  ஜெயலலிதா ஆட்சிக்கு ஓவர் என்று சொல்லும் நேரம் வந்துவிட்டது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மூணு வருஷமாச்சு. இந்த மூணு வருஷத்துல மக்களை எங்கயாவது நேரில் சந்தித்ததுண்டா? அவருக்கு மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ கவலை இல்லை. அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்க போகும்போது மக்கள் மறிக்கிறார்கள் ஊருக்குள் விட மறுக்கிறார்கள். அப்படி தன்னையும் மக்கள் மறித்துவிடுவார்கள் என்கிற பயம்தான் ஜெயலலிதாவுக்கு'' என்று போட்டுத்தாக்கினார்.

சனி, 19 ஏப்ரல், 2014

மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க. Vs பி.ஜே.பி.!

மோடியா, லேடியா என்ற மோதல் ஆரம்பம் ஆகிவிட்டது!'' என்றபடி கழுகார் உள்ளே வந்தார். நம்மைப் பேசவிடாமல் அவரே ஆரம்பித்தார்.

''பி.ஜே.பி. எதை எதிர்பார்த்ததோ அது நடந்துவிட்டது. ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்களை விமர்சித்துப் பேச ஆரம்பித்தால்தான் எதிர் பிரசாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று பி.ஜே.பி. தலைவர்கள் சொல்லிக்கொண்டார்கள். இதுவரை காங்கிரஸை மட்டுமே விமர்சித்துவந்த ஜெயலலிதா, மோடி- ரஜினி சந்திப்புக்குப் பிறகு பி.ஜே.பி-யையும் திட்ட ஆரம்பித்தார். 'காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு, கர்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் அரசும் துரோகம் செய்தது; பி.ஜே.பி. அரசும் துரோகம் செய்தது. பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் காவிரி பிரச்னை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதுபற்றி வைகோவும் ராமதாஸும் ஏன் கருத்துச் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் ஆட்சிக்கு வரவே முடியாது. மத்தியில் இந்த இரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு பயன் இல்லை. இந்த இரண்டு கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்’ என்று பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். 'தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஒருவரை ஒருவர் பழிவாங்கினார்களே தவிர, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் இந்த தீய விளையாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று மோடி சொன்னதும் முதல்வரைக் கோபப்பட வைத்துள்ளது. 'இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பது தமிழகம்தான்’ என்று பதில் அளித்த ஜெயலலிதா, பல்வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லி, குஜராத்தைவிட தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று சொல்லியிருக்கிறார்!''
''சபாஷ் சரியான போட்டிதான்!''
''மோடி பெயரையே சொல்லாமல், 'குஜராத் முன்னேறி இருப்பதாகச் சொல்வது மாயத்தோற்றம். அது உண்மை அல்ல. குஜராத் விளம்பரப்படுத்திக்கொள்கிறது. தமிழ்நாடு விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை. வெற்றுப்பேச்சு, விளம்பர வெளிச்சம் ஆகியவை குஜராத் அரசிடம் உள்ளது. ஆனால், மக்கள் சேவை ஒன்றையே சிந்தனையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்’ என்று சொல்லிவிட்டார். இப்படி நேருக்கு நேர் மோதலாக இது மாறிவிட்டது!''
''சொல்லும்!''
''இதுவரை அ.தி.மு.க. - தி.மு.க. மோதலாக இருந்த தமிழகத் தேர்தல் களம், கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க. - பி.ஜே.பி. மோதலாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்கு வருத்தம் கொடுத்துள்ளது. 'பி.ஜே.பி-க்கு வாக்குகள் கூடுகிறது என்றால், அது அ.தி.மு.க-வில் இருந்து குறையும் வாக்குகள் அல்லது அ.தி.மு.க-வுக்கு வரவேண்டிய வாக்குகள். இதன் மூலமாக தி.மு.க. லாபம் அடையும்’ என்று ஜெயலலிதா நினைக்கிறார்.''
''இப்படி மாறியதற்கு என்ன காரணம்?''
''ரஜினி - மோடி சந்திப்பு, நடிகர் விஜய் - மோடி சந்திப்பு, தமிழகத்துக்கு மூன்று நாட்கள் வந்து ஏழு ஊர்களில் மோடி பேசியது ஆகியவைதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். வியாழக்கிழமையுடன் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தங்களது வெளியூர் பிரசாரத்தை முடித்துவிடுகிறார்கள். ஆனால் அத்வானி, ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, முக்தார் அப்பாஸ் நக்வீ போன்ற பி.ஜே.பி. தலைவர்கள் இனிதான் வரப்போகிறார்கள். இதுவரை தமிழகப் பிரச்னைகளை மட்டும் சொல்லி பிரசாரம் செய்துவந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும், இப்போதுதான் டெல்லி அரசியலையும் நரேந்திர மோடி பற்றியும் பேச ஆரம்பித்துள்ளார்கள். இது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை வாக்காளர்கள் மனதில் உருவாக்கி உள்ளது. ஆனாலும், முதல்வர் தைரியமாக இருக்கிறார். 'நிச்சயம் 32 தொகுதிகளை நாம் கைப்பற்றுவோம், எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்று மம்தாவிடம் சொன்னதாகச் சொல்கிறார்கள்.''
''அவர் கணக்கு அதுதானா?''
''ஆமாம்! கட்சிகள் வைத்துள்ள கணக்கைச் சொல்லிவிடுகிறேன். அ.தி.மு.க. 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்பது முதல்வரின் நம்பிக்கை. 10 தொகுதிகளைத் தாண்டிவிடுவோம் என்பது ஸ்டாலின் எண்ணம். பி.ஜே.பி. கூட்டணியும், தங்களுக்கு 10 தொகுதிகளுக்கு மேல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறது!''
''அவர்கள் சொல்லும் தொகுதிகள் என்னென்ன?''
''கன்னியாகுமரி, கோவை, தென் சென்னை ஆகிய தொகுதிகள் பி.ஜே.பி-க்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி ஆகிய தொகுதிகள் பா.ம.க-வுக்கும் கள்ளக்குறிச்சி, திருப்பூர் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க-வுக்கும் விருதுநகர், தென்காசி, ஈரோடு ஆகியவை ம.தி.மு.க-வுக்கும் சாதகமாகச் சொல்லப்படுகின்றன. வேலூரில் ஏ.சி.சண்முகம் நம்பிக்கையுடன் இருக்கிறார். தி.மு.க-வைப் பொறுத்தவரை மத்திய சென்னை, நாகப்பட்டினம், சேலம், கரூர், திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற தொகுதிகள் வாய்ப்பு உள்ளவையாகச் சொல்லப்படுகின்றன.''
''காங்கிரஸ்?''
''கன்னியாகுமரியையும் புதுச்சேரியையும் காங்கிரஸ் கட்சி அதிகமாக நம்புகிறது. இரண்டு தொகுதிகளில் நிச்சயம் ஜெயிப்போம் என்கிறார்கள். தேனி, சிவகங்கை, மயிலாடுதுறை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய தொகுதிகளில் கணிசமான வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளர்கள் வாங்குவார்கள் என்கிறார்கள்.''
''ஆனால், ஒரே ஒரு கூட்டம் மட்டும் பேசிவிட்டுப் போய்விட்டாரே சோனியா?''
''ஒரே ஒரு கூட்டம் மட்டும் பேசிவிட்டு சோனியா போய்விட்டது காங்கிரஸ் கட்சியினருக்கு வருத்தம்தான்! டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்தார் சோனியா. அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். பின்னர் காரில் பிரசார மேடை அமைக்கப்பட்டுள்ள முருகன்குன்றம் பகுதிக்கு வந்தார். முருகன்குன்றம் பகுதியில் காலையில் இருந்தே காங்கிரஸ் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். தமிழக காங்கிரஸ் கட்சியின் 39 வேட்பாளர்களும் ஆஜராகி இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகச் செய்யப்பட்டு இருந்தது!''
''அப்படியா?''
''குமரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டம் நடக்க இருந்த முருகன்குன்றம் பகுதிக்கு அருகில் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. அங்குள்ளவர்கள் இரு நாட்கள் முகாமை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. குண்டு துளைக்காத மேடை அமைக்கப்பட்டு இருந்தது. சோனியா தமிழகத்தில் பேசும் ஒரே ஒரு கூட்டம் இது. அதில்கூட தமிழகத் தலைவர்களான ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரை வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். 'தமிழகத்தில் சரியான கூட்டணி அமைக்க இவர்கள் முயற்சிக்கவில்லை என்பதால் சோனியா இவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதனால்தான் அவர்களை அழைக்கவில்லை’ என்கிறார்கள்.''
''ஓஹோ!''
''நடிகர் கார்த்திக் 'சிறப்பு’ அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவர் பேசி முடித்ததும் பரிதாபமாக மைக் பிடித்த ஞானதேசிகன், 'காலை 8.30-க்கு தொலைக்காட்சி நண்பர்களை உள்ளே வர அனுமதிச்சோம். அப்போது  கூட்டம் இல்லாத சேர்களைக் காட்டி சோனியா காந்தி மீட்டிங்கில் கூட்டம் இல்லைன்னு நியூஸ் போட்டுருகீங்கன்னு எனக்கு சென்னையில இருந்து போன்ல சொல்றாங்க. இப்போ உங்க பின்னாடி நிற்கிற காங்கிரஸ் கூட்டத்தைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்க. அந்தக் கூட்டத்தையும் தயவுசெஞ்சு காட்டுங்கப்பா’ என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும், கூட்டம் குறைவுதான்.
'சகோதர சகோதரிகளே வணக்கம்...’ என்று சோனியாவும் தமிழில் தொடங்கினார். மத்திய அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டவர், 'தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள், இலங்கை தமிழர் நலனுக்காக காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிவருகிறார்கள். இலங்கை தமிழருக்காக அதிக நன்மைகளை செய்தது காங்கிரஸ்தான். வேறு எந்த அரசாவது இலங்கை தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டது உண்டா? இலங்கை தமிழர்களுக்காக ரத்தம் சிந்தியவர் ராஜீவ் காந்தி. அதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இலங்கை தமிழர்கள் நலனுக்குப் பல்வேறு உதவிகளை செய்துவருவது காங்கிரஸ்தான். அதை இனியும் தொடர்ந்து செய்வேன். அந்த உதவி தொடரும்’ என்று சொன்னபோது சோனியா அதிகமாகக் குரலை உயர்த்தினார்!''
''ம்!''
''ஒரே ஒரு இடத்தில் சோனியா பேசிச் சென்றது காங்கிரஸ் தலைவர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. 'கன்னியாகுமரித் தொகுதியைக் கைப்பற்றும் கட்சிதான் டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்பது கடந்த காலங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் ரிசல்ட்கள் உணர்த்தும் அரசியல் சென்டிமென்ட். அதை நன்கு அறிந்த சோனியா, காங்கிரஸின் வெற்றிக்காக, காங்கிரஸ் தொண்டர்கள் அதிகம் உள்ள கன்னியாகுமரித் தொகுதியில் தனது பிரசாரத்தை மேற்கொண்டார். அதனால், குமரித் தொகுதியையும் மற்ற தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி டெல்லியில் ஆட்சி அமைக்கும்’ என்று சொல்லிவருகிறார் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்.''
''சோனியா நம்பும் சென்டிமென்ட் கை சின்னத்துக்குக் கைகொடுக்குமா?''
''டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் செய்துள்ள காரியத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. 'தேர்தல் பணிச் செலவுகளுக்காக டெல்லி மேலிடத்தில் இருந்து எல்லாத் தொகுதிகளுக்கும் பணம் கொடுத்தார்கள். தொகுதிகளை ஏ,பி என்ற இரண்டு பிரிவாகப் பிரித்து பணம் ஒதுக்கினார்கள். அதிலும் சில டெல்லி நபர்கள் கை வைத்துவிட்டார்கள். கமிஷன் தொகையாகக் கணிசமான பணத்தை எடுத்துவிட்டுத் தந்துள்ளார்கள். கொடுத்த பணமே குறைவானது. இதிலும் எடுத்தால் என்ன ஆவது?’ என்று வேட்பாளர்கள் புலம்புகிறார்கள். இந்தப் பணம் போதாது என்று டெல்லித் தலைமைக்கு கடிதம் அனுப்பினாராம் மாநிலத் தலைவர் ஞானதேசிகன். ஆனால் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லையாம். 'வேண்டா விருந்தாளியாகத்தான் தமிழகக் காங்கிரஸை நினைக்கிறார்கள். அப்புறம் எப்படி கட்சியை வளர்க்க முடியும்?’ என்று காங்கிரஸ் பிரமுகர்கள் புலம்புகிறார்கள். இந்நிலையில், வரும் 21-ம் தேதி ராமநாதபுரத்துக்கு வந்து திருநாவுக்கரசரை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்யவிருக்கிறாராம். இது காங்கிரஸாருக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.''
''ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா?''
''அது ரகசியமான ரகசியம்தான். ரஜினியை எப்படியாவது பி.ஜே.பி-க்குள் கொண்டுவருவதற்கான காரியங்கள் இப்போது தொடங்கிவிட்டன. ஆனால், அவர் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தைக் கணக்கில் வைத்து பி.ஜே.பி. காய் நகர்த்த இருக்கிறது. அதற்கான முஸ்தீபுகளில் ஒன்றுதான் ரஜினி, விஜய் போன்றவர்களை மோடி சந்தித்தது. ரஜினி - மோடி சந்திப்புக்கு முன்னதாக ரஜினி - வைகோ சந்திப்பு நடந்துள்ளது. கடந்த 5-ம் தேதி விருதுநகர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வைகோவிடம் ரஜினியைப் பற்றி பேசியிருக்கிறார். 'அவரை பி.ஜே.பி-க்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். 'இதனை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அவரைச் சந்தியுங்கள்’ என்று ஜெத்மலானியிடம் வைகோ சொல்ல... 'நான் அவசரமாக டெல்லி செல்ல வேண்டும், கடிதமாக எழுதித் தருகிறேன், அவரிடம் கொடுத்துவிடுங்கள்’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ராம் ஜெத்மலானியின் சுயசரிதை சமீபத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் புத்தகத்தையும் தனது கடிதத்தையும் கொடுத்து அனுப்பினார். கடந்த 6-ம் தேதி காலை இந்த சந்திப்பு நடந்துள்ளது. அடுத்து நடந்த மோடி சந்திப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்!''
''விஜய்...?''
''ரஜினியை சந்திக்க வந்த அன்றே விஜய் சந்திப்புக்கும் ஏற்பாடு ஆனது. ஆனால், அன்று ஹைதராபாத்தில் 'கத்தி’ பட ஷூட்டிங்கில் இருந்தார். இரண்டு சந்திப்புகளும் வேறு வேறு நாட்களில் இருந்தால் நல்லது என்று பி.ஜே.பி. நினைத்தது. அதனால், தேதியை மாற்றி கோவைக்கு விஜய்யை வரச் சொன்னார்கள். மோடி தங்கி இருந்த ஹோட்டலில் பக்கத்து அறையிலேயே விஜய்க்கும் அறை போடப்பட்டது. இருவரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள்போலப் பேசிக்கொண்டு இருந்தார்களாம். 'உங்களைப் போன்ற யங் மேன் எங்களுக்குத் தேவை’ என்றாராம் மோடி. விஜய் தனது இறுதி முடிவைச் சொல்லவில்லை. ஏற்கெனவே ராகுலை சந்தித்தவர் விஜய். டெல்லி சென்று அண்ணா ஹஜாரே உண்ணாவிரத்தை வாழ்த்தியவர். இப்போது மோடியைச் சந்தித்துள்ளார். அரசியல் ஆசை விஜய்க்கு வந்துவிட்டது என்பதற்கான சமிக்ஞை இது என்கிறார்கள். ஜெயலலிதாவை எரிச்சல் ஏற்படுத்துவதற்காகவே பார்த்ததுபோல இருக்கிறது'' என்று கிளம்பத் தயாரான கழுகாரிடம், ''அடுத்த இதழ், தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமையே வெளியாகிறது... தெரியும்தானே?'' என்றோம். தலையாட்டியபடி பறந்தார்!
படங்கள்: சு.குமரேசன்,
க.தனசேகரன், ரா.ராம்குமார்

வைகோவின் வீரபாண்டி பாசம்!
கடந்த 13-ம் தேதி சேலம் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்தார் வைகோ. அப்போது, 'வீரபாண்டியார் இறப்புக்குப் பிறகு இங்கு அரசியல் நிலை எப்படி இருக்கிறது?’ என்று தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் விசாரித்தாராம் வைகோ. அதற்கு அவர்கள், ''வீரபாண்டியார் இருக்கும் வரை அவரை மையமாக வைத்தே அரசியல் சுழன்றது. யார் ஆட்சியாக இருந்தாலும், சேலத்தில் அவர் வைப்பதுதான் சட்டம். அதனால், சேலம் தி.மு.க. வலுவாக இருந்தது. ஆனால், இன்று அவர் பெயரைச் சொல்லக்கூட ஸ்டாலின் தயங்குகிறார். ஏற்காடு இடைத்தேர்தலுக்கு நான்கு நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்தார் ஸ்டாலின். 75 இடங்களில் பேசினார். ஆனால், வீரபாண்டியார் பெயரை ஒருசில இடங்களில் மட்டுமே சொன்னார். இப்போது சேலத்தில் பிரசாரத்துக்கு வந்தபோதும், வீரபாண்டியார் பெயரை ஒரு இடத்தில்கூட ஸ்டாலின் உச்சரிக்கவில்லை. அதனால், வீரபாண்டியாரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். சேலம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்துக்கு வெளியே இருக்கும் வீரபாண்டியார் சிலைக்குக்கூட யாரும் சரியாக மாலை போடுவது இல்லை'' என்று வைகோவிடம் வருத்தத்துடன் சொன்னார்களாம்.
''அதனால் என்ன... நாம போட்டா போச்சு'' என்று சொன்ன வைகோ, மாலையில் பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுக் கிளம்பினார். பொதுக்கூட்டத்திலும் வீரபாண்டி ஆறுமுகத்தை ஏகத்துக்கும் புகழ்ந்தார் வைகோ.
வைகோவின் இந்த வீரபாண்டி பாசம், சேலம் தி.மு.க-வினரைத் திகைக்க வைத்திருக்கிறது.

பறிபோகும் செல்வகணபதி பதவி!

'ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிக்கப்படும்’ என்று ஜூலை 2013-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், 'கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடத் தடை என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்கிறது. அவர்கள் பதவியில் இருக்கும் நேரத்தில், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் பதவி பறிக்கப்பட வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது. அதன்படி, இப்போது, சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு சிக்கல். தி.மு.க. சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் அவரது பதவி பறிபோய்விடும்.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சர்களாக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, முறைகேடான வழிகளில் பணம் ஈட்டியது போன்ற குற்றச்சாட்டுகளுடன் பொன்முடி, சுரேஷ்ராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, முன்னாள் மதுரை மாநகர மேயர் பெ.குழந்தைவேலு ஆகியோர் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இப்போது நடந்துவருகிறது. அந்த வழக்குகளில் இவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அவர்கள் இனிமேல் தேர்தலில் போட்டியிடவே முடியாது.

வியாழன், 17 ஏப்ரல், 2014

, சூளைவாய்க்கால், சிறுத்தொண்டநல்லூர், பகுதிகளில் வீதி, வீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

ஏரல், : விவசாயிகளை காப்பாற்ற தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளங் கள் தூர் வார நடவடிக்கை எடுப்பேன் என சாயர்புரம் பகுதியில் பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் ஜெகன் உறுதி அளித்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜெகன் நேற்று ஸ்ரீவைகுண் டம் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். சாயர்புரம் அருகே பேய்குளத்தில் பிரசாரத்தை துவக்கிய அவர், சாலை, சிவத்தையாபுரம், புளியநகர், நந்தகோபாலபுரம், நடுவக்குறிச்சி, சாயர்புரம், சுப்பிரமணியபுரம், பட்டாண்டி விளை, முள்ளன்விளை, குமாரபுரம், நட்டாத்தி, வைகுந்தபுரம், திருப்பணிசெட்டிகுளம், சக்கம்மாள்புரம், மொட்டதாதன்விளை, சின்னநட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், சூளைவாய்க்கால் பகுதிகளில் வீதி, வீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப் போது அவர் பேசியதாவது: 
இப்பகுதி குளங்கள் தூர் வாரப்படாததால் தண்ணீரை சேமிக்க முடி யாமல் விவசாயிகள் விவ சாயம் செய்ய சிரமப்படுகின்றனர். திமுக ஆட்சியில் இப்பகுதி விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டன. ஆனால் அணையில் 40 அடி தண்ணீர் இருந்தும் விவசாயத்திற்கு அதிமுக அரசு தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. 
நான் வெற்றி பெற்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்கள் தூர் வார நடவடிக்கை எடுப்பேன். அதிமுக ஆட்சியில் மின்சார கட்டணம், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
நான் வெற்றி பெற்றால் மத்திய அரசின் நிதியை அதிகளவு பெற்று தூத்துக்குடி மாவட்டத்தை தொழில் மற்றும் விவசாயத்தை வளர்ச்சி அடைய செய்வேன். எனவே அனை வரும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசி னார்.
மாவட்ட முன்னாள் இளைஞரணி அமைப் பாளர் ராஜ்மோகன் செல்வின், ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரவி, ஒன்றிய முன்னாள் செயலாளர் மெய்யழகன், சாயர்புரம் நகர செயலாளர் வரத ராஜ் ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட விவசாய தொழி லாளர் அணி துணை அமைப்பாளர் துரைராஜ், நகர துணை செயலாளர் கிறிஸ்டோபர், ஒன்றிய பிரதிநிதி நாராயணன், ஒன்றிய முன்னாள் இளைஞரணி அமைப் பாளர் பாலமுருகன், நட்டாத்தி பஞ்சாயத்து துணைத் தலைவர் நாரா யணன், செயலாளர் சாமு வேல், தொண்டரணி கார்த்தீசன், அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...