வியாழன், 22 டிசம்பர், 2016

ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் பரபரப்பு

T
ஆத்தூர்,

ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

2 கற்சிலைகள்


ஆத்தூர்- முக்காணி இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தின் வழியாக நேற்று காலையில் பொதுமக்கள் சிலர் நடைப்பயிற்சி சென்றனர். அப்போது பழைய பாலத்தின் அடியில் தாமிரபரணி ஆற்றில் 2 கற்சிலைகள் கிடந்தது தெரிய வந்தது.

ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், சிலர் ஆற்றுக்குள் இறங்கி 2 சிலைகளையும் வெளியே எடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானவர்கள் அந்த சிலைகளை பார்த்து சென்றனர். அந்த 2 சிலைகளும் கல்லால் செய்யப்பட்டவை. அவைகள் கருப்பசாமி மற்றும் லட்சுமி நாராயணர் சிலைகள் என்பது தெரிய வந்தது.

கடத்தல் சிலைகளா?


இதுகுறித்து தகவல் அறிந்ததும், வருவாய் ஆய்வாளர் சாமிநாதன், கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாமி சிலைகளை பார்வையிட்டனர். இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு வரையிலும் அந்த சிலைகள் ஆற்றங்கரையில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த சிலைகளை திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

யாரேனும் கோவிலில் பழங்கால சிலைகளை கடத்தி வந்து போலீசாருக்கு பயந்து ஆற்றில் வீசிச் சென்றனரா? அல்லது உடைந்த சிலைகளை ஆற்றில் வீசிச் சென்றனரா? என ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே அந்த சிலைகள் குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தாமிரபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலைகளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏரல் வழியாக முக்காணி செல்லும் சாலையில் அதிக அளவில் செல்லும் தண்ணீர் லாரிகளால் விபத்து அபாயம்

ஏரல், டிச. 22:
ஏரல் வழி யாக முக் காணி செல் லும் சாலை யில் அதிக அள வில் செல் லும் தண் ணீர் லாரி களால் விபத்து அபா யம் நில வு கிறது. இதை தடுக்க வலி யு றுத்தி மறி யல் போராட் டம் நடத்த வியா பா ரி கள் முடிவு செய் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் ஏரல் 3வது பெரிய வணிக நக ர மா கத் திகழ் கி றது. இங்கு பல் வேறு பணி நிமித் த மாக சுற் று வட் டார கிரா மங் க ளில் இருந்து ஆயி ரக் க ணக் கா னோர் வந்து செல் கின் ற னர். மேலும், ஏர லில் உள்ள புகழ் பெற்ற சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில், குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில், ஆறு மு க மங் க லம் வேம் படி சுடலை மாட சு வாமி கோயில் க ளுக் கும் திர ளான பக் தர் கள் தின மும் வந் து செல் கின் ற னர்.
இதே போல், நாலு மா வடி இயேசு விடு விக் கி றார், புன் னை ந கர் வன தி ருப் பதி கோயி லுக்கு ஏரல் வழி யாக அதி க ளவு வாக னங் கள் வரு கின் றன. இத னால் ஏரல் சாலை யில் எப் போ தும் பர ப ரப் பாக காணப் ப டும். ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் பில் இருந்து பஸ் நிலை யம் வரை ரோட் டின் பல் வேறு பகு தி களில் உள்ள மின் கம் பத் தால் போக் கு வ ரத்து பாதிப்பு ஏற் ப டு கி றது.
இந் நி லை யில், வை குண் டம் அடுத்த பேட் மா ந க ரம் கல் கு வா ரி யில் இருந்து ஏரல் வழி யாக தின சரி நூற் றுக் கும் மேற் பட்ட லாரி களில் தண் ணீர் எடுத் துச் செல் லப் ப டு கி றது. குறிப் பாக ஏரல்- முக் காணி சாலை யில் அதிக அள வில் செல் லும் தண் ணீர் லாரி க ளால் ஏர லில் கடும் போக் கு வ ரத்து நெருக் கடி ஏற் பட் டுள் ளது. அத் து டன் ஏரல்- முக் காணி சாலை யில் இந்த கன ரக வாக னங் கள் இடை வி டா மல் ஒன் றுக் கு பின் ஒன் றாக அணி வ குத்து சென்று வரு வ தால் இச் சாலை சேத ம டைந்து வரு கி றது. மேலும் இந்த தண் ணீர் லாரி க ளும் ஆங் காங்கே சாலை யோ ரம் நிறுத் தப் ப டு வ தால் விபத்து அபா யம் நில வு கி றது.
எனவே, ஏரல் வழி யாக முக் காணி சாலை யில் தண் ணீர் ஏற்றி செல் லும் இந்த கன ரக லாரி களை தடுத் து நிறுத்த வேண் டும். தவ றும் பட் சத் தில் தண் ணீர் லாரி களை மறிக் கும் போராட் டம் நடத்தி வியா பா ரி கள் சங் கத் தி னர் முடிவு செய் துள் ள னர்.
இது குறித்து ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கத் தலை வர் தச ரத பாண் டி யன் கூறு கை யில், ‘‘ஏரல்- சாயர் பு ரம் சாலை, ஏரல்- குரும் பூர் சாலை உள் ளிட்ட அனைத் துச் சாலை களும் பரா ம ரிப் பின்றி போக் கு வ ரத் துக்கு லாய்க் கற்ற நிலைக்கு மாறி வரு கின் றன. ஓர ள வுக்கு போக் கு வ ரத்து பயன் பட்டு வந்த ஏரல்- முக் காணி சாலை யும் தற் போது தொழிற் சா லை க ளுக் காக பெரிய லாரி க ளில் தண் ணீர் எடுத் துச் செல் வ தால் பல் லாங் கு ழி யாக மாறி வ ரு கி றது. மேலும் இந்த லாரி கள் வரும் போது எதிரே வரும் வாக னங் க ளுக்கு வழி விட முடி யா த தால் போக் கு வரத்து நெரி சல் ஏற் ப டு கிறது. எனவே, இந்த தண் ணீர் லாரி கள் செல் வதை தடுத் து நி றுத்த வேண் டும். இல் லை யெ னில், அனைத் துத் தரப் பி ன ரை யும் திரட்டி மறி யல் போராட் டம் நடத் து வோம் ’’ என் றார்.
மறியல் போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு
ஏரல்- முக்காணி சாலையில்
தண்ணீர் லாரிகளால் விபத்து அபாயம்
ஏரல் பகு தி யில் சாலை யோ ரத் தில் நிறுத் தப் பட் டுள்ள தண் ணீர் லாரி .

வெள்ளி, 9 டிசம்பர், 2016

ஏரல் தாம்போதி பாலம் உடையும் அபாயம் அடித்தளத்தில் ஓட்டை

அடித்தளத்தில் ஓட்டை
ஏரல் தாம்போதி பாலம் உடையும் அபாயம்
ஏரல், டிச. 10:
அடித் த ளத் தில் ஏற் பட்ட ஓட் டை யால் ஏரல் பழைய தாம் போதி ஆற் றுப் பாலத் தில் திடீ ரென உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது. இதை உட ன டி யாக சீர மைக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும் என பொது மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் தாமி ர ப ரணி ஆற்று வழி யாக தென் ப குதி கிரா மங் க ளுக்கு செல் வ தற்கு 50 ஆண் டு க ளுக்கு முன் தாம் போதி பாலம் அமைக் கப் பட் டது.
இந்த பாலத் தில் அமைக் கப் பட் டுள்ள குழாய் கள் மூலம் தண் ணீர் வெளி யே றி யது. இந்த பாலம் ஒரு தடுப் பணை போல் இருப் ப தால் பாலத் திற்கு மேற் குப் பு றம் மட் டும் ஆற் றில் தண் ணீர் எப் போ தும் வற் றா மல் தேங் கி யுள் ளது. கோடை கா லத் தில் தாமி ர ப ரணி ஆற் றில் பல இடங் க ளில் தண் ணீர் வற் றி னா லும் ஏர லில் மட் டும் தண் ணீர் வற் றி ய தில்லை.
இந்த நீர் தேக் கத்தை பயன் ப டுத்தி சில உறை கி ண று கள் அமைத்து ஏரல், சிறுத் தொண் ட நல் லூர், சூழை வாய்க் கால் உட் பட பல பகு தி க ளுக்கு குடி நீர் வழங் கப் ப டு கி றது. மழைக் கா லத் தில் ஆற் றில் தண் ணீர் பெருக் கெ டுத்து வரும் போது இந்த பாலம் மூழ் கி வி டும். இத னால் ஏரல் - குரும் பூர் போக் கு வ ரத்து துண் டிக் கப் பட்டு வியா பா ரி க ளும் பொது மக் க ளும் சிர மப் பட் ட னர்.
இதை ய டுத்து புதிய உயர் மட்ட பாலம் அமைக் க வேண் டும் என இப் ப குதி மக் கள் தொடர்ந்து அர சுக்கு கோரிக்கை விடுத் த தன் அடிப் ப டை யில் பழைய தாம் போதி பாலம் அரு கி லேயே ரூ.16 கோடி 50 லட் சம் செல வில் புதிய உயர் மட் டம் பாலம் அமைக் கப் பட்டு கடந்த பிப்.14ம் தேதி அப் போ தைய முதல் வர் ஜெய ல லி தா வால் திறந்து வைக் கப் பட் டது. தற் போது புதிய உயர் மட்ட பாலம் வழி யாக போக் கு வ ரத்து நடந்து வந் தா லும், பழைய தாம் போதி பாலத் தை யும் போக் கு வ ரத் திற்கு பயன் ப டுத்தி வரு கின் ற னர்.
இந் நி லை யில் பழைய தாம் போதி பாலத் தின் நடு வில் உள்ள குழாய்க்கு கீழே அமைக் கப் பட் டுள்ள கான் கி ரீட் தளத் தில் ஓட்டை விழுந்து அதன் வழி யாக வீணாக தண் ணீர் வெளி யே று கி றது. நாள டை வில் இந்த ஓட்டை பெரி தாகி, பாலம் உடை யும் நிலை ஏற் பட் டுள் ளது.
மேலும், பாலத் துக்கு இக் க ரை யில் தேங் கி யுள்ள தண் ணீர் வீணாக வெளி யேறி கட லுக்கு சென் று வி டும். இத னால் ஏரல் பகு தி யில் நீரா தா ரம் பாதிப் புக் குள் ளா கும். எனவே, அதி கா ரி கள் முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை யாக இந்த பாலத் திற்கு அடி யில் ஏற் பட் டுள்ள ஓட் டை களை அடைத்து இதன் வழி யாக தண் ணீர் வெளி யே றுதை தடுக்க நட வ டிக்கை எடுக் க வேண் டும். மேலும், பழைய தாம் போதி பாலத் தில் தரைத் த ளத் தை யும் செப் ப னிட்டு பலப் ப டுத் த வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து ஏரல் வட் டார தாமி ர ப ரணி பாது காப்பு இயக்க பொறுப் பா ளர் ஜெய பா லன் கூறு கை யில், ‘‘பழைய தாம் போதி பாலத் தில் தான் சிறு ரக வாக னங் கள் எப் போ தும் சென்று வரு கின் றன.
மேலும் அதன் தடுப் பி னால் தான் நீர்ப் பி டிப்பு ஏற் பட்டு ஏரல் பகு தி யில் குடி நீர் ஆதா ரம் உள் ளது. எனவே, பாலத்தை பழுது பார்த்து பலப் ப டுத்த வேண் டி யது அவ சி யம் ’’ என் றார்.
பழுது பார்த்து பலப்படுத்த கோரிக்கை
ஏரல் பழைய தாம் போதி ஆற் றுப் பாலத் தின் குழாய்க்கு கீழுள்ள கான் கி ரீட் தளத் தில் ஏற் பட் டுள்ள ஓட்டை வழி யாக தண் ணீர் வீணாக வெளி யே று கி றது.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...