திங்கள், 27 பிப்ரவரி, 2012

நேரடியாக(Live) காண புதிய தலைமுறை சேனல்

ரே செய்தியை ஆறு மணி நேரத்திற்கும் மேல் பார்த்து கொண்டிருந்த நமக்கு புதிய தலைமுறை சேனல் ஒரு நல்ல மாற்று தான். அரசியலும், தொலைக்காட்சியும் பின்னி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் எந்த சேனலிலும் நடுநிலையான செய்திகளை பார்க்க முடியாமல் இருந்த நமக்கு புதியதலைமுறை ஆறுதல் அளிக்கிறது. ஆங்கில சேனல்களுக்கு இணையாக செய்திகளை விரைவாகவும், தெளிவாகவும், விரிவாகவும் அளிப்பதால் பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய சேனலாக மாறி உள்ளது புதிய தலைமுறை செய்தி சேனல் என்பதை மறுப்பதற்கில்லை.


வெளிவந்த ஒரு சில மாதங்களிலேயே ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த புதிய தலைமுறையை பாராட்டி தான் ஆக வேண்டும். அரைத்த மாவையே மாற்றி மாற்றி அரைத்து கொண்டு இருக்காமல் வித்தியாசத்தை அளிப்பதும் வெற்றி காரணம் என நினைக்கிறேன். புதிய தலைமுறையின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் இதில் பணி புரியும் பெரும்பாலானவர்கள்  இளைஞர்கள் என நினைக்கிறேன். இவர்கள் அளிக்கும் உடல் உழைப்பு தான் இவ்வளவு விரைவில் மக்கள் மனதில் இடம் பிடிக்க முக்கிய காரணமாகும்.


செய்தி பார்த்து கொண்டு இருக்கும் பொழுது புதிய தலைமுறை சேனலை இணையத்திலும் நேரடியாக காணலாம் என்ற அறிவிப்பை பார்த்தேன். ஏற்க்கனவே பல ஆங்கில சேனல்களை நேரடியாக இணையத்தில் காணும் வசதி இருந்தாலும் நம் தமிழுக்கு புதுசு என்பதால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  

வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் உடனுக்குடன் செய்திகளை நேரடியாக இணையத்தில் நம் தாய்மொழியில் காணும் வசதியை ஏற்ப்படுத்தி கொடுத்த புதிய தலைமுறைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இந்த அறிவிப்பை பெரும்பாலானவர்கள் பார்த்து இருக்கலாம், ஆனாலும் இந்த வசதிக்காக இவர்களை பாராட்ட வேண்டும் என தோன்றியது ஆதலால் இந்த செய்தியை உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.

இந்த லிங்கில் கிளிக் செய்தும் சேனலை நேரடியாக காணலாம்.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஏரல் நாளை வியாபாரிகள் கடையடைப்பு


மின்வெட்டுக்கு கண்டனம்
ஏரல்&சாத்தான்குளத்தில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு
சாத்தான்குளம், பிப்.20&
மின்வெட்டுக்கு கண் டனம் தெரிவித்து ஏரல், சாத்தான்குளத்தில் நாளை வியாபாரிகள் முழு கடையடைப்பு செய்கிறார்கள்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்தடை நேரம் அதிகாரித்து வருகிறது. தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் பவர் கட் செய்யப்படுகிறது. இத னால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் அடிக் கடி பவர் கட் ஆவதால் பரீட்சைக்கு படிக்கும் மாணவ&மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இரவில் தூக்கத்தை இழந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தவிக்கிறார்கள்.
மின்வெட்டுக்கு கண் டனம் தெரிவிக்கும் வகை யில் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளார் கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபார ஸ்தலங்களில் முக்கிய ஊரான ஏரல் மற்றும் சாத்தான்குளத்தில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு செய்கிறார்கள்.
இதற்கான கூட்டம் சாத்தான்குளம் வர்த்தக சங்க கட்டித்தில் தலைவர் பாலசிங் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்கள் மணவாளன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெயராஜேஷ்குமார் வரவேற்றார். இதில், அடிக்கடி மின் வெட்டு இருப்பதால் சாத்தான்குளத்தில் நாளை (21ம்தேதி) முழு கடையடைப்பு நடத்துவது, அனைத்து வர்த்தகசங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கணேஷ்குமார், அலெக்ஸ், பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில், பேச்சிமுத்து, முன்னாள் வர்த்தகசங்க தலைவர் சுந்தர், முன்னாள் செயலாளர் வேணு கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளத்தில் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதுபோல் ஏரலிலும் நாளை வியாபாரிகள் முழு அடைப்பு செய்கிறார்கள். வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் தானுலிங்கப்பிள்ளை தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இங்கு 600க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஏரலில் மண் உளி பாம்பு பிடிபட்டது

ஏரல் : ஏரலில் நேற்று இரண்டரை அடி நீளமுள்ள மண்உளி பாம்பு ஒன்று பிடிபட்டது. ஏரல் நாடார் தெருவை சேர்ந்த பெரியசாமி, பெனடிக்ட், வைணபெருமாள், மாரியப்பன், ஆத்திப்பழம் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து வாய்க்காலுக்கு குளிக்க சென்று கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள தென்னந்தோப்பிலிருந்து வெளியேறிய சுமார் இரண்டரை அடி நீளமுள்ள மண்உளி பாம்பு ஒன்றை பார்த்தனர். உடனடியாக அதைப் பிடித்து வைத்து ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
ஏரல் போலீசார் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஸ்ரீவை., வனத்துறையினர் வந்து அப்பாம்பை கைப்பற்றினர். பின்னர் அந்த பாம்பு வல்லநாடு மலையில் கொண்டு விடப்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு உமரிக்காடு பகுதியில் இதே போன்று மண்உளி பாம்பு ஒன்று பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஏரலில் பிப்.16ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


அணையிலிருந்து ஆலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை கண்டித்து
ஏரலில் பிப்.16ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஏரல், பிப். 14&
ஸ்ரீவைகுண்டம் அ¬ணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை நிறுத்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரலில் வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண் டும். தாமிரபரணி தண் ணீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமே பயன்படுத்த அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
வல்லநாட்டில் தடுப்பணை கட்டும் திட் டத்தை கைவிட வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரலில் நாளை மறுநாள் (16ம் தேதி) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
காய்கறி மார்க்கெட் அருகே நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகிக்கிறார்.
போராட் டக்குழு தலை வர் கந்த சாமி, மாவட்ட துணைத்தலைவர் சீனி வாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்கின்றனர். ஸ்ரீவை. வடகால், தென்கால் பாசனத்தை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்குமாறு போராட்டக்குழு தலை வர் கந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சனி, 11 பிப்ரவரி, 2012

ஏரல், ஜெயதுரை எம்.பி. பங்கேற்று


ஏரல், பிப். 11&
ஏரல் அருகே வரண்டியவேல் அககோபாலபுரம் இந்து நடுநிலைப்பள்ளி 73வது ஆண்டு விழா மற்றும் இலவச சீருடை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் ஜெயதுரை எம்.பி. பங்கேற்று பள்ளியின் கல்வி புரவலர் திட்ட கல்வெட்டினை திறந்து வைத்தும், இலவச சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு தரப்பட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து கிராமப்புற பயிலும் மாணவ&மாணவிகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சமச்சீர் கல்வி திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இன்று இத்திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் நடுநிலையாளர்களும் பாராட்டுகின்றனர். உலகிலேயே அதிக இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடு இந்தியாதான். இங்கு 50 சதவீதத்திற்கும் மேல் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களின் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் இந்தியா விரைவில் வல்லரசாகும் என்றார்.
விழாவில் ஏரல் பேரூ ராட்சி துணைத்தலைவர் மணிவண்ணன், வரண்டியவேல் பஞ்சாயத்து தலை வர் சனகர், பள்ளி நிர்வாக குழுதலைவர் ஆனந்தராம், செயலர் சிவகார்மேகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜானகிராமன், டாக்டர் விமலாகுமாரி, ஆழ்வார் திருநகரி உதவி தொடக்க கல்வி அலு வலர் தாசன்பொன்ராசு, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கணேசன், முன்னாள் மாவட்ட விவ சாய அணி அமைப்பாளர் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையார், ராஜபாளையம் தி.மு.க. அவைத்தலைவர் மரியான்ஸ், துரை, கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திமுக ஆட்சியில் கல்விக்கு ஏராளமான சலுகைகள்
ஜெயதுரை எம்.பி. பேச்சு

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஏரல் பேரூராட்சி கூட்டம்

ஏரல்: ஏரல் தேர்வு நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி ஆறுமுகம், துணைத்தலைவர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏரலில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கான தடையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். ஏரல் வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஏரல் பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட பஸ் நிலையப்பகுதி, கீழக்காட்டு ரோடு தண்ணீர் தொட்டி இடம், ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடக்கும் கால்நடை மருத்துவமணைக்கு மேல்புறம் உள்ள பஞ்சாயத்து சாலைக்கான இடங்களை அளவீடு செய் யவும், பஞ்சாயத்து பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை மற்றும் போர்டுகளை அகற்றவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஏரல் ஆற்றுப்பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது


எதிரொலி ஏரல் ஆற்றுப்பாலம் சீரமைப்பு பணி தொடங்கியது

கருத்துகள்

ஏரல்: தினகரன் செய்தி எதிரொலியாக ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை  சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஏரல் ஆற்றுப்பாலம் வடகரை ஓரத்தின் கீழ்பகுதியில் அரிப்பு ஏற் பட்டு பாலத்தின் அடியில் பெரிய உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் என கருதிய போலீசார் அங்கு எச்சரிக்கை பலகை வைத் தனர்.
இதனால்  வாகனங்கள் ஒதுங்கி செல்லும் போது எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட முடி யாமல் சிரமம் உருவானது. உடைப்பு ஏற்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயிலில் நடந்த தை அமாவாசை திருவிழாவிற்கு  பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்ததால் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தில் உடைப்பு ஏற்பட்ட இடத் தில் கான்கீரிட் போட்டு சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இதை ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

ஏரல் & நெல்லை அரசு பஸ்
திடீரென நிறுத்தப்பட்டது
ஏரல், பிப். 8:
ஆத்து�ரில் இருந்து ஏரல் வழியாக நெல்லைக்கு செல்லக்கூடிய அரசு பஸ் கடந்த 5 நாட்களாக இரவு நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஏரலில் இருந்து நெல் லைக்கு 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே ஏரல் வழியாக இயங்கிய முக்காணி & பாபநாசம் (தடம் எண் 23), ஆத்து�ர் & குற்றாலம் (தடம் எண் 135ஏ) ஆகிய இரண்டு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆத்தூரில் இருந்து ஏரல் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட (தடம் எண் 244) அரசு பஸ்சை நிறுத்துவதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக இரவு 7.30 மணி டிரிப் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏரலில் இருந்து நெல் லைக்கு மாலை 6 மணி பஸ்சை விட்டால் பின்னர் இரவு 8.30 மணிக்கு தான் அடுத்த பஸ் உள்ளது. எனவே இரவு நேரத்தில் நிறுத்தப்பட்ட தடம் எண் 244 அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முக் காணி&பாவநாசம், ஆத் து�ர்&குற்றாலம் பஸ்களை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரல் வழித்தடத்தில் கூடுத லாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் ஏரல் சாந்தக்குமார் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார்.
பொதுமக்கள் அவதி

வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஏரலில் மின்கட்டணம் செலுத்துவதற்குள் படாதபாடப


ஏரல்:ஏரல் மின்சார அலுவலகத்தில் மின் கட்டணத்திற்கு பணம் செலுத்த செல்லும் பொதுமக்கள் பணம் செலுத்த பலமுறை அலைக்கழிக்கப்படுவதால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். நெட் வேலை செய்யவில்லை. யூ.பி.எஸ். வேலை செய்யவில்லை என்ற வார்த்தையை கேட்டு ஏரல் பகுதி மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஜெனரேட்டர், யூ.பி.எஸ்.வசதி இருந்தும் அவை இயக்கப்படாதது மின்வாரியத்தின் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் மிக முக்கிய வியாபார ஸ்தலமான ஏரல் மற்றும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சார வசதி ஏரல் மின்வாரிய அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பல கிராமங்கள் ஏரல் மின் வாரியத்தின் மூலம் மின்இணைப்பு பெற்றுள்ளனர். இது தவிர வியாபார ஸ்தலமான ஏரல் பஜார் கடைகளும் மின்வாரியத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றன. 

ஏற்கவே பல ஆண்டுகளாக மின் தடையால் பெரும் சிரமத்தை அனுபவித்து வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏரல் மின்வாரிய அலுவலகத்தின் மெத்தனத்தால் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். எப்போது கரண்ட் இருக்கும், எப்போது கட் ஆகும் என்பது கடவுளுக்கே தெரியாத நிலையில் கரண்ட் இருக்கும் நேரத்திற்கான மின்கட்டணத்தை செலுத்த மக்கள் ஏரல் மின்சார அலுவலகத்திற்கு செல்கின்றனர். சுற்றுவட்டார பல கிராம மக்கள் பஸ் ஏறியும், நடந்தும் தாங்கள் உபயோகித்த மின்சார அளவுக்கு பணம் கட்ட வந்தால் அலுவலகத்திலோ நெட் வேலை செய்யவில்லை, யூ.பி.எஸ் வேலை செய்யவில்லை என்ற பதில்தான் வருகிறது. ஏரல் பகுதியில் கரண்ட் இருக்கும்போதும் இதே பதில்தான் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. பலர் பல மணி நேரம் வரிசையில் நின்று பணம் கட்ட கவுண்டர் பக்கத்தில் செல்லும்போது கரண்ட் கட் ஆகிவிட்டது. இனி நாளைக்கு வாருங்கள் என்று சாதாரணமாக பதில் கூறிவிடுகின்றனர். பொதுமக்களும், வியாபாரிகளும் தங்கள் பணிகளை ஒதுக்கிவிட்டு மின்கட்டணம் செலுத்த முனைப்போடு வந்தால் மின்கட்டணம் செலுத்த முடியாமல் அலைக்கழிக்கப்படுவது வேதனையாக உள்ளது. இதனால் ஏரல் மின்சார வாரிய அலுவலகத்தில் தினமும் பொதுமக்களுக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தேவையற்ற பகை உணர்வு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் மின்சார வாரிய அலுவலகத்தில் ஜெனரேட்டர் மற்றும் யூ.பி.எஸ்.வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது. இந்த வசதி ஏரல் மின்சார அலுவலகத்திலும் உள்ளது. ஆனால் ஏரலில் ஒரு நாளும் ஜெனரேட்டரை உபயோகப்படுத்துவது இல்லை. ஸ்ரீவைகுண்டம் மின் அலுவலகம் மூலம் ஆழ்வார்திருநகரிக்கு நெட் கனெக்ட் செய்யப்பட்டு அதன் மூலம் ஏரலுக்கு நெட் கனெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏரலில் கரண்ட் இருக்கும் போது ஸ்ரீவை., மற்றும் ஆழ்வார்திருநகரியில் கரண்ட் இல்லாததால் ஏரலில் நெட் ஒர்க் ஆகாமல் உள்ளது. ஆழ்வார்திருநகரியில் ஜெனரேட்டர் ஆன் செய்தால் இப்பிரச்னையே வராது. ஆனால் ஏரல், ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் ஆகிய அனைத்து மின்வாரிய அலுவலகத்திலுமே ஜெனரேட்டரை ஆன் செய்யாததால் ஏரலில் மின்கட்டணம் செலுத்த மக்கள் அலைக்கழிக்கப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையால் மின்வாரிய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தினமும் ஏற்படும் இப்பிரச்னையால் மின்சார ஊழியர்களே தங்கள் தலைமை அதிகாரிக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது. அதன்படி ஏரல் விநியோக பிரிவில் 5 பணியாளர்கள் தினமும் மின் கட்டண வசூலில் ஈடுபடுகின்றனர். பணி நாட்களில் பண வசூலில் ஈடுபட்டிருக்கும்போது மின்தடை ஏற்படும் போது ஜெனரேட்டர் பயன்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை ஜெனரேட்டரை உபயோகப்படுத்தாததினால் பணியாளர்களுக்கம், மின் உபயோகிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம், தேவையற்ற வார்த்தை பேசுவதுடன் மின் வாரியத்தை பற்றி மக்கள் அவதூறாக பேசி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. யூ.பி.எஸ்.பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பண வசூல் நாட்களில் ஜெனரேட்டரை பயன்படுத்தி பொதுமக்களுக்கும், எங்களுக்கும் இடையே தேவையில்லாமல் ஏற்படும் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஏரல் மின்வாரிய ஊழியர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மின்சார தடை ஒரு பக்கம் இருக்க உபயோகிக்கும் மின் கட்டணத்தை செலுத்த செல்லும் மக்கள் மின் வாரியத்தால் அலைக்கழிக்கப்பட்டு வரும் இப்பிரச்னைக்கு அனைத்து மின் வாரிய அலுவலகத்திலும் இருக்கும் ஜெனரேட்டரை இயக்கினாலே இப்பிரச்னைக்கு முடிவு வரும்.

ஏரல் லோபோ மெட்ரிக் பள்ளியில் இருபெரும் விழா

ஏரல்:ஏரல் லோபோ மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. பள்ளியின் 28வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. விøளாயட்டு விழா நிகழ்ச்சிகளை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன் துவக்கி வைத்தார். கிராம முன்னேற்ற சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஆசிரியை ஜெயசுதா வரவேற்றார். விளையாட்டுப்போட்டிகளுடன் யோகா, கராத்தே, ஜிம்னாஸ்டிக், கிராமிய நடனம் ஆகியவை நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள், மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழவல்லான் பஞ்.,தலைவர் துளசி ஜெயப்பிரகாஷ் பரிசு வழங்கினார். 

ஆசிரியை செல்வ மலர் நன்றி கூறினர். பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியை சகாயராணி வரவேற்றார். பள்ளி முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். ஏரல் பஞ்., சேர்மன் பாலகிருஷ்ணன், சூளைவாய்க்கால் பஞ்., தலைவர் அனிஸ், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாக்கர் அலி ஆகியோர் பேசி கடந்த ஆண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வருகை தந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். 
பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற சுஷ்மிதா, சாயிகிருபா, சமீமாபர்வீன் ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி, பள்ளி நிறுவனர் முருகன் ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினர். மேலும் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...