வெள்ளி, 5 மே, 2017

முத்துநகர் விரைவு ரயிலில் மூன்று குடும்பத்தினரிடம் 4 லட்சம் நகை பவுன் கொள்ளை











  • தூத்துக்குடி மே 5  : சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த முத்துநகர் விரைவு ரயிலில் 26 பவுன் கொள்ளை ; தங்கநகை ஓரு லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து ரயிவே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.                                                 
              சென்னை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் காஜா மைதீன் இவர் பிஸ்கட் வியாபாரம் செய்து வருகிறார். காஜாமைதீன் குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ளுவதற்காக முத்துநகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார். ரயில் விழுப்புரத்தை கடந்தபோது காஜாமைதீன் மற்றும் குடும்பத்தினர் உறங்கி விட்டனர். ரயில் திண்டுக்கல் அருகே வந்தபோது வழித்து பார்தபோது ரயில் வைத்த பேக், சூட்கேஸ் பெட்டி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதுபோல இந்த பெட்டியில் வந்த மற்ற புஸ்பவள்ளி, மற்றும் சாராள் பீவி இருவருடைய பேக்கையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் ரயிவே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் படி தெரிவித்து விட்டு திண்டுக்கல் ரயில்வேபோலீசார் கையை விரித்து விட்டனர். இதைதொடர்ந்து ரயில் இன்று காலையில் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த பிறகு  தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைதொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். காஜா மைதீன் 26 பவுன் தங்கநகைகள், 55ஆயிரம் ரூபாய் பணம், விலை உயர்ந்த செல்போன் மற்றும் துணிகள் உள்ளிட்ட மூன்று பேக்கள் மற்றும் சூட்கேஸ் பெட்டியை திருட்டு போனதாக தெரிவித்தார். இதைபோல சென்னையில் இருந்த ரயில் வந்த புஸ்பவள்ளி, மற்றும் சாராள் பீவி ஆகிய இருவர்களின் பேக்கள் கொள்ளை அடிக்கப்ட்டது. அதில் சுமார் 40ஆயிரம் பணம் மற்றும் துணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ரயில் பயிணிகளிடம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


\









1 கருத்து:

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...