தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை 2 வது தெருவை சார்ந்த ஜாகிர் உசேன் மகன் முகம்மது அபுதாஹிர் (21). இவர் சாயர்புரத்தில் உள்ள போப் பொறியியல் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் இன்று தூத்துக்குடியிலிருந்து சாயர்புரம் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது புதுக்கோட்டை தேரி ரோட்டில் கல்லூரி அருகே சென்றபோது, இவரது பைக் மீது எதிரே மற்றொரு பைக்கில் வந்த சிவகளையைச் சேர்ந்த பண்டாரம் மகன் குமரேசன் (26) என்பவரது பைக் நேருக்கு நேர் மோதி விபத்தில் தூக்கி வீசப்பட்டு முகத்தில் பலத்த காயம் அடைந்தவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார். ஆனால், மருத்துவமனை வரும் வழியிலே முகம்மது அபுதாஹிர் பரிதாபமாக இறந்தார். குமரேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக மாணவர்கள் கண் எதிரிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது மாணவ, மாணவியர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.இதனால் கல்லுரி மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சுழ்ந்ததால் பரபரப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக